தமிழ் மொழி பிழைக்குமா? விஷ ஊசி போடுகிறார்களே!– Part 2 (Post No.16,323)

Written by London Swaminathan

Post No. 16,323

Date uploaded in London – 19 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

FIRST PART WAS POSTED YESTERDAY.

விக்கிபீடியா போன்ற சில இந்து விரோத வெப் சைட்டுகளில் ஒரு புதிய கண்டு பிடிப்பைக் காணலாம் ; ஒரு அயோக்கியன், ஆதி மும்மூர்த்திகள் என்ற புதிய கண்டுபிடிப்பைக் கண்டு பிடித்துள்ளான் ; இப்படிப் பொய் சொல்வதால் தமிழ் மொழிக்கு மூச்சுத் திணறும் வாய்ப்பு இருக்கிறது; ஏனெனில் பொய்கள் நிலைக்காது என்பது இந்தியாவின் தேசீய சின்னத்தில் உள்ள முண்டகோபநிஷத் வாக்கியம் ஆகும் : சத்யமேவ ஜெயதே = வாய்மையே வெல்லும் ; பொய் சொல்லும் மொழி பிழைக்காது ; ஆகையால் இதை நீக்க வேண்டும் . இந்த மாதிரி திராவிடப் பொய்களை நீக்காவிடில் தமிழ் மொழிக்கு மூச்சுத் திணறும்; ஆக்சிஜன் ஏற்றும் நிலை ஏற்படும்; இது நான் போடும் சாபம் அல்ல; உண்மை மட்டுமே உலகில் நிலைக்கும் என்ற வேத வாக்கியத்தினால் வரும் விளைவு ஆகும்.

ஆதி மும்மூர்த்திகளைக் கண்டு பிடித்தவன் ஈ வே ராமசாமி நாயக்கரின் பக்தன் ; சங்கீத மும்மூர்த்திகள் மூவரும் பார்ப்பனர்கள்  ; அவர்களை ஓரம் கட்ட அந்த அயோக்கியன் கண்டுபிடித்தது இது.

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் எந்த நூலிலும் ஆதி மும்மூர்த்திகள் என்ற கண்டுபிடிப்பைக் காண முடியாது !ஒரு அயோக்கியனின் புதுக் கண்டு பிடிப்பு ! முழுக்கு முழுக்க தமிழ் கீர்தனைகளையே பாடிய சிலருக்குப் பிந்தி வாழ்ந்தவர்களை இவனாக அணி சேர்த்து உண்டாக்கிய பொய் இது.

“தமிழ் ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் அருணாசலக் கவிராயர் (1712-1779), மாரிமுத்தாப் பிள்ளை, முத்துத் தாண்டவர் (1525-1625)” என்பது அவனது வெத்து வேட்டு!

இதில் இரண்டு விஷங்கள்/ விஷமங்கள் இருப்பதைக் கவனிக்க வேண்டும் ; அதாவது பார்ப்பனர்களாகிய மும்மூர்த்திகளுக்கும் முன்னவராம் இவர்கள் ; அதனால் இவர்கள் ஆதி மும்மூர்த்திகளாம் . அதையும் சம்ஸ்க்ருதத்தில் ஆதி, மூர்த்தி என்ற சொற்களுடன் போட்டு சங்கீத மும்மூர்த்திகளை வம்புக்கு இழுத்து அவர்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது.

Oothukkaadu Venkata Kavi (c. 1700-1765)

இரண்டாவது விஷமம் ; சில நாட்களுக்கு முன்னர்தான் இதே பிளாக்கில் பத்து கேள்விகள் வரிசையில் ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் பற்றி பத்து விஷயங்களை போட்டிருந்தேன். அவருடைய காலம்– (16 அக்டோபர் 1700 – 1765) . அதாவது மேலே குறிப்பிட்ட இருவருக்கு முந்தையவர்; அவர் பாடிய அலைபாயுதே , ஆடாது அசங்காது வா  கண்ணா, கண்ணன் வருகின்ற நேரம் – கரையோரம், அசைந்தாடும் மயிலொன்று , தாயே யசோதா என்ற பாடல்கள் உலகப் பிரசித்தம் . அவர் பிராமணர் என்ற காரணத்துக்காக அவரை ஓரம் கட்டி, மூன்று பிராமணர் அல்லாதோருக்குக் கொடுத்த அயோக்கியர்கள் கொடுத்த டைட்டில் ஆதி மும்மூர்த்தி.

மூன்றாவது விஷமம், முத்துத் தாண்டவர் ((1525-1625) என்பவருக்கு இவர்கள் கொடுத்த காலம் ஆதாரமற்ற பொய், ஆதி மும்மூர்த்திகளை உண்டாக்கிய அயோக்கியனின் கற்பனை . ஆனால் இவர்கள் மூவரும் மஹா மேதைகள், பெரியவர்கள் என்பதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம். சங்கீத மும்மூர்த்திகளைத் தாழ்த்தி, மேலே குறிப்பிட்டோருக்கு மூத்தவரான ஊத்துக்காடு வேங்கட சுப்பையரை ஒதுக்கி வைத்ததைக் காட்டவே இதை எழுதுகிறேன் இந்த விஷமும் விஷமமும் மேலே குறிப்பிட்ட ஆதி மும்மூர்த்திகள் சைட்டில் இருப்பதால்தான் இங்கே எழுதுகிறேன் . இதை உண்டாக்கிய அயோக்கியன், கர்நாடக இசை மீது அணுகுண்டு வீசியுள்ளான். அதைத் தனியாகப் பார்ப்போம்

அப்பர் ,சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இசையைப் பரப்பினார்கள்; நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞான சம்பந்தன் என்று பின்னர் வந்த சுந்தரமூர்த்தி நாயனார்  போற்றினார் ; ஆகவே தமிழையும் தமிழ் இசையையும் முதலில் பரப்பியவர்கள் தேவார மூவரே ; அதற்குச் சான்றாக இன்றும் ஓதுவா மூர்த்திகள் நிற்கிறார்கள்.

****

மு அருணாசலம் கண்டு பிடிப்பு !

இதோ விக்கிபீடியா பொறுக்கி எழுதுவது ; பொறுக்கி என்பதை முன்னரே விளக்கியுள்ளேன்; அதாவது பி பி சி போன்ற வெளிநாட்டு அமைப்புகள் இந்தியாவுக்கு எதிரான விஷயங்களை பொறுக்கி  வெளியிடும்; அது போலவே விக்கிபீடியா பொறுக்கி -கள் . தெருப்பொறுக்கி வேறு . அதைச் சொல்லவில்லை நான்.

ஆங்காங்கே பொடி வைத்து விஷயங்களை நுழைப்பார்கள் ; உலகின் பழைய நூலான ரிக்வேதத்துக்கு 600- BCE என்று யாரோ ஊர் பேர் தெரியாதவன் சொன்னதை பொறுக்கி – சேர்ப்பார்கள் !

****

FOLLOWING IS TAKEN FROM WIKIPEDIA

“மு.அருணாசலனார், இசைத்தமிழ் பற்றிய வரலாறு பற்றிய இரண்டு ஆய்வு நூல்களை மிக விரிவாக எழுதியுள்ளார். தமிழ் இசை இலக்கிய வரலாறு, தமிழ் இசை இலக்கண வரலாறு என்பவையே அவை. மு. அருணாசலனார் இந்த இருநூல்களை எழுதி வெளியிடாமல் கையெழுத்துப் படியாக வைத்தவண்ணம் இயற்கை எய்தினார். மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் உல.பாலசுப்பிரமணியன் இந்தக் கையெழுத்துப்படிகளை அரிதின் முயன்று வெளிக்கொண்டு வந்துள்ளார்.[2][3] இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழில் இசை வளர்ந்த வரலாற்றை, தக்க ஏற்புடைய சான்றாதாரங்களுடன் விளக்கும் இப்பெரு நூல்கள் தமிழின் இசை தொடர்பான அனைத்தையும் ஆவணப்படுத்துகிற களஞ்சியமாக விளங்குகின்றன. “கருநாடக சங்கீதம் என்ற ஒன்று இல்லை; அந்தப் பெயரால் சொல்வதெல்லாம் தமிழிசை தான். திருவையாற்றில் தியாகையர் பாடியதெல்லாம் தமிழிசையைத் தெலுங்கு மொழியில் பாடிய கீர்த்தனங்கள்’’, என்னும் கருத்தைச் சான்றாதாரங்களுடன் இவை நிறுவுகின்றன.[4]

இந்நூல்களுள் தெளிவு தர வேண்டுமென்பதற்காகக் கருநாடக சங்கீத மும்மூர்த்திகள் பற்றிய, அடிப்படை வரலாறுகள் தரப்பட்டுள்ளன. தெலுங்கு, சமஸ்கிருத கீர்த்தன இசைகளின் தோற்றம்; வளர்ச்சி பற்றிய விவரங்களையும் அவை எவ்வாறு தமிழிசையினின்று மொழிமாற்றம் பெற்றன என்பதையும் இந்நூல்களில் காணலாம். சமஸ்கிருத இசை இலக்கண நூல்கள் பற்றிய விவரமும் விளக்கமும் இவற்றில் உள்ளன. இவ்வடமொழி குறிப்புகள் முக்கியமானவை. பொதுவாக இந்நூல்கள் தரும் செய்திகள் தமிழிசை வரலாறு பற்றி மட்டும் அமையாமல், தமிழகத்தில் நிகழ்ந்த பொது இசை பற்றிய அனைத்து வரலாறுகளையும் தெரிவிக்கின்றன. கர்நாடக இசை என்பது பழந்தமிழ் இசையே என்பதனைக் காட்டி தமிழிசைச் சிற்பிகளான முத்துத்தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை ஆகியோரின் வரலாற்றை விளக்கி, மூவருமே கருநாடக இசையின் ஆதி மும்மூர்த்திகள் என நிறுவி, உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய பெருமையும் அருணாசலனாரையே சாரும்.[4]

*****

இந்தக் கண்டுபிடிப்புக்கு ????? நோபல் பரிசு ????? கிடைத்தாலும் கிடைக்கலாம் !!!!!

கர்நாடக சங்கீதத்தின் பிதாமகன் புரந்தரதாசர் (1470-1564).

அதாவது அயோக்கியன் ஆதி மும்மூர்த்திகளுக்குச் சொன்ன காலத்தை விட மூத்தவர் !

32,000 கிருதிகளைத் தெலுங்கு மொழியில் இயற்றிய அன்னமாச்சார்யாவின் காலம் 9 May 1408 – 23 February 1503.

மீராபாய் பாடல்களை எம் எஸ் . மற்றும் பீம்சென் ஜோஷி முதலிய சங்கீத மேதைகள் பாடிக் கேட்காத சங்கீதப்பிரியர்கள் இல்லை ! மீராபாய் காலம் கி பி 1600.

பாபநாசம் சிவன் (செப்டம்பர் 26, 1890 – அக்டோபர் 1, 1973)

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் !

பொய்களை அகற்றாவிடில் தமிழ் மொழிக்கு மூச்சுத் திணறும்; ஆக்சிஜன் ஏற்றும் நிலை ஏற்படும் முன்னர் சொன்னது போல பொய்கள் நிலைக்காது என்பது எல்லா வேதப் புத்தகங்களிலும் உள்ளது; ஆகையால் சங்கீத விற்பன்னர்கள்  ஆதாரங்ககளை வெளியிட்டு பொய்க்களைத் தவிடு பொடியாக்க வேண்டும் ; அப்போது தமிழ் மொழிக்கு ஆக்சிஜன் கிடைத்துவிடும்!

மு ராகவ அய்யங்கார் , ரா ராகவ அய்யங்கார், வையாபுரிப்பிள்ளை, கே என் சிவராஜ பிள்ளை , கா சு பிள்ளை போன்றோர் எழுதிய விஷயங்களைத் தொகுத்து எழுதி தன் பெயரைப் போட்டுக்கொண்டுள்ளார் மு அருணாசலம்; அதாவது பொறுக்கி !

கடைசியாக இவரைத்  தோலுரித்துக் காட்ட ஒரு ஆதாரம் : இவர் எழுதிய நூல்களில் ஒன்று  – வால்டேரும் பெரியாரும் (ஈ வே ராம சாமி நாயக்கரும்)

—-SUBHAM—

TAGS- பொறுக்கி, ஆதி மும்மூர்த்திகள் , கண்டுபிடிப்பு, அயோக்கியன் , தமிழ் மொழி , விஷ ஊசி, கர்நாடக சங்கீதம், PART 2

Leave a comment

Leave a Reply