வருமுன் காப்பதே சிறப்பாகும்! (Post.16,054)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,054

Date uploaded in London – 5 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

சுபாஷிதச் செல்வம்

வருமுன் காப்பதே சிறப்பாகும்!

ச. நாகராஜன்

காவ்யம், சாஸ்திரம் படிப்பவர்கள் புத்திசாலிகள்!

காவ்யசாஸ்த்ராவிநோதேன காலோ கச்சதி தீமதாம் |                      இதரேஷாம் து மூர்காணாம் நித்ரயா கலஹேன வா ||

புத்திசாலிகள் தங்கள் நேரத்தை கவிதையைக் கற்பதிலும் சாஸ்திரங்களைக் கற்பதிலும் செலவிடுகின்றனர். முட்டாள்களோ தங்கள் நேரத்தைத் தூக்கத்திலோ அல்லது மற்றவர்களுடன் சண்டையிடுவதிலோ கழிக்கின்றனர்.

 வருமுன் காப்பதே சிறப்பாகும்!

சிந்தனீயா ஹி விபதாம் ஆதாவேவ ப்ரதிக்ரியா |                                  ந கூபகனனம் யுக்தம் ப்ரதீப்தே வஹ்னினா க்ருஹே ||

ஒரு ஆபத்தை எதிர்கொள்ளும் முன்னரே ஒருவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வீடு பற்றி எரியும் போது கிணறு தோண்டும் வேலையை ஆரம்பிக்கக் கூடாது.

 சாதுக்களின் தரிசனம் உடனடி பலனை அளிக்கும்!

சாதுனாம் தர்சனம் புண்யம் தீர்தபூதா ஹி சாதவ: |                  காலேன பலதே தீர்த: சந்தவ: சாதுசமாகம: ||

ஒரு சாதுவை தரிசிப்பது புண்யமானது, ஏனெனில் அவர்கள் புண்ய தீர்த்தங்களுக்குச் சமமானவர்கள்.  ஒரு புண்ய ஸ்தலத்திற்குச் சென்றதான புண்யம் நம்மை அடைய அதிக காலமாகிறது. ஆனால் ஒரு சாதுவின் தரிசனம் உடனடியாகப் பலனை அளிக்கிறது.

ங்கா ஸ்நானம், பாரத ஸ்ரவணம், அச்சுத வழிபாட்டின் பலன்!

க்ருதகங்கோதகஸ்நானம் ச்ருதம் பாரத சத்கதம் |                   அர்சிதாச்யுதபாதாப்ஜம் தினம் கல்பசதாஹரம் ||

கங்கையில் ஸ்நானம் செய்வது, மஹாபாரத சத்கதையைக் கேட்பது, அச்சுதனின் பாதகமலங்களைத் தொழுவது ஆகியவை நூறு கல்பங்களுக்கு நீடிக்கப் போதுமானது.

ஹரி மங்களம் தந்தால் மற்றவற்றால் பயன் ஒன்றும் இல்லை!

கிம் தஸ்ய தானை: கிம் தீர்தே: கிம் தபோபி: கிமத்வரை: |               ஹ்ருதிஸ்தோ யஸ்ய பகவான்மங்களாயதனோ ஹரி: ||

ஹரியானவர் ஒருவர் மனதில் மங்களத்தைத் தரும் போது, தானத்தைத் தர வேண்டாம், புண்ய தலங்களுக்குச் செல்ல வேண்டாம், தவம் செய்ய வேண்டாம், யாகம் செய்ய வேண்டாம். இவற்றால் பயன் எதுவும் இல்லை.

**

Leave a comment

Leave a comment