அனுமனை ‘டா’ போட்டு ஏகவசனத்தில் ஏசிய ராவணன்! கம்ப ராமாயணத்தில் 440 கேள்விகள் (Post16,414)

Written by London Swaminathan

Post No. 16,414

Date uploaded in London – 21 November 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

This is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

431

அனுமனை எதிர்க்கவந்த காலாட்படை வீரர்களை அனுமன் அழித்ததை கம்பன் எப்படி வருணித்தான்?

432

இந்த அருமையான வரிகளை அனுமனை நோக்கி இந்திரஜித் சொன்னான் ; பொருள் புரிகிறதா?

‘நல்லை ! நல்லை ! இஞ் ஞாலத்துள், நின் ஒக்க

நல்லார்

இல்லை !இல்லையால் ! எறுழ் வலிக்கு யாரொடும்

இகல

வல்லை ! வல்லை! இன்று ஆகும், நீ படைத்துள

வாழ்நாட்கு

எல்லை ! எல்லை!‘ என்று, இந்திரசித்துவும்

இசைத்தான்.

433

நல்லை நல்லை,  வல்லை வல்லை, உனது ஆயுளுக்கு  இன்று எல்லை எல்லை என்று இந்திரஜித் சொன்னதற்கு அனுமன் கொடுத்த பொருத்தமான பதில் என்னை என்னை ??

434

இந்திரஜித்தின் பிராம்ஸ்த்திரத்தில் அனுமன் வீழ்ந்தானா ? வீழ்ந்தது போல நடித்தானா ?

435

பிரம்மாஸ்திரத்தால் கட்டுண்ட அனுமனுக்கு கம்பன் சொல்லும் உவமைகள் யாவை ?

436

அனுமன் பிடிபட்ட செய்தியைச் சொன்ன தூதனுக்கு ராவணன் என்ன பரிசு கொடுத்தான் ?

437

ராவணன் முன்னால் கட்டுண்டு நின்ற அனுமனை என்ன சொல்லி இந்திரஜித் அறிமுகம் செய்தான் ?

438

ராவணன் நீ மாறுவேடம் போட்டுவந்த சிவனா, விஷ்ணுவா, எம தர்மனா என்று அனுமனை வினவிய பாடல்கள் எவை ?

439

நான் யார் தெரியுமா? ராம தூதன் என்று சொல்லி ராமன் புகழை அனுமன் எப்படிப் பாடினான்?

440

ராவணன் மரியாதை இல்லாமல் அனுமனை டா போட்டு ஏகவசனத்தில் ஏண்டா என்று கத்தியது ஏன்?

XXXXXXXXXXX

விடைகள்

431.காலாட்படை அழிவு

பிடியுண்டார்களும், பிளத்தலுண்டார்களும், பெருந்

தோள்

ஒடியுண்டார்களும்,தலை உடைந்தார்களும், உருவக்

கடியுண்டார்களும்,கழுத்து இழந்தார்களும், கரத்தால்

அடியுண்டார்களும்,அச்சமுண்டார்களும்-அரக்கர்.

காலாட்படை அரக்க வீரர்கள்  அனுமனால் பிடிக்கப்பட்டவர்களும், உடல் பிளக்கப்பட்டவர்களும், பெரிய தோள்கள்

ஒடி பட்டவர்களும், தலைகள்  உடையப் பெற்றவர்களும்    (உடல் முழுவதும்) நன்றாகக் கடிக்கப் பெற்றவர்களும், கழுத்தை

இழந்தவர்களும்   கைகளால் அடிக்கப் பெற்றவர்களும்  பயம் கொண்டவர்களும் (ஆனார்கள்).

**********************

432 இந்திரஜித் சூளுரை

‘நல்லை ! நல்லை ! இஞ் ஞாலத்துள், நின் ஒக்க

நல்லார்

இல்லை !இல்லையால் ! எறுழ் வலிக்கு யாரொடும்

இகல

வல்லை ! வல்லை! இன்று ஆகும், நீ படைத்துள

வாழ்நாட்கு

எல்லை ! எல்லை!’ என்று, இந்திரசித்துவும்

இசைத்தான்.

-நீ மிகவும் சாமர்த்தியம் உள்ளவன்;  இந்த உலகத்தில்

உனக்குச் சமமான சமர்த்தர்கள் யாரும் இல்லை;

– நீ எல்லோரையும் சமாளிப்பதில் வல்லவன்;

நீ அடைந்துள்ள உன் வாழ் நாளுக்கு இன்றேமுடிவு எல்லையாக அமையும் என்று சொல்லி அனுமனை இகழ்ந்து தன் வீரம்

தோன்ற அஹங்காரத்தோடு  இந்திரசித் பேசினான்

பிறரோடு வைத்துநோக்குமிடத்து நீ ஒப்புயர்வற்ற வீரன் என

விளங்குவையாயினும், நான் உன்னை இன்றைக்குக் கொன்று விடுவேன் என்று,அனுமனை நோக்கி இந்திரசித்து கூறினான்.          ************************

433.   அனுமன் கொடுத்த பொருத்தமான பதில்

‘நாளுக்குஎல்லையும், நிருதராய் உலகத்தை நலியும்

கோளுக்குஎல்லையும், கொடுந் தொழிற்கு

எல்லையும், கொடியீர் !

வாளுக்குஎல்லையும் வந்தன; வகை கொண்டு

வந்தேன்

தோளுக்கு எல்லைஒன்று இல்லை’ என்று அனுமனும்

சொன்னான்.

கொடியஅரக்கர்களே! உங்கள் வாழ்நாளுக்கு ஒரு முடிவும், அரக்கர்களாய் உலகத்தை வருத்தும் உங்கள் கொள்கைக்கு ஒரு முடிவும், உங்கள் கொடிய செய்கைகளாகிய பாவத்திற்கு ஒரு முடிவும்,உங்கள் வாள் முதலிய படைக்கலங்களுக்கு ஒரு முடிவும் இப்போது வந்துவிட்டன; அதற்குரிய திட்டத்துடன் இங்கே யான் வந்துள்ளேன்; (ஆனால்) என் தோளாற்றலுக்கு முடிவு சிறிதும் உண்டாகாது   என்று  அனுமனும் சொன்னான் ( இவ்வாறு அனுமனும் இந்திரசித்துக்கு மறுமொழி கூறினான்).

***********************

434.கடும் யுத்தத்தின் முடிவில் பிரம்மாத்திரத்தை வீசி அனுமனைக் கட்டிப்போட்டான் இந்திர ஜித். அனுமனும் நிலத்தில் மயங்கி வீழ்ந்தான்.

சாய்ந்தமாருதி, சதுமுகன் படை எனும் தன்மை

ஆய்ந்து, ‘மற்றுஇதன் ஆணையை அவமதித்து

அகறல்

ஏய்ந்தது அன்று‘என எண்ணினன், கண் முகிழ்த்து

இருந்தான்;

‘ஓய்ந்தது ஆம்இவன் வலி’ என, அரக்கன்

வந்துற்றான்.

கீழேவிழுந்த அனுமன்  (தன் மேற் செலுத்தியது) பிரம்மாத்திரம் என்னும் உண்மையை உணர்ந்தறிந்து இதன்  கட்டளையை இகழ்ந்து இதனைவிட்டு நீங்குதல் தக்கதன்று எனக் கருதியவனாய்,      கண்ணை மூடிக் கொண்டு அதற்குக் கட்டுப்பட்டவன் போல்

இருந்தான்; அரக்கனாகிய இந்திரசித்து, இவனுடையவலிமை ஒழிந்துவிட்டது என்று எண்ணி அனுமன் அருகில் வந்தடைந்தான்.

வர பலத்தால்பிரம்மாத்திரத்தையும் கடக்கும் ஆற்றல் உள்ளவனாயினும், அனுமன் பிரம்ம தேவனைப் பெருமைப் படுத்த வேண்டும் என்ற பெருந் தன்மையினால், அதற்குக் கட்டுப் பட்டிருந்தான் என்க.

********************

435.பிரம்மாஸ்திரத்தால் கட்டுண்ட அனுமனுக்கு கம்பன் சொல்லும் உவமைகள் :–

கறுத்தமாசுணம், கனக மா மேனியைக் கட்ட,

அறத்துக்கு ஆங்குஒரு தனித் துணை என நின்ற

அனுமன்,

மறத்து, மாருதம்பொருத நாள், வாள் அரா அரசு

புறத்துச் சுற்றியமேரு மால் வரையையும் போன்றான்.

பொன்னிறமான அனுமன் திருமேனியைக் கருத்த பாம்பு போல பிரம்மாஸ்த்திரம் இறுக்கிப் பிணித்தது.  தரும தேவதைக்கு, அந்த இலங்கையில் தான் ஒருவனே துணைவனாக இருந்த அனுமன், வலிமையான காற்று வீசிய காலத்து, அரவுக்கரசனான ஆதிசேடன்,

மேரு மலையை நன்றாகச் சுற்றிக் கொண்டது போல இருந்தது .

பெரு வடிவமுள்ள அனுமனைச் சூழ்ந்து இறுக்கிய பாம்புக்கு,

மேருமலையை வளைத்து இறுக்கிய ஆதி சேடன் உவமை யாக்கப்பட்டது. அனுமனுக்கு மேரு மலை உவமை. பிரம்மாத்திரம் = பாம்பு.

*************************

436.அனுமன் பிடிபட்ட செய்தியைச் சொன்ன தூதனுக்கு ராவணன் கொடுத்த பரிசு

கேட்டலும்-கிளர் சுடர் கெட்ட வான் என

ஈட்டு இருள்விழுங்கிய மார்பின், யானையின்

கோட்டு எதிர்பொருத பேர் ஆரம் கொண்டு, எதிர்

நீட்டினன்-உவகையின் நிமிர்ந்த நெஞ்சினான்.

அதனைக் கேட்டவுடன்   மகிழ்ச்சியால் பெரிய முத்துமாலையைக் கழற்றி (நற்செய்தி சொன்ன தூதர்க்கு) வெகுமதியாகக் கொடுத்தான்.

இராவணன் மார்பு அமாவாசை இருள்போல இருந்தது; ஒரு காலத்தில் திசை யானைகளுடன் மோதிய மார்பு அது . அதிலிருந்த முத்து மாலையை ராவணன் எடுத்துக்கொடுத்தான் என்று கம்பன் விவரிக்கிறான் .

தூதுவர் கூறியநற்செய்தி இராவணனை எவ்வளவு மகிழ்வித்தது என்பதை, அவன் தூதுவர்க்குக் கொடுத்த முத்து மாலைப் பரிசு தெரிவிக்கின்றது.

*****************************

437

இந்திரஜித் செய்த அறிமுகம்

புவனம் எத்தனை அவை அனைத்தும் போர் கடந்-

தவனை உற்று,’அரி உருவான ஆண்தகை,

சிவன் எனச்செங்கணான் எனச் செய் சேவகன்,

இவன்‘ எனக் கூறிநின்று, இரு கை கூப்பினான்.+

இந்திரசித்து அனுமனை இராவணனுக்கு அறிமுகப்படுத்திய முறை:-

உலகங்கள் எத்தனை உண்டோ அவை எல்லாவற்றையும் போரில்

வென்ற இராவணனை (இந்திரசித்து) இரண்டு கைகளையும் குவித்து வணங்கினான். குரங்கு வடிவில் உள்ள ஆண்மைக்  குணமுடைய

இவன், சிவபிரான் போலவும் திருமால் போலவும் போர் செய்த சிறந்த வீரன் என்று சொல்லி அனுமனை அறிமுகப்படுத்தினான்

***********************************

438. இராவணன் அனுமனை நோக்கி நீ யார் என்று வினவிய கேள்விகள்:

நீ யார் சொல் பிரம்மா, விஷ்ணு சிவன்- மூவரில் ஒருவனா ? இந்திரனா, எமனா ?

‘நேமியோ ? குலிசியோ ? நெடுங் கணிச்சியோ ?

தாமரைக்கிழவனோ ? தறுகண் பல் தலைப்

பூமி தாங்கு ஒருவனோ ?-பொருது முற்றுவான்,

நாமமும் உருவமும்கரந்து நண்ணினாய் !

(அவன்அனுமனை நோக்கி) சக்கராயுதம் தாங்கிய திருமாலோ? வச்சிராயுத பாணியான இந்திரனோ? நீண்ட சூலாயுதத்தை உடைய சிவபெருமானோ? தாமரை  மலரில் தோன்றிய பிரம்ம தேவனோ?

பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கும் ஆதிசேடனோ? போர்செய்து இந்த இலங்கையை அழிக்கும் பொருட்டு மாறு வேடத்தில் வந்தாயா?

‘நின்றுஇசைத்து உயிர் கவர் நீலக் காலனோ?

குன்று இசைத்துஅயில் உற எறிந்த கொற்றனோ?

தென் திசைக்கிழவனோ ? திசை நி்ன்று ஆட்சியர்

என்றுஇசைக்கின்றவர் யாருள், யாவன் நீ?

தனது பாசத்தால் கட்டி பிராணிகளின் உயிரைப் பற்றிக் கொள்ளும் கருநிறமுள்ள காலனோ? கிரௌஞ்ச மலையில் தனது வேலாயுதம் புகும்படி தாக்கிய முருகக் கடவுளோ? தெற்குத் திசை நாயகனாகிய யம தர்ம ராசனோ? மற்றத் திக்குகளின் நாயகர்களில் நீ யார் ?

‘அந்தணர்வேள்வியின் ஆக்கி, ஆணையின்

வந்துற விடுத்ததுஓர் வய வெம் பூதமோ ?

முந்து ஒருமலருளோன், “இலங்கை முற்றுறச்

சிந்து” எனத்திருத்திய தெறு கண் தெய்வமோ ?

முனிவர்கள் யாகத்திலிருந்து தோற்றுவித்த கொடிய பூதந்தானோ? இலங்கை முழுவதையும் அழித்து விடு என்று ஏவி, பிரம்ம தேவன் புதிதாகப் படைத்தனுப்பிய ஒரு தேவன்தானோ ?

இவ்வளவும் அனுமனின் ஆற்றலைக் காட்டும் புகழ்மாலை ஆகும் ; கம்பன் அனுமனின் பெருமையைக் காட்ட படைத்த பாடல்கள்!

********************************

439.என் பெயர் அனுமன்

‘தேவரும் பிறரும் அல்லன்; திசைக் களிறு அல்லன்;

திக்கின்

காவலர் அல்லன்;ஈசன் கைலைஅம்கிரியும் அல்லன்;

மூவரும் அல்லன்;மற்றை முனிவரும் அல்லன்;

எல்லைப்

பூவலயத்தை ஆண்டபுரவலன் புதல்வன் போலாம்;

ராமபிரானை அனுமன் புகழும் பாடல்கள்

(அந்தவில் வீரன்) தேவர்களும் மற்றை அசுரர்கள் முதலியோரும் அல்லன்; திசை யானைகளில் ஒன்றும் அல்ல; திக் பாலகர் களில் ஒருவனும் அல்லன்;சிவபிரானுடைய கைலை மலையும் அல்லன்; மும்மூர்த்திகளும்  அல்லன்;  மற்றைய முனிவர்களும் அல்லன்;

பூமியின் எல்லை எவ்வளவு உண்டோ அவ்வளவையும் அரசாட்சி செய்த ஒரு பேரரசனுடைய குமாரனேதான் அவன்.

5882.

‘போதமும்,பொருந்து கேள்விப் புரை அறு பயனும்,

பொய் தீர்

மா தவம்சார்ந்த தீரா வரங்களும், மற்றும், முற்றும்,

யாது அவன்நினைத்தான், அன்ன பயத்தன; ஏது

வேண்டின்,

வேதமும் அறனும்சொல்லும்; மெய் அறமூர்த்தி,

வில்லோன்;

பொய்ம்மையில்லாத பெரிய தவத்தைச் செய்து பெறுகின்ற

வரங்களும் மற்றும் எல்லாம் அவன் என்ன நினைத்தானோ அவ்வாறு பயனளிக்கக் கூடியனவாய் அமைவன – யான் கூறிய அந்த வில்வீரன்  வேதமும் அறக்கடவுளும் புகழ்ந்து சொல்லும் உண்மைத் தரும சொரூபியான பரம் பொருளே ஆவான்.

5885.

‘அறம் தலைநிறுத்தி, வேதம் அருள் சுரந்து அறைந்த

நீதித்

திறம் தெரிந்து,உலகம் பூணச் செந் நெறி செலுத்தி,

தீயோர்

இறந்து உக நூறி,தக்கோர் இடர் துடைத்து, ஏக,

ஈண்டுப்

பிறந்தனன்-தன்பொன்-பாதம் ஏத்துவார் பிறப்பு

அறுப்பான்.

தனது அழகிய திருவடிகளைத் துதிப்பவர்களான அடியார்களது பிறவி நோயைப் போக்கியருளுபவனான பரம்பொருள்;  அறத்தை நிலை நிற்கச் செய்து, வேதங்கள்  ஓதிய நீதியின்படி மக்களைச் செம்மையான வழியிலே செலுத்தி,  கொடியவர்கள் ஒழியும் படி அழித்து நல்லோரின் துன்பங்களைப் போக்க, சங்கற்பித்து   பூமியில் (அயோத்தியில்) திருவவதாரம் செய்துள்ளான்.

5886.

‘அன்னவற்குஅடிமை செய்வேன்; நாமமும் அனுமன்

என்பேன்;

நன்னுதல்தன்னைத்தேடி நாற் பெருந் திசையும்

போந்த

மன்னரில்,தென்பால் வந்த தானைக்கு மன்னன்,

வாலி-

தன் மகன்,அவன்தன் தூதன் வந்தனென்,

தனியேன்’ என்றான்.

சக்கரவர்த்தித் திருமகனாக  அவதரித்த அந்த இராமபிரானுக்கு அடிமைத் தொழில் செய்பவன் யான் என் பெயர் அனுமன்.

சீதாபிராட்டியைத் தேடிக் கொண்டு  நான்கு திசைகளிலும் சென்ற தலைவர்களுள், தென் திசையில் வந்த சேனைக்குத் தலைவன் வாலியின் மகனாகிய அங்கதன்;  அவனது தூதனாய் நான் ஒருவன் இங்கு வந்தேன் என்று அனுமன் கூறினான்.

‘ “நாமத்துஆழ் கடல் ஞாலத்து அவிந்தவர்,

ஈமத்தால்மறைந்தார், இள மாதர்பால்

காமத்தால்இறந்தார், களி வண்டு உறை

தாமத் தாரினர்,எண்ணினும் சால்வரோ ?

கடல் சூழ்ந்த இந்த நில உலகில்  இளமகளிரிடம் கொண்ட மோகத்தால் வரம்பு கடந்து நடந்தவரான   ஆடவர்கள்

புகழ் இழந்து சுடுகாட்டு நெருப்பால் அழிந்து போனவர்கள் எண்ணிக்கையில் அடங்குவார்களோ ? (எண்ணற்றவராவர்).

*********************

440.ராவணன் மரியாதை இல்லாமல் அனுமனை டா போட்டு ஏகவசனத்தில் ஏண்டா என்று கத்தியது :

‘குரக்கு வார்த்தையும், மானிடர் கொற்றமும்,

இருக்க; நிற்க;நீ, என்கொல், அடா ! இரும்

புரத்தினுள் தரும்தூது புகுந்தபின்

அரக்கரைக்கொன்றது ? அஃது உரையாய் !’

என்றான்.

குரங்காகிய சுக்கிரீவன் கூறிய செய்தியும்   மனிதர்களான இராம இலக்குவர்களது வெற்றியும் ஒரு புறம் இருக்கட்டும்; நிற்க –

மாநகரமான இலங்கையுள்  தூதுவனாக புகுந்த பிறகு

ஏண்டா    நீ அரக்கர்களைக் கொன்றாய்? அந்தக் காரணத்தைச் சொல் என்று (அனுமனை நோக்கி) வினாவினான்.

அடா: ஏளன அழைப்பு.

–SUBHAM—

Tags – அனுமனை ‘டா’ போட்டு, ஏகவசனத்தில், ஏசிய, ராவணன், கம்ப ராமாயணத்தில் 440 கேள்விகள், இந்திரஜித், பிரம்மாஸ்திரம்

Leave a comment

Leave a Reply