Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
முன்னொரு காலத்தில் ஒரு மனிதன்
தனது தோட்டத்தில் நிறைய மாதுள மரங்களை வளர்த்தான். அதிலிருந்து கிடைத்த நிறைய மாதுளங்கனிகளை
ஒவ்வொரு இலையுதிர்காலத்திலும் எடுத்து வெள்ளித் தட்டுகளில் வைத்தான்.
அவனது வீட்டு வாசலில் வைக்கப்பட்ட
வெள்ளித் தட்டுகளில் இருந்த மாதுளங்கனிகளுடன் அவன் ஒரு குறிப்பையும் வைத்தான்.
“உங்களுக்கு நல்வரவு. ஏதாவது
ஒரு கனியை எடுத்துக் கொள்ளலாம்.”
ஆனால் அங்கு செல்வோர் யாரும்
அந்தக் கனிகளில் ஒன்றைக் கூடத் தொடவில்லை.
அந்த மனிதன் சற்று நினைத்துப்
பார்த்தான்.
அடுத்த இலையுதிர்காலத்தில் வெள்ளித்
தட்டுகளில் மாதுளங்கனிகளை வைத்த போது அவன் கூடவே ஒரு குறிப்பையும் வைத்தான்.
“இதோ, இங்கே பூமியில் கிடைப்பதிலேயே
சிறந்த மாதுளங்கனிகள் உள்ளன. ஆனால் இவற்றை மற்ற எல்லா இடத்திலும் விற்கும் வெள்ளிப்
பணத்தை விட அதிகமாகவே விற்கிறோம்.”
என்ன ஆச்சரியம், அண்டை அயலில்
இருந்தோர், வருவோர் போவோர் எல்லாம் அலறி அடித்துக் கொண்டு வந்து அங்கு வந்து அதை வாங்குவதற்காக
நின்றனர்!
***
செம்மண் பூமி (The
Red Earth)
அந்த மரம் மனிதனிடம் சொன்னது
: “ஓ! மனிதா!! எனது வேர்கள் செம்மண் பூமியின் ஆழத்தில் உள்ளது.நான் உனக்கு எனது பழங்களைத்
தருகிறேன்.”
மனிதன் உடனே மரத்திடம் சொன்னான்
: “ஓ! மரமே!! நாம் எப்படி ஒன்று போல இருக்கிறோம்! எனது வேர்களும் செம்மண் பூமியில்
ஆழத்தில் தான் உள்ளது. செம்மண் பூமி உனக்கு பழங்களை எனக்குத் தரும் சக்தியைத் தந்துள்ளது.
அந்த செம்மண் பூமி உனக்கு நன்றி சொல்லி விட்டு அந்தப் பழங்களை வாங்கிக் கொள்ள கற்பிக்கிறது!”
***
பரிமாற்றம் (The
Exchange)
முன்னொரு காலத்தில் ஒரு சாலை
சந்திப்பில் ஒரு கவிஞனும் ஒரு முட்டாளும் சந்தித்தனர். இருவரும் பேச ஆரம்பித்தனர்.
ஆனால் அவர்கள் பேசியது அனைத்தும் ஒருவருக்கொருவரிடம் அதிருப்தியையே ஏற்படுத்தியது.
அப்போது அந்த சாலையின் தேவதை
அங்கே வந்து தனது கரங்களை அந்த இருவர் மீதும் வைத்தது.
அட, என்ன ஆச்சரியம், இருவரும்
தங்கள் உடைமைகளை மாற்றிக் கொண்டு விட்டனர்.
இருவரும் பிரிந்தனர். ஆனால் சொல்வதற்கே விசித்திரமாக இருக்கிறது, கவிஞன் தனது
கையில் ஒன்றுமே இல்லாதிருப்பதை உணர்ந்தான்; வெறுங்கையை மணலில் அளைந்தான்.
அங்கே அந்த முட்டாளோ தன் கண்களை
மூடிக்கொண்டு ஒன்றுமில்லாதிருப்பதை உணர்ந்தான். அவன் இதயத்தில் நகரும் மேகங்கள் இருப்பதைக்
கண்டான்.
***
கலில் ஜிப்ரானின் கவிதைகள் ஆழ்ந்த
பொருளைக் கொண்டதாக இருக்கும்; சிந்திக்க வைக்கும். ஏராளமான உருவகச் சித்திரங்களை வசன
நடையில் அவர் படைத்துள்ளார்.
கம்பர் தமிழுக்குத் தந்த கலியாண வரி! (Post No.7144)
WRITTEN BY S NAGARAJAN
swami_48@yahoo.com
Date: 27
OCTOBER 2019
Time in London – 5-08 AM
Post No. 7144
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
அரசன் கம்பரை நோக்கி,”கொங்கு மண்டலமும்
சோழ மண்டலமும் காப்பாற்றப்பட்டது. இதற்கு யாது கைம்மாறு செய்வேன்”
என்று கேட்டான்.
கம்பர் புன்னகையுடன், “அரசே! எப்பொழுதும் அரசனும்
குடிகளும் நினைக்கத்தக்கதாக இருக்க வேண்டும். ஆதலின் கலியாண வரி என்று ஒரு வரியை ராஜ்யத்துக்கு
மக்கள் செலுத்தி வருகிறார்கள். அதை இதற்கு உதவுங்கள். அது போதும்”
என்றார்.
உடனே சோழன் ஒரு சாசனம் எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தான்.
கதுவி வருபொன்னி கரைகடவா வண்ணம்
பதுமமுகக் கம்பனவர் பாட – வதுவைவரி
மாடை யரைக்கழஞ்சு வண்கம்பர்க் கீந்தபரி
சேடர் குலோத்துங்க னெழுத்து.
என்ற பாடல் குலோத்துங்கன் ஓலையில் சாசனம் எழுதிய நிகழ்ச்சியைக்
குறிப்பிடுகிறது.
‘கம்பர்க்கு ஈந்த பரிசு ஏடர் குலோத்துங்கன் எழுத்து’
என்பதில் ஏடர் என்றால் ஏடு அல்லது ஓலை. ஆகவே
சாசனம் என்றாகிறது.
கம்பர் உடனே, “இது என் வல்லமையால் நிகழ்ந்த ஒன்று
அல்ல; தெய்வத் தமிழால் நடந்தது. ஆகவே வதுவை வரி எனப்படும் இந்த கலியாண வரியை அத்தமிழுக்கே
உரிமை ஆக்குகின்றேன்”
என்றார்.
பின்னர் அரசனையும் குடிமக்களையும் நோக்கி அவர், “அரசே!
குடிமக்களே! இந்தத் தமிழ்நாட்டின் குடிகளான புலவர் பெருமக்கள் இந்தக் கொங்கு நாட்டில்
வாழையடி வாழையாக வாழ்ந்து வருகின்றனர். அரசர்களாலும் குடிகளாலும அவர்கள் ஆதரிக்கப்பட்டு
தமிழை நன்கு வளர்த்து வந்தார்கள். இப்போது அவர்களின் செழிப்பு சற்று மலினப்பட்டது போல
இருக்கிறது. ஆகவே இந்தக் கொங்கு மண்டலத்தில் கல்யாண காலத்தில் மணமகன் மணமகளை ஆசீர்வதித்து
வாழ்த்தும் சமயம் எனக்குக் கொடுத்த கலியாண
வரியை அவர்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன்” என்றார்.
அரசனும் குடிமக்களும் கம்பரின் இந்தப் பெருங்குணத்தை
வியந்து போற்றி, அப்படியே ஆகுக என்றனர்.
கம்பர் வாழி பாடி அப்புலவர்களிடம் சாசனத்தைக் கொடுத்துத்
தலைமுறை தலைமுறையாக, காலங்களில் வாழி கூறி வரிப்பணத்தைப் பெற்றுத் தமிழை வளர்த்து வாருங்கள்
என்று கூறினார்.
கொங்கு நாட்டில் சோழர்களின் ஆதிக்கம் இருந்ததை வரலாறு
மூலம் நன்கு அறியலாம்.
கரூர் சோழர்களது ஐந்து முடிசூட்டும் தலங்களின் ஒன்றாக
இருந்தது.
ஜயங்கொண்ட சோழேச்சுரம்
கரிகாலச் சோழேச்சுரம்
பராக்கிரம சோழேச்சுரம்
விக்கிரம சோழேச்சுரம்
குலோத்துங்க சோழேச்சுரம்
குலோத்துங்க விண்ணகரம்
என இப்படிப் பெயர் பெற்ற பல சிவ, விஷ்ணு ஆலயங்களும்
இங்கு உள்ளன.
பல சிலாசாசனங்களும் உள்ளன. பிரபந்தங்களும் உள்ளன.
குலோத்துங்கன் காலத்தில் காவேரி கரை கடந்தது என்றும்
கம்பர் பாட அது அடங்கிற்றென்றும் கூறும் பல பிரபந்தங்களும், சாசனங்களும் உள்ளன.
கம்பர் காலத்தில் இருந்தவன் இரண்டாம் குலோத்துங்கன்
என்பது ஆராய்ச்சியாளரின் துணிபு.
இந்த அழகிய வரலாற்றைக் கொங்கு மண்டல சதகத்தின் முப்பதாவது
பாடல் இப்படி விளக்குகிறது :-
கன்னி யழிந்தனள் கங்கை திறம்பினள் கண்ணின்முனே
பொன்னி கரைகடந் தாளெனு நிந்தை புவியிலுளோர்
பன்னி யிகழா தமரெனக் கம்பரோர் பாச்சொலச்செய்
மன்னிய கங்கைக் குலத்தாரும் வாழ்கொங்கு மண்டலமே
பொருள் : ‘கன்னியழிந்தனள்’
என்று தொடங்கும் பாட்டை கம்பர் பாடும் படி செய்த கங்கா குலத்தவர்கள் வசிப்பதும் கொங்கு
மண்டலமே!
***
Kambar Samadhi, Nattarasankottai, picture sent by Venkat Kannan
Cheddi Jagan Birth Centenary Stamp release with his relatives in the picture.
Written by london Swaminathan
swami_48@yahoo.com
Date: 24 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 7- 44 am
Post No. 7132
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average
hits per day for both the blogs 12,000.
1992ம்
(1-11-1992) ஆண்டில் நான் தினமணியில் வாரம் தோறும்
எழுதிய கட்டுரைகளில் மேலும் இரண்டு இதோ:–
கயானா அதிபர் செட்டி ஜகன் CHEDDI JAGAN
இலக்கிய நோபல் பரிசு வென்ற டெரிக்
வால்காட் DEREK WALCOTT
(நான் எழுதிய கந்தாயங்களைக் குப்பைத்
தொட்டியில் போடுவதற்கு முன்னர் இங்கு ஏற்றிவிட்டால் யாருக்கோ என்றோ பயன்பெறும்
என்ற அற்ப ஆசை! மேலும் அவை மிகவும் பழுப்பாடைந்து போய்விட்டன. இன்னும் கொஞ்ச
நாளில் தூள் தூள் ஆகிவிடும்).
SIX ARTICLES WRITTEN BY S SWAMINATHAN FROM LONDON , DINAMANI, 1-11-1992.
Date: 23 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 5-48 AM Post No. 7127
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
ஜோத்பூர் மன்னன் யஷ்வந்த் சிம்ஹாவுக்கு ஒரு செய்தி
வந்தது.
பெண் ஒட்டகங்களை மேய்த்துப் பாதுகாக்கும் காவலன்
விவசாயி ஒருவரின் மகன் ஒரு பெண் ஒட்டகத்தைக் கொன்று விட்டான் என்று செய்தி அனுப்பி
இருந்தான்.
மன்னன் உடனே தன் படைவீரர்களுக்கு அந்த விவசாயியைப்
பிடித்து வருமாறு கட்டளையிட்டான்.
ஆசகரனா என்ற அந்த விவசாயி அவனது பையனுடன் அவைக்குக்
கொண்டு வரப்பட்டான்.
மன்னன் கோபத்துடன் அவனை நோக்கி, “உன் பையன் ஒட்டகத்தைக்
கொன்றது உண்மையா?” என்று கேட்டான்.
விவசாயி தன் பையனைச் சுட்டிக் காட்டி, “இதோ இருக்கிறான்
என் பையன். அவன் தான் ஒட்டகத்தைக் கொன்றான்” என்றான்.
மன்னன் அந்தப் பையனை நோக்கி, “ஒட்டகத்தை நீ தான்
கொன்றாயா?” என்று கேட்டான்.
“ஆம், மன்னவா! நான் தான் கொன்றேன். வயல்வெளியைப்
பாதுகாத்துக் கொண்டிருந்தேன். அந்த ஒட்டகம் எனது வயலை நோக்கி வந்து கொண்டிருந்தது.
அதை மேய்ப்பவனிடம் அதை வயலுக்குள் விடாதே! என் சோளமெல்லாம் பாழாய்ப் போகும் என்று வேண்டிக்
கொண்டேன். ஆனால் அவன் கேட்கவில்லை. ஒட்டகம் உள்ளே வந்து சோளக்கதிர்களை நாசம் செய்ய
ஆரம்பித்தது. ஆகவே என் வயலைப் பாதுகாக்க ஒட்டகத்தைக் கொல்ல நேர்ந்தது” என்றான் அந்தச்
சிறு பையன்.
மன்னனுக்கு அந்தச் சிறு பையனால் எப்படி ஒரு பெரிய
ஒட்டகத்தைக் கொல்ல முடியும் என்று சந்தேகம் ஏற்பட்டது.
“எப்படி அந்த ஒட்டகத்தைக் கொன்றாய்” என்று கேட்டான்
மன்னன்.
சுற்றும் முற்றும் பார்த்த பையன் தூரத்தில் இருந்த
ஒரு ஒட்டகத்தைக் கண்டான்.
அதை அருகில் இழுத்து வந்து தன் வாளால் அதன் கழுத்தை
ஒரே வெட்டாக வெட்டினான்.
“இப்படித்தான் வெட்டினேன்” என்றான் அந்தப் பையன்.
மன்னனுக்கு வியப்பு மேலிட்டது.
அவனைத் தன் படையில் உடனடியாகச் சேர்த்துக் கொண்டான்.
அந்தப் பையன்
தான் உலகமே வியக்கும் வண்ணம் பின்னால் மாபெரும் வீரன் என்று புகழ் பெற்ற துர்காதாஸ்!
Date: 18 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 17-20 Post No. 7109
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
All the encyclopaedias attribute the source of the name Singapore to the Sanskrit word Simhapura (Lion city). Singapore’s old history goes back to about 1300 CE. A prince from Sumatra island of Indonesia by name Sri Tri Bhuvana (also known as Sanga Neela Uttama) founded the Kingdom of Singapura (Lion Kingdom) in 1299. But the individual port cities are named at least for 2000 years. On either side of Singapore were powerful Hindu empires from the first century.
Shiva in Berlin (Germany) Museum
Simhapura is
also interpreted as Sringa Puri (Horn of the Malayan peninsula). There is a
debate this name- how come he named Simha (lion) to a place where there are no
lions. The reason for this is, lion is
always associated with Kingship. The word Kesari (Kesa+ ari) meant Hair animal.
That was the title of many Indian kings and Roman Kings. Kesari became Caesar
in the West. We come across many Caesars including the most famous Julius
Caesar/Kesari. Even Si Lanka, which has no lions, named itself as Simhala Desa
(Lion country) 2500 years ago. People who don’t know the Hindu stories of Lion
King gave stupid interpretations in Singapore and Ceylon (Sri Lanka). Singapore
and Sri Lanka have lion in their flags or emblems. It simply means heroism with
lion like kings.
More
interesting is the word Malaya. This word has its origin both in Tamil and
Sanskrit. In Tamil, it meant mountain and the most famous Malaya Parvata (Hill)
is mentioned in both Tamil and Sanskrit literature. It has become synonymous
with Sandal wood and southern breeze. In Tamil ‘Malai’ is mountain/hill. Since
Malaya is divided by a mountain range Tamils might have called it Malaya desa.
But the Sanskrit word Malaya has more meaning. It is in Mahabharata and many
Sanskrit stories. Even King Rishabadeva’s son was called Malaya. Pandya kings
had Malai (hill) in their flags and one Pandya was called Malayadwaja (one with
mountain flag).
More interesting is the discovery of several Tamil and Sanskrit inscriptions in Malayan peninsula.
One of the
oldest Hindu Kingdoms in the peninsula is mentioned in the Chinese History of
the Liang Dynasty (502-556 CE) as lang- ya su. Later Malay and Javanese chronicles
refereed to it as Lankasuka (Pleasure Island). Rajendra Choza won this place in
12th century and his Tamil inscription mentioned it as Lankasokam.
Two other
Hindu kingdoms are mentioned in Chinese Chronicles Pan-pan where Brahmanas from
India came to get gifts from the munificent king. Another one was Pa-hoang
(Pahang). Sari – Pala- Varman sent an embassy to China from here in 449 CE.
Though a
kingdom called Kantoli sent embassies to China, scholars are not able to
identify it.
Only
fragmentary Sanskrit inscriptions are available from Malaya. The Indian
alphabets on them are ascribed to 4th or 5th centuries.
Seven of the inscriptions were found in the centre, four in the northern part
of Province Wellesley. Five of them were found in Ligor, two in Chaiya and one
each in Keddah and Takua pa, according to R C Majumdar.
Other
significant founds include a Cornelian seal in Perak with the Hindu name Sri
Vishnu Varman. The characters point to fifth century. Slightly later in date is
an inscription found near Keddah containing three verses from a Sutra of
Madhyamika school. (We have one Sanskrit inscription of Kulothunga Choza period
according to Wikipedia).
Swarnabhumi
(Golden land) is used to refer to several regions from Malaya to Sumatra. At
one time Malaya was also called Swarnabhumi.
(I will
write about the Tamil Inscriptions in Malaya separately).
Date: 14 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 13-36 Post No. 7095
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Date: 7 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 9-18 am Post No. 7068
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
‘சரஸ்வதி தேவியின் புகழ்’ என்ற கவிதையில் இப்படிக் கூறும் மஹாகவி பாரதியார் கலைமகளைக்
கொண்டாடிப் பாடிய பாடல்கள் நிறைய உள்ளன.
‘ஆணி முத்தைப் போலே அறிவு முத்து
மாலையினாளைத்’ தொழுதால் என்னென்ன பெறலாம்
என்று அவரே பட்டியலிட்டுத் தருகிறார்.
தான் என்னும் பேய் கெடும்.
பல சஞ்சலக் குரங்குகள் தளைப்படும்.
வான் என்னும் ஒளி பெறலாம்.
நல்ல வாய்மையிலே மதி நிலைத்திடும்.
ஊனங்கள் போக்கிடலாம்.
நல்ல ஊக்கமும் பெருமையும் பெறலாம்.
இதை விட வேறு என்ன வேண்டும்,
ஒரு மனித வாழ்க்கையில்?
அவ்ள் எங்கிருப்பாள் என்பதையும்
அவரே அருமையாக விளக்கி விடுகிறார்:
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்.
கொள்ளை இன்பம் குலவு கவிதை கூறு
பாவலர் உள்ளத்து இருப்பாள்,
வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள்.
முனிவர்கள் கூறும் கருணை வாசகத்தின்
உள் பொருளில் இருப்பாள்.
சாஸ்த்ர புராண நாடக மஹா காவ்யாதி
சஞ்சாரிணீம் என இலக்கியங்களில் சஞ்சரிக்கும்
அவளைப் புகழ்கிறது சரஸ்வதி ஸ்தோத்திரம்.
கவிஞர் தெய்வம் என்று பாரதியார்
கூறியதை அப்படியே பலர் வாழ்க்கையிலும் கண் கூடாகக் காணலாம்.
காலம் – பதினேழாம் நூற்றாண்டு.
ஸ்ரீ வைகுண்டத்திலே
பிறந்த குமரகுருபரருக்கு ஐந்து வயது வரை பேச்சு வரவில்லை. திருச்செந்தூர் முருகனைத்
தொழ அவர் நாவிலிருந்து கவி மழை அருவியெனப் பொழியத் தொடங்கியது. கந்தர் கலி வெண்பாவைப்
பாடினார்.
பின்னர் தல யாத்திரை மேற்கொண்டு
வட தேசம் சென்று காசியை அடைந்தார். அங்கு ஒரு மடத்தை நிறுவி இறைப்பணி செய்ய நினைத்தார்.
அதற்கென காசியை ஆண்ட பாதுஷாவைச் சந்திக்க விரும்பினார்.
பாதுஷாவிற்கோ ஹிந்துஸ்தானி மொழி
மட்டுமே தான் தெரியும்.
குமரகுருபரர் கலைமகளை வேண்டி
மனமுருகிப் பாடினார். பத்துப் பாடல்களைக் கொண்ட சகலகலாவல்லி மாலை மலர்ந்தது.
சகலகலாவல்லி ஆயிற்றே, அவள் அருளால்,
ஒரு கணத்தில் ஹிந்துஸ்தானி பாஷையில் வல்லவரானார் குமரகுருபரர்.
பாதுஷாவின் அவையில் நுழைந்தார்.
அரியாசனத்தில் அமரிந்திருந்த பாதுஷா அவரை நிற்க வைத்துப் பேசுவதைக் கண்ட குமரகுருபரர்
அரியாசனத்திற்கு நிகரான சரியாசனமாக ஒரு சிங்கத்தை வரவழைத்து அதன் மேலேறி அமர்ந்தார்.
பாதுஷா திகைத்தார்; பிரமித்தார்.
அவரது பல சந்தேகங்களைத் தீர்த்த குமரகுருபரர் அவருக்கும் அருள் பாலித்தார்.
பாதுஷா அவரது இறைப்பணிக்கு உதவிகள்
செய்ய முன் வந்தார். காசித் திருத்தலத்தில் காசி மடம் உதித்தது.
தென்னாடு வந்த அவர் திருப்பனந்தாளில் மடத்தை நிறுவினார்;
அது இப்போதும் செய்யும் இறைத்தொண்டை அனைவரும் அறிவர்.
திருமலை நாயக்கரின் அரசவையிலே
குமரகுருபரர் ஆற்றிய அற்புதங்கள் பல.
என்று அவர் சகல கலாவல்லியைத்
தொழுத பாடல் உள்ளிட்ட சகல கலாவல்லி மாலையின் பத்துப் பாடல்களையும் தினமும் ஓதினால்
அன்னை கலைமகள் அருளைப் பெறலாம் என்பது திண்ணம்.
சரஸ்வதி தேவியைத் துதித்தால்
அவள் அருளால் ‘தூக்கும் பனுவல் துறை தோய்ந்த கல்வியும் சொற்சுவை தோய் வாக்கும் பெருகும்’ என்பது அவரது சத்திய வாக்கு..
கம்பரோ ‘ஆய கலைகள் அறுபத்து
நான்கினையும் ஏய உணர்விக்கும் என் அம்மை’யைத் துதித்தால் ‘கல்லும் சொல்லாதோ கவி’ என்று கேட்கிறார்.
30 பாடல்கள் கொண்ட சரஸ்வதி அந்தாதியைப்
பாடிய கம்பர் கலைமகளைத் துதித்தால் எதையும் ‘துணிந்து சாதிக்கலாம்’ என்ற பெரிய ரகசியத்தைப் பாடலிலேயே கூறுகிறார்.
அவர் பத்தாயிரம் பாடல்களால்
இராமாயணம் பாடித் துணிந்து சாதித்தது சரஸ்வதி அருளாலேயே என்பது இதனால் பெறப்படுகிறது.
தமிழகத்தில் சரஸ்வதிக்கு உள்ள
ஒரே கோவில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் கூத்தனூரில் உள்ளது.
ஒட்டக்கூத்தர் என்னும் பெரும்
தமிழ்ப் புலவர் இங்கு வழிபட்டு அன்னையின் அருளைப் பெற்று பெரும் கவிஞராகி ‘கவி ராட்சதன்’ என்ற பட்டப் பெயரையும் பெற்றார். அவரே பூந்தோட்டம் என்னும்
ஊரில் சரஸ்வதிக்குக் கோவில் அமைத்தார்; அதனால் இந்த ஊர் கூத்தனூர் என அழைக்கப்படுகிறது.
இந்த ஆலயத்தில் வெண்ணிற ஆடையுடன்
வெண்தாமரையில் பத்மாசனத்தில் சரஸ்வதி தேவி வீற்றிருக்க அவர் வலது கீழ் கையில் சின்
முத்திரை உள்ளது. இடது கையில் புத்தகமுள்ளது. வலது மேல்கையில் அட்சர மாலையும் இடது
மேல் கையில் அமிர்தகலசமும் உள்ளது.
பழம் பெரும் புனித நூலான ரிக்
வேதத்தில் சரஸ்வதியைப் பற்றிய் பல குறிப்புகளைக் காணலாம்.
யாக்ஞவல்க்யர் என்ற பெரும் முனிவர்
சரஸ்வதியைத் துதிக்க அவர் முன் தோன்றி ஓம் என்பதைச் சொல்லி அனைத்து அட்சரங்களையும்
சரஸ்வதி அருளினாள் என மஹாபாரதம் சாந்தி பர்வம் தெரிவிக்கிறது.
சரஸ்வதி என்ற சொல்லுக்கு என்ன
பொருள்?
சரஸ் என்றால் நீர். ஆக சரஸ்வதி
என்பது தெய்வீக நதியான சரஸ்வதி நதியைக் குறிக்கிறது. அத்துடன் மட்டுமன்றி பெரும் நீர்நிலைகளையும்
குறிக்கிறது.
இன்னொரு பொருள் சரஸ் என்றால்
வாக்கு அல்லது பேச்சு;
வதி என்றால் தரித்திருப்பவள்.
ஆக சரஸ்வதி என்ற சொல்லுக்கு வாக்தேவி அல்லது வாணி என்ற பொருளும் ஏற்படுகிறது.
ஸ்வாமி சின்மயாநந்தர், ‘ஸ்வ’ என்றால் ஒருவரின் ஆன்மா என்றும் ‘சார’ என்றால் சாரம் என்றும் அர்த்தம் கூறி சரஸ்வதி என்றால் ஒருவரின்
ஆன்மாவின் சாரத்தைத் தருபவள் (She
who gives the essence (Saara) of our own Self (Sva)) என்று விளக்குகிறார்.
சரஸ்வதியின் வாகனம் ஹம்ஸம்.
சரஸ்வதியின் பூஜைக்கு உகந்த மலர்கள் வெண்தாமரை மற்றும் செந்தாமரை மலர்கள்.
தேவியின் ஆயிரம் திரு நாமங்களை
சரஸ்வதி சஹஸ்ரநாமமும் சரஸ்வதி அஷ்டோத்திரம் தேவியின் 108 திருநாமங்களையும் தருகின்றன.
சரஸ்வதிக்கு ஸ்ரீ என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
இதனால் அனைத்தும் அருள்பவள் சரஸ்வதி என்பது பெறப்படுகிறது.
சகல கலாவல்லி மாலை, சரஸ்வதி
சஹஸ்ரநாமம், அஷ்டோத்திரம், சரஸ்வதி அஷ்டகம், சரஸ்வதி சூக்தம், சரஸ்வதி கவசம் மற்றும்
சரஸ்வதி ஸ்தோத்திரங்கள் ஏராளம் உள்ளன. இவற்றால் சரஸ்வதி தேவியை வழிபடலாம்; சுடர் விடும்
அறிவைப் பெறலாம்.
பாரத நாடெங்கும் சரஸ்வதி தேவிக்கான
ஆலயங்கள் பல உள்ளன. அவற்றில் குறிப்பித் தகுந்த சிலவற்றைப் பார்க்கலாம்.
பெஹோவா : ஹரியானா மாநிலத்தில்
குருக்ஷேத்திர மாவட்டத்தில் உள்ள ஊர் இது. இதன் பழைய காலப் பெயர் ப்ரூதக்.
மன்னன் ப்ருது, தான் இறக்கும்
சமயம் சரஸ்வதி நதிக் கரையில் இறக்க விரும்பியதால் அவனது மகன் அவரை அங்கு அழைத்துச்
சென்றான். அவர் இறந்தவுடன் அவரது சிரார்த்ததையும் அங்கேயே செய்தான்.
விஸ்வாமித்திரர் இங்கு தான்
பிரம்ம ரிஷி என்ற பட்டத்தைப் பெற்றார். இங்குள்ள சரஸ்வதி தேவியின் ஆலயம் மிகவும் புகழ்
பெற்றது.
மஹாபாரத காலத்திற்கும் முற்பட்ட
காலத்தில் அமைந்த நகர் இது.
பிலானியில் உள்ள சரஸ்வதி ஆலயம் : 1959ஆம் ஆண்டு ராஜஸ்தானில்
ஜி.டி. பிர்லாவினால் அமைக்கப்பட்ட ஆலயம் இது. ஐந்து பகுதிகளைக் கொண்ட இந்த ஆலயம்
70 தூண்களின் மேல் அமைக்கப்பட்டுள்ளது.
மதுரா : உத்தரபிரதேசத்தில் மதுரா
நகருக்கு மேற்கே ஒரு சரஸ்வதி ஆலயம் உள்ளது. மஹாவித்யா தேவி ஆலயம் என அழைக்கப்படும்
இதன் அருகில் சரஸ்வதி குண்ட் என்ற குளமும் உள்ளது.
சிருங்கேரியில் உள்ள பெருமை
மிக்க சாரதா பீடம் விளக்க முடியா மஹிமை கொண்ட சரஸ்வதியின் பீடம்.
இன்னும் குஜராத், மஹராஷ்டிரம்,
பீஹார், காஷ்மீர், கர்நாடகம், மத்ய பிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்களில் சரஸ்வதி தேவிக்கெனவே
பிரத்யேக ஆலயங்கள் உள்ளன.
சரஸ்வதி தேவியை வசந்த ருதுவில்
மாசி மாதம் சுக்ல பட்சத்தில் வரும் பஞ்சமியில் நாடெங்கும் கோலகலமாகக் கொண்டாடுகின்றனர்.
இது சரஸ்வதி தேவி தோன்றிய தினமாக கருதப்படுகிறது.
ஒரிஸாவில் இந்த தினம் சரஸ்வதி
பூஜை தினமாகவும் ஆந்திர பிரதேச்த்தில் ஸ்ரீ பஞ்சமியாகவும் கொண்டாடப்படுகிறது.
சரஸ்வதி தேவியின் சிறப்பு வழிபாடு
நவராத்ரியில் அமைகிறது. காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை கொண்டாடப்படும் பண்டிகை நவராத்ரி.
புரட்டாசி மாதம் அமாவாசை கழிந்த
பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடிய ஒன்பது நாட்கள் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
காளி, லக்ஷ்மி, சரஸ்வதி ஆக மூன்று
தெய்வங்களும் மூன்று நாட்கள் வீதம் முறையே வழிபடப்பட்டு ஒன்பதாம் நாளான நவமி அன்று
சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது.
துர்க்கா தேவி மகிஷாசுரனை எட்டு
நாட்கள் போரிட்டு ஒன்பதாம் நாளன்று நவமியில் வதம் செய்தாள்.
அடுத்த நாள் வெற்றிக்கான விஜய
தசமி நாளாக அமைகிறது
இசை, நாடகம் உள்ளிட்ட 64 கலையைப்
பயில்பவர்களும் தமக்கு உரிய சாதனங்களுடன் ஆய கலைகள் அறுபத்திநான்கினுக்கும் அதி தேவதையான
சரஸ்வதியை வழிபடுகின்றனர்.
விஜய தசமித் திருநாளை, அடுத்த மேல் நிலையை அடைவதற்கான
துவக்க நாளாகக் கொள்கின்றனர்.
மண்கண்ட வெண்குடைக்
கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண்டளவிற் பணியச் செய்வாய்
படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல் கோடி உண்டேனும்
விளம்பில் உன் போல்
கண்கண்ட தெய்வம்
உளதோ சகல
கலாவல்லியே
என வாக் தேவியைத் துதித்து
வளம் பெறுவோமாக!
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
சிவபிரான் – உமா தேவி – ஒரு சூடான விவாதம்!
ச.நாகராஜன்
சிவபெருமானுக்கும் உமா தேவிக்கும் இடையே நடந்த ஒரு
சூடான விவாதத்தை அருகிலிருந்து கேட்டவர் போல்
சொல்லி அருள்பவர் சிவப்பிரகாச சுவாமிகள்.
அவரது பாடல் இதோ:
அம்பிகையரன் றன்னை நோக்கி யுன்னா பரணமரவமென வுமையை
நோக்கி
அரியரவ
சயனத்தை யரவுருவமானத்தை யறியாய் சொல் சிறிதுமென்ன
உன் ஆபரணம் அரவம் என – உனது ஆபரணமாக இருப்பது பாம்பு
என்று சொல்ல
நம்பி – (அதற்கு) சிவ பெருமான்
உமையை நோக்கி – உமா தேவியைப் பார்த்து
அரி – திருமால்
அரவ சயனத்தை – சர்ப்ப சயனம் உடையதாகவும்
அரவுரும் ஆனத்தை – சர்ப்ப ரூபமாகவும் ஆனதை
சிறிதும் அறியாய் கொல் என்ன – சிறிதும் அறியாயோ என்று
சொல்ல
மனைதொறும் இரந்து உண்ணும் ஆண்டி என்ன – நீ வீடுகள்
தோறும் பிச்சை கேட்டு உண்ணுகின்ற ஆண்டி என்று சொல்ல
நான் தாதன் அறிவேன் என – தாதனை நான் அறிவேன் என்று
சொல்ல
நவை உறும் பொய் புகன்றீர் என – குற்றம் மிகுந்த பொய்யைச்
சொன்னீர்கள் என்று சொல்ல
பாரதம் நடந்ததே கரி ஆம் என – மஹாபாரதம் நடந்ததே சாட்சி
என்று சொல்ல
வெம்பி ஒருவன் பிரம்பால் அடித்தான் என – கோபித்து
ஒருவன் பிரம்பால் அடித்தான் என்று சொல்ல
விளங்கிழை ஒருத்தி – பெண் ஒருத்தி
தாம்பால் வீசினது சொல் என்ன – தாம்புக் கயிற்றால்
அடித்ததைச் சொல் என்று சொல்ல
எண்ணாயிரம் பெண்கள் – எண்ணாயிரம் பெண்களுடைய
மிகு கற்பை நீக்கின என – மிகுந்த கற்பினை நீக்கினாய்
என்று சொல்ல
பம்பு கற்பினில் – மிகுந்த கற்பினில்
ஓர் இரட்டிப்பு நீக்கினது – ஓர் இரட்டிப்புக்காக
நீக்கினதை
பதறாமல் நீ கேள் என – பதற்றம் கொள்ளாமல் நீ கேட்பாயாக
என்று சொல்ல
பரமருடன் – பரமசிவனோடு
இவ்வாறு – இந்தப் பிரகாரம்
விளையாடு – விளையாடுகின்ற
பச்சைப் பசுங்கொடி – உமாதேவி ஆனவள்
உமைக் காக்க – உம்மைக் காக்கக் கடவன்
picture by Lalgudi Veda
பல திருவிளையாடல்களை உள்ளடக்கிய பாடல் இது. ஒவ்வொன்றையும்
மாற்றி மாற்றி சிவனும் உமையும் பேசுவது போல அமைக்கப்பட்ட இந்தப் பாடலின் சுவையே தனி
தான்.
திருமால் அரவம் ஆனது எப்படி? ஒரு சமயம் பார்வதியும்
பரமசிவனும் சூதாடி விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் பார்வதி ஜெயித்தாள். ஆனால் பரமசிவனோ
நான் தான் ஜெயித்தேன் என்று சொன்னார்.அருகிலிருந்த திருமாலைச் சாட்சிக்கு அழைத்தார்.
அவரும் சிவபிரானே ஜெயித்தான் என்று சொல்ல, கோபம்
கொண்ட உமா தேவி திருமாலை நோக்கி, “நீ பொய் சாட் சொன்னதால் அரவமாகக் கடவாய்” என்று சாபமிட்டாள்.
இந்த வரலாறு கந்த புராணத்தில் உள்ளது. சிவபெருமான்
பொய் கூறியதும் இதே சந்தர்ப்பத்தில் தான்.
பிரம்பால் அடி பட்டது பிட்டுக்கு மண் சுமந்த போது.
இப்படி ஒவ்வொரு விளையாடலையும் சுட்டிக் காட்டும்
இந்தப் பாடல் மனமுருகி சிவன் மற்றும் உமையின் திருவிளையாடல்களை நினைக்க வைத்து அருள்
வேண்டித் துதிக்கச் செய்கிறது!
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
ச.நாகராஜன்
கொங்குமண்டல சதகம் 91ஆம் பாடலில்
ஒரு அரிய செய்தியைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
அலைகடல் சூழு மவனியிற் செந்தமி
ழாய்பவர்கள்
நலனுறத் தக்க வகையாக வுள்ள நனிமகிழ்ந்தே
இலகு முரிச்சொ னிகண்டுவெண் பாவி
நிசைத்தகலை
வலவெழிற் காங்கேயன் வாழுமோ ரூர்கொங்கு
மண்டலமே
பாடலின் பொருள் : தமிழிலக்கியம்
கற்பவர்கள் எளிதில் பாடம் செய்யவும், தெரிந்து கொள்ளவும் உதவியாகும் படி உரிச்சொல்
நிகண்டு என வெண்பாவினால் ஆன நூலைச் செய்து உதவிய காங்கேயன் என்பவன் வாழும் மோரூருங்
கொங்கு மண்டலம் என்பதாகும்.
பலதலைதேர் காங்கேயன் பட்ட முடையான்
உலகறியச் சொன்ன வுரிச்சொல்
– (உரிச்சொல் நிகண்டு)
என்றும்
முந்து காங்கேய னுரிச்சொல்
– (ஆசிரிய நிகண்டு)
என்றும்
பெருத்த நூல்பலவுஞ் சுருக்கித்
தமிழில்
உரிச்சொல் நிகண்டென உரைத்த காங்கேயன்
–
(பாம்பணகவுண்டன் குறவஞ்சி)
என்றும் இப்படிப் பலபட நூல்கள்
காங்கேயன் இயற்றிய உரிச்சொல் நிகண்டு பற்றிக் குறிப்பிடுகின்றன.
ஆனால் காங்கேயன் என்ற பட்டப்பெயரை
உடைய இவர் யார் என்பது தெரியவில்லை.
கங்கைக் குலத்தவரான வேளாண்டலைவைருக்குக்
காங்கேயன் என்ற பட்டப் பெயரிட்டு அரசர் அழைத்திருக்கின்றனர் போலும்.
புதுவைக் காங்கேயன், ஆட்கொண்ட
காங்கேயன் என்னும் பெயர் கள் வழங்கி வந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
வேறொருவர் தான் இந்த உரிச்சொல்
நிகண்டை இயற்றினார் எனக் கூறுவதுமுண்டு.
கொங்குமண்டல சதகத்துள் 54 மற்றும் 94 ஆகிய பாடல்கள் இம்மோரூர்க் காங்கேயர்களையே
குறிப்பிடுகின்றன.
இவர்களுக்கு இம்முடி என்ற பட்டப்பெயர்
இருக்கிறது.
காங்கேயர்களைப் பற்றிய சிறப்புக்களை
கொங்குமண்டல சதகத்துள் கண்டு மகிழலாம்.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 11,000.
15-8-19
பாக்யா இதழில்அறிவியல் துளிகள் பகுதியில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு பதிநான்காம் கட்டுரை :அத்தியாயம் 430
உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி பெருக
கான் மாரி வழிமுறை!
ச.நாகராஜன்
35 வயதே ஆன ஒரு பெண்மணி உலகின் லட்சக்கணக்கான
இல்லங்களில் மகிழ்ச்சி பெருகக் காரணமாக இருக்கிறார் என்றால் நம்புவது சற்று ஆச்சரியமாக
இல்லை? ஆனால் உண்மை அது தான்! கான்மாரி வழிமுறை (KonMari Method) என்பதைப் பற்றி ‘மகிழ்ச்சி எங்கள்
இல்லங்களில் பொங்குகிறது’ என்று ஆயிரக்கணக்கான பேர்கள் உலகின் தலை சிறந்த
பத்திரிகைகளின் வாயிலாகவும் தொலைக்காட்சி பேட்டிகள் மூலமாகவும் சமூக ஊடகங்கள் மூலமாகவும்
சொல்லும்போது அதை நம்பத்தானே வேண்டும்.
அந்த வழிமுறையை நாமும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற உற்சாக உந்துதல்
எழுவதும் இயல்பே.
மாரி காண்டோ (Marie
Kondo) ஜப்பானைச் சேர்ந்தவர். 1984, அக்டோபர்
9ஆம் தேதி பிறந்தவர். அவரது சொத்து மதிப்பு இப்போது 80 லட்சம் டாலர்கள். ஒரு மணி நேரத்திற்கு
ஆலோசனையைத் தர அவரிடம் பயின்றவர்கள் வாங்கும் சார்ஜ் இந்திய மதிப்பில் சுமார் 7000
ரூபாய்!
அவர் எழுதிய ‘தி லைஃப் சேஞ்சிங் மாஜிக் ஆஃப் டைடியிங் அப்’
(‘The life Changing Magic of Tidying Up’) என்ற புத்தகம் உலகெங்கும் லட்சக்கணக்கில் விற்பனையாகி சக்கைப் போடு போடுகிறது.
மாரி ஷிண்டோயிஸத்தைப் பின்பற்றுபவர். ஷிண்டோயிஸம் என்பது ஜப்பானிய
கலாசாரம் மற்றும் பழக்க வழக்கங்களின் அடிப்படையில் பிறந்தது. அது தூய்மையை மிகவும்
வலியுறுத்துகிறது.
இளம் வயதிலிருந்தே இல்லத்தைத் தூய்மைப்படுத்துவதில் அக்கறை காட்டி
வந்த மாரி அதில் நிபுணராக மாறி அனைவருக்கும் அதை எப்படி எந்த வழிமுறையில் செய்வது என்பதைச்
சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். அனைத்து இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்க வைத்தார். உலகின்
இன்றைய பிரபலமான பெண்மணிகளுள் ஒருவராக ஆகிவிட்டார்.
அவர் 2012இல் டகுமி கவஹாரா என்பவரை மணந்தார்.தம்பதியர் இருவரும் உலகின் பல விழாக்களில் சிறப்பு விருந்தினராகப் பங்கு
பெறுகின்றனர்.
முதலி மாரி காண்டோ வழிமுறை என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.
சுருக்கமாக ஒரே வரியில் சொன்னால் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்காத
பொருள்களை வீட்டிலிருந்து அகற்றி வீட்டைத் தூய்மைப்படுத்துவது தான் மாரி காண்டோ வழிமுறை
என்று சொல்லி விடலாம்.
முதலில் வீட்டைத் தூய்மைப்படுத்துவது என்ற உந்துதலையும் கடமை
உணர்ச்சியையும் நீங்கள் கொள்ள வேண்டும். அடுத்து
உங்கள் வாழ்க்கை முறையை நீங்கள் நிர்ணயிக்க வேண்டும். பிறகு தூய்மைப் படுத்தும் பணியை
ஆரம்பிக்க வேண்டும். முதலில் துணிகள், பின்னர் புத்தகங்கள், பின்னர் இதர அனைத்துப்
பொருள்கள். இறுதியாக நினைவுப் பரிசுகள்.
ஒவ்வொரு பொருளையும் அகற்றும் முன்னர் அது இதுவரை செய்த நன்மைக்காக
அதற்கு நன்றி சொல்ல வேண்டும். இடவாரியாக தூய்மைப்படுத்த வேண்டாம். பொருள்கள் வாரியாக
தூய்மைப் படுத்துவதைச் செய்ய வேண்டும். மேலே கொடுத்துள்ள வரிசைப்படி வேண்டாத பொருள்களை
அகற்ற ஆரம்பிக்க வேண்டும். அதாவது துணிகள், புத்தகங்கள்… இப்படி குறிப்பிட்ட வரிசைப்படி
செல்ல வேண்டும். உங்களுக்கு மகிழ்ச்சி பொங்குகிறதா என்று கேட்டுப் பார்க்க வேண்டும்.
இப்படிச் செய்யும் போது ஒரேயடியாக அனைத்தையும் தூக்கிப் போட்டு
விடலாம். கொஞ்சம் கொஞ்சமாகச் செய்யலாம் என்றால் அது வேலைக்கு உதவாது.
சமையலறையில் தேவையற்று இருக்கும் பொருள்கள் ஏராளம். அனைத்தையும்
கண்ணை மூடிக் கொண்டு தூக்கிப் பொடுங்கள். சமையலுக்குத் தேவையில்லாத இதர பொருள்களையும
அங்கிருந்து அகற்றி விடுங்கள். லிவிங் ரூம் எனப்படும் ஹாலில் தேவையற்ற படிக்கும் புத்தகங்கள்,
பத்திரிகைகள் குவியலாக இருக்கிறதே, அதை உடனே அகற்றி விடலாம். குளியலறையில் ஒவ்வொரு
டிராயராகப் பார்த்து தூய்மைப் படுத்தலாம்.
இப்படிச் செய்ய ஆரம்பித்தால் மீண்டும் ஒருநாளும் குப்பைகள் உங்கள்
இல்லத்தில் சேரவே சேராது என்கிறார் மாரி.
ஆங்கில உளவியல் நிபுணரான ஜேன் க்ரேவ்ஸ் (Jane Graves) வீட்டில் உள்ள பொருள்களின் ரகசியம் அது நமக்கு ஏற்படுத்தும் மலரும் நினைவுகள்,
உணர்வுகள், உணர்ச்சி பூர்வமான நிலைகள் ஆகியவையே என்கிறார். ஆகவே தூய்மைப் படுத்தும்
போது பழைய சாக்ஸ் – காலுறைகள்- கூட மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
துணிகளை மடித்து வைப்பதில் கூட ஒரு ஒழுங்கு முறை வேண்டும். அப்படி
மடித்து முறைப்படி வரிசைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும் துணிகளை அணிவதில் உள்ள மகிழ்ச்சியே
தனி தான்!
ஒவ்வொரு அறையும் தூய்மையாகும் போது உங்கள் இதயத்தில் மகிழ்ச்சி
மலர்கிறதா என்பதைக் கேட்டுப் பார்க்க வேண்டும்.
இந்த தூய்மைப் படுத்தும் பணியை யாருக்கும் தெரிவிக்காமல் செய்ய
வேண்டும். வயதான தாய் தந்தையர் இருந்தால் இப்படி வெளியில் தூக்கி எறியப்படும் பொருள்களைப்
பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடையக் கூடும். அது ஏற்படுத்தப் போகும் மகிழ்ச்சியை அவர்களால்
உடனடியாக அறிய முடியாது என்பதால் தனியே சற்று ரகசியமாகவே இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட
வேண்டும். இதுவே மாரி காண்டாவைப் பின்பற்றும் ஆர்வலர்களின் அறிவுரை. செய்து தான் பார்ப்போமே!
நிச்சயமாக மகிழ்ச்சி பொங்க ஆரம்பிக்கும்.
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
பிரபல
இயற்பியல் விஞ்ஞானியான ஐன்ஸ்டீனை விருந்து ஒன்றில் அந்த விருந்தை அளித்த ஒரு பெண்மணி
சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். பேச்சின் இடையில் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த ‘தியரி
ஆஃப் ரிலேடிவிடி’ பற்றிக்
கேட்டு அதை விளக்குமாறு வேண்டினார்.
அதற்கு ஐன்ஸ்டீன் இப்படி
பதில் அளித்தார்:
“அம்மணீ!
ஒரு நாள் கிராமப்புறம் ஒன்றில் சரியான கோடைக்கால வெயிலில் நான் சென்று கொண்டிருந்தேன்.
என்னுடன் பார்வையற்ற குருடான ஒரு நண்பர் நடந்து வந்து கொண்டிருந்தார். அவரிடம் நான்
ஒரு கோப்பை பால் அருந்த வேண்டும் என்றேன். “பாலா? அப்படி என்றால் என்ன? எனக்குத் தெரியாது” என்றார் அவர். “அது ஒரு வெள்ளை
நிறமுள்ள திரவம்” என்று
நான் பதில் சொன்னேன். “திரவம் என்றால் புரிகிறது. ஆனால் வெள்ளை என்றால் என்ன? எனக்குப்
புரியவில்லை” என்றார்
அவர். “வாத்தின் சிறகுகளின் வண்ணம் தான் அது” என்றேன் நான்.
“சிறகு என்றால் புரிகிறது. ஆனால் வாத்து என்றால் எனக்குப் புரியவில்லை” என்றார் அவர். “அது ஒரு நெளிந்த
கழுத்துடைய பறவை” என்றேன்
நான். “கழுத்து என்றால் எனக்குப் புரிகிறது. ஆனால் “நெளிந்த” என்று சொன்னீர்களே,
அது எனக்குப் புரியவில்லை” என்றார் அவர். பொறுமையை இழந்த நான் அவரது கையைப் பிடித்து நன்கு
நீட்டினேன். இது தான் நேராக இருப்பது என்று சொல்லி விட்டு அவரது முழங்கையை மடக்கி கைவிரல்
மூட்டு வரை கொக்கி போல மடித்தேன். இது தான் நெளிந்து இருப்பது என்று சொன்னேன்.” “ஆஹா! இப்போது
தான் பால் என்றால் என்ன என்று எனக்குப் புரிகிறது” என்று சொல்லி அவர் குதூகலப்பட்டார்.” இதைச் சொல்லி நிறுத்தினார்
ஐன்ஸ்டீன். அம்மையார் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே. நைஸாக அங்கிருந்து நகர்ந்தார்
அவர்!