WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,966
Date uploaded in London – 10 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கோத்ரங்களின் பட்டியல் – 1
ச. நாகராஜன்
“பாத்திரம் அறிந்து பிச்சை இடு; கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு” என்பது காலம் காலமாக நமது நாட்டில் வழங்கி வரும் பழமொழி.
ஸகோத்ரம் என்னும் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்களிடத்தில் திருமண பந்தம் செய்து கொள்ளக் கூடாது என்பதே இதன் உள்ளுறை அர்த்தம்.
ஜீன்ஸ் தொழில்நுட்பம் எல்லாம் தோன்றாத காலத்திலேயே ஒரே கோத்ர விவாஹம் பாவகரமானது என்பதை ஐயந்திரிபற நமது முன்னோர்கள் உரைத்துள்ளனர்.
சரி, கோத்ரங்கள் மொத்தம் எத்தனை?
““கோத்ராணாம் து ஸஹஸ்ராணி ப்ரயுதான்யர்புதானி ச” என்ற வாக்கியப்படி கோத்திரங்கள் ஆயிரம், லக்ஷம் என்ற கணக்கில் உள்ளன.
ச்ரௌத சூத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தியாயங்களில் உள்ள கோத்திரங்களைத் தொகுத்தால் சுமார் 2463 (இரண்டாயிரத்து நானூற்று அறுபத்து மூன்று) கோத்திரங்களைக் காண முடிகிறது.
பாரத நாடெங்கும் கோத்திரங்கள் வழங்கப்படுவதையும் அவற்றை அனைவரும் முக்கியமாக ஏற்றுக் கொள்வதையும் இன்றளவும் பார்த்து வருகிறோம்.
இன்று முக்கியமான கோத்திரங்கள் 41 என்ற அளவில் இருக்கிறது. அது தவிர இன்னும் 275 கோத்திரங்களையும் பார்க்க முடிகிறது. இந்த 275ல் 41 கோத்திரங்களில் சிலவும் உள்ளிடங்கியுள்ளன.
முதலில் இங்கு 41 கோத்திரங்களின் பெயரைப் பார்க்கலாம்.
1) ஶ்ரீ வத்ஸ
2) பாரத்வாஜ
3) ஷடமர்ஷண
4) ஆத்ரேய
5) வாதூல
6) கௌசிக
7) விஸ்வாமித்ர
8) கௌண்டின்ய
9) ஹரித
10) மௌத்கல்ய
11) சாண்டில்ய
12) நைத்ருகாச்யப
13) குத்ஸ
14) கண்வ
15) பராசர
16) அகஸ்த்ய
17) கர்கி
18) பாதராயண
19) காச்யப
20) ஸங்க்ருதி
21) ஆர்ஷ்டிஷேண
22) பித
23) யஸ்க
24) மித்ரயுவ
25) வைந்ய
26) சுநக
27) கௌதம
28) கர்க்க
29) காத்யாயந
30) சாண்டில்ய
31) ஸாவர்ண’
32) சக்தி
33) காண்வாயந
34) ஸௌபாயந
35) க்ருத கௌசிக
36) ஆலம்ப்யாயந
37) மௌத்கல்ய
38) ப்ருஹஸ்பதி
39) கக்ஷீவந்த
40) ஆயாஸ்ய
41) தைர்க்கதம
கோத்ரம் என்றால் மூல புருஷர் என்று பொருள். அவரை முதல்வராகக் கொண்ட வம்ச பரம்பரையில் வந்த புத்ர , பௌத்ராதியினர் என்று பொருள்.
இப்படி வம்ச பரம்பரையை உலகில் சொல்லும் ஒரே இனம் பாரத இனம் தான் என்பது குறிப்பிடத் தகுந்தது.
இன்னொரு முக்கிய விஷயம் – கோத்திர் ப்ரவரம் என்று எப்போதும் சேர்த்து சொல்லப்படும். ஒரே ப்ரவரத்தைச் சேர்ந்தவர்கள் கூட திருமணம் செய்து கொள்ளக் கூடாது.
அடுத்து 275 கோத்திரங்களின் பட்டியலைப் பார்ப்ப்பொம்.
**