வட் பூர்ணிமா விழாவில் பங்கேற்கக் கூடாதா, என்ன அநியாயம் இது?! (Post.16,076)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,076

Date uploaded in London – 11 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

வட் பூர்ணிமா விழாவில் பங்கேற்கக் கூடாதா, என்ன அநியாயம் இது?! 

ச. நாகராஜன்

ஹிந்து விரோத சக்திகளின் ஏராளமான நடவடிக்கைகளில் ஒன்றாகத் திகழ்கிறது பி.ஜே.பி. எம்.பி. டாக்டர் மேதா குல்கர்னி புனாவில் உள்ள மஹாத்மா பூலே வாதா வளாகத்தில் உள்ள ஆலமரத்தைச் சுற்றி வழிபாடு நடத்தியதை எதிர்த்து பெரும் சர்ச்சையைக் கிளப்பிய விவகாரம்.

காலம் காலமாக ஏராளமான சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவனின் நீடித்த ஆயுளையும் ஆரோக்கியத்தையும் வேண்டி நடத்தி வரும் வழிபாடு இது.

இதில் அரசியலைப் புகுத்தி ஆதாயம் தேடப் பார்க்கும் தீய சக்திகளை இனம் கண்டு கண்டிக்க வேண்டிய காலமாக ஆகி விட்டது இந்தக் காலம்.

இது சனாதனமயமாக்குதலின் ஒரு அங்கம் என்று சொல்லும் இந்த தீய சக்திகள் மசூதிக்குள் நுழைபவர்களையும் சர்ச்சுக்குள் நுழைபவர்களையும் அவர்களின் இஷ்டப்படி வழிபாடு நடத்துவதை என்றுமே எதிர்ப்பதில்லையே, ஏன்?

ஹிந்துக்கள் என்றால் இழிவான பிறவிகள் என்ற எண்ணமா?

ஆர்கலாஜிகல் பிரிவு இதற்கு முதலில் அனுமதி வழங்கவில்லை. அனைத்து ஹிந்துப் பெண்மணிகளும் ஒருங்கிணைந்து இந்த அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுக்கவே ஆர்கலாஜிகல் பிரிவு பணிந்து இந்த வழிபாட்டிற்கு அனுமதி கொடுத்திருக்கிறது.

வட் எனப்படும் ஆலமரத்தைச் சுற்றி வட் பூர்ணிமா வழிபாடு தொன்று தொட்டு நடைபெற்று வரும் ஒன்று. இங்கு ஆலமரத்தில் தங்கள் வழிபாட்டு சரடைக் கட்டி விட்டு அதைச் சுற்றி வந்து வேண்டிக் கொள்வது பெண்களின் வழக்கமாகும்.

மஹாபாரதத்தில் வரும் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்ட சடங்கு இது,

சத்தியவானை மணந்த சாவித்திரி தன் கணவனுக்கு ஆயுள் அற்பம் என்பதை அறிந்து எமனுடன் புத்திசாலித்தனமாக வாதிட்டு அவனது உயிரை மீட்கிறாள்.

தீவிர தர்மத்தைக் கடைப்பிடிப்பதன் மூலமாக எமனையும் வெல்லலாம் என்பதற்கு எடுத்துக் காட்டான சாவித்திரியை தங்கள் இலட்சியப் பெண்மணியாகக் கொள்வதில் என்ன தவறு?

ஆலமரம் என்பது பிரம்மா (வேர்) விஷ்ணு (அடிமரம்) சிவா (கிளைகள், இலைகள்) ஆகிய மூன்று தெய்வங்களையும் குறிக்கிறது.  இந்த மூவரின் அருளையும் பெற வழி வகுக்கும் வழிபாடு இது.

திருமணம் என்னும் புனித நிகழ்வை நினைவூட்டி கணவன் மனைவி நீடித்து வாழுமாறு செய்வதோடு  பெண்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்தி இனிப்பு, ஆடை அணிகளைக் கொடுத்து மகிழ்ச்சியோடு இருக்கும் வழிபாட்டு நாள் இது.

ஒரு பெண்மணி பாராளுமன்றத்தில் நுழைந்ததாலேயே அவர் தன் மதத்தை துறந்து விட்டார் என்பதில்லை. நமது அரசியல் சட்டத்தின் 25வது பிரிவு மக்கள் அனைவருக்குமான மத சுதந்திரத்தையும் வழிபாட்டு உரிமையையும் தந்துள்ளது.

அப்படி இருக்க டாக்டர் மேதா குல்கர்னியின் பங்கேற்பைக் கொச்சைப் படுத்தி விமரிசிக்கும் ஹிந்து விரோதிகளை அடையாளம் காண இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்து விட்டது.

எமனையே வென்ற ஹிந்துப் பெண் சக்திக்கு இந்த தூசு போன்ற கயவர்களைத் தட்டித் துடைக்க எத்தனை விநாடிகள் வேண்டும்!

ஹிந்துக்கள் சிந்திக்க வேண்டும், இவர்களை இனி தலையெடுக்க விடாமல் செய்ய வேண்டும்.

**

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 96; இந்து மத கலைச்சொல் அகராதி-96 (Post.16,075)

Written by London Swaminathan

Post No. 16,075

Date uploaded in London – 10 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

எஸ் என்ற ஆங்கில எழுத்தின் கீழ் உள்ள சொற்கள் தொடர்ச்சிEnglish version posted yesterday.

XXX

சரயு

ராமாயணம் மூலம் புகழ்பெற்ற புனித நதி; சரயு நதிக்கரையில் அயோத்தி நகரம் அமைந்துள்ளது ; உத்தரப்பிரதேச யோகிஜி அரசு லட் சக்கணக்கான தீபங்களை ஏற்றி கின்னஸ் சாதனைப் புஸ்தகத்தில் பதிவாகிவருவதால் மேலும் புகழ் கூடி வருகிறது

இமயமலையில் உற்பத்தியாகும் கங்கை நதியின் ஏழு உபநதிகளில் சரயு நதி ஒன்று. பெண்களின் பெயராகவும் இன்றுவரை நிலவிவருகிறது ;மகாபாரதத்திலும் பல பருவங்களில் குறிப்பிடப்படுகிறது; பஞ்ச பாண்டவர்கள் தரிசித்த நதி இது . பீஹார் மாநிலத்தில் ரேவல்கஞ்ச் என்னுமிடத்தில் கங்கை நதியுடன் சங்கமிக்கிறது.

***

சங்கரதேவ

சங்கரதேவ (1449-1568 CE), அஸ்ஸாம் மாநிலத்திலும் வடகிழக்கு இந்தியாவிலும் புகழ்பெற்ற ஞானி; சரண நாம தர்மவாஸ் என்னும் வைஷ்ணவ இயக்கத்தை நிறுவினார் ; கிருஷ்ணன் ஒருவனே கடவுள் என்று போதித்தார் ; சகல கலா வல்லுநர்; புதிய இசைப் பாணியை உருவாக்கினார் ; புதிய நடன முறையை உண்டாக்கினார்; ஓவியங்களை வரைந்து இந்துமதத்தைப் பரப்பினார்; இவருடைய ஓவியங்கள் லண்டனில் விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்தில் உள்ளன .சமயம் மட்டுமின்றி கலைகளின் கர்த்தாகவும் விளளங்கினார்

 25 ராகங்களைப் படைத்தார். ஏக சரண நாம தர்மா ,  என்பது கிருஷ்ண பக்தியைப் பரப்பி வருகிறது; நாடு முழுதும் பலமுறை யாத்திரை செய்தார் . அஹொம் அரசு பின்பற்றிவந்த மிருக பலியை நிறுத்தி உண்மையான இந்து மதத்தை பின்பற்றுவோராக்கினார் ; இந்தியாவில் இவரைப் போல பன்முக சமயப்பிரசாரகர் வேறு எவருமில்லை.

QUIZ சங்கரதேவ் பத்து QUIZ (Post No.14,334)

Written by London Swaminathan

Post No. 14,334

Date uploaded in London –  1 April 2025

xxxx 

சங்கரதேவ் 1449–1568

1.சங்கரதேவ் எங்கே, எப்போது பிறந்தார் ?

சங்கரதேவ் ஆலிபுகரி என்னும் அஸ்ஸாமிய கிராமத்தில் 1449-ஆம் ஆண்டில் பிறந்தார். அவருடைய தந்தை பெயர்- குசும்பர்  சிரோமணி  பூயன் ; தாயின் பெய- சத்தியசந்த்யா

****

2.அவருடைய மனைவி பெயர் என்ன ?

அவர்  ஆம் வயதில் சூர்யபரீயைத் திருமணம் செய்துகொண்டார் . அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தாள்.

****

3.அவர் போதித்த கொள்கை என்ன?

அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில்  பின்பற்றப்படும் அவருடைய கொள்கை ஏக சரண தர்மம் எனப்படும்; இதன் பொருள் – கிருஷ்ணன் ஒருவரையே சரணம் அடைய வேண்டும் என்பதாகும்.

****

4.அவர் உருவாக்கிய கலைகள் சம்பிரதாயங்கள் என்ன ?

சத்ரியா – நடனக்கலை

சங்கீதம் – போர் கீத்

நாடகம் – அங்கியா நாட், பவோனா

****

5.அவர் என்ன நூல்களை எழுதினார்

பாகவதத்தை அஸ்ஸாமிய மொழியில் எழுதினார்.

சிறு வயதிலேயே செய்யுட்களை எழுதி குரு தேவரை ஆனந்தப் பரவசத்தில் ஆழ்த்தினார்;

அவர் எழுதிய நாடகங்கள், செய்யுட்கள் நூல்கள் –

ருக்மிணி ஹரணம்

ராம விஜயம்

கேலி கோபாலன்

காளீய தமனம்

அஜாமிள உபாக்கியானம்

கஜேந்திர பக்திப் ப்ரதீபம்

****

6.வர கீதம் என்பது என்ன?

அஸ்ஸாமிய மொழியில் அவர் பாடிய நாட்டுப் பாடல்கள் வர கீதம் எனப்படும். வர  கீதத்தின், மொழி, லயம், பாவம் சாதாரண மொழியிலிருந்து வேறுபட்டது; நீதிகள் நிறைந்தது; சங்கரதேவர் 249 சுமார் கீதங்கள் இயற்றினார்.

***

7. சங்கராதேவின் குரு யார் ? சங்கரதேவர் செய்த சாதனைகள் என்ன?

குரு– மஹேந்திர கண்டலி.

வெள்ளைப் பெருக்கெடுத்தோடும் பிரம்மபுத்ரா நதியைக் கடந்தது;

ஆசிரியர் சொன்னவுடன் கவி மழை பொழிந்தது ;

படகினை ஓங்கி கைகளால் குத்தி உடைத்தது;

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு தீர்த்த யாத்திரை செய்தது;

புதிய நாட்டிய, நாடக, இலக்கிய உத்திகளை உருவாக்கியது.

****

8.சங்கர தேவரின் சீடர் யார் ?

மாதவ தேவர் என்பவர் முக்கிய சீடர். ஒரு முறை சங்கர தேவரை கமலன் என்ற சிஷ்யன் வீட்டுக்கு அழைத்தான். அப்போது அவனது குடிசை தீப்பற்றி எரியவே சங்கர தேவர் கொண்டு சென்ற வர கீதச் சுவடிகளும் எரிந்து சாம்பலாயின உடனே மாதவ தேவரைப் பார்த்து நீ இயற்று என்றவுடன் அவர் பாடத் துவங்கினார் அந்த வகையில் மேலும் 189 வரகீதங்கள் உருவாயின.

****

9..ராமாயணத்தை அவர் பரப்பியது எப்படி?

ஸ்ரீ ராமனின் பாதங்களில் என் மனம் லயித்துவிட்டது என்ற சிறந்த பாடலை இயற்றினார். ராமாயணத்தையும் அவர் பாடல்களாகப்  பாடினார்.

****

10.அவர் எப்போது இறந்தார் ?

அவர் 120-ஆவது வயதில் பைலாதோவா என்னும் கிராமத்தில் புரட்டாசி மாதம் சுக்கில பட்ச துவிதீயை அன்று அமரர் ஆனார்.

***

சர்ப்ப

ரிக் வேதம் முதல் காணப்படும் இந்தச் சொல்லிலிருந்து சர்பண்ட் SERPENT என்ற ஆங்கிலச் சொல் பிறந்தது; நாகம் என்னும் சொல்லிலிருந்து ஸ்நேக் SNAKE (ஸ்னாக்க) என்ற ஆங்கிலச் சொல் உருவானது. ரிக்வேதத்திலும், சிந்துவெளி முத்திரையிலும் சர்ப்ப ராணி இருக்கிறாள். கேரளம் முழுதும் பாம்புகளை வழிபடும் காவுகள்/ கோவில்கள் உள்ளன . கர்நாடகத்தில் குக்கே சுப்ரமண்ய சுவாமி கோவிலில்,  கல்லினால் ஆன, ஆயிரக்கணக்கான நாகர் சிலைகளைக் காணலாம் ; தமிழ் நாட்டில் நாகர் சிலை இல்லாத கோவில் இல்லை என்றே சொல்லலாம்; குமரி மாவட்ட நாகர் கோவில், மஹாராஷ்டிரா நாகபுரி, காஷ்மீர் அனந்த  நாக் வரை பாம்பு வழிபாடு உள்ளது. குழந்தை பிறக்காவிடில் பூர்வ ஜென்மத்தில் பாம்புகளைக் கொன்றதால் நாக தோஷம் வந்ததாக கருதுவதால் எங்கும் நாகர் சிலைகள் காணப்படுகிறது ; உயிருள்ள பாம்புகளை வழிபடும் நாக பஞ்சமி பண்டிகை மகாராஷ்டிராவில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

***

சதக்ரது

சதக்ரது(शतक्रतु).— இந்தி ரனின் பெயர் ; நூறு அஸ்வமேத யா கங்களை செய்தவன் என்பது அர்த்தம்; யார் நூறு அஸ்வமேத யாகங்களை செய்த்தாலும் இந்திரன் பதவியை அடையலாம்; ரிக்வேதத்திலேயே சதக்ரது (शतक्रतु)—    என்ற சொல் பயிலப்படுகிறது

***

சதருத்ரிய

 (शतरुद्रीय):—ருத்திரன் என்னும் சிவபெருமானை நூற்றுக்கணக்கான பெயர்களில் போற்றும் நமகம்-சமகம் என்னும் துதி யஜுர்வேதத்தில் உள்ளது ; சத ருத்ரீய என்றால் 100 ருத்திரன் நாமங்கள் என்று பொருள்; சிவன் என்பது சாந்தமான மங்களமயமான உருவம்; ருத்ரன் என்பது அவரே அழிக்கும் தொழிலை எடுப்பதற்கான உருவம் ; இந்த துதியில் சிவனின் நேர்மறையான குணங்களும் எதிர்மறையான குணங்களும் மாறி மாறி வரும் ; கடவுளின் இருவேறு அம்சங்கள் இவை (முன்னர் ருத்ரன் என்ற தலைப்பில் மேல் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன)).

***

சதி

சதி என்பது  பார்வதியின் பெயர்; அவளது தந்தை தட்சன், அவளது கணவன் சிவனை அவமத்தித்ததால் யாகத் தீயில் விழுந்து உயிர்துறந்தாள்;  கணவன் சிதைத் தீயில் ஏறி அவளைப்போலவே உடலைத் தியாகம் செய்யும் பெண்களையும் சதி என்பர்; இந்த முறை புறநானூற்றில் உள்ளது; ஆனால் ரிக் வேதத்திலோ மனு ஸ்ம்ருதியிலோ இல்லை; ராமாயண மஹாபார தப் பெண்மணிகள், கண்வன்  இறந்த பின்னரும் வாழ்ந்ததைக் காண்கிறோம்; ஆகையால் இது கட்டாயமில்லை ; விருப்பட்டவர்கள் அப்படிச் செய்தனர் ஆனால்வங்காளத்தில் சொத்துக்களைப்பெறுவதற்காக பலரைக் கட்டாயப்படுத்தி சிதைத்தீயில் ஏற்றியதால் பிரம்ம சமாஜம் இந்த வழக்கத்தைத் தடை  செய்ய உதவியது .வெள்ளைக்கார கிறிஸ்தவர்கள் JOAN OF ARC ஜோன் ஆப் ஆர்க் போன்ற லட்சக்கணக்கான பெண்களை விட்ச் / சூன்யக்காரி என்று சொல்லி தீயில் உயிருடன் எரித்துக் கொன்றனர் ; அந்த அட்டூழியங்களை மறைப்பதற்கு, வெளிநாட்டில், சதி படங்களை வெளியிட்டுக் கிறிஸ்தவப் பிரசாரம் செய்தனர். அதற்கு நிதியும் வசூலித்தனர்.

***

சத்வ குணம்

சத்வம் என்பது முக்குணங்களில் ஒன்று ; பெரியோர்களின், முனிவர்களின் சாந்த குணம் இது ; இதற்கு அடுத்தபடியாக ராஜஸ குணமும் கீழ்மட்டத்தில் தாமச குணமும் வருகிறது .உடலின் , உள்ளத்தின் தூய்மை, மனதின் சமநிலை, மரக் கறி  உணவு, கோபம் இல்லாமை, கருணை   ஆகியவற்றைப் போற்றும் குணம்; இன்பமும் துன்பமும்  ஒன்று ;பொன்னும் ஓடும் ஒன்று என்னும் உயர்ந்த குணம் ; பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா மூன்று குணங்களின் தன்மைகளையும் விரிவாக விளக்கியுள்ளார் ; காண்க – பகவத் கீதை அத்தியாயங்கள் 14; 17. Chapter 14 (verses 5–18) and Chapter 17.

***

சத்யம் சிவம் சுந்தரம் s s s

சத்யம் என்பதைத் தமிழில் வாய்மை , உண்மை, மெய்மை என்று மொழிபெயர்த்துள்ளனர்; சம்ஸ்க்ருதத்தில் இதை மனோ வாக் காயம் என்ற மூண்டிலும் தூய்மை என்பர் ; உலகில் சத்தியத்தை கடவுளாக அவனகக ஒரே மதம் இந்து மதம்; மூன்று ஜாதிக்காரர்களும் வேத பாட சாலையில் நுழைந்தவுடன் ஆசிரியர் கற்பிக்கும் முதல் வரி சத்யம் வத = உண்மையே பேசு ; உபநிஷத ம் முழுதும் சத்யம் போர்ராப்படுகிறது இந்தியாவின் குறிக்கோள் வாசகமே உண்மைதான் ; சத்யமேவ ஜெயதே= வாய்மையே வெல்லும் என்பது இந்தியாவின் தேசீய சின்னத்திலும் தமிழ்நாட்டின் அரசு சின்னத்திலும் உளது . இது முண்டகோபநிஷத் வாசகம்.

சத்யம் சிவம் சுந்தரம் என்பது உபநிஷத உரைகளில்/[பாஷ்யங்களில் போற்றப்படுகிறது ; உண்மை, மங்கள ம் , அழகு என்பது இதன் பொருள் ; இதை ஸ்வேதாஸ்வதர உபநிஷத் சிவனே உண்மை; சிவனே மங்களம் ; சிவனே அழகு என்று விளக்குகிறது

சத்யா சாயிபாபாவின் வாழக்கை வரலாற்றையும் உபநிஷதங்களையும் கூறும்நூலி ன் தலைப்பு- சத்யம் சிவம் சுந்தரம் ; இதனால் இது கோடிக்கணக்காகனோருக்குத் தெரிய வந்தது ; அதற்கு முன்னர் ஆன்மீக நாட்டம் உடையோர் மட்டுமே அறிந்த சொல் இது ; அவர் பஜனைகளில் அவரே சத்யம் ஞானம் ஆனந்தம் பிரம்மா என்ற உபநிஷத வாக்கியத்தை பஜனை ஆக்கியதால் கோடிக்கு கணக்கானோரின்  வாய்கள் இதை முணுமுக்கத் துவங்கின. அதுவும் புகழ்பெற்ற உபநிஷத வாக்கியம்

தைத்திரீய உபநிஷத் (2.1.1):  “சத்யம் ஞானம்  அனந்தம் பிரம்மா”— Brahman is Truth, Knowledge, and Infinite.

பிருஹதாரண்யக உபநிஷத் (2.3.6):  “சத்தியஸ்ய சத்யம்”—பிரம்மன்  என்று இறைவனை சத்யம் என்று வழிபடுகிறது

முண்டக உபநிஷத் (3.1.6):  “சத்யம் ஏவ ஜயதே நான்ருதம் “—வாய்மையே வெல்லும் ; பொய்மை வெல்லாது என்கிறது

ரிக் வேதம் முதல், பர்த்ருஹரியின் நீதி சதகம் முதல், வள்ளுவனின் திருக்குறள் வரை பல நூறு பாடல்களில் சத்யம் போற்றப்படுகிறது; இது இந்துக்களின் தனிச் சொத்து; தனிச் சிறப்பு ; பரிபாடல் என்னும் சங்க நூலில் மனைவியிடம் கணவன் எப்படியெல்லாம் சத்தியம் செய் கிறான் என்ற பட்டியலே உள்ளது.

***

ஷ்யமந்தக

சியமந்தக வைரத்தின் நீண்ட கதை பாகவதத்தில் உள்ளது ; டைமண்ட் DIAMON என்ற சொல்லே ஷ்யமந்தக என்பதிலிருந்து வந்தது என்று என்னுடைய ஆராய்ச்சி காட்டுகிறது ; கெட்ட ஜாதி வைரம் வந்தால் அந்தக் குடும்பத்தில் கொலை, கொள்ளை , திருட்டு, அநீதி நடக்கும் என்பதை பாகவத புராணம் அழகாக விளக்குகிறது; கிருஷ்ணன் கூட இதன் தாக்கத்திலிருந்து தப்ப முடியாததால் உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும் என்ற பழமொழிக்கேற்ப இதைத் துறந்துவிட்டார்; ஐரோப்பா முழுதும் கொலைகளைச் செய்த இந்த வைரம் இப்போது ஹோப் டயமண்ட் HOPE DIAMOND என்ற பெயரில் அமெரிக்காவில் மியூஸியத்தில் உள்ளது.

வஜ்ரம் என்ற சொல்லும் சம்ஸ்க்ருத மொழியில் வைரத்தைக்குறிக்கும் ; தமிழ்ச் சொல் வைரம், வஜ்ரத்தின் திரிபே.

ஸ்யமந்த = டயமண்ட ஆன மொழியியலை ஆங்கிலத்தில் விளக்கியுள்ளேன்

S=T interchangeability is seen in hundreds of English words that we use everyday

Some examples :

condition, education, ambition- in hundreds of words with TION, the pronunciation is SION.

So Syamantaka + Tiamanthaka= DIAMOND is linguistically possible.

சியமந்தக வைரத்தின் கதை

கொலவெறி வைரம்!!!!!

(தமிழ்நாட்டில் பல குடும்பங்களில், குறிப்பாக பிராமண மற்றும் செட்டியார் குடும்பங்களில் வைரம் வாங்குவதற்கு முன் அதை வீட்ல் சில நாள் வைத்து நல்ல செய்திகள் வருமா என்று பார்த்தே வாங்குவார்கள். ஏனெனில் சில வைரங்களில் குறைகள் இருக்கும். இதோ, கிருஷ்ண பரமாத்மாவை படாத பாடு படுத்திய வைரம் பற்றிப் படியுங்கள்)

வைரங்கள் பெண்களின் சிறந்த நண்பர்கள் என்று ஆங்கிலத்தில் சொல்லுவதுண்டு. அது உண்மையாக இருக்கலாம். ஆனால் கட்டாயம் கடவுளுக்கும் வைரத்துக்கும் ரொம்ப தூரம்!! சியமந்தக மணி எனப்படும் வைரம் கண்ண பிரான் காலத்தில் இருந்தது. அது யாதவ குலத்தில் மூன்று கொலைகளுக்கும் பல சண்டைகளுக்கும் காரணமாகிவிட்டது பின்னர் இது பிரான்ஸ், பிரிட்டன் ,அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்கும் பல சாவுகளுக்கும் சண்டைகளுக்கும் வித்திட்டது. இதை இப்போது வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் மியூசியத்தில் பார்க்கலாம். ஆனால் அவர்களுக்கே இது கண்ணனின் வைரம் என்று தெரியாது

சத்ரஜித் என்பவர் ஒரு யாதவர் தலைவர். அவர் சூரிய தேவனை வழிபடுவார். ஒரு நாள் சூரிய தேவனே அவருக்கு ஒரு பெரிய வைரத்தைக் கொடுத்தார். (அதாவது அவர் கோவிலுக்குச் சென்றபோது அது பூமியிலிருந்து கிடைத்தது.) அது பள பள என்று ஜொலித்தவுடன் கிருஷ்ணருக்கும் கூட பொறுக்கவிலை. அதை உக்ரசேனன் என்பவனிடம் கொடு என்றார். ஆனால் சத்ரஜித் அதற்கு மறுத்துவிட்டார்.

சத்ரஜித் அவருடைய தம்பி ப்ரசேனன் என்பவரிடம் கொடுத்துவைத்தார். அவன் அதை எடுத்துக் கொண்டு வேட்டை ஆடப்போனான். அவனை ஒரு சிங்கம் அடித்துக் கொன்றது. இந்த வைரத்தை கரடி இனத் தலைவர் ஜாம்பவான் எடுத்துச் சென்றார். முன் காலத்தில் மக்கள் தங்களை அடையாளம் கூற ஒரு பறவை அல்லது மிருகம் பெயரைச் சொல்லுவார்கள். ஜம்பவான் கரடி இனம் எனப்படும்  மலை ஜாதி இனத்தைச் சேர்ந்தவர். அவருடைய பிள்ளைகள் அந்த வைரத்தை வைத்து விளையாடத் துவங்கினர்.

எல்லோரும் கண்ண பிரானைச் சந்தேகப் பட்டனர். உடனே அவர்ப்ரசேனனைத் தேடிச் சென்றார். காட்டில் அவனது சடலத்தையும் மற்ற அடிச் சுவடுகளையும் கண்டு அதைப் பின்பற்றினான். ஒரு மாதம் சண்டை போட்ட பின்னர் ஜாம்பவானுடன் ஒரு சமரச ஒப்பந்தம் ஏற்பட்டது. அவருடைய பெண் ஜாம்பவதியைக் கல்யாணம் செய்து கொண்டால் சியமந்தக மணியைத் திருப்பித் தருவதாகச் சொன்னார். கண்ணனுக்கு அடித்தது யோகம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஒரு பெண்+ ஒரு வைரம்!!

துவாரகைக்குத் திரும்பிவந்தார். வைரத்தை சத்ரஜித்திடமே திருப்பித் தந்தார். அவருக்கு ஏக சந்தோஷம். அவருடைய பெண் சத்யபாமாவையும் கண்ணனுக்கு மணம் முடித்தார். சியமந்தக வைரத்தால் இரண்டு பெண்கள் லாபம் !! இந்த நேரத்தில் ஹஸ்தினாபுரத்திலிருந்து எஸ்.ஓ.எஸ். (அவசர உதவி தேவை என்று) செய்தி வந்தது. பாண்டவர்கள் அனைவரும் அரக்கு மாளிகை தீ விபத்தில் இறந்துவிட்டதாக வந்தது செய்தி. அங்கே சென்றால் எல்லோரும் சுபம்.

இதற்குள் சத்ரஜித் வீட்டில் சததன்வா என்பவன் புகுந்து சத்ரஜித்தைக் கொன்றான். வைரத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். சத்யபாமாவுக்கு ஒரே துக்கம். துவாரகைக்குத் திரும்பி வந்த கண்ணனிடம் கதறி அழுதாள். கண்ணனும் பலராமனும் சததன்வாவைத் தேடினர். அவன் பீஹாருக்கு ஓடிவிட்டான். குஜராத்திலிருந்து ஆயிரம் மைல் துரத்திச் சென்று அவனைக் கண்ணன் கொன்றான். பின்னர்தான் தெரிந்தது. அதை அவன் அக்ரூரன் என்பவனிடம் கொடுத்து வைத்தான் என்பது. கிருஷ்ணன் துவாரகைக்குத் திரும்பி வருவதற்குள் அவன் உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசிக்கு ஓடிவிட்டான். ஆட்களை அனுப்பி அவனை கண்ணன் அழைத்து வந்தார். மீண்டும் ஒரு சமரச ஒப்பந்தம். அக்ரூரனே அதை வைத்துக் கொள்ளலாம் என்றும் ஆனால் துவாரகையை விட்டு வெளியே போகக் கூடாது என்றும் உத்தரவு போட்டார். இதற்குப் பின் அந்த வைரத்தின் கதை தெரியவில்லை.

ஹோப் வைரம்

சியமந்தக மணியை ஒரு கோவில் அம்மனின்  நெற்றியில் பதித்து வைத்தனர். அதைத் திருடிய அர்ச்சகருக்கு மரண தண்டனை கிடைத்தது. அதைத் திருட்டுத்தனமாக வாங்கிய பிரெஞ்சுக்காரர் ஜீன் பாப்டிஸ்ட் டவர்னியர் வெறி நாய்கள் கடித்து இறந்தார். இதற்கு ஹோப் வைரம் என்று பின்னர் பெயர் சூட்டப்பட்டது!

இந்தியாவிலிருந்து பிரான்ஸ், பிரிட்டன் ,அமெரிக்கா சென்ற ஹோப் வைரம் இதே போல படுகொலைகள், வழக்கு வாய்தாக்கள், சண்டை சச்சரவுகள், கடன் திவாலாக்கள் எல்லாவற்றையும் உண்டாக்கியது. மேலும் ஹோப் வைரம் புற ஊதா கதிர்களில் தக தக என்று சிவப்பாக ஜொலிக்கிறது. இதைத்தான் பாகவதமும் சூரியன் போல ஜொலித்த வைரம் என்று சியமந்தக மணி பற்றியும் கூறுகிறது. பலரும் அதை மாணிக்கம் என்று நம்பினர். ஆனால் அது வைர வகைகளில் ஒரு அபூர்வ வைரம். இப்போது அது அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் ஸ்மித்சோனியம் மியூசியத்தில் உள்ளது.

இது மனிதர் கையில் இருந்தால் பல துரதிருஷ்டங்கள் ஏற்படுவதால் கடைசியாக இதை வைத்திருந்த வாட்சன் என்பவரிடமிருந்து இதை அந்த மியூசியத்துக்கு நன்கொடையாக வாங்கிவிட்டனர். அவரும் உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும் என்று கொடுத்துவிட்டுப் போய்விட்டார். அவருக்கு முன் ஹோப் என்பவர் வைத்திருந்ததால் இதற்கு ஹோப் வைரம் என்று பெயர். உண்மையில் இது ஹோப்லெஸ் (அவ நம்பிக்கை) வைரம்!!!

முதலில் இது லாம்பெல் இளவரசி கைக்குப் போனது. அவரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. அதன் பின்னர் ஜாக்ஸ் செலோட் என்பவர் கைக்குப் போனது. அவர் புத்தி சுவாதினம் இழந்து தற்கொலை செய்துகொண்டார். இதற்குப் பின்னர் ரஷிய இளவரசர் கனிடொவ்ஸ்கியை அடந்தது. அவர் தனது காதலிக்குக் கொடுத்துவிட்டு பின்னர் அவளை கொலையும் செய்தார். பிறகுதான் ஹென்ரி தாமஸ் ஹோப் வாங்கினார்.

பிரெஞ்சுப் புரட்சியில் லூயி மன்னரையும் அவருடைய மனைவி மேரி அன்டாய்னெட்டையும் கில்லட்டின் எந்திரத்தில் வைத்து பகிரங்கமாக கொடூரமாகக் கொன்றதைப் படித்திருப்பீர்கள். அப்போது இந்த ஹோப் வைரம் (கண்ண பிரானின் சியமந்தகம்) அவர்கள் கையில் இருந்த்தது. உலக வரலாற்றில் ஒரு மன்னரும் ராணியும் இவ்வளவு பரிதாபமாக இறந்தது கிடையாது. அதற்குப் பின் வேறு ஒருவர் கைக்குப் போய் அவர்கள் குடும்பத்தில் பெரிய சண்டை ஏற்பட்டு பல ஆண்டுகள் வழக்கு நடந்தது. இதை வாங்கிய ஒருவர் பணம் எல்லாம் இழந்து திவால் ஆனார்.

To be continued……………………

Tags- சரயு, சங்கரதேவ, சதி, சதரூன்றிய, சத்யம், சியமந்தக, டைமண்ட், HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 96; இந்து மத கலைச்சொல் அகராதி-96 ,சியமந்தகம், ஹோப் வைரம்

முத்தொள்ளாயிரம் நூல் பற்றி 10 கேள்விகள் (Post.16,074)

Written by London Swaminathan

Post No. 16,074

Date uploaded in London – 10 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

முத்தொள்ளாயிரம் நூலில் என்ன விஷயம் பாடப்பட்டுள்ளது ?

2

முத்தொள்ளாயிரம் என்று ஏன் பெயர் இடப்பட்டது ?

3

இந்த நூலை இயற்றியவர் யார் ? இதன் காலம் என்ன ?

4

இதிலுள்ள பாடல்கள் எந்த வகையைச் சேர்ந்தவை ?

5

நூலாசிரியர் இந்துவா, சமணரா ?

6

இந்த ஆசிரியர் சோதிட வல்லுநர் என்பதை எப்படி அறியலாம் ?

7

அக்காலத் தமிழர்கள் என்னென்ன செய்தனர் என்று நூலாசிரியர் இயம்புகிறார் ?

8

புலவரின் கற்பனைத் திறத்துக்கு சிலந்திப் பூச்சியை எப்படிப் பயன்படுத்தினார் ?

9

பாண்டியன் மேல் காதல் கொண்ட பெண்ணின் செயல் என்ன ?

10

முத்தொள்ளாயிரம் காலம் பற்றி வையாபுரிப்பிள்ளை காட்டும் சான்றுகள் என்ன ?

****************************

விடைகள்

1.இது சேர சோழ பாண்டியர்களின் புகழ் பாடுவது. எந்தக் குறிப்பிட்ட மன்னனையும் இது பாடவில்லை. மூன்று குடியினருக்கும் உரிய கோதை, கிள்ளி, மாறன் முதலான பொதுவான பெயர்களே இதில் உள்ளன.

***

2.மூன்று வேந்தர்களையும் பற்றிய 900 பாடல்கள் கொண்டது என்பது ஒரு சாரார் கருத்து. மூவேந்தருள் ஒவ்வொருவரையும் தனித்தனியே தொள்ளாயிரம் பாடல்களில் புகழும் நூல் இது என்பது இன்னொரு சாரார் கருத்து. முதல் கருத்தே சரியானது . புறத்திரட்டு என்னும் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்ட 108 பாடல்களே கிடைத்தன .

***

3.ஆசிரியர் பெயர் தெரியாது ஏனெனில் முழுப்பாடல்களும் கிடைக்கவில்லை. ஆராய்ச்சி அறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார். இந்நூலின் உள்ள சில அகச் சான்றுகளை எடுத்துக்காட்டி, இந்நூலாசிரியரை கி.பி. 5ஆம் நூற்றாண்டை ஒட்டிய காலத்தவர் என்கின்றார். அறிஞர் எஸ். வையாபுரிப் பிள்ளை இந்நூலின் காலத்தைக் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் எனச் சான்றுகளுடன் உறுதிப்படுத்தியுள்ளார்.

***

4.இது வெண்பா யாப்பில் எழுதப்பட்ட நூல்

***

5.இவர் இந்துவே ; சமணர் அல்ல; இந்நூலின் கடவுள் வாழ்த்து, சிவபெருமான் பற்றியது. சிவபெருமான் நாள்மீன்களையும், திங்களையும், சூரியனையும் படைத்தவன் என்றும், ஆனால் உலகம் அவனை ஆதிரையான் என்பது வியப்பானது என்றும் கூறுகின்றார் ஆசிரியர். மேலும், தாம் பாண்டியனைப் புகழ்ந்து பாடும் பாட்டு, மயிலை ஊர்தியாகக் கொண்ட முருகப்பெருமானைக் கடப்ப மலர் தூவிப் பாடிப் புகழ்தலை ஒத்தது என்கிறார். இதனால் இவர் சைவ சமயச் சார்புடையவர் என்பது விளங்கும்.

***

6. நூலாசிரியர் 27 நட்சத்திரப்பெயர்களில் பெரும்பாலானவற்றைப்பாடுகிறார் ; சிவா பிரபஞ்ச சத்துக்கே முதலானாவான்; அவனை ஆதிரையான் என்று சொல்லி ஒரு நட்ஷத்திரத்துக்கு மட்டும் பொருத்துவது முறையா என்கிறார்; சோழன் பிறந்த நாள் வருகின்றது. அது ரேவதி விண்மீன் சந்திரனோடு கூடி நிற்கும் நல்ல நாள் என்று பிறந்த நாள் நாட் சாத்திரத்தைக் குறிப்பிடுகிறார் .தென்னன் திருஉத்திராட நாள் (7)  என்றும் பாடியுள்ளார் .

***

 7. மன்னர்கள்  பர்த் டே HAPPY BIRTH DAY கொண்டாடி பிறந்த நாள் பரிசு வழங்கினார்கள் பெண்கள் குங்குமச் சாந்தினை அணிந்தனர் (9). கணவனை இழந்த பெண் எரி மூழ்கி இறக்கும் வழக்கம் இருந்தது (19). நீரில் நின்று தவம் செய்தனர் (25). உலக்கை கொண்டு குற்றும்பொழுது பாடல் இசைத்தல் உண்டு (34). வேட்டுவர்கள் பறவைகளைப் பிடித்துக் கூட்டில் அடைத்து வைத்தனர் (35), முதலான செய்திகள் கிடைக்கின்றன

***

8.சோழன் பிறந்த நாளில் வருவோர்க்கெல்லாம் உயர்ந்த பரிசிலை வாரி வழங்குகின்றான் சோழன்.  சோழன் அரண்மனையில் இருந்த சிலந்திப்பூச்சிக்கு மட்டும் சோக நாளாயிற்றாம்! ஆம்! அது தானே கட்டிக் கொண்டு வாழ்ந்த தன் வீடாகிய கூட்டை இழந்து விட்டது! ஒட்டடை நீக்கப் பெற்றுத் தூய்மையாயிற்று என்ற செய்தியையே புலவர் என்னோ! சிலம்பிதன் கூடு இழந்தவாறு! என்று நயமாகப் பாடுகிறார் .

***

9.பாண்டியன் நகர் வலம் வந்தான். அவனை ஒரு கன்னிப் பெண் கண்டாள். உடன் அவன்பால் மட்டில்லாக் காதல் கொண்டாள். அதன் காரணமாக உடல் முழுதும் பசலை படர்ந்தது. தன் உடம்பிலே பசலை படரக் காரணம் தன் கண்கள் அவனைக் கண்டமையே என்று எண்ணினாள். அவ்வாறெனில் அதற்குரிய தண்டனையை அடைய வேண்டியவை அக்கண்களல்லவா? ஆனால் அதற்கு மாறாக, ஒரு பாவமும் அறியாத அவள் தோள்களல்லவா தண்டனை பெற்றன! இஃது எவ்வாறு என்றால் உழுத்தஞ்செடி வளர்ந்த வயலில் மேய்ந்து அழிவு செய்தது ஊர்க்கன்றுகளாக இருக்க, ஒன்றும் அறியாத கழுதையின் காதை அறுத்துத் தண்டித்தது போன்றது என்று நினைத்து வருந்தினாள். இப்பொருள் அமைந்த பாட்டு வருமாறு:

உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக்

கழுதை செவி அரிந்தற்றால் – வழுதியைக்

கண்ட நம் கண்கள் இருப்பப் பெரும் பணைத்தோள்

கொண்டன மன்னோ பசப்பு (60)

(செய் = வயல்; பணைத்தோள் = மூங்கில் போன்ற தோள்; பசப்பு = மேனியில் தோன்றும் நிற வேறுபாடு)

***

10.தமிழறிஞர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் தனது ‘இலக்கிய தீபம்’ நூலில் உள்ள ‘முத்தொள்ளாயிரத்தின் காலம்’ எனும் கட்டுரையில், காட்டும் முக்கிய சான்றுகள்:

உரையாசிரியர் மேற்கோள்கள்: பிற்கால உரையாசிரியர்களான பேராசியர் மற்றும் இலக்கண விளக்க உரையாசிரியர்கள் முத்தொள்ளாயிரப் பாடல்களை தங்களது உரைக்கு மேற்கோளாகக் கையாண்டுள்ள முறையைக் கொண்டு இதன் கால எல்லையை நிர்ணயித்தார்.சொல்லாட்சியும் நடையும்: சங்க இலக்கியங்களின் இறுதிக் காலத்திற்கும் பக்தி இலக்கியக் காலத்திற்கும் இடைப்பட்ட மொழிநடை, செய்யுட்களின் கட்டமைப்பு மற்றும் வெண்பா யாப்பு வடிவம் ஆகியவை ஒன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சூழலைச் ஒத்திருப்பது.வரலாற்றுப் பின்னணி: சேர, சோழ, பாண்டிய வேந்தர்களை இணைத்துப் போற்றும் பொதுவான அரசியல் மற்றும் பண்பாட்டுச் சூழல் அக்காலத்தில் நிலவியிருந்தமை.பண்பாட்டுச் சான்றுகள்: அசுவினி முதலாகத் தொடங்கும் 27 விண்மீன்கள் பற்றிய தமிழர்களின் விரிவான அறிவு நிலைப்பாடு. (ஆழ்வார்கள் நாயன்மார்கள் மாணிக்கவாசகர் முதலியோர் காட்டும் நாயக- நாயகி பாவம் இதில் உள்ளது . பல்லவர் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம்.)

–subham–

Tags- முத்தொள்ளாயிரம் நூல், 10 கேள்விகள்

Tirukkural Encyclopaedia- Chapter 20 (Kural 191-200) – Post.16,073

Written by London Swaminathan

Post No. 16,073

Date uploaded in London – 10 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933

2.S M Diaz, I G of Police- SMD Year 2000

3.Rev.Dr.GU Pope – GUP. Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS, Year 1986

6.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

7.Tamil Original

****

From now onwards all the ten Kurals are given in one part

பயனில சொல்லாமை – Against vain speaking  Part 38  The Not Speaking Profitless Words Refraining from idle talk

H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931 translated only Kural  196.

191.Despised among men is one who indulges in idle talk to the disgust of all – ANM+2 = B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933

***

191.The man who talk purposeless rant in a congregation

Will make himself the laughing stock of all — S M Diaz, I G of Police- SMD, Year 2000

***

191
Words without sense, while chafe the wise,
Who babbles, him will all despise.
He who to the disgust of many speaks useless things will be despised by all.– Rev.Dr.GU Pope – GUP, Year 1886

***

191.With silly words who insults all
Is held in contempt as banal —Suddhananda Bharathiyar- SB
***

191.One who speaks useless words that others dislike is despised by all– EVS Publishers, Singapore- EVS, Year 1986

***

191.பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்

XXXXXXXXXXXXXXXXXXXXXXX

192.More repugnant than unkind acts to friends is the vain boast of a fool— ANM+2

***

192.The practice of indulging in indecent talk in an assembly is worse,

Than that of being graceless to one’s friends — SMD

***

192
Words without sense, where many wise men hear, to pour
Than deeds to friends ungracious done offendeth more.
To speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friends. – GUP
***

192.Vain talk before many is worse
Than doing to friends deeds adverse– SB.  

***

192.Uttering profitless wors in the presence of the wise is worse than doing misdeeds to friends–– EVS

***

192.பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலின் தீது

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

193.Useless words are but the froth of an empty vessel – ANM+2

***

193.The purposeless and profitless meandering talk of a man before a gathering

Will proclaim to the world his own worthlessness— SMD

***

193
Diffusive speech of useless words proclaims
A man who never righteous wisdom gains.
That conversation in which a man utters forth useless things will say of him “he is without virtue.” – GUP

***

193.The babbler’s hasty lips proclaim
That “good-for-nothing” is his name– SB.      

*** 

193.Indulging in empty words indicates  that one is devoid of principle–– EVS

***

193. நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை

XXXXXXXXXXXXXXXXXXXXXX

194.Neither grace nor pleasure, nor profit is there for a soul that utters vain words in an assembly of the learned— ANM+2

***

194.He who speaks vainless and graceless words in public assembly,

Will expose his want of essential goodness and moral rectitude — SMD

***

194
Unmeaning, worthless words, said to the multitude,
To none delight afford, and sever men from good.
The words devoid of profit or pleasure which a man speaks will, being inconsistent with virtue, remove him from goodness. – GUP

***

194.Vain words before an assembly
Will make all gains and goodness flee– SB.  

*** 

194.Speaking unsavoury and profitless words at random to all will deprive a person of his good qualities besides being disagreeable to the listeners–– EVS

***

194. நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

195.Shorn of their honour and respect do even the great become if they yield to futile talk— ANM+2

***

195.If a man of worth indulges in purposeless speech,

Excellence and fame will depart from him— SMD

***

195
Gone are both fame and boasted excellence,
When men of worth speak of words devoid of sense.
If the good speak vain words their eminence and excellence will leave them. – GUP

***

195.Glory and grace will go away
When savants silly nonsense say– SB.  

***     

195.If refined people would utter trivial words, they would lose their fame and reputation–– EVS

***

195. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

196.A lover of profitless words is but chaff among men— ANM+2

***

196.One who habitually utters vain and profitless words,

Is no man, but chaff  among men— SMD

***
196
Who makes display of idle words’ inanity,
Call him not man, -chaff of humanity!
Call not him a man who parades forth his empty words. Call him the chaff of men. – GUP

***
196.Call him a human chaff who prides
Himself in weightless idle words– SB.        

***

196.Do not call him a human being who indulges in profitless words; but call him a chaff among men–– EVS

***

H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

196.Call him not man who makes display of useless words;

Call him but chaff of humankind– HAP

***

196. பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்

XXXXXXXXXXXXXXXXXX

197.Let the wise burst into harsh words; but let them beware of a bootless speech— ANM+2

***

197.Men of virtue too may sometimes speak unfairly;

It were better, that they do not talk uselessly— SMD

***

197
Let those who list speak things that no delight afford,
‘Tis good for men of worth to speak no idle word.
Let the wise if they will, speak things without excellence; it will be well for them not to speak useless things. – GUP

***

197.Let not men of worth vainly quack
Even if they would roughly speak– SB.  

***     

197.The wise would refrain from empty words though they may speak unpleasantly —– EVS

***

197. நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

198.Do the heavenward thoughts of a great soul ever descend to a light and trivial discourse?— ANM+2

***

198.The learned, who explores worthy thoughts, will not utter

Anything but words of deep import— SMD

***

198
The wise who weigh the worth of every utterance,
Speak none but words of deep significance.
The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them. – GUP
***

198.The wise who weigh the worth refrain
From words that have no grain and brain– SB.        

***

198.The learned who are capable of searching investigation will not utter words which are not productive of much good–– EVS

***

198. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்

***

199.Rarely do the wise who are full of pure light of wisdom fall into a trivial talk even in their thoughtless mood— ANM+2

***

199.Men of clear vision, who have overcome human follies, will not speak

Meaningless and idle words, even by lapse of memory— SMD

***

199
The men of vision pure, from wildering folly free,
Not e’en in thoughtless hour, speak words of vanity.
Those wise men who are without faults and are freed from ignorance will not even forgetfully speak things that profit not. – GUP

***

199.The wise of spotless self-vision
Slip not to silly words-mention– SB.        

***

199.Those who are free from illusion  and have a clear vision of the truth will not utter profitless words even inadvertently–– EVS,

***

199. பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்

XXXXXXXXXXXXXXXX

200.Let words of wisdom adorn your lips, but refrain from vain and fruitless speech– ANM+2

***

200.If you must speak , speak purposefully;

Eschew all vain and profitless words— SMD

***
200
If speak you will, speak words that fruit afford,
If speak you will, speak never fruitless word.
Speak what is useful, and speak not useless words. – GUP

***

200.To purpose speak the fruitful word
And never indulge in useless load– SB.  

***     

200.If you speak at all speak profitably. Speak not empty words which produce no good—– EVS

***     

200. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்

To be continued………………………

Tags– Tirukkural Encyclopaedia- Chapter 20 (Kural 191-200), part 38, பயனில சொல்லாமைAgainst vain speaking , The Not Speaking Profitless Words, Refraining from idle talk

தாஜ்மஹாலா அல்லது தேஜோ மஹாலயமா? (சிவன் கோவிலா) – 2 (Post16,072)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,072

Date uploaded in London – 10 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

தாஜ்மஹாலா அல்லது தேஜோ மஹாலயமா? (சிவன் கோவிலா) – 2 

ச. நாகராஜன்

ஹிந்து ஜன ஜாக்ருதி சமிதி 2026 ஏப்ரல் 3ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் பேராசிரியர்  பி.என்.ஓக் அவர்கள் தாஜ்மஹாலைப் பற்றித் தெரிவித்துள்ள உண்மையைக் குறிப்பிட்டுள்ளது.

அவர் தனது புத்தகமான TAJ MAHAL: THE TRUE STORY என்ற நூலில் பல உண்மைகளைத் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.

புருஷோத்தம் நாகேஷ் ஓக் (1917-2007) இன்ஸ்டிடியூட் ஆஃப் ரீ ரைட்டிங் ஹிந்து ஹிஸ்டரி என்ற நிறுவனத்தைத் தொடங்கியவர். தனது ஆராய்ச்சி மூலம் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கல்லறை புதிதாக கட்டப்பட்ட ஒன்று அல்ல என்று கூறுகிறார்.

தனது அன்பு மனைவி மும்தாஜின் நினைவாக ஷாஜஹான் கட்டிய மஹாலே தாஜ் மஹால் என்று பல நூற்றாண்டுகளாகச் சொல்லப்பட்டு வருகிறது.

ஆனால் இது தேஜோ மஹாலயம் என்ற ஹிந்துக் கோவிலை இடித்து, சற்று மாற்றி அமைத்து அமைக்கப்பட்ட கல்லறை தான்.

தாஜ் மஹால் என்ற பெயரே எந்த ஒரு முகலாய ஆவணத்திலும் இல்லை

ஆப்கானிஸ்தானத்திலிருந்து ஆஸ்திரியா வரை உள்ள முகலாய கட்டிடங்களில் மஹால் என்ற வார்த்தையே இடம் பெறவில்லை. உண்மையில் மும்தாஜ்- உல்- ஜமானி என்ற பெயரே இடம் பெற்றுள்ளது.

ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் இதை தாஜ்-இ- மஹால் என்றே குறிப்பிடுகின்றனர்.

ஜெய்பூர் ராஜா மான்சிங்கிடமிருந்து ஷாஜஹான் ஆக்ராவில் உள்ள பெரும் மாளிகையை மும்தாஜைப் புதைப்பதற்காகப் பெற்றார் என்பதை பாத்ஷாநாமா என்ற வரலாற்று ஆவணத்தில் ஷாஜஹானே தெரிவிக்கிறார்.

இரு ஆணைகள் இது பற்றி ஜெய்பூர் அரண்மனை சேமிப்பு ஆவணங்களில் உள்ளன.

தங்களால் கைப்பற்றப்பட்ட ஆலயங்களை கல்லறைகளாக மாற்றுவது பல முஸ்லீம் ஆட்சியாளர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஒரு பழக்கமாகும்.

ஹுமாயூன், அக்பர், இமாத்-உத்-தௌலா ஆகியோரின் கல்லறைகள உதாரணமாகச் சொல்லலாம்.

ஹிந்து ஆலயங்களில் பொதுவாக அமைக்கப்படும் முற்றம், பல அடுக்கு கோபுரம் ஆகியவற்றைக் கொண்டு  தாஜ்மஹால் திகழ்கிறது.

கட்டிடம் தெற்கு நோக்கி இருக்கிறது. கட்டிடத்தின் உச்சி திரிசூல பாணியில் திகழ்கிறது.

பீடர் முண்டி (PETER MUNDY) (ஐரோப்பிய யாத்ரீகர் 1632) என்பவரின் குறிப்பின் படி தாஜ்-இ-மஹால் முன்பே இந்தக் கட்டிடம் இருந்தது என்பதை அறிய முடிகிறது. இவர் மும்தாஜ் இறந்த ஒரு வருடத்தில் இங்கு வந்தவர்.

ஜோஹன் ஆல்பர்ட் மாண்டெல் இஸ்லோ (JOHAN ALBERT MANDELSO) என்பவர் 1638ல் ஆக்ரா பற்றி எழுதியுள்ளார். அதில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டதாகக் குறிப்பிடவில்லை.

பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த யாத்ரீகர் ஜீன் பாப்டிஸ்ட் டவர்னியர், (FRENCH JEWELLER JEAN-BAPTISTE TAVERNIER)  தாஜ்மஹால் அமைக்கப்பட்ட 22 ஆண்டுகளில் பல பழைய அமைப்புகள் இடிக்கப்பட்டதையும் அகற்றப்பட்டதையும் குரான் வாசகங்கள் அங்கு சேர்க்கப்பட்டதையும் தெரிவிக்கிறார்.

1652ல் ஔரங்கசீப் தாஜ்மஹால் ஏழு அடுக்கு கொண்டிருப்பதையும், பழமையான கட்டிடம் என்பதையும், அது ஒழுகுகிறது என்பதையும் சிதிலடமைந்த கூம்பைக் கொண்டிருக்கிறாது என்பதையும் ஆதாப்-இ-ஆலம்கிரி என்ற ஆவணத்தில் குறிப்பிடுகிறார்.

ஒரு பழைய கதவின் கார்பன் மாதிரிக்கான சோதனை ஷாஜஹானின் காலத்தை விட 300 ஆண்டுகள் பழமையான கதவு இது என்று தெரிவிக்கிறது. இதைச் செய்தவர் மார்வின் மில்லர் என்பவராவார்.

தாஜ் மஹாலில் 22 அறைகள் உள்ளன. இவை சிவப்புக் கல் அடித்தளத்தில் சலவைக்கற்களுக்குக் கீழே உள்ளன. இவற்றை சுவரால் அடைத்து விட்டார் ஷாஜஹான். இதை ஓக் சுட்டிக் காட்டுகிறார்.

1934ல் மூடப்பட்ட ஒரு துவாரத்தின் வழியே பார்த்தபோது தலை துண்டிக்கப்பட்ட சிவபிரானின் சிலையையும் இதர சிதிலமடைந்த தெய்வ உருவங்களையும் கொண்டிருப்பது இது என்பது தெரியவந்தது.

ஆர்கலாஜிகல் சர்வே ஆஃப் இந்தியா ஒருபோதும் முறையான ஒரு சர்வேயை இங்கு எடுக்கவே இல்லை.

22 வருட காலம் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு 20000 பேர்களை வைத்து அமைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படும் தாஜ்மஹாலைப் பற்றி அன்றைய அரசு ஆவணங்கள் ஒன்றுமே குறிப்பிடவில்லை. 

மும்தாஜ் மஹால் பர்ஹன்பூரில் மரணமடைந்தார். 

ஆகவே தாஜ் மஹால் என்பது உண்மையில் தேஜோ மஹாலய என்னும் சிவனின் ஆலயமே ஆகும் என்று உறுதிபட ஓக் தெரிவிக்கிறார். 

தாஜ்மஹாலை முறைப்படி ஆராய்ந்தால் உண்மை தெரியவரும்.

                **.                         முற்றும்

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 95; இந்து மத கலைச்சொல் அகராதி-95 (Post No.16,071)

Written by London Swaminathan

Post No. 16,071

Date uploaded in London – 9 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Sarayu

Sarayu most prominently refers to a sacred river in Hinduism featured in the Ramayana, flowing through Uttarakhand and Uttar Pradesh past the city of Ayodhya. It is also a female given name and a common reference for notable public figures. [1234]

  • Location: Originates in the Kumaon Himalayas (Uttarakhand) and flows into the Ghaghara or Sharda river.
  • Significance: Deeply tied to the epic Ramayana and the city of Ayodhya; holy baths in its waters are believed to wash away sins.

Girls are named after this river until this day.

1) Sarayū (सरयू).—A river very famous in the Purāṇas. The most important things associated with the river are given below:

(i) Seven tributaries of Gaṅgā originate from the golden peaks of the Himālayas and Sarayū is one of them. Those who bathe in the river will be absolved from sins. (Ādi Parva, Chapter 169, Verse 20)

(ii) The river exists in Varuṇa’s court worshipping him. (Ādi Parva, Chapter 8).

(iii) Śrī Kṛṣṇa, Arjuna and Bhīma, on their way to Girivraja from Indraprastha crossed this river. (Sabhā Parva, Chapter 20, Verse 28).

(iv) It was at Gotāra (or Gopratara) in this river that Śrī Rāma drowned himself to death and attained Viṣṇupāda. (Vana Parva, Chapter 84, Verse 70).

(v) This river is the source of Agni (fire). (Vana Parva, Chapter 222, Verse 22).

(vi) Vasiṣṭha once blocked the course of Gaṅgā on its way to Kailāsa at Mānasasarovara. But, Gaṅgā broke the obstruction and flowed on, and Sarayū is the stream that started from there. (Anuśāsana Parva, Chapter 155, Verse 23).

(vii) It is one of the rivers to be remembered both at dawn and dusk. (Anuśāsana Parva, Chapter 165, Verse 21).

(viii) The city of Ayodhyā is situated on the banks of Sarayū. (Vālmīki Rāmāyaṇa, Bālakāṇḍa, Canto 5, Verse 5).

2) Sarayū (सरयू).—Wife of the Agni Vīra. The couple had a son called Siddhi. (Vana Parva, Chapter 219, Verse

***

Sankaradeva

Srimanta Sankaradeva (1449-1568 CE), the founder of the Vaishnavite order Eka Sarana Nāma Dharmawas a multi-faceted person whose works had different dimensions

He  was an important personality in the annals of Indian history. He was not only a religious preceptor, but also a social reformer, who had sanskritized the ethnic groups of the volatile North East India and assimilated them with the national main-stream. He is considered as the father of the modern Assamese race.

Srimanta Sankaradeva was a cultural maestro too. He created a classical dance form known both as Sankari dance and Satriya dance. The Sangeet Nâtak Akâdemi of India recognized it as a classical dance form in 2000 CE. Srimanta Sankaradeva also evolved a school of classical music, which is named after him. He created as many as 25 Râgas of his own. He was also the first playright in all modern Indian languages. Above all these, he was the first prose writer. He introduced dro Mahapurusha Srimanta Sankaradeva is considered by his followers as an incarnation of God because of his multi-faceted contribution to the mankind as well as his perfect life. He strides over the national life of Assam like a giant colossus even five centuries after passing away. He went on pilgrimage twice, the first time touring the entire length and breadth of the country for long twelve years. He gave up his royal power as a king in middle Assam and came down to the level of the commoners. He founded the Eka Sharana Nâma Dharma, which preached devotion to a single God, lord Krishna.. He was also a fine artist. His art works have been preserved in the Albert Museum of London.

Srimanta Sankaradeva founded a whole new school of art. He initiated a new form of painting with his epoch-making drama-festival Chihna-Yâtrâ held in 1468 CE, where he drew the imaginary pictures of heaven to be used as backdrop. authored ten plays in his life. These were Chihna Yâtrâ, Patni Prasâda, Kâliya Damana, Keli Gopâla, Rukmini Harana, Pârijât Harana, Janma Yâtrâ, Gopi Uddhava Sambâda, Kangsa Badha and Sri Râma Vijaya. The first of these, Chihna Yâtrâ had been staged in 1468 CE. The second play Patni Prasâda was written while the saint was living at Gajalasuti temporarily.

He always advised his disciples to be very cautious about where and what they ate. He said that food offered by a pious man could liberate one while the food offered by an unmeritorious person destroyed one’s merits. During pilgrimage, he guided his disciples to proper places and proper hosts only. The Eka Sharana Nâma Dharma preached by Srimanta Sankaradeva gradually received wide acceptance in the entire Brahmaputra valley. Even the administrative officials of the Ahom kingdom were gradually won over to this egalitarian religion. The Ahoms earlier had their own traditional religion, which was akin to the Shakti worship of the Hindus. Sacrifice of animals to appease their deities was a common thing in the Ahom religion.

***

Sarpa

Means snake; English words serpent snake are derived from Sanskrit. Sarpa worships is found in Rig Veda, later in Indus Valley sites. Now snakes are worshipped in most of the South Indian Temples. Thousands of stone snakes are installed in temples including Kuke Subrahmanya temple in Karnataka. In Kerala there are special shrines. Hindus believe that if they kill snakes, they wont have children. Naga Panchami is a special annual festival when live snakes are worshipped, particularly in Maharashtra. In the East India Snake goddess Manasa Devi is worshipped. Lord Vishnu is shown lying on a bed of snake, usually shown in statues with five, seven, nine heads.

***

Satakratu

Śatakratu (शतक्रतु).— Indra.  śata a hundred, kratu sacrifice; a hundred Ashwa-Medhas or sacrifices of a horse, elevating the sacrificer to the place and title of Indra. This name is in the Rig Veda. More about him is under INDRA.

***

Satarudriya

Śatarudrīya (शतरुद्रीय):—It is  said that gods are satiated if Śrī Rudram is chanted . Śatarudrīya means extolling one hundred ways of glorifying Rudra.

The Rudra-Adhyaya, known also as the Satarudriya, occurring in the Yajur Veda, is a soul-stirring hymn offered to the all-pervading Almighty, designated as Rudra-Siva. He is present in auspicious, benign forms by way of sustenance of all things created, and also as terrible forms which He assumes at the time of the dissolution and destruction of the cosmos at the end of time. A very intriguing aspect of God presented in this wondrous hymn is that God is both the good and the bad, the beautiful and the ugly, the right and the wrong, the positive and the negative, the high and the low, the conceivable and the inconceivable, the mortal and the immortal, existence and non-existence—every blessed notion of God and its correlative, or we may say the counter-correlative, the opposite, which also is included in the existence of God.

More about RUDRA and RUDRA HOMAM is under Rudra.

***

Sati

Sati  has two primary meanings: the mythological goddess (or a virtuous wife) who immolated herself due to grief or insult, and the historical socio-religious custom where a widow burned on her husband’s funeral pyre,

Goddess Sati: The consort of Lord Shiva who cast her body into the fire because her father Daksha insulted Shiva.

Virtuous Woman: The literal Sanskrit root meaning a pure, chaste, and devoted wife who embodies supreme loyalty.

It is not mentioned in Rig Veda and Manu Smriti. It is optional and not compulsory. From Ramayana and Mahabharata we see not all queens died when their husbands died.

Evil people used this custom with bad motives to inherit the property. Later it was banned.  Christian preachers who burnt millions of women including Joan of Arc branding them witches, used Sati pictures abroad to hide their criminal acts.

***

Satva guna

Sattva guna is the quality of purity, harmony, and balance. It is one of the three fundamental forces of nature (the trigunas) in Indian philosophy, alongside rajas (activity) and tamas (inertia). Sattva represents mental clarity, peace, truth, and inner goodness.

Characteristics of Sattva Guna

Purity: Cleanliness of body, speech, and mind.Clarity: Calm awareness, sharp focus, and truthfulness.Peace: Emotional stability, contentment, and lack of anger. Compassion: Selfless service, empathy, and love for all beings.

In the Bhagavad Gita, Sattva Guna (the mode of goodness, purity, and harmony) is primarily detailed in Chapter 14 (verses 5–18) and further categorized by daily habits like food, faith, and action in Chapter 17. Lord Krishna explains that Sattva illuminates the mind, brings deep inner peace, and creates a thirst for wisdom.Core Slokas on Sattva Guna (Chapter 14)Verse 14.5: Introduction to the three material modes (gunas), noting how Sattva, Rajas, and Tamas bind the eternal soul to the body.Verse 14.6: Defines Sattva as pure, illuminating, and healthy, noting that it binds the soul through attachment to happiness and knowledge.Verse 14.11: Describes the physical/mental symptom of Sattva: “When the light of wisdom shines through all the gates of the body, then know that sattva is predominant.”Verse 14.14: Explains the afterlife result: dying in dominant Sattva leads to the pure, stainless realms of the wise.Verse 14.18: Summarizes the trajectory: those in Sattva rise upward into higher states of spiritual evolution. Sattvik Expressions in Daily Life (Chapter 17)Faith (Verse 17.2–3): A person’s faith reflects their inner nature; a Sāttvik mind naturally leans toward divine and harmonious truths.Food (Verse 17.8): Sāttvik food increases life duration, purity, strength, health, joy, and satisfaction. It is juicy, smooth, wholesome, and pleasing to the heart.Worship, Sacrifice, and Charity (Verses 17.11, 17.17, 17.20): Sāttvik actions are done according to scripture, with a steadfast mind, without selfish desire, and strictly as a matter of duty without expecting rewards.

***

Satyam Sivam Sundaram

Truth ; truth alone triumphs is the motto of India written in the national emblem of India. It is from the VUpanishads.

The first lesson in Vedic School is Satayam Vada- Speak Truth.

No where in the world we can see this syllabus.

Truth is God is the saying in India.

  Taittiriya Upanishad (2.1.1): States “Satyam jnanam anantam brahma—meaning Brahman is Truth, Knowledge, and Infinite.

  Brihadaranyaka Upanishad (2.3.6): Calls Brahman “Satyasya Satyam”—the Truth of truth, meaning the absolute base behind life forces.

  Mundaka Upanishad (3.1.6): Famously states “Satyam eva jayate nanritam—Truth alone triumphs, not falsehood.

In Tamil Nadu State Government emblem “Satyam eva jayate is translated as VAAYMAIYE VELLUM.

No culture in the world has given SATYAM that much importance.

Whether it is Tamil Tirukkural or Sanskrit Niti Satakam of Bhartruhari, Truth occupies important place.

“Satyam Shivam Sundaram” is a profound philosophical Sanskrit phrase meaning “Truth, Goodness (Auspiciousness), and Beauty”. Shivam also means Lord Siva.

Satyam Shivam Sundram

which means Shiva is the truth, Shiva is

the divine joy and Shiva is beauty.

This phrase and Satyan Jnanam Anantham Brahma were popularised by Sri Sathya Sai Baba. Before that only Vedanti students knew these dictums.

***

Shyamantaka

The Syamantaka Diamond handled by Lord Krishna and his relatives led to violence and several murders. The full story is in the Bhagavad Purana. My view is that Syamantaka corrupted into Diamantaka. My second view is that the murderous Syamantaka changed hundreds of hands and got the name Hope Diamond which is in an American museum now. Hope diamond became Hopeless diamond during the course of time and at last landed in America.

S=T interchangeability is seen in hundreds of English words we use everyday

Some examples :

condition, education, ambition- in hundreds of words with TION, the pronunciation is SION.

So Syamantaka + Tiamanthaka= DIAMOND is linguistically possible.

Story of Syamanataka:

Satrajit was a Yadava leader. He was a worshipper of Sun God. Sun God gave him a powerful diamond called Syamantaka (The hidden meaning is that he found it on the ground when he went to worship in the Sun Temple). It will emit red light and dazzle like sun. A lot of people eyed this diamond and conspired to get it. When Krishna asked him to give it to Ugrasena, he refused and gave it to his own brother Prasen. When Prasen went on a hunting expedition he was killed by a lion and the diamond was taken by a tribal group known as Jambhavans. They were called Bear people because they wore the bear (Jambhavan) symbol.

Everybody suspected Krishna and thought he stole the diamond from Prasen and disposed him off. Krishna wanted to clear his name and so went in search of Prasen. He found his mauled body in the forest and traced the footsteps. When he saw Jambhavan’s children playing with the diamond, he tried to get it from them, but ended in a fight. The fight with Jambhavan went for a month and at last he reached an agreement with Jambhavan, the tribal leader and got his daughter Jambhavati  in marriage. As a marriage gift he got the diamond.

Krishna returned to his kingdom and gave Syamantaka back to Satrajit. Satrajit thanked Krishna wholeheartedly and gave his daughter Satyabhama in marriage to Krishna. When Krishna made an urgent visit to Hastinapura , another person by name Satadhanwa killed Satrajit and took the diamond. So far the diamond caused two murders and two marriages !! It did not stop there.

When Krishna returned to Dwaraka ,his wife told him that his father was murdered for the diamond. Krishna and Balarama went on a mission to get the diamond.  They chased Satadhanwa for nearly a thousand mile and killed him near Mithila in Bihar. A dangerous diamond caused three deaths and three fights and thousand mile trip from Gujarat to Bihar!! But only after killing him, they came to know the diamond was given to Akrura for safe custody by Satadhanwa.

Akrura had already escaped with the diamond to Kasi. He ran away for a thousand mile just because of the diamond. Krishna brought him back and Akrura returned the diamond to Krishna. Knowing that it was a murderous diamond, Krishna gave it back to Akrura and asked him to stay in Dwaraka. The diamond was attributed with magical qualities like bringing lot of gold like the  goose that lays golden eggs.

This is the end of the Syamantaka story in our Hindu scriptures. My research shows that it caused more fights and murders and went to USA after passing several hands in India, France and Britain. 

Syamantaka went to foreign countries in the name of HOPE diamond. Knowing that it was a HOPELESS diamond, at last it was sent to a museum in the USA.

To be continued……………………

Tags- Sarayu, Sankaradeva, Sati, Satarudriya, Satyam , Syamantaka, Diamond, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 95; இந்து மத கலைச்சொல் அகராதி-95

சீவக சிந்தாமணி பற்றி 10 கேள்விகள் (Post.16,070)

Written by London Swaminathan

Post No. 16,070

Date uploaded in London – 9 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

சீவக சிந்தாமணி நூலை எழுதியவர் யார் ? அது எந்தக் காலத்தைச் சேர்ந்தது ?

2

இதிலுலுள்ள விமான(பறக்கும் வாகனங்கள் ) அதிசயங்கள் என்ன ?

3

இந்தக் கதைக்கு மூலம் எங்கே இருக்கிறது ?

4

இலக்கியத்தில் என்ன புதுமையைக் கையாண்டார் இதன் ஆசிரியர் ?

5

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான இதில் யார் கதை இடம்பெறுகிறது ?

6

சிந்தாமணி என்றால் என்ன ?     

7

சீவக சிந்தாமணியை ‘மணநூல்’ என்றழைக்கக் காரணம் என்ன ?

8

சீவக சிந்தாமணி நூலில் கனவுகள் பற்றி என்ன அரிய செய்திகள் உள ?

9

சீவக சிந்தாமணியில் என்ன சிறப்பான உவமைகள் வருகின்றன ?

10

சீவக சிந்தாமணியில் உள்ள சோதிட குறிப்புகள், நம்பிக்கைகள் என்ன?

*************************************

விடைகள்

1.சீவக சிந்தாமணி என்னும் காப்பியத்தைப் படைத்தவர் திருத்தக்க தேவர். சோழர் குலத்தில் அரச மரபைச் சார்ந்தவர். சமண சமயத்தைச் சார்ந்தவர். தீபங்குடியில் பிறந்தவர். இவருடைய காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு ஆகும்.

***

2.பறக்கும் வாகனம் பற்றி சீவக சிந்தாமணி  : வால்மீகி ராமாயணத்தில் பறக்கும் விமானம் பற்றிய அதிசயச் செய்திகளும் மஹாபாரத வனபர்வத்தில் வானுலகுக்குச் சென்ற ஸ்பேஸ் ஷட்டில் பற்றியும் நம்மாழ்வார் பாடலில் நொடிப்பொழுதில் விண்ணுலகம் சென்று திரும்பிய ஸ்பேஸ் ஷட்டில் பற்றியும் உள்ளது. சீவக சிந்தாமணி காப்பியத்தில், வான்வழிப் பறக்கும் இயந்திரமாகிய ‘மயில்பொறி’ (செயற்கை மயில் வடிவிலான பறக்கும் வாகனம்) பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அரசன் சச்சந்தன் தன் மனைவி விசயையை ஆபத்தில் இருந்து காப்பாற்ற இந்த வானூர்தியைப் பயன்படுத்தினான். போர்க்கால ஆபத்துகளின் போது, கருவுற்றிருந்த தன் மனைவி விசயமாதேவியை  பறக்கும் ஊர்தியில் ஏற்றிப் பாதுகாப்பாக அனுப்பினார்.

3.சிந்தாமணி ஒரு சமயக் காப்பியமாகும். வட மொழியிலுள்ள கத்திய சிந்தாமணி, சத்திர சூடாமணி, ஸ்ரீ புராணம் ஆகிய நூல்களில் சீவகன் கதை காணப்படுகிறது. அவற்றைத் தழுவித் தமிழில் சீவக சிந்தாமணி என்னும் பெரு நூலாகத் தந்துள்ளார் திருத்தக்க தேவர்.

***

4.விருத்தம் என்னும் புதிய பாஇனம்-இந்நூலில் முதன் முறையாகக் கையாளப்பட்ட து. அதனால் இக்காப்பியம் பிற்காலத்தில் எழுந்த கம்பராமாயணம், பெரியபுராணம் முதலிய காப்பியங்களுக்கு அடிப்படையாகவும், முன்னோடியாகவும் அமைந்தது.

***

5.சச்சந்தன் விசயை என்போர் சீவகனின் பெற்றோர் ஆவர். கட்டியங்காரன் என்னும் அமைச்சன் சூழ்ச்சியால் மன்னன் சச்சந்தனைக் கொன்று, ஏமாங்கத நாட்டினைக் கைப்பற்றினான். குழந்தைப் பருவம் முதற்கொண்டு சீவகனைக் கந்துக்கடன் என்னும் வாணிகன் வளர்த்து வந்தான். உரிய பருவம் எய்தியதும் தன் நாட்டைப் பெறுவதற்குத் தாயின் அறிவுரையோடு, மாமன் கோவிந்தனின் துணைக்கொண்டு போரிட்டு வென்றான், சீவகன். அச்செய்திகளை விரிவாக விளக்கிக் கூறும் நூலே சீவக சிந்தாமணி ஆகும்

***

6.தெய்வீக மணி: நாம் எதை நினைக்கிறோமோ அதை அப்படியே தரும் கற்பகக் கல் அல்லது சிந்தனைக்கு ஏற்ப வரம் தரும் மணி.

  அரிய கல்: பிரகாசமான, ஒளி கெடாத ஒரு தனித்துவமான மணிவகை.

  இலக்கியப் பெயர்: திருத்தக்க தேவரால் இயற்றப்பட்ட ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான ‘சீவக சிந்தாமணி’ காப்பியத்தின் பெயர்.

இது ஒரு ஸம்ஸ்க்ருதச் சொல் .

an imaginary diamond supposed to grant its possessor all desires; 2. a mantra of Saraswati yielding immense knowledge to the reciter.

***

7.சீவகனின் வீர தீரச் செயல்கள், பேரழகு, பேராற்றல், போராற்றல், அரச குடும்பத்தின் செயல்கள், அரசியல் நெறிமுறைகள், மனித குல மேம்பாட்டிற்குத் தேவையான அறக்கருத்துகள் கூறுதல் முதலான பல செய்திகளைக் கொண்டதாக இந்நூல் விளங்குகின்றது. சீவகன் தன் ஆற்றலால் எட்டுப் பெண்களைத் திருமணம் செய்து கொள்கின்றான். இதனால் இந்நூலுக்கு மணநூல் என்ற பெயரும் உண்டு. திருத்தக்க தேவர் தம் நூலுக்குச் சிந்தாமணியின் சரிதம் என்றே பெயரிட்டனர்.

***

8.சீவகனின் தாயான விசயை கருவுற்ற காலத்தில் மூன்று கனவுகள் காண்கிறாள். இக்கனவுகள் மூலம் அவளது மகனின் எதிர்காலம் மற்றும் ராஜ வம்சத்தின் திருப்பங்கள் முன்னமே உணர்த்தப்படுகின்றன.விசயை கண்ட மூன்று கனவுகள்முதல் கனவு: பூத்த பிண்டிமரம் (அசோக மரம்) சாய்ந்து விழுவது.இரண்டாம் கனவு: அவளது முத்துமாலை அறுந்து காலடியில் விழுவது.மூன்றாம் கனவு: அந்த மரத்தின் பக்கத்தில் புதிய முளை ஒன்று தோன்றி வளர்வது. சச்சந்த மன்னன் தன் மனைவியான விசயைக்கு இக்கனவுகளுக்கான பலனைக் கூறுகிறான்.பூத்த மரம் சாய்வது அரசனின் (சச்சந்தனின்) வீழ்ச்சியையும் இழப்பையும் குறிக்கிறது.பக்கத்தில் முளைத்து வளரும் புதிய முளை, அவர்களுக்குப் பிறக்கப் போகும் மகனையும் (சீவகன்) அவன் பிற்காலத்தில் அடையவிருக்கும் மாபெரும் வெற்றியையும் குறிக்கிறது.

***

9.வயலில் களை பறிக்கும் உழவர் கண்களுக்கு அங்கே மலர்ந்திருக்கும் குவளை மலர்கள், மையல் கொண்ட பெண்களின் மை தீட்டிய கண்கள் போல உவமிக்கப்பட்டுள்ளன. பெண்களின் முகம் முழு நிலவுக்கும், அவர்களின் புன்னகை நிலவொளிப் பிழம்புக்கும் உவமையாகக் கூறப்பட்டுள்ளது. பெண்களின் நடையும் தோரணையும் தோகை விரித்தாடும் மயிலின் நளினத்திற்கு ஒப்பிடப்பட்டுள்ளது. காந்தருவ தத்தையின் குரல் வளம் யாழிலிருந்து எழும் இன்னிசைப் பண்ணை விடவும் இனிமையானது என உருவகப்படுத்தப்பட்டுள்ளது.போர்க்களத்தில் சீறிப் பாயும் சீவகனின் வேகம், மதயானையைத் தாக்கும் இளஞ்ச சிங்கத்தின் பாய்ச்சலுக்கு உவமிக்கப்பட்டுள்ளது.

***

10. சீவகன் பிறக்கும் பொழுதே அவனது நல்ல குணங்களும் எதிர்காலத்தில் அவன் அடையப்போகும் பெருமைகளும் சோதிட மற்றும் வானியல் அடிப்படையில் கணிக்கப்படுகின்றன. எங்குசென்றாலும் நல்ல நிமித்தங்கள் (பறவைகள் பறக்கும் திசை, எதிர்ப்படும் காட்சிகள்) மூலமாக வரவிருக்கும் ஆபத்துகளையும் நன்மைகளையும் முன்னரே உணரும் வழக்கம் காப்பியத்தில் உள்ளது. குழந்தையின் பிறப்பிலும் பெயரிடுதலிலும் தெய்வங்களின் ஒலியும் ஜோதிடக் குறிப்புகளும் இணைந்து குழந்தையின் எதிர்காலச் சிறப்பை முன்னறிவிக்கின்றன. காவியத் தலைவனான தன் மகனை விசய மாதேவியார் முதன் முதலாக இட்டு விளித்த பெயர் சிந்தாமணி என்பதாகும். பின்னர் வழிபடு தெய்வம் வானொலியாக ‘சீவ’  (நீடூழி வாழ்க) என்று வாழ்த்தியது. அதற்குப் பின் அக்குழந்தைக்குச் சீவகன் என்று பெயரிட்டனர்.

–subham—

Tags- சீவக சிந்தாமணி , 10 கேள்விகள், திருத்தக்க  தேவர், சிந்தாமணி , பறக்கும் மயில்பொரி, ஜோதிடம், சகுனனம், மூன்று கனவுகள் , திருத்தக்கதேவர் , சமண காப்பியம்

தாஜ்மஹாலா அல்லது தேஜோ மஹாலயமா? (சிவன் கோவிலா) – 1 (Post No.16,069)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,069

Date uploaded in London – 9 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

தாஜ்மஹாலா அல்லது தேஜோ மஹாலயமா? (சிவன் கோவிலா) – 1 

ச. நாகராஜன் 

பிரயாக்ராஜிலிருந்து Times News Network – TNN தனது 7-7-2026 இதழில் அலகாபாத் உயர்நீதி மன்றம் 6-7-26 திங்கள்கிழமையன்று மத்திய அரசுக்கும் ஆர்கலாஜிகல் சர்வே ஆஃப் இந்தியாவிற்கும் பிறப்பித்த உத்தரவுகளை வெளியிட்டுள்ளது. ஆக்ரா நீதிமன்றம் தாஜ்மஹாலை சர்வே செய்ய அனுமதி மறுத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான உத்தரவு இது.

தாஜ்மஹாலை போட்டோ எடுக்கவும். வீடியோ எடுக்கவும், மேற்பார்வையிட்டு சோதனை செய்யவும் ஒரு அட்வகேட் கமிஷனரை நியமிக்குமாறு மனுதாரர்கள் வேண்டியிருந்தனர்.

இந்த மனுவானது பகவான் ஶ்ரீ அக்ரேஷ்வர் மஹாதேவ் நாகநாதேஸ்வர் விராஜ்மான் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.

இதை அவரது “நண்பரான” அட்வகேட் ஹரி சங்கர் ஜெயின் மற்ற பல பக்தர்களுடன் சேர்ந்து தாக்கல் செய்தார்.

மனுதாரர்கள் இந்த இடமானது சிவனுக்கான தேஜோ மஹாலயம் என்ற ஹிந்து ஆலயம் என்று கூறினர்.

ஜஸ்டிஸ் ரோஹித் ரஞ்சன் அகர்வால் அட்வகேட் ஹரி சங்கர் ஜெயின் அவர்களின் வாதத்தைக் கேட்ட பின்னர் மேலே கண்ட உத்தரவைப் பிறப்பித்தது.

மனுதாரர்கள் தாஜ் மஹால் ஒரு ஹிந்து ஆலயம் என்று அறிவிக்க வேண்டுமென்றும், ஹிந்து சமூகத்தினர் அனைவரோடும் சேர்ந்து அங்கு வழிபாடு, பிரார்த்தனை உள்ளிட்டவற்றை நடத்த அனுமதி வழங்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தனர்.

அரசியல் சட்டத்தின் 25வது பிரிவின் படி அங்கு சென்று தரிசிக்கவும் பூஜை செய்யவும் அடிப்படை உரிமை உண்டு என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

2019ம் ஆண்டு ஆக்ரா நீதிமன்றத்தில் ஒரு அட்வகேட் கமிஷனரை இதற்கென நியமிக்க வேண்டுமென்று வேண்டினர். ஆனால் அடிஷனல் சிவில் நீதிபதி இதை மறுத்து விட்டார்.  கஸ்ரா அல்லது கடானி போன்ற ரெவின்யூ ஆவணங்கள் காட்டும் எல்லைகள் சொத்தின் எல்லைகளோடு சரியாகப் பொருந்தவில்லை என்றும் அவர் கூறினார்.

பிறகு இன்னொரு அடிஷனல் மாவட்ட நீதிபதி மறு ஆய்வு பெடிஷனை இந்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் ‘டிஸ்மிஸ்” செய்தார்.

இந்த இரண்டு தீர்ப்புகளையும் எதிர்த்து இப்போது மனுதாரர்கள் உயர்நீதி மன்றத்தை அணுகியுள்ளனர்.

மனுதாரர்கள் தங்கள் மனுவில் கூறுவது: தேஜோ மஹாலய ஆலயமானது ராஜா பரமார்தி தேவ் என்ற மன்னரால் கி.பி. 1155-56ம் ஆண்டு கட்டப்பட்டது என்றும் இது பின்னால் ராஜா மான்சிங் மற்றும் ஜெய்பூர் ராஜா ஜெய் சிங் ஆகியோரது கட்டுப்பாட்டில் வந்தது. ராஜா ஜெய்சிங்கிடமிருந்து இதைப் பறித்த முகலாய மன்னர் ஷாஜஹான் இதை தனது மனைவியான மும்தாஜ் மஹாலுக்கான நினைவுச் சின்னமாக இஸ்லாமிய கட்டுமானத்தின் படி இதை உருவாக்கி விட்டார்

இது ஹிந்து ஆலயம் என்பதற்காக குறைந்த பட்சம் 109 அகழ்வாராய்வு மற்றும் வரலாற்று ஆதாரங்கள் உள்ளன என்பதையும் மனுதாரர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

சலவைக் கூம்பில் உயரத்தில் ஒரு கலசம் தாமரை இதழ் பீடத்தில் இருக்கிறது. தென்கிழக்கில் ஒரு கோசாலை இருந்திருக்கிறது. இதற்கான கட்டிட அமைப்பு இதை நிரூபிக்கிறது. ஆர்கலாஜிகல் சர்வே ஆஃப் இந்தியா முஸ்லீம்களை இங்கு நமாஸ் செய்ய தவறாக அனுமதித்திருப்பதோடு பல அடுக்குகளில் உள்ள அறைகளைப் பூட்டி வைத்திருக்கிறது என்பதையும் மனு சுட்டிக் காட்டுகிறது.

இதையொட்டி இது பற்றிய முந்தைய ஆய்வுகளையும் சற்று பார்ப்போமா?

**

Airplane shadow in Vaigai River 2000 years ago! Purananuru wonders-51, Tamil Encyclopedia-91 (Post.16,068)

Written by London Swaminathan

Post No. 16,068

Date uploaded in London – 8 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Purananuru wonders-51, Tamil Encyclopedia-91, One Thousand Interesting Facts – Part 91

Item 742 zodiac / stars/Air plane shadow in Vaigai water

Paripatal verse 11 on River Vaigai, has astronomical references. One reference talk about the shadow of the aeroplane of Devas, dwellers of heaven. The poet says the river water was crystal clear that can reflect the plane of Devas. It means that they can see airplanes and their reflections in water (lines 62-71).

For the first time, we come across five planets with Tamil words:

Velli – Venus; Padimakan- Mars; Punthi- Mercury; Anthanan- Jupiter; Yama’s brother-Saturn;

We come across zodiac signs in Sanskrit words- Mithunam-Gemini; Makara-Capricorn;

Stars are also mentioned- Kartikai- Pleiades ; Arudra- Betelgeuse;

For the first time star Canopus= Agastya nakshathra is mentioned.

***

Item 743 lunar eclipse

The day was Avani Avittam Day when the snake devoured Moon.

The meaning is on Sravana Purnima day there was a lunar eclipse.

Some scholars have used these to calculate the period or age of Paripatal.

***

Item 744  Controversial dating

Based on the planetary configuration and horoscope data found in the opening lines of Paripāṭal Poem XI, astronomical calculations by scholars including Swamikannu Pillai and historian Roger Billard point to the date of July 17, 634 CE.

Astronomical Basis for the Dating

  • Planetary Positions: The text outlines a specific alignment of celestial bodies, including references to Saturn moving into Capricorn (Makara) from Sagittarius (Dhanus).
  • Backbone for Chronology: This explicit internal horoscope serves as a vital chronological anchor (sheet anchor) for evaluating the timeline of classical Sangam literature, which is otherwise heavily debated (traditionally ranging from 300 BCE to 300 CE or later compilation phases).
  •  
  • Interpretative Nuance: While the planetary math matches the July 634 CE alignment, debates persist regarding specific textual interpretations, such as contextual mentions of the star Canopus (Agastya) and its heliacal rising relative to the horizon of Madurai.

If Paripatal is dated seventh century CE, then date of Sangam works will also be questioned. The author of this poem NALLANTHUVANAR is praised by Purananuru poet Maruthan Ilanagan! So date of Purananuru is also debateable.

***

Item 745 Beautiful Descriptions of women

Women wore Mallikai, Kuvalai , Asoka, Neithal and other flowers. Nowadays Tamil women wear only fragrant flowers like Mallikai/Jasmine (Mullai, Pichi also belong to the same genus Jasminium).

One woman wore two flowers on her ears and another woman dubbed her as a woman with four eyes.

Another woman wore Tilak on her forehead and she looked like  Goddess Durga with three eyes.

Tamils were well versed in all Puranas

***

Item 746 sex maniac washed away

One man was swimming in the flooded river with the help of bundle of plantain tree stems; when he saw a beautiful woman on the banks, he lost his grip and washed away in the floods. The beauty was trying to follow him and her mother stopped her.

***

Item 747 Ambavadal , Arudra festival

This poem is the longest one with 140 lines; since we lost majority of the Paripatal poems, we don’t know the length of other poems. Here we get full description of two festivals now celebrated partly in Tamil Nadu and Kerala

One of them is Ambavadal when women observe fasting in the name of Goddess Amba;

Another is Arudra festival in celebration of Lord Siva; we have all the ceremonies recounted; Brahmins going with golden pots; doing fire ceremonies (Yaga/Havan) on the banks; drying wet clothes etc.

This Arudra festival falls in the moth of Thai; and people do bathing on that day.

Part of these things can be seen in Mayuram and other places in Tamil Nadu, named  Kadaimuka Snanam.

Thiruvathirai , that is Arudra Festival, is celebrated on a grand scale in Kerala today; women dress themselves with sandal colour saris, do flower decorations on the floor and sing and dance in groups. Special types of dishes are made.

Tamils in Tamil Nadu go to Siva temples on that day and make special dishes

Thiruvathirai in Kerala 

***

Item 747 Ashtami Moon/ Half Moon

Poet described the river Vaigai as Ashtami Chandra. It never reaches Amavasya/ no moon day. The meaning is water increase and decrease but never dried up.

***

Item 748 husband was beaten

Paripatal verse 12 is also on River Vaigai ; we come across an interesting scene where the wife beats her husband; the reason is another beauty looked at him; her reason for beating was that he was a bad man and so the other woman had an amorous glance at him; but he argued that it was not his fault. Though these types of narrations may be poetic exaggerations, we understand human psychology; women were so jealous that they considered their husbands unsaleable property!

***

Item 749

This verse gives us a list of flowers that were washed away by the River from the western ghats called Sahyadri.; also the names of musical instruments; one more historical information is that the Vaigai river water touched the fort walls of Madurai in those days. Now we can’t even guess where that Madurai was and what was the course of river 2000 years ago.

While I am writing this piece , I remember the good old days before the construction of so many dams on river Vaigai and its tributaries; a lot of buildings are erected blocking the real course of the river.

And I read in today’s British newspapers that due to the unprecedented heat wave in Europe 50,000 thousand ponds in Britain have dried up; and the environmentalists say most of them would never recover.

Now I can understand what happened to Vedic Sarsvati river, Indus valley Civilisation etc. Weather plays a big role in shaping the history of a country!

***

Item 750 Rivers are Women

Throughout Tamil and Sanskrit literature, rivers are dubbed  as women and the sea is compared with the handsome man; so all women are running after him. All the rivers except Brahmaputra have feminine names in India. In this verse also,

Mountain- birth place of a woman/river

River – daughter

Sea – hero/ husband of rivers (see verse 11).

***

Item 751 Cacophony

All the people were talking at the same time; added to this was music from different instruments; so nothing was audible. Commentators added it was like people speaking in 18 languages. In literature India is described a s a land of 18 Bashas/languages

To be continued…………………..

Tags- Purananuru wonders-51, Tamil Encyclopedia-91, One Thousand Interesting Facts – Part 91. Item 751, Airplane shadow in Vaigai River 2000 years ago

நாலடியார் நூல்பற்றி 10 கேள்விகள் (Post No.16,067)

Written by London Swaminathan

Post No. 16,067

Date uploaded in London – 8 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

நாலடியார் நூல் தோன்றியது பற்றிய சுவையான கதை என்ன ?

2

நாலடியாருக்கும் திருக்குறளுக்கும் என்ன ஒற்றுமை ?

 3

சமணர்கள் ஊழ்வினை / தலைவிதி பற்றிக் கொண்ட கொள்கைக்கு அருமையான மாடுகள்- கன்றுகள் உவமை கூறப்பட்டுள்ளது. அது என்ன பாடல்?

 4

நாம் எல்லோரும் நூல் என்ற தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்துகிறோம்; ஆனால் புஸ்தகம் / புத்தகம் என்ற ஸம்ஸ்க்ருதச்  சொல்லை  சமணர்கள் புகுத்திய பாடல் எது ?

 5

கணவனைக்  கொல்லும் மூன்று வகைப்  பெண்கள் யாவர்?

 6

மூன்றுவகை மனிதர்கள் பற்றி சமண முனிவர்கள் என்ன சொன்னார்கள் ?

7

நண்டு சாப்பிட்டால் குஷ்ட ரோகம் வரும்! என்ற அறிவியலுக்கு முரணான கருத்தினை சமண முனிவர் எங்கே செப்புகிறார் ?

8

உலகில் மிகப்பெரிய அதிசயம் என்று வியாசர் மஹாபாரதத்தில் சொன்னதை நாலடியார் பாட்டில் எங்கே காணலாம் ?

 9

கன்னத்தில் அடித்து நொறுக்கினால்தான் கயவர்கள் உதவி செய்வர். அதுவரை சாப்பிட்ட பின்னர் ஈரக் கையால் கூட உதறித் தெறிக்க மாட்டார்கள் என்று வள்ளுவன் சொன்னான். சமண முனிவர்களும் வன்முறையை ஆதரிக்கிறார்களா ?

 10

மந்திர விபூதியைப் போட்டால் பாம்பு அடங்குமாமே? 

**************************************

விடைகள்

1.ஒரு காலத்தில் கொடிய பஞ்சத்தால் வேறு இடங்களில் வசித்த 8000   சமணர்கள் பாண்டிய நாட்டில் தஞ்சம் புகுந்தனர் ; பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவரவர் இடங்களுக்குத் திரும்ப முடிவு செய்தபோது பாண்டிய மன்னன், போகாதீர்கள், நான் தொடர்ந்து ஆதரவு தருகிறேன் என்றான் ; அவர்கள் அதை ஏற்காமல் ஒவ்வொருவரும் ஒரு பாடலை எழுதிவைத்துவிட்டுப் புறப்பட்டுவிட்டார்கள் . அவை முன்னுக்குப்பின் முரணாக இருந்ததால்  ஓலைச் சுவடிகளை பாண்டிய மன்னன் வைகை ஆற்றில் எறிந்துவிட்டான் ; அவைகளில் கரை சேர்ந்த 400 பாடல்கள் இப்போது நாலடியார் என்ற பெயரில் உள்ளது. நாலடியார் காலம் : நாலடியார் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிந்தைய சங்கம் மருவிய காலம் (Post-Sangam period) அல்லது கி.பி 400 மற்றும் 500-க்கு இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

***

2.திருக்குறளைப் போலவே இதிலும் தர்ம, அர்த்த, காம – அறம், பொருள், இன்பம்- என்ற மூன்று பிரிவுகளே உள்ளன. இரண்டு அடிகளைக் குறள் என்று சொல்லுவார்கள்; இதில் நாலடிகள் உள்ளதால் நாலடியார் எனப்பெயரிட்டனர்; அதாவது பெயரிடும் முறையிலும் ஒற்றுமை!  இரண்டு நூல்களும் சங்க காலத்துக்குப் பின்னர் தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் வைக்கப்பட்டுள்ளன; அது இன்னுமொரு ஒற்றுமை!

***

3.பசு உவமை !

இந்துக்கள் கர்ம பலனில் நம்பிக்கை கொண்டாலும் அதை நமக்கு அளிக்கும் ஆண்டவன் ஒருவன் உளன் என்று நம்புகின்றனர். சமணர்களோ ஒரு பசுக்கூட்ட உவமையைச்  சொல்லுவார்கள் ; ஆயிரம் பசுக்கள் இருந்தாலும் ஒரு கன்றுக்குட்டி எப்படி தாய்ப் பசுவைக் கண்டு  பிடிக்கிறதோ அப்படி ஒருவன் செய்த வினை, அவனைக் கண்டுபிடித்துவிடும் என்பது அவர்கள் கூற்று; சமணர்கள் இயற்றிய நாலடியாரில் இந்தப்   பாட்டு வருகிறது :

பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று

வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் – தொல்லைப்

பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த

கிழவனை நாடிக் கொளற்கு.—நாலடியார்

(பொ-ள்.) பல ஆ (பசு)க்களின் இடையில் செலுத்திவிடப்பட்டாலும் ;  இளைய ஆன்கன்று,  தன் தாய் ஆ(பசு)வினைத் தேடித் தெரிந்தடைதலை, போன்ற தாகும்; பிறப்புக்கள் தோறும் தொன்று தொட்டுவரும் பழவினையும்,  தன்னைச் செய்த உரிமையாளனைத் தேடி அடையும் வகையில், அத்தகைய தன்மையுடையதேயாகும். (க-து.) பழவினை தனக்குரியவனைத் தவறாது சென்று பற்றும்..

***

4.புத்தகமே சாலத் தொகுத்தும் பொருடெரியார்

உய்த்தக மெல்லா நிறைப்பினும் – மற்றவற்றைப்

போற்றும் புலவரும் வேறேபொருடெரிந்து

தேற்றும் புலவரும் வேறு.–318

(பொ-ள்.) புத்தகமே சாலத்தொகுத்தும் பொருள் தெரியார் – புத்தகங்களைமிகுதியாகத் தொகுத்து வைத்தும் பலர் அவற்றின்பொருள் தெரியாதவராவர்: உய்த்து அகமெல்லாம்நிறைப்பினும் அவற்றைப் போற்றும் புலவரும் வேறுபொருள் தெரிந்து தேற்றும் புலவரும் வேறுபிறர்முயன்று நூல்களை வீடு முழுமையும் நிறைத்து வைத்தாலும்அவற்றை அன்புடன் பாதுகாக்கும் அறிஞர்களும் வேறு,அவற்றின் கருத்தறிந்து தம்மையும் பிறரையும்தெளிவித்துக் கொள்ளும் பேரறிஞர்களும் அவரின்வேறாவர்.

***

5.“எறியென்றெதிர் நிற்பாள் கூற்றம்சிறுகாலை

அட்டில் புகாதாள் அரும்பிணி -அட்டதனை

உண்டி உதவாதாள் இல்வாழ்பேய் இம்மூவர்

கொண்டானைக் கொல்லும் படை”

எறியென்றெதிர் நிற்பாள் கூற்றம்: உன்னைத் தைரியமிருந்தால் அடித்துப் பார் என்று எதிர்த்து நிற்பவள் கணவனுக்குக் கூற்றுவன் (எமன்) போன்றவள் ஆவாள்.சிறுகாலை அட்டில் புகாதாள் அரும்பிணி: விடியற்காலையில் கூட சமையலறைக்குச் சென்று சமைக்காதவள் கொடிய நோயாவாள்.அட்டதனை உண்பியாது அளிவாழ்பேய்: சமைத்த உணவை அன்போடு பரிமாறாமல் முகம் சுளிப்பவள் இல்லத்தில் வாழும் பேய் ஆவாள்.கொண்டானைக் கொல்லும் படை: இம்மூன்று வகையான மனைவியரும் தன் கணவனைக் கொல்லும் படைக் கருவிகளைப் போன்றவராவர்.

***

6.கல்லாக் கழிப்பர் தலையாயார்; நல்லவை

துவ்வாக் கழிப்பர் இடைகள்; கடைகள்

இனிதுண்ணேம் ஆரப் பெறேமியாம்2என்னும்

முனிவினாற் கண்பா டிலர்.

கல்லாக் கழிப்பர் தலையாயார் – மக்களில் உயர்ந்தோர், நற்கருத்துக்களை ஆழ்ந்து அறிந்து தெளிவு பெறுதலை மேற்கொண்டு அம்முறையில் தம் வாழ்நாட்களைக் கழிப்பர்; நல்லவை துவ்வாக் கழிப்பர் இடைகள் – இடைத்தர மக்கள், இனிய பண்டங்களை ஐம்புலன்களானும் நுகர்ந்தின்புறுதலை மேற்கொண்டு அம் முறைமையில் வாழ்நாள் கழிப்பர்; கடைகள் இனிது உண்ணேம் ஆரப்பெறேம் யாம் என்னும் முனிவினால் கண்பாடு இலர் – கடைத்தர மக்கள், ‘யாம் பண்டங்களை இன்பமாய் நுகரப் பெற்றிலேம், நிறையப் பெற்றிலேம்’ என்னும் வெறுப்பினால் இரவிலும் உறக்கமில்லாதவராவர்.

***

7.அக்கேபோல் அங்கை யொழிய விரலழுகித்

 துக்கத் தொழுநோய் எழுபவே – அக்கால்

 அலவனைக் காதலித்துக் கால்முரித்துத் தின்ற

 பழவினை வந்தடைந்தக் கால்.

     (இ-ள்.) அக்கால் – அந்தக் காலத்தில் [முற்சன்மத்தில்], அலவனை – நண்டை, காதலித்து – விரும்பி, கால் முரித்து – காலையொடித்து, தின்ற – (அதனைத்) தின்ற, பழவினை – (அதனாலுண்டாகிய) கருமம், வந்து அடைந்தக் கால் – (பயன் பெறும்படி) வந்து சேர்ந்த போது, அங்கை – உள்ளங்கையானது, அக்கு போல் – சங்குமணியைப் போல, ஒழிய – நீங்க, விரல் அழுகி – விரல்கள் அழுகிப் போய், துக்கம் – துக்கத்தைத் தருகின்ற, தொழு நோய் – பலவகைக் குட்ட நோய்கள், எழுப – உண்டாகப் பெறுவார் (பாவிகள்), .

நண்டை முரித்துத் தின்றவர்க்குக் குட்ட நோயுண்டாமாதலால் அதுவும் தீவினை யென்பதாம்.

8. வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்

வைகலும் வைகலை வைகுமென்று இன்புறுவர்

வைகலும் வைகற்றம் வாழ்நாள்மேல் வைகுதல்

வைகலை வைத்துணராதார்

பொருள்:-நாள்தோறும் நாள் கழிந்து வருவதைப் பார்த்திருந்தும், அப்படி நாள்தோறும் நாள் கழிதலை அறியாதார், தமது ஆயுள் நாளில் ஒரு நாள் அப்படிக்கழிவதை உணராது அது நிலையாக இருக்கிறது என நினைத்து இன்புறுவர். ஒரு நாளையும் வீணடிக்காமல் தர்மம் செய்ய வேண்டும் என்பதே இதன் பொருள்.

வள்ளுவனும் இதே கருத்தை நம் முன் வைக்கிறான்:–

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்து இவ்வுலகு–(திருக்குறள் 336)

பொருள்: நேற்று இருந்தவன் இன்று உயிருடன் இல்லை என்று கூறப்படும் பெருமை கொண்டு விளங்குகின்றது இந்த உலகம்.

மகாபாரதத்தில் யக்ஷப் பிரச்சனம் எ ன்னும் பேயின் கேள்வி பதில் பகுதியில்  தினமும் பலர் இறப்பதைப் பார்த்தும், தான் மட்டும் என்றும் நிலைத்திருப்பதாக மனிதன் நினைத்து வாழ்வதே உலகிலேயே மிகப்பெரிய அதிசயம் என தருமபுத்திரர் (யுதிஷ்டிரன்) குறிப்பிடுகிறார்.

***

9.ஆமாம்; அவர்களும் அடித்தால்தான் கொடுப்பார்கள் என்கிறார்கள்:

தளிர்மேலே நிற்பினும் தட்டாமல் செல்லா

உளி நீரர் மாதோ கயவர் : – அளி நீரார்க்(கு)

என்னானும் செய்யார் எனைத்தானும் செய்பவே

இன்னாங்கு செய்வார்ப் பெறின்.         355

தளிர்மேலே நின்றாலும் ஒருவர் (கொட்டாப்புளி அல்லது மரத்தாலான சுத்தியல்) தட்டினாலன்றி, அத்தளிரைத் துளைக்காத உளி போல்வர் கயவர். அவர்கள் கருணை இயல்புடையார்க்கு ஓர் உதவியும் செய்யார்; தம்மைத் தாக்கித் துன்புறுத்துவார்க்கு எல்லா உதவிகளையும் செய்வர். அடித்தால்தான் கொடுப்பார்கள்

வள்ளுவனும் வன்முறையை ஆதரிக்கிறான்:–

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடுறுடைக்கும்

கூன்கைய ரல்லா தவர்க்கு (1077)

பொருள்: கன்னத்தில் அடித்து நொறுக்கினால்தான் கயவர்கள் உதவி செய்வர். அதுவரை சாப்பிட்ட பின்னர் ஈரக் கையால் கூட உதறித் தெறிக்க மாட்டார்கள்.

இன்னொரு குறளில் கரும்பு போல கசக்கி நசுக்கு என்கிறான்.

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்

கொல்லப் பயன்படும் கீழ் (1078)

பொருள்: சான்றோர்கள் சொன்ன மாத்திரத்திலேயே பிறர்க்கு உதவி செய்வர். கயவர்கள் மட்டும் கரும்பு போல் கொன்று பிழிந்தால்தான் பயன்படுவார்கள்.

***

10.கல்லெறிந் தன்ன கயவர்வாய் இன்னாச்சொல்

எல்லாரும் காணப் பொறுத்துய்ப்பர் – ஒல்லை

இடுநீற்றால் பையவிந்த நாகம்போல் தத்தம்

குடிமையான் வாதிக்கப் பட்டு .

படமெடுத்து ஆடும் பாம்பும் விபூதியை மந்திரித்துப் போட்டால் அடங்கிவிடும் ; அதுபோல கயவர் வாயிலிருந்து கொடுமை தரும் சொற்கள் கல்லால் அடிப்பது போலவந்தாலும் அவற்றையெல்லாம் பலரும் காணும்படிப் பொறுத்துக்கொண்டு  செல்பவர்கள்  மேன்மக்கள்ஆவர்.  

–subham—

Tags– பாம்பு, மந்திர விபூதி, கணவனைக் கொல்லும் பெண்கள் சமண முனிவர்கள், வன்முறை, நாலடியார், 10 கேள்விகள்,மூன்றுவகை மனிதர்கள்