சிறுவர் மணி (Post No.16,029)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,029

Date uploaded in London – 29 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

26-7-26 தினமணி கொண்டாட்டம் பகுதியில் வெளியான கட்டுரை! 

சிறுவர் மணி

ச. நாகராஜன் 

கடலைச் சுத்தமாக்கும் பாயன் ஸ்லாட் 

நெதர்லாந்தைச் சேர்ந்த பதினெட்டே வயதான இளைஞனான பாயன் ஸ்லாட் கடல் நீரில் சேர்ந்துள்ள அசுத்தங்களை அகற்றி நீரைச் சுத்தமாக்க ஒரு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளான்.  கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தனது நவீன அமைப்பினால் அகற்றுவதே பாயன் ஸ்லாட்டின் நோக்கம். 2040ம் ஆண்டு உலகில் உள்ள கடல் கழிவுகளில் 90 சதவிகிதம் அகற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் பாடுபடும் இந்த இளைஞன் 28000 கிலோ கிராம் கழிவை பசிபிக் கடலிலிருந்து இதுவரை அகற்றியுள்ளான்.

இளைஞர்களுக்கு முன் மாதிரியாக உள்ள ஸ்லாட்டை உலகமே பாராட்டுகிறது. 

ஏழைகளுக்கு உதவும் ஜகில் ஜாக்ஸன் 

சிகாகோவின் தென்பகுதியில் வாழும் பதினேழே வயதான ஜகில் ஜாக்ஸன் தன் அத்தையுடன் சேர்ந்து  ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு உதவி செய்து வருகிறான். ஆசீர்வாதப் பைகள் எனப்படும் ‘ப்ளெஸ்ஸிங் பேக்’ கைத் தயார் செய்து உலகில் எட்டு வயதே ஆன அனாதைக் குழந்தைகளுக்கு விநியோகித்து வருகிறான். இந்தப் பையில் சோப், டூத் பிரஷ், பேஸ்ட், சாக்ஸ் உள்ளிட்டவை வைக்கப்படுகின்றன. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான் பாரக் ஒபாமா ஜாக்ஸனைப் பாராட்டியுள்ளார். ஆங்காங்கே உணர்ச்சியூட்டும் உரைகளை ஆற்றி பலரையும் தனது சேவையில் இணைத்து வருகிறான் ஜாக்ஸன். 

கணிதத்தில் சூரன் 

இந்தியாவைச் சேர்ந்த  பதினான்கே வயதான ஆர்யன் சுக்லா நான்கு இலக்க எண்கள் நூறை 30.9 விநாடிகளில் கூட்டி சாதனை படைத்துள்ளான். ஒரே நாளில் இதுவரை இருந்த ஆறு கணித சம்பந்தமான சாதனைகளை இவன் முறியடித்திருப்பது உலகினரை வியக்க வைத்திருக்கிறது. 

நீளமான நாக்கு! 

அமெரிக்காவைச் சேர்ந்த சனல் டாப்பர் என்ற பெண் தான் உலகில் உள்ளவர்களில் நீளமான நாக்கு கொண்டவராக சாதனை படைத்துள்ளார்.  இவரது நாக்கின் நீளம் 9.75 செண்டிமீட்டர். இதுவரை இவரைத் தோற்கடிக்க யாரும் முன்வரவில்லை.

Leave a comment

Leave a comment