சம்ஸ்க்ருதம் பற்றிய இரண்டு அரிய செய்திகள்! (Post No.6988)

WRITTEN BY London swaminathan

swami_48@yahoo.com


 Date: 19 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 16-25

Post No. 6988

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

பாகிஸ்தானில் பிறந்தவர் பாணினி

உலகமே வியக்கும் வண்ணம் உலகின் முதல் இலக்கண புஸ்தகத்தை எழுதியவர் பகவான் பாணினி. இவர் எழுதிய சம்ஸ்க்ருத இலக்கண நூலைக் கண்டு உலகமே வியக்கிறது. காரணம் என்னவெனில் ரத்தினச் சுருக்கமான சூத்திரங்கள்! ஒரு எழுத்து கூட வீணாகப் பயன்படுத்தாத நூல். இதை எழுதிய பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானில் பிறந்தார். அவர் பிறந்த சாலாதுரா இப்போது பாகிஸ்தானில் ராவல்பிண்டிக்கு அருகில் இருக்கிறது 2700 ஆண்டுகளுக்கு முன்னர் அது இந்து பூமியாக இருந்தது. அவர் எழுதிய நூலின் பெயர் அஷ்டாத்யாயி (எட்டு அத்தியாயம்). அவருக்கு 300 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய காத்யாயனர் , பாணினி இலக்கண நூலுக்கு  ஒரு உரைநூல் எழுதினார். அதுவும் ரத்தினச் சுருக்கமான நூல்! அதை வ்யாகரண வார்த்திகா என்று அழைப்பர்.

அந்த உரைகாரர் தென்னாட்டைச் சேர்ந்தவர்.ஏதோ வெள்ளைக்காரன்தான் இந்த நாட்டை ஒற்றுமைப் படுத்தினான் என்று உளறுவோருக்கு இது செமை அடி கொடுக்கும். பாகிஸ்தான் பகுதியில் நூல் எழூதியவருக்கு தென்னாட்டுக் காரர் உரை. அதுவும் 2400 ஆண்டுகளுக்கு முன்னர்!.

இதைவிட அதிசயம்- இந்த இரு நூல்களுக்கும் மாபெரும் உரை கண்டார் பதஞ்சலி. அந்த நூலுக்குப் பெயர் மஹா பாஷ்யம். உலகிலேயே மிகப்பெரிய உரைநூல்! அவர் பிறந்தது பாட்னா (பீஹார்) என்றும் தென்னாடு என்றும் கருத்து உளது. அவர் வாழ்ந்ததோ 2200 ஆண்டுகளுக்கு முன்னர்.

ஆக எங்கோ ஒருவர் எழுதிய இலக்கண நூலுக்கு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வசித்தவர்கள் 2200 ஆண்டுகளுக்கு முன்னரே உரை கண்டனர் என்றால் ‘ஏக பாரதம்’ என்னும் கொள்கைக்கு மேலும் ஒரு சான்று தேவையா?

2200 ஆண்டுகளுக்கு முன்னர் ஸம்ஸ்க்ருத மொழி பாகிஸ்தான் உள்ள வடமேற்கு இந்தியா முதல் தென் குமரி வரை பரவி இருந்தது (கோவலன் ஸம்ஸ்க்ருதச் சுவடியைப் படித்து ஒரு பார்ப்பனிக்கு உதவிய செய்தி சிலப்பதிகாரத்தில் உள்ளது.)

பேரழகி தமயந்தியை மணக்கப் போட்டா போட்டி!

இன்னும் ஒரு அதிசயச் செய்தி இதோ! நள தமயந்தி கதையைக் கூறும் நூல் நைஷதீய சரித்ரம். அதை 1100 ஆண்டுகளுக்கு முன்னர் புலவர் ஸ்ரீஹர்ஷ எழுதினார். அதில் பத்தாவது காண்டத்தில் ஒரு அழகான பாடல் வருகிறது. தமயந்தியின் ஸ்வயம்வரத்தை அவரது தந்தை பீமன், தலைநகரான குண்டினபுரத்தில் ஏற்பாடு செய்து 56 தேச ராஜாக்களுக்கும் செய்தி அனுப்பி இருந்தார். மன்னர்கள் மட்டுமின்றி தேவலோக நாயகர்களான இந்திரன் மித்திரன் வருணன், வாயு, அக்னி, யமன் ஆகிய அனைவரும் பேரழகி தமயந்தியை மணக்க ஆசைப்பட்டு மாற்றுருவில் வந்தனர். அவர்களுக்கு மன்னர் பீமன் மாபெரும் வரவேற்பு அளித்தார்.

அப்போது எல்லா மன்னர்களும் ஒருமனதான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர். நாம் எல்லோரும் ஸம்ஸ்க்ருதத்தில்தான் பேச வேண்டும்; நம்முடைய வட்டார மொழியில் பேசினால், தமயந்தி நாம்  யார், எந்த தேசம் என்று கண்டு பிடித்துவிடுவாள். அவள் கவிதை எழுதும் அளவுக்குப் புலமை பெற்ற பெரிய அறிவாளி. ஆகையால் நாம் ஸம்க்ருதத்தில் பேசுவோம்.”

அக்காலத்தில் நாடு முழுதும் ஸம்ஸ்க்ருதம்தான் பொது மொழி என்பதை இது காட்டுகிறது. வட இமயம் முதல் தென் குமரி வரை ஸம்ஸ்க்ருதம் பரவி இருந்தது. மன்னர்கள் அதைப் பேசினர். ஸம்ஸ்க்ருதம் பேச்சு மொழி இல்லை என்று உளறிக்கொட்டிக் கிளறி மூடும் அறிவிலிகளுக்கு நெத்தியடி, சுத்தியடி, செமை அடி கொடுக்கிறார் புலவர் ஹர்ஷ. இதோ பத்தாம் காண்டம் 34ம் ஸ்லோகம்–

அந்யோன்ய பாஷாணாவபோத பிதே ஸம்ஸ்க்ருத்ரிமாபிர் வ்யவஹாரவஸ்து

திக்ப்யஹ சமதேஷு ந்ருபேஷு வாக்பிஹி சௌவர்க வர்கோ ந ஜனைர் அசிஹ்னி.

இந்த ஸ்லோகம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்கூட 56 தேச மன்னர்களும் ஸம்ஸ்க்ருதத்தில் பேசியதைக் காட்டுகிறது.

இந்த இரண்டு அற்புதச் செய்திகளை நான் அடையாறு நூலக டைரக்டர் டாக்டர் ஆர். சங்கர நாராயணன் எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் படித்தேன்.

–subham–

KRISHNA DEVA RAYA’S VISIT TO KUMBAKONAM MAHAMAHAM (Post No.6941)

Written by LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com

 Date: 27 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 14-05

Post No. 6941

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.



WHO IS RAYA?


One of the greatest kings of India. He ruled whole of south India in the 16th century.

WHERE IS KUMBAKONAM?
Kumbakonam is a town in Tamil Nadu with lot of temples.

WHAT IS MAHAMAGAM ?


MAHAMAHAM tank is in Kumbakonam. Every 12 year, a festival is held and lakes of people come to the tank to take bath. They believe that their sins will be washed away or their demands will be fulfilled.
it is interesting to read even a great king came all the way to Kumbakonam.


Here’s the detail


After conquering Gajapati Kingdom he went straight to Tirupati without returning to his capital Hampi. He went to Kalahasti, Madurai, Alagarkoil, Sriviliputur and all Tamil Nadu shrines.

Inscriptions give precise details and they are supported by literature. But there are minor discrepancies.


He was in Kumbakonam on sixth February 1517.


He stayed in Madurai for three days. (DON’T GET CONFUSED BETWEEN SAKA YEAR AND ENGLISH YEAR)




He stayed in Madurai for three days. (DON’T GET CONFUSED BETWEEN SAKA YEAR AND ENGLISH YEAR)




He stayed in Madurai for three days. (DON’T GET CONFUSED BETWEEN SAKA YEAR AND ENGLISH YEAR).



Swami’s Crossword26819 (Post No.6938)

Written by London swaminathan

swami_48@yahoo.com

 Date: 26 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 19–51

Post No. 6938

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

ACROSS

1–7 LETTERS—GOD GAVE 3 ‘D’ WORDS ANSWER THROUH THUNDER; THIS IS RECEIVED BY DEVAS; MEANING CONTROL

6– 3— DESIRE, WISH

8.—5—THREE FOLD

9.—5–DYNASTY

10. – 7– ANYTHING AUSICIOUS, PARTIKULARLY WEDDING

DOWN

1.—5 LETTERS— GOD GAVE 3 ‘D’ WORDS ANSWER THROUH THUNDER; THIS IS RECEIVED BY HUMANS; MEANING GIVE.

2. –8—BLESSING

3. – -7— GREAT MAN; GANDHI IS CALLED WITH THIS PREFIX

4.—6— MOTHER OF ANJANEYA

5.—8— WONDER; ALSO NAME OF AN APSARAS

7 – ALL WORLD, EARTH; FEMININE NAME

Image result for Gandhi

–SUBHAM–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி21819 (Post No.6913)

WRITTEN BY LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com

 Date: 21 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 21-41

Post No. 6913

 Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both blogs 12,000.

அடைப்புக்குறிக்குள் உள்ள எண், அந்தச் சொல்லில் எத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.

குறுக்கே

1. –6- இலங்கையில் சீதை இருந்த இடம்

5-2- சங்கீதம், நாடகம், ஓவியம் முதலியன

6.- 3- பெண்கள் குழாய் அல்லது கிணற்றடியில் பேசுவது

7. -3- இதை ஆன்மீகவாதிகள் குரங்கு என்பர்; நிலையில்லாதது;

8.-2- கை, கால்களால் காட்டும் தகவல்

கீழே

1.- 5– ரேடியோ கேட்க இது தெரிந்திருக்க வேண்டும்

2.—3– துயரம்; வருத்தம்

3.—3– தடி; அல்லது தினை வகை தானியம்

4.—5–மரியாதை தெரிவித்தல்; துதி பாடல்

9./ -5-=கீழிருந்து மேலே செல்க. கல்யாணம்

Xxx subham xxx

Swami’s Crossword 16819 (Post No.6889)

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

 Date: 16 AUGUST 2019  


British Summer Time uploaded in London – 19-43

Post No. 6889

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ACROSS

1. -10- ARJUNA LEARNT CELESTIAL MUSIC AND DANCING FROM THIS GANDHARVA

8.– 3- SUN, ADITYA

9. –  5- DESTROYED, KILLED

10. – 4–PENANCE

11. 6– SON OF ARJUNA AND ULUPI; SACRIFICED HIMSELF FOR THE VICTORY OF PANDAVAS

12.– 4–WEALTH, BRILLIANCE, BOSE IN BENGALI, CORRUPTED SANSKRIT WORD ‘VASU’

13. -4– END

14. – 4–AMBASSADOR, WORLD’S FIRST AMBASSADOR IS SARAMA IN RIG VEDA

15.–10– VYASA’S DISCIPLE WHO WAS  ENTRUSTED WITH TEACHING SAMA VEDA

DOWN

1. – 6–STAR SPICA; ALSO MEANS DRAWING

2. – 4–RACE THAT INVADED INDIA- MIHIRAHULA IS ONE OF THE KINGS

3.- 7–VAHANA OF INDRA; HE USED TO RIDE IT

4. – 6–THAMES IN LONDON GOT IT FROM THIS SANSKRIT WORD; RIVER ON THE BANKS OF WHICH VALMIKI LIVED

5. 6–FAVOURITE WIFE OF MOON; A STAR

6. – 8–CENTENARY; ALSO THE NAME OF EXPRESS TRAINS IN INDIA

7. – 7–HINDU SALUTE WITH FOLDED HANDS

Picture sent by Lalgudi Veda

-xx subham xx

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி13819 (6771)

Written by  London Swaminathan

swami_48@yahoo.com

 Date: 13 AUGUST 2019  
British Summer Time uploaded in London –  13-15

Post No. 6771

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1. –4 எழுத்துக்கள்– இந்துக்கள், முதல் இரவு அன்று வணங்கும்  ‘தலித்’ பெண்மணி;அவளுடைய மற்றொரு பெயர் அருந்ததி.

2.–5– அரசர் ஜாதி

5.—4– த்வைத மத ஸ்தாபகர்

6.—4– முருகன் கோவில்; வயல் பெயரும் உண்டு

7. —3– சாப்பிடு

8.—4— கையில் இருந்தால் பாலிஷ் போடுவர்; கவலை வந்தால் கடித்துத் துப்புவர்.

10. – 5 எழுத்துக்கள்- அரைக் கிணறு தாண்டுவோரை  கிண்டல் செய்ய, இந்துக்கள் பயன்படுத்தும் மன்னன் பெயர்

கீழே

1. –7–காவிரியின் உப நதி; ஆண்பொருநை

3.—3– ஐயர் வீட்டு ஊறுகாய்; மாமரம் தருவது

4. —7–பனம் விதைகளிலிருந்து கிடைக்கும்; சுட்டும் தின்னலாம், அவித்தும் தின்னலாம்

9.—2– குமுட்டி அடுப்பு எரிக்க உதவும்

–subham–

தமிழ் டமாரம் பற்றிய அதிசயச் செய்தி (Post No.6756)

Written by London Swaminathan


swami_48@yahoo.com

 Date: 10 AUGUST 2019  


British Summer Time uploaded in London –  8-23 am

Post No. 6756

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

தமிழ் முரசு, டமாரம் பற்றிய அதிசயச் …



https://tamilandvedas.com/…/தமிழ்-முரசு-டமாரம்…

  1.  

3 Nov 2014 – ஆப்பிரிக்க நாடுகளில் டமாரம் மூலம் செய்திப் பரிவர்த்தனை செய்வர். — பழங்குடி மக்கள் முரசு ஒலி மூலமே பேசிக்கொள்வர். இது …

பூமி துந்துபி: ரிக் வேதம் … – Tamil and Vedas



https://tamilandvedas.com/…/பூமி-துந்துபி-ரிக்-…

  1.  

3 Nov 2014 – உலகிலேயே மிகப் பழைய நூல் ரிக் வேதம்— ஜெர்மன் ‘அறிஞர்’ மாக்ஸ் … பூமி துந்துபி: ரிக் வேதம் சொல்லும் அதிசயச் செய்திகள்.

பூமி துந்துபி: ரிக் வேதம் சொல்லும் …



https://swamiindology.blogspot.com/2014/11/blog-post_58.html

3 Nov 2014 – பூமி துந்துபி: ரிக் வேதம் சொல்லும் அதிசயச் செய்திகள். jaffna. Temple drummer, Jaffna, Sri Lanka. கட்டுரையை எழுதியவர் :– லண்டன் …

Bhumi Dundhubi: Drums in Rig Veda and Sangam Tamil Poems …



https://swamiindology.blogspot.com/2014/…/bhumi-dundhubi-drums-in-rig-veda-and.ht…

2 Nov 2014 – Bhumi Dundhubi: Drums in Rig Veda and Sangam Tamil Poems ….. You don’t even know the way to Post Office; don’t tell me about Heaven!

வேத காலத்தில் ஆடல் பாடல் (Post No.6039 …



https://tamilandvedas.com/…/வேத-காலத்தில்-ஆட…

  1.  

6 Feb 2019 – வேத காலத்தில் ஆடல் பாடல் (Post No.6039). Written by London … பூமி துந்துபி என்னும் ஒரு வாத்தியம் பற்றி வேத இலக்கியங்கள் சொல்லும்.

–subham–

ஆரோக்கியம் தெரிந்து கொள்ளுங்கள்! – 1 (Post No.6744)

Written  by S Nagarajan

swami_48@yahoo.com

 Date: 8 AUGUST 2019  


British Summer Time uploaded in London – 6-49 am

Post No. 6744

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஹெல்த்கேர் ஆகஸ்ட் 2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

புதிய பகுதி

புத்தகச் சுருக்கம் : All about Good Health by Dr Christian Barnard, C.Northcote Parkinson, M.K. Rustomji 187 pages

ஆரோக்கியம் பற்றிய அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்! – 1

தமிழில் தருபவர் : ச.நாகராஜன்

நூலாசிரியர்கள் பற்றி :-

Dr Christian Barnard உலகின் தலைசிறந்த டாக்டர். The Body Machine என்ற அவரது புத்தகம் மூன்று லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி இருக்கிறது. உலகில் முதல் இதய மாற்று நடவு சிகிச்சையைச் செய்தவர் இவரே. (Heart Transplant operation) C.Northcote Parkinson உலகின் தலைசிறந்த மருத்துவ புத்தகங்களை எழுதியவர். ஒவ்வொரு புத்தகமும் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி உள்ளன.

M.K. Rustomji ஆரோக்கியம் பற்றி எளிமையாக விளக்குபவர் என்பதால் உலகளாவிய அளவில் பிரபலமானவர். இந்தப் புத்தகம அவரது ஒன்பதாவது புத்தகம். நிர்வாக இயல் பற்றியும் அவர் பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.அதில் ஒன்று திரைப்படமாகப் பிடிக்கப்பட்டு இந்திய அரசாங்கத்தின் பரிசையும் பெற்றது.

நூல் sex, Psyvhology, Food, Ecercise, Physiology, General என்ற ஆறு பகுதிகளைக் கொண்டது.

முக்கிய விஷயங்கள் இங்கு தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது. முழு நூலையும் வாசித்துப் பயன் பெறலாம்.

  1. SEX

தூக்கம் போல பாலியல் உறவும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஒரு விஷயம்.

பாலியல் உறவில் திருப்தி அடையாத ஒரு பெண்மணியுடன் வாழ்க்கை வாழ்வது மிகவும் கஷ்டம். பாலியல் உறவில் 50%க்கு மேல் பெண்கள் உச்சகட்ட இன்பத்தை அனுபவித்ததில்லை என்பதை ஆய்வு செய்த உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாலியல் உறவில் எந்த ஒரு தோற்ற நிலையும் (Pose and Posture) மோசமானதில்லை

உறவை அடிக்கடி கொள்ளலாமா?

இது ஆணின் ஆண்மை வீரியத்தையும் வயதையும் பொறுத்த ஒரு விஷயம். பெண்களால் அடிக்கடி உறவு கொள்ள முடியும். ஆனால் ஒரு வயதுக்கு மேல் – 45 வயதுக்கு மேல் – இதில் ஆர்வம் பலருக்கும் போய் விடுகிறது.

ஒரு முறை உறவு கொள்வது என்பது 15 முதல் 20 வரை உள்ள press-upக்குச் சமமானது. இதய சம்பந்தமான நோய் உள்ளவர்கள் சீரான உடல்பயிற்சி மேற்கொள்ளல் அவசியம்.

சீரான இடைவெளியில் உறவு கொள்வது ஆரோக்கியத்தைத் தருகிறது; ஆயுளையும் நீட்டிக்கிறது.

ஆண்மையற்ற தன்மை என்பது பெரும்பாலும் உளவியல் ரீதியிலான ஒன்று.

அதிகமாக மது அருந்துவது பாலியல் உறவுக்கு தீங்கு பயக்கும் ஒன்று; இது ஆண்மையற்ற தன்மையை உருவாக்குவது.

“பாலியல் உறவு கொள்ளுங்கள்; இதயத்தைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான ஒரு இரவு இயற்கையின் இயல்பான தூக்கம் தரும் மருந்து” என்று பிரபல அமெரிக்க பாலியல் நிபுணரான டாக்டர் யூஜின் ஷெய்மேன் (Dr Eugene Scheimann) கூறுகிறார்.

எந்த ஒரு வயதும் பாலியல் உறவுக்கு ஒரு தடையில்லை.

2. PSYCHOLOGY

How to overcome tension and stress

மன இறுக்கமும் மன அழுத்தமும் 50 சதவிகித நோய்க்குக் காரணமாக அமைகின்றன. கவலை நரம்பு மண்டலத்திற்குப் பெரும் தீங்கை உண்டாக்குகிறது.

மன இறுக்கம் அதிகமாகும் போது சில ஹார்மோன்கள் அதிகமாக உடலில் சுரக்கிறது. Blood sugar அதிகமாகிறது.

மன இறுக்கம்,மன அழுத்தத்தை எப்படிப் போக்குவது?

முதலில் அது ஏன் ஏற்படுகிறது என்ற காரணத்தை அறிய வேண்டும். காரணத்தை அறிந்த பின் தனக்கு நெருக்கமானவர்களிடம் தன் கவலையை மனம் விட்டுப் பேசுவதிலேயே பாதிப் பேருக்கு பல நோய்கள் போய் விடுகின்றன.

சிறு சிறு விஷயங்களையும் கூட மனம் திறந்து பாராட்டுவது, அன்பு பாராட்டுவது, மரியாதை தருவது போன்றவை உடலையும் மனதையும் சீராக வைக்க உதவுபவை.

இளமையான மனத்தை எப்போதும் கொண்டிருப்பது உடலையும் இளமையுடன் வைத்திருக்கும். பெர்னார்ட் ஷா, பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், சாமர்செட் மாம், மைக்கேல் ஆஞ்சலோ, வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் இதற்கு உதாரணம்.

சவாசனம் போன்ற ஆசனம் கவலையைப் போக்கும். மனதிற்கும் உடலுக்குமான பயிற்சி இது.

அவ்வப்பொழுது ஓய்வான நேரத்தை உருவாக்கிக் கொண்டு எப்போதும் உழலும் வாழ்க்கையிலிருந்து ஒரு ஓய்வை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

நிகழ்காலத்தில் வாழ்வது என்பது இன்னொரு உத்தி. நாளை என்ன நடக்கப் போகிறதோ என்று கவலைப்படுவதை விட்டு விட்டு இன்றைய பொழுதின் மீது கவனம் செலுத்தல் வேண்டும்.

மருத்துவம் சம்பந்தமாக சில தவறான விஷயங்கள் உண்மை போலக் கூறப்படுகின்றன. அவற்றில் சில

நீச்சலுக்கு முன்னர் உணவை உட்கொள்ளக் கூடாது. இது தவறு. மிதமான உணவுக்குப் பின்னர் கூட நீந்தலாம்.

வயது அதிகமாகும் போது எடை கூடினால் பரவாயில்லை. இது தவறு. 21 வயதில் என்ன உடல் எடை இருந்ததோ அதை சீராக வைத்திருப்பதே ஆரோக்கியத்திற்கு உகந்த ஒன்று.

சற்று கூட நேரம் தூங்குவது நல்லது. இது தவறு. தேவையான அளவு தூக்கம் போதும்.

உடல் பயிற்சி செய்யும் பெண்மணிகள் தங்கள் பெண்மைத் தன்மையை இழக்கின்றனர். இந்த நம்பிக்கை தவறு. உடல் பயிற்சி ஆரோக்கியத்தை உறுதி செய்து ஓய்வான தன்மையையும் அளிக்கிறது.

நீரிழிவு நோய்க்கு சிறுநீர பரிசோதனையை மேற்கொள்ளல் அவசியம்.

இரத்த அழுத்த சோதனை இதய நிலை பற்றி அறிய உதவும்;

அதிக கொழுப்புச் சத்துக்கும் இது உதவும்.

மத்திய வயதை அடைந்த பெண்கள் தங்கள் மார்பகங்களைச் சீரான இடைவெளியில் சோதித்துக் கொள்வது அவசியம். மார்பகப் புற்று நோய் இருக்கிறதா, கட்டி உள்ளதா என்பதைச் சோதித்துக் கொள்வது நல்லது. ஏனெனில் வலி இல்லாமல் இருந்தாலும் கூட இவை இருக்கும் அபாயம் உண்டு என்பதால் தான்!

ஆழ்மனதின் சக்தி (The power of Subconscious mind) அபாரமானது. தீர்க்க முடியாத சில பிரச்சினைகளை அதனிடம் விடுவது நல்லது. உறக்கத்தின் போது அது வேலை செய்து பிரச்சினைகளைத் தீர்க்கும் தீர்வுகளை நீங்கள் எழுந்திருக்கும் போது அது உங்களுக்கு வழங்கும்!

  • FOOD

பாக்கிங் செய்யப்பட்ட உணவு வகைகளும், குளிர்பானங்களும் தேவையற்றவை; பல சமயங்களில் தீங்கு பயப்பவை. சமச்சீர் உணவே ஆரோக்கியத்திற்குப் போதுமானது.

ஒரு நாளைக்கு எத்தனை முறை உணவு உண்ண வேண்டும்? எப்பொழுது உண்ண வேண்டும். பொதுவாகச் சொல்லப் போனால் பெரும்பாலானவர்கள் தேவைக்கு அதிகமாகவே உண்கிறார்கள். பொதுவான விதி – பசி எடுத்தவுடன் உண்ணுங்கள் என்பது தான்!

இன்னொரு அருமையான விதி : குறைவான அளவே உண்ணுங்கள்;பல முறை கூட உண்ணலாம். ஓரிரு முறை சாப்பிட்டு வயிறைத் தேவைக்கு அதிகமாகச் சுமக்க வைப்பதை விட இது மேலானது.

சரியாகச் சமைக்காததே பெரும்பாலான நோய்களுக்குக் காரணமாக அமைகிறது.

இந்தியர்களின் வீட்டில் உள்ள உணவில் சப்பாத்தி, அரிசி, பருப்பு வகைகள், கறிகாய்கள் உள்ளன. இதுவே போதுமானது. சில சமயங்களில் மட்டும் விடமின்கள் தேவைப் படலாம். ஆன்ட்டி பயாடிக்ஸ் மாத்திரைகள் சாப்பிடும் போது சில சமயங்களில் விடமின் B  தேவைப்படலாம்.

உடல் பயிற்சியானது உடல் நலமாக இருக்கும் உணவை எப்போதும் ஒருவருக்கு நல்கும்.

எடுத்துக்காட்டாக, ஒரு சிறிய ரொட்டித் துண்டு 40 நிமிட நேர கடும் பயிற்சியைத் தேவைக்குள்ளாக்குகிறது. ஆகவே உடல் எடையைச் சீராக வைத்திருக்கவும், அதிக எடை ஏற்படாமல் இருக்கவும் உடல் பயிற்சி எவ்வளவு இன்றியமையாதது என்பதை உணரலாம்.

High Fibre Diet – அதிக பைபர் அடங்கிய உணவு ஏராளமான நன்மைகளைத் தருகிறது. இது சீராக மலத்தைக் கழிக்க உதவுகிறது. கோலன் கான்ஸரை – பெருங்குடலில் புற்றுநோய் வரும் அபாயத்தைத் தடுக்கிறது. ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது.

*** அடுத்த இதழில் முடியும்

சுவஸ்திகா இல்லாத இடம் எது? (Post No.6716)

INDUS- SARASVATI RIVER CIVILIZATION

Written by London Swaminathan

swami_48@yahoo.com

 Date: 2 AUGUST 2019


British Summer Time uploaded in London – 1
3-16

Post No. 6716

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

SWASTIKA SHAPED WELL IN TIRUVELLARAI NEAR TRICHY.

Old Articles in the blog:-

ஆரிய ஹிட்லரும் ஹிந்து … – Tamil and Vedas



https://tamilandvedas.com/…/ஆரிய-ஹிட்லரும்-ஹ…

1.    

28 Jul 2013 – (பாரதி) 6 கோடி பேரைக் கொன்ற ஆரிய இனவெறிக் கொள்கை: இந்து மதத்தினரின் … ஆரிய ஹிட்லரும் ஹிந்து ஸ்வஸ்திகாவும்.

ஸ்வஸ்திகா | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/ஸ்வஸ்திகா/

1.    

ஹிந்துக்களின் நலச் சின்னமாகவும் புனித அடையாளக் குறியீடாகவும் காலமெல்லாம் விளங்கி வருவது ஸ்வஸ்திகா. கோவில்களில் …

Aryan Hitler and Hindu Swastika | Tamil and Vedas



Aryan Hitler and Hindu Swastika

1.    

2.    

28 Jul 2013 – By S swaminathan The biggest victim of Aryan Racist theory was the authors of the theory. Westerners made up this theory to divide the world …

–subham–

ETRUSCAN SASTIKA

HITLER’S FLAG WITH SWASTIKA

GRECIAN URN

BADAMI TEMPLE

IRANIAN NECKLACE

நீரின்றி அமையாது உலகு! (Post No.6715)

Written by S Nagarajan

swami_48@yahoo.com

 Date: 2 AUGUST 2019


British Summer Time uploaded in London – 8-59 am

Post No. 6715

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஆல் இந்தியா ரேடியோ, சென்னை வானொலி நிலையத்தின் வாயிலாக தினமும் இந்திய நேரம் காலை 6.55 மணிக்குச் சுற்றுப்புறச் சூழல் நிகழ்ச்சியில் 1-8-19 முதல் 10-8-19 முடிய சுற்றுப்புறச் சூழலைக் காப்பது பற்றிய 10 உரைகள் ஒலிபரப்பப்படுகின்றன. இந்த உரைகளை www.allindiaradio.gov.in தளத்தில் தமிழ் ஒலிபரப்பைத் தேர்ந்தெடுத்துக் நிகழ்நிலையில் கேட்கலாம். 1-8-19 அன்று காலை ஒலிபரப்பட்ட முதலாம் உரை இங்கு தரப்படுகிறது.

நீரின்றி அமையாது உலகு!

ச.நாகராஜன்

நமது முன்னோர்கள் நீரின் இன்றியமையாமையை நன்கு உணர்ந்தவர்கள்.

நீரின்றி அமையாது உலகு என்றும் சீரைத் தேடின் நீரைத் தேடு என்றும் கூறி அவர்கள், நீரின் அருமையைப் புலப்படுத்தினர்.

ஓடி வரும் காவிரி நீரை கடலில் வீணே கலக்க விடாமல் கற்களால் கல்லணை கட்டி நீரைத் தேக்கி பல்லாயிரம் பேர்களுக்கு வாழ்வாதாரமான நீரைக் கரிகால் சோழன் வழங்கினான்.

மிகப் பழங்காலத்தில் வாழ்ந்த அவனது பொறியியல் அறிவு நுட்பமும், மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்கின்ற அவனது உயர்ந்த சிந்தனையும் நீரின் பெருமையைத் தான் அறிந்ததோடு மக்களையும் அறியச் செய்த அவனது  பெரு நோக்கும் வியப்புக்குரியன.

தமிழில் தண்ணீரைச் சேமிக்கும் வைக்கும் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது. ஆறு, நீர்வீழ்ச்சி, கேணி, குளம், குட்டை, ஊற்று, ஏரி, கிணறு, நீரோடை, ஓடை, வாய்க்கால் போன்ற பல சொற்கள் தண்ணீரை அழகுறச் சேமித்து வைக்கும் பழக்கம் தமிழகத்தில் நிலவி வந்ததையும் இவற்றில் ஒவ்வொரு சொல்லுக்கும் ஆழ்ந்த அர்த்தம் இருப்பதையும் புலப்படுத்துகிறது.

இந்த நீர்நிலைகளைப் பராமரிப்பதையும் கூட பண்டைய மக்கள் தங்களின் தலையாய பணியாகக் கருதினர்.

தூர் வாருதல் என்னும் பணி ஆங்காங்கே கிராமத்தில் ஆரம்பித்து நகர்ப்புரம் வரை பரவி இருந்தது.

தூர் என்ற சொல் குளம், கிணறு, ஏரி ஆகிய முக்கிய நீர்நிலைகளின் அடிப்பகுதியில் அவ்வப்பொழுது சேரும் கல், மண், சகதி போன்றவற்றின் திரள்வு அல்லது வண்டல், அடைப்பு, வேர், அடி மரம், கொள்கலன்களின் அடிப்பகுதி போன்ற பல அர்த்தங்களைக் குறிக்கிறது. வாருதல் என்பது அப்படிப்பட்ட அடைப்பை நீக்குதல், சகதி முதலியவற்றை வெளியேற்றல் என்பதைக் குறிக்கிறது.

இந்தப் பின்னணியில் இப்போது நாம் செய்ய வேண்டிய பணியை ஆழ்ந்து யோசித்தால் இன்றுள்ள தண்ணீர்ப் பஞ்சம் நிலவும் காலத்தில் அது எவ்வளவு முக்கியமானது என்பது புரிய வரும்.

ஆங்காங்குள்ள தன்னார்வத் தொண்டர்களும், இல்லத்தரசிகளும், பெரியோர்களும் தங்கள் தங்கள் அருகிலுள்ள நீர் நிலைகளைச் சுத்தமாகப் பாதுகாப்பதோடு தூர் வாருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டால் நீர்ப்பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

இன்றைய காலகட்டத்தில் இது அவசியமான பணி; அவசரமான பணியும் கூட!

****