
Written by London Swaminathan
Post No. 16,322
Date uploaded in London – 19 October 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

இதற்கு முன்னர் வெளியிட்ட 120 கேள்விகளும், விடைகளும் எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும்.
121
எல்லார் பாபங்களையும் கங்கை நதி எடுத்துக் கொள்கிறது ; கங்கையின் பாவச் சுமை எப்படி நீங்குகிறது? ராமனிடம், கங்கை நதிசொன்ன அதிசயச் செய்தி என்ன ?
122
FIRST IMPRESSION MUST BE THE BEST IMPRESSION இன்டெர்வியுவுக்கு போகும்போதும், வேலைக்கு முதல் நாள் செல்லும் போதும், GOOD IMPRESSION நல்ல இம்ப்ரெஸ்ஸனை உண்டாக்க வேண்டும் என்று HOW TO WIN FRIENDS நண்பர்களை வெல்வது எப்படி? என்ற நூல்கள் இயம்பும்; குகனைப் பார்த்த மாத்திரத்தில் லெட்சுமணன் மனதில் பதிந்த சித்திரம் என்ன ?
123
DID RAMA EAT FISH BROUGHT BY THE HUNTER GUHA?
ராமன் க்ஷத்திரியன் ; வெஜிட்டேரியன் அல்ல! மீனும் மானும் சாப்பிடலாம் ; மெளரிய மன்னர்கள் மயில் மாமிசப் பிரியர்கள் !மெளரிய என்பதே மயூர- மயில் வேட்டைக்காரர்கள் என்பதிலிருந்து வந்தது; அசோகன் புத்த மதத்தைத் தழுவிய பின்னரும் அரண்மனையில் கொல்லும் மயில்களின் எண்ணிக்கையைக் குறைக்கத்தான் செய்தான் ; நிறுத்தவில்லை; குகன் கொண்டு வந்த மீனை க்ஷத்ரிய மன்னனான ராமன் சாப்பிட்டானா ?
124
WHAT TYPE OF MATTRESS WAS USED BY RAMA IN THE JUNGLE? CUSHION?, COTTON?, FOAM? OR SPRING MATTRESS?
ராமனுக்கு காட்டில் என்ன மெத்தை கிடைத்தது ? அதில் பஞ்சு இருந்ததா? குஷன், போம் இருந்ததா?
125
RAMA PROMISED GUHAN WHAT?
குகன் அன்போடு இங்கேயே தங்கலாம் என்று சொல்லி என்ன என்ன கிடைக்கும் என்று சொல்லியும் ராமன் சித்திரக்கூடம் போக வழி கேட்டான் ஆனால் குகனுக்கு ஒரு ப்ராமிஸ் -சத்தியம் செய்தான்; அது என்ன ?
126
HELLO MY DARLING! MY HONEY! SITA! LOOK! LOOK THERE!
ராமன் சித்திர கூடத்தை நோக்கி நடந்து செல்கையில் கண்ட இயற்கைக் காட்சிகளை கம்பன் ஆங்கிலப்புலவன் WILLIAM WORDSWORTH வோர்ட்ஸ்வொர்த் போல வருணித்தான். ராமன் சீதையை ஹலோ டார்லிங், ஹனி என்று சொன்னதைக் கம்பன் எப்படிக் கேட்டான்?
127
வனத்தில், ராமன் மேலும் ஒரு முனிவரைச் சந்திக்கிறான் ; அவர் பெயர் பரத்வாஜர் ; ஒரு முனிவர் என்றால் அவர் எப்படி இருப்பார் என்பதை இப்போது திரைப்படங்களில் மட்டுமே காண்கிறோம் ; கம்பன் அதை எப்படி தத்ரூபமாகப் பாடுகிறான்?
128
KARMA THEORY EXPLAINED BY KAMBAR
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று பரத்வாஜர் விளக்கியது எவ்வாறு ?
129
குஹனைப் போலவே பரத்வாஜரும் அவருடன் தங்குமாறு வேண்டி என்னென்ன கிடைக்கும் என்று சொன்னபோதிலும், ராமன் மறுத்துவிட்டு நடை கட்டுகிறான் ; அப்போது சீதைக்கு நீர்வீழ்ச்சிகள் , மலர்ச் செடிகள், மலை ஆடுகளைக் கட்டிவிட்டு ஒரு குரங்கு மத்தளம் வாசிப்பதைக் காட்டுகிறான் ; கம்பன் பாடல் மூலம் அதைக் காண்போமா?
130
சிலப்பதிகாரத்தில் கோவலன் சொன்னது :–
“மாசறு பொன்னே, வலம்புரி முத்தே,
காசறு விரையே, கரும்பே, தேனே
அரும்பெறற் பாவாய், ஆருயிர் மருந்தே,
பெருங்குடி வாணிகன் பெருமடமகளே,
மலையிடைப் பிறவா மணியே என்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ”
யாழிடைப் பிறவா இசையே என்கோ?
தாழிருங் கூந்தல் தையால்! நின்னை. ”
நெஞ்சசையள்ளும் சிலப்பதிகாரத்தில் கண்ணகியைக் கோவலலன் அழைத்தது தங்கமே! ரத்தினமே!… என்று. ஒவ்வொரு இயற்கைக் காட்சியையும் காட்டும்பொழுது சீதையை ராமன் என்னவெல்லாம் சொல்லி அழைத்தான்?


xxxxxx
விடைகள்
121.கன்னி நீக்க அருங் கங்கையும் கைதொழா,
‘பன்னி நீக்க அரும் பாதகம், பாருளோர்,
என்னின் நீக்குவர்; யானும், இன்று என் – தந்த
உன்னின் நீக்கினென்; உய்ந்தனென் யான்’ என்றாள்.
பிறர் செய்த பாவங்களைப் போக்கும் கங்கை இன்று தன்னைத் தந்த இறைவனாகிய இராமனே முழுகியதால் தன் பாவங்களைப் போக்கிக்கொண்டு மகிழ்ந்தாளாகக் கூறினாள்.
அழியாத் தன்மை உடைய ஜீவ நதியான கங்கையும் கைகளால்
வணங்கி, ‘இப் பூமியில் உள்ளோர் சொல்ல முடியாத பாவங்களை; என் மூலமாக (முழுகி) போக்கிக் கொள்வார்கள், நானும் இன்றைக்கு, என்னைத் தந்த திருமாலாகிய உன்னால் (என்பாவங்களைப் ) போக்கிக் கொண்டேன்; நானும் பிழைத்தேன், என்று சொன்னாள்.
*************
LAKSHMAN INTRODUCING GUHAN TO RAMA
122.‘நிற்றி ஈண்டு’ என்று, புக்கு
நெடியவன் – தொழுது, தம்பி,
‘கொற்றவ! நின்னைக் காணக் குறுகினன்,
நிமிர்ந்த கூட்டச்
சுற்றமும், தானும்; உள்ளம் தூயவன்;
தாயின் நல்லான்;
எற்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறை; குகன்
ஒருவன்’ என்றான்.
அரசரைக் காணச் செவ்வியறிந்து செல்லல் முறை ஆதலின், குகனை வெளியே நிற்கச்செய்து, இராமன்பால் தெரிவிக்கச் சென்றான் இலக்குவன். பார்த்த அளவில் தன்னையே, இராமனாக எண்ணும் குகனது வெள்ளை உள்ளத்தை அறிந்தபடியால் ‘உள்ளம் தூயவன்’ என்று முதலிற் கூறினான். உண்ணுதற்குரிய பொருள்களை என்றும் எடுத்துவருதல் தாயின் தன்மையாதலின் ‘தேனும்மீனும் கொண்டணுகிய குகனது தாயன்பைக்
கருதித் ‘தாயின் நல்லான்’ என்றான். நாம்கங்கையைக் கடத்தல் வேண்டும் ஆதலின், இவனது தோழமை நமக்கு மிகவும் இன்றியமையாதது என்பதைப் புலப்படுத்த ‘நாவாய்க்கு இறை’ என்றான். இங்ஙனம் இராமன் ஏற்றுக்கொள்ளும் முன்னரே இலக்குவன் குகனது தோழமையை ஏற்று அங்கீகரித்தான் என்னும்படி இவ்வறிமுகம் அமைந்துள்ளது அறிந்து
இன்புறத்தக்கது.
**************
123.இல்லை தந்திரமாகப் பதில் சொல்லித் தப்பித்தான் ராமன் ; ஏனெனில் சின்னம்மா கைகேயி என்ன சொன்னாள்? தாழிருஞ் சடைகள் தாங்கி தவம் மேற்கொண்டு ; ஆகையால் ராமன் மீன் சாப்பிடவில்லை ஆனால் ராமனை ஜடையுடன் காட்டும் எந்தப் படத்தையும் காணாவில்லை!
‘அரிய, தாம் உவப்ப, உள்ளத்து
அன்பினால் அமைந்த காதல்
தெரிதரக் கொணர்ந்த என்றால்,
அமிழ்தினும் சீர்த்த அன்றே?
பரிவினின் தழீஇய என்னின்
பவித்திரம்; எம்மனோர்க்கும்
உரியன; இனிதின் நாமும்
உண்டனெம் அன்றோ?’ என்றான்.
அருமையான பொருள்கள்; ரொம்ப ரொம்ப சந்தோஷம் எனக்கு! நீ அன்புடன் கொண்டு வந்ததால் இது அமிர்தத்துக்குச் சமம்
எப்பொருளும் அன்பினால் கொண்டு வரப்பட்டவை என்றால்அவை தூய பொருள்களே; எம்போன்ற தவம் மேற்கொண்டவர்களுக்கும்; உரியன ; இனிமையாக நாமும் உண்டதற்குச் சமானம் ஆகும் அன்றோ;’ என்றான்
நான் சாப்பிட்டதற்கு சமம் ஆனது ! (ஆகையால் சாப்பிடவில்லை என்பதைக் கம்பன் நாசூக்காகச் சொல்கிறான்) !
*****************
124.மாலைக் காலத்தே செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து, செய்ய வேண்டிய முறைப்படியே செய்து, பாற்கடலிலிருந்து தோன்றிய அமுதம் போன்றவளும் இராமபிரானும் பூமியில் வரிசையாக விரிக்கப் பெற்ற நாணற்புல்லாகிய படுக்கையிலே உறங்கினர்; தம்பி இலக்குவன் காலைப் பொழுது வரும் வரை வில்லை ஏந்தி, கண் இமையாது காத்து நின்றான் .
*************
125.‘படர் உற உளன், உம்பி
கான் உறை பகல் எல்லாம்;
இடர் உறு பகை யா? போய்,
யான் என உரியாய் நீ;
சுடர் உ று வடி வேலாய்!
சொல் முறை கடவேன் யான்;
வடி திசை வரும் அந் நாள்,
நின்னுழை வருகின்றேன்.
ஒளி படைத்த கூரிய வேலை உடைய குகனே! உன்
தம்பியாகிய இலக்குவன் வனத்தின்கண் நான்வசிக்கும் நாள்கள் எல்லாம், எனக்கு வருத்தம் நேராமல் இருக்க, என்னுடனே இருக்கின்றான்; நீ உன் நாட்டிற்குச் சென்று ஆட்சி புரிவாயாக; நான் மீண்டு வடதிசை நோக்கி அயோத்திக்கு வரும் காலத்தில் உன் இருப்பிடத்திற்கு வருகின்றேன்; சொல்லிய பேச்சிலிருந்து மாற மாட்டேன்.’
(குகனுடன் ஐவரானோம் என்ற பாடல் பின்னால் வருகிறது; அதை அப்போது காண்போம்.)
*******************
126.அருந்ததி அனையாளே!
அமுதினும் இனியாளே! –
செருந்தியின் மலர் தாங்கும்
செறி இதழ் வன சோகம்
பொருந்தின களி வண்டின்
பொலிவன, பொன் ஊதும்
இருந்தையின் எழு தீ ஒத்து
எழுவன; – இயல் காணாய்!
அருந்ததி அனையாளே!
– அருந்ததியை ஒத்தவளே!அமிழ்தத்தைக் காட்டிலும் இனியவளே!செருந்திமலரைத் தாங்கிக்கொண்டுள்ள;
நெருங்கிய இதழ்களை உடைய அசோகம் மலரானது களிப்பு நிறைந்த வண்டுகளாற் சூழப்பெற்று என்ன அழகாக ஜொலிக்கிறது பார் !பொன்னை வைத்து ஊதுகின்ற பொற்கொல்லனது கரியில் மேல் எழுந்து எரிகின்ற நெருப்பை ஒத்துத் தோன்றுகின்றது ; பார் பார்!!
(செருந்திப் பூ பொன்னாகவும் அதைத் தாங்கிய அசோக மலர் நெருப்பாகவும், அதனைச்சுற்றியுள்ள வண்டுகள் கரியாகவும் உவமித்தான் கம்பன் !)
‘ஏந்து இள முலையாளே!
எழுத அரு எழிலாளே!
காந்தளின் முகை கண்ணின்
கண்டு, ஒரு களி மஞ்ஞை,
‘பாந்தள் இது’ என உன்னிக்
கவ்விய படி பாரா,
தேம் தளவுகள் செய்யும்
சிறு குறுநகை – காணாய்!
(சாயாது) மேல் நிமிர்ந்துள்ள இளமையான அழகிய முலையினை உடையாளே!; ஓவியத்தில் எழுதுதற்கரிய அழகு படைத்தவளே!; மயங்கிய ஒரு மயில், காந்தள் அரும்பைத் தன் கண்ணால் பார்த்து, இது பாம்பு என்று கருதி, கவ்விக் கொண்டதை பார்த்து தேன் பொருந்திய முல்லை அரும்புகள் நகைப்பதை பார் !
இது போல நிறைய பாடல்கள்!
********************
127.குடையினன்; நிமிர் கோலன்;
குண்டிகையினன்; மூரிச்
சடையினன்; உரி மானின்
சருமன்; நல் மர நாரின்
உடையினன்; மயிர் நாலும்
உருவினன்; நெறி பேணும்
நடையினன்; மறை நாலும்
நடம் நவில்தரு நாவான்;
குடையினன் – குடை உடையவன்; நிமிர் கோலன் – உயர்ந்த
தண்டத்தைஏந்தி இருப்பவன்; குண்டிகையினன் – கமண்டலம் உடையவன்;
மூரிச் சடையினன் –மிகுந்த சடைமுடியை உடையவன்; உரிமானின் சருமன் – உரிக்கப்பெற்ற மான்தோலைப் போர்த்திருப்பவன்; நல் மர நாரின் உடையினன் – அழகிய மரவுரி ஆடையை உடைவன்; மயிர் நாலும் உருவினன் – மயிர் தொங்குகின்ற வடிவத்தை உடையவன்; நெறி
பேணும் நடையினன் – நன்னெறியைப் பாதுகாக்கும் ஒழுக்கத்தை
உடையவன்;; மறை நாலும் நடம் நவில்தரு நாவான் –
நான்குவேதங்களும் எப்போதும் நடனம் இடுகின்ற நாக்கினை உடையவன்.
பரத்துவாச முனிவன் முந்நூறு வருஷ காலம் பிரமசரிய விரதம் பூண்டு வசித்தான் என்று வேதங்கூறுதற்கேற்ப இங்ஙனம் கூறினார். ‘நூலே கரகம் முக்கோல் மணையே, ஆயுங்காலை அந்தணர்க்குரிய’என்னும் தொல்காப்பியத்தின் படி (தொல். பொருள், மரபு. 71) அந்தண முனிவனாகிய பரத்துவாசனை வருணித்தாராம்.
செந் தழல் புரி செல்வன்;
திசைமுக முனி செவ்வே
தந்தன உயில் எல்லாம்
தன் உயிர் என நல்கும்
அந்தணன்; ‘உலகு ஏழும்
அமை’ எனின், அமரேசன்
உந்தியின் உதவாமே,
உதவிடு தொழில் வல்லான்.
செந்நிறமுள்ள முத்தீயை வளர்த்தலையே செல்வமாக உடையவன்; பிரமதேவன் படைத்த உயிர்களை எல்லாம்; தன் உயிரைப் போலப்
பாதுகாக்கின்ற அந்தணன்; ஏழுலகங்களையும் படைக்க என்றாலும்; தேவ தேவனாகிய திருமால் உந்தியின் மூலமாகப்
படைக்க வேண்டாதபடி, தனது சங்கற்பத்தாலேயே படைக்கும்;
தொழிலில் வல்லவன்.
எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூணுதலே அந்தணர் இயல்பு என்ற குறளினைக் கம்பர் நினைவு கூர்கிறார்.
********************
128.ராமன் கானகம் ஏகிய சோகச் செய்தியைக் கேட்ட பரத்வாஜர் , புறநானூற்றில் கணியன் பூங்குன்றன் செப்பிய தத்துவத்தை அப்படியே சொல்கிறார்:
அல்லலும் உள’ இன்பம்
அணுகலும் உள அன்றோ?
நல்லவும் உள; செய்யும்
நவைகளும் உள; அந்தோ!
இல்லை ஒர் பயன் நான்
இன்று இடர் உறும் இதின்’ என்னா,
புல்லினன், உடனே கொண்டு
இனிது உறை புரை புக்கான்.
‘அல்லலும் உள இன்பம் அணுகலும் உள அன்றோ? – துன்பமும், இன்பமும் வாழ்க்கையில் மாறி மாறி வந்து சேருதல் உண்டு அல்லவா?; நல்லவும் உள செய்யும் நவைகளும்உள; அந்தோ! – நாம்செய்யும்
நல்வினைகளும் உள்ளன; தீவினைகளும் உள்ளன. ஐயோ! ( அவற்றின் பயனே இன்ப துன்பங்கள்) ஆகவே; நான் இன்று இடர் உறும் இதின் ஓர் பயன்இல்லை – நான் இன்று துன்பப்படுகின்ற இதனால் ஒரு பயனும் இல்லை;’ என்னா – என்று முனிவன் கூறி; புல்லினன் – இராமனைத் தழுவியவனாய்; உடனே கொண்டு – சேர அழைத்துக் கொண்டு; இனிது உறை புரை புக்கான் – தான் இனிதாகத் தங்கி யுள்ளதாகிய தவச்சாலையிற் புகுந்தான்.
அவரவர் செய்யும் நல்வினை தீவினைகளுக்கேற்ப விதிவழி இன்ப துன்பங்கள் விளையும். ஆதலின், இராமா! நீ வனம் புகுந்தது கருதி நான் வருந்துவதில் பயன் ஏதும் இல்லை என்றுபரத்துவாசன் கூறினான்.
**************************
129. ‘அறை கழல் சிலைக் குன்றவர்
அகன் புனம் காவல்
பறை எடுத்து, ஒரு கடுவன் நின்று
அடிப்பது – பாராய்!
பிறையை எட்டினள் பிடித்து, “இதற்கு
இது பிழை” என்னா,
கறை துடைக்குறும் பேதை ஓர்
கொடிச்சியைக் – காணாய்!
ஓர் ஆண் குரங்கு, வீரக்கழலை அணிந்த வில்லை உடைய மலை வாழ்நர்களது அகன்ற புனத்தைக் காவல் செய்ய வைத்திருக்கின்ற பறையை எடுத்துக் கொண்டு அடிப்பதனை; பாராய்! இளம்பிறையை;
பிடித்து , இப்பிறை மதிக்கு இக்களங்கம் இருப்பது தவறு என்று கருதி; களங்கத்தை துடைத்துவிடுகின்ற சிறுமியாகிய
ஒரு குறமகளை; காணாய்
தினைப்புனத்துத் தினை கவர வரும் பறவைகளை ஓட்டக் குன்றவர் பறை வைத்திருப்பர். அப்பறையை ஓர் ஆண்குரங்கு எடுத்து அடிக்கிறது. அடுத்து ஒரு சிறிய குறமகள் . நிலவினைப் பிடித்து, அதன் களங்கத்தைத் துடைக்கின்றாளாம். இதனால் நமக்கு மலையின் உயரத்தைக் கம்பன் காட்டுகிறான்
XXXXXXXXXXXXXXX
சீதையை அழைக்க, ராமன் பயன்படுத்திய காதல் மொழிகள்:
130.வாளும் வேலும் விட்டு, அளாயின
அனைய கண் மயிலே!
குருதி வாள் எனச் செம் வரி
பரந்த கண் குயிலே!
வடம் கொள் பூண் முலை மடம் மயிலே!
உவரிவாய் அன்றிப் பாற்கடல்
உதவிய அமுதே!
இழைந்த நூல் இணை மணிக் குடம்
சுமக்கின்றது என்னக்
குழைந்த நூண் இடைக் குவி இள
வன முலைக் கொம்பே!
வீறு பஞ்சு இன்றி அமுதம் நெய்
மாட்டிய விளக்கே!
சீலம் இன்னது என்று அருந்ததிக்கு
அருளிய திருவே!
வில்கொள் வாள் நுதல் விளங்கு இழை
இளம் தளிர்க் கொழுந்தே!
இலவும் இந்திரகோபமும்
புரை இதழ் இனியாய்!
மடந்தைமார்களில் திலதமே!
குழுவும் நுண் தொளை வேயினும்,
குறி நரம்பு எறிவுற்று
எழுவு தண் தமிழ் யாழினும்,
இனிய சொல் கிளியே!
வளைகள் காந்தளில் பெய்தன
அனைய கை மயிலே!
இவ்வாறு இன்னும் பல.

–சுபம் —-
Tags- கம்ப ராமாயணத்தில், 130 கேள்விகள்.