Written by London Swaminathan
Post No. 16,227
Date uploaded in London – 23 September 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Words beginning with V continued; English version posted yesterday.

வசிஷ்ட மகரிஷி
பிராமணர்கள் நாள்தோறும் மூன்று வேளைகளில் செய்யும் சந்தியா வந்தனத்தில் வழிபடும் சப்த ரிஷிக்களில் ஒருவர்; இவருடைய மனைவியை எல்லா இந்துக்களும் வழிபடுவதால் சங்கத் தமிழ் இலக்கிய நூல்கள் அருந்ததி யைக் கற்புக்கரசி என்று போற்றிப் பாடுகின்றன. ஒவ்வொரு இந்துவும் கல்யாணம் ஆன நாள் இரவில் அருந்ததி யைக் காண வேண்டும். அதாவது வானத்தின் வடபுறத்தில்சப்த ரிஷி நட்சத்திரக் கூட்டத்தை– வசிட்டர் அருகில் நிற்கும் விண்மீனை க் –காண வேண்டும் ; அம்மிதித்தல், அருந்ததி காணல் என்பது தமிழ்ப்பழமொழி ஆகும்.
எல்லோருக்கும் தெரிந்த கதை விசுவாமித்திரர்– வசிஷ்டர் மோதல் கதை. இது ராமாயணத்தில் பால காண்டத்திலும் , மஹா பாரதத்தில் முதல் பர்வமான ஆதி பருவத்திலும் உளது.
விசுவாமித்திரர் ஒரு அரசன்; அதாவது க்ஷத்திரியன். வசிஷ்டர் ஒரு முனிவன்; அதாவது பிராமணன்.
ஒரு நாள் காட்டில் வேட்டையாடிக் களைப்படைந்த விசுவாமித்திரர் பெரிய பரிவாரங்கள் , படைவீரர்கள் புடைசூழ, வசிஷ்டரின் ஆஸ்ரமத்துக்கு வருகிறார். அவரும் அரசனுக்குரிய மரியாதைகளுடன் வரவேற்று ராஜ உபசாரம் செய்கிறார். இறுதியில் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை– ஜொலிக்கும் ரத்ன மணிகளுடன் கூடிய நகைகளையும் அளிக்கிறார். விசுவாமித்திரருக்கு ஒரே வியப்பு. காட்டில் வாழும் இந்த ஐயருக்கு எப்படி இவ்வளவு வசதிகள் ? என் பரிவாரம் முழுதும் சாப்பிட இவர் எப்படி சமையல் செய்தார்? என்று எண்ணி அவரிடமே கேள்வியும் கேட்டார்.
வசிஷ்டரும் பதில் சொன்னார்: “என்னிடம் நந்தினி என்று ஒரு பசு உள்ளது. அது கேட்டதை எல்லாம் தரும் காமதேனு” என்றார் .உடனே அதை எனக்குக் கொடு என்று விசுவாமித்திரர் கேட்டார். வசிஷ்டர் மறுத்தார். நான் அரசன்! என்ன செய்கிறேன் பார், என்று பலப் பிரயோகம் செய்தார். நந்தினி என்னும் பசு மாட்டை இழுத்தார், அடித்தார், உதைத்தார் அது நகரவில்லை.
அப்போது வசிஷ்டரின் உத்தரவின் பேரில் அந்த பசுமாட்டின் உடலின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வெவ்வேறு இன மக்கள் வந்தனர். அவர்கள் திராவிடர்கள், பல்லவர்கள், சகரர்கள் , ஹூணர்கள், புலிந்தர்கள், யவனர்கள் ஆவர். அவர்கள் எல்லோரும் வசிட்டனுடன் சேர்ந்து விசுவாமித்திரர் படையை துவம்சம் செய்தனர். விசுவாமித்திரர் படு தோல்வி அடைந்தார். அப்போது அவர் என்ன சொன்னார் என்று வியாசர் நமக்கு எழுதி வைத்துள்ளார். ((இதிலுள்ள திராவிட யவன, பல்லவ என்பதெல்லாம் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் உண்டு; அவற்றைத் தனியாகக் காண்போம்; மனு ஸ்ம்ருதியிலும் இந்த இனங்கள் பட்டியல் வருகிறது.))
திக் பலம் க்ஷத்ரிய பலம் பிரம்ம தேஜோ பலம் பலம்
பலாபலம் வினிஸ்ரித்ய தப ஏவ பலம் பலம்
பொருள்
வெட்கம், வெட்கம். க்ஷத்ரிய பலம் ஒரு பலமா ? பிராமணனின் பலம் அன்றோ உண்மையான பலம். பலத்தையும் அபலத்தையும் /வலுவின்மை ஒப்பிட்டால் தவமே பெரிய பலம்..
அதாவது தவ வலிமையுடைய ஐயர் பலம்தான் உண்மையான பலம். இதை புறநானூற்றுப் புலவரும் வள்ளுவரும் பாடியுள்ளனர். அதைக் காணும் முன்னர் விசுவாமித்திரர் என்ன செய்தார் என்பதையும் காண்போம். அய்யர் போல நமக்கும் சக்தி கிடைக்க நாமும் தவம் செய்வோம் என்று போகிறார். இரண்டு முறை அஹங்காரம் என்னும் வலையிலும், காதல் வலையிலும் சிக்கித் தோற்றுப் போகிறார். திரிசங்கு , மேனகா கதைகளில் இவற்றைக் காணலாம். இறுதியில் வெற்றி பெறுகிறார். வசிஷ்டர் அவரை ‘ஐயரே வருக வருக’ என்று அழைக்கிறார். விசுவாமித்திரருக்கு பரம சந்தோஷம் . அதை இன்றுவரை நாமும் ‘வசிஷ்ட்டர் வாயால் பிரம்மரிஷி’ என்று மரபுச் சொற்றொடராக IDIOMS AND PHRASES பயன்படுத்துகிறோம். இந்த மூன்று TEMPTATIONDS டெம்ப்ட்டேஷன்களை புத்தரும் ஏசுவும் ‘காப்பி’ அடித்தனர். மாறன் வந்தான் ;புத்தர் ஜெயித்தார் என்று.
உலகிலுள்ள எல்லா குற்றங்களும் காமம், க்ரோதம்,லோபம் என்ற மூன்று விஷயங்களளால்தான் நடைபெறுகினறன. பகவத் கீதையில் இதை நரகத்தின் மூன்று வாசல்கள் என்று கிருஷ்ண பரமாத்மா 16-21, (Tirukkural 360) வருணிக்கிறார்.
இந்தக் கருத்து 2000 ஆண்டுப் பழமையான புறநானூற்றிலும் பின்னர் வந்த திருக்குறளிலும் உளது .
புறநானூறு பதில்–
பருதி சூழ்ந்த இப்பயங்கெழு மாநிலம்
ஒருபகல் எழுவர் எய்தியற்றே!
வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு
ஐயவி அனைத்தும் ஆற்றாது; ஆகலின்
கைவிட்டனரே காதலர்; அதனால்
விட்டோரை விடா அள், திருவே;
விடாஅதோர் இவள் விடப்பட்டாரே
–வான்மீகியார், புறம் 358
கதிரவன் சுற்றும் இந்த வளம் செறிந்த பூமிக்கு ஒரே நாளில் 7 பேர் அரசனானதும் உண்டு. இல்லறத்தையும், துறவறத்தையும் ஒப்பிட்டால் துறவறமே சிறந்தது. தவம் மலை என்றால், இல்லறம் சிறு வெண்கடுகு (ஐயவி) போன்றதாகும். தவம் செய்ய முடியாததால்தான், காதலர்கள் இல்லறத்துக்கு வந்தனர். வீடு பேற்றை விரும்பியோர் இல்லறத்தைக் கைவிட்டனர். யார் வருந்தி வருந்தி அழைக்கவில்லையோ அவளிடம் லெட்சுமி போய் ஒட்டிக்கொள்வாள். இல்வாழ்வில் அழுந்தியோரிடம் தங்க மாட்டாள்.
பாடலின் சொற்களை மட்டும் பாருங்கள் – உலகத்தையும் தவத்தையும் தரசுத் தட்டில் வைத்து நிறுத்தால் , தவம் மிகப்பெரியது ; உலகம் சிறு கடுகு போன்றது (ஐயவி ) பாடலை எழுதிய புலவரின் பெயர் வான்மீகி என்பதால் இது ராமபிரான் பற்றிய கதை என்றும் உரைகாரர்கள் கருதுகின்றனர். இங்கு வையம் என்பதை கிருஹஸ்தாச்ரமம் கொண்ட இல்லறவாசிகள் என்று உரை கூறுகிறது. அதாவது தவமே வலியது. சிலர்தான் அதைச் செய்ய முடியும்; அதனால்தான் உலகில் தவ சீலர்கள் குறைவு. மற்ற எல்லோரும் காதல் வலையில்- காம வலையில் சிக்கி இல்லறம் நடத்துகின்றனர். இதுவும் ‘பிரம்ம தேஜோ பலம் பலம்’ என்ற விச்வாமித்திரர் வாக்கினை மெய்ப்பிக்கிறது.
திருவள்ளுவர் ஒரு குறளில் முனிவர்கள் கோபித்தால் அரசாங்கம் பொடித்து விழும் என்கிறார். நஹுஷன் என்ற இந்திரனை அகஸ்தியர் என்ற பிராமணர் வீழ்த்திய கதை நமது நூல்களில் உளது. நந்தன் என்னும் நாலாம் வர்ண மன்னன், பிராமண சாணக்கியனை அவமானப்படுத்தியதால் அவன் அந்த வம்சத்தையே வேரோடு அழித்து, மயில் வளர்க்கும் ஜாதியைச் சேர்ந்த, மௌர்ய சந்திர குப்தனை பணியில் அமர்த்தி அலெக்ஸ்சாண்டர் படைகளையும் பயமுறுத்தி திரும்பி ஓடச் செய்ததையும் நாம் அறிவோம்.
இதோ இந்திரன் பற்றிய திருக்குறள்
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுறிந்து
வேந்தனும் வேந்து கெடும் (899)
உயர்ந்த கொளகைகளை உடைய பெரியார்கள் கோபம் அடைந்தால், இந்திரன் போல (பெரிய வேந்தர்களும்) ஆட்சியை இழந்து கெட்டுப்போவர்.
இங்கு ‘வேந்தன்’ என்ற சொல் இரு பொருளுடைத்து ; பரிமேல் அழகர் தொல்காப்பியரைப் போல வேந்தன் என்றால் இந்திரன் என்றே பொருள் சொல்கிறார்.
அடுத்த குறள்
இறந்தமைந்த சார்புடையராயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின் – 900
பொருள்
பெரியவர்கள் கோபம் கொண்டால் , எவ்வளவு ஆதரவு உடைவராக இருந்தாலும், தப்பித்து உயிர் வாழ்தல் முடியாது
ஆக ‘தபோ பலம்’ – தவம் என்னும் வலிமை – மிகவும் சக்தி வாய்ந்தது; அரசர்களையும் விழுத்தாட்டும் வல்லமை உடையது என்று மஹா பாரதம், புற நானூறு , திருக்குறள் ஆகியன இயம்புவதைக் கண்டோம்
வாழ்க முனிவர்கள் (அந்தணர்கள்); வாழ்க தவ வலிமை.
முனிவர்கள் = அந்தணர்கள் என்ற கருத்தும் தமிழ் சம்ஸ்க்ருத நூல்களில் இழையோடி செல்வதைக் காணலாம். முனிவர்கள் பலம் இந்திரனையும் வீழ்த்தும் என்பதற்கு பிராமண சிரேஷ்டர்களான அகஸ்தியரையும், வஷிஷ்டரையும்தான் எடுத்துக்கட்டுகளாகத் தந்துள்ளனர்.
உண்மைப் பொருளும் அஃதே !
அந்தத்தை அணவுவார் அந்தணர் (உள் முகப் பார்வை உடையோர் )
பிரம்மத்தை நாடுவார் பிராஹ்மணர் !
பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பர் – ஆன்றோர்.
நல்லவன் ஒருவன் ஏதேனும் அபூர்வமாக கெட்டது செய்துவிட்டால் – எல்லாம் ‘’சஹவாச தோஷம்’’= சேர்வார் சேர்க்கை என்பர் சான்றோர். இந்தப் பொன்மொழிகளை விளக்கும் கதை கீழே உள்ளது:—
வேத காலத்தில் வாழ்ந்த இரண்டு பெரிய ரிஷிக்கள் வசிஷ்டரும் விஸ்வாமித்திரரும் ஆவர். இருவருக்கும் எப்போது பார்த்தாலும் மோதல். எதிரும் புதிருமாக நிற்பார்கள். கீரியும் பாம்பும் போல சண்டையிடுவர்! காரணம்: விஸ்வாமித்ரர் ஒரு மன்னர். இதனால் ஆட்சியாளருக்கே உரிய தீய குணங்கள் அவரிடம் இருந்தன:-
அஹங்காரம் :–(தன்னை வசிட்டர் வாயினால் பிரம்மரிஷி என்று அழைக்க வேண்டும்.
பெண்வயப்படுதல்:– மேனகாவிடம் வசப்படல்.
வேண்டியவருக்குச் சலுகை:– திரிசங்கு என்பவரை உடலோடு சொர்க்கத்து அனுப்புகிறேன் பார்! என்று சவால் விடுதல்.
பிறர் பொருளுக்கு ஆசைப்படுதல்:வசிஷ்ட முனிவரின் காமதேனு முதலிய அரும்பெரும் விஷயங்களை தனதாக்கிக்கொள்ள விரும்பல்.
இறுதியில் இத்தனை மோக வலைகளையும் தாண்டி வசிட்டர் வாயினால் பிரம்மரிஷி பட்டம் பெற்றார். அதற்கு முன்னால் நடந்த ஒரு மோதல் இதோ:–
எது பெரிது தவமா? நல்லோருடன் இருக்கும் சத்சங்கமா? என்பதே கேள்வி. ஒருவன் நியம நிஷ்டைகளுடன் வாழ்ந்து தவம் இயற்றுவதே சக்தி வாய்ந்தது என்றார் தபோநிதி விசுவாமித்திரர்.
இல்லை அவ்வளவு எல்லாம் கஷ்டப்படவேண்டாம். நல்லவருடன் இருந்து, அவர்களுடைய காற்றோ, நிழலோ மேலே விழுந்தால் அதைவிட சக்தி வாய்ந்தது எதுவுமில்லை என்றார் கருணாநிதி வசிஷ்டர்.
இருவர் வாக்குவாதமும் முடிவில்லாமல் போய் உச்ச ஸ்தாயியை அடைந்தது. இனியும் பேசினால் தொண்டை வறண்டுவிடுமென்று எண்ணி, இருவரும் மஹாவிஷ்ணுவிடம் சென்று முடிவு காண்போம் என்றனர்.
மஹாவிஷ்ணு இருவரையும் பார்த்து விட்டு, இப்பொழுது கொஞ்சம் முக்கியமான அலுவலில் இருக்கிறேன்; கொஞ்சம் ‘பிஸி’. ஆகையால் ஆதிசேஷனிடம் போய்க்கேளுங்கள் அவன்தான் என்னைத் தாங்குகிறான். இந்த பூபாரம் முழுதும் அவன் தலையில்தானே சுழல்கிறது – என்றார்.
இருவரும் மஹாசேஷன் — – ஆதிசேஷன் – என்னும் பாம்பிடம் சென்றனர். அவர் தலையில்தான் பூமி நிற்கிறது என்பது இந்துமத புரானங்கள் சொல்லும் விஷயமாகும். மஹாசேஷன் சொன்னார்: உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்லுகிறேன். என் தலைவர் விஷ்ணு அனுப்பிவிட்டால் நான் மறுக்க முடியுமா? ஒரு சின்ன உதவி தேவை. இதோ என் தலையில் இருக்கும் பூபாரத்தை இறக்கிவையுங்கள்; உங்கள் கேள்வியைப் பரிசீலிக்கிறேன் என்றார். உடனே விசுவாமித்திர வழக்கம்போல, ‘முந்திரிக் கொட்டை போல முந்திக் கொண்டு’ சென்று, இதோ பார்! என் தவ வலிமை, நியம, நிஷ்டைகள் அத்தனையையும் பயன்படுத்தி பூமியைத் தூக்குகிறேன் என்று பூமியைத் தூக்க முயன்றார். அதுவோ ஒரு அங்குலம் கூட அசையவில்லை.
இப்பொழுது வசிட்டர், சரி, விடுங்கள்! இப்போது என்னுடைய முறை; நான் முயற்சிக்கிறேன் என்று சொல்லி “நான் நல்லோரிடம் வாழ்ந்த ஒரு நிமிடப் பலனில் இந்த பூமி என் கைக்கு வரட்டும்” என்றார். அவர் கையில் பூமி நின்றது.
மஹாசேஷன் சொன்னார்: “குட் பை! உங்கள் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. பை! பை! என்று சொல்லிவிட்டார்.
இருவரும் நிம்மதியாகத் திரும்பினர். இது சுவாமி ராம்தாஸ் சொன்ன கதை.
***
வேதங்கள்
வேதங்கள், உலக அதிசயங்கள் நிறைந்த நூல்களலாகும் .
அதிசயம் 1
வாய் மொழியாக மட்டுமே இதை பல்லாயிரம் ஆண்டுகளாகப் பாதுகாத்து வருகிறார்கள் ; தமிழில் நான்மறை என்றும் எழுதாக்கிளவி என்றும் சங்க இலக்கியங்கள் போற்றுகின்றன
அதிசயம் 1
உலகின் முதல் புஸ்தகம்; உலகின் முதல் கவிதைத் தொகுப்பு .
அதிசயம் 3
இருபதுக்கும் மேலான பெண் கவிஞர்கள் உள்பட 450 கவிஞர்கள் பெயர்கள் உள்ளன ; இவ்வளவு பெண் கவிஞர்களையோ , பொதுக்க்கவிஞர்களின் பெயர்களையோ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எங்கும் காண முடியாது.
அதிசயம் 4
இதிலுள்ள காயத்ரீ முதலிய மந்திரங்களையும் யாக யக்ஞங்களையும் இன்றுவரை பிராமணர்கள் சொல்லி வருகிறார்கள் ; இவ்வளவு பழமையான சம்பிரதாயம் உலகில் வேறு எந்த மதத்திலும் கிடையாது .
அதிசயம் 5
துருக்கி நாட்டில் போகஸ்கொய் என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட களி மண் கல்வெட்டில், கியூனிபார்ம் எழுத்தில், பொறிக்கப்பட்ட சாசனத்தில் இந்திரன் அக்கினில் வருணன் ஆகியோரை ரிக் வேதத்தில் சொ ன் ன அதே வரிசையில் சொல்லி உடன்படிக்கை ஒன்றைச் செய்துள்ளனர்; இதன் ஆண்டு கி மு 1340.
இது மாக்ஸ்முல்லர் என்னும் பேர்வழி செத்துப்போன பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது ; காஞ்சி சங்காராச்சார்யாரின் (1894-1994 ) பழைய சொற்பொழிவில் விவரங்கள் உள்ளன . ஆகையால் மாக்ஸ்முல்லர் கும்பல் வேத்ததுக்குக் கற்பிக்கப்பட்ட காலம் பொய் என்பது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது அதேகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் சம்ஸ்க்ருத எண்களும் தசரதன் முதலிய மன்னர்களின் பெயர்களும் உள்ளன !
அதிசயம் 6
இதற்கு சாயனர் முதலியோர் மிகவும் பிற்காலத்தில் உரைகளை எழுதியபோதும் இன்னும் பொருள் விளங்காத ரகசியங்கள் உள்ளன!
அதிசயம் 7
உலகில் ஆங்கிலேயர்கள், ஜெர்மானியர்கள், பிரெஞ்ச்சுக்காரர்கள் , ரஷ்யர்கள் மொழி பெயர்த்து ஆராய்ந்த மிகப்பழைய நூல் இது ஒன்றுதான் ; அவர்கள் எவரும் பைபிளை ஆராயவில்லை ; அவ்வளவு பயம்! கார்ல் மார்க்ஸ், இங்கர்சால் போன்றோர் மிகவும் பிற்காலத்தில் கடவுள் இல்லை என்று சொன்னபோதும் பைபிளைத் திட்டுவதற்கோ அதை அக்குவேறு ஆணிவேராக ஆராய்வதற்கோ அஞ்சினார்கள் .
அதிசயம் 8
தமிழன் மிகப்பழைய நூலான தொல்காப்பியத்தில் சிவன் பற்றி எதுவும் இல்லை ! தமிழில் சிவன் என்ற சொல் பக்தி இயக்க காலத்தில்– அதாவது – 1500 ஆண்டுகளுக்கு முன்னர்தான் வந்தது ! அதற்கு முன்னர் சங்க இலக்கியத்தில் நீலக கண்டன், முக்கண்ணன் என்ற சொற்களையே பயன்படுத்தினர் ; லிங்கம் என்ற சொல் திருமூலர் முதலியோர் காலத்தில்தான் – அதாவது இன்னும் பிற்பட்ட காலத்தில்தான் – எழுத்தில் வந்தது ! ஆனால் “நம சிவாய” என்ற மந்திரம் யஜுர்வேதத்திலேயே வந்துவிட்டது அதற்கு வெள்ளைக்காரன் சொன்ன தேதி கி.மு 1000. அப்படியானால் தமிழனுக்கு சிவன் என்ற பெயரைச் சொல்ல 1500 ஆண்டுகள் ஆனது ! (ஆகையால் வெள்ளைக்காரர்களும் கொள்ளைக்காரர்களாலும் சொல்லுவதை நம்பக்கூடாது!)
அதிசயம் 9
நான்மறையை – நான்கு வேதங்களை – தொல்காப்பியம் பாயிரத்திலும் சங்க இலக்கியத்திலும் பிற்காலத்தில் வந்த எல்லா அறநெறி நூல்களிலும் காணலாம். ஆகையால் தொல்காப்பியர் காலத்திலேயே நான்கு வேதங்களை கற்றவர்கள் இருந்து தொல்காப்பியத்துக்கு அக்மார்க் முத்திரை குத்தியதையும் அறிய முடிகிறது ; இது கடவுள் விரோத திராவிடர்களுக்கு செமை அடி கொடுத்தது.
இந்து மத வேதங்கள் நான்கு : ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம் அதர்வண வேதம்.
முதலில் வந்தது ரிக் வேதம்; உலகத்தில் மிகவும் பழமையான புஸ்தகம் ; முழுவதும் கவிதைகள் நிறைந்தது; சம்ஸ்க்ருத மொழியில் உள்ள இந்த நூலில் ஆயிரத்துக்கும் மேலான துதிகள் உள்ளன அவைகளை மந்திரங்கள் என்ற எண்ணிக்கையில் சொன்னால் சுமார் 10,000.
நானூறுக்கும் மேலான கவிஞர்களின் பெயர்களில் இவை உள்ளன ; அவர்களை மந்திர திருஷ்டர்கள் என்பார்கள் . ஏனெனில் அவர்கள் இயற்றவில்லை ; அவர்கள் காலத்தால் அழிக்க முடியாத ஒலிகளைக் கேட்டார்கள், கண்டார்கள் என்பது இதன் பொருள்; இந்த நூலில் வேத கால தெய்வங்களான இந்திரன் அக்கினி, வருணன், வாயு, யமன், அஸ்வினி தேவர்கள் , உஷஸ் என்னும் சூரியோதய தெய்வம், அதிதி, விச்வே தேவர்கள் எனப்படும் எல்லா தேவர்களையும் போற்றும் துதிகள் உள்ளன
இதற்கடுத்து உரைநடை வடிவில் வந்த யஜுர் வேதத்தில் யாக யக்ஞங்களை எப்படிச் செய்வது என்று கூறப்பட்டுள்ளது முதல் முதலில் நம சிவாய என்னும் மந்திரத்தைச் சொன்ன வேதம் யஜுர் வேதம்!
இதற்கடுத்து வரும் சாம வேதத்தில் இசையுடன் வேதங்களை ஓதும் முறை கற்பிக்கப்பட்டுள்ளது . முதல் முதலில் இசையை– சங்கீதத்தை உலகத்துக்கு கற்பித்தது சாமவேதம்!
அதர்வண வேதத்தில் யாகத்தில் பயன்படுத்தாத மருத்துவ, மாயா ஜால, பொது விஷயங்கள் உள்ளன. முதல் முதலில், ஆயுர் வேதத்தையும் புறச் சூழல் விஷயங்களையும் பூமியின் அற்புத வருணை உடைய மிக நீண்ட செய்யுளையம் உலகிற்கு அளித்தது அதர்வண வேதம்
மொத்தத்தில் நான்கு வேதங்களிலும் இருபதாயிரம் மந்திரங்கள் இருக்கின்றன .
இவைகளைப் பற்றி எழுதிய வெளிநாட்டோர் அனைவரும் வேதங்களைப் பின் பற்றாதவர்கள் மட்டுமின்றி, வேதங்களைப் போற்றும் இந்து மதத்தின் எதிரிகளும் ஆவர். ஆகையால் வேதங்களைப் பற்றி முதலில் இந்துமத சாது சந்யாசிகள் எழுதியதைப் படிக்க வேண்டும் . திராவிட சுள்ளான்களும் வெளிநாட்டுச் சில்லூண்டிகளும் எழுதுவதைப் படிப்பதற்கு முன்னர், சங்க இலக்கியத்தையும் தேவார மூவர், மாணிக்கவாசகர், நாயன்மார்கள் சேக்கிழார், பட்டினத்தார் தாயுமானவர் , பாரதியார் சொன்னதையும் முதலில் படிக்க வேண்டும்.
வேதங்களின் காலம் என்ன ?
வேதங்களை இழிவு படுத்துவதற்காக மாக்ஸ்முல்லரை ஈஸ்ட் இந்தியா கம்பெனி குமாஸ்தா வேலை யில் அமர்த்தியது ; செத்துப்போகும் வரை இந்தியாவுக்கே வராத அந்த ஆள், ஆ ரம்பத்தில் வேதங்களை சிறுபிள்ளைத்தனமான பேச் சுக்கள் என்று சொல்லி எள்ளி நகை ஆடினார்; பின்னர் நானும் ஆரியன் ஜெர்மானியர் அனைவரும் ஆரியர்கள்– என்று கூத்தடித்தார்; அதை அப்படியே நம்பிய ஹிட்லர் ஜெர்மானிய ஆரியர்கள்தான் உலகை ஆள வேண்டும் என்று மெயின் காம்ப் Adolf Hitler’s autobiography is titled Mein Kampf (“My Struggle”), a two-volume political manifesto published in 1925 and 1926 என்னும் சுயசரிதையில் எழுதினார்; ஜெர்மானியர்களை உசுப்பிவிட்டு இரண்டு கோடிப்பேரை பலியாக்கிய இரண்டாவது உலக யுத்தத்தை உண்டாக்கினார்; மாக்ஸ்முல்லரின் இந்த கூத்தால் இரண்டு கோடிப்பேர் காலி !பின்னர் மேலும் ஒரு கூத்து அடித்தார்! ஒரு மொழி 200 ஆண்டுக்காலத்தில் மாற்றம் அடையும் என்று சொல்லி ரிக்வேதத்துக்கு கி.மு 1200 என்று முத்திரை குத்தினார் . மாக்ஸ்முல்லர் “படிக்காத மேதை”! படித்துப் பதவி பெற்ற பேராசிரியர் வில்சன் போன்றோர் மாக்ஸ்முல்லரைக் கிழி கிழி என்று கிழித்தவுடன் அவர் ஜகா வாங்கி, ரிக் வேதம் கி.மு 1500 அல்லது அதற்கு முற்பட்டதாக இருக்க வேண்டும் ; யாருமே வேதத்தின் காலத்தைச் சொல்ல முடியாது என்று சொல்லிவிட்டுச் செத்துப்போனார் இந்தியா என்றாலே அவருக்கு குலை நடுங்கும்! சாகும் வரை இந்தியாவுக்கே வரவில்லை . இப்படி வேதம் தோன்றிய நாட்டைப் பார்க்க அஞ்சிய அந்த ஆள் சொல்வதை நமபக்கூடாது ; காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல வெளிநாட்டு வேத அறிஞர்களைக் கிண்டல் செய்ததை அனைவரும் படிக்க வேண்டும் மார்க்சீய திராவிட அரைவேக்காடுகள் சொன்னதை முதலில் படித்தால் முதல் கோணல் முற்றும் கோணல் என்ற பழமொழிக்கு உதாரணமாக அமைவார்கள் !
வேத கால இலக்கியம்
இது நான்கு பகுதிகளைக் கொண்டது
முதலில் சம்ஹிதை என்னும் பகுதியில் இருபதாயிரம் மந்திரங்கள் உள்ளன
அடுத்து வரும் புஸ்தகங்கள் பிராமணங்கள் என்ப்படும் ; இதில் நிறைய விளக்கங்கள் உள்ளன ; சதபதப் பிராமணம் மிகவும் புகழ்பெற்றது
அதைத் தொடர்ந்து ஆரண்யகங்கள் என்ற நூல்கள் வரும்; .காட்டில் எழுந்த சிந்தனைகள் இவை .
அந்த ஆரண்யகங்களின் முடிவில் உபநிஷத் என்னும் வேத + அந்தம் = வேதத்தின் ஒட்டுமொத்த கண்டுபிடிப்பு = வேதாந்தம் வருகிறது ! இதில்தான் அஹம் பிரம்மாஸ்மி , தத்வமஸி = நானே கடவுள் , நீயே கடவுள் என்பன வருகின்றன ; இதை அறிய பாரதியார் பாடல்களை அல்லது ஆதி சங்கரரின் ஸ்லோகங்களைப் படிக்க வேண்டும் .
வேதங்களின் பகுதிகளை சாகைகள் என்பார்கள் ; ஷாகா என்றால் மரத்தின் கிளை என்பது பொதுப்பொருள் .
பாணினி சொல்லும் பல மேற்கோள்கள் இப்போதுள்ள சாகைகளில் இல்லாததால் நாம் இழந்த விஷயங்கள் தெரிகின்றன; இப்போது எஞ்சியிருப்பது ஏழு அல்லது எட்டு சாகைகள்தான் ; இழந்த சாகைகளோ ஆயிரக் கணக்கில்; இதை விளக்கி காஞ்சி சுவாமிகள் சொற்பொழிவாற்றியுள்ளார் . மீண்டும் சொல்கிறேன் : வேதங்களை பற்றித் தமிழ் இலக்கியம் சொல்வதையும் அடியார்கள் சொல்வதையும் படிக்காமல் வெளிநாட்டுக் காரர்கள் எழுதியதைப் படிக்காதீர்கள் !
***
வேனன்
வீணாய்ப்போன ஒரு அரசன் ; தன்னுடைய கிளாஸ்மேட்டுகளையும் நண்பர்களையும் கொன்று மகிழ்ந்தவன் இவனது அட்டூழியம் பொறுக்காமல் அவனுடைய தந்தையே நாட்டைவிட்டு ஓடிவிட்டான் ; பின்னர் ரிஷிகள் சேர்ந்து அவனைச் சபித்து தீர்த்துக் கட்டினார்கள் ; நாட்டை ஆள் வதற்கு அரசன் இல்லாததால் அவன் தொடையைக் கடைந்து க்ளோனிங் CLONING டெக்னீக் மூலம் டெஸ்ட் டியூப் TEST TUBE BABY பேபியை உருவாக்கினார்கள் ; பழைய கால மக்களுக்கு க்ளோனிங் , டெஸ்ட் டியூப் பேபி பற்றிச் சொன்னால் ஜுராசிக் பார்க் JURAZZIC PARK திரைப்படத்தில் டைனோசோர் என்னும் ராட்சத மிருக்கங்களை உண்டாக்கி அழிந்தது போல அசுரர்களை உண்டாக்க வாய்ப்பு ஏற்படும் என்பதால் தொடையைக் கடைந்து ஒரு புதிய மன்னனை உருவாக்கினார்கள் என்பார்கள் . மஹாபாரத காந்தாரிக்குப் பிறந்த சதைப் பிண்டத்தையும் நூறு டெஸ்ட் ட்யூப்களில் வைத்து நூறு துஷ்டர்களை உருவாக்கிய கதை மஹாபாரதத்தில் உள்ளது; வேன னை முனிவர்கள் கொன்று உருவாக்கிய புதிய அரசனுக்கு பிருது என்று பெயர் சூட்டினார்கள். அவன் ஆண்ட பூமிக்கு பிருத்வி என்று பெயர் சூட்டும் அளவுக்கு அவன் நல்லாட்சி புரிந்தான் ; வேனன் , சுமுகன் முதலிய துஷ்ட அரசர்களை மனு ஸ்ம்ருதியும் ஒரு ஸ்லோகத்தில் கண்டிக்கிறது .
***
To be continued………
Tags-, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-118 ; இந்து மத கலைச்சொல் அகராதி-118,விநாயக, வேதம் ,