பலூசிஸ்தானின் சுதந்திரம்! (Post .16,219)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,219

Date uploaded in London – 21 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பலூசிஸ்தானின் சுதந்திரம்! 

ச. நாகராஜன்  

ஆகஸ்ட், 11, 2026 தேதியிட்டு News18.com இணையதளம் தரும் செய்தி இது.

 ஆகஸ்ட் 11ம் தேதியன்று பலூசிஸ்தானின் சுதந்திர தினம் பலூசிஸ்தான் சுதந்திரப் போராட்ட வீரர்களால் கொண்டாடப்பட்டது.

பலூசிஸ்தானின் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தலைவர் உலக நாடுகளை தங்களது ரிபப்ளிக் ஆஃப் பலூசிஸ்தானை அங்கீகரிக்குமாறு

வேண்டிக் கொண்டார்.

பலூச் தலைவரான மிர் யார் பலூச் உலக நாடுகளையும் பன்னாட்டு நிறுவனங்களையும் இனிமேல் இந்தப் பகுதியை பாகிஸ்தானின் ஒரு மாகாணம் என்று கூறுவதை நிறுத்துமாறு வேண்டிக் கொண்டார்.

இது எக்ஸ் வலைதளத்தில் வெளிவந்துள்ளது.

அவர் பலூசிஸ்தான் ஒரு சுதந்திர நாடு என்று அறிவித்துள்ளார்.

புற்றுநோய் போல உள்ள பாகிஸ்தானை பலூசிஸ்தானிலிருந்து அகற்ற பலூசிஸ்தான் மக்களின் அறப்போர் ஆதரவு இனியும் நீடிக்க வேண்டும்

என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவரது இயக்கம் 1947 ஆகஸ்ட் மாதம் 11ம் தேதியிலிருந்து தொடங்கப்பட்ட ஒன்றாகும் என்கிறார் இவர்.

இப்போது தான் இது உலக அரங்கின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாகிஸ்தான் அதிகாரிகள் இந்த சுதந்திர தின கொண்டாட்டங்களைத் தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர்.

 இந்தியாவிலிருந்து இந்த இயக்கத்திற்கு ஆதரவு தரும் சிந்தனையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், மற்றும் அகில உலக சமூக ஊடகங்கள் ஆகியவற்றிற்கு இந்த இயக்கம் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.

 14-8-2026 indiatoday.in தகவலின் படி அடையாளம் தெரியாத சில நபர்கள் பலூசிஸ்தானின் ஹோம் மினிஸ்டரின் வாகனத்தின் மீது துப்பாக்கியால் தாக்கி ஆறு பேரை படுகாயப்படுத்தியுள்ளனர். இவர்களில் மூன்று பேர்கள் போலீஸ்காரர்கள்.

மிர் ஜியாயுல்லா லாங்கோவேயின் வாகனமானது பாகிஸ்தான் சுதந்திரதின கொண்டாட்டத்தை கலத் என்ற இடத்தில்முடித்துக் கொண்டு க்வெட்டா திரும்பும் வழியில் இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கிறது,

 16-8-2026 டெலகிராப் தகவலின் படி பாதுகாப்புப் படையினர் ஏழு தீவிரவாதிகளைக் கொன்றுள்ளனர். இது வெவ்வேறு இடங்களில் நடந்த இரு சம்பவங்களாகும். சிந்த் குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்மணிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

 பாகிஸ்தான் மெல்ல மெல்ல அழியும் என்பது பாரத மகான்களின் தீர்க்கதரிசன வாக்காகும்.

 பலூசிஸ்தான் என்று இன்று அழைக்கப்படும் பகுதி அகண்ட பாரதத்தின் ஒரு பகுதியாகும்.

பலூசிஸ்தானில் மக்ரன் கடற்கரையோரம் உள்ள லஸ்பெலா மாவட்டத்தில் உள்ள ஹிங்குலா ஆலயம் ஒரு இந்து ஆலயமாகும்.

இது 51 சக்தி பீடங்களில் ஒன்று என்பது குறிப்பிடத் தகுந்தது.

 பலூசிஸ்தானின் எதிர்காலத்தை காலம் நிர்ணயம் செய்யும் என்பதில் ஐயமில்லை!

**

Leave a comment

Leave a comment