யானைகளும் கூட துயரத்தில் பங்கு கொள்ளும்! (Post.15,917)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,917

Date uploaded in London – 26 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

யானைகளும் கூட துயரத்தில் பங்கு கொள்ளும்! 

ச. நாகராஜன்! 

யானைகளும் கூட மனிதர்கள் போல துயரத்தில் பங்கு கொள்ளும் என்பதை ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் மிருக இயல் பிரிவைச் சேர்ந்த ஐயான் டக்ளஸ் ஹாமில்டன் (Ian Douglas Hamilton) ஒரு சம்பவத்தின் மூலம் அறிவதாக தன் ஆய்வின் முடிவில் கூறியுள்ளார். இதை அவர் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகியுள்ள அறிவியல் இதழான Applied Animal Behaviour Science -இல் எழுதியுள்ளார்.

Save the Elephants – யானைகளைக் காப்பாற்றுங்கள் என்ற அறக்கட்டளைக்கு இவர் நிதி உதவியும் அளித்துள்ளார்.

அவர் எடுத்துக்காட்டும் சம்பவம் 2006ம் ஆண்டு நடந்த ஒன்று.

கென்யாவில் உள்ள யானைகளைப் பாதுகாக்கும் முகாம் ஒன்றில் எலினார் என்ற பெயர் கொண்ட ஒரு யானை நோய்வாய்ப்பட்டது. சிகிச்சை பலனின்றி அது உயிரையும் இழந்தது.

அதற்குப் பாதுகாப்பாக இருந்து உதவி செய்யும் உதவியாளரின் பெயர் க்ரேஸ். கீழே விழுந்து விட்ட எலினாரை அதன் துதிக்கையை வைத்து எழும்படி செய்தார் அவர். பின்னர் மீண்டும் ஒரு முறை அது கீழே விழுந்தது. இந்த முறையும் க்ரேஸ் அதை எழும்படி செய்ய முயன்றார். ஆனால் பலனில்லை. அது இறந்தே விட்டது. 

இறந்த யானையைச் சுற்றி யானையின் சொந்தக் குடும்பத்தில் உள்ள இதர யானைகள் குழுமி தங்கள் மரியாதையைச் செய்தன.  அது மட்டுமல்ல, அந்தக் குடும்பத்தைச் சேராத இதர யானைகளும் எலினார் விழுந்த இடத்திற்கு விரைந்து வந்தன. மிகவும் வருந்தின.

அவை தமது துக்கத்தை எப்படி தெரிவித்தன என்பதை விஞ்ஞானிகள் கண்டனர்.

தங்கள் துதிக்கையால் இறந்த யானையை அவை முகர்ந்து பார்த்தன. ஒரு அடிக்கு மேலே தங்கள் துதிக்கைகளைச் சுழற்றின. அதைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தன.

“இது எதைக் காட்டுகிறது என்றால் யானைகளுக்கும் துக்கம் உண்டு, அதைத் தெரிவிக்கும் முறையும் உண்டு என்பதைத் தான்” என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இது இறந்த யானையின் குடும்பத்தைச் சேர்ந்த யானைகளுக்கு மட்டுமல்ல, இதர யானைகளுக்குமான ஒரு வழி முறை என்பதை அவர்கள் கண்டு வியந்தனர்.

 ஆகஸ்ட் 2006 மாதம் வெளியாகியுள்ள அப்ளைட் அனிமல் பிஹேவியர் ஸயின்ஸ் (Applied Animal Behaviour Science) பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையில் இது விவரிக்கப்பட்டிருக்கிறது.

** 

ஆதாரம், நன்றி : ட்ரூத் வார இதழ் தொகுதி 74 எண் 19 25-8-26 தேதியிட்ட இதழ்

Leave a comment

Leave a comment