Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
போரில் பிறந்த புஸ்தகங்கள் என்ற
என்னுடைய கட்டுரை 1992 பிப்ரவரி 9-ல் தினமணிப் பத்திரிக்கையில் வெளியானது.
அந்தக்காலத்தில் அரசியல் என்பது
சாக்கடையென்றும் அதுதான் அயோக்கியர்களின் கடைசி புகலிடம் (Politics is the last refuge of a scoundrel என்றும் சொல்லுவர். இப்பொழுது அதை பத்திரிக்கை, டெலிவிஷன், திரைப்படம் போன்ற மாஸ் மீடியா (Mass Media people ) பேர்வழிகளுக்குச்
சூட்டலாம். எப்படி ஒரு போரில் அதிகமான பேர் இறக்க, இறக்க
தாக்கியவனுகு சந்தோஷம் வருமோ அது போல அதிகம் பேர் இறக்க, இறக்க
பத்திரிக்கைக் கா ரனுக்குக் கொண்டாட்டம். ஊர் இரண்டுபட்டால் அவர்களுக்கு அதிக Sales ஸேல்ஸ்.
வெளிநாடுகளைத் தாக்கும்போது
பத்திரிக்கையாளர்கள் ஒரு படி மேலே சென்று கூடுதலாகப் பொய் சொல்லுவார்கள்.
இல்லாததையும் பொல்லாததையும் போட்டி போட்டுக் கொண்டு ஜோடித்து எழுதுவார்கள்.
போர் தொடுக்கும் நாடு பொருளாதார
லாபத்துக்காகவும், அந்த நாட்டு வணிக கான்ட்
ராக்டுகளுக்கும், அங்கேயுள்ள பெட் ரோ லியம், யுரேனியம், தங்கம், வைரம்
ஆகியவற்றைக் கொள்ளையடிக்கவும் திட்டம் போடும். மாஸ் மீடியாவுக்கு இதில் பங்கு
கிடைக்காது. ஆனால் அரசு விளம்பரங்கள் கிடைக்கும். அவர்கள் புஸ்தகமும் கட்டுரைகளும்
எழுதி காசு சம்பாதிப்பர். சுருக்கமாகச் சொல்லபோனால் பிணம் தின்னிக் கழுகுகள். இதோ 1992ல் குவையத் – இராக் போர் நடந்த பின்னர் எழுந்த புஸ்தகங்களைப்
பாருங்கள்:–
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
கட்டுரை எண் : 7131 வெளியான
தேதி : 26-10-2019 – கீதையின் ஆறாவது கட்டளை-யைத் தொடர்ந்து வருவது இந்தக் கட்டுரை. இந்தத் தொடரில் இதுவே கடைசிக் கட்டுரை
ஜே.பி.வாஸ்வானி அவர்கள் கீதை
தருவதாகக் கூறும் ஏழு கட்டளைகளுள் கடைசிக் கட்டளை இது:
ஏழாவது கட்டளை :
Thou
Shalt Rejoice in Everything That the Will of God Brings to Thee
கடவுள் உனக்கெனக் கொண்டு வரும் எதிலும் சந்தோஷப்படு
இதைப் பற்றி அவர் தரும் விளக்க
உரையில் சில முக்கியமான கருத்துக்களை இங்கே பார்ப்போம்:
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம்
சரணம் வ்ரஜ|
அஹம் த்வாம் சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி
மா சுச:||
-கீதை அத்தியாயம் 18 – ஸ்லோகம்
66
அனைத்து அறங்களையும் துறந்து
விட்டு என் ஒருவனையே சரண் அடை; நான் உன்னை சகல பாவங்களிலிருந்தும் விடுவிப்பேன். வருந்தாதே.
இது கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக்
கூறிய அருளுரை.
இதை ராமானுஜர் கீதையின் சரம
ஸ்லோகம் – கடைசியான – முத்தாய்ப்பான ஸ்லோகம் என்று கூறியுள்ளார்.
அனைத்தையும் கடவுளிடம் விட்டு
விடு. அவரை முழுமையாக நம்பு. அவர் உனக்கு மிகவும் சிறந்ததையே அருள்வார் என்பதை அறிவாயாக.
இதைப் பற்றி, சில முக்கியமான
ஆலோசனைகள் உங்களுக்கு உதவக் கூடும்.
அவை இவை தான்:
இடையூறுகளை புன்னகையுடன் எதிர்
கொள்க. சோதனைகளையும் தற்காலிக தோல்விகளையும் அன்புடன் சந்தியுங்கள்.
பிரார்த்தனை என்பது உங்களுடைய
பழக்கமாகவே ஆகட்டும்.
இன்னும் அதிகம், அதிக நம்பிக்கைக்காக
பிரார்த்தியுங்கள்.
உலகியல் ரீதி, மன ரீதி, ஆன்மீக
ரீதியாக உள்ள அனைத்து வியாதிகளும் குணமடைவது ஆண்டவனின் தொடர்பினால் தான் என்பதில் உறுதி
கொள்ளுங்கள்.
வருவதை ஏற்றுக் கொள்ளுங்கள்.
ராமகிருஷ்ண பரமஹம்ஸர் அடிக்கடி
சொல்வது இது தான்: இறை நம்பிக்கை கொண்டவன் ஒரு மலைப்பாம்பு போல. அவன் இரைக்காக அலைய
மாட்டான். இரை அவனைத் தேடி வரும்.
ஒரு முறை பெரிய சக்ரவர்த்தி ஒருவன் புத்தரிடம் சரணடைய
நினைத்தான்.
தன் ராஜ்யம் மக்கள், அரண்மனை
அனைத்தையும் துறந்து துவராடை பூண்டான்.
புத்தரிடம் அவன் உபதேசம் பெறுவதைப்
பார்க்க அனைத்து பிட்சுக்களும் திரண்டனர்.
புத்தரிடம் சமர்ப்பிக்க தன்
வலது கையில் விலை உயர்ந்த வைரம் ஒன்றை அவன் வைத்திருந்தான்.
ஒரு வேளை வைரத்தை அவர் வாங்க
மறுத்தால் அவருக்கு சமர்ப்பிக்க ஒரு தாமரையைத் தன் இடது கையில் வைத்திருந்தான்.
புத்தரை அவன் நெருங்கி நடந்த
போது புத்தர் அவனை நோக்கி, “ அதைக் கீழே போடு” என்றார்.
உடனே மன்னன் வலது கையிலிருந்த
வைரத்தைக் கீழே போட்டான்.
பின்னர் நடக்க ஆரம்பித்தான்.
இப்போது புத்தர் கூறினார் :
“அதைக் கீழே போடு”
இந்த முறை மன்னன் தன் இடது கையிலிருந்த
தாமரை மலரைக் கீழே போட்டான்.
பின்னர் நடக்க ஆரம்பித்தான்.
இப்போது புத்தர் கூறினார் :
“அதைக் கீழே போடு”
மன்னன் ஒரு கணம் திகைத்தான்.
பின்னர் புரிந்து கொண்டான்.
எல்லாவற்றிற்கும் காரணமான ‘நான்’ என்னும் எண்ணம் ஒரு போதும் இருக்கக் கூடாது என்று அவர் கூறிய போதனையை நினைவு கூர்ந்தான்.
தனது ‘தான்’ என்ற எண்ணத்தையும் விட்டான்.
புத்தர் அவனை அருள் கூர்ந்து
நோக்கினார்.
முழுவதும் சரணடைந்த அவனை ஏற்றுக்
கொண்டார்.
***
சாது வாஸ்வானியை பத்திரிகையாளர்
ஒருவர் சந்தித்தார்.
ஏராளமான அலுவல்களால் உங்கள்
டயரி நிரம்பி வழிந்திருக்குமே என்றார் அவர்.
அதற்கு சாது வாஸ்வானி, “எதையும்
நான் திட்டமிடுவதே இல்லை. இறைவன் என்னை வழி நடத்த விட்டு விடுகிறேன்” என்றார்,
***
சாது வாஸ்வானி மூன்று “கொல்லிகளை” (Killers) மனித குலத்தின் கொல்லிகள் என்றார்.
கடிகாரம், காலண்டர், டெலிபோன்
( The
Clock, The Calender and the Telephone) ஆகிய மூன்று தான் அவர் கூறிய் கொல்லிகள்!
அனைத்தையும் இறைவனிடம் விட்டு
விடுங்கள் என்பதே அவரது அருளுரை!
***
அருமையான ஏழு கட்டளைகளை இப்படி
விளக்கியுள்ள சாது வாஸ்வானி அவர்களின் உரைகள் The Seven
Commandments of the Bhagavad Gita புத்தகத்தில் 417 பக்கங்களில் இன்னும் ஏராளமான கதைகள், சம்பவங்கள், உவமைகள், செய்யுள்கள்,
ஸ்லோகங்கள், கருத்துக்கள் ஆகியவற்றுடன் உள்ளன.
அன்பர்கள் படித்து மகிழலாம்.
அவர் எழுதிய ஒரு புத்தகத்தில்
உள்ள சில கருத்துக்களையே நாம் இந்தத் தொடரில் பார்த்தோம்.
இன்னும் சுமார் 78 புத்தகங்களை
அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அனைத்தையும் படித்தால் ஆன்மீக ஞானம் மிகவும் பெற்றவர்களாக
ஆவோம் என்பதில் ஐயமில்லை.
பகவத் கீதையைப் படிப்போம்; அதன்
வழி நடப்போம்; உயர்வோம்!
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
CHARAKA and
SUSHRUTA lived at least 2300 years ago.
Kautilya, author of Athasastra also lived 2300 years before our time. It is
amazing that they described various types of fermented drinks.
Charaka lists
nine sources of spirituous liquor or fermented drinks. These are- cereals, fruits, roots, wood, flowers,
stems/stalks, leaves, barks of plants and sugar -yielding canes. From these,
the preparation of 84 different kinds of ‘asava’(wine) has been described.
The nine
main classes of liquors from the nine sources, mentioned above, are named respectively
as-
Dhania asava
Phalasava,
Mulasava
Sarasava,
Pushpasava,
Patrasava,
Kandasava,
Tvagasava,
Sarkasrasava
xxx
In Arthasastra
In a chapter
defining the duties of the Superintendent of Liquor, Kautilya writes,
By employing
such men as are acquainted with the manufacture of liquor and ferments 9kinva),
the superintendent of liquor shall carry on liquor traffic not only in forts
and county part (shops), but also in camps…………….
Illicit liquor destroyed
Various kinds of liquors described are-
Medaka
Prasanna
Asava
Arista
Maireya
Madhu
Medaka is
prepared from the fermentation of rice;
Prasanna from
the fermentation of flour with addition of spices and the fruits of Putraka (a
species of tree in the country of Kamarup/Assam).
Asava is the
liquor derived from the fermentation of sugar mixed with honey.
Jaggery mixed
with powder of long and black pepper or with the powder of triphala (mixture of
Terminalia chebula, Terminalia balerica, and Phyllanthus emblica), when
fermented , forms Maireya.
Fermented
grape juice is Madhu. The preparation of different kinds of arista for different
diseases can be learnt from the physicians.
Kinva or
ferment is prepared from boiled or unboiled paste of ‘masha’ (Phaseolus radiatus),
rice and Morata (Alanium salvifolium) and the like.
The liquor
that is manufactured from mango fruits may contain a greater proportion of
mango essence or of spices. It is called maha sura when it contains sambhara
(spices).
It is
interesting to note that Kautilya writes that all varieties of liquor other than that used for
the king are taxable with 5 percent as toll. These include acid drinks prepared
from fruits (phalamla) and spirit distilled from molasses (amla sidhu). But on
the occasion of festivals, fairs (samaja) and pilgrimage it is permissible to
manufacture liquor for four days (chaturahassaurikah) – liberty to drink liquor
without limit
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
இப்பொழுது இந்திய கலைப் பொக்கிஷங்கள் , கோவில் சிலைகள் ஆகியன திருடு போவதும், பெரும்பாலானவை வெளிநாட்டுத் தனியார் வீடுகளிலும் மியூஸியங்களிலும் இருப்பதும் புதுப் புதுச் செய்தியாக தினமும் வெளியாகின்றன. புகழ் பெற்ற ஏல நிறுவனமான ஸதபிஸ்ஸின் ஒரு அதிகாரி மட்டும் 1992ல் மாட்டிக் கொண்டு சிறைக்குச் சென்றார். ஆயிரம் களவாணிகளில் அகப்பட்ட ஒரே களவாணி அவர். ஆனால் தப்பித்தோரோ லட்சம் பேர். ஏனெனில் பிரிட்டிஷ் சுங்க இலாகாவினர் கடத்தல் பொருட்களைப் பிடிக்க சட்டம் இல்லை. இந்தியக் கலைப் பொக்கிஷம் என்று தெரிந்தே அவர்கள் உள்ளே விட்டனர். இதோ நான் 1992ல் தினமணியில் எழுதிய கட்டுரை.
Date of Sale 8th December 1969 Dinamani, 9-2-1992; written by london swaaminathan
29-10-19 news
தங்கம் விலை உயரும்!!
Sunday February 9, 1992 (Dinamani Newspaper)
அவ்வப்பொழுது தங்கம் விலை பற்றியும் எழுதி வந்தேன். செட்டியார் போல புத்திசாலியாக வீட்டு மனைகளிலும் தங்கத்திலும் மட்டும் முதலீடு செய்தால் காலமோ, ஷேர் மார்க்கெட்டோ, பருவமோ அவைகளை அழிக்கவே முடியாது. வாழ்க செட்டியார் பாலிஸி.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
22 Jun 2013 – Picture shows Prof. Bin He pf Minnesota University with his thought powered helicopter. Those who use this article in other blogs must name the author London Swaminathan and Blog name. (English version of this article is …
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
PART 1 WAS
POSTED YESTERDAY
(வைஷ்ணவத்
தமிழில் மணிப்ரவாள நடையில் எழுதப்பட்ட விஷயங்களை நேரம் கிடைக்கும்போது பழகு
தமிழில் புதுக்கித் தருவேன்.)
ஸ்ரீ
வேதாந்த தேசிகர் பிறந்த 700
ஆவது ஆண்டு விழாவில் – 1968-ல்- சென்னையில் ஒரு மலர்
வெளியிடப்பட்டது. அதிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள்- பகுதி-2 (நூல் இருக்குமிடம்- பிரிட்டிஷ் லைப்ரரி, லண்டன்).
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
கவிஞர் கண்ணதாசன் கேட்கும் கேள்விக்கு யாராலாவது மறுத்துப்
பேச முடியுமா?
ஆம், கல்லெல்லாம் மாணிக்கக் கல் ஆகாது.
மாணிக்கத்தின் குணாதிசயங்களும் பலன்களும்!
ரூபி (Ruby)
என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மாணிக்கம் நவரத்தினங்களுள்
அற்புதமான ஒரு ரத்தினம்.
ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனுடன்
தொடர்பு கொண்ட ரத்தினம் இது. எண் கணிதத்தில் ஒன்று என்ற எண்ணுடன் தொடர்பு கொண்டதும்
இதுவே தான்!
சூரிய காந்த மணி,கெம்பு, சீயம்
என்று அழைக்கப்படும் இந்தக் கல் சூரியன் தரும் பிரகாசம், புகழ், மேன்மை, வெற்றி ஆகியவற்றை
தரும்!
சூரியன் ஒரு ஜாதகத்தில் ஐந்து
மற்றும் ஒன்பது ஸ்தானங்களில் இருக்கும் போது மாணிக்கம் அணிவது சிறந்த மேன்மையை ஜாதகருக்குத்
தரும்.
மாணிக்கத்தில் எந்த மாணிக்கத்தை
அணிவது என்ற கேள்விக்கு பல காலமாகச் சொல்லும் பதிலைத் தான் இன்றும் சொல்ல முடியும்!
பர்மாவிலிருந்து கிடைக்கும் சிவப்பு வண்ண மாணிக்கம் மிகவும் சிறந்தது.
மாணிக்கம் வைரத்திற்கு அடுத்தபடி
மிகவும் கடினமானது.
பிரடரிச் மோ என்ற ஜெர்மானிய
அறிஞர் ஒவ்வொரு கல்லுக்கும் உள்ள கடினத்தன்மையை வரையறுத்தார். அவர் கூறும் அளவு அவரது
பெயாராலே மோ அலகு எனக் கூறப்படுகிறது.
இதன் படி மிகவும் கடினமான வைரம்
10 என்ற அலகைப் பெறுகிறது. அதற்கு அடுத்தபடியாக 9 என்ற மோ அலகைப் பெறுவது மாணிக்கம்.
மாணிக்கத்தின் ஒப்படர்த்தி
3.99லிருந்து 4.05 வரை இருக்கும். இதன் ஒளி விலகல் எண் 1.756 ஆகும்.
பலவித நிற வேறுபாடுகள் கொண்ட
மாணிக்கம் கிடைக்கப்பெறுகின்றன.
புறா ரத்த வண்ணம் எனப்படும்
(Piegeon Blood Red) மாணிக்கமே மதிப்பு மிக்கது, அணிவதற்கு ஏற்றது.
கண்களில் நோய் உள்ளவர்கள் மாணிக்கம்
அணிந்தால் அந்த நோய்கள் விலகும்.
உடலின் வலிமை கூடும்.வீரிய விருத்தி
உண்டாகும்.
ஆயுளைக் கூட்டும்.
மனதிற்கு சாந்தியைத் தரும்.
அதிகாரத்தைக் குறிக்கும் கல் என்பதால் பழைய காலத்தில் மன்னர்கள் இதை அணிவது வழக்கம். இன்றைய நாட்களில் தலைமை அதிகாரி (CEO) க்கு உரிய கல் இது.
ARGENTINA’S PRESIDENT WITH HER RUBY NECKLACE
தலைமை பீடத்தில் இல்லாதவர் இதை
அணிந்தாலும் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவர். அரசியலிலும் ஏற்றம் தரும் கல் இது.
வைத்திய சாஸ்திரங்களில் மாணிக்கத்தின்
பெருமை பலவாறாகப் புகழப்படுகிறது.
பதார்த்த குணசிந்தாமணி என்ற
புகழ்பெற்ற பண்டைய வைத்திய நூல் இதைப் பற்றிக் கூறும் போது,
‘சுர ரோகம் சன்னிகளின் தோஷம்
அதிதாகம்
உரமான மேகம் ஒழியும் – திரமாக
ஊணிக்கொள் நேத்திரநோய் ஓடும்
அரவீன்ற
மாணிக்கத்தால் வசியமாம்’ என்று கூறுகிறது.
இதன் பொருள் ; சுர நோய் தீரும். அதி தாகம், மேக நோய் ஒழியும். கண் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் போகும். வசியம் உண்டாகும்.
பண்டைய நாகரிகங்களில் மாணிக்கம்!
பண்டைய நாகரிகங்களில் எகிப்திய
நாகரிகம் உள்ளிட்ட நாகரிகத்தில் இது செய்வினை மற்றும் தீய சக்திகளிடமிருந்து காத்துக்
கொள்ள அணியப்பட்டது. மாணிக்கத்தை நனைத்து விட்டு அந்த நீரை வயிற்று வியாதிகளுக்கு அருந்துமாறு
வைத்தியர்கள் அறிவுறுத்தினர். அத்தோடு இதன் பொடியை ரத்த சம்பந்தமான நோய்கள் தீர்க்கவும்
இதர மருந்துப் பொருள்களுடன் சேர்ந்து பயன்படுத்தினர்.
எப்போது முதல் முறையாக அணிவது?
சுக்ல பக்ஷ ஞாயிற்றுக்கிழமை
அன்று சூரிய ஹோரையில் இதை அணிவது நலம்.
தங்கம் அல்லது தாமிரத்தால் செய்யப்பட்ட
மோதிரத்தில் இதைப் பதித்து அணியலாம்.
முதல் முறை அணியும் போது பாலில் இதை அமிழ்த்திப் பின்னர் நீரால் அலம்பி விட்டு அணிதல் வேண்டும்.
நான்கு வகை நல்ல மாணிக்கக் கற்கள்!
மிகப் பழைய நூலான ரஸ ஜல நிதி
மாணிக்கத்தைப் பற்றிய ஏராளமான விவரங்களைத் தருகிறது:
மாணிக்கம் நான்கு வகைப்படும்
1) பத்மராகம் 2) குருவிந்தஜா 3)சௌகந்திகா 4) நீல காந்தி
இதில் தாமரை வண்ணத்தில் (வெள்ளையுடன்
கூடிய சிவப்பு வண்ணம்) கண்ணுக்கு விருந்தாகும் ஒளி பொருந்திய ஒளி ஊடுருவும் வட்ட வடிவமான மிருதுவான ஆனால் கனமான மாணிக்கமே சிறந்தது.இதுவே
பத்மராகம்.
கோரண்டம் (Corundum) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது
சம்ஸ்கிருதத்தில் குருவிந்தம் என அழைக்கப்படுகிறது.
லலிதாம்பிகையின் தலையில் அணியப்பட்டுள்ள
கிரீடம் குருவிந்தத்தால் ஆனது என்பதிலிருந்தே இதன் சிறப்பை அறியலாம். செக்கச் செவேலென
இருக்கும் அழகிய கல் இது.
சௌகந்திகம் மஞ்சள் கலந்த சிவப்பு
வண்ணத்துடன் இருக்கும்.
நீல கங்கா நதியிலிருந்து கிடைப்பது
நீல காந்தி. சிவப்புடன் நீல வண்ணம் உள்ளிருந்து ஒளிர இரண்டு வண்ணமும் கலந்த கல் இது.
இந்த நான்கு வகைகளும் அதன் தரத்தின் படி மேலே வரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
குறைபாடுகள் எவை?
மாணிக்கத்தில் உள்ள குறைகள்
பின் வருமாறு:
துளைகள் உள்ளது, அழகில்லாமல்
இருப்பது, ஒளியில்லாமல் இருப்பது, கரடுமுரடாக இருப்பது, ஓளி புகாத தன்மையுடன் இருப்பது,
தட்டையாக இருப்பது, மிகவும் லேசாக இருப்பது, வடிவமைப்பில் ஒழுங்கற்ற தன்மையுடன் இருப்பது.
இவையிருப்பின் அந்தக் கல்லை
வாங்கக் கூடாது.
ஒரு மாணிக்கத்தில் இரு வேறு
ஒளிகள் அதன் இரு வேறு பக்கங்களிலிருந்து வந்தால் அது அழிவைத் தரும். வாங்கக் கூடாது.
காகத்தின் கால் போல உள்ள தோற்றம்
அளிக்கும் மாணிக்கம் தோல்வியைத் தரும்.
விரிசல் இருப்பின் அதை அணிந்தால்
ஆயுதங்களால் காயம் ஏற்படும்.
மாணிக்கத்தின் உள்ளே சிறு கூழாங்கல்
இருப்பின் நண்பர்கள் அழிவர்; மாடு உள்ளிட்ட கால்நடைகள் அழிந்து படும்.
மாணிக்கத்தின் உள்ளே பால் போன்ற
ஒரு பூச்சு இருப்பின் அதை அணியக் கூடாது. அது துன்பத்தைத் தரும்.
தேனின் நிறத்தைப் போல இருக்கும்
மாணிக்கமும் அணிவதற்குத் தக்கதல்ல. இதை அணிந்தால் ஆயுள் குறையும். துரதிர்ஷ்டம் வரும்.
புகழ் குறையும்.
ஒளி இல்லாத மாணிக்கம் பண இழப்பை உண்டாக்கும்.
புகை போன்ற வண்ணம் உடைய கல் மின்னலினால் விபத்தை ஏற்படுத்தும்.
இவை எல்லாம் ரஸ ஜல நிதி தரும் அறிவுரை!
PICTURE OF RUBY EAR RINGS
நல்ல
மாணிக்கம் எது?
அருமையான மாணிக்கக் கல்லை எப்படி அறிவது?
சூரிய ஒளி அதன் மேல் படப்பட சுற்றுப்புறம் எல்லாம் பிரகாசிக்கும்.
இளங்காலை நேரத்தில் உதய சூரியனின் கிரணங்கள் பட்டவுடன் சிவப்பு ஜூவாலை
போன்ற ஒளியை எந்தக் கல் கக்குகிறதோ அது சிறந்தது.
தூரத்திலிருந்து பார்க்கும் போது சிவப்புத் தீ போல ஜொலிப்பது வம்ச காந்தி
என்று அழைக்கப்படுகிறது. அது உடனடியாக செல்வத்தைத் தரும்.
இருளில் ஒரு மாணிக்கத்தை வைத்தால் அது தன் ஒளியால் சுற்றுப்புறத்தில்
ஒளியைத் தருமாயின் அது நல்ல கல்லாகும்.
கடவுளுக்குக் கூடக் கிடைக்காத மாணிக்கம் அல்லது கடவுளரே ஆவலுடன் விரும்பி
ஏற்கும் மாணிக்கம் எது எனில். அதை ஒரு தாமரை மலரின் உள்ளே வைத்தவுடன் அது விகசித்து
உடனே இதழ் விரித்து மலரும். அதுவே அற்புதமான மாணிக்கக் கல்!
மாணிக்கத்தின் எடை எவ்வளவு இருக்க வேண்டும்?
இரண்டு கேரட் சாதாரணமாக அணியப்படுகிறது.
RUBY STAMP FROM VIETNAM
பிரபலமான மாணிக்கக் கற்கள்!
இது வரை உலகம்
கண்ட புகழ் பெற்ற மாணிக்கக் கற்கள் வருமாறு:
ப்ளாக் ப்ரின்ஸின்
ரூபி (Black Prince’s Ruby)
தைமூர் ரூபி (Timur Ruby)
ரோஸர் ரீவ்ஸ் ஸ்டார் ரூபி (Rosser Reeves Star Ruby)
எட்வர்ட்ஸ் ரூபி
(Edwardes Ruby)
உலகின் பிரபலமான நடிகையும் பேரழகியுமான
எலிஸபத் டெய்லர் 1968 ஆம் ஆண்டு ஒரு மாணிக்கம் பதித்த மோதிரத்தை அணிந்தார். அது உலகினரின்
கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
அதன் எடை 8.24 கேரட். அது 2011இல்
42 லட்சம் டாலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.
(ஒரு டாலரின் இன்றைய ரூபாய் மதிப்பு 70) அதாவது ஒரு கேரட்டின் விலை சுமார் ஐந்து லட்சம்
டாலர்!
உலகின் அதிக எடையுள்ள ரூபி ஹோப் ரூபியாகும். இதன் எடை 32.08 கேரட்.
RUBY FROM THAILAND
மாணிக்கம் கிடைக்கும் இடங்கள்!
பர்மாவைத் தவிர அமெரிக்கா மற்றும்
ஆஸ்திரேலியாவிலும் மாணிக்கம் கிடைக்கிறது.
ஒரு முக்கியமான விஷயம், நமது
தமிழ்நாட்டில் சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மாணிக்கம் உள்ளிட்ட பல கற்கள் உள்ளன.
ரத்தினக் கலையில் நிபுணர்களாக
உள்ள வல்லார் இந்தப் பகுதியில் ஆய்வு நடத்தினால் தமிழகம் மாணிக்க நாடாக ஆகி விடும்.
சிலம்பில் மாணிக்கம்!
தமிழ் இலக்கியத்தில் சிலப்பதிகாரம்
மாணிக்கத்தையும் முத்தையும் மையமாகக் கொண்டு முடிகிறது.
பாண்டிமாதேவி என் பொற்சிலம்பில்
முத்துப் பரல்கள் உள்ளது என்று கூற கண்ணகி தன் காற்சிலம்பை உடைத்துக் காண்பிக்க அதிலிருந்து
மாணிக்கப் பரல்கள் தெறித்து விழுந்தன.
“கண்ணகி அணிமணிக் காற்சிலம்பு
உடைப்ப மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே” என அழகுற அந்தக் காட்சியை அமைக்கிறார் இளங்கோவடிகள்.
கண்ணகியின் மாணிக்கக் கற்கள்
மன்னனின் வாயில் தெறிக்க, மதுரை பற்றி எரிந்ததையும் பின்னர் நடந்ததையும் அனைவரும் அறிவர்.
மாணிக்கம் இல்லாத இலக்கியம்
ஒளி இல்லாத இலக்கியம்.
ஆங்கில இலக்கியத்தில் ரால்ஃப்
வால்டோ எமர்ஸன் உள்ளிட்ட கவிஞர்கள் மாணிக்கத்தைத் தங்கள் கவிதையில் இழைத்துள்ளனர்.
தமிழில் மாணிக்கத்தின் பெருமையைச் சுட்டிக் காட்டும் நூற்றுக் கணக்கான பாடல்கள் உள்ளன.
பெரியாழ்வார்,
“மாணிக்கம் கட்டி வயிரம் இடை
கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச்
சிறு தொட்டில்”
என்று வர்ணிப்பதிலிருந்து ஆரம்பித்தால்
மாணிக்கப் பட்டியல் நீளும்.
அருளாளர்கள் அனைவரும் மாணிக்கமே
என இறைவனை அறைகூவி அழைக்கும் போது மாணிக்கத்தின் உண்மையான மதிப்பு தெரிய வருகிறது,
இல்லையா?
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
In ancient China the number nine wasimportant in tne I Ching
and in the Book of Rituals ( (Li Chi), which speaks o nine ceremonies and they are-
Puberty rite for men
Wedding
Audience
Ambassadorship
Burial,
Sacrifice
Hospitality
Drinking and
Military rituals
In the Han dynasty a nine based cosmology was
for favoured.
The ninth day of the ninth month was a men’s festival of ‘yang raised to a
higher power.
There were nine earthly provinces, nine
mountains, nine fields of heaven and so on.
The center of Beujing had 8 roads leading in to
it , and these added to the one central point, made for a similar nonary
structure.
In the West, there were nine orders of angels,
nine cosmic spheres in medieval
cosmology, nine muses.
Greeks
have also chosen Goddesses for the arts and poetry like Hindus.
The
Muses are the nine goddesses of the arts, history and astronomy in Greece. The
muses were not highlighted in mythologies, but writers and poets invoke them
like Hindus before writing a book or performing dance and music. They are the
source of inspiration for them like Goddess of Knowledge Saraswati or Goddess
of wisdom, Ganesh.
Muses
were among the retinue of the god Apollo, the patron of music and the arts.
They were said to reside on Mount Helicon near Thebes or on Mount Parnassus
near Delphi (Like Kailash or Mount Meru of Hindu Mythology).
Their
names and branches of arts they preside over are as follows:
Name
Meaning
Arts
Calliope
Beautiful
voice
Epic Poetry
Clio
Fame
History
Erato
Lovely
Lyric Poetry
Euterpe
Joy
The Flute
Melpomene
Singing
Tragic Drama
Polyhymnia
Many
Songs
Mime
Terpsichore
Joyful
dance
Dance
Thalia
Good
Cheer/Plenty
Comic Drama
Urania
Celestial
Astronomy
xxx
Idioms and phrases
We say that a cat has nine lives
and a person who is ‘dressed to the nines’ in wearing his or her most elaborate
finery.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
ஸ்ரீ வேதாந்த தேசிகர் பிறந்த 700
ஆவது ஆண்டு விழாவில் – 1968-ல்- சென்னையில்
ஒரு மலர் வெளியிடப்பட்டது. அதிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள்- பகுதி 1 (நூல் இருக்குமிடம்- பிரிட்டிஷ் லைப்ரரி, லண்டன்).
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
பிரிட்டனில் ஆர்தர் (King Arthur) மன்னரிடம் ஒன்பது வைரங்கள் இருந்தனவாம்.