முக்கிய உபநிஷத மந்திரங்கள்- 9 (Post.15,986)

Written by London Swaminathan

Post No. 15,986

Date uploaded in London – 16 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part -9

51

ச்பாவோ மர்த்யஸ்ய யத்தந்த கைதத் ஸர்வேந்த்ரி

யாணாம் ஜரயந்தி தேஜ:

அபி ஸர்வம் ஜீவிதமல்பமேவ ….

கடோபநிஷத் 1-26    

ஹே கூற்றுவா ! போகங்கள் யாவும் நிலையற்றவை . மனிதனது இந்திரியங்களின் பொலிவையெல்லாம் அவை தேய்த்துத் தள்ளுகின்றன . மேலும் தீர்க்காயுள் என்பதும் அற்பமானதே .

கடோபநிஷத்தில் நசிகேதன் சொன்னது.

श्वोभावा मर्त्यस्य यदन्तकैतत्सर्वेंद्रियाणां जरयंति तेजः ।
अपि सर्वं जीवितमल्पमेव तवैव वाहास्तव नृत्यगीते ॥ २६ ॥

śvobhāvā martyasya yadantakaitatsarveṃdriyāṇāṃ jarayaṃti tejaḥ |
api sarvaṃ jīvitamalpameva tavaiva vāhāstava nṛtyagīte || 26 ||Verse 1.1.26 Katha-Upanishad

**** 

52

பரீக்ஷ்ய லோகான் கர்மசிதான் ப்ராஹ்மணோ

நிர்வேதமாயான்னாஸ்த்யக்ருத: க்ருதேன  

தத்விக்ஞானார்த்தம்  ஸ குருமேவாபிகச்சேத்   

ஸமித்பாணி: ச்ரோத்ரியம் ப்ரஹ்மநிஷ்டம்

–முண்டகோபநிஷத் 1-2-12

கர்மத்தைக்கொண்டு அடைகிற உலகங்களை ஆராய்ந்து , பிரம்மநிஷ்டன், அவைகளினின்று நீங்கவேண்டும். கர்மத்தைக்கொண்டு  கர்மத்துக்கு அப்பாற்பட்டதை அடையமுடியாது . பிரம்ம ஞானத்தின் பொருட்டு  அவன் சிஷ்ய பாவனையோடு வேதங்களை நன்கு அறிந்தவனும் பிரம்ம ஞானியுமாகிய குருவையே அடையவேண்டும் .

परीक्ष्य लोकान्कर्मचितान्ब्राह्मणो निर्वेदमायान्नास्त्यकृतः कृतेन ।
तद्विज्ञानार्थं स गुरुमेवाभिगच्छेत्समित्पाणिः श्रोत्रियं ब्रह्मनिष्ठम् ॥ १२ ॥

parīkṣya lokānkarmacitānbrāhmaṇo nirvedamāyānnāstyakṛtaḥ kṛtena |
tadvijñānārthaṃ sa gurumevābhigacchetsamitpāṇiḥ śrotriyaṃ brahmaniṣṭham || 12 || Mundaka Upanishad 1.2.12

****

53

உத்கீதமேதத் பரமம்து ப்ரஹ்ம தஸ்மின்ஸ்த்ரயம்

ஸுப்ரதிஷ்டா(அ)க்ஷரம் ச

அத்ராந்தரம் ப்ரஹ்மவிதோ விதித்வா லீனா

ப்ரஹ்மணி தத்பரா: யோனிமுக்தா: –ஸ்வேதாச்வதரோபநிஷதம் 1-7

அது பரப்பிரம்மம் என்று  தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதன்கண் மும்மை (ஜகத், ஜீவன், பிரம்மம் ) உளது. அதுவே உறுதியான ஆதாரம். அதன் ஸாரத்தை அறிகிற ஞானிகள்  அதையே நாடி நிற்கின்றனர் . பிரம்மத்தில் அவர்கள் ஒடுங்குகின்றனர்.  பிறப்பிலிருந்து அவர்கள் முக்தி (விடுதலை) அடைகின்றனர் .

उद्गीतमैतत्परमं तु ब्रह्म
तस्मिंस्त्रयं स्वप्रतिष्ठाक्षरं च ।
अन्तरां ब्रह्मविदो विदित्वा
लीना ब्रह्मणि तत्परा योनिमुक्ताः ॥

udgītam etat paramaṃ tu brahma
tasmiṃs trayaṃ svapratiṣṭhākṣaraṃ ca /
atrāntaraṃ brahmavido viditvā
līnā brahmaṇi tatparā yonimuktāḥ //

–seventh verse of the first chapter of the Śvetāśvatara Upanishad.

****

54

ஸம்யுக்தமேதத் க்ஷரமக்ஷரம் ச வ்யக்தாவ்யக்தம்

பரதே விச்வமீச:

அநீசஸ்சாத்மா பத்யதே போக்த்ருபாவாஜ்  ஞாத்வா

தேவம் முச்யதே  ஸர்வ பாசை:    

ஸ்வேதாச்வதரோபநிஷதம் 1-8

அழிவதும் அழியாததும் , தோன்றியிருப்பதும் ஒடுங்கியிருப்பதும் ஆகிய நிலைகள் இந்த ஞாலத்தின் கண்  நன்கு இணைக்கப்பெற்றிருக்கின்றன.  இந்த ஞாலத்தைத் தாங்கியிருப்பவன் இறைவன் ; ஈசனை அறிந்துகொள்ளாத ஜீவாத்மன் உலக இன்பங்களில்  ஆசைவைத்து அவைகளோடு  கட்டுப்படுத்தப்படுகிறான் . ஆனால் இறைவனை அனுபூதியில் அறியும்போது அவன் பாசங்கள் அனைத்தினின்றும் விடுதலை பெறுகிறான் .

संयुक्तमेतत् क्षरमक्षरं च व्यक्ताव्यक्तं भरते विश्वमीशः ।
अनीशश्चात्मा बध्यते भोक्तृभावाज्ज्ञात्वा देवं मुच्यते सर्वपाशैः ॥ ८॥

saMyuktametat kSharamakSharaM cha

      vyaktAvyaktaM bharate vishvamIshaH |

anIshashchAtmA badhyate bhoktR^i\-

      bhAvAj j~nAtvA devaM muchyate sarvapAshaiH || 8||Śvetāśvatara Upanishad 1-8

****

55

க்ஷரம்  ப்ரதானமம்ருதாக்ஷரம் ஹர:

க்ஷராத்மானா வீசதே  தேவ ஏக:

தஸ்யாபித்யானாத்யோஜனாத்தத்வபாவாத்

பூயஸ்சாந்தே விச்வமாயாநிவ்ருத்தி:   

ஸ்வேதாச்வதரோபநிஷதம் 1-10

மூலப்பிரக்ருதி  அழியும் தன்மை உடையது. சிவன் மரணமில்லாதவன்; அழியாதவன். தனிப்பொருள்; ஜீவனையும் ஜகத்தையும் அவன் ஆளாகிறான். அந்த சிவனை தியானிப்பதால், அவனோடு யோகம் செய்வதால் , அவனோடு ஐக்கியமாவதால் உடலை விடும்போது ஜீவாத்மன் மாயப்  பிரபஞ்சத்தினின்று விடுதலை அடைகிறான் .

क्षारं प्रधानममृतं हरं क्षरात्मानावीशते देव एकः ।
तस्याभिध्यानाद्योजनात्तत्त्वभावाद्भूयश्चान्ते विश्वमायानिवृत्तिः ॥ १० ॥


kṣāraṃ pradhānamamṛtaṃ haraṃ kṣarātmānāvīśate deva ekaḥ |
tasyābhidhyānādyojanāttattvabhāvādbhūyaścānte viśvamāyānivṛttiz ||

–subham—

Tags.  முக்கிய உபநிஷத மந்திரங்கள்- 9, Part -9

Leave a comment

Leave a comment