தன் உயிரைப் பணயம் வைத்து அதிசயக் கண்டுபிடிப்பைச் செய்த நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி! (Post.16,394)

Barry J. Marshall of Australia aknowledges fellow Nobel Laureates applause after receiving the joint Nobel Prize for Medicine from King Carl XVI...

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,394

Date uploaded in London –12 November 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

தினமணி 1-11-26 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

தன் உயிரைப் பணயம் வைத்து அதிசயக் கண்டுபிடிப்பைச் செய்த நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி!

ச. நாகராஜன்

அறிவியல் உலகில் தன் உயிரைப் பணயம் வைத்து முக்கியமான கண்டுபிடிப்பை ஒரு விஞ்ஞானி செய்தார் என்றால் அது அதிசயமாக இருக்கிறதல்லவா?

அப்படிச் செய்தவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பேரி ஜேம்ஸ் மார்ஷல் (Barry James Marshall) என்ற விஞ்ஞானி ஆவார். (பிறப்பு 30-9-1951 இப்போது வயது 75)

ஆஸ்திரேலியாவில் கல்கோர்லி என்ற இடத்தில் பிறந்த பேரி மார்ஷல் மருத்துவப் படிப்பில் வெற்றி பெற்று, அறுவை சிகிச்சையிலும் தேர்ந்தார். அட்ரியன் என்ற பெண்மணியை மணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் உள்ளனர்.

1979ம் ஆண்டு அவர் ராயல் பெர்த் மருத்துவமனையில் ரிஜிஸ்ட்ரார் பதவியில் நியமிக்கப்பட்டார். அங்கு கேஸ்ட்ரிடிஸ் (Gastritis) எனப்படும் இரைப்பை வீக்கம் பற்றிய ஆய்வில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.

இரைப்பையில் உள்ள பாக்டீரியாக்களினால் தான் வீக்கம் உண்டாகிறது என்பதை அவர் கண்டறிந்தார். ஆனால் அனைவரும் இதை நம்ப மறுத்தனர்.

வயிற்றில் ஏற்படும் புற்றுநோய்க்கான காரணம் அதிக அழுத்தமும், காரவகை உணவுகளுமே காரணம் என்று அனைவரும் நம்பினர்.

தனது கண்டுபிடிப்பை ஒரு ஆய்வு பேப்பராக அவர் எழுதினார். அதை இரைப்பை சம்பந்தமான ஆய்வு நடத்தும் ஆஸ்திரேலிய சங்கத்திற்கு அனுப்பினார். கடைசி பத்து சதவிகித பேப்பரில் ஒன்றாக அனைவரும் அதை கீழே தள்ளினர்.

இது மார்ஷலுக்கு பெருத்த அவமானமாக ஆகிவிட்டது. உடனே ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தார் அவர்.

ஆய்வுக்காக உள்ள ஒரு சின்னத் தட்டில் பாக்டீரியாக்களை நிரப்பி அதை அப்படியே அவர் விழுங்கினார்.  தான் சொன்னது சரிதான் என்பதை நிரூபிக்க அவருக்கு வேறு வழி தெரியவில்லை. தன் உயிரைப் பணயம் வைத்து அவர் அப்படிச் செய்தார்.

அல்சர் எனப்படும் புண் வயிற்றில் உருவாக சில வருடங்கள் ஆகலாம் என்று நினைத்திருந்த மார்ஷலுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. மூன்றே நாட்களில் அந்த நோய்க்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன. எட்டே நாட்களில் இரைப்பை வீக்கம் ஏற்பட்டு விட்டது.  பதினான்காவது நாளில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நோய்க்கான சிகிச்சையைப் பெற ஆரம்பித்தார்.

அனைவருக்கும் அவர் சொன்னது உண்மை தான் என்பது புரிய ஆரம்பித்தது. வயிற்றில் ஏற்படும் கான்ஸருக்கு (புற்றுநோய்க்கு) காரணம் இது தான் என்பதை நிதர்சனமாக தன் உயிரைப் பணயம் வைத்து அவர் நிரூபித்தது அனைவரையும் பிரமிக்க வைத்தது.

மருத்துவத்திற்கான நோபல் பரிசை 2005ம் ஆண்டில் அவர் பெற்றார்.

2007ம் ஆண்டில் மார்ஷல் சென்டர் என்ற ஆய்வு மையத்திற்கு அவர் இணை இயக்குநராக நியமிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

இன்னும் ஏராளமான விருதுகள் அவரைத் தேடி வந்தன.

அனைவரும் ஒதுக்கிய போதும் தான் கண்டுபிடித்த உண்மையை உலக நன்மைக்காக தன் உயிரைப் பணயம் வைத்து நிரூபித்த மார்ஷல் அறிவியல் உலகில் ஒரு அபூர்வமான மனிதர் அல்லவா!

**

Leave a comment

Leave a Reply