
Written by London Swaminathan
Post No. 16,320
Date uploaded in London – 18 October 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
இந்த நிலையில் நான் இதை எழுதுவது ஏன் என்றால் , இந்த நிலையில் நீங்கள் படித்துக்கொண்டு இருப்பதால் இந்த நிலையில் நான் இதை எழுத வேண்டியதாயிற்று என்பதை நான் இந்த நிலையில் உங்களுக்குத் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன் ; நீங்களும் இந்த நிலையில் பத்திரிகைகளில் வரும் செய்திகளில் இந்த நிலையில் என்று சொற்கள் இல்லாவிடில் இந்த நிலையில் எனக்குத் தெரிவிக்கும்படி நான் உங்களை இந்த நிலையில் கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன் என்பதை இந்த நிலையில் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் .
***
பத்திரிகைகளில் தோலான் துருத்தியான், வெத்துவேட்டு ஆட்கள் ‘Tom, Dick and Harry’ அதிகரித்துவிட்டனர். இன் தி மீன் டைம், மீன் ஒயில் In the meantime, Meanwhile என்பதை இந்த நிலையில் என்று மொழி பெயர்ப்பது வழக்கம் ; இப்பொழுது இந்த நிலையில் என்ற சொற்களைக் கண்டபடி , ஆங்கிலத்தில் இல்லாத செய்திகளில் கூட, எழுதுவது பத்திரிக்கைகளின் தரம் குறைவதையும் தமிழ் மொழிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதையும் காட்டுகிறது .
ஐம்பது ஆண்டுகளுக்கு தினமணி, பி பி சி தமிழோசை ஒலிபரப்பு முதலிய இடங்களில் பணியாற்றிய எனக்கு இந்த நிலையில் இது கவலை அளிக்கிறது ; தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல பேனா எடுத்தவன் , கம்ப்யூட்டரில் தமிழ் தட்டச்சு தெரிந்தவன் எல்லாம் பத்திரிகை நிருபர் என்ற பெயரில் உலா வருவதால் ஏற்பட்ட கேடு இது ; மூச்சுத் திணறும் தமிழ் மொழிக்கு ஆக்சிஜன் ஏற்றுவது அவசியம். இதை விட மோசமான விஷ யங்களை அடுத்த பகுதியில் எழுதுகிறேன் .
***
மஹா பாவி எழுதிய தமிழ் !
மஹா கவி சுப்ரமண்ய பாரதி, கவிச் சக்ரவர்த்தி கம்பன் எழுதிய கவிதைகளை படித்து நாம் மகிழ்கிறோம் ; மஹா பாவி எழுதிய தமிழ்ப் பாடங்களைப் பற்றிச் சொல்கிறேன் .
நான், அஞ்சல் வழி மூலம் பி ஏ . தமிழ் கற்போருக்கு ஆன் லைன் பாடம் எடுக்கிறேன் ; அதில் திருக்குறள் பற்றிய பாடத்தில் அதற்கு மூன்றாம் நூற்றாண்டு என்று எழுதியுள்ளான். நம் எல்லோருக்கும் தெரியும் ஒரு தமிழ் வெறிக்கும்பல் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மகாநாடு கூட்டி, கூட்டத்தில் கலாட்டா, கூச்சல், குழப்பத்துக்கு இடியே, அறிஞர்களின் வெளிநடப்புக்கு இடையே, அந்தக் கும்பல் திருக்குறளை வள்ளுவர் எழுதிய காலம் கி.மு 31 என்று கட்டைப் பஞ்சாயத்து முறையில் அக்மார்க் முத்திரை குத்தியது ; அதை இன்றுவரை தமிழ் நாடு அரசும் அச்சிட்டுப் பரப்பியும் வருகிறது.
அதே தமிழ்நாடு அரசிடம் காசு வாங்கிக்கொண்டு ஒருவன் துணிச்சலாக புதிய முத்திரை குத்தியுள்ளான் !
இங்கு என்னுடைய இரண்டு கருத்துக்களையும் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன் :
கி.மு 31 என்று வள்ளுவருக்கு முத்திரை குத்திய கும்பல் உண்மையில் நல்ல எண்ணத்துடன்தான் அதைச் செய்தது ; வெள்ளைக்காரர்களைத் திருப்திப்படுத்தவும் கிறிஸ்தவ பிரசாரத்துக்கு உதவவும் ஒரு கும்பல் வள்ளுவருக்குக் கிறிஸ்தவர்களைத் தெரியும் அவர்களது செல்வாக்கும் குறளில் இருக்கிறது என்று விஷமப்பிரசாரம் செய்தது; அதை முறியடிக்கும் நல்ல எண்ணத்துடன்தான் ஏசு கிறிஸ்துக்கும் முன்னர் வாழந்தவர் வள்ளுவர் என்று முத்திரை குத்தினார்கள்.
உண்மை என்ன ?
பேராசிரியர் வைசாயாபுரிப் பிள்ளை மற்றும் பல தமிழ் அறிஞர்கள் சொல்வது போல வள்ளுவர் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரே ; 500- க்கும் மேலான குறள்களில் சம்ஸ்க்ருதச் சொற்களை பயின்றதும் நூலுக்கே தர்ம அர்த்த காம (முப்பால்) என்று பெயரிட்டதும் பல சம்ஸ்க்ருத சுலோகங்களை அப்பட்டமாக மொழிபெயர்த்ததும் அவரை ஒரு ஹிந்துத்துவா பேர்வழி என்பதைக் காட்டுகிறது . நாங்கள் லண்டன் பல்கலைக் கழகத்தில் வள்ளுவர் சிலையை நிறுவியபோதும் ஐந்தாம் நூற்ராண்டுப் புலவர் என்றுதான் அழைப்பிதழில் அச்சடித்தோம்.
நிற்க
மஹா பாவி எழுதிய தமிழ் பாடங்களுக்கு மீண்டும் வருகிறேன் ! ஓவியக் கலை என்ற பாடத்தில் வங்காளி ஓவியர், ஐரோப்பிய பிக்காஸோ போன்ற பெயர்களைக் குறிப்பிட்ட ஒரு ஆசாமி, உலகப் புகழ்பெற்ற ரவி வர்மாவின் பெயரைக் குறிப்பிடவில்லை ! மலையாள எதிர்ப்பு உணர்வா அல்லது அறியாமைக்கு ஆயிரம் வாட் பல்ப் போட்டுக் காட்டிக்கொள்கிறாரா என்று புரியவில்லை ! அதே அஞ்சல் வழிக் கல்வித் பாடத்தை எழுதிய இன்னும் ஒருமஹா பாவி , புத்தமத, சமண மத வழிபாட்டுத் தளங்களை இந்துக்கள் மாற்றிவிட்டதாக எழுதியுள்ளான் . தேவாரம், திருவாசகம், பெரிய புராணம் நூல்களில் இதற்கு நேர் மாறான உண்மை நிலையைக் காண்கிறோம். பாடங்களை எழுதிய ஆசாமிகள் பொறுக்கிகள் ! அதாவது இந்து மதத்துக்கு எதிரான விஷயங்ககளை மட்டும் பொறுக்கி எடுத்து, மயிர் புடுங்கிய சங்கடசாமி அவர் நூலில் இப்படிக் கூறியுள்ளார் என்று எழுதுகிறார்கள் : சரியான “பொறுக்கி” கள் !
இதை விட சில ((மூ))தேவிகள் சங்கீத மும்மூர்த்திகளை ஓரம் கட்டி ஆதி மும்மூர்த்திகளைக் கண்டுபிடித்த!!!!!! விஷயத்தையும் . சங்கீத மும்மூர்த்திகளும் தமிழ்ப் பாடல்களை அப்படியே மொழிபெயர்த்ததையும் எழுதி, இலக்கிய நோபல் பரிசு பெற முயற்சி செய்துள்ளார்கள் அந்த ((மூ)) தேவிகள் வேறு ஒரு “பொறுக்கி”யை மேற்கோள் காட்டியுள்ளார்கள் ; அதை அடுத்த கட்டுரையில் காண்போம் .
இன்னொரு ஆசாமி உ.வே சாமிநாத ஐயரைக் கிண்டல் செய்கிறான் ! பிராமணர் வீட்டில் எரிந்த முத்தீ பற்றி சங்க இலக்கியம் முழுதும் வருகிறது ! உ.வே.சா.வும் விளக்கியுள்ளார் !அதற்கு அந்த ஆசாமி சமையல் அடுப்புத் தீ ஒன்று என்றும் கண்டு யிடித்துள்ளான் !
இப்படிக்கு
லண்டன் சாமிநாதன் 18-10-2026