
WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,423
Date uploaded in London –25 November 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஶ்ரீ சக்ர ஸ்வரூபத்தை விளக்கும் ஆதி சங்கரரின் சௌந்தர்ய லஹரி ஸ்லோகம்!
ச. நாகராஜன்
ஆதி சங்கரர் இயற்றி அருளிய சௌந்தர்ய லஹரியில் பதினொன்றாவது ஸ்லோகம் ஶ்ரீ சக்ர ஸ்வரூபத்தை விளக்குகிறது.
அந்த ஸ்லோகம் பின் வருமாறு:
சதுர்ப்பி: ஶ்ரீ கண்டை: சிவ யுவதிபி: பஞ்சபிரபி
ப்ரபிந்நாபி: சம்போர் நவபிரபி மூலப்ரக்ருதிபி: |
சதுஸ்சத்வாரிம்ஸத் வஸுதல கலாஸ்ர த்ரிவலய
த்ரிரேகாபி: ஸார்த்தம் தவ சரணகோணா: பரிணதா ||
இந்த ஸ்லோகத்தின் பொருள்:
ஹே! பகவதி! சிவ ஸ்வரூபமான நான்கு சக்ரங்கள்.
இவைகளைக் காட்டிலும் வேறுபட்ட சக்தி ஸ்வரூபமான ஐந்து சக்ரங்கள்.
மூலகாரணமான தாதுக்கள் ஒன்பது.
உன்னுடைய பிந்து ஸ்தானமான மந்த்ர கோணங்கள்.
எட்டு தளங்கள்.
பதினாறு தளங்கள்.
மூன்று மேகலைகள்.
மூன்று ப்ராகாரங்கள்.
ஆக இவைகள் 44 தத்துவங்களாக அமைந்துள்ளன.*
ஶ்ரீ வித்யா தத்துவம், உபாஸனை மற்றும் ஶ்ரீ சக்ர தத்துவம், அமைப்பு, உபாஸனை ஆகியவற்றை நிச்சயமாக ஒரு குரு மூலமாகவே அறிந்து கொள்ள வேண்டும்.
லலிதா சஹஸ்ர நாமம், சௌந்தர்ய லஹரி உள்ளிட்ட துதிகளை சாதாரணமாக பக்தியுடன் யார் வேண்டுமானாலும் சொல்லலாம். நல்ல பயன் சித்திக்கும்.*
ஶ்ரீ சக்ரம் பற்றிய ரகசியம் அறிய ஆசைப்படுவோர் படிக்க வேண்டிய ஒரு அற்புத நூல் உள்ளது.
ஸ்வாமி ப்ரணவானந்தா எழுதிய A Treatise on SRICHAKRA
என்ற அற்புத நூல் 1987ம் ஆண்டு Sri Swami Pranavananda Trust , Yenugula Mahal, East Godavari Districtm, Andhra Pradesh 533 233 மூலமாக வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த பக்கங்கள் 243.
மூன்று தரங்கங்களை (பகுதிகள்) கொண்டுள்ள இந்த நூல் முதல் தரங்கத்தில் ஒன்பது அத்தியாயங்களையும் இரண்டாம் தரங்கத்தில் ஒன்பது அத்தியாயங்களையும் மூன்றாவது தரங்கத்தில் பதினைந்து பிற்சேர்க்கை விவரங்களையும் கொண்டுள்ளது.
ஶ்ரீ சக்ர தத்துவம், ஶ்ரீ சக்ர ரகசியம், ஶ்ரீ சக்ரத்தை முறைப்படி எப்படி வரைவது, பாரதத்தில் உள்ள முக்கியமான ஶ்ரீ சக்ர தலங்கள் உள்ளிட்ட அபூர்வமான விஷயங்களை இந்த மூன்று தரங்கங்கள் தருகின்றன.
இதைப் படிப்பவர்கள் பாக்கியசாலிகளே.
**