கிஷ்கிந்தா காண்டம்- ஓர் ஆய்வு – Part 33 (Post.16,311)

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 16,311

Date uploaded in London –   16 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

கிஷ்கிந்தா காண்டம்- ஓர் ஆய்வு – Part 33

(ஆர், சேஷாத்ரிநாதன்)

இங்கு ஒரு கேள்வி எழலாம். வாலிக்குச் சுக்ரீவன் தான் விரோதி. இராமன் விரோதி இல்லையே? இராமன் மீது வாலி இதுவரை எந்தவித நேரடி தாக்குதலும் நடத்தவில்லையே.? பிறகு ஏன் இராமன் வாலியை கொல்லுவேன் என்று சூளூரைக்கிறான்.? அதற்குச் சில காரணங்கள் உள்ளன. சுக்ரீவனுக்காக இராமன் கிஷ்கிந்தைக்குள் காலடி எடுத்து வைக்கும்போது தனது பாதுகாப்பிற்கு வாலி அச்சுறுத்தலாக இருக்கலாம் என இராமன் நினைத்தான்.

ஒன்று இராமனுக்குத் தெரியும் வாலி இராவணனின் நண்பன் என்று. அவர்களுக்குள் நட்புரீதியான உடன்பாடு ஒன்று உண்டு. அதாவது கிஷ்கிந்தை வழியாக எவரேனும் இலங்கைக்குள் நுழைந்து இராவணனைத் தாக்கினால் இராவணனை வாலி பாதுகாப்பான் என்பதாகும். இரண்டாவது இராமன் சுக்ரீவனைச் சந்தித்து வாலியைக் கொல்வதாக சுக்ரீவனுக்கு வாக்களித்த விவரம் அரசன் என்ற முறையில் ஒற்றர்கள் மூலம் வாலிக்குத் தெரியும். அதனால் இராமனையும் வாலி எதிரியாகவே கருதுவான். இராவணன் வாலிக்கு நண்பன் இராமனின் எதிரி. சுக்ரீவன்  இராமனுக்கு நண்பன் ஆனால் வாலியின் எதிரி, சீதையைத் தேடவேண்டும் என்றால் கிஷ்கிந்தையைக் கடந்து செல்லவேண்டும்/ ஆனால்  கிஷ்கிந்தைக்குள் காலடி எடுத்து வைப்பது இராமனுக்கு ஒரு அபாயகரமான விஷயம்.

ஒரு வேளை இராமன் வாலியிடம் நட்புக் கொண்டால், வாலி இராமனிடம் இலங்கைக்குச் செல்லும் காரணத்தைக் கேட்பான். இராவணின் நண்பன் என்ற முறையில் வாலி இராமனின் நோக்கத்தை ஒத்துக் கொள்ள மாட்டான். நண்பனுக்கு செய்துள்ள வாக்குறுதியை மீறி இராவணனுக்கு துரோகம் செய்ய மாட்டான்.

ஒரு வேளை  வாலி நடு நிலை வகிக்கிறான் என்று வைத்துக் கொண்டால் வாலி இராவணனுக்கு எதிராகப் போரிட மாட்டான். ஆனால் இராமனுக்கு இராவணனை எதிர்த்துப் போரிட ஒரு படை தேவை. ஆக வாலியைக் கொல்வதே  இதற்குத் தீர்வு என்று இராமன் கருதி சுக்ரீவனுக்கு வாக்களிக்கிறான்.

இராமன் எப்படி உடனே ஒத்துக் கொள்கிறான். உரையாசிரியர்கள் சொல்வதாவது சுக்ரீவன் இராமனின் நண்பன். நண்பனின் துயரத்தைத் தனது துன்பமாக நினைக்கிறான் இராமன். ஆதலால் சுக்ரீவனுக்காக வாலியைக் கொல்லுவேன் என்றான். जो अपराधु भगत कर करई। राम रोष पावक सो जरई॥ எவன் ஒருவன் இராமனின் பக்தனுக்கு குற்றம் இழைக்கிறானோ அவன் இராமனின் கோபம் என்னும் நெருப்பில் வெந்து சம்பலாவான்.

जे न मित्र दुख होहिं दुखारी। तिन्हहि बिलोकत पातक भारी॥

निज दुख गिरि सम रज करि जाना। मित्रक दुख रज मेरु समाना॥1॥

ஆத்யாத்ம இராமாயணம்

वसाम्यद्य भवत्पादसंस्पर्शात्सुखितोऽस्म्यहम् ।

मित्रदुःखेन सन्तप्तो रामो राजीवलोचनः ॥ ५८॥

हनिष्यामि तव द्वेष्यं शीघ्रं भार्यापहारिणम् ।

इति प्रतिज्ञामकरोत्सुग्रीवस्य पुरस्तदा ॥ ५९॥

நண்பனின் துன்பத்தைக் கண்டு வருத்தம் கொள்ளாதவர்களைப் பார்த்தாலே பாவம் வந்து சேரும்.. எவன் தனது மலை போன்ற துன்பத்தைத் தூசு போலவும், நண்பனுக்கு வந்த தூசு போன்ற துன்பத்தை மலைபோலவும் நினைக்கிறானோ  அவனே உண்மையான நண்பன்” .எவன் ஒருவன் நண்பனின் துன்பத்தைக் கண்டு தான் துயரப்படுவதில்லையோ அவன் மகாபதகன்.. அவனுடன் தொடர்பில் இருப்பவர்களும் மகாபாதகர்கள். இங்கு கையை விட்டுப் போன அயோத்தி, வனவாசம், சீதையின் இழப்பு இப்படி மலை போன்ற துன்பங்களை உடைய இராமன் அவைகளை மறந்து சுக்ரீவனுக்கு உதவி செய்ய முன்வருகிறான்.  இதைத்தான் வினயபத்ரிகா என்ற நூலில் சொல்கிறார்.

तिय-बिरही सुग्रीव सखा लखि, प्रानप्रिया बिसराई।

இராமன் தனது துன்பங்களை மறந்து சுக்ரீவனின் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டான் என்கிறார்

सखा सोच त्यागहु बल मोरें।

सब बिधि घटब काज मैं तोरें॥

==============

जिन्ह कें असि मति सहज न आई। ते सठ कत हठि करत मिताई॥

कुपथ निवारि सुपंथ चलावा। गुन प्रगटै अवगुनन्हि दुरावा॥2

“எவனிடம் இயற்கையிலேயே இப்படிப்பட்ட குணம் இல்லையோ அப்படிப்பட்ட மூடன் எதற்காக ஒருவனிடம் வலிந்து  நட்பை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் ? தீய வழியில் செல்லும் நண்பனைத் திருத்தி நல்ல வழியில் அழைத்துச் செல்வதுதான் நண்பனின் கடமை. மேலும் நண்பனின் குறைகளை மிகைப்படுத்தாமல்  அவனது குணங்களை வெளிப்படுத்துவது உண்மையான நண்பனுக்கு இலக்கணமாகும்./

பர்த்ருஹரி தனது சுபாஷிதத்தில் நட்பின் இலக்கணங்களைக் கூறுகிறார்

पापान्निवारयति योजयते हिताय
गुह्यं निगूहति गुणान् प्रकटीकरोति।
आपद्गतं च न जहाति ददाति काले
सन्मित्रलक्षणमिदं प्रवदन्ति सन्तः॥

“தீய செயல்களைத் தடுக்கின்றான், நன்மைக்காக உந்துகின்றான், இரகசியங்களை பாதுகாக்கின்றான், நல்ல பண்புகளைப் புகழுகின்றான், சிக்கலில் விட்டுவிடாமல் துணை நிற்கின்றான், தேவையான நேரத்தில் உதவுகின்றான் — இதுவே ஒரு உண்மையான நண்பனின் லட்சணம் எனச் சான்றோர் கூறுகின்றனர்.”

தீயதைத் தடுத்து நலன்கொடு சொல்வான்

தீமை செய் போது திருத்திடும் சொல்வான்

உண்மையை உள்ளே உறுதியாக் காப்பான்

உலகம் அறிய நன்மையைப் புகழ்வான்!

———————

அவனுக்கே ஆபத்து வந்திடும் நேரம்

அழகாய் நம் தோளில் அழுத்தமாய் சேரும்

நேரத்தில் நம்மை நினைத்தே உதவும்

நேசத்தின் தீபம் நெஞ்சத்தில் எரியும்!

———————–

இவனே நண்பன்! இதுவே நட்பு!

இறைவனின் சாயல் இதுவே சத்தியம்!

பாசத்தின் பாதை பயணிக்கும் போது

பாரதி சொல்வது — இதுவே நெறி!

******

Leave a comment

Leave a Reply