ஆன்மீக திரைப்படங்களில் (பிளாக் அண்ட் ஒயிட்) பத்து கேள்விகள் (Post.16,218)

Written by London Swaminathan

Post No. 16,218

Date uploaded in London – 20 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கலர் திரைப்படங்கள் வருவதற்கு முன்னர் கருப்பு வெள்ளை (பிளாக் அண்ட் ஒயிட்) நிறத் திரைப்படங்கள் கொடிகாட்டிப் பறந்தன ; அவைகளில் கதைகளை விட பாடல்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தனர் ; இந்தக் கேள்விகளுக்கு தற்போதைய இளைய தலைமுறை பதில் தருவது சற்று கடினம்தான் .

1

அதிகமான பாடல்கள் உள்ள பழைய தமிழ்த் திரைப்படம் எது ?

2

எம் கே தியாகராஜ பாகவதர் நடித்த ஆன்மீக தமிழ்த் திரைப்படங்களின் பெயர்கள் என்ன?

3

புகழ் பெற்ற தீன கருணாகரனே (பாடியவர்: M. K. தியாகராஜ பாகவதர்) – பாடல் எந்தத் திரைப்பத்தில் இடம் பெற்றது ?

4

சிவகவி திரைப்படத்தின் கதை என்ன ?

5

இன்றுவரை காதில் ரீங்காரம் செய்யும் சொப்பன வாழ்வில் மகிழ்ந்து

 பாடல் எந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றது?

சொப்பன வாழ்வில் மகிழ்ந்து

சொப்பன வாழ்வில் மகிழ்ந்து – சுப்ரமண்ய

ஸ்வாமி உனை மறந்தார் – அந்தோ

சொப்பன வாழ்வில் மகிழ்ந்து – சுப்ரமண்ய

ஸ்வாமி உனை மறந்தார் – அந்தோ

அற்பப் பணப் பேய் பிடித்தே – அறிவிழந்து

அற்பர்களைப் புகழ்வார்

அற்பப் பணப் பேய் பிடித்தே அறிவிழந்து

அற்பர்களைப் புகழ்வார்

நாவால் பொய் மொழிவார் – பொருள் விரும்பி

நாவால் பொய் மொழிவார் – தனது வாழ்

நாளெல்லாம் பாழ் செய்வார் – அந்தோ

நாவால் பொய் மொழிவார் – உன்தன்

பாவன நாமமதை ஒரு பொழுதும்

பாவனை செய்தறியார்

பாவன நாமமதை ஒரு பொழுதும்

பாவனை செய்தறியார்

அந்தோ விந்தையிதே – அறிந்தறிந்து

ஆழ்நரகில் உழல்வாரே – மாந்தர்

அந்தோ விந்தையிதே – அறிந்தறிந்து

ஆழ்நரகில் உழல்வாரே – இவர்

சிந்தை திருந்தி உய்ய – குகனே உன்தன்

திருவருள் புரியாயோ

சிந்தை திருந்தி உய்ய – குகனே உன்தன்

திருவருள் புரியாயோ

6

காயாத கானகத்தே பாடல் இடம்பெற்ற திரைப்படம் எது ?

7

பிரகலாதா (1939) படத்தில் நடித்தவர்கள் யார் ?

8

கே பி சுந்தராம்பாள் நடித்த முதல் படம் எது?

9

பக்த காளத்தி படம் எப்போது திரையிடப்பட்டது?

10

ஹரிதாஸ் படம் படைத்த சாதனை என்ன ?

***************************

விடைகள்

1.தமிழில் அதிகமான பாடல்கள் கொண்ட பழைய திரைப்படம் ஸ்ரீ கிருஷ்ண லீலா (1934) ஆகும். பி. வி. ராவ் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் மொத்தம் 62 பாடல்கள் இடம் பெற்றிருந்தன.தொடக்க காலத் தமிழ்த் திரைப்படங்கள் பெரும்பாலும் மேடை நாடகங்களைத் தழுவி எடுக்கப்பட்டதால், அவற்றில் மிக அதிகமான பாடல்கள் இடம்பெறுவது வழக்கமாக இருந்தது.ஒப்பீட்டிற்காக இந்திய அளவில்:இந்தியத் திரைத்துறையிலேயே அதிக பாடல்களைக் கொண்ட திரைப்படமாக உலக சாதனை படைத்தது 1932-இல் வெளியான இந்திர சபா (Indar Sabha) என்ற இந்தித் திரைப்படமாகும். இதில் மொத்தம் 72 பாடல்கள் இருந்தன.

***

2.திருநீலகண்டர் (1939), சிவகவி (1943) ஹரிதாஸ் (1944)

***

3.திருநீலகண்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல், அந்தத் திரைப்படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அந்தப்படத்திலுள்ள பாடல்களை பாபநாசம் சிவன் இயற்றினார் .

***

4.சிவகவி (1943) திரைப்படம், பொய்யாமொழிப் புலவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட பக்தித் திரைப்படமாகும். கதையின் நாயகனான அம்பலத்தரசன் (எம். கே. தியாகராஜ பாகவதர்) தீவிர சிவபக்தன். காளி தேவியின் பேரருளால் அவனுக்கு அசாத்தியமான கவிபாடும் தெய்வீக ஆற்றல் கிடைக்கிறது. இதனால் அவன் ‘சிவகவி’ என்று அழைக்கப்படுகிறான். இறைவன் அவனது சிவபக்தியைச் சோதிக்கப் பல மாயாஜாலக் காட்சிகளையும் சோதனைகளையும் நிகழ்த்துகிறார். அந்தச் சோதனைகள் அனைத்தையும் கடந்து, இறுதியில் அவன் முருகப்பெருமானின் பேரருளைப் பெற்று முக்தி (salvation) அடைகிறான்

****

5..சிவகவி திரைப்படத்தில் இந்தப் பாடல் வருகிறது; பாபநாசம் சிவன் இயற்றியது.  எம் கே டி பாடினார்

****

6. ஸ்ரீ வள்ளி (1945 திரைப்படம்); பாடியவர் டி. ஆர். மகாலிங்கம்

****

7.தமிழில் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றிப் படம ‘பிரகலாதா’ ;  அதில் டி. ஆர். மகாலிங்கம் (பிரகலாதன்), ஆர். பாலசுப்பிரமணியம் (இரணியன்), எம். ஜி. ராமச்சந்திரன் (இந்திரன்) மற்றும் என். எஸ். கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருந்தனர்.

****

8.கே. பி. சுந்தராம்பாள் நடித்த முதல் படம் பக்த நந்தனார் (1935)  நந்தனார் வேடத்தில் ஆண் வேடம் ஏற்று நடித்தார்.சம்பளம்: அப்போதைய காலத்தில் மிகப்பெரிய தொகையான ஒரு லட்சம் ரூபாய் சம்பளமாகப் பெற்று சாதனை படைத்தார்.இயக்குநர்: மணிலால் டாண்டன் (Manik Lal Tandon) மற்றும் எல்லிஸ் ஆர். டங்கன் (Ellis R. Dungan).

****

9.பக்த காளத்தி 1945 ஆம் ஆண்டு ஆர். பத்மநாபன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஹொன்னப்ப பாகவதர்

என். எஸ். கிருஷ்ணன், செருகளத்தூர் சாமா, டி. ஆர். மகாலிங்கம், தவமணி தேவி, டி. வி. குமுதினி, டி. ஏ. மதுரம் நடித்தனர். பாபநாசம் சிவன் இயற்றிய பாடல்களுக்கு ஜி. ராமநாதன் இசையமைத்தார்.

***

10.எம். கே. தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளியான புகழ்பெற்ற கிளாசிக் திரைப்படமான ஹரிதாஸ், 1944 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி தீபாவளி பண்டிகையன்று வெளியானது. இத்திரைப்படம் சென்னை திரையரங்குகளில் தொடர்ந்து மூன்று தீபாவளிகளைக் கடந்து, 110 வாரங்களுக்கும் மேலாக (784 நாட்கள்) தொடர்ச்சியாக ஓடி மிகப்பெரிய வரலாற்றுச் சாதனை படைத்தது. கிருஷ்ணா முகுந்தா முராரே, மன்மத லீலையை வென்றாறுண்டோ பாடல்கள் இடம்பெற்ற திரைப்படம் இது ; மது, மாது, சூது நிறைந்த குடும்பக்  கதையாகத்   துவங்கி முனிவரிடம் ஆசிபெற்றுத் திருந்தும் பக்திக் கதையாக முடிகிறது .

சுபம்- –

Taga-ஆன்மீக திரைப்படங்கள், பிளாக் அண்ட் ஒயிட்,  பத்து கேள்விகள்

Leave a comment

Leave a comment