ஆயுதம் வெட்டாது; தீ எரிக்காது; நீர் நனைக்காது; காற்று அசைக்காது! அது என்ன? (Post No.16,304)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,304

Date uploaded in London – 14 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 சம்ஸ்கிருதச் செல்வம் 

ஆயுதம் வெட்டாது; தீ எரிக்காது; நீர் நனைக்காது; காற்று அசைக்காது! அது என்ன?

 ச. நாகராஜன்

நல்லதைத் தரும் இனிமையற்ற சொற்களைக் கேட்பவர்கள் அரிதே!

சுலபா: புருஷா ராஜன்சததம் ப்ரியவாதின: |

அப்ரியஸ்ய ச பத்யஸ்வ ஸ்ரோதா வக்தா  ச துர்லப: ||

ஒ, மன்னா! எப்போதும் மனதிற்கு இனிமையானவற்றைப் பேசிக் கொண்டே இருப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆனால் நல்லதைத் தரும் இனிமையற்ற சொற்களைச் சொல்பவர்களுக்கு காது கொடுத்துக் கேட்பவர்கள் மிகச் சிலரே!

முறைப்பட்ட பயிற்சியினால் மலையும் பொடிப்பொடியாகும்!

அஞோபி தஞ்சதாமேதி  சனை: ஷைலோபி சூன்யர்தே |

குணோப்யத்தி மஹா வ்ருக்ஷம் பஷ்யாப்யாசவிஜ்ருமிப்தம் ||

சரியான முறைப்படி செய்யும் பயிற்சியினால் : –

ஒரு மூடன் கூட புத்திசாலி ஆகி விடுவான்.

ஒரு மலை கூட பொடிப்பொடியாகி விடும்.

ஒரு புழு கூட பெரிய மரத்தை சாப்பிட்டு விடும்.

 கழுதையின் கத்தல் கூட விரும்பத்தக்கதாகி விடும்!

அவசரபடிதம் சர்வம் சுபாஷிதம் து யத்கிஞ்சதி |

வாம: ப்ரயாணகாலம் கரநிந்தோ மங்களோ பவதி ||

சரியான சமயத்தில் ஒருவன் படிக்கும் சுபாஷிதம் கூட மிக நல்லதாகிவிடும்.

ஒரு கழுதையின் கத்தல் கூட வெளியில் கிளம்பும் போது கேட்டால் அது சரியான சகுனமாகி விடும்.

ஆயுதங்கள் வெட்டாது! தீ எரிக்காது! அது என்ன?

நைனம் சிந்தந்தி சஸ்த்ராணி நைனம் தஹதி பாவக: |

ந சைனம் க்லேதவந்த்யாபோ ந ஷோஷயதி  மாருத: ||

ஆயுதங்களால் அதை வெட்ட முடியாது. தீ அதை எரிக்க முடியாது. நீர் அதை நனைக்க முடியாது. காற்று அதை அசைக்க முடியாது.

(அதுவே ஆத்மாவாகும்)

சோம்பேறிக்கு வருமா கல்வி?

ஆலஸஸ்ய குதோ வித்யா அவித்யஸ்ய குதோ தனம் |

அதனஸ்ய குதோ மித்ரம் அமித்ரஸ்ய குதோ பலம் ||

கல்வியானது சோம்பேறிக்கு எப்படி கிடைக்கும்?

கல்வியற்றவனுக்கு செல்வம் எப்படி கிடைக்கும்?

செல்வமற்றவனுக்கு நண்பன் எப்படிக் கிடைப்பான்?

நண்பன் இல்லாதவனுக்கு பலம் எப்படி வரும்?

 தேவதைகள் ஏங்குவது எதற்காக?

அதனா தனமிச்சந்தி வாசம் சைவ சதுஷ்பத: |

மானவா: ஸ்வர்கமிச்சந்தி மோக்ஷாமிச்சந்தி தேவதா: ||

ஏழைகள் பணத்திற்காக ஏங்குகிறார்கள்.

மிருகங்கள் மனிதன் போல பேசுவதற்கு ஏங்குகின்றன.

மனிதர்கள் ஸ்வர்க்கத்திற்காக ஏங்குகிறார்கள்.

தேவதைகள் மோக்ஷத்திற்காக ஏங்குகின்றன.

மௌனமாயிருப்பவன் கலகங்களில் சிக்க மாட்டான்!

படதோ நாஸ்தி மூர்கத்வம் ஜபதோ நாஸ்தி பாதகம் |

மௌனின: கலஹோ நாஸ்தி ந பயம் சாஸ்தி ஜாக்ரத: ||

நன்கு படித்தவன் முட்டாளாக ஆக மாட்டான்.

ஜபம் செய்பவம் பாவங்களைச் செய்ய மாட்டான்.

மௌனமாக இருக்கும் ஒருவன் கலகங்களில் சிக்கமாட்டான்.

விழித்திருக்கும் ஒருவன் பயத்தை அடைய மாட்டான்.

***

Leave a comment

Leave a Reply