
Written by London Swaminathan
Post No. 16,263
Date uploaded in London – 2 October 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 72
பத்து கேள்விகள் வரிசையில் இது 72-ஆவது பதிவு; முதல் 71 பதிவுகளின் பட்டியல் இறுதியில் உள்ளது.
வில்லிபுத்தூரில் குடியேறிய மறையவர்களுள் முகுந்தபட்டர் என்னும் முன்குடுமிச் சோழிய பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் பதுமவல்லி என்னும் மங்கை நல்லாளை மணந்தார்; அவர்களுக்குப் பிறந்தவரே பெரியாழ்வார். அப்பொழுது பாண்டிய நாட்டில் வல்லபதேவன் என்னும் அரசன் செங்கோலோச்சி வந்தான். உண்மைப் பொருளை உணர, அரசன் தனது அரியணைக்கு முன்புறத்தில் ஒரு தோரணக் கம்பத்தை நட்டு, பொற்கிழியை அக்கம்பத்தில் கட்டித் தொங்கவிட்டு, ‘தாம் கூறும் உண்மைப் பொருளால் இப்பொற்கிழி தானே அறுந்துவிழும்படி எவர் செய்கின்றாரோ அவருக்கு இப்பொற்கிழி உரியதாம்’என்று எல்லா இடங்களுக்கும் பறையறைந்தரர் ;பலரும் முயன்று தோற்றனர் ; பெரியாழ்வார் வெற்றி கண்டார் .அவரது சொற்பொழிவினைக் கேட்டு அவருக்கு பட்டர்பிரான் என்ற பாதத்தை வழங்கி மதுரை நகரில் யானை மீது பவனி வரச் செய்தான் பாண்டிய மன்னன்.
இவருக்கு வழங்கும் வேறு பெயர்கள்:1. பெரியாழ்வார், 2. பட்டர்பிரான், 3. ஸ்ரீ வில்லிபுத்தூர்கோன், 4. கிழியறுத்தான், 5. புதுவைக்கோன். பெரியாழ்வாரின் காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு (கி.பி. 785 – 845). இவர் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர்; பாடிய பிரபந்தங்கள்: நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் முதல் ஆயிரத்தில் இடம் பெற்றுள்ளன. • திருப்பல்லாண்டு (12 பாடல்கள்): இது காப்புப் பாடலாகும். திவ்வியப் பிரபந்தத்தின் தொடக்கமாக அமைகிறது.
• பெரியாழ்வார் திருமொழி (461 பாடல்கள்): கண்ணபிரானின் பிறப்பு முதல் அவனது லீலைகள் அனைத்தையும் பிள்ளைத்தமிழ் நோக்கில், யசோதை தாயின் பாவத்தில் பாடியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் பிள்ளைத்தமிழ் இலக்கியத்திற்கு வித்திட்டவர் பெரியாழ்வாரே ஆவார்.

1
முதல் பாசுரம் எப்படித் துவங்குகிறது ?
2
மதுரைக் காஞ்சி என்னும் சங்கத் தமிழ் நூலில் மதுரையில் நடந்த ஒணம் விழா வருகிறது; அதை பெரியாழ்வார் எப்படிக்குறிப்பிடுகிறார்?
3
கண்ணன் குழந்தையாக இருந்தபோது வாயைத் திறக்கச் சொன்ன யசோதை கண்ட காட்சி என்ன ?
4
அந்தக் காலத்தில் எல்லோரும் சுறாமீன் வடிவக் காதணிகளை அணிந்தனர் ; இதை பெரியாழ்வாரும் பாடினாரா ?
5

தாலாட்டுப் பாடல் பாடும் பெரியாழ்வார் கண்ணனும் அர்ஜுனனும் யமலோகத்திலிருந்து அந்தணன் ஒருவனின் பிள்ளைகளை அழைத்துவர கிருஷ்ண பரமாத்மா செய்த SPACE TRAVEL ஸ்பேஸ் டிராவலை- விண்வெளிப்பயணத்தை– எந்தப்பாடலில் குறிப்பிட்டு EINSTEIN ஐன்ஸ்டைன் சொன்னது தவறு என்று காட்டுகிறார் ?
6
கண்ணன் குழந்தையாக இருந்த, தளர் நடைப்பருவத்தில், கழுத்தில் அணிந்த CHAIN செயின் பற்றி பெரியாழ்வார் என்ன விநோதச் செய்தியை நமக்கு அளிக்கிறார் ?
7
அசுரர் மன்னன் மஹாபலி செய்த யாகத்தில் பிராமண குரு சுக்கிராச்சாரியார் தானம் கொடுக்காதே என்று தடுக்க, கிண்டியில் வண்டாக நுழைந்த சுக்கிராச்சாரியார் கண்ணை வாமனன் குத்திய கதை அச்சோ பருவத்தில் எந்தப் பாடலில் வருகிறது?
8
பெரியாழ்வார் ஒரு அற்புதத்தைக் கண்டதாகப் பாடுகிறார்; அவர் என்ன அற்புதத்தைக் கண்டாராம் ?
9
கண்ணன் செய்யும் சேட்டைகளை எழுதினால் அது ஒரு புஸ்தகமாக பெருகிவிடும் என்று பெரியாழ்வார் புகார் செய்தாரா ?
10
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் என்று பெரியாழ்வார் அட்வான்ஸ் ரிசேர்வேஷன் செய்கிறாரே ; அது என்ன அட்வான்ஸ் புக்கிங்?
********************************


விடைகள்
1.பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
சேவடி செவ்வி திருக்காப்பு 1
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு;
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு;
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு;
படை போர் புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.
***
2.எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்
ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திரு
வோணத் திருவிழவில்
அந்தியம் போதில் அரியுரு ஆகி
அரியை அழித்தவனைப்
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்
தாண்டு என்று பாடுதுமே
ஏழெ ஏழு தலைமுறைகளாக எம்பெருமானுக்குத் தொண்டு செய்து வருவதாகவும், நரசிம்ம அவதாரம் எடுத்தவனைப் பல்லாண்டு பாடி வாழ்த்துவதாகவும் இப்பாசுரம் விளக்குகிறது.
***
3.”கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர்
பைய ஆட்டிப் பசுஞ் சிறு மஞ்சளால்
ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே”
விளக்கம:
யசோதை கண்ணன் குழந்தையின் கை, கால்களை நீட்டி மடக்கிக் கொடுத்து (உருவிவிட்டு).
அகன்ற பெரிய கொப்பரை அல்லது பாத்திரத்தில் (கடாரம்) காய்ச்சப்பட்ட வெந்நீரைச் பதமாகத் தணித்து.
பச்சையான சிறிய மஞ்சள் கிழங்கைக் கொண்டு குழந்தையின் மெல்லிய நாவைச் சுத்தமாக வழிக்கும்போது.
குழந்தை தன் வாயைத் திறந்தவுடன்.அந்தப் பிள்ளையின் (கண்ணனின்) சிறிய வாயின் உள்ளே ஏழு உலகங்களையும் (14 உலகங்கள் மற்றும் பிரபஞ்சத்தை) தாய் யசோதை வியப்புடன் கண்டாள்.
***
4.ஆமாம் அவர் காதுகளில் மகரக்குழைகள் இருந்தன. இதை இன்றும் பண்டரீபுர பாண்டுரங்கனின் காதுகளில் காணலாம் .
மண்ணும் மலையும் கடலும் உலகு ஏழும்
உண்ணுந் திறத்து மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு
வண்ணம் எழில்கொள் மகரக்குழை இவை
திண்ணம் இருந்தவா காணீரே
சேயிழையீர் வந்து காணீரே
***
5.துப்பு உடை ஆயர்கள் தம் சொல் வழுவாது ஒருகால்
தூய கருங்குழல் நற் தோகைமயில் அனைய
நப்பினைதன் திறமா நல் விடை ஏழ் அவிய
நல்ல திறல் உடைய நாதனும் ஆனவனே
தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத்
தனி ஒரு தேர் கடவித்தாயொடு கூட்டிய என்
அப்ப எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே
***
6.செக்கரிடை நுனிக் கொம்பில் தோன்றும் சிறுபிறை முளை போல,
நக்க செந்துவர் வாய்த் திண்ணை மீதே நளிர் வெண் பல் முளை இலக,
அக்கு வடமுடுத்து ஆமைத் தாலி பூண்ட அனந்த சயனன்,
தக்க மாமணி வண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ.
சங்குமணி வடத்தைத் திருவரையில் தரித்து ஆமை வடிவத் தாலியைக் கழுத்தில் அணிந்தானாம் !
***
7.மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியிற்
தக்கது இது அன்று என்று தானம் விலக்கிய
சுக்கிரன் கண்ணைத் துரும்பாற் கிளறிய
சக்கரக் கையனே அச்சோ அச்சோ
சங்கம் இடத்தானே அச்சோ அச்சோ (7)
***
8.புவியுள் நான் கண்டது ஒர் அற்புதம் கேளீர்
பூணி மேய்க்கும் இளங் கோவலர் கூட்டத்து,
அவையுள் நாகத்தணையான் குழலூத
அமர லோகத்தளவும் சென்று இசைப்ப,
அவி உணா மறந்து வானவர் எல்லாம்
ஆயர் பாடி நிறையப் புகுந்து ஈண்டி,
செவி உணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து
கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே.
பொருள்
இந்த பூமியில் நான் கண்ட ஒரு ஆச்சரியத்தை கேளுங்கள் ; கன்றுகள் மேய்கிற ஆயர்குல பாலர்கள் அதிகம் உள்ள கூட்டத்தில் கண்ணன் குழலை ஊத (அதன் சப்தமானது) தேவ லோகம் அளவும் சென்று ஒலிக்க எல்லா தேவர்களும், யாகத்தில் கிடைக்கும் ஹவிஸ்தனை உண்ண மறந்து, திருவாய்ப்பாடியானது நிறையும்படி வந்து நெருங்கி குழலோசையின் இனிய ரசத்தை உட்கொண்டு உள்ளம் களித்து பசு மேய்க்கும் கண்ணனை பின் தொடர்ந்து ஒரு நொடி கூட விட முடியாதவர்களாக இருந்தார்கள் .
***
9.ஆமாம்; பெண்களுக்குப் பின்னால் சென்று அவர்களுடைய ஆடைகளைப் பிடித்து இழுத்து நீ செய்தவற்றையும் பின்னால் சாக்குப்போக்கு சொன்னதையும் எழுதினால் அது பெரிய புத்தகமாக முடியும்; இது எனக்குத் தெரியுமாதலால் பால் தரவே பயப்படுகிறேன்:
மையார் கண் மட ஆய்ச்சியர் மக்களை
மையன்மை செய்து அவர் பின்போய்
கொய் ஆர் பூந்துகில் பற்றித் தனி நின்று
பொய்யா உன்னைப் புறம்பல பேசுவ
புத்தகத்துக்கு உள கேட்டேன் ;
ஐயா உன்னை அறிந்து கொண்டேன் , உனக்கு
அஞ்சுவன் அம்மம் தரவே
***
10.துப்புடையாரை அடைவதெல்லாம்
சோர்விடத்துத் துணையாவ ரென்றே
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன்
ஆனைக்குநீ அருள்செய் தமையால்
எய்ப்புஎன்னை வந்துநலியும்போது அங்கு
ஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்
அரங்கத் தரவணைப் பள்ளியானே!
பொருள்
உன்னை நாடி வருவோரை நீ காப்பாறுகிறாய்; ஒரு காலத்தில் யானையைக் காப்பாறினாய் ; திருவரங்கத்தில் பள்ளிகொண்டுள்ள பெருமாளே ! இறுதிக் காலாத்தில் மூச்சு இளைத்து நலியும்போது உன்னை நினைக்கக்கூட சக்தியிராது; ஆகையால் இப்போதே உன்னிடம் சொல்லிவிடுகிறேன்; யமதூதர்கள் வரும்போது, நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்.
10 கேள்விகள் List
1.காரைக்கால் அம்மையார் பற்றி 10 கேள்விகள்! (Post.15,992)18/7
திருமந்திரம் பற்றி 10 கேள்விகள் (Post No.16,010)23/7
பெரிய புராணம் பற்றி 10 கேள்விகள் (Post.16,012)24/7
திருமுருகாற்றுப்படை பற்றி 10 கேள்விகள் (Post.16,018) 26/7
கந்த புராணம் பற்றி 10 கேள்விகள் (Post.16,024)27/7
முக்கூடற் பள்ளு பற்றி 10 கேள்விகள் (Post No.16,027) 28/7
குற்றாலக் குறவஞ்சி பற்றி 10 கேள்விகள் (Post No.160,30)29/7
அஷ்டாவக்ர கீதை பற்றி 10 கேள்விகள் (Post.16,036) 30/7
கீத கோவிந்தம் நூல் பற்றி 10 கேள்விகள் (Post.16,039)31/7
****
10.பாரதியின் குயில்பாட்டு பற்றி 10 கேள்விகள் (Post.16,042) 1/8
அறப்பளீச்சுர சதகம் பற்றி 10 கேள்விகள் (Post.16,046) 2/8
கலிங்கத்துப் பரணி பற்றி 10 கேள்விகள் (Post No.16,050) 3/8
திருவள்ளுவமாலை பற்றி 10 கேள்விகள் (Post.16,052)4/8
பட்டினத்தார் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,055) 5/8
பஜ கோவிந்தம் பாடல் பற்றி 10 கேள்விகள் (Post.16,062)7/8
நாலடியார் நூல்பற்றி 10 கேள்விகள் (Post No.16,067)8/8
தாயுமானவர் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,059)6/8
சீவக சிந்தாமணி பற்றி 10 கேள்விகள் (Post.16,070)9/8
முத்தொள்ளாயிரம் நூல் பற்றி 10 கேள்விகள் (Post.16,074)
20.மணிமேகலைக் காப்பியம் பற்றி 10 கேள்விகள் (Post.16,077)11/8
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,081)12/8
பாண்டியர் செப்பேடுகள் பற்றி 10 கேள்விகள் (Post No.16,089)14/8
பாண்டியர் செப்பேடுகள் பற்றி மேலும் 10 கேள்விகள் (Post.16,092)15/8
பாரதி பாட்டில் 16 நாடுகள் பற்றி 10 கேள்விகள் (Post.16,095) 16/8
மலைபடு கடாம் பற்றி 10 கேள்விகள் (Post No.16,102) 18/8
ஆய் குல/ யாதவ குல செப்பேடுகள் பற்றி 10 கேள்விகள் (Post No.16,107) 19/8
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,085) 13/8
கொங்கு மண்டல சதகம் பற்றி 10 கேள்விகள் (Post No.16,100) 17/8
திருவருட்பா நூல் பற்றி 10 கேள்விகள் (Post.16,109)20/8
30.மஹாபாரதம் பற்றி 10 கேள்விகள் (Post No.16,112) 21/8
சர்ச்சைக்குரிய விவேக சிந்தாமணி பற்றி 10 கேள்விகள் (Post.16,118)22/8
பாபநாசம் சிவன் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post No.16,122)23/8
பார்ப்பனரை வசைபாடிய பாரதிதாசன் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,123)24/8
ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் அற்புதத் தமிழ் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,128) 25/8
அருணாசலக் கவிராயர் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,131)26/8
முத்துத் தாண்டவர் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,134)27/8
புத்த மத வேதப் புஸ்தகம் தம்மபதத்தில்10 கேள்விகள் (Post.16,137)28/8
மாரிமுத்தா பிள்ளை பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,141)29/8
ஆண்டாள் அருளிய திருப்பாவையில்10 கேள்விகள் (Post.16,145) 30/8
40.பாஸா நாடகங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,150)31/8
****
நளவெண்பாவில் 10 கேள்விகள் (Post.16,153)1/9/2026
காளமேகப்புலவர் பாடல்களில் 10 கேள்விகள் (Post.16,156)2/9
ஒட்டக்கூத்தர் பாடல்களில் 10 கேள்விகள் (Post.16,160)3/9
அதிவீர ராம பாண்டியன் நூல்கள் பற்றி 10 கேள்விகள்(Post.16,164)4/9
உலகநீதி நூலில் 10 கேள்விகள் (Post No.16,167) 5/9
சிவப்பிரகாசர் நூல்களில் 10 கேள்விகள் (Post.16,171)6/9
சங்க கால ஔவையார் பாடல்களில் 10 கேள்விகள் (Post.16,174)7/9
ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர் படைப்புகள் பற்றி 10 கேள்விகள் (Post.16,177)8/9
முத்து சுவாமி தீட்சிதர் கிருதிகள் பற்றி 10 கேள்விகள் (Post.16,180)9/9
50.சதாசிவ பிரம்மேந்திராள் பாடல்களில் 10 கேள்விகள் (Post.16,185)10/9
பல்லவர் செப்பேடுகளில் முதல் 10 கேள்விகள் (Post.16,189)11/9
பல்லவர் செப்பேடுகளில் இரண்டாவது 10 கேள்விகள் (Post No.16,192)12/9
பல்லவர் செப்பேடுகள் பற்றி மூன்றாவது 10 கேள்விகள் (Post.16,195)13/9
பல்லவர் செப்பேடுகள் பற்றி நான்காவது 10 கேள்விகள் (Post.16,198)14/9
பல்லவர் செப்பேடுகள் பற்றி ஐந்தாவது 10 கேள்விகள் (Post.16,200)15/9
பல்லவர் செப்பேடுகள் பற்றி ஆறாவது 10 கேள்விகள் (Post.16,204)16/9
பல்லவர் செப்பேடுகள் பற்றி ஏழாவது 10 கேள்விகள் (Post.16,207)17/9
பல்லவர் செப்பேடுகள் பற்றி எட்டாவது 10 கேள்விகள் விடைகள் (Post.16,211)18/9
பல்லவர் செப்பேடுகள் பற்றி ஒன்பதாவது 10 கேள்விகள் (Post.16,214)19/9
60.ஆன்மீக திரைப்படங்களில் (பிளாக் அண்ட் ஒயிட்) பத்து கேள்விகள் (Post.16,218)20/9
முருகனைப் போற்றும் திரைப்படங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,222)21/9
அலைமகள், கலைமகள், மலைமகள், மீதான திரைப்படங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,224)22/9
மஹாபாரதம், ராமாயணம் திரைப்படங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,228)23/9
கண்ணன்/ கிருஷ்ணன் மீதான திரைப்படங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,233)24/9
ஐயப்பன், குசேலர் திரைப்படங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,237)25/9
திரைப்படங்களில் பிரபலங்கள் சோ, எம். எஸ். பற்றி 10 கேள்விகள் (Post.16,240)26/9
திருக்குறளில் தெய்வங்கள் 10 கேள்விகள் (Post No.16,244)27/9
மாணிக்கவாசகரின் சிவபுராணத்தில் 10 கேள்விகள் (Post.16,248)28/9
திருமங்கை ஆழ்வார் பாடல்களில் 10 கேள்விகள் (Post.16,252)29/9
70.நம்மாழ்வார் பாசுரங்களில் 10 கேள்விகள் (Post No.16,256)30/9
71.குலசேகர ஆழ்வார் பாசுரங்களில் 10 கேள்விகள் (Post.16,259)
–SUBHAM—
TAGS– பெரியாழ்வார், பாசுரங்கள், 10 கேள்விகள் , அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன், புவியுள் நான் கண்டது ஒர் அற்புதம் கேளீர்