கிஷ்கிந்தா காண்டம்-ஓர் ஆய்வு – 37 (Post No.16,396)

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 16,396

Date uploaded in London –   12 November 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

This is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

கிஷ்கிந்தா காண்டம்-ஓர் ஆய்வு – 37

(ஆர். சேஷாத்ரிநாதன்) 

சுக்ரீவனின் ஞானம் நிறைந்த இந்த பேச்சை  அயோத்ய காண்டத்தில் இலக்ஷ்மணன் குகனிடம் பேசுவதோடு ஒப்பிடுகின்றனர் உரையாசிரியர்கள்

काहु न कोउ सुख दुख कर दाता। निज कृत करम भोग सबु भ्राता॥2॥

“யாரும் எவருக்கும் சுகத்தையோ துன்பத்தையோ கொடுப்பவர் அல்ல . அனைவரும் தாம் செய்யும் வினைப் பயன்களைத் தான் அனுபவிக்கிறார்கள்.

जोग बियोग भोग भल मंदा। हित अनहित मध्यम भ्रम फंदा॥

जनमु मरनु जहँ लगि जग जालू। संपति बिपति करमु अरु कालू॥3॥

சேர்க்கை, பிரிவு, நல்லவை, கேட்டவை, போகங்கள், நண்பர், பகைவர், இரண்டுமல்லாதார் இவை எல்லாமே பிரேமையினால் ஏற்பட்ட திரைகள். பிறவி, சாவு, செல்வம், ஆபத்து,  கருமம், காலம் என்றெல்லாம்  எங்கெல்லாமோ உலக மாயையை விரித்திருக்குதே”

दरनि धामु धनु पुर परिवारू। सरगु नरकु जहँ लगि ब्यवहारू॥

देखिअ सुनिअ गुनिअ मन माहीं। मोह मूल परमारथु नाहीं॥4॥

“பூமி, வீடு, செல்வம்,, நகரம், சுற்றம், சுவர்க்கம், நரகம் என்றெல்லாம் உலகத்தில் கூறப்படுகின்றனவே, இவற்றை பார்க்கிறோமே, கேள்விப்படுகிறோமே,! ஆராய்ந்து பார்க்கிறோமே! இதற்கெல்லாம் காரணம் மதி மயக்கம்தான்.. அறியாமைதான். ஒன்றுமே உண்மையல்ல..

सपनें होइ भिखारि नृपु रंकु नाकपति होइ।

जागें लाभु न हानि कछु तिमि प्रपंच जियँ जोइ॥92॥

எப்படிக் கனவில் அரசன் பிச்சைக்காரன் ஆகின்றானோ, பரதேசி சுவர்க்கத்தின் தலைவன் இந்திரனாகிறானோ, ஆனால் விழித்தபின் அதனால் எந்த வித லாப நஷ்டம் இல்லையோ அது போலதான் காணப்படும் உலகியலை உள்ளத்தில் ஆராய்ந்து பார்க்கவேண்டும் .

“मोह निसा सब सोवनिहारा।

देखिअ सपन अनेक प्रकारा॥

जानिअ तबहिं जीव जय जागा।

जब  सब बिषय बिलास बिरागा॥

होड़ बिबेक मोह भ्रम भागा।

तब रघुनाथ चरन अनुरागा॥

सखा परम परमारथ एहू।

मन क्रम बचन रामपद नेह्‌॥

सखा समुझि अस पारिहारि मोह।

सियरघुबीर चरन रत होहू ॥

அனைவரும் அறியாமை என்ற இரவில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தூக்கம் பலவித கனவுகளைக் காண்பிக்கிறது. உலகியலிலிருந்து விடுபட்டவர்கள் எப்பொழுது உலகியல் போக விலாசங்களில் முழுமையான வைராக்கியம் ஏற்படுகிறதோ  அப்பொழுதுதான் மனிதன் உலகில் விழிப்புடன் இருக்கிறான் என்று அறிய வேண்டும். விவேகம் வந்த பிறகு அறியாமை என்ற பிரமை ஓடிவிடுகிறது. அப்போது ரகுநாதன் திருவடிகளில் பிரேமை உண்டாகிறது. மனோவாக்கு செயல்களால் இராமன் திருவடிகளில் பிரேமை கொள்ள வேண்டும். அதுவே சிறந்த புருஷார்த்தம்.

இங்கு “सुख संपति” என்ற பதப் பிரயோகம் செய்கிறார் துளசிதாசர்.. இப்போது சுக்ரீவனுக்கு இராமன் வாலியைக் கொன்று தனக்கு அரசு, சொத்து, சுகம், குடும்பம் எல்லாவற்றையும் மீட்டுத் தந்துவிடுவார் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.. ஆனால் சுக்ரீவன் இப்போது சொல்கிறான். “ஐயனே! தாங்கள் இந்த உலகத்திற்கே பரமாத்மா. இதில் எந்தவித ஐயமுமில்லை மகாத்மாக்களும், துறவிகளும் சம்சார சாகரத்திலிருந்து விடுதலை பெற தங்களைப் பூஜிக்கின்றனர். எல்லோருக்கும் மோட்சம் அளிக்கும் உங்களிடமிருந்து அழியக்கூடிய பொருட்களை நான் எப்படிக் கேட்பேன்? தேவனே! பெண், புத்திரன், அரசு, செல்வம் எல்லாமே தங்களின் மாயத் திருவிளையாடல்கள். ஆனால் இப்பொழுது அவைகள் எனக்குத் தேவை இல்லை. என் மீது கருணை வையுங்கள். இன்று தாங்கள் எனக்குக் கிடைத்தது எனது பெரும் பாக்கியம். மண்ணைத் தோண்டியவனுக்குப் பெரிய பொக்கிஷம் கிடைத்தது போல தாங்கள் எனக்குக் கிடைத்திருக்கிறீர்கள். எனது மனம் தங்களிடமே ஈடுபாடுடன் இருக்கவேண்டும்.

இதே கருத்து  ஆத்யாத்ம இராமாயணத்திலும் சொல்லப்படுகிறது

ततोऽतिहर्षात्सुग्रीवो राममाहातिविस्मितः ॥ ७५॥

देव त्वं जगतां नाथः परमात्मा न संशयः ।

मत्पूर्वकृतपुण्यौघैः सङ्गतोऽद्य मया सह ॥ ७६॥

त्वां भजन्ति महात्मानः संसारविनिवृत्तये ।

त्वां प्राप्य मोक्षसचिवं प्रार्थयेऽहं कथं भवम् ॥ ७७॥

दाराः पुत्रा धनं राज्यं सर्वं त्वन्मायया कृतम् ।

अतोऽहं देवदेवेश नाकाङ्क्षेऽन्यत्प्रसीद मे ॥ ७८॥

आनन्दानुभवं त्वाद्य प्राप्तोऽहं भाग्यगौरवात् ।

मृदर्थं यतमानेन निधानमिव सत्पते ॥ ७९॥

त्तिष्ठतु मनो राम त्वयि नान्यत्र मे सदा ॥ ८३॥

न काङ्क्षे विजयं राम न च दारसुखादिकम् ।

भक्तिमेव सदा काङ्क्षे त्वयि बन्धविमोचनीम् ॥

त्वन्मायाकृतसंसारस्त्वदंशोऽहं रघूत्तम ।

स्वपादभक्तिमादिश्य त्राहि मां भवसङ्कटात् ॥ ८६॥

पूर्वं मित्रार्युदासीनास्त्वन्मायावृतचेतसः ।

आसन्मेऽद्य भवत्पाददर्शनादेव राघव ॥ ८७॥

सर्वं ब्रह्मैव मे भाति क्व मित्रं क्व च मे रिपुः ।

यावत्त्वन्मायया बद्धस्तावद्गुणविशेषता ॥ ८८॥

अतोऽविद्यामुपास्ते यः सोऽन्धे तमसि मज्जति ।

मायामूलमिदं सर्वं पुत्रदारादिबन्धनम् ।

तदुत्सारय मायां त्वं दासीं तव रघूत्तम ॥ ९०॥

ஓ தேவ:! நீங்கள்‌ உலகங்களுக்கு நாதனாகியவர்‌, பரமாத்மா! சந்தேகமில்லை, நான்‌ முன்‌ செய்த தபோபலத்தால்‌ தங்களுடைய சேர்க்கையை யடைந்தேன்‌. மஹாத்மாக்கள்‌ அவர்களுடைய சம்சார பர்தம்‌ நிவர்த்தியடையத்‌ தங்களைப்‌ பஜனை செய்கிறுர்கள்‌, மோக்ஷத்துக்கு ஒத்தாசை செய்யுந் தங்களை நான்‌ அடைந்திருக்க, எவ்விதம்‌ சம்சார சம்பந்தமானவைகளைப்‌ பிரார்த்திப்பேன்?.. மனைவி, மைந்தர்‌, ஐஸ்வரியம்‌, இராஜ்யம்‌ இவைகளி லுண்டாகும்‌ இச்சை மாயையால் ஏற்பட்டது.

ஒ தேவதேவே? இப்போது நான்‌ மற்ற எதையும்‌ விரும்பவில்லை, எனக்கு அனுக்கிரகம் ‌ செய்யவேண்டும்‌. இப்போது தங்கள்‌ சேர்ச்கைப் பாக்கியத்தால்‌ ஆனந்தத்தின்‌ ௮நுபவத்தையடைர்தேன்‌. ஸா.துக்களுக்குப்‌ பதியாகிய ஓ இராகவ!  இப்போது தாங்கள்‌ எனக்‌காக, என்னைப்போன்ற சமமான உருவத் துடன்‌ வந்தவர்‌,  அனாதியான ௮வித்தையின்‌ பந்தமானது சேதமடைந்தது, இந்த ௮வித்தையின்‌ பந்தமானது, யாகத்தாலும்‌, தானத்தாலும்‌, கருமத்தாலும்‌, எவ்வித புண்ணியத்தாலும்‌ நாசமடையாது, .

ஓ பிரபுவே! தங்களுடைய ஸ்ரீபாதங்களைத் தரிசிப்பதால் ‌உடனே பந்தமானது நாசமடையும்‌, சந்தேகமில்லை. எவனுடைய மனம்‌ அரைக்ஷண நேரமாவது தங்களிடம்‌ அசையாமல்‌ நிற்கிறதோ அவனுடைய அனர்த்தங்களுக்கு, மூலகாரணமான ௮ஞ்ஞானமானது அக்தக் கணத்தில்‌ நாசமடையும்‌,

ஓ இராமச்சந்திர? ௮ந்தமனம்‌ தங்களிடமோ அல்லது மற்றவிடத்திலோ இருந்தபோதிலும்‌ எப்போதும்‌ எவனுடைய வாக்‌கானது இராம! இசாம/ என்‌.று இனிமையாகக்‌ கானம்‌ செய்ததோ அ/வ்வாக்குடையவன்‌ பிரம்மஹத்தி செய்தவனாயினும்‌, ஸுராபானம்‌ செய்தவனாயினும்‌ பாதகங்கள்‌ யாவற்றிலும்‌ நின்று விடுபடுகிறான்‌ , நான்‌ ராஜ்யத்தை விரும்பவில்லை ; மனைவி, சுகம்‌ முதலியவற்றையும்‌ விரும்பவில்லை; சம்சார பந்‌தத்தை விடுவிக்கும்‌, தங்களிடம்‌ வைக்‌கும்‌ பக்தியையே விரும்புகிறேன்‌.

ஓ இரகு சிரேஷ்ட!  நான்‌ தங்களுடைய மாயையால்‌ இந்த தேகம்‌ எடுத்தவன்‌, தங்களுடைய ௮ம்சமானவன்‌, தங்களுடைய  சரணபக்தியை ஆசிரயத்திருக்கிறேன்.  என்னை சம்சார உபத்‌திரவத்‌தில்  இருந்து  காப்பாற்றவேண்டும்‌,  தங்களுடைய மாயை சூழ்ந்த மனமுடைய எனக்குத்‌ தங்களுடைய பாதார விந்தங்களின்‌ தரிசனத்தால்‌, மித்துரு, ௪த்ரு என்ற விஷ.பங்களில்‌ வெறுப்புண்டாயிற்‌.று, யாவற்றும்‌ எனக்குப்‌ பிரமமாகவே தோற்றுறெது. எனக்கு மித்ரன்‌ யார்‌, சத்துரு யார்‌?  எதுவரையில்‌ தங்களுடைய மாயையில்‌ கட்டுண்டார்களோ ௮துவரையில்‌ அவர்களுக்குக்‌ குண விசேஷங்களிருக்கின்றன, அந்த மாயை எதுவரையில்‌ இருக்கிறதோ ௮து வரையில்‌ பலவிதமான தோற்றமுண்டாகிறது, எதுவரையில்‌ பலவிதமான தோற்றமுண்டாகிறகோ அதுவரையில்‌ காலனால்‌ பயமுண்டாகிறது, ஆகையால்‌ ௮வித்தையை எவன்‌ உபாசிக்கிறானோ அவன்‌ இருள்போன்ற அஞ்ஞானத்தில்‌ மூழ்கிவிடுகிறான்., பெண்டிர்‌, பிள்ளை முதலிய பந்தங்கள் யாவும்‌ மாயையின்‌ காரணம்‌.

ஓ ராகவ! தாஸனாகிய என்னை விட்டுத்‌ தங்கள்‌ மாயையை விலகும்படி. செப்யவேண்டும்., என் மனமானது எப்போதும்  தங்களுடைய பாதபத்மங்களிலும்‌, என்‌ வாக்கானது தங்களுடைய நாமங்களை ஜெபிப்பதிலும்‌, என்னிருகைகளும்‌ தங்களுடைய பக்தர்களைச்‌ சேவிப்பதிலும்‌, என்‌ சரீரமானது. தங்களுடைய சரீர ஆலிங்கனத்‌திலும்  உபயோகப்படவேண்டும்‌. என்னுடைப கண்கள்  தங்‌களையும்‌, தங்கள்‌ மூர்த்திகளையும்‌ தங்கள்‌ பக்தர்களையும்‌,  என்‌ குருவையும்‌ எப்போதும்‌ தரிசிக்க வேண்டும்‌. என்‌ செவியானது தங்கள்‌ ௮வதாரச்‌ சரிதைகளைக்‌ கேட்கவேண்டும்‌. என்னிரு பாதங்களும்‌ தங்களுடைய ஆலயக்களுக்குச்‌ செல்லவேண்டும்‌,

बालि परम हित जासु प्रसादा। मिलेहु राम तुम्ह समन बिषादा॥

सपनें जेहि सन होइ लराई। जागें समुझत मन सकुचाई॥10॥

இரகுவீரா! ஒரு வகையில் வாலி எனக்கு மிகவும் நன்மை செய்தவன் ஆவான். அவனுடைய கருணையினால் தான் என் துன்பங்களைத் துடைத்தருளும் தாங்கள் எனக்குக் கிடைத்தீர்கள்.(அப்படிப்பட்ட உதவி செய்த) அவனோடு  நான் கனவில் சண்டை செய்தால் கூட விழித்து எழுந்ததும்  அவனுடன் ஏன் சண்டை செய்தேன் என்று மனம் வருந்துவேன்.

துளசிதாசர் सपने जेहि सन होड़ लरा्ई।” என்று சொல்கிறார். அதாவது கனவில் சண்டையிடும்போதே நான் கூச்சப்படுவேன். ஆதலால் இனி கனவில் கூட வாலியுடன் நான் சண்டையிடமாட்டேன்.. என்று  சொல்ல வருகிறான் சுக்ரீவன்.

**                   தொடரும்

Leave a comment

Leave a Reply