WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,239
Date uploaded in London – 26 September 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஹரே கிருஷ்ணா மந்திரம் காப்பாற்றிய நேபாள தொழிலாளி!
ச. நாகராஜன்
5-9-2026 டைம்ஸ் ஆஃப் இந்தியா தரும் செய்தி இது.
நேபாளத்தில், த்ரிசூலியில் உள்ள ஹைட்ரோபவர் ப்ராஜெக்டில் வேலை பார்த்து வந்தவர் முப்பது வயதான சஞ்சய் ஷா.
கண்ட்ரோல் ரூமில் வேலை பார்த்து வந்த போது தான் அந்த அசம்பாவிதம் நடைபெற்றது. தண்ணீர் வெள்ளமாக குகைக்குள் வர அனைவரும் அங்கு சிக்கிக் கொண்டனர்.
எல்லோரையும் உடனே ஓடித் தப்பிக்குமாறு கூவிய அவர் அது தனது கடமை என்று நினைத்தார். ஆனால் அவரால் தப்பிக்க முடியவில்லை. ஒன்பது நாட்கள் இருள் குகையில் அடைபட்டுக் கிடந்தார்.
ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா என்று இடைவிடாமல் ஜபித்துக் கொண்டே இருந்தார்.
குகையோ வெகு நீளமானது. வெள்ள நீரோ அனைவரையும் அடித்துக் கொண்டு குகைக்குள் பாய்ந்திருந்தது.
இன்னொரு தொழிலாளி கபீர் மஹாஜன். அவருக்கு வயது 45. அந்த ப்ராஜெக்டில் அவர் மெகானிகல் சூபர்வைஸர்.
இந்த இருவரும் ஒன்பது நாட்களுக்குப் பிறகு கோகுலாஷ்டமி அன்று வெள்ளிக்கிழமை காப்பாற்றப்பட்டனர்.
மீட்புக் குழு காத்மாண்டுவில் சௌனியில் உள்ள நேபாள் ஆர்மி ஹாஸ்பிடலுக்கு கொண்டு செல்லப்பட்டார். ஷாவோ உள்ளூரிலுள்ள த்ரிசூலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இன்னொரு குகையில் வேலை பார்த்த சிலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
அங்குள்ள குகைகளில் சுமார் 900 பேர்கள் சிக்கி இருக்கக்கூடும் என்று அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். 11 ஹைட்ரோபவர் ப்ராஜெக்ட் குகைகளில் வேலை பார்த்த 600 பேர்களைக் காணோம் என்று பவர் ப்ரொட்யூஸர்ஸ் சங்கம் தெரிவித்துள்ளது.
திரிசூலி ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளமானது 2026, ஆகஸ்ட் 26ம் தேதி
அந்தப் பகுதியையே அலற வைத்தது.
பிரம்மாண்டமான பனிப்பாறைத் தாக்குதலால் சுமார் 1287 பேர் கொல்லப்பட்டனர். திபெத், சைனா எல்லையில் இருந்த வீடுகள், பள்ளிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.
மொத்தமாக 5083 பேர்களைக் காணோம் என்று கூறப்படுகிறது.
திபெத்தில் 21 பேர் மரணமடைந்தனர். 541 பேரை அங்கு காணோம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் ஹரே கிருஷ்ணா மந்திரத்தை ஜபித்தவாறே ஒன்பது நாட்கள் இருந்த சஞ்சய் ஷா உயிருட சந்திரனைச் சுற்றிப் பறந்த பெண்மணி கிறிஸ்டினா குக்!ன் மீண்டு வந்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியதோடு அந்த மந்திரத்தின் மஹிமைய உலகிற்கு உணர்த்தியுள்ளது.

**