துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்- ஓர் ஆய்வு – 22 (Post.15,969)

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 15,969

Date uploaded in London –   10 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்– ஓர் ஆய்வு – 22

(ஆர், சேஷாத்ரிநாதன்)

உத்தர காண்டத்திலும் இறைவன் காக புஜண்ட முனிவரிடம் இதே கருத்தைத் தெரிவிக்கிறார்

सुचि सुसील सेवक सुमति प्रिय कहु काहि न लाग।

श्रुति पुरान कह नीति असि सावधान सुनु काग॥86॥

நல்ல நடத்தை, புனிதமான, நல்ல அறிவை உடைய அடியாரை எந்தக் கடவுளுக்குத்தான் பிடிக்காது. இதைத்தான் வேதங்களும் நீதி சாஸ்திரங்களும் சொல்கின்ச்றன.

‘साधवो हृदयं महां साधूनां हृदयं त्वहम्‌।

मदन्यत्‌ ते न जानन्ति नाहं तेभ्यो मनागपि॥’

“எனது அன்பான பக்தர்களே எனது இதயம் . நான் அவர்களின் இதயம். அவர்களுக்கு என்னைத் தவிர ஒன்றும் தெரிவதில்லை. எனக்கு அவர்களைத் தவிர ஒன்றும் தெரியாது,”

सर्वेषामेव भक्तानामिष्टः प्रियतमो मम ।

यो हि ज्ञानेन मां नित्यमाराधयति नान्यथा

கூர்மபுராணம் ஈஸ்வர் கீதா பகுதியிலிருந்து மேற் கண்ட சுலோகம் கொடுக்கப்பட்டுள்ளது .

மகாவிஷ்ணு சொல்கிறார் “எவனொருவன் ஞான மார்கத்தின் மூலமாக மட்டும் என்னை எப்போதும் பூஜிக்கிறானோ அவனே எனது பிரியமான பக்தன்”

அயோத்தியா காண்டத்தில் ப்ரஹஸ்பதியும்,  இந்திரனும் உரையாடுகிறார்கள். அப்போது ப்ரஹஸ்பதி இந்திரனிடம் இராமனைப் பற்றிச்  சொல்லும்போது

जद्यपि सम नहिं राग न रोषू । गहहिं न पाप पूनु गुन दोषू ॥

करम प्रधान बिस्व करि राखा । जो जस करइ सो तस फलु चाखा

பகவான் சமமானவர் – அவருக்கு ஆசை இல்லை, கோபமும் இல்லை.அவர் யாருடைய பாவம், புண்ணியம், குணம், குற்றம் ஆகியவற்றையும் ஏற்கவில்லை.அவர் இந்த உலகத்தை “கர்மம்” (செயல்) அடிப்படையில் அமைத்துள்ளார். யார் எப்படிச் செய்கிறார்களோ, அவர்கள் அதற்கேற்பவே பலனை அனுபவிக்கிறார்கள்.

மீண்டும் துளசிதாசர்………….

இராமன் हनुमंत என்று அழைக்கிறார். இதிலிருந்து ஹனுமன் தனது பெயரைச் சொல்லி இருக்கிறான் என்று தெரிகிறது. வால்மீகி இராமாயணத்தில் தனது பெயர் ஹனுமன் என்றும் தான் சுக்ரீவனால் அனுப்பப்பட்டவன் என்று சொல்கிறார். ஆனால் ராமசரித மானஸில் அவ்வாறு சொல்லப்படவில்லை.

துளசிதாசர் में सेवक सचराचर रूप“ பதப் பிரயோகம் செய்கிறார். அதாவது உலகத்திலுள்ள எல்லா பொருட்களையும் ( அசையும் மற்றும் அசையாத) எனது ஸ்வரூபமாகவே பார்க்கவேண்டும் எனச் சொல்கிறார்.  இதன் பொருள் “எனது ஸ்வரூபத்தை அத்வைத தத்துவமாகப் பார்க்காமல் த்வைத உணர்வுடன் அணுகவேண்டும் என சொல்கிறார். அது என்ன த்வைத உணர்வு. யார் யார் எந்த எந்த கடவுகளை வழிபடுகின்றனரோ இந்த உலகின் அசையும் மற்றும் அசையா பொருட்களில் அந்தக் கடவுளின் வடிவத்தைக் காண வேண்டும்” என்று சொல்கிறார்.

அதாவது உலகில் நாம் காண்பது எல்லாமே இறைவனின் உடல்.

खं वायुमग्निं सलिलं महीं च

                             ज्योतींषि सत्त्वानि दिशो द्रुमादीन् ।

          सरित्समुद्रांश्च हरेः शरीरं ।

                          यत्   किञ्च   भूतं   प्रणमेदनन्यः ॥

                                 (श्रीमद्भागवत ११/२/४१)

ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், பூமி, கோள்கள், நட்சத்திரங்கள், விலங்குகள், திசைகள், மரங்கள், ஆறுகள், கடல் – இவை அனைத்தும் கடவுளின் உடல் –இவ்வாறு நினைத்துத்தான் பக்தன் பக்தியுடன் எல்லாவற்றையும் வணங்க வேண்டும். அத்வைதமோ, த்வைதமோ, விஷிஷ்டாத்வைதாமோ, எல்லாவற்றிலும் இறைவன் ஒருவனே. பரமாத்மா இரண்டு கைகள் உடையவனோ, நான்கு கைகள் உடையவனோ, ஆயிரம் கைகள் உடையவனோ, மனித அவதாரம் எடுத்தவனோ, கங்கை யமுனை போன்ற நீர் நிலைகளோ, எந்தவிதமாக இருந்தாலும் இறைவன் ஒருவனே. எல்லாமே பரமாத்மாவின் அங்கங்கள் தான். எதாவது ஒரு அங்கத்தைப் பிடித்துக் கொண்டால் அனைத்து இறைவனையும் அடைந்து விடலாம்.

भूमौ जले नभसि देवनरासुरेषु भूतेषु देवि सकलेषु चराचरेषु।

पश्यन्ति शुद्ध मनसा खलु रामरूपम् रामस्य ते भुवितले समुपासकाश्च।।

யோகவஷிஷ்ட மகாராமாயணத்தில் சொல்வதாவது

“ஹே தேவி, பூமி, நீர், ஆகாயம், தேவர்கள், மனிதர்கள், அசுரர்கள், அசையும் மற்றும் அசையா உயிரங்கள் ஆகியவற்றில் தூய்மையான எண்ணத்துடன் பகவான் ஸ்ரீ இராமரின் வடிவத்தைக் காண்பவர்கள் பூமியிலே ஸ்ரீ இராமரை வணங்குவதில் சிறந்தவர்கள்..

अब गृह जाहु सखा सब भजेहु मोहि दृढ़ नेम।

सदा सर्बगत सर्बहित जानि करेहु अति प्रेम॥16

பட்டாபிஷேகம் முடிந்து வானரத் தோழர்களுக்கு விடை கொடுக்கும்போது இராமன் சொல்கிறான்  “தங்கள் எல்லோரது பணி அளப்பரியது.. தாங்கள் தங்கள் இருப்பிடங்களுக்குச் சென்று என் மீது பக்தி செலுத்துக”

जड़ चेतन जग जीव जत सकल राममय जानि।

बन्दउँ सब के पद कमल सदा जोरि जुग पानि।

இராமசரித மானஸ் எழுத ஆரம்பிக்கும் போதே துளசிதாசர் ‘இந்த பிரபஞ்சத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா பொருட்கள் எல்லாவற்றையும் இராமனாவே கருதி வணங்குகிறேன்” என்று சொல்கிறார்.

देखि पवनसुत पति अनुकूला। हृदयँ हरष बीती सब सूला॥

இங்கு देखि என்ற பதப் பிரயோகம் செய்கிறார் துளசி தாசர். தான் அந்தண வேடத்தில் வந்ததை இராமன் ரசிக்கவில்லை போலும் அதனால் தன்மீது அவரது கருணைக் கண் படவில்லை என்று நினைத்த ஹனுமனுக்கு தன்னைக் கட்டித் தழுவி கண்ணீரால் தன்னை நனைத்து அன்பைக் காட்டிவிட்டான்  என்பதற்காக அந்தப் பதப் பிரயோகம். மாருதிக்கு ஒரு நம்பிக்கை வந்துவிட்டது. தன் மீது அவரது கருணைப் பார்வை விழுந்துவிட்டது அவர். தன்னை அங்கீகரித்து விட்டார் என்பதைப் புரிந்து கொண்டார் என்று துளசிதாசர் சொல்ல வருகிறார். காரணம் இலக்ஷ்மணணைவிட உன்மீது இரண்டு பங்கு அதிக பிரியம் என்று வேறு இராமன் சொல்லிவிட்டான்.

பார்த்தவுடன் பவனசுதன் பணி நன்கு 

தீர்ந்திடும் துன்பம் செல்வம் பெருகுமே 

சீர்த்தி உடையார் மனம் சிந்தை மகிழுமே 

தீர்ந்திடும் துயரம் தேவர் அருளாலே 

இங்கு ஹனுமந்தன் என்று ஹனுமனின் பெயரை ஹனுமன் சொல்லாமலே இராமன் முன்பு சொன்னான். இப்போது பவன சுத என்று வாயுவின் புதல்வன் என்று துளசிதாசர் நமக்குச் சொல்கிறார். இப்பொழுது அவனுக்கு எல்லாத் துன்பங்களும் सूला மனதை விட்டு அகன்றன.. இப்பொழுது ஹனுமனிடம் இரண்டு விஷயங்கள் தான் மனதில் நிற்கின்றன. ஒன்று காமம் மற்றொன்று குரோதம். ஆச்சர்யம் கொள்ள வேண்டாம். இங்கு காமம் என்பது சுக்ரீவனுக்கு எப்படியாவது நாட்டைப் பெற்றுத் தரவேண்டியது. காம். . அதாவது வேலை. அடுத்து குரோதம். கோபம். எப்படியாவது வாலியை அழிக்க வேண்டிய கோபம்.

अनुकूलं पतिं दृष्ट्वा सन्तोषं हृदये ऽकरोत् ।

परिताप-निवृत्तिश्च मारुतिः प्राह राघवम् ॥

இந்த சுலோகம் ஸ்வேத இராமாயணத்தில் வருகிறது. ஹனுமன், பிராமணர் வேடத்தில் இராமன் மற்றும் இலக்ஷ்மணரை முதன்முதலாகச் சந்திக்கிறார். இராமனின் தெய்வீகத் தோற்றம், கம்பீரம் மற்றும் அனுகூலமான (நற்குணம் நிறைந்த) இயல்புகளைக் கண்டு, ஹனுமனின் மனது மகிழ்ச்சியால் நிரம்புகிறது. “பதி” (தலைவர்) என்ற வார்த்தை இங்கு இராமனை இறைவனாகவும், உயர்ந்த தலைவராகவும் குறிக்கிறது. ஹனுமன் அவர்களின் உண்மையான தன்மையை உணரத் தொடங்குகிறார்.

இராமனின் முன்னிலையில், ஹனுமானின் மனதில் இருந்த எல்லா துன்பங்களும் (பரிதாபம்) நீங்குகின்றன. “மாருதி” (வாயு தேவனின் மகன், ஹனுமன்) என்று அழைக்கப்படும் ஹனுமன், தனது மனதில் அமைதியும், நம்பிக்கையும் பெற்று, இராமனிடம் மரியாதையுடன் உரையாடுகிறார். இது ஹனுமனின் பக்தி மற்றும் இராமனின் தெய்வீக ஆற்றலால் அவரது மனம் அமைதி அடைந்ததைக் குறிக்கிறது.

                       **                    தொடரும்

COPYRIGHT FREE PICTURES FROM 100 YEAR OLD BOOK; USE THEM FREELY : LONDON SWAMINATHAN

—SUBHAM—

ஆந்தையின் அலறல் நன்மையா தீமையா?  பயனுள்ள ‘பேப்பர் கட்டிங்’குகள்

Written by London Swaminathan

Post No. 15,968

Date uploaded in London – 10 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

I am throwing away old paper cuttings; I am sharing them with you before binning them.

also  read

Screeching Owls in Shakespeare, Tamil and Sanskrit Scriptures (Post No.13,779)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,779

Date uploaded in London – 14 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

If one looks at what Shakespeare says about omens, in particular about owls, one would know that Hindu beliefs only were prevalent in the whole of Europe.

The very word OWL is derived from ULUKA in Sanskrit. it is in Atharva Veda, Sangam Tamil Literature and Sanskrit books on Omens.

All knew that Sakunam is the Sanskrit word for Bird as well as good and Bad predictions and forecasts.

But owls have some good connotations as well. Throughout Europe, we see it in the emblems ofmany educational institutions. And in Hinduism, owl is the Vahana of Goddess Lakshmi.

Let us first look at what Shakespeare says about this bad bird………………………………….
***

ராகங்களும்    ரோகங்களும் (ஆனந்த விகடன்

****

பைபிளில் உள்ள ‘ஸ்டார் ஆப் பெத்லேகம்’

STAR OF BETHLEHEM ; TIMES NEWSPAPER 10-1-1994

***

வரலாற்றில் ஆறு அவ்வையார்கள் நூல்

AVVAIYAR ANDRUMUTHAL INDRU VARAI 

DR THAYAMMAL ARAVANAN

PUBLISHED BY PACHAIPASEL,

PONDICHERRY 605005

–SUBHAM—

TAGS- ஆந்தையின் அலறல், நன்மையா தீமையா,  பயனுள்ள ‘பேப்பர் கட்டிங்’குகள்.  

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 80; இந்து மத கலைச்சொல் அகராதி- 80 (Post.15,967)

Written by London Swaminathan

Post No. 15,967

Date uploaded in London – 10 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பிரத்யும்னன்

கிருஷ்ணன்- ருக்மிணியின் அன்பு மகன்; கைக் குழந்தையாக இருந்த போதே சம்பரன் என்ற அசுரன் கடத்திச் சென்றான்; காரணம்? அந்தக் குழந்தையால் அவனுக்கு எதிர்காலத்தில் மரணம் சம்பவிக்கும் என்று  ஒரு ஆரூடம் இருந்ததால் இப்படிச் செய்தான் ; பின்னர் அக் குழந்தையைக் கடலில் தூக்கி எறிந்துவிட்டான்; அதை ஒரு மீன் விழுங்கியது ; அந்த மீன் கடலில் பிடிபட்டு சம்பரனின் சமையல் அறைக்கே வந்து சேர்ந்தது அதை சம்பரனின் மனைவி மாயாதேவி அறுக்கவே அழகான குழந்தையைக் கண்டு அதை கவனமாகக்  காப்பாற்றி வந்தாள். பெரியவன் ஆன பின்னர் அவனையே மாயாதேவி திருமணம் செய்து அநிருத்தன் என்ற மகனை ஈன்றாள்.  பிற்காலத்தில் துவாரகையை ஆண்டபோது சகோதரன் சாம்பனுடன் சேர்ந்து படையெடுத்து வந்த ஸால்வ தேச மன்னனைத் தோற்கடித்தான் ; கிருஷ்ணனின் வம்சாவளி இவன் மூலம் நீடித்தது .

***

ப்ரக்ஜ்யோதிஷ- தற்கால அஸ்ஸாம், அருணாசல பிரதேசத்தின் பழைய பெயர்; அதை ஆண்ட நரகாசுரனைக் கிருஷ்ணன் கொன்று அவன் சிறை வைத்திருந்த 16,000 பெண்களை மீட்டு துவாரகைக்கு அழைத்து வந்தான் .

இந்த எண்ணிக்கையை அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது ;  16,000 பெண்கள், 60,000 மனைவிகள் என்பதெல்லாம் வழக்கமாகப் பயன்படும் மரபுச் (Hindu Idioms and Phrases) சொற்கள்; இதன் பொருள் – எண்ணற்ற , கணக்கற்ற என்பதாகும்.

***

பிரார்த்தனை –

இறைவனை நோக்கிச் செய்யப்படும் வேண்டுதல் துதி; ஆங்கிலச் சொல் PRAYER ப்ரேயர்- இதிலிருந்து வந்ததே.

***

ப்ரதர்தன

மன்னன் திவோதசனுக்கும் மாதவிக்கும்  பிறந்த மகன்;  யயாதியின் மகள் மாதவி; வீதஹவ்யன் என்பவன் திவோதசனின் குடும்பம் முழுதையும் அழித்ததால் அவனைப் பழிவாங்கவே பிறந்தான் என்று சொல்லுவார்கள்; இறக்கும்போது தனது புண்ணியத்தை எல்லாம் யயாதிக்கே கொடுத்துவிட்டு சொர்கத்துக்குச் சென்றார். 

யயாதி என்ற மன்னன் பெயர் ரிக்வேதத்தின் கடைசி பகுதியில் உள்ளது பிரதர்தன என்ற மன்னன் பெயர் துருக்கியில் போகஸ்கொய் Turkey (Bogazkoi) கல்வெட்டில் உள்ளது அதன் காலம் கி மு 1400 BCE என்பதால் வரலாறு ஆராய்ச்சிக்கு உதவும் தகவல் இது

***

பிருதா- குந்தி தேவியின் உண்மைப்  பெயர் ; பாண்டவர் மூவரின் தாய்;  பாண்டு மன்னனின் இரண்டு மனைவிகளில் ஒருத்தி . பாண்டவர்களில் கடைசி இருவர், மாத்ரி தேவிக்குப் பிறந்தவர்கள் .

***

புலோமா

இந்த தானவ (அசுரர்) பெண்மணி பிரம்மதேவனை வேண்டி ஹிரண்யபுரம் என்ற நகரத்தைப் பெற்றாள்; அந்த நகரத்தை கந்தர்வர்களோ தேவர்களோ அசுரர்களோ அழிக்கக் கூடாது என்ற வரத்தையும் வாங்கிக் கொண்டாள்; ஆனால் மனிதர்களை அற்பப்பதற்களாக கருதியதால் வரத்தில் சேர்க்கவில்லை; இதைப் பயன்படுத்திக்கொண்டு,  மனிதனாகிய அர்ஜுனனை அனுப்பி இந்திரன், அந்த நகரத்தை அழித்தான்.

****

புரு

யயாதிக்கும் ஷர்மிஷ்டாவுக்கும் பிறந்தவர்களில் கடைக்குட்டி புரு . சுக்ராசார்யாவின் சாபம் காரணமாக யயாதிக்கு இளமையிலேயே முதுமை வந்தது; ஒவ்வொரு மகனிடமும் இளமையைக் கொடுக்கும்படி வேண்டினார் ; அவர்கள் எல்லோரும் மறுத்தபோது கடைசி மகனான புரு , தந்தையின் முதுமையை வாங்கிக்கொண்டு, அவனுடைய இளமையைக் கொடுத்தான். நீண்ட காலத்துக்குப் பின்னர் இளமையை புருவிடமே யயாதி, திரும்பக் கொடுத்தார் ; புரு ஆட்சியைத் தொடர்ந்தார் ; அவர் வழியில் வந்த வம்சத்தைப் பெளரவர்கள் என்பர் . அவர் கெளசல்யா என்பவரை மணந்துகொண்டு ஜனமேஜயன் என்பவரைப் பெற்றாள்.

***

புலஸ்தியர்

பிரம்மாவின் ஆன்மீகப் புதல்வர்களில் ஒருவர் ; பீஷ்மரிடம் அன்பு பூண்டு பல தலங்களுக்கு யாத்திரை செல்வதன் மஹிமையை அவருக்கு எடுத்துரைத்தார் ; இதே போல நாரதரும் யுதிஷ்த்திரருக்கு யாத்திரை செல்வதன் பலன்களைக் கூறினார் என்பது மஹாபாரதத்தில் உள்ளது 

***

புரூரவன் 

குரு வம்சத்தின் மூதாதையர்களின் ஒருவர் ; புதனுக்கும் மனுவின் புத்ரி இளாவுக்கும் பிறந்தவர்  ; ஆணழகன் ; தர்மவான் ; இவ்வளவு சிறப்புகளையும் நாரதர் வாயிலாக அறிந்த தேவலோக அழகி ஊர்வசிக்கு ஆசை பிறந்தது ; பூலோகத்துக்கு வந்து புருருவ னுடன் வசிக்க ஆசை தெரிவித்தாள். அவனும் உடனே ஆமாம் என்று ஒப்புதல் தெரிவித்தான் ; ஆயினும் அவனுடன் வசிப்பதற்கு அவள் இரண்டு நிபந்தனைகளை போட்டாள்; அவள் கொண்டுவரும் இரண்டு ஆட்டுக்குட்டிகளை அவன் கண்ணும் கருத்துமாகக் காப்பாற்ற வேண்டும் என்பது முதல் நிபந்தனை ;

இரண்டாவது நிபந்தனை எந்த ஒரு காலத்திலும் அவன் நிர்வாணமாக காட்சி தரக்கூடாது.

இந்திரனுக்கோ ஊர்வசியைப் பிரிந்து வாழ முடியவில்லை; ஆகையால் ஒரு தந்திரம் செய்தான் ; ஆட்டுக்குட்டிகளைத் திருடச்செய்தான் ; உடனே அலறிப் புடைத்துக்கொண்டு புரூருவன் தூக்கத்திலிருந்து எழுந்து ஓடிவந்தான் அப்போது  அவனுடலில் ஆடைகள் இல்லை ! நிபந்தனையை அவன் மீறிவிட்டதால் ஊர்வசி தேவலோகத்துக்குத் திரும்பி சென்றாள் . புரூருவன் ஊர்வசிக்காக ஏங்கித் தவித்தான் ; அவளும் கர்ப்பமாக இருந்ததால் பூமிக்குத் திரும்பி வந்தாள்; அவளுக்கு ஒரே சூலில் ஐந்து குழந்தைகள் பிறந்தன 

அவர்களுடைய பெயர்கள் :திமான, அமாவசு, ததாஸ்யு, வனாயு, சதாயு.

*** 

புஷ்கர்

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற நகரம்; பிரம்மாவின் கோவில்கள் உள்ள சில இடங்களில் மிகவும் புகழ்பெற்ற தலம் இது. ஆண்டு தோறும் நடக்கும் ஒட்டகச் சந்தையைக் காணவும், அதே நேரத்தில் நடக்கும் கலை விழா நிகழ்ச்சிகளைக் காணவும், பல்லாயிரம் பேர் வருவார்கள் ; இங்குள்ள ஏரி, சாவித்ரி கோவில், கம்பி வழி ரயில் ஆகியனவும் சுற்றுலாப்பயணிகளைக் கவர்கின்றன .To be continued………………………………

Tags- பிரத்யும்னன், புஷ்கர், புரு, புரூரவன், புலஸ்திய, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL, PART 80; இந்து மத கலைச்சொல் அகராதி,

கோத்ரங்களின் பட்டியல் – 1 (Post No.15,966)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,966

Date uploaded in London – 10 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கோத்ரங்களின் பட்டியல் – 1

ச. நாகராஜன் 

“பாத்திரம் அறிந்து பிச்சை இடு; கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு” என்பது காலம் காலமாக நமது நாட்டில் வழங்கி வரும் பழமொழி.

 ஸகோத்ரம் என்னும் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்களிடத்தில் திருமண பந்தம் செய்து கொள்ளக் கூடாது என்பதே இதன் உள்ளுறை அர்த்தம்.

ஜீன்ஸ் தொழில்நுட்பம் எல்லாம் தோன்றாத காலத்திலேயே ஒரே கோத்ர விவாஹம் பாவகரமானது என்பதை ஐயந்திரிபற நமது முன்னோர்கள் உரைத்துள்ளனர்.

சரி, கோத்ரங்கள் மொத்தம் எத்தனை?

““கோத்ராணாம் து ஸஹஸ்ராணி ப்ரயுதான்யர்புதானி ச” என்ற வாக்கியப்படி கோத்திரங்கள் ஆயிரம், லக்ஷம் என்ற கணக்கில் உள்ளன.

ச்ரௌத சூத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தியாயங்களில் உள்ள கோத்திரங்களைத் தொகுத்தால் சுமார் 2463 (இரண்டாயிரத்து நானூற்று அறுபத்து மூன்று) கோத்திரங்களைக் காண முடிகிறது.

பாரத நாடெங்கும் கோத்திரங்கள் வழங்கப்படுவதையும் அவற்றை அனைவரும் முக்கியமாக ஏற்றுக் கொள்வதையும் இன்றளவும் பார்த்து வருகிறோம்.

 இன்று முக்கியமான கோத்திரங்கள் 41 என்ற அளவில் இருக்கிறது. அது தவிர இன்னும் 275 கோத்திரங்களையும் பார்க்க முடிகிறது. இந்த 275ல் 41 கோத்திரங்களில் சிலவும் உள்ளிடங்கியுள்ளன.

முதலில் இங்கு 41 கோத்திரங்களின் பெயரைப் பார்க்கலாம்.

1)      ஶ்ரீ வத்ஸ

2)      பாரத்வாஜ

3)      ஷடமர்ஷண

4)      ஆத்ரேய

5)      வாதூல

6)      கௌசிக

7)      விஸ்வாமித்ர

8)      கௌண்டின்ய

9)      ஹரித

10)   மௌத்கல்ய

11)   சாண்டில்ய

12)   நைத்ருகாச்யப

13)   குத்ஸ

14)   கண்வ

15)   பராசர

16)   அகஸ்த்ய

17)   கர்கி

18)   பாதராயண

19)   காச்யப

20)   ஸங்க்ருதி

21)   ஆர்ஷ்டிஷேண

22)   பித

23)   யஸ்க

24)   மித்ரயுவ

25)   வைந்ய

26)   சுநக

27)   கௌதம

28)   கர்க்க

29)   காத்யாயந

30)   சாண்டில்ய

31)   ஸாவர்ண’

32)   சக்தி

33)   காண்வாயந

34)   ஸௌபாயந

35)   க்ருத கௌசிக

36)   ஆலம்ப்யாயந

37)   மௌத்கல்ய

38)   ப்ருஹஸ்பதி

39)   கக்ஷீவந்த

40)   ஆயாஸ்ய

41)   தைர்க்கதம

கோத்ரம் என்றால் மூல புருஷர் என்று பொருள். அவரை முதல்வராகக் கொண்ட வம்ச பரம்பரையில் வந்த புத்ர , பௌத்ராதியினர் என்று பொருள்.

இப்படி வம்ச பரம்பரையை உலகில் சொல்லும் ஒரே இனம் பாரத இனம் தான் என்பது குறிப்பிடத் தகுந்தது.

இன்னொரு முக்கிய விஷயம் – கோத்திர் ப்ரவரம் என்று எப்போதும் சேர்த்து சொல்லப்படும். ஒரே ப்ரவரத்தைச் சேர்ந்தவர்கள் கூட திருமணம் செய்து கொள்ளக் கூடாது.

அடுத்து 275 கோத்திரங்களின் பட்டியலைப் பார்ப்ப்பொம்.

**

புறநானூறு புள்ளிவிவரங்கள்! -Part 3 (Post.15,965)


Written by London Swaminathan

Post No. 15,965

Date uploaded in London – 9 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

(பழைய டயரியில் எழுதி வைத்த குறிப்புகள் இவை ; சில விஷயங்கள் மீண்டும் வந்தால் பொறுத்தருள்க)

தொல்காப்பியத்தில் ஜோதிடம், ஆரூடம்

ஓரையும் நாளும் துறந்த வழக்கம் கிழவோர்க்கில்லை.

***

போர் துவங்குவதற்கு முன்னர் ஒரு நல்ல நாளன்று குடையையும் வாளையும் செல்லவேண்டிய திசையில் எடுத்து வைப்பது வழக்கம்; வாள்நாள் கோள், குடைநாள் கோள் என்று தொல்காப்பியர் இதைக் குறிப்பிட்டுள்ளார் .

***

நிமித்தம் பற்றித் தொல்காப்பியர் குறைந்தது ஆறு இடங்களில் குறிப்பிடுகிறார்; பொருள் அதிகாரம்-16-2; 39-2; 88-17; 101-1; 175-3; 263-2;

***

காகத்திற்கு ஏழு பிண்டம் பலி- குறு. 210;

காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாட்டு. 

***

கழங்கு மூலம் சோதிடம் – ஐங்குறு .245/248;

***

புள் நிமித்தம் = சகுனம் = பறவை ஜோதிடம்

சகுன என்றால் சம்ஸ்க்ருதத்தில் பறவை என்று அர்த்தம்.

புறம். 20, 68, 117, 124, 204, அகம்.151;351;

***

தீ நிமித்தங்கள் / தீய கனவு

புறம் .260, 280,  குறு. 218, 298,

புறம்.238

***

பேய் வராமல் தடுக்க / ஐயவி /வெண்கடுகு புகைத்தல்- புறம்.281, 296, 

****

சுடுகாட்டினைத் திரும்பிப் பார்க்காதே -புறம் 363; 356; குறு. 231.

****

பல்லி சொல்லுக்குப் பலன்/ கெளலி  சாஸ்திரம்

குறு .140,23; அகம்.351;

வெறி ஆடல் – குறு. 366, 105, 52, 169, 360; ஐங் .71; பட்டின.155;

வெறியாடும் வேலன்- சுமார் 25 இடங்கள்; 

வெள்ளி/ VENUS- கிரகம் புறம் .384, 385,386,  388, 395. பதிற்று .1369;

****

உத்திரை என்னும் நட்சத்திர பெயர் -புறம் 227

பூங்கண் உத்திரையார் ; அபிமன்யுவின் மனைவி பெயரும் உத்ரா.

ஆதிரை என்ற பெயரும் சங்க இலக்கியத்தில் புலவர் பெயரில் உள்ளது.

***

ரோகிணி நடசத்திரத்தின் குறியீடு- வண்டி= சகடம் ;

அந்த நாளில் கல்யாணம் செய்வது சிறந்து என்று வராஹமிஹிரர் சொல்கிறார்; அகம்  ஆகிய இரண்டு திருமனப்பாடல்களிலும் சகடம் வருகிறது ;

நெடுநல் வாடையில் ரோகிணி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் காணக்கிடைக்கிறது .

***

தமிழர்கள் இப்போது பயன்படுத்தும்  சம்ஸ்க்ருத மாதங்களே சங்க இலக்கியத்திலும் வருகின்றன .

நெடுநல் வாடையில் மேஷ ராசி- ஆடு- ரோகிணி உத்தர நட்சத்திரம் முதலிய சோதிடக் குறிப்புகள் உள.

***

தாய்லந்தில் ஜூலை 2026- இல் கண்டுபிடிக்கப்பட்ட மோதிரத்தில் வைஸ்ய வணிகரின்  பெயர் –புஷ்ய ரக்ஷித  பூசரசிகிட்ட என்றுள்ளது ; இது புஷ்ய அல்லது திஷ்ய என்னும் நட் சத்திரத்தின் பெருமையைக் காட்டும். இதே போல மு த்திரைக் காசுகளில் விசாகதத்தன், பங்குனி மித்திரன் என்ற பெயர்களும் உள்ளன .

சிந்து சமவெளி முத்திரைகளையும் இந்தக் கண்ணோட்டத்தில் அணுகலாம் .

***

தமிழில் மாதங்கள் கிடையாது – தை/ திஷ்ய  மாதம் – புற.70, , கலி-118-13;  பரி-11-91, 115, 134

மாசி- பதிற்று.59-2

பங்குனி – புறம்.229; அகம்.137;  நற்றி.234; புறம். 269;

கார்த்திகை பெளர்ணமி – அகம். 141;

மார்கழி பெளர்ணமி – பரி.11-76/77

மாசி பெளர்ணமி — பட்டின.34/35

***

கார்த்திகை அறுமீன் ; அழல்சேர்குட்டம்

பரி .தி. 11;

அகம்.11,17,141; 185

***

மஹாபாரத அக்குரன் – பதிற்று.14-5/7.

***

நாகலோகம்/ /மேலுலகம் – புற.367; தேவலோகம்

புத்தேள் உலகம்- புற.22-35; 27-14; மதுரை.698; கலி.82-24; 108-13; 82-4; குறு.101;288; பரி. தி.12-4;

****

கோப்ராஹ்மண- புற.9;

வானர மகளிர் – அப்சரஸ்- வரை அர மகளிர் -மலைபடு.188/192; அகம். 342-12; 348;  ஐங்குறு.191-4; 255;   குறிஞ்சி.195-199;  கலி.52-9; நற்றி.165

வானவூர்தி- புற.9;

அசுணம்–  அகம். 88; 244, 304;

இமய மலை – புற.2, 39,132, 166, 6, 17; 34,214;

ஒன்று பத்து அடுக்கிய கோடி /டெசிமல் சிஷ்டம் (ரிக் வேதத்தில் உள்ள எண்கள் – புறநானூறு 18

ரத்தினக் கற்கள் – புற.377, 218;

நகைகள்- புற.353;150, 291, 200;

வயிரம் , பவளம் – புற.218;

நீலம் –புற.56, 147, 150;

மாணிக்கம் — புற.172;

நாகரத்தினம்– புற.294; அகம்- 192, 372;

முத்து — புற.19161218380. ஏனைய சங்க நூல்களில் சுமார் ஐம்பது இடங்களில் முத்து வருகிறது

மணியாரம் — புற.365;

****

கபிலர் கணக்குப்புலி

புல்லட் பாய்ண்ட்ஸ் –புற.109;

300 ஊர்கள் — புற.110;

COUNTING எண்ணுகின்றனர்– புற.116;

49- ஆவது தலைமுறை- புற.201;

கபிலன் புலன் அழுக்கற்ற அந்தணாளன் – புறம். 126;

***

முதுமக்கள் தாழி– புற.228, 238, 256, 364;

தகனக் கிரியை — புற.231, 246, 240, 245;

To be continued……

Tags – புறநானூறு புள்ளிவிவரங்கள்! -Part 3

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 79; இந்து மத கலைச்சொல் அகராதி- 79 (Post15,964)

Written by London Swaminathan

Post No. 15,964

Date uploaded in London – 9 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

“P” words continued………………….

பரசுராம்

ஜமதக்கினி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் பிராமணராகப் பிறந்த பரசுராமர் பத்து அவதாரங்களில் ஒருவர் ஆவார் ; சூழ்நிலை காரணமாக க்ஷத்ரிய குணங்களை மேற்கொண்டு 21 க்ஷத்ரியர் தலைமுறைகளை அழித்தார்.

முதல் சம்பவம்

மனைவி ரேணுகாவின் எண்ணம் தவறான வழியில் செல்வதையே அறிந்த பரசுராமர் தாயாரைக் கொள்ளும்படி தனது ஐந்து பிள்ளைகளுக்கு கட்டளை இடுகிறார் ; முத்தாக நமக்கு சகோதரர்களும் மறுத்துவிடவே அவர்களை ஜமதக்கினி மந்திரம் மூலம் வீழ்த்துகிறார் ; கடைசி பிள்ளையான பரசுராமர் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று சொல்லி தாயை வீழ்த்துகிறார் ; மனம் மகிழ்ந்த ஜமதக்கினி மகனே உண்துசெயலை மெச்சினேன் ஏதேனும் ஒரு வரம் கேள் என்கிறார் ; எனது தாயும் நான்கு சகோதரர்களும் மீண்டும் உயிர் பெற்று எழவேண்டும் ; மேலும் முன்னர் நடந்த அசம்பாவிதம் எதுவும் அவர்களுக்கு நினைவிருக்கக் கூடாது என்று வரம் கே ட்டார்   ஜமதக்கினியும் அப்படியே ஆகுக (ததாஸ்து) என்றார் .

அடுத்த சம்பவம்

கார்த்தவீரியன் என்ற மன்னன் , ஒரு முறை ஜமதக்கினியின் ஆஸ்ரமத்தில் புகுந்து அவரர் வைத்திருந்த பசுவை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றான் .உடனே பரசுராமர், அவன் பின்னால் சென்று அவனைக் கொன்று விடுகிறார் . சிறிது காலம் சென்றபின்னர் கார்த்த வீர்யனின் மகன்களை  கள், ஜமதக்கினி முனிவர் தனியாக இருந்தபோது அவரைக்கொன்று விட்டனர் ; இதை அரித்த பரசுராமர் கார்த்தவீர்யனின் மகன்களையும் துணைக்கு வந்த க்ஷத்ரியர்களையும் வெட்டி வீழ்த்துகிறார் .

அத்தோடு நில்லாமல் 21 க்ஷத்ரியர்களாக்கிக் கொன்று குவிக்கிறார்.  கேரளத்துக்கு  வந்து கடல் சார்ந்த உவர் நிலத்தை மீட்டு, மக்களுக்கு நிலம் அளித்தார். தன்னனுடைய வெறுப்பும் பகைமையும் தணிந்த பின்னர் தன்னுடைய புண்ணியத்தையும் தானம் செய்துவிட்டு, காட்டுக்குப் போய்விடுகிறார் .

ராமரிடம் இவர் தோற்றுப்போன விஷயத்தை உலகப் புகழ்பெற்ற காளிதாசன் ரகு வம்ச காவியத்தில் விரிவாக்கப் பாடியிருக்கிறான்.

பல பரசுராமர்கள் !

காலத்துக்குப் பொருந்தாத இரண்டு கதைகள் பரசுராமர் பெயரில் உள்ளன ; பல பரசுராமர் இருந்திருக்க வேண்டும்   என்பது இதனால் தெளிவாகிறது  . அம்பாவின் வேண்டுகோளை ஏற்று இவர் பிபீஷ்மருடன் சண்டை போட்டதாகவும் அது வெற்றி தோல்வி இல்லாமல் நீடிக்கவே இருவரும் ஆயுதங்களைக் கீ ழே போட்டார்கள் என்பதும் ஒரு கதை

பரசுராமர் , ஆயு தங்கள் பற்றிக் கற்பித்தபோது , கர்ணன், பிராமண வேடத்தில் வந்ததை ஒரு சம்பவம் மூலம் கண்டுபிடித்த பரசுராமர் , அவனுக்குச் சாபம் இட்டதாகவும் இன்னுமொரு கதை மஹாபாரதத்தில் உளது ; ராமாயண மஹாபாரத பரசுராமர் ஒரே காலத்தில் இருந்திருக்க முடியாது . ஆகவே இரண்டு அல்லது மூண்டு பரசுராமர் இருந்திருக்க வேண்டும் .

இது போன்ற குழப்பங்கள் ஆஞ்சாசனேயர்- பீமன் மோதல் கதைகளிலும் உண்டு !

***

பசுபதி

சிவபெருமானுக்குள்ள ஒரு பெயர் . பசு என்றால் இப்போது தமிழில் பசு மாடு என்று நினைக்கிறோம் ஆனால் சம்ஸ்க்ருதத்தில் பிராணிகள் என்ற பொதுப்பெயர் அதிகம் புழக்கத்தில் உள்ளது ; சிவா பெருமான், பிராணிகளுக்கு எல்லாம் தலைவன் என்பதே வேதத்தில் உள்ளது சிவபுராணம் போன்ற பிற்காலப் புராணங்களும் அதை உறுதி செய்கின்றன . பிரம்மா விஷ்ணு, இந்திரன் முதலானோர் இதை அறிந்து வெற்றி கோஷமிட்டனர் என்பது புராணக்   கதை. 

மத்திய கிழக்கில் கிடைத்த ஒரு உருவத்தில் அந்த ஊர் தெய்வத்தைச் சுற்றியும் அயர்லாந்திலுள்ள ஒரு உள்ளூர் தெய்வத்தை சுற்றி யும், செயின்ட்  பிரான்சிஸ்  என்ற கிறிஸ்தவ மஹானைச்  சுற்றியும், சிந்து சமவெளியில் ஒரு முத்திரையிலுள்ள கடவுளை சுற்றியும் மிருகங்கள் நிற்கின்றன. அவை எல்லாம் பசுபதி முத்திரைகளே !

***

மயில் PEACOCK

இந்தியாவின் தேசீயப்பறவை  மயில்; இடி முழக்கம் போன்ற டமார ஓசையைக் கேட்டு இது தொகை வித்தாடியதைக் கண்டு பாபிலோனிய மன்னர்கள் அசந்தே போயினர் ; அக்காலத்தில் இது இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது ; ஈசாப் கதைகளில் மயில் வருவதால் அவர் இந்தியாவிலிருந்து கதைகளைத் திருடியதும்  தெரிகிறது ; மயில் வளர்த்த ஜாதியினரைக்கொண்டு மெளரிய சாம்ராஜ்யத்தை சாணக்கியன் உருவாக்கினான் ; மயிலுக்குப் போர்வை கொடுத்தான் பாரி வள்ளல்; முருகனுக்கும் சரஸ்வதிக்கும் வாஹனம் மயில்.

***

முத்து PEARL

ஆங்கிலத்தில் பேர்ல் PEARL  என்று அழைக்கப்படும் சொல் பரல் , ப்ரவாள என்ற தமிழ், ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்து பெறப்பட்டது . தமிழ் நாட்டிலிருந்து, 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இத்தாலிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது . பாண்டிய நாடு முத்துக்கும் தமிழ் மொழிக்கும் பெயர்பெற்றது . இந்துக்களின் கணக்குப்படி நவத்தினங்களில் முத்தும் பவளமும் அடங்கும் ; ஆயினும் இரண்டும் KATAL பிராணி களிலிருந்து  கிடைப்பவை; யானை, காட்டுப்பன்றி மூங்கில் முதலிய இடங்களிலும் முத்து பிறக்கும் என்றும் சுவாதி நட்ஷத்திரத் தன்று கடலில் பெய்யும் மழை யே முத்து உற்பத்திக்குக் காரணம் என்றும் சம்ஸ்க்ருத நூல்கள் இயம்புகின்றன . முத்து நகைகள் தெய்வங்களையும் மக்களையும் அலங்கரிக்கின்றன ; சம்ஸ்க்ருதத்தில் முக்த என்று சொல்லுவார்கள்.

***

பிங்கல அல்லது  பிங்கள PINK

சம்ஸ்க்ருத நூல்களில் 15-க்கும்  மேலான பிங்கல  பெயர்கள் உள்ளன .

உத்தவ் என்ற யதாவத் தலைவரின் மனைவி பெயர்;

அந்தக என்னும் ராக்ஷஸனின் ரத்தத்தை குடிக்க இறைவி உண்டாக்கிய மானசீக புத்திரனின் பெயர் ; இது மத்ஸ்ய புராணத் தகவல.

சூர்யதேவனின் இருபுறமும் பிங்கல தண்டி என்போர்  நிற்கிறார்கள் ; பிங்கல கைகளில் தாமரை மலர்கள் இருக்கும்;

காஸ்யபருக்கும் கத்ருவுக்கும் பிறந்த ஒரு நாகத்தின் பெயர்;

ஒரு முனிவரின் பெயர்;

யக்ஷர் தலைவன்; சிவபெருமானிடம் மயானத்தில் இருப்பவன்;

பஞ்ச  தந்திரக்கதைகளில் ஒரு சிங்கத்தின் பெயர் ; நிறத்தினால் அமைந்த பெயர்;

பத்ம புராணத்தில் ஒரு பிராமணன் பெயர் ; அவ்னது மனையில் அவனைக் கொள்ளவே இருவரும் கிலியும் பருந்துமாகப் பிறந்து ஒருவரை ஒருவர் பழிவாங்கினர்; கணேச புராணத்தில் ஒரு ராக்ஷஸனின் பெயர்; அவன் ஒரு பயணியை விரட்டி வந்தான். இருவரும் தங்கிய மரத்தின் கீழ் கணேசர் சிலை இருந்ததால் இருவரும் முக்தி பெற்றார்கள்

நான்கு கதைகளில் ஒரு விலைமாதின் பெயர் ;ஆனந்த ராமாயணத்தில் வரும் பிங்களா ராமபிரானை காம எண்ணத்துடன் அணுகியபோது இந்த இப்பிறப்பில் இறுமாதரைச் சிந்தையாலும் தொடேன்; ஆகையால் கிருஷ்ணாவதாரத்தில் கம்சனின் அரண்மனை பணிப்பெண்ணாக வா; அப்போது உன்னை ஏற்கிறேன் என்றார் ராமபிரான் .

இவ்வாறு குறைந்தது 15 கதைகளில் பிங்களா வருகிறாள்

ஆங்கிலத்தில் உள்ள பிங்க் என்ற நிறமும் பைங்கிளியின் கழுத்திலுள்ள நிறமும் இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லுடன் தொடர்புடையது ஆகும்!

TO BE CONTINUED…………………..

Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 79; இந்து மத கலைச்சொல் அகராதி- 79

TO BE CONTINUED…………………..

மஹரிஷிகளின் பெயர் பட்டியல்! – 2 (Post No.15,963)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,963

Date uploaded in London – 9 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மஹரிஷிகளின் பெயர் பட்டியல்! – 2

ச. நாகராஜன்

மஹரிஷிகளின் பெயர் பட்டியல் தொடர்கிறது…

109. பராவஸு 110. பர்வதர் 111. பக்ஷீசுவரர் 112. பாஞ்சசிகர் 

113. பாணினி 114. பாப்ரவ்யர் 115. பார்க்கவர் 116. பிப்பலாதர்

117. புலஹர் 118. புலஸ்தியர் 119. பூதி 120. பைலர் 121. பைலூஷர்

122. போதாயனர் 123. போத்யர் 124. ப்ரகதாச்வர் 125. ப்ரசேதஸ்

126. ப்ரமாதி 127. ப்ரமுகர் 128. ப்ரஹ்மமித்ரர் 129. ப்ருகு

130. ப்ருஹஸ்பதி 131. மகோதரர் 132. மங்கனகர் 133. மதங்கர்

134. மதுச்சந்தஸ் 135. மந்தபாலர் 136. மரீசி 137. மாண்டகர்ணி

138. மாண்டவ்யர் 139. மார்க்கண்டேயர் 140. மிருகண்டு

141. முத்கலர் அல்லது மௌத்கல்யர் 142. மேதஸ் 143. மைத்ரேயர்

144. யாக்ஞ்யவல்க்யர் 145. யாஜர் 146. யாஸ்கர் 147. ரிசிகர்

148. ரிச்யச்ருங்கர் 149. ரிதத்வஜர் 150. ரிதாவக்

151. ருசி 152. ருரு

153. ருஷங்கர் 154. ரைக்யர் 155. ரைக்வர் 156. ரைப்யர் 157. ரைவ்யர்

158. லிகிதர் 159. வகர் 160. வசிஷ்டர் 161. வடவாமுகர்

162. வத்ஸநாபர் 163. வாமசிரஸ் 164. வாமதேவர் 165. வாலகில்யர்கள்

166. வாலதீ 167. வால்மீகி 168. விகர்னர் 169. விச்வரூபர்

170. விஸ்வாமித்ரர் 171. விச்ரவஸ் 172. விபண்டகர் 173, விபுலர்

174. வியாஸர் 175. விருத்தகௌதமர் 176. வேதர் 177. வைசம்பாயனர்

178. வைச்ரவணர் 179. வைவஸ்வதர் 180. ஜமதக்னி 181. ஜரத்காரு

182. ஜவக்ரி 183. ஜனகர் 184. ஜன்ஹூ 185 ஜாபாலி 186. ஜாஜலி

187. ஜைகீஷவ்யர் 188. ஜைமினி 189. ஸந்துப்ரஸ்தர் 190. ஸத்யதபஸ்

191. ஸம்வர்த்தர் 192. ஸரஸ்வதர் 193. ஸனகர் 194. ஸனத்குமாரர்

195. ஸனத்ஸுஜாதர் 196. ஸனந்தனர் 197. ஸஹஸ்ரபத்

198. விந்துத்வீபர் 199. ஸுதர்சனர் 200. ஸுதாபர்

201. ஸுதீக்ஷணர் 202. ஸுமந்தர் 203. ஸுரதச்ரவஸ் 204. ஸுலபை

205. ஸுவர்ணர் 206. ஸூதர் 207. ஸோமச்ரவஸ் 208. ஸௌபரி

209. ஸ்தூலகேசர் 210. ஸ்தூலசிரஸ் 211. ஶ்ரீ கிருஷ்ணர்

212. ஶ்ரீங்கவத் 213. ஶ்ரீஞ்சி 214. ஹரிமேதஸ் 

ஆதாரம்: என்னிடம் உள்ள பழங்கால சிதிலமடைந்துள்ள மஹரிஷிகள் சரித்திரம் என்ற புத்தகத்திலிருந்து தரப்படுகிறது. வெளியிட்டவர் பெயர். ஆண்டு உள்ளிட்டவை கிடைக்கவில்லை.

**

தாய்லாந்தில் சம்ஸ்க்ருத வாசகத்துடன் தங்க மோதிரம் கண்டுபிடிப்பு ! (Post 15,962)

Written by London Swaminathan

Post No. 15,962

Date uploaded in London – 8 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

தாய்லாந்தில் சரஸ்வதி என்னும் பிராமி லிபியில் புஷ்ய ரக்ஷித ( பூச ரகிதச) என்ற சம்ஸ்க்ருத வாசகத்துடன் ஒரு 2000  ஆண்டுப் பழமையான மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . தமிழில் பூசம் என்போம்; கொச்சை மொழியில், அதாவது பிராகிருத மொழியில் சம்ஸ்க்ருத புஷ்ய த்தை பூசம் என்பார்கள். பிராமணப் பெண்கள், மீனவர்கள் பிராகிருதம் என்னும் கொச்சை மொழியிலும் அரசர்களும் பிராமணர்களும்  சம்ஸ்க்ருதம் என்னும் செம்மை மொழியிலும் பேசுவதை காளிதாசன் நாடகங்களில் காணலாம். தமிழிலும் இது உண்டு ; திருவிளையாடல் சினிமாவில் விறகுவெட்டியாக வரும் சிவாஜி கணேசன் பிராக்ருதத்திலும், நக்கீரனுடன் வாதம் செய்யும் சிவாஜி கணேசன் ஸம்ஸ்க்ருதத்திலும் பேசுவதைக் காண்கிறோம் . சம்ஸ்க்ருதம் = செம்மொழி; பிராகிருதம் = பேச்சு மொழி, கொச்சை மொழி .

புஷ்ய நட்சத்திரம் காக்கட்டும்  (பூச ரகிதச= புஷ்ய ரக்ஷித)  என்பது இதன் பொருள்; மோதிரம் அணிந்த அந்த வைசியர் புஷ்ய நடத்திரத்தில் பிறந்தவராக இருக்கலாம் ; அல்லது தங்கத்துக்கும் சிவ பெருமானுக்கும் உரிய நட்சத்திரம் என்பதால் அந்த மோதிரத்தை அணிந்திருக்கலாம் ; தாயலாந்து அகழ்வாராய்ச்சி, வெள்ளப்பெருக்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மீண்டும் தொடரும்போது புதிய செய்திகள் கிடைக்கலாம் . பூச நட்சத்திர மஹிமை பற்றிய கட்டுரைகள் எனது பிளாக்கில் உள்ளன .

பூசம் — Pushya – Gama, Delta and Theta of Cancer பூசம்

பூசம் = கொடிறு, வண்டு, காற்குளம், வியாழன் நாள் (புஷ்ய, திஷ்ய என்ற பெயர்கள் உண்டு), அண்டம், குருவின் நாள்

27 நட்சத்திரக் கணக்கில் எட்டாவது நட்சத்திரம் ; குரு என்னும் வியாழ பகவானின் நட்சத்திரம் .

–SUBHAM—

TAGS- தாய்லாந்தில், சம்ஸ்க்ருத வாசகம்,  தங்க மோதிரம் கண்டுபிடிப்பு, பூச ரகிதச= புஷ்ய ரக்ஷித

Important Upanishad Mantras in English and Devanagari-Part 7 (Post.15,961)

Written by London Swaminathan

Post No. 15,961

Date uploaded in London – 8 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 7

41

यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै।तं ह देवमात्मबुद्धिप्रकाशं मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये॥

Shvetashvatara Upanishad (6.18)

Yo brahmāṇaṁ vidadhāti pūrvaṁ yo vai vedāṁśca prahiṇoti tasmai.Taṁ ha devamātmabuddhiprakāśaṁ mumukṣurvai śaraṇamahaṁ prapadye- Shvetashvatara Upanishad (6.18)

“He who first creates Lord Brahma and delivers the Vedic knowledge to him…”

 “…who illuminates the intellect of the self; unto that resplendent Lord who reveals the highest wisdom, I, the seeker of liberation, surrender.” Shvetashvatara Upanishad (6.18)

****

42

ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते ।
पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॥
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

Om Puurnnam-Adah Puurnnam-Idam
Puurnnaat-Puurnnam-Udacyate |
Puurnnashya Puurnnam-Aadaaya
Puurnnam-Eva-Avashissyate ||
Om Shaantih Shaantih Shaantih || [

  • “Om, That (the unseen, absolute divine) is complete (infinite).
  • This (the visible, manifest world) is also complete.
  • From the complete, the complete manifests.
  • Even when the complete is taken away from the complete, the complete remains complete.”

Isha Upanishad (which also appears in the Brihadaranyaka Upanishad)

****

43

Shvetashvatara Upanishad Mantra 4.11.

यो योनिं योनिमधितिष्ठत्येको यस्मिन्निदं सं च वि चैति सर्वम् ।तमीशानं वरदं देवमीढ्यं निचाय्येमां शान्तिमत्यन्तमेति ॥

yo yoniṃ yonim adhitiṣṭhaty eko yasmin idaṃ saṃ ca vi caiti sarvamtam īśānaṃ varadaṃ devam īḍyaṃ nicāyyemāṃ śāntim atyantam eti

Yaḥ: He who 

 Yoniṃ yonim: In every womb / all the various aspects of nature 

Adhitiṣṭhati: Presides over / rules 

 Ekaḥ: The one  Yasmin: In whom 

 Idaṃ: This

Saṃ ca vi caiti sarvam: The whole world merges (at dissolution) and appears (at creation). 

Tam īśānaṃ: Him, the Supreme Lord   Varadaṃ: The bestower of boons/blessings  

Devam īḍyaṃ: The adorable God 

 Nicāyya: By realizing / meditating upon 

 Imāṃ śāntim atyantam eti: One attains supreme, infinite peace

****

44

तत्रापरा ऋग्वेदो यजुर्वेदः सामवेदोऽथर्ववेदः शिक्षा कल्पो व्याकरणं निरुक्तं छन्दो ज्योतिषमिति ।
अथ परा यया तदक्षरमधिगम्यते ॥ ५ ॥

tatrāparā ṛgvedo yajurvedaḥ sāmavedo’tharvavedaḥ śikṣā kalpo vyākaraṇaṃ niruktaṃ chando jyotiṣamiti .
atha parā yayā tadaksharamadhigamyate ..Mundakopanishad 1-5

The verse defines Apara Vidya (lower knowledge) as the four Vedas and six Vedangas (phonetics, ritual, grammar, etymology, metre, and astronomy). Conversely, Para Vidya (higher knowledge) is defined as that which leads to the realization of the imperishable Brahman.

Sage Angira explains that empirical, scriptural, and ritualistic knowledge is considered lower, while the pursuit of the eternal, imperishable Brahman is higher.

**** 

45 

उत्तिष्ठत जाग्रत प्राप्य वरान्निबोधत ।
क्शुरस्य धारा निशिता दुरत्यया दुर्गं पथस्तत्कवयो वदन्ति ॥ १४ ॥ Katha Upanisad (1.3.14)

uttiṣṭhata jāgrata prāpya varānnibodhata |
kśurasya dhārā niśitā duratyayā durgaṃ pathastatkavayo vadanti || 14 ||- Katha Upanisad (1.3.14)

14. Arise, awake; having reached the great, learn; the edge of a razor is sharp and impassable; that path, the intelligent say, is hard to go by.

To be continued…………………..

Tags- important, Upanishad, mantras,  part 7

முக்கிய உபநிஷத மந்திரங்கள்- 7 (Post No.15,960)

Written by London Swaminathan

Post No. 15,960

Date uploaded in London – 8 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 7

41

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை

வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி  தஸ்மை 

தம் ஹ தேவம்  ஆத்மபுத்திப்ரகாசம்  முமுக்ஷுர்வை

சரணமஹம் ப்ரபத்யே

–ஸ்வேதாச்வத்ரோபநிஷதம் -6-18,19

யார் பிரம்மதேவனை சிருஷ்டியின்போது தோற்றுவித்தானோ , யார் மேலும் அந்த வேதங்களை பிரம்மதேவனுக்குக் கொடுத்தானோ , அப்பரமனை,  அறிவை ,ஆத்ம ஞானத்தில் ஒளிர்பவனை, அவயங்கள் இல்லாதவனை, கர்மங்கள் இல்லாதவனை, சாந்த மூர்த்தியை, குற்றமற்றவனை, மாசற்றவனை மரணமில்லாத நிலைக்கு இட்டுச் செல்லும் பாலமாக இருப்பவனை, விறகு எரிந்த பின்னர்  ஒளிரும் தீப்போன்றவனை, மோக்ஷத்தை நாடுகின்ற நான் சரணடைகிறேன்.

यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै।तं ह देवमात्मबुद्धिप्रकाशं मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये॥ Shvetashvatara Upanishad (6.18)

Yo brahmāṇaṁ vidadhāti pūrvaṁ yo vai vedāṁśca prahiṇoti tasmai.Taṁ ha devamātmabuddhiprakāśaṁ mumukṣurvai śaraṇamahaṁ prapadye- Shvetashvatara Upanishad (6.18)

****

42

ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே

பூர்ணஸ்ய பூர்ணமாதாய  பூர்ணமேவாவசிஷ்யதே 

—–ஈசாவாஸ்ய , பிருஹதாரண்யக உபநிஷத்துக்களில் வரும் சாந்தி மந்திரம்

அதுவும் பூரணம்; இதுவும் பூரணம்.

பூரணத்திலிருந்து பூரணம் உதித்திருக்கிறது .

பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்த பின்னரும்

பூரணமே எங்கும் எஞ்சியிருக்கிறது .

ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते ।
पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॥
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

Om Puurnnam-Adah Puurnnam-Idam
Puurnnaat-Puurnnam-Udacyate |
Puurnnashya Puurnnam-Aadaaya
Puurnnam-Eva-Avashissyate ||
Om Shaantih Shaantih Shaantih || [

****

43

யோ யோனிம் யோனிமதி  திஷ்டத்யேகோ 

யஸ்மின்னிதம்  ஸம் ச  வி சைதி ஸர்வம்

தமீசானம் வரதம் தேவமீட்யம்    

நிசாய்யேமாம் சாந்திமத்யந்தமேதி

—-ஸ்வேதாச்வத்ரோபநிஷதம் -4-11

எந்த ஒரு இறைவன் பிரகிருதியின் / இயற்கையின்  பிறப்பிடங்களிலெல்லாம் தலைமை தாங்குகிறானோ , எவனிடத்து இவை யாவும் ஒடுங்குகின்றனவோ , எவன் பல வடிவங்களை எடுக்க வல்லவனோ , அந்த ஈசனை, வரம் கொடுப்பவனை,  போற்றுதற்குரியவனை, பிரகாசமானவனை  அனுபவத்தில் அறிகிற ஒருவன் அளவுகடந்த சாந்தியை அடைகிறான்.

Shvetashvatara Upanishad Mantra 4.11.

यो योनिं योनिमधितिष्ठत्येको यस्मिन्निदं सं च वि चैति सर्वम् ।तमीशानं वरदं देवमीढ्यं निचाय्येमां शान्तिमत्यन्तमेति ॥

yo yoniṃ yonim adhitiṣṭhaty eko yasmin idaṃ saṃ ca vi caiti sarvamtam īśānaṃ varadaṃ devam īḍyaṃ nicāyyemāṃ śāntim atyantam eti

****

44

தத்ராபரா: ரிக்வேதோ  யஜுர்வேத:  ஸாமவேதோ அதர்வ

வேத: சிக்ஷா கல்போ  வ்யாகரணம்  நிருக்தம் சந்தோ

ஜ்யோதிஷமிதி  அத பரா யயா ததக்ஷர மதிகம்யதே

முண்டகோபநிஷத் 1-5

அவைகளுள் பிரபஞ்ச ஞானமாயிருப்பவைகள் ரிக்வேதம், யஜுர் வேதம்,  ஸாமவேதம், அதர்வவேதம்,  உச்சரிப்பு, கிரியாமுறைகள் இலக்கணம், சொற்பிறப்பியல், வேத செய்யுள் இலக்கணம், ஜோதிடம் முதலியனவாம் . இனி எதனால் பரம்பொருள் அடையப்படுகிறதோ  அது பர வித்யை ஆம்.

तत्रापरा ऋग्वेदो यजुर्वेदः सामवेदोऽथर्ववेदः शिक्षा कल्पो व्याकरणं निरुक्तं छन्दो ज्योतिषमिति ।
अथ परा यया तदक्षरमधिगम्यते ॥ ५ ॥

tatrāparā ṛgvedo yajurvedaḥ sāmavedo’tharvavedaḥ śikṣā kalpo vyākaraṇaṃ niruktaṃ chando jyotiṣamiti .
atha parā yayā tadaksharamadhigamyate ..Mundakopanishad 1-5

****

45

உத்திஷ்டத ஜாக்ரத ப்ராப்யவரான் நிபோதத

ஷூரஷ்யதாரா  நிசிதா தூரத்யயா துர்கம் பதஸ்தத்

கவயோ வதந்தி

கடோபநிஷத் 3-14  

எழுந்திரு ! விழித்திரு ! சான்றோரை அணுகி அந்த இறைவனை அறிந்துகொள்! அந்த ஞான  மர்க்கமானது  கூர்மையான சவரக் கத்தியின் வாய் போன்று கடப்பதற்கு அரியது . கடப்பதற்கு இயலாதது என்று ஞானிகள் இயம்புகின்றனர்.

उत्तिष्ठत जाग्रत प्राप्य वरान्निबोधत ।
क्शुरस्य धारा निशिता दुरत्यया दुर्गं पथस्तत्कवयो वदन्ति ॥ १४ ॥ Katha Upanisad (1.3.14)

uttiṣṭhata jāgrata prāpya varānnibodhata |
kśurasya dhārā niśitā duratyayā durgaṃ pathastatkavayo vadanti || 14 ||- Katha Upanisad (1.3.14)

To be continued…………………..

Tags- முக்கிய உபநிஷத மந்திரங்கள், part 7