

Written by London Swaminathan
Post No. 16,410
Date uploaded in London – 19 November 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தலைப்புச் செய்திகள்
அனுமன் குரங்குச் சேஷ்டையில் அசோக வனம் சேதம்!
கிங்கரர்களை அனுமன் தீர்த்துக் கட்டினான்!
மாருதி தாக்குதலில் சம்புமாலி மரணம்!
***
(ராமன் கொடுத்த கணையாழியை-அதாவது மோதிரத்தை – அசோகவனத்தில் சிறைவைக்கப்பட்ட சீதையிடம் அனுமன் கொடுத்தான் ; அவளும் அகம் மகிழ்ந்து, உளம் குளிர்ந்து, ஆனந்தக் கண்ணீர் விட்டாள். அவள் சூடாமணி என்னும் தலையில் அணியும் ஆபரணத்தை அனுமன் மூலம் ராமனுக்கு அனுப்பினாள்; திரும்பிச் செல்லும் அனுமன், குரங்குச் சேஷ்டை களைக் காண்பிக்கிறான். சோலைகளை சேதப்படுத்தவே ராவணன் ஒவ்வொருவராக அனுப்பி மாருதி என்னும் அனுமானைப் பிடிக்க முயற்சிக்கிறான் ; அவன் வெற்றி பெற்றானா? இதோ வெள்ளித் திரையில் காண்போம்).
411
அசோக வனச் சோலைகளை அனுமன் அழித்ததை கம்பன் எப்படி வருணிக்கிறான் ?
412
Kamban’s Philosophical Lesson!
இதன் மூலம் கம்பன் கற்பிக்கும் தத்துவ விஷயம் என்ன?
413
Well, I was also Cheated by a demon!
அனுமன் செய்த செயலை சீதையிடம் அரக்கிகள் புகார் செய்தவுடன் அவள் உதிர்த்த பொன்மொழி என்ன ?
414
Ha Ha Ha Ha Ha ! One Monkey Did it!!! U must be Idiots! Ha Ha Ha Ha Ha
சோலைகளை ஒரு குரங்கு அழித்ததாகக் கேட்டவுடன் ராவணன் எப்படி நகைத்தான் ?
415
அநுமனைப் பிடிக்குமாறு இராவணன் கிங்கரரை ஏவியபோது என்ன சொன்னான் ?
416
கம்பன் சொல்லும் ஆயுதங்களின் பட்டியலைப் பார்ப்போமா ?
417
Eight different verbs
அரக்கர்களை எதிர்த்தை அனுமன் செயலை விளக்கும் இந்தப்பாடலின் வினைச் சொற்களைப் பாருங்கள் ; பொருள் புரியாவிட்டால் விடைப்பகுதிக்குச் செல்லுங்கள்:
பறை புரை விழிகள் பறிந்தார்,
படியிடை நெடிது படிந்தார்,
பிறை புரை எயிறும் இழந்தார்,
பிடரொடு தலைகள் பிளந்தார்,
குறை உயிர் சிதற நெரிந்தார்,
குடரொடு குருதி குழைந்தார்,
முறை முறை படைகள் எறிந்தார்,
முடை உடல் மறிய முறிந்தார்.
418
ராவணன் அனுப்பிய கிங்கரர்களை அனுமன் எப்படி வதைத்தான்?
419
Kamban’s Arithmetic
சம்புமாலியின் சேனை எவ்வளவு பெரிது? கம்பன் ஒரு கணக்குப் புலியா ? புளியா?
420
Jambumali Finito !
சம்புமாலியின் கதையை அனுமன் எப்படி முடித்தான் ?
XXXXXXXXXXXXXXXXXXXX


விடைகள்
411.அசோகவன அழிவுபாடுகளின் வருணனை (5545-5576)
5545. முடிந்தன; பிளந்தன; முரிந்தன; நெரிந்த;
மடிந்தன; பொடிந்தன; மறிந்தன; முறிந்த;
இடிந்தன; தகர்ந்தன; எரிந்தன; கரிந்த;
ஒடிந்தன; ஒசிந்தன; உதிர்ந்தன; பிதிர்ந்த.
அனுமனது கால்களால் துகைக்கப்பட்ட மரங்களில் சில அழிந்து போயின, சில பிளவுபட்டன, சில முரிந்தன, வளைந்து விட்டன, சில ஒன்றோடு ஒன்று தாக்கி நொறுங்கி அழிந்தன, சில தலைசாய்ந்தன, சில பொடியாய்ப் போய் விட்டன, சில கீழ் மேலாகக் கவிழ்ந்தன, துண்டுகளாகப் போய் விட்டன. சில இடிபட்டுப் போயின, சில சிதள் சிதளாய்த் தெறித்துப் போயின. சில நெருப்புப் பற்றி எரிந்து கருகிப் போயின, ஒடிபட்டன. சில துவண்டு சாய்ந்தன, சில வலியற்று உதிர்வன ஆயின, சின்னபின்னப்பட்டன
விலங்கு பறவைகளின் நிலை (5578-5579)
5578. கதறின வெருவி, உள்ளம்
கலங்கின, விலங்கு; கண்கள்
குதறின பறவை, வேலை
குளித்தன, குளித்திலாத
பதறின; பதைத்த; வானில்
பறந்தன; பறந்து பார்வீழ்ந்து
உதறின சிறையை; மீள
ஒடுக்கின உலந்து போன.
விலங்குகளும் பறவைகளும் கதறின; மனத்தில் கலக்கம் அடைந்தன ; கண்கள் குதறிப் போயின; சில கடலில் விழுந்து குளித்தன ;ஏனையவை பதறின. பல பறவைகள் வானத்தில் வெகு உயரம் சென்றன; பல பறவைகளை கீழே விழுந்து இறக்கைகளை இழந்தன ; அதனால் இயங்க முடியாதபடி கஷ்டப்பட்டன .
***************
412.இதன் மூலம் கம்பன் கற்பிக்கும் தத்துவ விஷயம்
ஊனம் உற்றிட, மண்ணின் உதித்தவர்,
ஞானம் முற்றுபு நண்ணினர் வீடு என,
தான கற்பகத் தண்டலை விண்தலம்,
போன, புக்கன, முன் உறை பொன்னகர்.(சுந்கா 716 / 5451)
குற்றம் செய்ததால் இந்த மண்ணுலகத்தில் பிறந்த தேவர்கள் பிறகு ஞானம் முழுமையாக நிரம்பியவுடன் துறக்கத்தை/ சுவர்க்க லோகத்தை அடைகிறார்கள் ; அதைப் போல கொடைக்குணம் பெற்ற கற்பக மரங்கள் அடர்ந்த அந்த அசோகவனச் சோலை அனுமனால் வீசி எறியப்பட்டு வான் வழியாகச் சென்று முன்னே தங்கியிருந்த சுவர்க்க லோகம் போய்ச் சேர்ந்தன
***************
413. அனுமன் செய்த செயலை சீதையிடம் அரக்கிகள் புகார் செய்தவுடன் அவள் உதிர்த்த பொன்மொழி :–
5584. ‘தீயவர் தீய செய்தல்
தீயவர் தரெியின் அல்லால்
தூயவர் தரெிதல் உண்டோ?
நும் உடைச் சூழல் எல்லாம்
ஆய மான் எய்த, அம்மான்
இளையவன், “அரக்கர் செய்த
மாயம் ‘‘ என்று உரைக்கவேயும்,
மெய் என மையல்கொண்டேன்.
கெட்டவர்கள் செய்யும் செயல்களைக் கெட்டவர்களே புரிந்து கொள்வார்கள் ; என்னைப்போன்ற தூயவர்களுக்கு விளங்காது. .(பாம்பின் கால் பாம்பறியும்) . எடுத்துக் காட்டாக என்னைப்பார்! மாரீசன் என்னும் அரக்கன் போட்ட மான் வேடத்தை அறியாமல் ஏமாந்தேன்!
***************
414.காவலர் கூறக்கேட்ட இராவணன் இகழ்ந்து நகுதல்
5594. ஆடகத் தருவின் சோலை
பொடிபடுத்து, அரக்கர் காக்கும்
தேடு அரும் வேரம் வாங்கி,
இலங்கையும் சிதைத்தது அம்மா!
கோடரம் ஒன்றே, நன்று இது
இராக்கதர் கொற்றம் சொற்றல்
மூடரும் மொழியார்; என்ன
மன்னனும் முறுவல் செய்தான்.
அருமையான கற்பக மரங்கள் நிறைந்த சோலைகளை அழித்து இலங்கையை ஒரு குரங்கு அழித்தது என்று ஒரு முட்டாள்கூட சொல்லமாட்டான் என்று சொல்லி ராவணன் எள்ளி நகை ஆடினான்.
***************
415 அநுமனைப் பிடிக்குமாறு இராவணன் கிங்கரரை ஏவுதல்
ராவணன் கிங்கரர்களை ஏவியபோது ஒரு பக்கம் புன்னகையும் மறுபக்கம் பொறாமையும் இருந்தது ; அந்தக் குரங்கின் போக்கினைத் தடுத்து நிறுத்தி அதைக் கொல்லாமல் பிடித்துக்கொண்டு வாருங்கள் என்று கட்டளை இட்டான்
5598. புல்லிய முறுவல் தோன்றப்
பொறாமையும் சிறிது பொங்க,
எல்லை இல் ஆற்றல் மாக்கள்
எண் இறந்தாரை ஏவி,
“வல்லையின் அகலா வண்ணம்,
வானையும் வழியை மாற்றிக்,
கொல்லலிர், குரங்கை நொய்தில்
பற்றுதிர், கொணர்திர்! ‘‘ என்றான்.
***************
416. ஆயுதங்களுடன் கிங்கரர்கள் புறப்படுதல்
அசோகவனத்தில் இருந்த சீதாபிராட்டியைச் சந்தித்துவிட்டு, அங்கிருந்த மரங்களை அழித்து அனுமன் போர்புரியத் தொடங்கியபோது, இராவணன் அவனைக் கொல்வதற்காகவோ அல்லது பிடித்து வருவதற்காகவோ ‘கிங்கரர்கள்’ எனப்படும் எண்பதினாயிரம் (80,000) அரக்கப்படை வீரர்களை ஏவுகிறான். அந்த அரக்கர்கள் கைகளில் ஏந்திவந்த பயங்கரமான பண்டைய காலப் படைக்கலன்களைக் (ஆயுதங்களை) கம்பர் இந்த வரியில் வரிசைப்படுத்துகிறார்.
5599. சூலம், வாள், முசலம், கூர்வேல்,
தோமரம், தண்டு, பிண்டி
பாலமே, முதலாயுள்ள
படைக்கலம் பரித்த கையர்;
ஆலமே அனைய மெய்யர்;
அகலிடம் அழிவு செய்யும்
காலம் மேல் எழுந்த மூரிக்
கடல் எனக், கடிது செல்வார்.
இன்னொரு பாட்டிலும் ஆயுதங்களின் பட்டியலை நாம் காணலாம்
5604. சக்கரம், உலக்கை, தண்டு,
தாரை, வாள், பரிகம், சங்கு,
முற்கரம், முசுண்டி, பிண்டிபாலம்,
வேல், சூலம், முள் கோல்,
பொன்கரம் குலிசம், பாசம்,
புகர்மழு, எழு பொன்குந்தம்,
வில், கரும் கணை, விட்டேறு,
கழுக்கடை எழுக்கள் மின்ன.
சூலம், மழு, வாளொடு, அயில், தோமரம், உலக்கை,
காலன் வரி வில், பகழி, கற்பணம், முசுண்டி,
கோல், கணையம்,நேமி, குலிசம், சுரிகை, குந்தம்,
வாலம் முதல் ஆயுதம் வலித்தனர் வலத்தார்
சூலாயுதம் (முத்தலை வேல்), மழு (கோடரி), வாள், வேல், பேரீட்டி (தோமரம்), இருப்புலக்கை, உயிர்களை எடுக்கும் எமன் போன்ற வில்-அம்பு, இரும்பு நெரிஞ்சி முள் (கற்பணம்), முசுண்டி, தடி, வளைதடி (கணையம்), சக்கரம், வச்சிராயுதம் (குலிசம்), உடை வாள், கை வேல், திருகுதடி (பிண்டி பாலம்) முத்லிய ஆயுதங்களை உறுதியாகப் பிடித்திருந்தார்கள்.
இவை எல்லாம் அரக்கர் கைகளில் ஏந்தியிருந்த ஆயுதங்கள்
அடுத்த பாடலில்
அங்குசம், நெடுங்கவண் அயில் சிலை வழங்கும்
வெங்குசைய பாச முதல் வெய்ய பயில் கையார்;
செங்குருதி அன்ன செறி குஞ்சியர்; சினத்தோர்;
பங்குனி மலர்ந்து ஒளிர் பலாசவனம் ஒப்பார்
அரக்கர்கள் மேலும் அங்குசம் (மாவெட்டி; யானைகளை அடக்கப் பயன்படுத்துவது) நீண்ட கல் எறி கயிறு, நுனியில் கூர்மையுடையதும், வீசும்போது ஒலி எழுப்புவதுமான தர்ப்பைப் புல் போல அறுக்க வல்லதுமான கயிற்று வடிவிலுள்ள பாசக் கயிறு, முதலான ஆயுதனக்களைக் கைகளில் வைத்திருந்தார்கள். அவர்கள் ரத்தம் போலச் சிவந்த செம்பட்டை முடியினர்; கண்களும் கோபக் கனலை வீசின; அவர்களுடைய தோற்றம் பங்குனி மாதத்தில் மலர்ந்து விளங்கும் கல்யாண முருங்கைமரக் காட்டை ஒத்திருந்தது.

கல்யாண முருங்கை மரத்தை பூடியா மானோஸ்பெர்மா Butea monosperma என்ற தாவரவியல் பெயரால் அழைப்பர். அது ஹிமாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் காடு முழுதும் காணப்படும். வசந்த கலத்தில் அது காலை, மாலைச் சூரிய ஒளியில் காடே தீப்பற்றி எரிவதுபோலக் காட்சியை உண்டாக்கும். ஆகையால் இதைத் தாவரவியல் பிரியர்கள் (Flame of the Forest) காட்டின் தீ என்று அழைப்பர். கம்பன், இதைக் கண்டிருக்க வேண்டும். அரக்கர்களின் தலை செம்பட்டை முடியை அதற்கு ஒப்பிட்டது தாவரவியல் படித்தோருக்கும் பூங்காக்களில் செம் முருங்கை (Butea monosperma) மரங்கள் பூத்துக் குலுங்குவதை ரசிப்போருக்கும் விசேஷ அர்த்தத்தைத் தரும்.
இப்பாடலில் வரும் ஆயுதங்களுக்கான விளக்கங்கள்:
• சூலம்: முத்தலை வேல் (Trident).
• வாள்: கூர்மையான பட்டாக்கத்தி (Sword).
• முசலம்: இருப்புலக்கை / இரும்புத் தடி (Pestle / Iron club).
• கூர்வேல்: கூர்மையான வேல் ஆயுதம் (Spear).
• தோமரம்: பெரிய எறியீட்டி அல்லது பேரீட்டி (Javelin / Heavy lance).
• தண்டு: தண்டாயுதம் / கதாயுதம் (Mace / Bludgeon).
• பிண்டிபாலம் (பிண்டி பாலம்): எறிவட்டக் கவண் அல்லது திருகுதடி எனப்படும் ஒருவகை வீசியெறியும் ஆயுதம்.
விஷத்தைப் போன்ற கொடிய உடலமைப்பைக் கொண்ட அந்த அரக்கர்கள், இந்த ஆயுதங்களையெல்லாம் கைகளில் ஏந்திக்கொண்டு, உலகத்தையே அழிக்க நினைக்கும் ஊழிக்காலத்துப் பெருங்கடலைப் போல பேரிரைச்சலோடு அனுமனை நோக்கிப் பாய்ந்து வந்தார்கள் என்பதாகும்.
கம்பன் சொல்லும் ஆயுதங்கள் 1. இலக்கியங்களில் குறிப்பிடப்படும் பாரம்பரிய ஆயுதங்கள்


தமிழ் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்களில் (குறிப்பாக அரக்கர்கள் மற்றும் வீரர்கள் பயன்படுத்தியதாக) பட்டியலிடப்பட்டுள்ள சில முக்கிய ஆயுதங்கள்:
• சூலாயுதம்: முத்தலை வேல்
• மழு: கோடரி வடிவிலான ஆயுதம்
• பேரீட்டி (தோமரம்): எறியும் ஈட்டி வகை
• கற்பணம்: இரும்பு நெரிஞ்சி முள் போன்ற அமைப்பு கொண்டது
• பிண்டிபாலம் (திருகுதடி): சுழற்றி எறியும் தடி
• கணையம்: வளைதடி வடிவிலான ஆயுதம்
• முசுண்டி, இருப்புலக்கை மற்றும் வச்சிராயுதம் (குலிசம்)
***************
417.(அனுமன் மரங்கொண்டு தாக்க)
அடிபட்டு, தோற்பறை போன்ற அகன்ற கண்களை இழந்தனர், சிலர்.தரையின் மீது நீள விழுந்தனர், சிலர்.பிறை போன்று வளைந்த பற்களைப் பிரிந்தனர் சிலர்; பின் கழுத்தும் தலைகளும் பிளக்கப்பட்டு
இறந்தனர் சிலர்.உயிர் சிதறும் படி மிதிபட்டு அழிந்தனர் சிலர்.குடலோடு இரத்தமும் வெளியேற அழிந்தனர் சிலர்.
மீதமிருந்தோர் வரிசையில் நின்று ஆயுதங்களை வீசினர்; முடை நாற்றமுள்ள உடம்புகள் முறிய மரித்தனர்.
***************
418.கிங்கர்களை அனுமன் அழித்த முறை
கண்டனம், ஒருபுடை நின்று, கண்களால்;
தெண் திரைக் கடல் என வளைந்த சேனையை,
மண்டலம் திரிந்து, தன் வாலினால் சுருட்டி,
அண்டம் உற்றது ஓர் மலை அரைப்பது போன்றதால்!
பாடலின் பொருள்:
“அரசனே! நாங்கள் ஒரு பக்கமாக மறைந்து நின்று எங்கள் கண்களாலேயே அந்த ஆஞ்சநேயனின் பேராற்றலை நேரடியாகக் கண்டோம். தெளிந்த அலைகளைக் கொண்ட கடல் போலச் சூழ்ந்து நின்ற நமது அரக்கர் சேனையை, அவன் வட்டமாகச் சுற்றித் தன் வாலினாலேயே வாரிச் சுருட்டினான். அந்தத் தோற்றம், அண்டமுகடு வரை உயர்ந்து நின்ற ஒரு பெரிய மலையை மற்றுமொரு மலையைக் கொண்டு அரைப்பது போல (அவ்வளவு எளிதாகவும் ஆக்ரோஷமாகவும்) இருந்தது.
***************
419.சம்புமாலியொடு சென்ற சேனையின் அளவு
5667. ஆயிரம் ஐந்தொடு ஐந்து ஆம் ஆழி
அம் தடம் தேர், அத்தேர்க்கு
ஏயின இரட்டி யானை,
யானையின் இரட்டி பாய்மா,
போயின பதாதி சொன்ன
புரவியின் இரட்டி போல் ஆம்,
தீயவன் தடம் தேர் சுற்றித்
தறெ்று எனச் சென்ற சேனை.
கொடியவனான சம்புமாலியினது பெரிய தேரைச் சூழ்ந்து விரைவாகச் சென்ற அரக்கர் படையில், சக்கரங்களை உடைய அழகிய பெரிய தேர்கள் பத்தாயிரமாகும். அங்குப் பொருந்திய யானைகளின் அளவு, அத் தேர்த் தொகைக்கு இரட்டிப் புள்ளதாகும் = இருபதினாயிரம். பாயும் குதிரைகள், யானைத் தொகையினும் இரு மடங்காகும் = நாற்பதினாயிரம். சென்ற காலாட் படை, கூறப்பட்ட குதிரைத் தொகையினும் இரு மடங்காகும் = எண்பதினாயிரம்.
ஐந்தாயிரத்தொடு ஒரு ஐந்தாயிரம் = 10000/ தேர்கள்.
அதில் இரட்டி = 20000 யானை.
அதில் இருது = 40000 பாயும் குதிரைகள்.
அதில் இருமடங்கு = 80000 பதாதிகள் அதாவது காலாட் படைகள்!
எத்தனை அருமையான கணக்கு!
***************
420. கிங்கர்களை வதைத்த அனுமன் அடுத்து வந்த சம்புமாலியை வதைத்த முறை :
5573.
இருந்தனன், எழுந்தனன், இழிந்தனன்,
உயர்ந்தான்
திரிந்தனன், புரிந்தனன், என நனி
தெரியார்;
விரிந்தவர், குவிந்தவர், விலங்கினர்,
கலந்தார்,
பொருந்தினர், நெருங்கினர், களம் படப்
புடைத்தான்.
தோரண வளைவில் அமர்ந்திருந்த அனுமான் எழுந்தான், இறங்கினான். நிமிர்ந்தான், யார் என்ன என்றேதும் பார்க்காது பரவி நின்றவரையும், நெருங்கி நின்றவரையும் விலகிச் சென்றவரையும், ஒன்றுபடக் கலந்து நின்றவரையும், போர்க்களத்தில் வந்த அனைவரையும் அழிந்து போகும்படி, ஒரு சேர அடித்துக்கொன்றான்.
5596.
சலித்தான் ஐயன்; கையால் எய்யும்
சாரத்தை உகச் சாடி
ஒலித் தார் அமரர் கண்டார் ஆர்ப்ப,
தேரினுள் புக்கு,
கலித்தான் சிலையைக் கையால் வாங்கி,
கழுத்தினிடை இட்டு,
வலித்தான், பகு வாய் மடித்து மலைபோல்
தலை மண்ணிடை வீழ.
( அயராது போரிடும் சம்புமாலியால்) சலித்துப் போனான்
கையாலேயே அவன் எய்தும் அம்புகளைத் தடுத்தான்,
மாலை அணிந்த தேவர்கள் ஆர்ப்பரிக்க சம்புமாலியின் தேரினுள் பாய்ந்தான். வில்லைக் கையினாலேயே பற்றினான். தன் திறந்த வாயை மடித்து மலை போன்ற அவன் தலை மண்ணில் விழ,
அவ்வில்லை அவன் கழுத்தில் மாட்டி இழுத்தான்.
–சுபம்—TAGS- கம்ப ராமாயணத்தில் 420 கேள்விகள், அனுமன், குரங்குச் சேஷ்டை, அசோக வனம், கிங்கரர்கள்,மாருதி, சம்புமாலி மரணம்!