
Written by London Swaminathan
Post No. 16,266
Date uploaded in London – 3 October 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சோழநாட்டில் திருமண்டங்குடியில் மார்கழி மாதத்தில் அவதரித்தவர். இவர் இயற்றிய திவ்வியப் பிரபந்தங்கள்
இரண்டு அவை:1. திருமாலை 45 பாசுரங்கள்; 2. திருப்பள்ளி எழுச்சி 10 பாசுரங்கள். இவர் இயற்பெயர் விப்ரநாராயணர். திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடர் இவர்தம் பெருமையை விளக்கும்.

Part 73
பத்து கேள்விகள் வரிசையில் இது 73-ஆவது பதிவு; முதல் 72 பதிவுகளின் பட்டியல் இறுதியில் உள்ளது.
****
1
இந்திரலோகம் ஆளும் பதவி கிடைத்தாலும் வேண்டாம் என்று சொல்லும் இவரது பாடல் பல சங்கீத விற்பன்னர்களால் பாடப்பட்டுள்ளது; உங்கள் நினைவுக்கு வருகிறதா?
2
பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார் தம்
மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன்
சேல் உலாம் பழன வேலித் திருக்கொண்டீச்சுரத்து உளானே!- என்று 25+25+25=75 ஆண்டுகள் வீணாய்ப் போச்சு! என்கிறார் அப்பர் பெருமான்; நமது ஆழ்வார் அதை எப்படி எதிரொலிக்கிறார் ?
3
புத்த சமண மதங்களை தொண்டரடிப்பொடி ஆழ்வார், எப்படித் தாக்குகிறார்?
4
எனக்கு இரும்பு நெஞ்சம் ; உனக்கோ கரும்பு நெஞ்சம்! உன்னைக் கண்குளிரக் காணவேண்டும் ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டவனே! என்று சொல்லி எப்படிப் பாடினார்?
5
திருவரங்ககத்தில்/ ஸ்ரீரங்கத்தில் படுத்துக்கொண்டிருக்கும் நிலையில் உள்ள பெருமாள் இலங்கையைப் பார்த்துக் கொண்டே இருப்பதாகக் கூறும் பாடல் எது ?
6
கங்கையை விடக் காவேரி ஆறு புனிதமானது என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் கூறுகிறார்?
7
எனக்கு காணி நிலம் கூட இல்லை ; சொந்தக்காரரும் இல்லை; நீதான் காப்பாற்ற வேண்டும் என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் கதறும் பாடல் எது ?
8
இலங்கைக்கு ராமர் சேது/ பாலம் கட்டும்போது அணிலும் உதவியது என்ற செய்தி ஒரிஜினல் ராமாயணத்தில் இல்லை ; நம்முடைய ஆழ்வார் அந்தப் புதிய செய்தியை அளிக்கும் பாடலின் வரிகள் என்ன ?
9
தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடிய திருப்பள்ளி எழுச்சியில் திருவரங்கத்தில் எழுந்தருளிய பெருமானைப் போற்றுகின்றார்; இராமாவதாரப் பெருமையைப் பேசுகின்றார்; இயற்கையழகில் ஈடுபட்டு வசந்த காலத்தின் பொலிவைக் காட்சிப்படுத்துகின்றார்; அதை எப்படித் துவக்குகிறார் ?
10
திருவரங்கப் பெருமாளைத் தரிசிக்க முருகனும் போட்டி போட்டுக்கொண்டு வருவதாக, தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடினாரா ?
***************
விடைகள்

1.பச்சைமா மலைபோல் மேனிப் பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா! அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே! என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே!
***
2.வேத நூற் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கிப் போகும் நின்றதிற் பதினையாண்டு
பேதை பாலகன் அது ஆகும் பிணி பசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மா நகருளானே .
மனிதர் வயது 100 என்று கொண்டால் 50 ஆண்டுகள் தூங்கியே கழிந்துவிடும் ; 15 ஆண்டுகள் விளையாட்டில் நாட்டம் கொண்ட பாலகனாகக் கழிந்துவிடும்; ஆக 65 ஆண்டுகள் உன்னை நினைக்க வாய்ப்பில்லை ; இப்போது தாமதமாக வந்திருக்கிறேன்; அருள் புரிவாயாகுக !
***
3.”புலை அறம் ஆகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம்
கலை அறக் கற்ற மாந்தர் காண்பரோ? கேட்பரோ தாம்?
தலை அறுப்பு உண்டும் சாவேன், சத்தியம் காண்மின் ஐயா!
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்.”
விளக்கச் சுருக்கம்:
• புலை அறம்: இழிவான அல்லது முறையற்ற நெறிகள்.
• புத்து மற்றும் சமணம்: பௌத்த மதமும் சமண மதமும்.
• பொருள்: மெய்நூல்களை (கலை அற) நன்கு கற்ற அறிவுள்ளவர்கள், பௌத்தம் மற்றும் சமணம் போன்ற தாழ்ந்த சித்தாந்தங்களைக் கண்டு களிக்கவோ அல்லது அதைக் கேட்கவோ மாட்டார்கள். வில்லால் இலங்கையை அழித்த ஸ்ரீராமபிரானாகிய திருமாலே உண்மையான தெய்வம் ஆவார்; அதை விடத் தலை அறுபட்டுச் சாவது மேல் என்கிகிறார் .
***
4.”விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதி இலேன் மதி ஒன்று இல்லை
இரும்புபோல் வலிய நெஞ்சம் இறை இறை உருகும் வண்ணம்
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டு என் கண் இணை களிக்கு மாறே”
பாடலின் பொருள்
வண்டுகள் மொய்க்கும் சோலைகள் சூழ்ந்த திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை (கரும்பைப் போன்ற இன்சுவையான இறைவனை), என் இரு கண்களும் கண்டு களிக்கும்படி நான் விரும்பி நின்று துதித்துப் போற்றுகின்ற புண்ணியத்தைச் செய்தவன் அல்லேன்; நல்ல அறிவும் என்னிடம் இல்லை; என் நெஞ்சமோ இரும்பைப் போல மிகக் கடினமானது; அந்த நெஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக உருகும் படியாக இறைவனை அன்போடு அழைக்கவும் எனக்குத் தகுதி இல்லை. ஆனாலும், எளியேன் மீது இரங்கி நீயೇ என் நெஞ்சை உருக்கி உன்னை எனக்குக் காட்ட வேண்டும் என்று ஆழ்வார் எம்பெருமானிடம் தன் இயலாமையைச் சொல்லி உருக்கமாக வேண்டுகிறார்.
***
5.”குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு
உடலெனக் குருகு மாலோ என் செய்கேன் உலகத்தீரே!”
எளிய பொருள்:
• குடதிசை (மேற்கு) திசையில் தனது தலையை (முடியை) வைத்து
• குணதிசை (கிழக்கு) திசையில் தனது திருவடிகளை (பாதத்தை) நீட்டி
• வடதிசை திசையில் தனது முதுகைக் காட்டி
• தென்திசை இலங்கையை (விபீடணனுக்காக) நோக்கியவாறு, திருவரங்கத்தில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்கும் கடல் போன்ற கரிய நிறக் கடவுளான எம்பெருமானின் (ஸ்ரீரங்கநாதனின்) அழகைக் கண்டு, எனது உடல் உருகுகிறது; உலகத்தீரே நான் என்ன செய்வேன் என்று ஆழ்வார் தன் நிலையைச் சொல்கிறார்.
***
6.காரணம்: அரங்கனின் (ஸ்ரீரங்கம் ரங்கநாதர்) திருவடிகள் ஸ்பரிசம் படுவதால் காவேரி, கங்கையை விட மேலானது என்பது அவருடைய கணிப்பு !
கங்கையிற் புனித மாய:
காவிரி நடுவு பாட்டு,
பொங்கு நீர் பரந்து பாயும்,
பூம்பொழி லரங்கந் தன்னுள்,
எங்கள் மாலிறை வனீசன்,
கிடந்ததோர் கிடக்கை கண்டும்,
எங்ஙனம் மறந்து வாழ்கேன்:
ஏழையே னேழை யேனே
***
7. “ஊரிலேன், காணி இல்லை, உறவு மற்றொருவர் இல்லை,
பாரில் நின் பாத மூலம் பற்றிலேன், பரம மூர்த்தி!
தீரிலேன், தொல்லை ஊழ்வின் தீர்த்திலேன், திருவரங்கத்து
ஊரிலேன், என் செய்வான் தோற்றினாய் எங்குள்ளேனே?”
எனக்கு என்று வாழ ஒரு ஊரும் இல்லை. சொந்தமாக நிலமோ சொத்தோ இல்லை. எனக்கு உதவ எந்த உறவினரும் இல்லை.
இந்த உலகத்தில் உனது திருவடிகளில் சரணடையாமல் இருந்து விட்டேனே . திருவரங்கத்து எம்மானே, என்னை எங்கு கொண்டுபோய் சேர்ப்பாய் என்று உருக்கமாகப் பாடுகிறார்.
***
8.குரங்குகள் மலையை நூக்கக்
குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடித்
தரங்க நீர் அடைக்கல் உற்ற
சலம் இலா அணிலும் போலேன்
மரங்கள் போல் வலிய நெஞ்ச
வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
அரங்கனார்க்கு ஆட் செய்யாதே
அளியத்தேன் அயர்க்கின்றேனே
***
9.கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான்
கன இருள் அகன்றது காலைஅம் பொழுதாய்
மதுவிருந்தொழுகின மாமலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்தீண்டி
எதிர் திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த
இருங்களிற்றீட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலைகடல் போன்று உளதெங்கும்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே.
***
10.இரவியர் மணி நெடும் தேரொடும் இவரோ
இறையவர் பதினொரு விடையரும் இவரோ
மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ
மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி
புரவியோடு ஆடலும் பாடலும் தேரும்
குமர தண்டம் புகுந்தீண்டிய வெள்ளம்
அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே.


10 கேள்விகள் List
1.காரைக்கால் அம்மையார் பற்றி 10 கேள்விகள்! (Post.15,992)18/7
திருமந்திரம் பற்றி 10 கேள்விகள் (Post No.16,010)23/7
பெரிய புராணம் பற்றி 10 கேள்விகள் (Post.16,012)24/7
திருமுருகாற்றுப்படை பற்றி 10 கேள்விகள் (Post.16,018) 26/7
கந்த புராணம் பற்றி 10 கேள்விகள் (Post.16,024)27/7
முக்கூடற் பள்ளு பற்றி 10 கேள்விகள் (Post No.16,027) 28/7
குற்றாலக் குறவஞ்சி பற்றி 10 கேள்விகள் (Post No.160,30)29/7
அஷ்டாவக்ர கீதை பற்றி 10 கேள்விகள் (Post.16,036) 30/7
கீத கோவிந்தம் நூல் பற்றி 10 கேள்விகள் (Post.16,039)31/7
****
10.பாரதியின் குயில்பாட்டு பற்றி 10 கேள்விகள் (Post.16,042) 1/8
அறப்பளீச்சுர சதகம் பற்றி 10 கேள்விகள் (Post.16,046) 2/8
கலிங்கத்துப் பரணி பற்றி 10 கேள்விகள் (Post No.16,050) 3/8
திருவள்ளுவமாலை பற்றி 10 கேள்விகள் (Post.16,052)4/8
பட்டினத்தார் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,055) 5/8
பஜ கோவிந்தம் பாடல் பற்றி 10 கேள்விகள் (Post.16,062)7/8
நாலடியார் நூல்பற்றி 10 கேள்விகள் (Post No.16,067)8/8
தாயுமானவர் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,059)6/8
சீவக சிந்தாமணி பற்றி 10 கேள்விகள் (Post.16,070)9/8
முத்தொள்ளாயிரம் நூல் பற்றி 10 கேள்விகள் (Post.16,074)
20.மணிமேகலைக் காப்பியம் பற்றி 10 கேள்விகள் (Post.16,077)11/8
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,081)12/8
பாண்டியர் செப்பேடுகள் பற்றி 10 கேள்விகள் (Post No.16,089)14/8
பாண்டியர் செப்பேடுகள் பற்றி மேலும் 10 கேள்விகள் (Post.16,092)15/8
பாரதி பாட்டில் 16 நாடுகள் பற்றி 10 கேள்விகள் (Post.16,095) 16/8
மலைபடு கடாம் பற்றி 10 கேள்விகள் (Post No.16,102) 18/8
ஆய் குல/ யாதவ குல செப்பேடுகள் பற்றி 10 கேள்விகள் (Post No.16,107) 19/8
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,085) 13/8
கொங்கு மண்டல சதகம் பற்றி 10 கேள்விகள் (Post No.16,100) 17/8
திருவருட்பா நூல் பற்றி 10 கேள்விகள் (Post.16,109)20/8
30.மஹாபாரதம் பற்றி 10 கேள்விகள் (Post No.16,112) 21/8
சர்ச்சைக்குரிய விவேக சிந்தாமணி பற்றி 10 கேள்விகள் (Post.16,118)22/8
பாபநாசம் சிவன் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post No.16,122)23/8
பார்ப்பனரை வசைபாடிய பாரதிதாசன் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,123)24/8
ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் அற்புதத் தமிழ் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,128) 25/8
அருணாசலக் கவிராயர் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,131)26/8
முத்துத் தாண்டவர் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,134)27/8
புத்த மத வேதப் புஸ்தகம் தம்மபதத்தில்10 கேள்விகள் (Post.16,137)28/8
மாரிமுத்தா பிள்ளை பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,141)29/8
ஆண்டாள் அருளிய திருப்பாவையில்10 கேள்விகள் (Post.16,145) 30/8
40.பாஸா நாடகங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,150)31/8
****
நளவெண்பாவில் 10 கேள்விகள் (Post.16,153)1/9/2026
காளமேகப்புலவர் பாடல்களில் 10 கேள்விகள் (Post.16,156)2/9
ஒட்டக்கூத்தர் பாடல்களில் 10 கேள்விகள் (Post.16,160)3/9
அதிவீர ராம பாண்டியன் நூல்கள் பற்றி 10 கேள்விகள்(Post.16,164)4/9
உலகநீதி நூலில் 10 கேள்விகள் (Post No.16,167) 5/9
சிவப்பிரகாசர் நூல்களில் 10 கேள்விகள் (Post.16,171)6/9
சங்க கால ஔவையார் பாடல்களில் 10 கேள்விகள் (Post.16,174)7/9
ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர் படைப்புகள் பற்றி 10 கேள்விகள் (Post.16,177)8/9
முத்து சுவாமி தீட்சிதர் கிருதிகள் பற்றி 10 கேள்விகள் (Post.16,180)9/9
50.சதாசிவ பிரம்மேந்திராள் பாடல்களில் 10 கேள்விகள் (Post.16,185)10/9
பல்லவர் செப்பேடுகளில் முதல் 10 கேள்விகள் (Post.16,189)11/9
பல்லவர் செப்பேடுகளில் இரண்டாவது 10 கேள்விகள் (Post No.16,192)12/9
பல்லவர் செப்பேடுகள் பற்றி மூன்றாவது 10 கேள்விகள் (Post.16,195)13/9
பல்லவர் செப்பேடுகள் பற்றி நான்காவது 10 கேள்விகள் (Post.16,198)14/9
பல்லவர் செப்பேடுகள் பற்றி ஐந்தாவது 10 கேள்விகள் (Post.16,200)15/9
பல்லவர் செப்பேடுகள் பற்றி ஆறாவது 10 கேள்விகள் (Post.16,204)16/9
பல்லவர் செப்பேடுகள் பற்றி ஏழாவது 10 கேள்விகள் (Post.16,207)17/9
பல்லவர் செப்பேடுகள் பற்றி எட்டாவது 10 கேள்விகள் விடைகள் (Post.16,211)18/9
பல்லவர் செப்பேடுகள் பற்றி ஒன்பதாவது 10 கேள்விகள் (Post.16,214)19/9
60.ஆன்மீக திரைப்படங்களில் (பிளாக் அண்ட் ஒயிட்) பத்து கேள்விகள் (Post.16,218)20/9
முருகனைப் போற்றும் திரைப்படங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,222)21/9
அலைமகள், கலைமகள், மலைமகள், மீதான திரைப்படங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,224)22/9
மஹாபாரதம், ராமாயணம் திரைப்படங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,228)23/9
கண்ணன்/ கிருஷ்ணன் மீதான திரைப்படங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,233)24/9
ஐயப்பன், குசேலர் திரைப்படங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,237)25/9
திரைப்படங்களில் பிரபலங்கள் சோ, எம். எஸ். பற்றி 10 கேள்விகள் (Post.16,240)26/9
திருக்குறளில் தெய்வங்கள் 10 கேள்விகள் (Post No.16,244)27/9
மாணிக்கவாசகரின் சிவபுராணத்தில் 10 கேள்விகள் (Post.16,248)28/9
திருமங்கை ஆழ்வார் பாடல்களில் 10 கேள்விகள் (Post.16,252)29/9
70.நம்மாழ்வார் பாசுரங்களில் 10 கேள்விகள் (Post No.16,256)30/9
71.குலசேகர ஆழ்வார் பாசுரங்களில் 10 கேள்விகள் (Post.16,259)
72.பெரியாழ்வார் பாசுரங்களில் 10 கேள்விகள் (போஸ்ட்.72) 2/10
–-subham-
Tags-.தொண்டரடிப்பொடி ஆழ்வார், பாசுரங்கள், 10 கேள்விகள், குரங்குகள் மலையை நூக்க, பச்சைமா மலைபோல் மேனி, ஊரிலேன், காணி இல்லை, உறவு