
Written by London Swaminathan
Post No. 16,376
Date uploaded in London – 5 November 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அரைக் கிணறு தாண்டி விட்டோம்; பாதியில் நிறுத்தினால் ஆபத்து! பத்தாயிரம் பாடல்களில் பாதிக்கு வந்து விட்டோம்; சுவையான பகுதிகளை மட்டும் தந்து விரைவில் முடிக்க ஆசை! பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டங்களை முடித்து இப்பொழுது கிஷ்கிந்தா காண்டத்தில் இருக்கிறோம். படித்துச் சுவையுங்கள்! இதற்கு முன்னர் வெளியிட்ட 290 கேள்விகளும், விடைகளும் எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும். கம்ப ராமாயணம் பற்றி நான் எழுதிய இரண்டு நூல்களையும் வாங்கிப் படிக்க முடிந்தால் படியுங்கள். என்னுடைய 155 நூல்களில் வேறு சில நூல்களிலும் கம்பன் கட்டுரைகள் உள. வாழ்க தமிழ்! வளர்க கம்பன் புகழ்!

291
வாலி மீது ராமன் விட்ட அம்பு பற்றி ஒரு அதிசயச் செய்தியைக் கம்பன் கூறுகிறான் ; உங்களுக்குத் தெரியுமா ?
292
கிஷ்கிந்தா ராஜாவாக சுக்ரீவனுக்கு முடிசூட்டியது யார்?
293
“பொம்பளை விஷயத்துல ஜாக்கிரதையா இரு”! என்று முடி சூட்டு விழாவில் ராமன் சொற்பொழிவு ஆற்றியது ஏன் ?
294
RAMA REJECTED FIVE-STAR HOTEL TREATMENT; WHY?
“தேவரீர் என் கிஷ்கிந்தை நகருக்கு வந்து (பைவ் ஸ்டார் ஹோட்டல் போன்ற) என் அரண்மனையில் தங்கி என்னைக் கெளரவிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்”- என்ற சுக்ரீவன் வேண்டுகோளை ராமன் ஏற்க மறுத்தது ஏன் ?
295
GOODBYE, SUGREEVA, LET US MEET AFTER FOUR MONTHS; SOUTH WEST MONSOON STARING IN A FEW DAYS TIME ACCORDING TO MADRAS A.I.R. WEATHER REPORT!
சுக்ரீவனுக்கு ராமன் விதித்த நான்கு மாத கெடு என்ன ?
296
ஏராளமான பாடல்களில், ராமன் கண்ட இயற்கைக் காட்சிகளை வருணித்த கம்பன், கானக ஆர்கெஸ்ட்ரா FOREST ORCHESTRA குறித்து விளம்பியது என்ன ?
297
தேவர்களும் மனிதர்களும் என்னைப் பார்த்துச் சிரிப்பார்கள் என்று ராமன் வருந்தியது ஏன் ?
298
“நீ போய் சுக்ரீவனிடம் மாரிக்காலம் முடிந்தும் ஏன் வரவில்லை என்று அறிந்து வா” –என இலக்குமணனிடம் ராமன் பேசிய சூடான வசனம் என்ன?
299
ராமன் கட்டளையை ஏற்று கோபத்துடன் வந்த இலக்குவனைக் கண்ட வானரங்கள் எப்படி ஓடின ?
300
குடிபோதையில் இருந்த சுக்ரீவன் எப்படிக் காட்சி அளித்தான் ?
XXXXXXXXXXXXXXXXX


விடைகள்
291.வாலி உயிரைக் கவர்ந்த இராம பாணம், தூய நீர்க்கடலில் நீராடி, இராமனது அம்பறாத் தூணிக்கே வந்தது! ஹிந்துக்களின் சுதர்சன சக்கரம், ராமனின் அம்பு ஆகியவற்றிலிருந்து தோன்றியதே ஆஸ்திரேலியப் பழங்குடியினரின் பூமராங்!
கை அவண் நெகிழ்தலோடும் ,
கடுங்கணை , கால வாலி
வெய்ய மார்பு அகம் அத்து உள் தங்காது
உருவி , மேக்கு உயர மீ போய் ,
துய்ய நீர்க் கடலுள் தோய்ந்து ,
தூய் மலர் அமரர் சூட்ட ,
ஐயன் வெந் விடாத கொற்றம் அத்து
ஆவம் வந்து அடைந்தது அன்றே .’
இராமன் மறைந்திருந்து எய்திய கொடிய அம்பு வாலியின் மார்பில் பாய்கிறது. வாலி அந்த அம்பைப் பிடித்து இழுக்கிறான்; ஆனால் அவனது கைகள் தளர்ந்து, அம்பு அவன் பிடியிலிருந்து நழுவுகிறது. வாலியின் கைகள் அந்த அம்பின் மீதுள்ள பிடியிலிருந்து நழுவிய அளவிலேகாலனைப் போன்ற வலிமை கொண்ட வாலியின்,கொடிய மார்பகத்தின் உள்ளே தங்கிவிடாமல் அந்த அம்பு ஊடுருவிச் சென்றுமேலும் மேலே உயர்ந்து சென்று விண்ணை நோக்கிச் சென்றது.இதைத் தொடர்ந்து, அந்த அம்பு தூய்மையான கடல்நீரில் தோய்ந்து, தேவர்கள் தூவிய மலர்களைப் பெற்று, இராமனிடமே சென்று சேர்ந்தது.
********
292. வாலி பரமபதத்தை அடைந்தவுடன், சுக்ரீவனுக்கு அரச பட்டம் கிடைத்தது; லெட்சுமணனிடம் முடிசூட்டக் கட்டளை இடுகிறான் ராமன்!
சுக்கிரீவனுக்கு முடிசூட்டும்படி இராமன் இலக்குவனுக்குக் கட்டளையிடுதல்:
அது காலத்தில் அருட்கு நாயகன்
மதி சால் தம்பியை வல்லை ஏவினான்
‘கதிரோன் மைந்தனை ஐய! கைகளால்
விதியால் மௌலி மிலைச்சுவாய்’எனா.
தம்பி! உன்னுடைய பொன்னான கைகளால் சுக்ரீவனுக்கு முடி சூட்டுவாயாக! விதிகளின்படி செய் –என்றான் ராமன் .
மறையோர் ஆசி வழங்க வான் உ ளார்
நறை தோய் நாள் மலர் தூவ நல்நெறிக்கு
இறையோன்தன் இளையோன் அவ் ஏந்தலைத்
துறையோர் நூல்முறை மௌலி சூட்டினான்.
வேதம் வல்ல பிராமணர்கள் ஆசி கூறும் மந்திரங்களை முழங்கினார் கள். தேவர்கள் மலர்மாரி பெய்தனர்; இந்து மத நூல்களில் சொன்னா விதி முறைகளைப் பின்பற்றி சுக்ரீவன் தலையில் மகுடத்தை வைத்தான் இலக்குவன்.
முடி சூட்டு விழாவுக்கான பொருள்கள் அனைத்தையும் கொண்டுவந்தது அனுமன் !
********
293.முடி சூட்டு விழாவில் ராமன்தான் தலைமைப் பேச்சாளர்; என்னென்ன விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று நீண்ட உரை ஆற்றுகிறான்! மைக் கையில் கிடைத்ததால் யார் பேச்சை நிறுத்துவார்கள்? ஓரிரு விஷயங்களை மட்டும் புல்லட் பாயிண்டுகளில் காண்போம் :
வாலி கெட்டதும், ராவணன் கெட்டதும் இந்திரன் கெட்டதும் பெண்கள் விஷயத்தால்தான்! இதனை மனதில் கொண்டு ராமன்சொல்கிறான் :
• மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம் என்றல்: பெண்களின் காரணமாக (அவர்களின் பொருட்டு) ஆண்களுக்கு மரணம் கூட ஏற்படும் என்பது,
• சங்கை இன்று உணர்தி: எந்தவிதச் சந்தேகமும் இல்லாமல் நீ உணர்ந்து கொள்.
• வாலி செய்கையால் சாலும்: இதற்கு வாலியின் செயலே (தாரா மற்றும் ரூபவதி போன்ற விஷயங்களாலும், தன் மனைவியை விரும்பியதாலும் வாலி அழிந்ததே) சாட்சியாகும்.
• இன்னும் அங்கு அவர் திறத்தினானே, அல்லலும் பழியும் ஆதல் எங்களின் காண்டி அன்றே: மேலும், பெண்களால் நமக்குத் துன்பமும் பழியும் ஏற்படுவதை எங்களின் (என்னுடைய மற்றும் உன்னுடைய) வாழ்க்கையிலேயே காண்கிறாயே! இதற்கு வேறு சான்று தேவையா?
விவேக சிந்தாமணி பாடல் வரிகளைக் கம்பன் நம் நினைவுக்கு கொண்டு வருகிறான் :
காமத்தால் இந்திரன் கலக்க மெய்தினான்,
காமத்தால் இராவணன் கருத்த ழிந்தனன்,
காமத்தால் கீசகன் கவலையுற் றனன்,
காமத்தால் இறந்தவர் கணக்கி லார்களே
“இந்திரன் கெட்டதும் பெண்ணாலே; சந்திரன் கெட்டதும் பெண்ணாலே” என்பது தமிழ்ப் பழமொழி.
செய்வன செய்தல், யாண்டும்,தீயன சிந்தியாமல்;
வைவன வந்த போதும்வசை இல இனிய கூறல்,
மெய் சொலல், வழங்கல் யாவும்,மேவின வெஃகல் இன்மை,
உய்வன ஆக்கித் தம்மோடுஉயர்வன உவந்து செய்வாய்.’
• செய்வன செய்தல்: ஒருவருக்குரிய கடமைகளையும், செய்ய வேண்டிய நற்செயல்களையும் தவறாமல் செய்ய வேண்டும்.
• யாண்டும் தீயன சிந்தியாமை: எப்போதும் எவருக்கும் எந்தக் தீங்கான காரியங்களையும் செய்யக் கருதுதல் கூடாது.
• வைவன வந்த போதும் வசை இல இனிய கூறல்: நம்மைப் பற்றிப் பிறர் இகழ்ந்து பேசினாலும், வசை மொழிகளைக் கூறினாலும் (அவை நம்மிடம் வந்து சேர்ந்தாலும்), அதற்குப் பதிலாக நாம் கோபப்பட்டுத் தீய சொற்கள் கூறாமல், குற்றம் இல்லாத இனிய சொற்களையே பேச வேண்டும்.
• மெய்அன வழங்கல்: உண்மை உடையதான (பொருத்தமான / நேர்மையான) பொருள்களை வழங்குதல் வேண்டும்.
• யாவும் மேவின வெஃகல் இன்மை: மற்றவர்களுக்குரிய பொருட்களைக் கவரவோ அல்லது ஆசைப்படவோ கூடாது.
• உய்வன ஆக்கித் தம்மோடு உயர்வன உவந்து செய்வாய்: இவை போன்ற நற்பண்புகளைக் கடைப்பிடித்து நம்மை மேம்படுத்திக் கொள்ளும் வழிகளைச் செய்து, நம்முடன் வாழ்பவர்களையும் உய்யச் செய்யும் செயல்களை மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும்
********

294.ராமன் நகர வாழ்க்கை ஒவ்வாது என்று கூறிய காரணங்கள் இரண்டு:
புன்முறுவலுடன் இராமன் சுக்ரீவனிடம் சொன்னான் : சுக்ரீவ என்னைப் போன்ற விரதம் அனுஷ்டிப்போருக்கு உன் அரண்மனை வாழ்வு பொருந்தாது; மேலும் என்னை உபசரிப்பதிலேயே நீ நேரத்தைச் செலவிடுவாய்; அது முறையல்ல; மேலும் பதினான்கு வருட காலம் நான் சென்று வெம்மை மிக்க காட்டில் வசிப்பதாக ஏற்றுக்கொண்டேன். அரசர்கள் வாழும் செல்வ வளம் வாய்ந்த நகரில் தங்குவதற்கு உடன்படேன். வலிமை வாய்ந்த அழகிய பெரிய புயங்களை உடைய வீரனே! யாழின் இசைபோலும் சொல்லையுடைய சீதையோடு அல்லாமல் நான் அடையும் இன்பம் யாதோ? நீ இதனை எண்ணிப் பார்த்தாய் இல்லை போலும்!
ஏந்தலும் இதனைக் கேளா,இன் இள முறுவல் நாற,
வேந்து அமை இருக்கை, எம்போல்விரதியர் விழைதற்கு ஒவ்வா;
போந்து அவண் இருப்பின், எம்மைப்போற்றவே பொழுது போமால்;
தேர்ந்து இனிது இயற்றும் உன்தன்அரசியல் தருமம் தீர்தி. 4.8.20
‘ஏழ் இரண்டு ஆண்டு, யான் போந்துஎரி வனத்து இருக்க ஏன்றேன்;
வாழியாய்! அரசர் வைகும்வள நகர் வைகல் ஒல்லேன்;
பாழி அம் தடம் தோள் வீர!பார்த்திலை போலும் அன்றே!
யாழ் இசை மொழியோடு அன்றி,யான் உறும் இன்பம் என்னோ?’ 4.8.21
********
295.”இன்னது தகைமை” என்ப, இயல்புளி மரபின் எண்ணி,
மன் அரசு இயற்றி, என்கண் மருவுழி மாரிக் காலம்
பின்னுறு முறையின், உன் தன் பெருங் கடற் சேனையோடும்
துன்னுதி; போதி’ என்றான், சுந்தரன். அவனும் சொல்வான்
ஆதலால் நூல்களில் கூறிய இயல்பின்படி முறைப்படி ஆராய்ந்து சிறப்பாக ஆட்சியை நடத்தி மழைக்காலம் கழிந்த பின்பு என்னிடம் வரும் பொழுது, முறைப்படி உனது பெரிய கடல் போன்ற சேனையோடு என்னிடம் வந்து சேர்வாய். இப்பொழுது செல்வாய்!” என்று கூறினான், இராமன்.
நான்கு மாத காலத்துக்கு சாது சந்யாசிகள் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்து ஒரே இடத்தில் தங்குவது இராமாயண மஹாபாரத காலம் முதலே உள்ளது ; ஏனென்றால் அப்போது SOUTH WEST MONSOON தென் மேற்குப் பருவமழை கேரளத்தில் துவங்கி இமயமலை வரை சென்று,RETURNING MONSOON ரிடர்னிங் மான்சூன் என்ற பெயரில் திரும்பி வரும்; இதைப் பயன்படுத்தி ராவணன் ஆண்டு தோறும் கப்பலில் கோதாவரி, கங்கைப் பிரதேசங்களுக்கு வந்து அட்டூழியம் செய்வான். பிற்காலத்தில் அசோகன் இதைப்பயன்படுத்தி மகள் சங்க மித்ராவை இலங்கைக்கு அனுப்பினான். இலங்கைபுத்த பிட்சுக்களும் பாடலிபுரம் வரை வந்தனர். கரிகாலனும் பாய்மரக் கப்பல்களை பயன்படுத்தியது புறநானூற்றில் உள்ளது (மேல் விவரங்களை எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளில் காண்க )
********
296. மலையில் நாடக அரங்கு
கிளைத்துளை மழலை வண்டுகின்னரம் நிகர்த்த, மின்னும்
துளிக் குரல் மேகம் வள் வார்த்தூரியம் துவைப்ப போன்ற;
வளைக் கையர் போன்ற, மஞ்ஞை;தோன்றிகள் அரங்கின் மாடே
விளக்கு இனம் ஒத்த; காண்போர்விழி ஒத்த, விளையின் மென்பூ. 4.9.32
சுக்ரீவனை மாரிக்காலம் முடிந்த பின்னர் பெரும்படையுடன் வருக என்று ராமன் சொல்லி அனுப்பிய பின்னர், ராமன் கண்ட இயற்கைக்கு காட்சிகளை ஏராளமான பாடல்களில் கையில் ‘மைக்’ கிடைத்த அரசியல் பேச்சாளர் போல வள வள வென்று வருணிக்கிறான் கம்பன்.ஒரே ஒரு பாடலில் சுவையான செய்தி உள்ளது:
கைக்கிளை என்னும் இசைக்கு நிகராக ஒலிக்கும் வண்டுகள் யாழை ஒத்தன; இடியோசையை உடைய மேகங்கள் அடர்ந்த தோல் வாரினால் கட்டப்பட்ட மத்தளம் போல ஒலித் தன; மயில்கள்; வளையலணிந்த மகளிரைப் போன்றன; செங்காந்தள் மலர்கள் நாட்டியமாடும் இடத்தில் ஏற்றிவைக்கப்பட்ட விளக்குகளாக விளங்கின; கருவிளையின் மென்மையான மலர்கள் பார்ப்பவர்களுடைய கண்களைப் போன்றன. இது காட்டில், இயற்கை நடத்திய இன்னிசைக் கச்சேரி!
********
297.’வானகம் மின்னினும் மழை முழங்கினும்
யான் அகம் மெலிகுவென் எயிற்று அரா எனக்;
கானகம் புகுந்து யான் முடித்த காரியம்
மேல் நகும்; கீழ் நகும்; இனி என் வேண்டுமால்?
மேகம் மின்னினாலும் (அதனைக் கண்டும்);
மேகம் இடி முழக்கம் செய்தாலும் (அதைக் கேட்டும்);
நச்சுப் பற்களை உடைய நாகம் (வருந்துவது) போல;
நான் மனம் வருந்துபவனாவேன். நான் காட்டில் வந்து சாதித்த
செயலைக் குறித்து, மேல் உலகத்தவர் நகைப்பர், கீழ்உலகத்தவரும் நகைப்பர்; இனியும் வேறு என்ன அவமானம் வரவேண்டும்?
********
298.இலக்குமணனிடம் ராமன் பேசிய சூடான வசனம் :-
.’நன்றி கொன்று அரு நட்பொடு நார் அறுத்து
ஒன்றும் மெய்ம்மை சிதைத்து உரை பொய்த்து உளான்
கொன்று நீக்குதல் குற்றத்தின் நீங்குமால்;
சென்று மற்று அவன் சிந்தையைத் தேர்குவாய்.
(இப்படி) ஒருவன் தனக்குச் செய்த நன்றியை மறந்து, பெறுவதற்கு அருமையான நட்ப்பு என்னும் அன்புக்கயிறு அறுந்து விழும்படி
வாய்மையைவிட்டு வாக்குத் தவறியவனை கொன்று ஒழிப்பது பாவமில்லை (ஆகவே)நீ அங்கே சென்று அவன் என்ன நினைக்கிறான் என்று கேட்டு வா.
ஒருவன் செய்த நன்றியை மறந்தவனைக் கொன்றாலும் பழிபாவமில்லை; ஆதலால், அச்சுக்கிரீவனது உண்மையான மனத்தை அறிந்து வருமாறு இலக்குவனிடம் இராமன் கூறினான்
“வெம்பு கண்டகர் விண்புக வேர் அறுத்து
இம்பர் நல் அறம் செய்ய எடுத்த வில்
கொம்பும் உண்டு; அரும் கூற்றமும் உண்டு; உங்கள்
அம்பும் உண்டு ” என்று சொல்லு நம் ஆணையே.
கொடியவர்கள் (போரில் மடிந்து) வீர சொர்க்கம் அடையும்படி (அவர்களை) வேரொடு அழித்து;-இவ்வுலகில் முறையான
தருமத்தை நிலைநிறுத்தும் பொருட்டு-(நாம்) கையில்
ஏந்திய வில் நம்மிடம் உள்ளது;(யாராலும் தடுக்கமுடியாத) இயமனும் இருக்கிறான் (வானரங்களாகிய) உங்களைக் கொல்லக் கூடிய வாலியைக் கொன்ற அம்பும்(எம்மிடம்) இருக்கின்றது -என்று நமது கட்டளையாக-(சுக்கிரீவனிடம்) சொல்வாய்.
‘நஞ்சம் அன்னவரை நலிந்தால், அது
வஞ்சம் அன்று; மனு வழக்கு ஆதலால்,
அஞ்சில், ஐம்பதில், ஒன்று அறியாதவன்
நெஞ்சில் நின்று நிலாவ, நிறுத்துவாய்.
கொடியவர்களைக் கொல்வது பாவமில்லை என்று மனு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது; (இதை) ஐந்து வயதிலும் ஐம்பது வயதிலும் தக்கது தகாதது என்பதனை அறியாதவனான அச்சுக்கிரீவனது மனத்தில் பதியும்படி சொல்லிவிட்டு வா
********
கண்ட வானரம்
காலனைக் கண்டபோல்
மண்டி ஓடின; வாலி
மகற்கு, ‘அமர்
கொண்ட சீற்றத்து
இளையோன் குறுகினான்,
சண்ட வேகத்தினால்’
என்று, சாற்றலும்,
-(கோபத்தோடு இலக்குன் வருவதைப்) பார்த்த வானரங்கள் இயமனைக் கண்டது போல (அச்சம் கொண்டு)-வாலி மைந்தனான அங்கதன் இருப்பிடம் நோக்கி ஓடினர்; போர் செய்யும் கோபக்கனல் பொங்க இராமன் தம்பியான இலக்குவன் உக்கிரமான வேகத்தோடு வந்து சேர்ந்துள்ளான்-என்று அங்கதனிடம் கூறின.
********
300.குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு- தமிழ்ப்பழமொழி
தெள்ளியோர் உதவு அப்பெருஞ் செல்வம் ஆம்
கள்ளினால் அதிகம் களித்தான்; கதிர்ப்
புள்ளி மால்நெடும் பொன்வரை புக்கது ஓர்
வெள்ளி மால்வரை என்ன விளங்குவான்; 4.10.19
தெள்ளியோர் உதவ -தெளிந்த அறிவுடையவரான இராமலக்கு வரால் வழங்கப்பெற்ற;பெருஞ்செல்வமாம் -பெரிய அரசாட்சிச் செல்வமாகிய
கள்ளினால் அதிகம் களித்தான் -கள்ளைக் குடித்ததனால் மிகுதியாகக்
களிப்பில் மிதந்தவனாய்;கதிர்ப்புள்ளி -ஒளிக்கற்றைகளின்
சேர்க்கையையுடைய;மாநெடும் பொன் வரை -மிகப்பெரிய பொன்னிற மாலையில்;புக்கது –புகுந்து தங்கக் கூடிய;ஓர் வெள்ளி மால் வரை என்ன –ஒரு வெள்ளி மலை போல;விளங்குவான் –
விளங்குபவன்.
களிப்பை உண்டாக்குதல் பற்றிப் பெருஞ்செல்வதைக் ‘கள்’ என்றான் கம்பன்– என்பது ஒரு விளக்கம் . உண்மையிலேயே அவன் கள் குடியன் என்பதை முன்னரே வாலி வழங்கிய அறிவுரையில் கண்டோம். ஆகையால் அதுவும் பொருந்தும் என்க.
‘வஞ்சமும், களவும், பொய்யும், மயக்கமும், மரபு இல் கொட்பும்,
“தஞ்சம் ” என்றாரை நீக்கும் தன்மையும், களிப்பும், தாக்கும்;
கஞ்ச மெல் அணங்கும் தீரும், கள்ளினால்; அருந்தினாரை
நஞ்சமும் கொல்வது அல்லால், நரகினை நல்காது அன்றே?
பின்னர் நாம் காணப்போகும் இந்தப் பாடல் சுக்ரீவன் குடிகாரன் என்பதைக் காட்டுகிறது; சுக்கிரீவன், மதுவுண்டு மதி மயங்கித் தன் கடமையினை மறந்த குற்றத்தினை எண்ணிவருந்தி கொண்டு கூறிய வசனம் இது!
–SUBHAM—
TAGS-கம்ப ராமாயணம் ,300 கேள்விகள், குடிபோதை சுக்ரீவன், ராமன் கோபம், நான்கு மாத கெடு, குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு