இராமன் சுக்ரீவன் கூட்டணி -கிஷ்கிந்தா காண்டம்-ஓர் ஆய்வு – 30 (Post.16,235)

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 16,235

Date uploaded in London –   25 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

(ஆர், சேஷாத்ரிநாதன்) 

இராமன் சுக்ரீவன் கூட்டணி 

सखा बचन सुनि हरषे कृपासिंधु बलसींव।

कारन कवन बसहु बन मोहि कहहु सुग्रीव॥5॥

இராமன் சுக்ரீவனின் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தான்.

. कर्तव्यम् यत् वयस्येन स्निग्धेन च हितेन च |

अनुरूपम् च युक्तम् च कृतम् सुग्रीव तत् त्वया ||

“பலசின்வா” என்ற வார்த்தையின் பயன்பாடு, விதிவிலக்கான வலிமையும் வீரமும் கொண்டவர் என்று பொருள்படும், இது வேண்டுமென்றே இங்கு கொடுகப்பட்டுள்ளது. காரணம் எதிர்காலத்தில் இராமன் சுக்ரீவன் மற்றும் கிஷ்கிந்தையின் படையின் உதவியைப் பெற்று இலங்கையின் அசுரர்களின் பிடியிலிருந்து சீதையை விடுவிப்பதற்கான ஒரு முயற்சியைத்  தொடங்குவான் என்பதன் பின்னணியில், வேண்டுமென்றே இங்கே செய்யப்படுகிறது. இராமன் பலவீனமானவன் என்றும், அசுரர்களின் பிடியிலிருந்து சீதையை மீட்டெடுக்க சுக்ரீவரின் ஆதரவு இல்லாதிருந்தால், அவர் தனது சொந்த பலத்தால் சீதையை விடுவித்திருக்க முடியாது என்றும் வாசகர்களை நம்ப வைக்க இது உதவுகிறது. அவர் நிச்சயமாக அதைச் செய்திருக்க முடியும், ஆனால் இராமன், உயர்ந்தவராக இருந்தாலும், தனது தோள்களில் உள்ள கடமைகளை நிறைவேற்ற தான் ஏற்றுக் கொண்டிருக்கும் ஒரு மனிதனின் பாத்திரத்தை முழுமையாக்க வேண்டியிருந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்,

 எனவே அவர் ஒரு சாதாரண மனிதன்  செயல்படுவது போல் செயல்பட வேண்டியிருந்தது, அதாவது இராமரன் எதிர்கொண்ட சூழ்நிலையில் ஒரு சக்திவாய்ந்த மற்றும் வலிமையான கூட்டாளியின் உதவியை நாடுவது. முதலில் தனது மனைவி எங்கே இருக்கிறாள் என்பதைக் கண்டுபிடிப்பது –  பின்னர் அவள் கடலின் நடுவில் உள்ள ஒரு தொலைதூரத் தீவில் ஒரு கொடூரமான அரக்க மன்னன் இராவணனால் சிறைபிடிக்கப்பட்டிருப்பதை அறிந்து கொள்வது., அங்கு சென்று அவளை விடுவிக்க இரத்தத்தை உறைய வைக்கும் போரை நடத்துவது என்பது எளிய விஷயமல்ல , மேலும் எதிரியின் படையுடன் போர் புரிய இராமனுக்கு  ஒரு படை தேவைப்படும். இது பரந்த அளவிலான விஷயங்களின் ஒரு பகுதியாகும், ஏனென்றால் இறைவன் தனது உண்மையான அடையாளத்தை ஒரு ரகசியமாக வைத்திருக்க வேண்டியிருந்தது, அதற்காக  அவர் மற்ற சாதாரண மனித இளவரசர்களைப் போல சாதாரணமாக செயல்பட்டால் மட்டுமே அது சாத்தியமாகும். 

தேவை ஏற்பட்டால் வேறு யாருடைய உதவியும் இல்லாமல் ஒரு பெரிய அரக்கர் படையையும் சமாளிக்கும் சக்தியும் வலிமையையும் கொண்டவன் என்பதற்குச் சான்றாகப் பஞ்சவடியில் கர தூஷணர்களின் படையைத் துவம்சம் செய்த நிகழ்வே போதும். அங்கு இராமன் இலக்ஷ்மணனின் துணையையும் நாடாமல் தனியாக நின்றுப் போர் செய்ததைப் படித்திருப்போம்..

 அதற்கு முன்னால்  இராமன் மிகச் சிறுவனாக இருந்தபோது விஸ்வாமித்திரரின்  யாகத்தைப் பாதுகாக்க இலக்ஷ்மணனுடன் இணைந்து அரக்கர்கள் மாரீசன் மற்றும் சுபாகு ஆகியோரை சிதற  அடித்ததைப் படித்தோம். 

இந்த வானரங்கள் மற்றும் கரடிகளின் துணையை இராமன் ஏன் நாடுகிறான் என்பதற்கு மற்றொரு முக்கியமான கரணம் ஒன்று உண்டு. இந்த வானரங்கள் மற்றும் கரடிகள் தேவர்களின் மற்றொரு வடிவம். பிரம்மாவின் கட்டளைக்கிணங்க தேவர்கள் இராவணனை அழிப்பதில் இராமனுக்கு உதவியாக இருப்பதற்காக இந்த வடிவத்தில் பூமியில் பிறந்துள்ளனர்.

 பரம்பொருளின் மானிட வடிவமான இராமன் ஒற்றை ஆளாக நின்று அரக்கர்களை எதிர் கொள்ள முடியுமென்றாலும்,  தனக்கு உதவுவதற்காக வந்துள்ள வானர வடிவத்தில் இருக்கும் தேவர்களுக்குப் புகழ் கிடைப்பதற்காக அவர்களுடன் கூட்டணி அமைத்து இராவணனுடன் போரிட்டு வென்றான. ஒரு உன்னதமான பெருந்தன்மையுள்ள பேரரசன் தனது சாதனைக்களுக்கும் வெற்றிகளுக்கும் உள்ள பெருமையையும் மதிப்பையும் தனது அரண்மணை அமைச்சர்கள், இராணுவ தளபதிகள் மற்றும் வீரர்களுக்கும் வழங்குவான்.. காரணம் அரசன் பெற்ற வெற்றி அமைச்சர்கள், ராணுவ  தளபதிகள் மற்றும் வீரர்களில், வலிமை, உழைப்பு மற்றும் திட்டமிடுதலால் கிடைத்த வெற்றி . இராமன் அவர்களுக்குரிய கௌரவத்தை அளித்ததால் அவைகள் பெருமகிழ்ச்சி அடைந்தன என்று உத்தர காண்டத்தில் துளசிதாசர் பாடியுள்ளார்.. 

சுக்ரீவனுடன் மீண்டும் உரையாடல் 

“ஒரு நல்ல நண்பன் என்ன செய்ய வேண்டுமோ அதை நீ செய்கிறாய் என்று கேட்ட பின் சுக்ரீவனிடம்  அவன் காட்டில் வாசிப்பதன் காரணத்தைக் கேட்டான் இராமன். . ஹனுமன் எல்லா விவரங்களையும் சுருக்கமாகச் சொல்லி விட்டார். இலக்ஷ்மணனும் இராமன் சரிதத்தை விரிவாகக் கூறிவிட்டான். ஆனால் இதுவரை சுர்கீவனுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.  ஆனால் இராமனுக்கு சுக்ரீவனைப் பற்றிய விவரங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசை. சுக்ரீவனும் அதற்காகக் காத்திருந்தான். இப்போது இராமனே அதைப் பற்றிக் கேட்டுவிட்டான்.. 

नाथ बालि अरु मैं द्वौ भाइ। प्रीति रही कछु बरनि न जाई॥

मयसुत मायावी तेहि नाऊँ। आवा सो प्रभु हमरें गाऊँ॥1॥

अर्ध राति पुर द्वार पुकारा। बाली रिपु बल सहै न पारा॥

வாலி சுக்ரீவன் பிணக்கின் காரணம் 

அதற்கு சுக்ரீவன் “ஐயனே! வாலியும் நானும் சகோதரர்கள் ஆவோம். எங்கள் இருவருக்குமிடையில் இருந்த அன்பை எவராலும் வர்ணிக்க முடியாது. இந்த நிலையில்  மயன்  என்ற அரக்கனின் மைந்தன் ஒருவன், மாயாவி என்ற பெயருடையோன் ஒரு முறை  எங்கள் ஊருக்குள் வந்தான். அவன் நடு இரவில் வந்து நகரத்தின் கோட்டை வாயிலில் நின்று வாலிக்கு அறைகூவல் விடுத்தான். எதிரியின் அறைகூவலைக் கேட்ட வாலியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

 (ஒருமுறை மேரு மலையில் தவம் செய்யும் போது, ​​பிரம்மாவின் கண்களிலிருந் விழ்ந்த கண்ணீர்த் துளியிலிருந்து ஒரு குரங்கு தோன்றியது., அதன் பெயர் ரிக்ஷர்ஜா. ஒருமுறை ரிக்ஷராஜா தண்ணீரில் தன் நிழலைக் கண்டு அதில் குதித்தான்..தண்ணீரில் விழுந்தவுடனேயே அழகிய பெண்ணாக உருவெடுத்தான். ஒருமுறை இந்திரனும் சூரியனும் அந்தப் பெண்ணைப் பார்த்ததும் அவளது அழகில் மயங்கினர் . இந்திரன் தன் விந்துவை அவள் நெற்றியிலும், சூரியன் தன் விந்துவை அவள் கழுத்திலும் ஊற்றினான். இதனால், அந்தப் பெண் இந்திரனின் விந்துவிலிருந்து வாலி என்றும், சூரியனின் விந்துவிலிருந்து சுக்ரீவன் என்றும் இரண்டு குரங்குகளைப் பெற்றெடுத்தாள். சில நாட்களுக்குப் பிறகு, அந்தப் பெண் மீண்டும் தனது முந்தைய வடிவத்தை எடுத்துக் கொண்டாள்.

பிரம்மாவின் ஆணைப்படி அவரது மகன் கிஷ்கிந்தையை ஆட்சி .செய்ய ஆரம்பித்தார். பிறகு அவர் பிரம்ம லோகம் திரும்ப வாலி கிஷ்கிந்தையை ஆட்சி செய்தான். வாலி மிகவும் சக்தி வாய்ந்தவன். பெரிய மலைகளின் சிகரங்களைப் பிடித்து, அவற்றை வேரோடு பிடுங்கி, தூக்கி எறிந்து, விளையாடுவான்… பெரிய மரங்களை வேரோடு பிடுங்கி எறிவான். ஒருமுறை இராவணன் வஞ்சகத்தால் அவனை  வெல்ல வந்தான். அப்போது வாலி கடலில் சந்தியா தர்ப்பணம் செய்து கொண்டிருந்தான். அதே நிலையில் இராவணனைப் பிடித்து அவன் கைகளுக்கிடையே வைத்து  அழுத்தினான். (ஆறு மாதங்கள் தனது அக்குளில் வைத்து அழுத்திக்கொண்டே இருந்தான்.). அவனை தனது வாலில் கட்டி இழுத்துக் கொண்டு நான்கு சமுத்திரங்களுக்கும் சென்று சந்தியா வந்தனம் செய்தான்.

இந்த நிகழ்வு பற்றி திருஞான சம்பந்தர் தனது வடகுரங்காடுதுரை பதிகத்தில் பாடியுள்ளார் 

“நீலமாமணி நிறத்தரக்கனை இருபது கரத்தோடொல்க

வாலினாற் கட்டிய வாலியார் வழிபட மன்னுகோயில்”

 தனது பூஜைக்கு இடையூறாகச் சண்டையிடுவதற்கு வந்த நீலமாமணி நிறத்தரக்கனான இராவணனை பெரிய முயற்சி ஏதும் செய்யாமளே தனது வாளினால் கட்டினான் வாலி என்று பாடியுள்ளார். 

ஒரு கட்டத்தில் வாலி இராவணனின் மோசமான நிலையைக் கண்டு பரிதாபப்பட்டு அவனுடன் ஒரு நட்பு உடன்படிக்கை செய்தான். அதாவது யாராவது கிஷ்கிந்தை வழியாகச் சென்று இராவணனைத் தாக்கினால் வாலி அவனைப் பாதுகாப்பான். 

பின்னால் அங்கதன் இராவணனைச் சந்திக்கும் பொழுது இதைச் சொல்லி உனக்கு இது நினைவில் இல்லையா? என்று கேட்டதாகவும் சொல்லப்படுகிறது) 

மீண்டும் துளசிதாசர்……………..

धावा बालि देखि सो भागा। मैं पुनि गयउँ बंधु सँग लागा

* गिरिबर गुहाँ पैठ सो जाई। तब बालीं मोहि कहा बुझाई॥

“வாலி மாயாவியை நோக்கி ஓடினான்..அவனோ வாலியைக் கண்டதும் தப்பி ஓடலானான். “

स तु मे भ्रातरम् दृष्ट्वा माम् च दूरात् अवस्थितम् |

असुरो जात संत्रासः प्रदुद्राव तदा भृशम् || 

“நானும் எனது சகோதரனைத் தொடர்ந்து அவன் பின்னாலேயே ஓடினேன். அந்த மாயாவி  ஒரு மலைக் குகைக்குள் சென்று நுழைந்தான். 

अनुयातः च माम् तूर्णम् अयम् भ्राता सुदारुणः |

स तु दृष्ट्वा एव माम् रात्रौ स द्वितीयम् महाबलः ||

 மாயாவிக்கு வாலியைக் கண்டதும் பயம். குகைக்குள் சென்றுவிட்டால் வாலி திரும்பி விடுவான் என நினைத்தான்.மேலும் வாலியின் பின்னால் நானும் ஓடிவருவதை மாயாவி கவனித்து விட்டான். ஒருவேளை குகைக்குள் மாயாவின் நண்பர்கள் இருக்கலாம். அதனால் வாலியை குகைக்குள் அழைத்து சென்றுவிட்டால் அங்கு நண்பர்களின் துணையுடன் வாலியைக் கொன்றுவிடலாம் என்று நினைத்து மாயாவி குகைக்குள் சென்றிருக்கலாம்.  வாலிக்கு அவனது பலத்தின் மீது அபார நம்பிக்கை. அதனால் அவன் எதைப்பற்றியும் சிந்திக்கவில்லை  அப்பொழுது வாலி என்னையழைத்துக் கூறினான்.”

परिखेसु मोहि एक पखवारा। नहिं आवौं तब जानेसु मारा॥3॥

* मास दिवस तहँ रहेउँ खरारी। निसरी रुधिर धार तहँ भारी॥ 

“நான் திரும்பி வருகிறேனா என்று இங்கு தங்கி பதினைந்து நாட்கள் வரை எனக்காகக் காத்திரு. அந்தப் பதினைந்து நாட்களுக்குள் நான் வரவில்லை என்றால் நான் கொல்லப்பட்டதாக நீ எண்ணிக் கொள்” என்றான். இங்கு வாலி परिखेसु मोहि एक पखवारा என்று சொல்கிறான்.  வாலி சுக்ரீவனிடம் பதினைந்து நாட்கள் மட்டும் குகையின் வாசலில் காத்திருக்கச் சொன்னதன்.  காரணம் ‘அதற்குள் நான் வராவிட்டால் தேவையில்லாமல் காத்திருக்க வேண்டாம்’ என்று சொல்வதற்காகவே . வாலி ஒரு வீரன். ஒரு வீரனுக்குத் தெரியும் ஒரு வேலையை எத்தனை நாட்களில் முடிக்க முடியும் என்று. வாலி மாயாவியை பதினைந்து நாட்களுக்குள் கொன்றுவிடலாம் என்று நினைத்திருப்பான். அதனால் சுக்ரீவனிடம் அப்படிச் சொன்னான்.. “ஐயனே! நான் ஒரு மாத காலம் வரை அங்கு தங்கி இருந்தேன். ஒருநாள் அந்தக் குகையின் உள்ளிருந்து இரத்தம் பெருக்கெடுத்து ஓடிவந்தது. வாலி சொன்ன நாட்கள் பதினைந்து ஆனால் சுக்ரீவன் இருந்ததோ முப்பது நாட்கள். இதிலிருந்து சுக்ரீவனுக்கு வாலியின் மீது உள்ள பாசம் தெரியவருகிறது.. 

வால்மீகியின் இராமாயணத்தில் சுக்ரீவன் வாலியுடன் குகைக்குள் செல்ல விரும்பினான். ஆனால் வாலி உள்ளே வரக்கூடாது வெளியில் இருக்கவேண்டும் என்று சத்யம் செய்யச் சொல்லிவிட்டான்.. 

अहत्वा न अस्ति मे शक्तिः प्रति गन्तुम् इतः पुरीम् |

बिल द्वारि प्रतीक्ष त्वम् यावत् एनम् निहन्मि अहम् || ४-१०-१८

ஆத்யாத்ம இராமாயணத்திலும் இதற்கு இணையான ஒரு சுலோகம் உள்ளது

‘इत्युक्त्वाविश्य स गुहां मासमेकं न

निर्ययौ॥ मासादूर्ध्व गुहाद्वारान्निर्गतं रुधिरं बहु।

============================

बालि हतेसि मोहि मारिहि आई। सिला देइ तहँ चलेउँ पराई॥4

मंत्रिन्ह पुर देखा बिनु साईं। दीन्हेउ मोहि राज बरिआईं॥

“மாயாவி வாலியைக் கொன்று விட்டான். இனிவந்து என்னையும்  கொன்று விடுவான் என அஞ்சி அக்குகையின் வாயிலை ஒரு பெரிய பாறையால் மூடிவிட்டு வந்தேன்” “இங்கு அரசன் இல்லாமல் நாடு தவிப்பதை மக்கள் பார்த்தனர். அவர்கள் என்னை நிர்பந்தப் படுத்தி எனக்கு முடி சூட்டி அரசனாக ஆக்கினர்.” என்று சொன்னான் சுக்ரீவன்

 (எதை வைத்து வாலி கொல்லப்பட்டான்  என்று சுக்ரீவன் கருதினான்? இதற்கு வால்மீகி விளக்கம் அளிக்கிறார். 

नर्दताम् असुराणाम् च ध्वनिः मे श्रोत्रम् आगतः |

न रस्तस्य च संग्रामे क्रोशतो अपि स्वनो गुरोः ||

अहम् तु अवगतः बुद्ध्या चिह्नैः तैः भ्रातरम् हतम् |

पिधाय च बिल द्वारम् शिलया गिरि मात्रया || ४-९-१९ 

(குகைக்குள்ளிலிருந்து மாயாவியின் அலறல் சத்தம் பெரிதாகக் கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால் வாலியிடமிருந்து எந்த விதச் சத்தமும் வரவில்லை..அதனால் எனது அண்ணன் இறந்துவிட்டதாகக் கருதி. மாயாவி குகையை விட்டு வெளி வந்துவிடக்கூடாது என்று நினைத்துக் குகையில் வாயிலை பெரிய பாறையைக் கொண்டு மூடிவிட்டு அண்ணணுக்கு வேண்டிய நீர்க்கடன்கள் செய்து முடித்தேன்.” என்றான் சுக்ரீவன்) 

இங்கு இரண்டு விதமான நிலைகள் உள்ளன. சுக்ரீவன் இராமனிடம் गूहमानस्यमे तत्त्वं यलततो मन्सत्रिभि: श्रुतम्‌’ நான் உள்ளே இதுதான் நடந்திருக்கும் என்ற முடிவுக்கு வந்து அதை மந்திரிகளிடம் தெரித்தேன் என்கிறான். 

गूहमानस्य मे तत्त्वं यत्नतो मन्त्रिभिः श्रुतम् ।
ततो ऽहं तैः समागम्य समेतैरभिषेचितः ॥ २० ॥ 

வாலியின் மரணத்தின் உண்மையை மறைக்க விரும்பினேன். ஆனால் அமைச்சர்கள் தங்கள் முயற்சியால் உண்மையை அறிந்து கொண்டனர்.. அமைச்சர்கள் தங்கள் முயற்சியால் தெரிந்து கொண்டனர் என்று சொல்லும்போது, சுக்ரீவன் மறைத்ததாகத் தான் எடுத்துக் கொள்ளவேண்டும்.

உண்மையில்  வாலி மரணிக்க வில்லை.. அது சுக்ரீவனுக்கு தெரியாது. ஆனால் எந்தவிதமான மனநிலையில் சுக்ரீவன் அவ்வாறு சொன்னான் என்று தெரியவில்லை. இங்கு சிரோன்மணி என்ற உரையாசிரியர் சொல்லி இருக்கும் கருத்தாவது

 गूहमानस्येति । तत्त्वं वालिवधं यत्नतो ऽनेकविधोपायैर्गूहमानस्य शत्र्वाक्रमणादिशङ्कया गोप्यमानस्य मे मन्त्रिभिरमात्यैः श्रुतं तेषां संनिधौ मया कथितमित्यर्थः ।

ततस्तस्माद्धेतोः समेतैः तैः मन्त्रिभिः अहमभिषेचितः । 

*”வாலியின் வதை” என்பது, நான் பலவிதமான முயற்சிகளால் மறைக்க முயன்ற ஒரு உண்மை.ஏனெனில், எதிரிகள் தாக்கும் அபாயம்,அரசியல் குழப்பம் போன்ற காரணங்களால் அதை மறைத்து வைத்திருந்தேன்.ஆனால், என் அமைச்சர்கள் (மந்திரிகள்) தங்கள் முயற்சியால் அந்த உண்மையை அறிந்தனர். அவர்கள் முன்னிலையில்,நான் அந்த உண்மையை வெளிப்படையாகக் கூறினேன்.அதன் பிறகு, அவர்கள் என்னுடன் இணைந்து,

என்னை அரசராக முடிசூட்டினர்.”  நாம் துளசி இராமாயணத்தைப் பற்றிச் சொல்லுவதால் இதைப் பற்றி மேலே விவாதிக்கத் தேவை இல்லை.

.. அதே நேரத்தில் ஆத்யாத்ம இராமாயணத்தில் சுக்ரீவன் तोडब्रवं॑ मृतो वाली गुहायां रक्षता हतः எல்லாவற்றையும் அப்படியே சொல்லிவிட்டான்  என்று சொல்லபடுகிறது. 

मंत्रिनह् पुर देखा बिनु साईं கிஷ்கிந்தையில் அரசன் இல்லை. இதைத் தெரிந்து பகைவர்கள் நாட்டின் மீது படை எடுத்து வரலாம் என்று கருதி அமைச்சர்கள் என்னை அரசனாக்கி விட்டனர் இப்படித்தான் வால்மீகி இராமாயணத்தில் வாலியிடம் बलात् अस्मिन् समागम्य मंत्रिभिः पुर वासिभिः || ४-१०-१० சுக்ரீவன் சொல்கிறான் ஆனால் துளசிதாசர் அதைப் பற்றி விரிவாக ஒன்றும் எழுதவில்லை. துளசிதாசர் இங்கு बरिआई॥ என்ற பதப் பிரயோகம் போடுகிறார். இதன் பொருள் அதாவது சுக்ரீவன் ‘எனக்கு அரசனாக வேண்டும் என்ற எண்ணம்/ஆசை இல்லை. ஆனால் அமைச்சர்கள் கட்டாயப்படுத்தி அரசனக்கிவிட்டனர்’ என்று சொல்லவருவதாகச் சொல்லப்படுகிறது.. ஆனால் ஆத்யாத்ம இராமாயணத்தில் இதையே मामनिच्छन्तमप्युत। राज्येडभिषेचनं चक्रु: सर्वे वानरमन्त्रिण: ।’ என்று சொல்லப்படுகிறது.

 சுக்ரீவனுக்கு அரசனாக வேண்டும் என்ற ஆசை வராததற்கு காரணம் என்ன? சகோதரன் இறந்து போன வருத்தம் மற்றும் அவனது மகன் அங்கதன் தானே அந்தப் பதவிக்கு வர வேண்டும் என்ற எண்ணம், ஆனால் அங்கதன் வயதில் மிகச் சிறியவன் . அவனுக்கு அனுபவம் இல்லை. ஆதலால் அவர்கள் அங்கதனை அரசனாக்கச் சம்மதிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. 

இங்கு உரையாசிரியர்கள் சில கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். உண்மையில் அங்கதன் கிஷ்கிந்தையின் அரசனாகிவிட்டால் சுக்ரீவன் காட்டிற்குச் சென்று இருக்கமாட்டான். இராமனைச் சந்தித்து இருக்கமாட்டான். இராவண வதமும் நிகழ்ந்து இருக்காது. இராவணன் பிரம்மாவிடம் என்ன வரம் வாங்கினான்? म काहू के मरहिं न मारें। बानर मनुज जाति दुइ बारें॥  எனது மரணம் மனிதன், வானரம் இவர்களைத் தவிர வேறு யாராலும் நிகழக் கூடாது என்று தானே வாங்கினான். ஆக  இராவண வதம் நிகழக் காரணம் இராமன் என்ற மனிதனும் சுக்ரீவன் என்ற வானரமும்.. அதற்காக இராமன் வனம் செல்லவேண்டியது காலத்தின் கட்டாயம்.

 ***

Leave a comment

Leave a comment