

Written by London Swaminathan
Post No. 16,103
Date uploaded in London – 18 August 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
English version posted yesterday
சுபத்ரா
வாசுதேவனின் பெண் ; கிருஷ்ணர், பலராமன் ஆகியோரின் சகோதரி; அர்ஜுனனின் மனைவி; அபிமன்யுவின் தாய். இதே பெயரில் பலர் இருந்ததை மஹாபாரதம் தெரிவிக்கிறது. பூரி ஜகந்நாதரின் ரத யாத்திரையில் சுபத்ராவுக்கு ஒரு ரதம் உள்ளதால், ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் உலகம் முழுதும் நடத்தும் ரத யாத்திரையில் சுபத்ரா ரதத்தையும் கொண்டுவருவதால், மேலும் பிரபலமாகிய பெயர் ஆகிவிட்டது. தமிழ் நாடு வரை பெண்களின் பெயராகவும் இருக்கிறது; சங்க இலக்கியத்தில் வரும் மாறோக்கத்து நப்பசலையார் என்ற பெண் கவிஞரின் பெயர் சுபத்ரா என்பது நான் ஆராய்ச்சியில் கண்ட துணிபு. தமிழ் நாட்டைப்போலவே அம்மான் மகளான சுபத்ராவை அர்ஜுனன் மணந்தான் . ஆகவே முறைப் பெண்ணை மணப்பது வடக்கிலும் இருந்தது உறுதியாகிறது . துவாரகாவுக்கு விருந்தினராக வந்த அர்ஜுனன் , சுபத்ராவைக் கடத்தி கல்யாணம் கட்டியதை பலராமன் கடுமையாக ஆட்சேபித்தார். ஏனெனில் சுபத்திராவை துர்யோதணனுக்கு மணம் செய்விக்க பலராமன் திட்டமிட்டிருந்தார் ;கடைசியில் கிருஷ்ணன் தனது அண்ணனை சமாதானப்படுத்தினார்.
***
சுக்ரன் / சுக்ராச்சார்யா
சுக்ரன் என்பது வெள்ளி கிரகம் ; சுக்ல என்றால் வெள்ளை நிறம் . வெள்ளி என்னும் கிரகத்தையும் மழையையையும் தொடர்புபடுத்தி பல செய்யுட்கள் புறநானூற்றிலும் சம்ஸ்க்ருத நூல்களிலும் உள்ளன ; விஞ்ஞானிகளுக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது .
சுக்ராச்சார்யா என்ற பிராமணன் அசுரர்களின் குரு; பிருஹஸ்பதி என்ற பிராமணன் தேவர்களின் குரு. இருவரையும் இரு அந்தணர் என்று சங்க இலக்க்கி யம் பாடுகிறது; சுக்ராசார்யாரின் மகள் தேவயானி , பிருஹஸ்பதியின் மகன் கச்சனின் மீது கொண்ட காதல் கதை திரைப்படமாக வந்ததால் தமிழர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவள் தேவயானி. (இந்த பிளாக்கில் கச்ச-தேவயானி கதை முன்னரே கொடுக்கப்பட்டுள்ளது ).
பிராமணர்கள் தான் அசுரர்களுக்கும் குரு என்ற உண்மையும் அசுரர்கள் தவம் செய்து பிரம்மாவிடமிருந்தும் சிவ பெருமானிடமிருந்தும் வரங்களைப் பெற்றனர் என்ற புராண உண்மையும் திராவிட- ஆரிய வாதத்துக்கு செமை அடி கொடுக்கிறது; வெளிநாட்டு விஷமிகள் அசுரர்களை திராவிடர் என்று வருணித்து இந்துக்களை பிரிக்கப்ப்பார்த்தனர் ; அந்த வாதம் செல்லாக்காசாகிவிட்டது .
***
சுக்ர நீதி
சுக்ராசார்யார் அல்லது உஷனர் என்பவர் தங்களுடைய அரசியல், சமூகம், தர்மம், நீதி முதலிய தலைப்புகளில் கருத்துக்களை வெளியிட்டனர் ; அவை சுக்ர நீதி என்ற பெயரில் பிரபலமாகிவிட்டது.
***
சுந்தர காண்டம்
ராமாயணத்தில் ஐந்தாவது காண்டம் இது; சுந்தர காண்டத்தைப் படித்தால்ர் ஆ அஞ்சசனேயரைப் போல எடடுத்த காரியம் யாவினும் வெற்றியும் மங்களமு ம் ஏற்படும் என்ற நம்பிக்கையால் சம்ஸ்க்ருத சுந்தர காண்டம் அல்லது அதன் தமிழ் மொழிபெயர்ப்பைப் படிப்பது வழக்கத்தில் உள்ளது அதை பூஜை அறையில் வைத்து மரியாதை செய்வார்கள் . சுந்தர காண்டஉபன்யாசம் செய்யும் சாஸ்திரிகளுக்கு கணையாழி அத்தியாயம் சொல்லும்போது பட்டு சால்வை, தங்க மோதிரம் ஆகியவற்றையும் பரிசாக அளிப்பார்கள் . இதில் முக்கிய அத்தியாயங்கள் என்னவென்றால் அனுமன் சீதையை சந்த்தித்து ராமனனின் மோதிரத்தைக் கொடுத்துவிட்டு அவளுடைய மோதிரத்தை ராமனுக்கு அளித்தது மற்றும் இலங்கைக்கு தீ வைத்தது முதலியன ஆகும்; அனுமனின் வெற்றிப்பயணத்தால் இதைப்படித்தாலோ கேட்டாலோ எல்லா காரியங்களும் வெற்றியடையும், சுபமாக முடியும், கல்யாணங்கள் நடைபெறும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
முக்கிய அத்தியாயங்கள்
Chapter 1 – அனுமனின் புறப்பாடு;
Chapter 6 – ஹனுமான் ராவணன் அரண்மனையை நோட்டம் விடுதல்;
Chapter 7 – புஷ்பக விமான வருணனை
Chapter 8 – Further Description of the Aerial Chariot Pushpaka
Chapter 15 – ஹனுமான் சீதா தேவியைக் காணுதல்;
Chapter 22 – சீதைக்கு ராவணன் விடும் மிரட்டல்
Chapter 27 – திரிஜடையின் சுபக் கனவு
Chapter 32 – ஹனுமான் சீதையின் முன் தோன்றி ராமபிரானைப் புகழ்தல்
Chapter 37 – ஹனுமான்சொன்ன மீட்பு திட்டாத்தை சீதா தேவி நிராகரித்தல்
Chapter 38 – சீதாதேவி தனது நகையை ராமனுக்கு கொடுத்து அனுப்புதல் ;
Chapter 49 – ஹனுமான் பல இடங்களை அளித்து பல தளபதிகளைக் கொன்றதால் அரக்கர்கள் பிடித்தல்
Chapter 53 – அனுமனை தெருத்தெருவாக இழுத்துச் செல்லும்படி ராவணன் உத்தரவு; வாலில் வைத்த தீயை அவன் இலங்கை நகருக்கு இட்டான்
Chapter 54 – லங்கா நகரம் தீக்கிரை
Chapter 64 – சுக்ரீவன் , ராமபிரானுக்கு ஆறுதல் சொல்லல்;
Chapter 65 – கண்டேன் சீதையை என்ற தலைப்புச் செய்தியுடன் ராமனை அனுமன் சந்தித்து அளவளாவுதல்
Chapter 68 – சீதாதேவிக்கு சொன்ன ஆறுதலை ராமனுக்கு அப்படியே எடுத்துரைத்தல்
***
சுமேரு
இமய மலைக்கும் அப்பாலுள்ள ஒரு தங்க நிற மலை என்றும் வடதுருவம்தான் சுமேரு என்றும் கருத்துக்கள் உள்ளன இதை சூரியனும் சந்திரனும் வலம் வருவதாகச் சொல்வதால் வடதுருவம் அல்லது ஆர்ட்டிக் வட்ட நா டுகள் என்பது ஒரு வாதம்.
வித்யாதரர்கள், கிம்புருஷர்கள் முதலிய தெய்வீக புருஷர்கள் சுமேருவில் வசிக்கிறார்கள் .
***
சுரா பானம்
இது சோம ரசத்திலிருந்து வேறுபட்ட பானம்; இந்த வேற்றுமைகளை விளக்கிவிட்டு இதைத் தவிர்க்கும்படி வேதம் புத்தி சொல்கிறது. அரிசியை அல்லது தேனை அல்லது கரும்புச் சாற்றை புளிக்கவைத்து இதைச் செய்வதையும் சம்ஸ்க்ருத நூல்கள் விளக்குகின்றன
***

சூர்ய வம்சம்
புராதன மன்னர்களை சந்திர வம்சம் என்றும் சூரிய வம்சம் என்றும் இந்துமத புராணங்கள் பிரிக்கின்றன. அதன்படி இக்ஷ்வாகு முதல் 145-க்கும் மேற்பட்ட மன்ன ர்களின் பட்டியலைப் புராணங்கள் தருகின்றன . இதன் கடைசி மன்னர் சுமித்ரன், நந்த வம்ஸத்துக்கு முன்னால் வாழ்ந்தவன் ; அதாவது 2600 ஆண்டுகளுக்கு முந்தையவன் சுமித்ரன்! ஒரு மன்னனுக்கு 20 அல்லது 25 ஆண்டுகளை வரலாற்று அறிஞர்கள் ஒதுக்குகின்றனர்;
ராம பிரான் , சோழ மன்னர்கள் ஆகியோர் சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள். இந்துமத புராணங்களை நம்புவோர் சிந்து வெளி நாகரீகமும் சூர்ய வம்ச ஆட்சிக்குள் வந்துவிடுவதை ஒப்புக்கொள்ள வேண்டும் ஏனெனில் இக்சிவாகு 2800+600=3400 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தியை ஆண்டிருப்பார் ; அயோத்தியிலிருந்து ஹரப்பாவும் மொஹன்சதாரோவும் அதிக தூரம் இல்லை.
ஆரிய- திராவிடம் பேசும் அறிவிலிகளுக்கு இது செமை அடி கொடுக்கும் ;மாக்ஸ்முல்லரைப் புரட்டிப் புரட்டி அடித்த பேராசிரியர் வில்சன் சொல்வது போல ரிக்வேதத்துக்கு 2000 BCE கொடுத்தாலும் சிந்து வெளி நாகரிகத்துக்கு , அடி உதை விழும் !
***
சூர்யன்
சோலார் என்ற ஆங்கிலச் சொல் சூர்ய என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் திரிபே; ர+ல இடம் மாறும் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்கண விதி
சூரியனுக்கு ஒரு சக்கரமும் ஏழு குதிரைகளும் இருப்பதாக புராணங்கள் சொல்லுவதை சங்கத் தமிழ் புலவர்களும் செப்புகின்றனர் வானவில்லில் காணப்படும் ஏழு நிறங்களை ஏழு குதிரைகள் என்று அடையாள பூர்வமாகச் சொல்லுவார்கள். சூரியனுக்கு முன்னால், பல்லாயிரம் குள்ள முனிவர்கள் — வாலகில்யர்கள்– செல்வதை புராணங்களும் சங்கப்புலவர்களும் செப்புகின்றனர்; இதுவரை விஞ்ஞானிகள் இதை விளக்கவில்லை . அவர்கள் விளங்காதவர்களே! காஷ்மீர் முதல் பாகிஸ்தானில் இப்போதுள்ள மூல்டான் முதல் ஒரிஸ்ஸாவிலுள்ள கோனார்க் வரை சூரியனுக்கு கோவில்கள் இருந்தன . முஸ்லீம் வெறியர்கள் அவைகளை உடைத்து அழித்ததை வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். சூரிய கிரஹணம் பற்றி ரிக் வேதத்திலும் மகாபாரதத்திலும் புறநானூற்றிலும் குறிப்புகள் காணப்படுகின்றன; சூரியனுக்கு மனைவிககள் உண்டு என்று சொல்லுவதும் அடையாள பூர்வ செய்திகளே நிழல் / சாயா ஒரு மனைவி!
அமரகோசத்தின் ஆசிரியர் அமரசிம்மன் சூரியனுக்கு 37 பெயர்களைச் சொல்லியிருக்கிறார். அவையாவன:–
அர்யமா = பித்ரு தேவதா, சூரியனின் பக்தர்கள்
ஆதித்ய: = அதிதி வம்சத்தில் வந்தவர்
த்வாதசாத்மா =
திவாகர: = நாள் என்பதை உருவாக்குபவன்
பாஸ்கர: = ஒளியூட்டுபவன் (பாஸ்பரஸ் என்ற மூலகத்தின் பெயரும் இதே பொருளுடைத்து)
அஹஸ்கர: = நாள் என்பதை உருவாக்குபவன்
ப்ரத்ன:= இருட்டை ஒழிப்பவன்
ப்ரபாகர: = ஒளியூட்டுபவன்
விபாகர: = ஒளியூட்டுபவன்
பாஸ்வான்= ப்ளியுடையவன்
விவஸ்வான் = பலவித ஆடைகளை உடையவன்
சப்தாஸ்வ = ஏழு குதிரைகளை உடையவன் (வானவில்லின் வண்ணங்கள்)
ஹரிதஸ்வ = பச்சைக் குதிரை உஅடையவன்
உஷ்ணரஸ்மி: = வெப்பமான கதிர் உடையவன் (பல பெண்களுக்கு ரஸ்மி என்று பெயர்; அதாவது கிரணம், கதிர் ஒளி)
விகர்தன: = பாலிஷ் செய்யப்பட்டவன், மெருகூட்டப்பட்டவன், விசேஷன கர்தவ்யம்
அர்க: = பூஜிக்கப்படதக்கவன் (அருகம் புல், தாமிரம், ஸ்படிகம், இந்திரன் என்றும் இச்சொல் பொருள்படும்)
மார்த்தாண்ட: = ‘இறந்த கோளத்தில்’ இருப்பவர்
மிஹிர: = வெளிவருபவன் (புத்தன் என்றும் இச்சொல் பொருள்படும்)
அருண: = சூர்ய சாரதி ( மற்ற பொருள்கள்= சந்த்யா ரகம், நிசப்தம், கபிலர், குஷ்டநோய், குணவான்)
பூஷா = புஷ்டியை ஏற்படுத்துபவன் (சூரியனிடமிருந்து ஆரோக்கியத்தைப் பெறு என்பது சம்ஸ்கிருத பழமொழி; இலவச வைட்டமின் ‘டி’ தருபவன்)
த்யுமணி: = வானில் தோன்றும்ரத்தினக் கல்
தரணி = சம்சாரக் கடலைக் கடக்கச் செய்வோன் (ஏனைய பொருள்= குமரி, படகு)
மித்ர: = சூரியன் (நண்பன்)
சித்ரபானு: = வண்ணக் கதிர் உடையோன்
விரோசன: = ஒளிவீசுபவன் 9மற்ற அர்த்தங்கள் = நிலவு, பிரஹலாதன் மகன்)
விபாவசு: = ஒளிதருபவன் (மற்ற பொருள்= ஒருவித நெகலஸ், பாவக)
க்ரஹபதி: = கிரகங்களுக்கு நாயகன்/தலைவன்
த்விஷாம்பதி:= ஒளிக்கு அதிபன்/தலைவன்
அஹர்பதி:= நாளுக்கு தலைவன் (அஹர் = பகல், பகலவன்)
பானு: = ஒளி
ஹம்ச: = சூரியன்
சஹஸ்ராம்சு: = 1000 கதிர் உடையோன்
தபன: = தபிக்கச் செய்பவன்(தபி = சூடேற்று; தப=தவ)
சவிதா= சூரியன்
ரவி: = சூரியன்
சுர: = பார்க்கக்கூடிய அனைத்தையும் தூண்டுபவன் (விழித்தெழச் செய்வான்)
சூர்ய: = சுர: என்பதைக் காணவும்.
தமிழ்நாட்டில் தினமணி, தினகரன் போன்ற பத்திரிக்கைகள், ஆங்கிலத்தில் ‘சன்’ போன்ற பத்திரிக்கைகள் சூரியன் பெயரைத் தாங்கி வருகின்றன. உலகிலுள்ள எல்லா முக்கிய மொழிகளிலும் சூரியன் பெயரில் நாளேடுகள் இருக்கின்றன. சூரிய நமஸ்காரத்திலுள்ள 12 மந்திரங்களும் மீண்டும் பிரபலமாகி வருகின்றன.
பல ஆண்கள், பெண்களின் பெயர்களும் சூரியன் பெயரிலிருந்தும், ஒளி என்பதிலிருந்தும் வந்தவை.
சூரியனுக்கு ‘இனன்’ என்று ஒரு பெயர் உண்டு; அதிருந்து வந்ததே இன்கா நாகரீகம் என்று முன்பே எழுதியிருக்கிறேன்.
அம்சுமாலி (நீர்நிலைகளின் தலைவன்), பஹ: ( ஐஸ்வர்யம்) முதலிய வேறு 17 பெயர்களையும் அமர கோச உரைகாரர்கள் விளம்புவர்)
சூரியனுக்கு அருகாமையில் உள்ள மாடர, பிங்கள:, தண்ட: பற்றியும் அமரம் பேசும்; இவை ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள்.

6000 ஆண்டுகள் பழமையான ரிக் வேதத்தில் சூரியனைப் பற்றிய 6 கண்டுபிடிப்புகள் உள்ளன. அவைகளை அண்மைக் காலத்தில் நடந்த விண்வெளி ஆராய்ச்சிகள் உறுதி செய்கின்றன.
1.சூரியனில் கறுப்புப் புள்ளிகள் SUN SPOTS (Already posted in English)
11 ஆண்டுக்கு ஒரு முறை சூரியனில் கருப்புப்புள்ளிகள் அதிகரிக்கின்றன. இவை பற்றி 100, 200 ஆண்டுகளாகத்தான் விஞானிகளுக்குத் தெரியும். சீனாக்காரர்கள் இதை 2800 ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டதாக என்சைக்ளோபீடியாக்கள் என்னும் கலைக்களஞ்சியங்கள் செப்பும். அந்த அரை வேக்காடுகளுக்கு, ரிக் வேதத்தில் SUN SPOTS ‘சன் ஸ்பாட்ஸ்’ எனப்படும் குறிப்புகள் 6000 ஆண்டுக்கு முன்னரே சொல்லப்பட்டிருப்பது தெரியாது!
காண்க மந்திரம் – Sun spots in Sun—RV 10-189
சூரியனின் கருப்புப் புள்ளிகள் 10-189-1
“புள்ளிகள் உடைய காளை கிழக்கே வந்துவிட்டான்.அம்மாவுக்கு முன் அமர்ந்து இருக்கிறான்.தந்தை போலுள்ள வானத்தில் முன்னேறுகிறான் . (வானத்தை தந்தையாகவும் பூமியைத் தாயாகவும் வருணிப்பது வேதம் முழுதும் உள்ளது.)
இது பாம்புராணி (ஸர்ப்ப ராக்ஞி) என்னும் பெண் புலவர் சூரியனை நோக்கிச் சொல்லும் துதி என்று வேதத்தைத் தொகுத்தோர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தலைப்பும் போட்டுவிட்டனர்
2.சூரியனும் விட்டமின் ‘டி ‘ யும் SUN AND VITAMIN D
இப்போது மேலை நாடுகளில் விட்டமின்/ வைட்டமின் டி VITAMIN D பற்றி பெரிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் கிடைப்பதை விட மேலை நாடுகளில் குறைவாகவே சூரிய வெளிச்சம் கிடைக்கிறது. இதை அறிந்த இந்து விஞ்ஞானிகள் ஜோதிடத்திலும் சூரியனே ‘ஆரோக்கியகாரகன்’ என்று சொல்லி அவனை வழிபட விதி இயற்றினார்கள். இதை அதிகாலை சூரிய நமஸ்காரம் மூலமும் பிராமணர்களின் த்ரி கால / மூன்று வேளை/ சந்தியாவந்தனம் மூலமும் கற்பித்தனர்.
XXX
3.சூரிய ஒளி சிகிச்சை PHOTO THERAPY AV 2-67; RV1-191-8/9
எங்கள் லண்டனில் குழந்தைகள் கொஞ்சம் மஞ்சள் நிறைத்த தோலுடன் பிறந்தாலும் அதை வீட்டுக்கு அனுப்பாமல் ஆஸ்பத்திரிலேயே விளக்கின் கீழ் வைத்து சிகிச்சை தருவார்கள். தோல் நோய் உடைய பெரியவர்களையும் கூட விளக்குத் தொட்டியில் நிற்கவைத்து சிகிச்சை தருவார்கள். சூரிய ஒளியின் இந்த அபார மருத்துவ குணங்களை ஏராளமான ரிக் வேத மந்திரங்கள் பாடுகின்றன.
இது ரிக் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் இரண்டு மஞ்சள் காமாலை மந்திரங்களில் வரும் செய்தி. AV 2-67; RV1-191-8/9
சூரியனை 7 குதிரைகள்/ VIBGYOR ஏந்து கின்றன;4-13 -3
சூரிய ஒளியை முப்பட்டக (PRISM) கண்ணாடி வழியே செலுத்தினால் வான வில்லின் 7 கலர்களையும் (VIBGYOR) காணலாம். இதையும் கூட புலவர்கள் பாடத் தவறவில்லை .
XXX
4. சூரியனே கண்ணுக்கு ஒளி தருபவன் SUN AND EYE; RV 10-90
இறைவனின் கண்களில் இருந்து சூரியனும் மனத்திலிருந்து சந்திரனும் உதித்ததாக ரிக் வேத்தத்தின் புகழ்பெற்ற புருஷ சூக்த மந்திரம் (10-90) சொல்லும். சூரியனை உலகத்தின் கண் என்று வருணிக்கும் துதிகளும் உள .Sun’s link with Eye- RV.10-90
சந்த்ர மா மனஸோ ஜாதஹ ; சக்ஷோர் ஸூர்யோ அஜாயத – RV. 10-90
சூரியனே எங்கள் கண்களுக்குக் காட்சியை அளிக்கவும் 10-158. இதைப் பாடிய புலவர் பெயர் கண். அவர் சூரியனின் புதல்வர்
XXX
5.சூரியன் ஒரு நக்ஷத்திரம் SUN IS A STAR
சூரியன் ஒரு நடுத்தர அளவு நட்சத்திரம் என்றும் அது மஞ்சள் நிற YELLOW STAR வகையைச் சேர்ந்தது என்றும் தற்காலத்தில் படிக்கிறோம். இதைவிட கடுமையான வெப்பம் உடையது நீல, சிவப்பு நிற நக்ஷத்திரங்கள் என்பதை தற்கால வானியல் புஸ்தகங்கள் செப்பும். பல்லாயிரம் கோடி நக்ஷத்திரங்கள் உண்டு என்பதை மாணிக்கவாசகர், பாரதி முதிலியோர் பாடியுள்ளனர். இந்து மதத்தில் உள்ள சின்னக் குழந்தை கூட விநாயகரைப் புகழும் ‘வக்ரதுண்ட மஹா காய’ துதியில் பிள்ளையாரை
‘கோடி சூர்ய பிரகாசம்’ உடையவன் என்று புகழும். . பகவத் கீதையில் விசுவ ரூப தரிசன ஸ்லோகத்தை, முதல் முதலில் அணு குண்டு வெடித்ததைக் கண்ட அமெரிக்க விஞ்ஞானி, அப்படியே நினைவு கூர்ந்ததை எழுதியுள்ளேன். அதில் அர்ஜுனன் ‘திவி சூர்ய சஹஸ்ரஸ்ய’ என்று கண்ணனை வருணிக்கிறான் ; கிருஷ்ணா! ஆயிரம் சூரியன் ஒரு சேர உதித்தாற் போல உன்னைக் காண்கிறேன் என்கிறான். ஆக சூரியன் ஒரு நட்சத்திரம் என்பதும் அது போல என்பதும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக் குழந்தைகளுக்கும் தெரியும். 100 ஆண்டுக்கு முன்னர் ரிக்வேதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த கிரிப்பித் முதலியோர் அப்படியே சொல்லியும் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர்.
காண்க ரிக் வேதம் Sun is a Star — RV 10- 156
“அக்கினியே , ஜன ங்களுக்கு ஒளியை அளித்துக் கொண்டு வானிலே அழியாத நட்சத்திரமான சூரியனை உயர்த்தினாய் “– 1-156
இன்னும் ஏராளமான கண்டுபிடிப்புகள் உள்ளன
பிக் பாங்க் BIG BANG என்னும் மாபெரும் பிரபஞ்ச வெடிப்பு பற்றியும், கருந்துளைகள் BLACK HOLES பற்றியும் எழுதியுள்ளேன்
XXX
6.சூரியகிரஹணம்
அத்ரி மகரிஷியுடைய அற்புதங்களை விவரிக்கும் எல்லா மந்திரங்களும் அவர் சூரிய கிரஹணத்தைக் கணக்கிட்டு, சீடர்கள் மத்தியில் அற்புதம் செய்த நிகழ்வும் ரிக்வேதத்தில் உள்ளது. (இது பற்றி எனது பழைய கட்டுரையில் விவரம் காண்க ). இதே உத்தியை ஜயத்ரதனை வதம் செய்ய மஹாபாரதத்தில் கிருஷ்ணன் பயன்படுத்தியதையும் எழுதியுள்ளேன்.
சுஸ்ருதர்
சுஸ்ருதர் எழுதிய சுஸ்ருத சம்ஹிதை என்னும் மருத்துவ நூல் 2600 ஆண்டு பழமையானது. அவர் அட்டை என்னும் பூச்சியைப் பயன்படுத்தி ரத்தம் எடுக்கும் வைத்தியம், செயற்கை மூக்கு ஆபரேஷன், 145 வகையான கருவிகளைக் கொண்டு ஆபரேஷன் செய்வது முதலியன பற்றி எழுதி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இவை அனைத்தும் சம்ஸ்க்ருத மொழியில் உள்ளன .
சர்ஜரி என்னும் அறுவைச் சிகிச்சையின் தந்தை இவரே என்று இப்போது உலகம் ஒப்புக்கொண்டு ஆஸ்திரேலியா முதலிய இட்டங்களில் புகழ்பெற்ற மருத்துவ நிறுவனங்களில் இவருடைய சிலையை வைத்துள்ளனர்.
சுஸ்ருத ஸம்ஹிதாவில் 186 அத்தியாயங்கள் உள. பூர்வ-தந்த்ராவில் 120-ம் , உத்தர-தந்த்ரா வில் 66-ம் உள்ளன.
பூர்வ-தந்த்ராவில்
• சூத்ர ஸ்தான (46 அத்தியாயங்கள் ): மருத்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள், அறுவைச் சிகிச்சைக் கருவிகள்; மருத்துவ மாணவர் பயிற்சி, மருந்தியல்
• நிதான ஸ்தான (16 ): நோய்களை உண்டாக்கும் கிருமிகளும் பொருள்களும்
• சரீர ஸ்தான (10 ): மனித உடற்கூறு, கருவின் வளர்ச்சி, முக்கிய உ டல் உறுப்புகள் , மர்ம ஸ்தானங்கள்
• சிகித்ஸா ஸ்தான (40 ): பொதுவான சிகிச்சை , அறுவைச் சிகிச்சை செய்வது எப்படி;
• கல்ப ஸ்தான (8 ): விஷங்களும் , விஷத்தை அகற்றும் சிகிச்சைகளும்
•
உத்தர-தந்த்ரா ( – 66 அத்தியாயங்கள் )
• கண், காது மூக்கு நோய்களும் சிகிச்சைகளும் (சாலக்கிய தந்த்ரா), குழந்தை வைத்தியம் (கௌமார பிரித்ய), மன நோய் வைத்தியம் (பூத வித்யா), பொதுவான மருந்துகள் (காய சிகித்ஸா)
To be continued…..
Tags- சுஸ்ருதர் , சுபத்ரா , HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 100; இந்து மத கலைச்சொல் அகராதி-100 , சூரியன், சூர்ய வம்சம்
