
WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,431
Date uploaded in London –28 November 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
வெள்ளத்தில் சிக்கிய நாய் 20 நாட்கள் கழித்து நேபாளத்தில் மீட்பு!
ச. நாகராஜன்
1-11-26 தேதியிட்ட TNN அறிக்கை தரும் செய்தி இது:
நேபாளத்தில் கோர்கா மாவட்டத்தில், ஓடும் புதி கண்டகி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட அங்கு ஒரு பாறை சிகரத்தில் மாட்டிக் கொண்டது சேதி என்ற ஒரு நாய்.
தயாராம் கார்கி என்பவர் அந்த நாயை வளர்த்து வந்தார். 2026, அக்டோபர் 11ம் தேதியன்று, அந்த நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அது அடித்துச் செல்லப்பட்டது.
சுமனுப்ரி மற்றும் டார்சே என்ற முனிசிபாலிடிகளின் எல்லையில் ஜகத் பாகர் என்ற ஒரு சிறிய நிலப் பகுதியில் அது ஏறிக் கொண்டது.
அதை அங்குள்ள ஊர்க்காரர்கள் பார்த்தனர்.
கார்கியும் உள்ளூர்க்காரர்களும் நீரில் பிஸ்கட்டை தூக்கி எறிந்தனர்.
சுமனுப்ரி முனிசிபாலிடி, மனசலு கன்ஸ்ர்வேஷன் ஏரியா ப்ராஜெக்ட், வெடிரினரி ஹாஸ்பிடல், லைவ் ஸ்டாக் சர்வீஸஸ் அலுவலகம், அனிமல் நேபாள், கூர்க்கா ஜேசீஸ் ஆகிய நிறுவனங்கள் ஒருங்கிணைந்து நாயை மீட்கத் திட்டமிட்டன.
ராஷ்ட்ரீய ஸ்வதந்த்ரா கட்சியின் தலைவரான தாயா க்யால்ஸேன் லாமா, உள்ளூர்க்காரரான பீர்பல் கலே, முனிசிபாலிடி சேர்மன் நிமா லாமா ஆகியோர் முதலில் ஒரு ஹெலிகாப்டர் மூலமாக நாயை மீட்பது என்று தீர்மானித்தனர்.
ஆனால் காலநிலை மிக மோசமாக இருந்ததால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
அனிமல் நேபாள் நிறுவனம் தாடிங் என்ற இடத்தில் உள்ள ராயல் பீச் முகாமைத் தொடர்பு கொண்டது.
அந்த முகாம் இரு அபாரமான தோணி ஓட்டுநர்களை அனுப்பியது.
ராம் சில்வால் அற்றும் அருண் தபாலியா ஆகிய இரு படகோட்டிகள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்த கண்டகி நதியில் சிறிய தோணி ஒன்றை நாய் இருந்த இடத்திற்கு ஓட்டிச் சென்று நாயைக் காப்பாற்றினர். 20 நாட்கள் கழித்து நாய் மீட்கப்பட்டது.
நாயுடன் வந்த அந்த படகோட்டி வீரர்களை லாமா மாலையிட்டு வரவேற்றார். நாய்க்கும் மாலை அணிவிக்கப்பட்டது.
அங்கு குழுமியிருந்த உள்ளூர்வாசிகள் அனைவரும் மகிழ்ந்தனர்.
ஶ்ரீமத் பாகவதத்தில் வரும் ஒரு ஸ்லோகத்தை இங்கு நினைவு கூரலாம்:
ஒருவித துணையுமின்றி யாருடைய ஆதரவுமின்றி ஒரு மனிதன் விதியினால் மட்டுமே வாழ்கிறான். ஆனால் நூறு வழிகளில் ஒருவன் பாதுகாக்கப்பட்டாலும் விதி நினைத்தவுடன் அவன் மரணமடைகிறான்.
இது எல்லா ஜீவராசிகளுக்கும் பொருத்தம் தானே!
**