
Written by London Swaminathan
Post No. 16,052
Date uploaded in London – 4 August 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1
திருவள்ளுவமாலை என்பது என்ன ?
2
இந்த நூலில் கபிலர், அவ்வையார், பரணர், மாங்குடி மருதனார் போன்ற சங்கப் புலவர்கள் பெயர்கள் உள்ளன ; அவர்கள் சங்க காலப் புலவர்களா ?
3
இந்த நூலில் உள்ள சங்ககாலத்தைசாராத புலவர்கள் யாவர்?
4
இந்த நூல் தொகுக்கப்பட்ட காலம் எது?
***
5
இந்த நூலில் வள்ளுவன் பெயரைச் சொன்னவர் யார் ?
6
வாமன அவதாரத்தில்திருமால் இந்த உலகத்தை இரண்டே அடியால் அளந்தார்; அதைப்போல வள்ளுவனும் ஈரடிகளால் அளந்து விட்டான் என்று யார் பாடினார்?
7
கடுகைத் (அணுவை) துளைசெய்து அதில் எழுகடல் நீரையும் பாய்ச்சி குறுகத்தறித்தது போன்றது திருக்குறள் என்று பாடிய இருவர் யார்?
8
ஸம்ஸ்க்ருதத்தின் சிறப்பு வேதம்; தமிழின் சிறப்பு திருக்குறள் என்று சொன்னவர் யார் ?
9
திருவள்ளுவர் அறத்தை அகலாகவும், பொருளைத் திரியாகவும் இன்பத்தை நெய்யாகவும், சொல்லை நெருப்பாகவும், குறட்பாவைத் தண்டாகவும் கொண்டு, உலகத்தோரின் அக இருளை நீக்கும் விளக்கேற்றினார்- என்று உருவாக்கப்படுத்திப் பாடியவர் பெயர் என்ன ?
10
நான்கு வேதங்களையும் சதா முழங்கும் பிரம்மாதான் இங்கு மூன்று (அறம், பொருள், இன்பம்) பொருள்களை மொழிந்தான் என்று புகழாரம் சூட்டியவர் யார் ?
**********************************

London Swaminathan with Valluvar after garlanding him last week at SOAS, University of London.
விடைகள்
1.திருவள்ளுவமாலை என்பது திருக்குறளின் பெருமையையும் திருவள்ளுவரின் சிறப்பையும் போற்றிப் புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நூலாகும். இந்நூலில் 53 புலவர்கள் பாடிய 55 வெண்பாக்கள் உள்ளன.
***
2. அவர்கள் சங்க காலப் புலவர்களாக இருக்க முடியாது என்பது ஒரு சாரார் கருத்து; இதன் நடையும் சங்க காலத்தைச் சாராத புலவர்கள் பெயர்களும் இதில் இருப்பதே காரணம்.
***
3.வள்ளுவமாலையில் காணப்படும் உருத்திரசன்மர், நத்தத்தனார், முகையலூர்ச் சிறுகருந்தும்பியார், எறிச்சனூர் மலாடனார், போக்கியார், நாகன் தேவனார், செங்குன்றூர்க் கிழார், கவிசாகரப் பெருந்தேவனார், செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனார், வண்ணக்கஞ் சாத்தனார், களத்தூர்க் கிழார், நச்சுமனார், அக்காரக்கனி நச்சுமனார், குலபதி நாயனார், தேனீக்குடிக் கீரனார், கொடிஞாழன் மாணிபூதனார், கௌணியனார், மதுரைப் பாலாசிரியனார் என்பவர்களை சங்க இலக்கியங்களில் காண முடியவில்லை.
***
4.திருவள்ளுவமாலை நூலில் உள்ள பாடல்களின் சொல் அமைப்பினை நோக்கும்போது இந்நூலின் காலம் 11-ம் நூற்றாண்டாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகிறார்கள்.
***
5.மாமூலனார்:
அறம்பொரு ளின்பம்வீ டென்னுமந் நான்கின்
றிறந்தெரிந்து செப்பிய தேவை- மறந்தேயும்
வள்ளுவ னென்பானோர் பேதை யவன்வாய்ச்சொற்
கொள்ளா ரறிவுடை யார். (08)
***
6.பரணர்
மாலும் குறளாய் வளர்ந்துஇரண்டு மாணடியால்
ஞாலம் முழுதும் நயந்தளந்தான் – வாலறிவின்
வள்ளுவரும் தம்குறள்வெண் பாவடியால் வையத்தார்
உள்ளுவவெல்லாம் அளந்தார் ஓர்ந்து
***
7.இடைக்காடர்
கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள். 54
ஔவையார்
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள். 55
***
8.வண்ணக்கஞ் சாத்தனார்
ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து இதனினிது
சீரியது என்றொன்றைச் செப்பரிதால் – ஆரியம்
வேதம் உடைத்து தமிழ்திரு வள்ளுவனார்
ஓதுகுறட் பாஉடைத்து. 43
***
9.நப்பாலத்தனார்
***
உக்கிரப் பெருவழுதியார்:
10. நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்
தான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த – நூல்முறையை
வந்திக்க சென்னிவாய் வாழ்த்துகநல் நெஞ்சம்
சிந்திக்க கேட்க செவி
–subham—
Tags- திருவள்ளுவமாலை, 10 கேள்விகள் ,கடுகைத் துளைத்தேழ், அணுவைத் துளைத்தேழ்,
You must be logged in to post a comment.