
Written by London Swaminathan
Post No. 16,336
Date uploaded in London – 23 October 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சில (மூ)தேவிகள் அவ்வப்போது பிஎச்.டி. டாக்டர் பட்டம் பெற ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுவதைப் பார்க்கிறேன்; அவர்கள் தாலி கட்டுவது பற்றி அந்த நூலில் இல்லை, இந்த நூலில் இல்லை ஆகையால் தமிழர்களுக்குத் தாலி வேண்டாம் ; இப்படி எழுதும் அறிவிலிகள் அரசியல் திராவிடிகள் ஆவர் ; இதிலுள்ள பிழைகளைக் காட்டுகிறேன் :
1
முதலில் இப்படிச் சொல்லும் திராவிடிகளின் தாயார்களும் தங்கை, அக்காள்மார்களும் தாலியுடன் திருமணம் செய்திருப்பார்கள்!
2
தாலி பற்றிய குறிப்புகளை மதுரை நகர பாரத்வாஜக் கோத்திர பிராஹ்மணன் நச்சினார்க்கினியர் உரை, அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரை, கம்ப ராமாயணப் பாடல்களில் கண்டாலும் அவைகளை விட, தான் புத்தி சாலிகள் என்று நினைக்கின்றனர்.
3
எந்த ஒரு நெகட்டிவ் எவிடென்சும் – NEGATIVE EVIDENCE உண்மையான ஆதாரம் ஆகாது .
*****
இவர்களைப் பின்பற்றி நானும் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதப் போகிறேன் !
தமிழனுக்கு அப்பா இல்லை ; தமிழன் டாய்லெட்டே TOILET போவது இல்லை – என்று .
ஏனெனில் சங்க இலக்கியத்தின் 18 நூல்களில் சுமார் 30, 000 வரிகளில், சுமார் ஒரு லட்சம் சொற்களில் அப்பா , அப்பன் என்ற சொல்லே இல்லை ! ஆனால் நாமோ அதோ பார்! ஹீப்ரு (எபிரேய) மொழியில் அப்பா என்ற சொல் இருக்கிறது; இதோ பார் கொரிய மொழியில் அப்பா இருக்கிறது என்று!ஆனால் நமக்கு உண்மை தெரியும் ; பிற்காலத்தில் மாணிக்க வாசகர் முதலிய அடியார்கள் இதை பயன்படுத்தியதால் இது தமிழ்ச் சொல்தான் என்று ; மேலும் தந்தை முதலிய சொற்களும் உண்டு !
இதே போல தமிழன் சிறு நீர் கழித்தது மலம் கழித்ததைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை ; அவை சங்க இலக்கியத்தில் பாடப்படவில்லை; ஆனால் சங்க இலக்கியத்துக்கு முன்னால் வந்த ஆயர் வேத நூல்களில் சம்ஸ்க்ருதத்தில் அவை உள்ளன; உலகறிந்த விஷயங்களைச் சொல்லத் தேவை இல்லை.
இது போல பல வழங்கங்களைக் குறிப்பிடாவிட்டாலும் நாம் அது 5000 ஆண்டுக் காலமாக இருந்ததை ஏற்கிறோம். தாலியும் அப்படித்தான் : எல்லோரும் அணிவதால் அதைக் குறிப்பிடும் வழக்கம் இல்லை என்று கொள்ளலாம் . புலிப்பல் தாலி பற்றிய குறிப்புகள் உள்ளன. அது இன்று அழிந்துவிட்டன; இப்போது யாரும் குழந்தைகளுக்கு கழுத்திலோ அரைஞாண் கயிரிலோ ஐம்படைத்தாலி, புலிப்பல் தாலி கட்டுவது அரிது; இதை வைத்து ஒரு வெள்ளைக்காரன இந்த வழக்கமே இல்லை என்று சாதிக்கலாம் .
இதைவிட, நமக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சிலப்பதிகார உரை எழுதிய அடியார்க்கு நல்லாரும் , அவருக்கு முன்னர் வாழ்ந்த பார்ப்பான் மதுரை நகர பாரத்வாஜக் கோத்திர பிராஹ்மணன் நச்சினார்க்கினியரும் இதைக் குறிப்பிடுகிறார்கள் சங்க இலக்கியத்தில் தாலி இருப்பதை நெடுநல் வாடை வரிகள் 136-137 வரிகளில் அறிகிறோம்.
ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்துப்
பின் அமை நெடு வீழ் தாழ
— நெடு நல் வாடை வரிகள் 136,137
(காண்க- பக்கம் 264, சங்கத் தமிழரின் வழிபாடும் சடங்குகளும் , மு சண்முகம் பிள்ளை, 1996).
அவருக்கு முன்னரே மதுரை டாக்டர் எஸ் ஆர்.கே. யும் (Dr S Ramakrishnan, Author of Kamban and Milton) எழுதியுள்ளார் . கண்ணகியும் கோவலனும் தீ வலம் வந்து திருமணம் செய்த குறிப்பு சிலப்பதிகாரத்தில் தெளிவாகவே உள்ளது ; அது பார்ப்பனர்கள் முன்னிலையில் நடந்தது . இது சங்க இலக்கியமான அகநானூற்றிலும் (396) இருப்பதை சண்முகம் பிள்ளை நூலில் காணலாம்.
எல்லா வகுப்பினரும் இப்படிச் செய்ததாக சொல்லத் தேவையும் இல்லை ; கண்ணகியும் கோவலனும் பிராமணர்கள் இல்லை! அதை எழுதிய இளங்கோவும் பிராமணன் இல்லை!
****

ஜூன் 18, 2014 ஆம் ஆண்டில் இதே பிளாக்கில் நான் எழுதிய கட்டுரையின் பகுதி:
பெண்கள் தாலி :–
புறம்127, சிலப்பதிகாரம் 1-47, 4-50
ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்துப்
பின் அமை நெடு வீழ் தாழ
— நெடு நல் வாடை வரிகள் 136,137
தமிழர்களுக்கு தாலி உண்டு:–ம.பொ.சி
தமிழர்கள் திருமணத்தில் தாலி கட்டும் வழக்கத்தைக் கடைப்பிடித்தனரா என்று அவ்வப்போது விவாதங்கள் எழுகின்றன.
தமிழர்கள் திருமணத்தில் தாலி கட்டும் வழக்கத்தைக் கடைப்பிடித்தனர் என்று பல தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர். இதற்கு முடமோசியாரின் புறநானூற்றுப் பாடலையும் சிலப்பதிகார வரிகளுக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையையும் அவர்கள் எடுத்துக் காட் டுகின்றனர்.
இந்தியப் பண்பாடும் தமிழரும் பக்கம் 297/298 ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் (மதுரை எஸ். ஆர்.கே). தமிழர் நாகரீகமும் பண்பாடும் பக்கம் 51, ஆசிரியர் ஆ.தட்சிணாமூர்த்தி, பூண்டி, தஞ்சாவூர்.
“ஈகை அரிய இழை அணி மகளிர்” —
(ஆய் அண்டிரனின் மனைவியர் அணிந்திருந்த மங்கல சூத்திரம் பற்றி முடமோசியார் புறம் 127ல் பாடிய வரிகள்)
“அகலுள் மங்கல அணி எழுந்தது”- சிலப்பதிகாரம்1-47
(மங்கல சூத்திரத்தை ஊர்வ லமாக கொண்டுவந்தனர்-அடியார்க்கு நல்லாரின் உரை)
“மங்கல அணியின் பிறிது அணி மகிழாள் “
(கண்ணகி பற்றி இளங்கோ அடிகள் (இதுவும் தாலி என்பது எஸ். ஆர். கே.யின் வாதம்).
. நல்லாவுர் கிழார் குறிப்பிடும் ” வால் இழை மகளிர்” என்பதும் தாலியே என்று அவர் வாதாடுகிறார்.
கி.பி. 10ஆம் நூற்றாண்டில்தான் தாலி இடம்பெற்றது என்று மா. இராச மாணிக்கனார் கூறுவார்.
ம.பொ.சிவஞான கிராமணியார், பேராசிரியர் வீரபத்திரன் ஆகியோர் சங்க காலத்திலேயே தாலி இருந்ததாக வாதாடுகின்றனர்
.****

மார்கோபோலோ சீனா பற்றி எழுதிய நீண்ட அத்தியாயங்களில் சீன நெடுஞ் சுவர் பற்றி இல்லை : இதனால் பலர் அவனை மோசடிக்காரன், பொய்யன் என்று இத்தாலிய மொழியில் புஸ்தகங்களை எழுதியுள்ளபனர்!
மெகஸ்தநீஸ் எழுதிய இண்டிகாவில் மதுரை மீனாட்சி அம்மனைப் பற்றிய வசனம் உள்ளது! ஆனால் புத்தர், மஹா வீரர் என்ற வாசனையே இல்லை!
ரிக்வேதத்தில் சர்க்கரை இருக்கிறது; ஆனால் உப்பு பற்றிய பிரஸ்தாபமே இல்லை; தமிழனுக்கு சிந்துவெளி நாகரீகத்துக்கும் ஸ்னானப்பிராப்தி கூட இல்லை என்றும் வாதாடலாம்! கங்கை யமுனை நதிகளை 17 முறை சங்க இலக்கியத்தில் குறிப்பிட்ட 450 புலவர்கள் சிந்து நதி பற்றியோ அந்த இடம் பற்றியோ எதுவும் சொல்ல வில்லை!! இமய மலை தெரிந்தவர்களுக்கு சிந்து நதி தெரியாதா ? சரஸ்வதி நதி பற்றி குறிப்பு இல்லை என்றாலும் அது மறைந்து போன நதி என்று விட்டுவிடலாம்; அனால் சிந்து நதியோ இன்றுவரை கடல் போல ஒடிக்கொண்டு இருக்கிறது.
சுருக்கமாக நான் சொல்வது என்ன வென்றால் ஒன்றைக் குறிப்பிடாததால் அது இல்லை என்ற வாதம் தவறு ; அப்படிப்பட்ட வாததத்தை ஏற்றால் , தமிழனுக்கு அப்பா கிடையாது, தமிழனுக்கும் சிந்து வெளி நாகரீகத்துக்கும் தொடர்பே இல்லை, தமிழனுக்கு வண்டி என்றால் என்ன வென்றே தெரியாது என்று ஆகி விடும் !
வண்டி என்ற சொல் மிகவும் பிற்காலச் சொல்; சங்க இலக்கியத்தில் அதற்குப் பாண்டில் ; அதற்குப்பின்னர் கன்னடம் போல உச்சரிக்கும் பாண்டி ; பின்னர் வண்டி ஆனது!
சங்க கால தமிழனுக்கு அப்பா , அப்பன் இல்லை என்பதை ஒப்புக்கொண்டால் தமிழச்சிக்கு தாலி இல்லை என்பதை நான் ஒப்புக்கொள்வேன்.
****

கம்ப ராமாயணத்தில் தாலி
மண்ணில் கண்ட வானவரை வலியின் கவர்ந்த வரம் பெற்ற
எண்ணற்கு அரிய ஏனையரை இகலின் பறித்த தமக்கு இயைந்த
பெண்ணிற்கு இசையும் மங்கலத்தில் பிணித்த கயிறே இடை பிழைத்த
கண்ணில் கண்டவன் பாசம் எல்லாம் இட்டுக் கட்டினார்
–பிணி வீட்டு படலம், சுந்தர காண்டம்
****
கம்பனின் வசவுப் பாடலில் கைகேயியை தசரதன் எப்படி வசைபாடுகிறான் என்பதைப் பார்ப்போம். முன்னர் எழுதிய ஒரு கம்பன் கட்டுரையிலும் தாலி பற்றி இருப்பதால் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வழக்கம் இருந்ததை உறுதியாக அறிய முடிகிறது
விழிக்கும் கண் வேறு இல்லா, வெங்கான் , என் கான் முளையைச்
சுழிக்கும் வினையால் ஏகச் சூழ்வாய்; என்னைப் போழ்வாய்;
பழிக்கும் நாணாய்; மாணாப் பாவி! இனி,என் பல? உன்
கழுத்தின் நாண்,உன் மகற்குக் காப்பின் நாண்ஆம்’ என்றான்.
—அயோத்தியா காண்டம், நகர் நீங்கு படலம், கம்ப ராமாயணம்
—SUBHAM—
TAGS- தாலி, சான்று, சங்க இலக்கியத்தில், கம்ப ராமாயணத்தில், சிலப்பதிகாரத்தில் , தமிழனுக்கு , அப்பா , இல்லை, வண்டி