

Written by London Swaminathan
Post No. 16,228
Date uploaded in London – 23 September 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx



1
ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் தந்தாய் போற்றி!
தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி!
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!
தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி!
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி!
நானிலம் உள நாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி!
– கர்ணன் திரைப்படத்தில் வரும், காலத்தமல் அழியாத, பாடலைப் பாட குரல் கொடுத்தவர்கள் யார் ?
2
மாயா பஜார் படத்தில் வரும் ஒரு பாடல்– சடு குடு விளையாடும் சிறுவர் முதல் குடு குடு கிழவர் வரை– எல்லோரையும் மகிழ்விக்கும் தின்பண்டப் பாடல் ஆகும். பாடல் வரிகள் உங்கள் நினைவில் இருக்கிறதா?
3
லவ குசா படத்தில் நடித்த சிறுவர்கள் யார்? அவர்கள் பாடும் புகழ்பெற்ற நீண்ட பாடல் என்ன ?
4
தமிழில் சம்பூர்ண ராமாயணம் படம் எப்போது திரையிடப்பட்டது ?
5
சம்பூர்ண ராமாயணம் படத்தில் ராவணன் வீணை இசைக்கும் காட்சியின் சிறப்பு என்ன ?
6
ராவணன் வீணை வாசிக்கும் காட்சிகள் வேறு படங்களில் வந்தனவா ?
7
அனுமனைப்பற்றித் தமிழில் திரைப்படங்கள் எடுத்தார்களா ?
8
வீர கடோத்கஜன் திரைப்படத்தின் கதை என்ன ?
9
மஹா பாரத்தில் வரும் சத்திய வான் சாவித்ரி கதையை எந்தப் படத்தில் காணலாம் ?
10
10. அரிச்சந்திரன் கதை எத்தனை முறை திரைப்படமாக எடுக்கப்பட்டது?
**********************


விடைகள்
1.T.M.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், P.B.ஸ்ரீநிவாஸ், திருச்சி லோகநாதன் ஆகிய நான்கு இசையுலகச் சக்கரவர்த்திகள் இணைந்து பாடியது இந்தப் பாடல்.
***
2.கல்யாயான சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம் — பாடலை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது ;மறக்காது !• பாடியவர்: திருச்சி லோகநாதன்; • இசையமைப்பாளர்: கண்டசாலா; • நடித்தவர்: எஸ். வி. ரங்காராவ் (கடோத்கஜன் கதாபாத்திரத்தில்). • மாயாபஜார் (1957): மகாபாரதக் கதையின் ஒரு பகுதியான அபிமன்யு மற்றும் வத்சலாவின் (சசிகலா) கல்யாணக் கதையை மையமாகக் கொண்டு, நகைச்சுவை மற்றும் மாயாஜாலங்கள் கலந்து உருவாக்கப்பட்ட மிகப்பிரபலமானத் திரைப்படம்.
***
3.புகழ்பெற்ற லவ குசா (1963) திரைப்படத்தில், சீதை மற்றும் ராமரின் இரட்டை மகன்களான லவ, குசா கதாபாத்திரங்களில்
• லவன் ஆக — மாஸ்டர் நாகராஜு (Master Nagaraju) நடித்தார். குசன் ஆக — மாஸ்டர் சுப்பிரமணியம் (Master Subrahmanyam) நடித்தார். அவர்கள் பாடிய நீண்ட இனிமையான பாடல் – ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே — பாடல் ; இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்; பாடலாசிரியர்: அ. மருதகாசி; பாடியவர்கள்: பி.சுசீலா மற்றும் பி.லீலா.
***
4.சம்பூர்ண ராமாயணம் திரைப்படம் 1958 ஆம் ஆண்டில் வெளிவந்தது வால்மீகியின் இராமாயணத்தை விவரிக்கும் இதில் சிவாஜி கணேசன் மற்றும் என். டி. ராமராவ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
***
5.”வீணைக் கொடியுடைய வேந்தனே… வீரமே உருவாகினும் இசை வெள்ளமே உயிரெனவே நினைந்து உலவும்…” என்ற வரிகளுடன் மோகன ராகத்தில் இப்பாடல் தொடங்குகிறது;வரிக்கு வரி ராகங்கள் மாறிவரும் வகையில் ஒரு அற்புதமான ராகமாலிகைப் பாடல் இது. பாதியில் வீணைக் கமபிகள் அறுந்து வரப்போகும் ஆபத்துக்கான அப சகுனமாக மாறும்.
***
6.ராவணன் வீணை வாசிக்கும் காட்சிகள் வந்த வேறு தமிழ்த் திரைப்படங்கள்:• சீதா கல்யாணம் (Seetha Kalyanam – 1934)• இந்தத் தமிழ்த் திரைப்படத்தில்தான் முதன்முதலில் இராவணன் கயிலை மலையைத் தூக்க முயற்சிப்பதும், பின்னர் சிவபெருமானின் கால் கட்டைவிரல் அழுத்தத்தால் நசுக்கப்பட்டு, தன் நரம்புகளை எடுத்து வீணை வாசித்து சிவனை மகிழ்விக்கும் காட்சியும் மிக விரிவாகக் காட்டப்பட்டது. (குறிப்பு: பிரபல வீணை வித்வான் வீணை எஸ்.பாலசந்தர் அவர்கள் தனது 7 வயதில் இத்திரைப்படத்தில் இராவணன் சபையில் கஞ்சிரா வாசிக்கும் சிறுவனாக நடித்திருந்தார்).
• பூகைலாஸ் (Bhookailas – 1958) / சீதா ராம கல்யாணம் (Sita Rama Kalyanam – 1961)• இராவணன் கதாபாத்திரத்திற்குப் புகழ்பெற்ற என். டி. ராமாராவ் (NTR) நடிப்பில் வெளியான தெலுங்கு மற்றும் தமிழ்ப் பதிப்புகளில் இக்காட்சி மிக பிரம்மாண்டமாக சித்தரிக்கப்பட்டது. இராவணன் சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தைப் பாடி ருத்ர வீணை வாசிக்கும் காட்சி இதில் உள்ளது.
***
7. ராம பக்த ஹனுமான் திரைப்படம்
ஸ்ரீ ராம பக்த ஹனுமான் 1958 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] வால்மீகி இராமாயணம் இதிகாச கதையின் அடிப்படையில் அமைந்த இத்திரைப்படத்தை பாபுபாய் மிஸ்திரி இயக்கினார். எஸ். என். திரிபாதி அனுமானாக நடித்தார். ஏனைய நடிகர்கள் மஹிபால், அனித்தா குஹா, கிருஷ்ணகுமாரி, ஹெலன் மற்றும் பலர். சித்ரகுப்தா இசையமைத்தார்.
ஸ்ரீ ராம ஹனுமான் யுத்தம் (1966): என். டி. ராமராவ் மற்றும் சரோஜாதேவி நடிப்பில் வெளியான இப்புராணத் திரைப்படம், ராமருக்கும் அனுமனுக்கும் இடையே நடக்கும் போரையும், அனுமனின் தீவிர பக்தியையும் காட்டுகிறது.
• ஹனு-மேன் (Hanu-Man – 2024): பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில் வெளியாகிப் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த சூப்பர்ஹீரோ திரைப்படம். அஞ்சனாத்ரி என்ற கற்பனைக் கிராமத்தில் வாழும் சாதாரண இளைஞன் ஒருவனுக்குப் பகவான் அனுமனின் சக்திகள் கிடைப்பதையும், அதை வைத்து அவன் தீமைகளை எப்படி அழிக்கிறான் என்பதையும் இத்திரைப்படம் விவரிக்கிறது. இது தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது
• அனுமான் (Hanuman – 2004 / 2010): நிதின், அர்ஜுன் சர்ஜா, பிரகாஷ் ராஜ் மற்றும் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் கிருஷ்ண வம்சி இயக்கிய ‘ஸ்ரீ ஆஞ்சநேயம்’ என்ற தெலுங்குத் திரைப்படம், தமிழில் அனுமான் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது
***
8.வீர கடோத்கஜன் , 1959 ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ் புராணத் திரைப்படமாகும். மகாபாரதக் கதையில் வரும் பீமனுக்கும் இடிம்பிக்கும் பிறந்த வீரன் கடோத்கஜனை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது.
பாடல்கள்: இப்படத்தில் இடம்பெற்ற “எழில் ஓவியம் பார்த்தேனோ” என்ற பாடல் மிகவும் பிரபலமானது. இப்பாடலை ஏ. எம். ராஜா மற்றும் பி. சுசீலா ஆகியோர் பாடியுள்ளனர். பாண்டவர்களின் வனவாசத்தின் போது காட்டில் பீமனுக்கும் அரக்கி இடிம்பிக்கும் மகனாகப் பிறக்கும் கடோத்கஜன், மாயாஜால சக்திகள் கொண்ட ஒரு மகா வீரன். தன் தம்பியான அபிமன்யுவின் காதலுக்கு உதவி செய்வது, கௌரவர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பது மற்றும் கிருஷ்ணரின் ஆசியோடு பாண்டவர்களுக்குத் துணையாக நிற்பது போன்ற கதைகளைக் கொண்டது.
***
9.சத்தியவான் சாவித்திரி (1957 திரைப்படம்): அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் எஸ். வரலட்சுமி நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகவும் பிரபலமானது. எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனின் உயிரை மீட்டெடுக்கும் கதையை இது விரிவாகக் காட்டுகிறது.
• சத்தியவான் சாவித்திரி (1933 திரைப்படம்): தமிழ் சினிமாவின் ஆரம்ப கால கட்டத்தில் டி. பி. ராஜலட்சுமி, எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி நடிப்பில் வெளியான முன்னோடித் திரைப்படம் இதுவாகும். (சத்தியவான் சாவித்திரி (1977 திரைப்படம்): கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான திரைப்படம் மலையாளத்தில் எடுக்கப்பட்டு தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.)
***
10.அரிச்சந்திரன் கதையை முதன்முதலில் திரைப்படமாக எடுத்தவர் இந்திய சினிமாவின் தந்தையான தாதாசாகேப் பால்கே (Dadasaheb Phalke) ஆவார். அவர் 1913 ஆம் ஆண்டு ‘ராஜா ஹரிஸ்சந்திரா’ (Raja Harishchandra) என்ற பெயரில் இந்தியாவின் முதல் முழுநீள மௌனத் திரைப்படமாக இதை இயக்கினார்.
இதன் பிறகு, தமிழ் திரையுலகில் இக்கதை பலமுறை வெவ்வேறு இயக்குநர்களால் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அதன் விவரங்கள் பின்வருமாறு:
ஆண்டு திரைப்படத்தின் பெயர் இயக்குநர் முக்கிய நடிகர்கள்
1932 ஹரிச்சந்திரா ராஜா சந்திரசேகர், சர்வோத்தம் பாதாமி வி. ஏ. செல்லப்பா, வி. என். ஜானகி
1935 ஹரிச்சந்திரா பிரபுல்லா கோஷ் வி. ஏ. செல்லப்பா, டி. பி. ராஜலட்சுமி
1944 ஹரிச்சந்திரா கே. பி. நாகபூசணம் பி. யு. சின்னப்பா, பி. கண்ணாம்பா, எம். ஜி. ஆர்
1968 ஹரிச்சந்திரா கே. எஸ். பிரகாஷ் ராவ் சிவாஜி கணேசன், ஜி. வரலட்சுமி.

–subham—
Tags மஹாபாரதம், ராமாயணம், திரைப்படங்கள் ,10 கேள்விகள்