
Written by London Swaminathan
Post No. 16,249
Date uploaded in London – 28 September 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கபீர்தாசர் (Kabir Das) 15-ஆம் நூற்றாண்டில் (கி.பி. 1440 – 1518) வாரணாசியில் வாழ்ந்த புகழ்பெற்ற இந்திய ஆன்மிகக் கவிஞரும், பக்தி இயக்கப் பெரியாரும் ஆவார்.இஸ்லாமிய நெசவாளர் குடும்பத்தில் வளர்க்கப்பட்டார்.குரு: ராமானந்தர்.சமய ஒற்றுமையை போதித்தார் .
கபீர்தாசர் பொன்மொழிகள்
பண்டிகை தினங்கள்
அக். 2-காந்தி ஜெயந்தி;10-மஹாளய அமாவாஸ்யை; 11- நவராத்ரி ஆரம்பம் ; 18-துர்கா பூஜை ; 19-சரஸ்வதி பூஜை,
20-விஜய தசமி /தசரா; 21- மத்வ ஜயந்தி, 28/29- கர்வா சவுத் .
அமாவாஸ்யை/- அக்.10; பூர்ணிமா/-25;
ஏகாதசி- ஹிந்து உண்ணாவிரத நாட்கள் – 6 & 22;
சுப முகூர்த்த தினங்கள் – அக்டோபர் 25 & 30, 2026.
***

அக்டோபர் 1 வியாழக் கிழமை
உன் பாதையில் முள் விதைப்பவனுக்கு நீ பூவை விதை;
உனக்கு முள் பூவாகும்; அவனுக்கு பூ சூலமாகும் .
***
அக்டோபர் 2 வெள்ளிக் கிழமை
சலனமே இல்லாத மனதே சங்கீதம் ; அந்த மனதுக்கு அப்பால் வருவது தியானம்; அது மூலத்துக்கு இழுத்துச் செல்லும்;
அதுதான் எல்லா ஒலிகளுக்கும் ஆதாரம்
***
அக்டோபர் 3 சனிக்கிழமை
ஆ , ரகசிய சொல்லை எப்படி விளக்குவது என்று தெரியவில்லையே ; அவன் இது இல்லை, அவன் அது இல்லை என்று சொல்ல முடியுமா ? அவன் என்னுள்ளே இருக்கிறான் என்றால் உலகம் நம்பாது; அவன் என்னிடம் இல்லை என்று சொன்னால் அது பொய் ஆகும்; உள்ளுக்கும் வெளிக்கும் இடையே பிரிவுச் சுவர் இல்லை; அவன் உருவமுள்ளவன் ; உருவமில்லாதவன் ; அவனை வருணிக்க வார்த்தைகளே கிடைக்கவில்லை
***
அக்டோபர் 4 ஞாயிற்றுக் கிழமை
என் பெயர் கபீர் இதை உலகம் அறியும்
மூன்றுலகிலும் என் பெயர் உண்டு ;
என் வீடு ஆனந்த மயம்
***
அக்டோபர் 5 திங்கட் கிழமை
ஓ கபீர்! பொய்யுரை பேசாதே,
ஓரிமைப்பொழுதில் நடப்பதை யார் அறிவார் ?
***

அக்டோபர் 6 செவ்வாய்க்கிழமை
ஓ கபீர்! நீர்த்துளி கடலில் கலந்ததை யாவரும் அறிவர்;
கடல், துளியில் கலந்ததை சிலரே அறிவர்!
***
அக்டோபர் 7 புதன் கிழமை
புறக் கண்கள் புதைந்தன, அகக் கண்களும் அழிந்தன
எல்லாம் போனபின் என்னதான் தெரியும்?
***
அக்டோபர் 8 வியாழக் கிழமை
“விரலில் உருளுமே மணி அக்கு, நாவில் புரளுமே செம்மந்திரம்
வீணில் திரியுமே மனம் அங்கு, நவில்வரே இதனை செபமென்று”
***
அக்டோபர் 9 வெள்ளிக் கிழமை
தண்ணீரில் ஓடும் மீனுக்கு தாகம் எடுக்கிறது என்று சொல்லும்போது நான் சிரிக்கிறேன்;
கடவுளைக் காண்பதற்காக யாத்திரை போகிறோம் என்று சொல்லும்போது நான் சிரிக்கிறேன்..
***

அக்டோபர் 10 சனிக்கிழமை
“நான் எப்போது இருந்தேனோ, அப்போது இறைவன் இல்லை; இப்போது இறைவன் இருக்கிறான், அதனால் ‘நான்’ (அகங்காரம்) மறைந்துவிட்டேன்.”
• பொருள்: மனிதனின் மனதில் ‘நான்’ என்கிற அகங்காரமும் ஆணவமும் இருக்கும் வரை அங்கே இறை சிந்தனைக்கு இடமில்லை. அகந்தை அழியும் போதே இறைவனைக் காண முடியும்.
***
அக்டோபர் 11 ஞாயிற்றுக் கிழமை
“நாளை செய்ய வேண்டியதை இன்று செய்; இன்று செய்ய வேண்டியதை இப்பொழுதே செய். அடுத்த கணத்தில் என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்?”
***
அக்டோபர் 12 திங்கட் கிழமை
“உன்னுடைய அகந்தையைத் தூர எறிந்துவிட்டு, பிறருக்குக் கேட்கும் போது இன்பம் தரும் இனிமையான சொற்களைப் பேசு. அது கேட்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும், உன்னுடைய மனதிற்கும் குளிர்ச்சியைத் தரும்.”
***
அக்டோபர் 13 செவ்வாய்க்கிழமை
“பெரிய பெரிய புத்தகங்களைப் படித்து இந்த உலகத்தில் பலர் மடிந்துவிட்டனர். ஆனால் யாரும் உண்மையான பண்டிதர் (ஞானி) ஆகவில்லை. எவன் ஒருவன் ‘அன்பு’ என்ற இரண்டெழுத்து மந்திரத்தை முழுமையாக உணர்கிறானோ, அவனே உண்மையான ஞானி.”
***
அக்டோபர் 14 புதன் கிழமை
என்னுள்ளே சூரியன் இருக்கிறான்; சந்திரனும் கூடத்தான் !
***
அக்டோபர் 15 வியாழக் கிழமை
கங்கையும் யமுனையும் சங்கமம் ஆவது போல அன்பும் பற்றின்மையும் கலக்கும் இதயம் உடையவனே உண்மையான பக்தன்
***

அக்டோபர் 16 வெள்ளிக் கிழமை
ஒவ்வொரு வீட்டிலும் கடலே இருக்கிறது ;
தண்ணீரைத் தேடி அலைவது ஏன் ?
தாகம் உள்ளவன் எப்படியாவது குடிப்பான்.
***
அக்டோபர் 17 சனிக்கிழமை
நீ எங்கே இருக்கிறாயோ , அதுதான் ஆரம்பம் ; அதுதான் வாசல்
***
அக்டோபர் 18 ஞாயிற்றுக் கிழமை
நான் கெட்டவன் ஒருவனைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டேன் ; யாரும் கிடைக்கவில்லை !
என்னை நானே பார்த்துக்கொண்டபோது எல்லோரையும்விட கெட்டவன் நானே என்று அறிந்தேன் .
****
அக்டோபர் 19 திங்கட் கிழமை
ஒரு யாத்திரை போக வேண்டமென்ற அவா உள்ளத்தில் பெருக்கெடுத்தது ;
மூன்று நாள் சும்மா உடகார்ந்து இருந்தேன்; கடவுள் என்னிடம் வந்துவிட்டார்
xxxx
அக்டோபர் 20 செவ்வாய்க்கிழமை
நான் கண்பார்வையற்ற குருடர்கள் ஊரில் கண்ணாடி விற்றுக்கொண்டு இருக்கிறேன்
xxxx

அக்டோபர் 21 புதன் கிழமை
மனதில் அமைதி நிலவட்டும்; புலன்களின் செயல்பாட்டில் அமைதி நிலவட்டும்; உடலின் செயல்பாட்டில் அமைதி நிலவட்டும்;
ஒன்றுமே செய்யாதீர்கள் ; அப்போது உங்கள் உள்ளத்தில் உண்மை வெளிப்படும்.
xxxx
அக்டோபர் 22 வியாழக் கிழமை
உங்கள் ஆத்மா பேசுவதைக் கேளுங்கள்; அதைக் கேட்டால் உண்மையைக் கண்டுபிடிப்பீர்கள்
***
அக்டோபர் 23 வெள்ளிக் கிழமை
என் உள்ளத்தில் விளக்கு ஒளியைக் கண்டேன்; எல்லா இருளும் பறந்தோடிவிட்டது
***
அக்டோபர் 24 சனிக்கிழமை
யார் புண்ய புருஷன் ? மற்றவர்களின் கஷ்டங்களை புரிந்துகொண்டவனே புனிதன் .
***
அக்டோபர் 25 ஞாயிற்றுக் கிழமை
நாக்கின் மீது கட்டுப்பட்டு இல்லாவிட்டால் கற்றறிந்தவனின் அறிவு பயனற்றதே .
***

அக்டோபர் 26 திங்கட் கிழமை
என் இதயத்தில் அன்பு என்னும் போதை ஏறிவிட்டது ; எனக்குப் பேசவே பிடிக்கவில்லை .
***
அக்டோபர் 27 செவ்வாய்க்கிழமை
हिन्दू कहत,राम हमारा, मुसलमान रहमाना ।
आपस में दौऊ लड़ै मरत हैं, मरम कोई नहिं जाना ।
இந்துக்கள் ராமனைப் போற்றுகிறார்கள் ;
முஸ்லீம்கள் ரஹீமைப் போற்றுகிறார்கள் ;
பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் கொல்கிறார்கள் ;
உண்மைப்பொருளை அறியவில்லையே !
***
அக்டோபர் 28 புதன் கிழமை
“साधो, देखो जग बौराना ।
साँची कही तो मारन धावै, झूठे जग पतियाना ।
சாதுக்களே !உலகம் பைத்திய மயமாயிருக்கிறது; நான் உண்மையைச் சொன்னால் என்னை அடித்து உதைக்கிறார்கள் ;
பொய் சொன்னால் என்னை நம்புகிறார்கள்.
***
அக்டோபர் 29 வியாழக் கிழமை
“உயிரோடு இருக்கும்போதுதான் ஆன்மீகச் செயல்களில் ஈடுபட முடியும், விழிப்புடன் இருக்க முடியும்; இறந்த பிறகு விடுதலை கிடைக்கும் என்பது வெறும் கனவு.”
***
அக்டோபர் 30 வெள்ளிக் கிழமை
யார் உண்மை குரு ? உருவமற்ற இறைவனை அவன் உங்கள் கண்களுக்கு முன்னே காட்ட வேண்டும் சடங்குகள் இல்லாத எளிய வழியைச் சொல்ல வேண்டும்; வீட்டின் கதவுகளை மூடிவிட்டு மூச்சைப் பிடித்து , உலகத்தையே துறந்துவிட்டு என்று சொல்லக் கூடாது; நீங்கள் செய்யும் வேலைகளுக்கு இடையே மனது அவனை நாடும்போது அவனைக் காணச் செய்ய வேண்டும் ; எப்போதும் ஆனந்த நிலையில் இருக்கச் செய்ய வேண்டும்
***
அக்டோபர் 31 சனிக்கிழமை
நான் உண்மை கூறினால் ஒருவரும் கேட்கவில்லை ;
உலகம் பொய்யனை நம்புகிறது
இந்தத் துணியின் விலை 5 டகா
ஆனால் அவனுக்கு 7 டகா கிடைக்கிறது.
–SUBHAM—
TAGS- அக்டோபர் 2026 காலண்டர் , கபீர்தாசர் பொன்மொழிகள்