அற்புதமான சில சம்ஸ்கிருதப் பொன்மொழிகள்! (Post.16,234)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,234

Date uploaded in London – 25 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சம்ஸ்கிருதச் செல்வம்

அற்புதமான சில சம்ஸ்கிருதப் பொன்மொழிகள்! 

ச. நாகராஜன் 

சிறிய சிறிய சொற்களால் பெரிய உண்மைகளைச் சொல்லும் ஆயிரக்கணக்கான பொன்மொழிகள் சம்ஸ்கிருதத்தில் உள்ளன.

இவற்றை முற்றிலுமாகத் தொகுப்பார் இல்லை.

Manhar Jai தனது Gems of Speech – Selected Sanskrit Subhasitas என்ற புத்தகத்தில் சில பொன்மொழிகளை சம்ஸ்கிருத மூலத்துடன் அவை தரும் உள்ளார்ந்த பொருளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1998ம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.

அவற்றில் சிலவற்றைத் தமிழில் இங்கு தருகிறேன்.

சனை: பந்தா: சனை: கந்தா:

விடாமுயற்சி என்பது தான் விளையாட்டின் பெயர்.

ஷைலே ஷைலே ந மாணிக்யம்

மாணிக்க ரத்னமும் நல்ல மனிதர்களும் கிடைப்பதற்கு அரிதானவை.

ஸ்தானப்ரஷ்டா ந ஷோபந்தே

ஸ்தானத்தை இழந்தவர்கள் சோபிக்க மாட்டார்கள். (இதன் பொருள்: ஒவ்வொருவருக்கும் உரிய இடம் என்றும் மதிப்பு என்றும் ஒன்று உண்டு. அதை இழந்து விட்டால் அவர்கள் மதிப்பை இழந்தவர்களாகி விடுவார்கள்.)

அலங்கரோதி ஹி ஜரா

ஒரு மனிதரின் உணவு இன்னொருவருக்கு விஷம்

கிம் கரிஷ்யந்தி வக்தார:

தேவையே ஒரு பொருளின் விநியோகத்திற்கு ஆதாரம். தேவை இல்லை என்றால் விநியோகம் இல்லை. (Demand calls for Supply)

ஶ்ரீமந்த: ச்ரமவந்த: ச

சிரமமுடையவனே ஶ்ரீ உடையவனாகிறான்

அதிவ்யயோந்வேக்ஷா ச

பணத்திற்கும் உறவுகளுக்கும் தவறான அணுகுமுறை கூடாது.

ப்ரியவாக்யப்ரதானேன

இனிமையான வார்த்தைகளுக்கு ஒரு பணமும் செலவழிக்க வேண்டாம். பிரிய வார்த்தைகளைப் பேசுவதில் கருமித்தனத்தைக் காட்டாதே.

பஹூனாமல்பசாராணாம்

அனேகர் சேர்ந்தால் பலம் அதிகம். மற்றவர்களுடன் இணைந்து வாழ்தல் வேண்டும்.

அர்தா பவந்தி கச்சந்தி

தேவையெனில் பணத்தைச் செலவழி; ஆனால் இளமையான சக்தியை வீணாக்காதே.

ய: ஸ்வபக்ஷம் பரித்யஜ்ய

துரோகத்திற்கும் விசுவாசமின்மைக்கும் இரட்டை விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

ஏகம் ஹன்யான்ன ஹன்யாத்

சரியான உத்தியே ஆயுதங்களை விட முக்கியம்.

கதே ஷோகோ ந கர்தவ்யோ

எப்போதும் நிகழ்காலத்தில் வாழ்க; கடந்த காலத்திலோ எதிர்காலத்திலோ வாழக் கூடாது.

சுலபா: புருஷா ராஜன்

சிலரே மனதிற்குப் பிடிக்காத உண்மையைப் பேச வல்லவர்கள்.  அதிலும் சிலரே அதைக் கேட்கும் மனம் படைத்தவர்கள்.

த்யஜேதேகம் குலஸ்யார்தே

உடல் முழுவதையும் காப்பாற்ற ஒரு அங்கத்தைத் தியாகம் செய்

இந்கு சம்ஸ்கிருதத்தில் உள்ள சொற்களுக்கான உள்ளார்ந்த அர்த்தம் விளக்கப்பட்டுள்ளது. சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதே சம்ஸ்கிருத உத்தியாகும்.

**

Leave a comment

Leave a comment