பொங்கல் வாழ்த்து! (Post No.5937)

Pongal picture from Bank of Baroda calendar

Written by S Nagarajan


Date: 15 JANUARY 2019


GMT Time uploaded in London – 5-47 am


Post No. 5937

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

பொங்கல் வாழ்த்து!

ச.நாகராஜன்

மங்கலம் தங்கிட மனமகிழ் வெய்திட

          வந்தது இன்று பொங்கல் – நனி

          தந்தது இன்று பொங்கல்

வெங்கல வோசையில் மங்கலம் முழங்கிட

           வேணும் பொங்கல் மகிழ்ச்சி – நாம்

           பூணும் நன்கல முகிழ்ச்சி

சத்தியம் நெஞ்சிடை நித்தியம் தவழ்ந்திட

           தைநாள் ஆரம்பப் பெருநாள் – நம்

           தையலர் மகிழ்ந்திடு திருநாள்

நாடுடன் நம்மிடை பரவிடும் உறவிடை

          நாளும் பெருகிட நேசம் – கதி

          ஆளும் அழகிய ஈசன்

பாரதம் ஓங்கிட பயக்கலி செத்திட

         பாரீர் அறுவடைக் காட்சி  – நீர்

         வாரீர் இதுநம் மாட்சி

தஞ்சம் என்றொரு சொல்லும் தவறிட

          சஞ்சலப் பஞ்சம் செத்து  – இவை

          மிஞ்சிடும் நெல்மணி முத்து

சுதந்திர பாரதம் நிரந்தரம் நிமிர்ந்திட

          தோடுடை செவியன் பாதம்

           நாடுதல் இந்நாள் நீதம்

                                                     எழுதிய தேதி  : 29-10-1967

***

அன்புடையீர்

பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

சூரியனைப் போற்றாத மனித நாகரிகமே இல்லை.

அனைவருக்கும் பொது சூரியன்.

அனைவரையும் வாழ வைப்பவன்.

ஆன்மீக ரீதியாக தொழத் தக்கவன்.

போற்றித் தொழுது வணங்குகிறோம்.

அறிவியல் ரீதியாக வியக்க வைப்பவன்.

வியந்து பிரமித்து  திகைக்கிறோம்.

இலக்கிய ரீதியாக வர்ணிக்கத் தக்கவன்.

இன்பப் பரவசத்துடன் எழுதிக் குவிக்கிறோம்.

புற இருளை நீக்குபவன்.

அக இருளை நீக்குபவன்.

ஓம் ஸ்ரீம்  ஹிரண்யகர்ப்பாய நம:

ஓம் ஹ்ரீம் சம்பத்கராய நம:

ஓம் ஐம் இஷ்டார்த்தாய நம:

ஓம் அம் ஸுப்ரஸந்நாய நம:

இந்த ரகசிய மந்திரங்களால் உன்னை வணங்குகிறோம்.

ஓம். உனது பொன்னொளிர் கதிர்களுக்கு நமஸ்காரம். உனது சக்தி வாய்ந்த சூரிய ஆற்றல் எமது இதயங்களையும் உணர்ச்சிகளையும் நலமுடையதாக ஆக்கட்டும்.

ஓம். குணப்படுத்தும் ஆற்றல் உடையவனே! படைப்பாற்றலைத் தருபவனே! அனைத்துச் செல்வங்களையும் அருள்பவனே. உனக்கு நமஸ்காரம்.

ஓம். அனைத்து இஷ்டங்களையும் பூர்த்தி செய்து அருள்பவனே. உனக்கு நமஸ்காரம்.

ஓம். எப்போதும் சுப்ரஸன்னனாக இருப்பவனே. உனக்கு நமஸ்காரம்.

இருளிலிருந்து எம்மை ஒளிக்குக் கொண்டு சென்று அருள்வாயாக!

****

மகிழ ஒரு தருணம்! (post No.5904 )

Written by S Nagarajan


Date: 9 JANUARY 2019


GMT Time uploaded in London – 6-54 am


Post No. 5904

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

மகிழ ஒரு தருணம்! தமிழ் அண்ட் வேதாஸைப் பாராட்ட ஒரு தருணம்!

ச.நாகராஜன்

ஒரு நல்ல செய்தி! மின்னஞ்சலில் கிடைத்தவுடன் மனம் மிக மகிழ்ந்தேன்.

www.tamilandvedas.com + swaminindology.blogspot.com -இவை இரண்டும் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 31-12-2018 முடிய 77 லட்சம் பேர்கள் இவற்றில் வந்த கட்டுரைகளைப் படித்துள்ளார்கள்.

மகிழ ஒரு தருணம் இது.

இந்த சாதனை ஒரு அரிய சாதனை.

என்ன சார், அரிய சாதனை, அன்றாடம் வரும் வீடியோக்களுக்கே உடனடியாக பல ‘K’க்களில் பார்ப்பவர் எண்ணிக்கை இருக்கிறதே, என்று சிலர் கேட்கலாம்.

      இந்த சேனல்கள் தரும் பல்லாயிரக்கணக்காக உள்ள எண்ணிக்கையை தகிடுதித்தம் செய்ய வாய்ப்பு இல்லை என்று முதலில் வைத்துக் கொள்வோம். ஏனெனில் இது யூடியூப் மற்றும் சேனல் நடத்த அனுமதிப்போர் தரும் எண்ணிக்கை.

ஆனால் அன்றாட அரசியல் வம்பு, நடிக நடிகையரைப் பற்றிய வம்பு, தூற்றிப் பேசுதல், அல்லது அந்தரங்க விஷயங்களை அலசல், அல்லது பாலியல் பற்றிய செய்திகள் ஆகியவற்றிற்கே இந்த எண்ணிக்கை இருப்பதைக் கூர்ந்து பார்த்தால் தெரிய வரும்.

மக்களின் ரசனை அப்படி இருக்கிறதா, அல்லது கொடுப்பவர்கள் இதைத் தான் கொடுக்கிறார்களா?

ஏழே ஏழு பேரைக் காமரா காட்டும் போதே ‘மாபெரும் ஆர்ப்பாட்டம்’ என்று “தைரியமாக”  “சூரிய” ஒளி பிரகாசத்துடன் காட்டுபவர்கள் இருக்கையில் நடுநிலைச் செய்தியைப் பார்க்க விரும்புபவர்களுக்கு வாய்ப்பு குறைவாகத் தான் கிடைக்கும்.

இப்படி இருக்கும் நிலையில் நல்ல, தரமான, ஆய்வு செய்து எழுதப்படும் கட்டுரைகள் 5883 என்ற எண்ணிக்கையை 4-1-19 அன்று எட்டியிருப்பதையும் அவற்றைத் தான் இந்த 77 லட்சம் பேர்கள் படித்திருக்கிறார்கள் என்பதையும் நோக்கும் போது இது ஒரு நல்ல செய்தி தானே! நல்ல செய்தி கிடைப்பது அரிதாக இருக்கும் போது இப்படி ஒரு பெரிய செய்தி கிடைத்திருப்பது அரிய செய்தி தானே!

ஆக, இதற்காக திரு சுவாமிநாதன் அவர்களை (எனது தம்பி) மனமாரப் பாராட்டுகிறேன்.

சாதாரணமாக அண்ணன், தம்பியைப் பாராட்டுவது அழகல்ல.

ஆனால் இந்த நாட்டில் பாராட்டுக்குப் பஞ்சம் நிறையவே இருக்கிறது. எனது 50க்கும் மேற்பட்ட ஆண்டுகள் கடந்த எழுத்து அனுபவத்தில் இப்படிப் பாராட்டுக்கள் கொஞ்சமாகவே கிடைப்பதை அறிவேன். ஆக ஒரு பாராட்டு என்றால் அதை ஆயிரம் பேர் பாராட்டாக எடுத்துக் கொள்வேன். இந்த நிலை மாற வேண்டும். வம்புப் பேச்சிற்கு ஆயிரக் கணக்கில் எண்ணிக்கை எட்டும் போது நல்லனவற்றிற்கு நூற்றுக் கணக்கிலாவது பாராட்டு எண்ணிக்கை இருக்க வேண்டாமா?

இதை எண்ணியே இங்கு பாராட்டைப் பதிவு செய்கிறேன்.

சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள்.

ஆகவே அன்பர்கள் தமக்கு நெருக்கமாக உள்ளவர்களிடம் நல்லனவற்றை இனம் காண்பிக்க வேண்டுகிறேன். ஆளுக்கு ஒருவரிடம் இது பற்றிச் சொன்னால் 77 லட்சம் என்பது 154 லட்சமாக மாறும்.

இந்த சமயத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய  ‘Every Little Helps!’(www.ezinearticles.com முதலில் பிரசுரிக்கப்பட்டு பின்னர் ‘Breakthrough to Success’ என்ற எனது புத்தகத்திலும் இடம் பெற்றது) என்ற கட்டுரை நினைவிற்கு வருகிறது. அதைக் கீழே தருகிறேன்.

Every Little Helps!

Have you ever heard the little story of Mr. Little? For your ready reference the story is given below.

Mr. Little lived in a little house in a little town and he worked for a very little salary. The neighbours wondered how Mr. Little and the whole Little family could get along on such a small salary. He was asked, “Mr. Little, How do you, Mrs. Little and the seven little Littles get along on such a little salary?”

He replied, “Every Little helps!”

Yes, every little helps in everybody’s life. A famous Tamil proverb often quoted is: ‘Small drops make ocean’!

The famous Ganges originates from Gangotri. It is situated at a height of 10,319 feet.

The most sacred river of Hindus originates as little drops! Then Mother Ganges comes out of a crevice and falls as a cascade, twenty feet high, into an egg shaped place.

From Himalayas it flows 1567 miles southeastward across an immense undulating plain.

The Ganges drainage basin covers an area of around 376,800 square miles, roughly a quarter of the Indian Subcontinent. Flowing through one of the world’s most densely populated areas; the Ganges carries an enormous cargo of sediments at an annual average of 2.4 billion tonnes that is more than any other river!

Greatness comes from little things!

Here is a story from The Bustan of Sadi: “A rain drop fell from a spring cloud, and, seeing the wide expanse of the sea, was ashamed. ‘Where is the sea’, it is reflected, “where I am? Compared with that, forsooth, I am extinct.”

While thus regarding itself with an eye of contempt, an oyster took it to its bosom, and fate so shaped its course that eventually the raindrop became a famous royal pearl.

It was exalted, for it was humble. Knocking at the door of extinction, it became existent.

Orison Swett Marden quotes Gothe and Sydney Smith in his book ‘Cheerfulness’ to emphasize a few good points.

“One ought, every day,” says Gothe, “at least to hear a little song, read a good poem, see a fine picture, and, if it were possible, to speak a few reasonable words”

Sydney Smith recommends us to make at least one person happy every day: “Take ten years, and you will make thirty- six hundred and fifty persons happy: or brighten a small town by your contribution to the fund of general joy.”

Every great journey starts with a small step. Why don’t you start now?

«««

ஆம், கதே அறிவுறுத்துவது போல “ஒவ்வொருவரும் தினமும் ஒரு சின்ன கீதத்தைக் கேட்க வேண்டும், ஒரு நல்ல கவிதையைப் படிக்க வேண்டும், ஒரு அழகிய ஓவியத்தைப் பார்க்க வேண்டும்,முடியுமானால்  அறிவுக்குப் பொருத்தமான சில வார்த்தைகளைப் பேச வேண்டும்.”

நல்ல விஷயங்களைப் படிக்க மேலே நாம் கண்ட இரு தளங்களும் இருக்கின்றன!

படிப்போம், மற்றவரையும் படிக்கச் செய்வோம்.

“Every Little helps!”

****

2019 report on 1st January 2019

Tamilandvedas.com hits-5230 yesterday

Swamiindology.blogspot.com- 1742 yesterday

Totall-  6972

Swamiindology statistics

Page views last month-  52,249

Total so far- 2,749,424

Tamilandvedas.com stats

Followers 901

2011- 1053

2012- 72636

2013-  1,59,060

2014-340,380

2015 -569,481

2016-  899,843

2017- 1,321, 119

2018- 1,649,030

TOTAL- 5,012,600

Overall Total= 2,749,424+5,012,600= 7,762,024

Over 7-7 million hits from 2011-2018


If we add Speaking tree and tamilbrahmins.com site statistics (where we posted our articles in the early years it might have crossed 10 million)

–subham–

ராமானுஜருக்கு மண்ணும் பிரசாதம்!(Post No.5900)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 8 JANUARY 2019
GMT Time uploaded in London –7-20 am
Post No. 5900
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

tags-  பொய்கை  ஆழ்வார்,ராமானுஜர், மண் பிரசாதம்

மாபாரதத்தில் 250 மநு நீதிப் பாடல்கள்!- டாக்டர் இராதாகிருஷ்ணன் (Post No.5880)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 4 JANUARY 2019
GMT Time uploaded in London 8-33 am
Post No. 5880
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercia

Tags-  ராதாகிருஷ்ணன், மநுவும் கௌடில்யரும், ஹோமர், வள்ளுவர்

–subham–

நேபாளத்தின் அதிசயமான – ‘-கண்ணாடிச் சிறுமி! (Post No.5871)

Written by S Nagarajan


Date: 2 JANUARY 2019


GMT Time uploaded in London – 7-43 am


Post No. 5871

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

சரிதா பிஸ்தா : நேபாளத்தின் அதிசயமான – ‘GLASS GIRL’ -கண்ணாடிச் சிறுமி!

ச.நாகராஜன்

விஞ்ஞானம் விளக்க முடியாத விந்தைகள் ஏராளம் உண்டு. விஞ்ஞானம் நாளுக்கு நாள் வளர வளர இந்த விந்தைகளும் கூடிக் கொண்டே தான் போகின்றன!

இப்படிப்பட்ட விந்தைகளுள் ஒன்று தான் நேபாளத்தைச் சேர்ந்த சரிதா பிஸ்தா (Sarita Bista).

2006ஆம் ஆண்டு அவளுக்கு வயது 12.

2006, ஜனவரி,18 ஆம் தேதியன்று அவளது நெற்றியில் ஒரு சின்ன வீக்கம் வந்தது. அவளது பெற்றோர்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அது திடீரென்று பிளந்து அதிலிருந்து ஒரு சிறிய கண்ணாடி வெளிப்பட்டது. அது முக்கோண வடிவில் இருந்த ஒரு சில்லு – துண்டு!

பெற்றோர்கள் கவலைப்பட்டனர். எப்படியோ ஒரு கிளாஸ் அவள் நெற்றியில் வந்து இருந்திருக்கிறது போலும் என்று அவர்கள் எண்ணி அத்தோடு விஷயத்தை விட்டு விட்டனர்.

ஆனால் இன்னும் பல கண்ணாடித் துண்டுகள் அவள் நெற்றியிலிருந்து வெளிப்பட ஆரம்பித்தன. முக்கோணக் கண்ணாடித் துண்டுகள் 4 செண்டிமீட்டர் நீளமும் ஒரு மிலிமீட்டர் கனமுமாக இருந்தது.

அவ்வளவு தான், பயந்து போன பெற்றோர் அவளை டாக்டரிடம் கொண்டு சென்றனர்.

டாக்டர் பரிசோதித்தார். சிடி ஸ்கேனும் எடுக்கப்பட்டது. ஆனால் அவளது தோலும், நெற்றிக்கு அடிப்பாகமும் சாதாரணமாகத் தான் இருந்தது.

செய்தி பரவியவுடன் பல டாக்டர்களும் அவளை ஆராய்ந்தனர். ஆனால் காரணம் யாருக்கும் புலப்படவில்லை.

கண்ணாடி வெளிப்படும் போது ஒரு சிறிது ரத்தம் வரும்; ஆனால் அந்த இடம் உடனே ஆறி விடும்.

இது தொடர்ந்து நிகழ்ந்து வந்தது. பள்ளியில் இந்த விஷயம் ரகசியமாகவே காக்கப்பட்டது. ஆனால் அங்கும் அடிக்கடி கண்ணாடி வரவே அனைவருக்கும் தெரிய வந்தது.

2006 ஆகஸ்ட் மாத வாக்கில் தினமும் ஒரு கண்ணாடித் துண்டு அவள் நெற்றியிலிருவிளந்து வர ஆரம்பிக்கவே செய்தித்தாள்களில் எல்லாம் அவளைப் பற்றிய தலைப்புச் செய்தி வர ஆரம்பித்தது. ஒரு முறை ஒரே நாளில் 12  துண்டுகள் வெளிப்பட்டன.

செப்டம்பரில் அவள் பிரபலமாகி விட்டாள். அப்போது அது வரை வெளிப்பட்ட கண்ணாடித் துண்டுகளின் எண்ணிக்கை 130ஐத் தொட்டது.

டாக்டர்கள் முழு ஆய்வில் இறங்கினர். ஆனால் இந்த நிகழ்வால் அவள்  மன நலமோ உடல் நலமோ பாதிக்கப்படவில்லை.

டாக்டர்கள் காரணம் புரியாமல் திகைக்க அவள் நாளுக்கு நாள் நல்ல முறையில் வளர்ந்தாள்.

இளம் மங்கையாக இன்று வலம் வருகிறாள்.

விஞ்ஞானம் வளர்ந்தாலும் அது விளக்க முடியாத அதிசயங்கள் நிகழவே செய்கின்றன!

***

செப்பு மொழி பதினெட்டு (Post No.5860)

Written by S Nagarajan


Date: 31 DECEMBER 2018


GMT Time uploaded in London – 4-39 am


Post No. 5860

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

ச.நாகராஜன்

சொல்ல வேண்டியதை நகைச்சுவையுடனும் மனதில் தைக்கும்படியும்   தங்கள் கருத்துக்களைச் சொல்ல அறிஞர்கள் முன் வந்தால் அது எப்படி இருக்கும்?

இதோ பார்க்கலாம்!

மார்க் ட்வெய்ன்

Mark Twain

Thunder is good, thunder is impressive, but it is lightning that does the work.

இடி பிரமாதம் தான், உள்ளத்தில் கிளர்ச்சியை ஊட்டுவது தான், ஆனால் மின்னல் தான் வேலையைச் செய்கிறது.

I never could tell a lie that anybody would doubt, nor a truth that anybody would believe.

மற்றவர்கள் சந்தேகப்படாதபடி என்னால் ஒரு பொய்யைச் சொல்ல முடிவதில்லை அல்லது அவர்கள் நம்பும்படியாக ஒரு உண்மையையும் சொல்ல முடிவதில்லை.

April 1. This is one day upon which we are reminded of what we are on the other three hundred and sixty-four.

ஏப்ரல் 1. இந்த ஒரு நாள் தான் மற்ற முன்னூற்றி அறுபத்து நான்கு நாட்களிலும் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை ஞாபகப்படுத்துகிறது.

It is a difference of opinion that makes horse races.

ஒருவருக்கொருவர் இருக்கும் கருத்து வேறுபாடு தான் ரேஸில் குதிரைகள் ஓடக் காரணமாக இருக்கிறது.

It is better to keep your mouth shut and appear stupid than to open it and remove all doubt.

வாயை மூடிக் கொண்டு முட்டாளாக இருப்பது எவ்வளவோ மேல் – வாயைத் திறந்து மற்றவர்கள் சந்தேகம் அனைத்தையும் போக்குவதை விட!

Carlyle said “a lie cannot live”. It shows that he did not know how to tell them.

கார்லைல் சொன்னார் – “ஒரு பொய் நீடித்து நிலைத்து நிற்காது” என்று. இதிலிருந்து என்ன தெரிகிறது – அவருக்கு அவற்றைச் சொல்லும் விதம் எப்படி என்று தெரியவில்லை என்பதைத் தான்.

Every one is a moon, and has a dark side which he never shows to anybody.

ஒவ்வொரு மனிதனும் ஒரு சந்திரனைப் போல, களங்கமான பக்கத்தை அவன் யாருக்கும் காண்பிப்பதில்லை.

Get your facts first, and then you can distort them as much as you please.

முதலில் அனைத்து உண்மைகளையும் சேகரித்து விடுங்கள், அப்புறம் அதை உங்கள் இஷ்டப்படி திரித்து விடலாம்.

Voltaire

வால்டேர்

When it is a question of money, everybody is of the same religion.

பணம் என்ற பேச்சு வந்தால் அங்கு அனைவரும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் தாம்.

A long dispute means that both parties are wrong.

ஒரு வழக்கு நீடித்துக் கொண்டே போகிறது என்றால் இரண்டு கட்சிக்காரர்களும் தப்பானவர்கள்  என்பதைத் தான் அது காட்டுகிறது.

Common sense is not so common

பொது அறிவு என்பது பொதுவாகக் காணப்படுவதில்லை.

Jonathan Swift

ஜோனாதன் ஸ்விஃப்ட்

Fine words! I wonder where you stole them.

அருமையான வார்த்தைகள்! அவற்றை நீ எங்கிருந்து திருடினாய் என்று தான் ஆச்சரியப்படுகிறேன்.

What religion is he of? Why he is an Anythingarian.

அவன் எந்த மதத்தைச் சார்ந்தவன். அவன் ஒரு ‘எனிதிங்கேரியன்’

As universal a practice as lying is, and as easy a one as it seems, I do not remember to have heard three good lies in all my conversation, even from those who were most celebrated in that faculty.

உலகம் முழுவதற்கும் பொய் சொல்வது பொதுவானதாக இருப்பது போலவும், ரொம்ப சுலபமாக இருப்பது போலவும் காண்பித்தாலும், மற்றவருடனான எனது எல்லா சம்பாஷணைகளிலும் மூன்று நல்ல பொய்களை நான் கேட்டதில்லை, அந்தக் கலையில் திறமை வாய்ந்தவர்களாக அவர்கள் இருந்தாலும் கூட!

May you live all the days of your life.

வாழ்க்கையின் எல்லா நாட்களிலும் நீ வாழ்வாயாக!

Argument is the worst sort of conversation.

விவாதம் என்பது மிக மோசமான சம்பாஷணை.

Bex Stout

பெக்ஸ் ஸ்டவுட்

There are two kinds of statistics, the kind you look up an the kind you make up.

இரண்டு விதமான புள்ளி விவரங்கள் இருக்கின்றன. ஒன்று நீ எதிர்பார்ப்பது இன்னொன்று நீ மேக்-அப் செய்து விடுவது.

Gilbert Wells

ஜில்பர்ட் வெல்ஸ்

The man who has no secrets from his wife either has no secrets or no wife.

மனைவிக்குத் தெரியாத ரகசியமே ஒருவனிடம் இல்லை என்றால் ஒன்று அவனிடம் ரகசியம் என்பதே இருக்காது அல்லது அவனுக்கு மனைவியே இருக்க மாட்டாள்.

 Tags–நகைச்சுவை

***

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி29-12-18 (Post No.5852)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 29 December 2018
GMT Time uploaded in London –16-08
Post No. 5852


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

TAMIL CROSS WORD 29-12-18

கட்டத்திலுள்ள ஐந்து சொற்களைக் கண்டுபிடியுங்கள்.கீழே விடை தரப்பட்டுள்ளது

குறுக்கே

4. டால்டா

5. ‘எல்லா நோய்களுக்கும்’ நிவாரணி என்ற விளம்பரங்களில் வரும் சொற்கள்

கீழே

1.- ராமனின் இரு புதல்வர்கள்

2. பகவத் கீதையில் அர்ஜுனனைத் திட்டும்போது, கிருஷ்ண பரமாத்மா பயன்படுத்திய சொல்; சென்னை ஆட்டோக்காரர்களின் வாயில் சர்வ சாதாரணமாகப் புழங்கும் ஸம்ஸ்கிருதச் சொல்; பொருள் அழுக்கான, தூய்மையற்ற, பலவீனமான

3. பழத்தையோ காயையோ சமமாக வெட்டும் போது இருவருக்கும் கிடைக்கும் பகுதி

answer 

ல
XகXபா
வ
னஸ்பதி
கு
X
மாXபா
ச
கலரோக

ன்
Xம்Xம்

குறுக்கே

4.வன ஸ் பதி

5.சக ல ரோக

கீழே

1.லவ குசன்

2.கஸ்மாலம்

3.பாதி பாகம்

குறுக்கே

4.வனஸ்பதி- டால்டா

5.சகலரோக- ‘எல்லா நோய்களுக்கும்’ நிவாரணி என்ற விளம்பரங்களில் வரும் சொற்கள்

கீழே

1.லவகுசன்  – ராமனின் இரு புதல்வர்கள்

2.கஸ்மாலம்- பகவத் கீதையில் அர்ஜுனனைத் திட்டும்போது, கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் பயன்படுத்திய சொல்; சென்னை ஆட்டோக்காரர்களின் வாயில் சர்வ சாதாரணமாகப் புழங்கும் ஸம்ஸ்கிருதச் சொல்; பொருள் :கஸ்மலம் =அழுக்கான, தூய்மையற்ற,பலவீனமான

3.பாதி பாகம் – பழத்தையோ காயையோ சமமாக வெட்டும் போது இருவருக்கும் கிடைக்கும் பகுதி

லக்ஷ்மி, சீக்ரட் சூப்பர் ஸ்டார் – இரு திரைப்படங்கள்! (Post No.5849)

Written by S Nagarajan


Date: 29 DECEMBER 2018


GMT Time uploaded in London – 9-27 am


Post No. 5849

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

திரைப்படங்கள்

லக்ஷ்மி, சீக்ரட் சூப்பர் ஸ்டார் – இரு திரைப்படங்கள்!

ச.நாகராஜன்

2017, 2018 ஆகிய ஆண்டுகளில் வெளியான இரண்டு திரைப்படங்கள் நம் கவனத்தைக் கவர்கின்றன.

ஒன்று லக்ஷ்மி(2018). இன்னொன்று சீக்ரட் சூப்பர்ஸ்டார் (2017).

ஒன்று நடனம் பற்றியது. இன்னொன்று இசை பற்றியது.

இரண்டிலும் திறமையுள்ள இரு இளம் சிறுமிகள் தங்கள் ஆசைகளை நிறைவேற விடாமல் செய்யும் ஒரு அப்பா, ஒரு அம்மா ஆகியோரையும் மீறி நல்லெண்ணம் படைத்த உதவியாளருடன் அகில இந்திய முதலிடத்தைப் பெறுகின்றனர்.

நடனம், இசை ஆகியவற்றில் போட்டி என்றாலே படம் எப்படி இருக்கும் என்பதை எளிதில் யூகித்துக்  கொள்ளலாம்.

லக்ஷ்மியில் இளம் பெண்ணுக்கு உதவி புரியும் விஜய கிருஷ்ணாவாக பிரபு தேவா வந்து அசத்துகிறார். டான்ஸ் மாஸ்டருக்கே உரித்தான படம் என்பதால் அவரிடம் நடன மாயாஜாலங்களைப் பார்க்க முடிகிறது.

கதை, வசனம். டைரக்ஷன் ஏ.எல்.விஜய். 130 நிமிடங்கள் ஓடும் இந்தத் தமிழ்த் திரைப்படம் 28-8-2018 இல் திரைக்கு வந்தது.

சிறுமியின் அம்மா தன் பெண்ணின் டான்ஸ் ஆசையை ஆதரிக்கவில்லை; பெண் ஹோட்டல் உரிமையாளர் விஜய் உதவியுடன் அகில இந்தியப் போட்டிக்குச் செல்கிறாள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஒரு விபத்து ஏற்படவே அவள் காதுகள் கேட்காமல் போக, டான்ஸ் மாஸ்டரான விஜய் அவருக்கு அபிநயம் பிடித்துக் காட்ட அவள் ஆடுகிறாள்; அனைவரையும் அசத்துகிறாள்; ஜெயிக்கிறாள்.

அளவான கதா பாத்திரங்களுடன் கச்சிதமான நடன அசைவுகள் நிரம்பி இருக்க  படம் கவரும் வகையில் செல்கிறது. தித்யா பாண்டே, ஐஸ்வர்யா ராஜேஷ், கோவை சரளா என நடிகைகள் தங்கள் பங்கிற்கு கச்சிதமாக அளவுடன் நடித்துள்ளனர்.

கதை சொல்லும் நீதி – குழந்தைகளின் திறமைக்குத் தடை போடாதீர்கள் என்பது தான்!

அடுத்த படம் சீக்ரட் சூப்பர்ஸ்டார் 2017இல் வெளியான ஒரு ஹிந்தித் திரைப்படம். அத்வைத் சந்தனால் டைரக்ட் செய்யப்பட்ட இந்தப் படத்தில் அமீர்கான், கிரன் ராவ், ஜைரா வாசிம், மெஹர் விஜ், ராஜ் அருண் ஆகியோர் நடித்துள்ளனர்.

கதை இது தான் :

இன்சியா 15 வயதான ஒரு முஸ்லீம் பெண். இனிமையான குரல் வளமும் கிதார் வாசிப்பதில் நல்ல திறமையும் கொண்டவள். அவளது தந்தையோ ஒரு  முன்கோபக்காரன். மியூசிக் பிடிக்காத ஒரு  முரட்டு ஜந்து. அம்மாவின் ஆதரவு இன்சியாவிற்கு இருக்கிறது. பள்ளித் தோழனின் பாசமும் ஆதரவும் இருக்கிறது.

அம்மா தன் நெக்லஸை விற்று லேப் டாப் வாங்கித் தர பர்தா அணிந்து சீக்ரட்டாக அடையாளத்தை  மறைத்துத் தன் இசைப் பயணத்தைத் துவக்குகிறாள். 

மக்கள் மெய்மறந்து அவளின் இசையைக் கேட்டு யார்  இந்த சீக்ரட் சூப்பர்ஸ்டார் என வியக்கின்றனர்.

பம்பாயில் உள்ள சக்தி குமார் என்ற திறமைசாலியான மியூசிக் டைரக்டர் அவளை அழைக்க அவள் வீட்டிற்குத் தெரியாமல் பள்ளித் தோழன் உதவி செய்யத் தனியாக விமானத்தில் ஏறி பம்பாய் செல்கிறாள்; பாடுகிறாள். சக்தி குமார் மெய்மறந்து அவளது இசையில் லயிக்கிறார்.

இன்சியாவின் தந்தைக்கு ரியாத்தில் வேலை கிடைக்க விமானநிலையம் சென்ற குடும்பத்தினர், எக்ஸ்ட்ரா லக்கேஜ் என்று கிதாரை தந்தை தூக்கி எறிய மனம் கசந்து அவரைப் பிரிகின்றனர்.

பம்பாயில் சிறந்த பெண் பாடகி தேர்வு நடக்கிறது. அதில் வெற்றி பெற்றவர் மனமுவந்து சீக்ரட் சூப்பர்ஸ்டாரே வென்றவர் என்று கூற மறைந்திருந்த சீக்ரட் ஸ்டார் சக்திகுமாரின் (அமீர்கான்) உதவியுடன் மேடை ஏறுகிறாள்.

தன் தாய் தனக்காகப் பட்ட துன்பங்களை எண்ணி மேடையிலிருந்து ஓடி வந்து அவளைக் கட்டி அணைக்கிறாள். சுபம்!

இந்தப் படம் பல அவார்டுகளைப் பெற்ற படம். நேஷனல் சைல்ட் அவார்டை இன்சியாவாக நடித்த வாசிம் பெற்றாள். 3 பிலிம் ஃபேர் அவார்டுகளையும் இந்தப் படம் பெற்றது.

15 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் 965 கோடி ரூபாய் வசூலைப் பெற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அதாவது 6000 மடங்கு ரிடர்ன் ஆன் இன்வெஸ்ட்மெண்ட்! போட்ட முதலை விட அவ்வளவு மடங்கு வசூலை அள்ளிக் குவித்த படம்!

இரு படங்களின் மையக் கருத்து ஏறத் தாழ ஒன்று போல இருப்பது போலத் தோன்றினாலும் ஒன்று நடனத்தையும் இன்னொன்று இசையையும் மையமாகக் கொண்டிருப்பதால் இரு படங்களையுமே சுவாரசியமாகப் பார்க்க முடிகிறது.

வீட்டில் நடக்கும் வன்முறை, இளம் பெண்களின் அபிலாஷைகள், துணிவுடன் பிரச்சினைகளை எதிர்கொள்ளல் போன்ற பல கருத்துக்களைப் படங்கள் முன் வைக்கின்றன.  ஐட்டம் டான்ஸ் இல்லை என்பது ஒரு ப்ளஸ் பாயிண்ட் அல்லது பலருக்கு மைனஸ் பாயிண்ட்!

நல்ல படங்களைப் பார்த்த திருப்தி ஏற்படுகிறது என்பதால் இரு படங்களையுமே பார்க்கலாம்!

***

RIVER ORDEAL IN MANU, HAMMURABI, TAMIL PERIYA PURANA AND MAHABHARATA (Post No.5837)

Research Article by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 26 December 2018
GMT Time uploaded in London – 13-54
Post No. 5837


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

River ordeal or Water ordeal and Fire ordeal are found in Vedic literature and later books. We read about Sita’s Fire Ordeal in Ramayana and Fire walking in Jaiminiya Brahmana. It is interesting to see the Babylonian king Hammurabi also listed River ordeal as one of the punishments.

As I have explained in my article posted yesterday, Manu lived before Hammurabi (1792 BCE). Manu is in the oldest book Rik Veda. The following sloka not only showed Manu lived during the days of flowing mighty Sarasvati River but also water ordeal was one of the punishments or atonements.

In chapter 2 Manu says

“The country that the gods made between the two divine rivers, the Sarasvati and Drsadvati, is what they call  the Land of the Veda”- Manu 2-17

In chapter 11 he says,

A priest killer……………

“Throw himself three times, head first, into a blazing fire -11-74

Or he may eat food fit for an oblation and walk the length of the Sarasvati river against the current”-11-78.

Manu lived before 2000 BCE; later the river dried up according to the latest scientific discoveries.

Water Ordeal in Code of Hammurabi

Witchcraft

(2)If a man has laid a charge of witchcraft against another man but cannot substantiate his guilt, the person against whom witchcraft is alleged shall go to the river and jump into the river.

And if the mighty river overpowers him, the one who laid the allegations against him shall take possession of his house.

But if the river cleanses him of the guilt, he shall go away restored.

The one who laid a charge of witchcraft against him shall be put to death; the one who jumped into the river shall take possession of the house of the one who made the allegations against him

Tamil Periya Purana

Fire and Water ordeal figured also in the Pariyapurana which gives the life stories of 63 great Saivite saints.

When the politically motivated Jains set fire to the Brahmin boy Sambandar’s residence he came out without any harm. Later the Jains challenged him in various ways. One of the tests they held was Fire ordeal. Both the Jains and Sambandar placed the palm leaf manuscript with their holy Mantras. Sambandar’s palm leaf remained intact whereas the Jains’ one burnt to ashes. Then the water ordeal took place. Both of them placed their palm leaf manuscripts in the Vaigai River. Jains’ palm leaf was washed away; but Sambandar’swent against the river current and reached the banks 12 miles away Madurai. That place is called Thiru Edu Akam (Thiruvedakam). This water ordeal is at least 1400 year old.

River Ordeal in Mahabharata

Bandi was a Vedic scholar in the court of King Janaka . He used to hold learned discussions and debates on Vedic scripture s with visiting scholars who after being defeated, were thrown into river. One such unfortunate loser was Kahoda. Later Kahodas son Ashtavakra mastered all the scriptures by the age of twelve. He defeated Bandi and he was thrown into a river. But being the son of god Varuna , no harm came to him and he ended his earthly existence. Kahoda was restored to life. Later Ashtavakra bathed in the River Samang and his crooks in the body straightened out. This shows the miraculous powers of the river or water. Ashtavakra got eight crooks in his body when he was in the womb of his mother and his father Kahoda spelt the Vedas with mistakes.



What is Water Ordeal?


In Mesopotamia, from the old Babylonian period on, if the sworn testimony by the parties in a legal dispute conflicted or if for some reason the case was not solvable by rational means , it was usual to refer the decision to the river god; in other words to decide by means of a river ordeal . This solemn expedient was in effect a form of divination and the judgment would then be declared in the name of Id, the Divine River, or Shazi, son of the Divine River or Ea, Enki.

It seems likely that one of the litigants, selected by lot, underwent the ordeal. He had to submerge himself in the river at a special location in the presence of the authorities, and possibly swim to a certain distance. If he came out safe he was cleared. If he was overcome by the current and sank, he was guilty and had to return to court for sentencing—- fine or execution. It was not intended that he should drown.

Sometimes a holy river was specified. Daban, Diyala, Hubur , all rivers outside Babylon.


Sources


Hammurabi’s Laws, M E J Richardson, Sheffield Academic Press
Who is who in the Mahabharata, Subash Mazumdar, Bharatiya Vidya Bhavan, Bombay
Dictionary of the Ancient Near East, British Museum
Periapuranam
Manu Smrti


–subham–

இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டுத் தூதர்கள் (5818)

AJANTA CAVE PAINTING

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 23 December 2018
GMT Time uploaded in London – 8-57 am
Post No. 5818


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

2500 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவுக்குப் பல நாட்டுத் தூதர்கள் வந்தனர். இது இந்திய வரலாற்றில் முக்கியத் தகவல்களைத் தருகின்றது.

ராமாயணத்தில் அனுமனும், மஹாபாரதத்தில் அக்ரூரன், கிருஷ்ணன் முதலியோரும் தூது சென்றதை நாம் அறிவோம். சங்க இலக்கியத்தில், அதன் பிறகு எழுந்த திருக்குறளில், தூதர் பற்றிய விஷயங்கள் நிறைய உள.

 ஆயினும் கீழ்க்கண்ட தூதர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்து நிறைய தகவல்களை எழுதி வைத்துள்ளனர். இதே நேரத்தில் அசோகனும் அவனுக்கு முந்திய மன்னர்களும் வெளிநாடுகளுக்குத் தூதர்களை அனுப்பிய செய்திகளையும் காணலாம்.

இதோ ஒரு பட்டியல்

சந்திரகுப்த மௌரியன் (கி.மு.302)ஆண்ட காலத்தில் கிரேக்க மன்னன் செல்யூகஸ் நிகடார் என்ற மன்னன் மெகஸ்தனீஸ் என்ற தூதனை அனுப்பினான்.அவன் எழுதிய ‘இன்டிகா’ நூல்முழுக்கக் கிடைக்கவில்லை.ஆயினும் பிற்காலத்தில்  அர்ரியன்,தியோதரஸ் முதலியோர் கொடுத்த மேற்கோள்களில் இருந்து  நாம் மெகஸ்தனீஸ் சொல்லியவற்றை அறிகிறோம்.

அர்ரியன்= ஆர்யன்

தியோதரஸ் = தேவதரன்

ஸ்ட் ராபோ எழுதிய நூல்களிலிருந்து தெய்மஸ்ஸோஸ் ( தேவ மச்சான்) என்ற தூதர் மௌரிய மன்னன் பிந்துசாரனின் (கி.மு.300-273)அவைக்கு பல முறை வந்தது தெரிகிறது.

போரோஸ் (புரு) என்ற இந்திய மன்னன் ரோமானிய மன்னன் அகஸ்டஸ் அரசவைக்கு கி.மு 20-ல் தூதரை அனுப்பிய செய்தியையும் ஸ்ட் ராபோ நமக்கு அளிக்கிறார்.

பிந்துசாரன் அவைக்கு எகிப்திய மன்னன் டாலமி பிலடெல்போஸ் (கி.மு.285-247) அனுப்பிய தூதன் தியோநிஸோஸ் (தேவநிஸன்) வந்தான். எகிப்தில் புத்த மத பிரசாரம் வெற்றி பெற்றதாக அசோகனின் 13 ஆவது கல்வெட்டிலிருந்து அறிகிறோம்.

பாக்ட் ரி ய (வடமேற்கு இந்தியாவின் கிரேக்க ஆளுகை) அரசன்  அந்தியகிடஸ் (கி.மு140-130) ஒரு தூதனை விதிசா (பில்ஸா) நகருக்கு அனுப்பினான். அந்த தூதனின் பெயர்-ஹீலியோடரஸ். அவன் பரம பாகவதன் அதாவது மஹா விஷ்ணு பக்தன். அவன் வசுதேவனைப் போற்றி ஒரு பெரிய தூண் எழுப்பினான். அது இன்றுமுளது. அது ஒற்றைக்கல்லில் எழுப்பப்பட்ட தூண். இதிலிருந்து 2200 ஆண்டுகளுக்கு முன்னரே கிரேக்கர்கள்,இந்துக்களாக மதம் மாறியது தெரிகிறது. ஏனெனில் கிரேக்க கடவுளர், வீரர்கள் ஆகியோரை அவர்கள் விஷ்ணுவாகவும்,சிவனாகவும் கண்டனர்.

ரோம் நகருக்கு இந்திய தூதர்கள் விஜயம்

2000  ஆண்டுகளுக்கு முன்னர் இதாலியில் ரோம் நகரிலிருந்த ரோமானிய சாம்ராஜ்யத்துக்கு நிறைய இந்திய தூதர்கள் சென்|றனர். இந்தியா முழுதும், குறிப்பாக தென் இந்தியா முழுதும் ஆயிரக்கணக்கான ரோமானிய தங்க நாணயங்கள் கிடைத்துள்ளன. இதுவும் தூதர் தொடர்பை உறுதிப்படுத்தும்.

ட் ராஜன் (கி.பி.98-117) 

ஹேட் ரி யன் (117-138)

அந்தோணியஸ் பயஸ் (138-161)

மார்கஸ் ஆரேலியஸ்(261-280)

ஹீலியோ ஜெரிலஸ் ( 218-222)

ஹீலியோ= சூர்ய

ஜூலியன் (270-275)

கான்ஸ்டன்டைன் (323-353)

ஜஸ்டீனியன் (527-535)

ஆகியோர் காலத்தில் இந்திய தூதர்கள் ரோம் நகருக்கு வந்ததாக எழுதி வைத்துள்ளனர்.

சிரியா நாட்டுக்கு இந்தியா, 218 முதல் 222 வரை தூதர்களை அனுப்பியது.

ஹர்ஷவர்தனன் (606-647), சீனாவுக்கு 641-ல் ஒரு தூதரை அனுப்பினான்.

இபின் படூடா என்ற தூதரை முகமது பின் துக்ளக் 1342ல் சீனாவுக்கு அனுப்பினன்.

சீனாவும் இருமுறை, ஹர்ஷனின் சபைக்கு தூதர் வாங் லியன்ட்ஸியை அனுப்பி வைத்தது.

முதல் முறை ஹர்ஷன் அவருக்கு வரவேற்பு அளித்தான். இரண்டாம் முறை வங் வந்தபோது, ஹர்ஷன் இறந்து போனதால் அர்ஜுனன் பதவியில் இருந்தான். அவன் சீன தூதரை விரும்பவில்லை. ஆயினும் வாங் 657-ல் புத்த கயா, வைசாலியில் புத்தமத பிரார்த்தனை செய்தார்.

அஜந்தாவில் தூதர் ஓவியம்

பாரஸீக (ஈரான்) மன்னன் இரண்டாம்  குஸ்ரூ சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேஸி காலத்தில் ஒரு தூதனனை அனுப்பி வைத்தான் இது கி.பி 627ல் நடந்தது. அவன் தூதர்  நியமன கடிதத்தைக் கொடுக்கும் காட்சி அஜந்தா குகை ஓவியங்ளில் தீட்டப்பட்டுள்ளது.

1443-ல் பாரஸீக சுல்தான் ஷாரூக் ஒரு தூதரை அனுப்பினான். அந்த தூதரின் பெயர்- அப்துர் ரஜாக். கோழிக்கோடு, விஜய நகரம் முதலிய இடங்களுக்குச் சென்ற அப்துர், விஜய நகரத்தில் கஜானாவுக்குக் கீழ் சுரங்கப்பாதைகள் இருந்த சுவையான செய்தியை நமக்கு அளிக்கிறார். அங்கே தங்கப் பாளங்கள் கொட்டிக் கிடந்ததையும், நாட்டு மக்கள் கை, கால்,மூக்கு, காது எல்லாவற்றிலும் நகைகளுடன் காட்சி தந்ததையும் விவரிக்கிறார். அந்த நாட்டில் 300 துறை முகங்கள் இருந்ததையும்  சொல்கிறார்.

கி.பி. 1615ல் மொகலாய மன்னன் ஜஹாங்கீர் அரசவைக்கு இங்கிலாந்திலிருந்து தாமஸ் மன்றோ வந்தார்.

சீன யாத்ரீகர்கள்

பாஹியான் (கி.பி.405-411), யுவாங் சுவாங் (630-645), இட்சிங் (671-695) ஆகிய சீன யாத்ரீகர்கள் புத்த சமய புனிதத்தலங்களைத் தரிசித்து புத்த மத நூல்கலைப் பயின்றனர். அவர்கள்   இந்தியா பற்றி மிக விரிவாக எழுதியுள்ளனர்.

அசோகன் தனது புதல்வி சங்க மித்ரையையும், மகன் மஹேந்திரனையும் இலங்கை முதலிய நாடுகளுக்கு அனுப்பி புத்த மதத்தைப் பரப்பினான்..

ஏசு கிறிஸ்து இந்தியா வருகை

ஏசு கிறிஸ்து இந்திய முனிவர்களிடம் பாடம் கற்றதை தற்கால பைபிளில் வெட்டிவீட்டனர்.அவருடைய 20 ஆண்டு இளமைப் பருவத்தைச் சொல்லாமம் ஏசு, மீண்டும் வந்தார் என்று பைபிள் சொல்கிறது அவர் 12 ஆண்டுகளுக்கு இமய மலையில், முனிவர்களிடம் பாடம் கேட்டதாக நிகலஸ் நோட்டோவிச என்ற ரஷ்ய பயணி எழுதிவைத்துள்ளார். அவர் திபெத்திய நூல்களை இதற்கு ஆதாரமாகக்  கொண்டுள்ளார்.

அக்பர் முதலிய மன்னர்களின் அவைக்கும் பல வெளிநாட்டினர் வந்தனர்.

இந்தியாவுக்கு யாத்ரீகர்களாகவும் தூதார்களாகவும் வந்த ஆல்பெருனி, இபின் படூடா, மார்க்கோ போலோ ஆகியோர் மிக விரிவாக இந்தியா பற்றி எழுதினர்.

மொகலாய,விஜய நகர சாம்ராஜ்ய செல்வ வளம் பற்றி ஜீன் பாப்டிஸ் டாவர்னியர் (1638-1663), நிகலோ மனூச்சி (1653-1708), பிரான்ஸ்வா பெர்னியர் (1656-1717) ஆகியோர் அற்புதமான தகவல்களைச் சொல்கின்றனர்

(இதுபற்றி தனி புத்தகமே எழுதலாம். டாவர்னியர், பெர்னியர் புத்தககங்கள், லண்டன் லைப்ரரிகளில் உள்ளன.நேரம் கிடைக்கும்போது அவர்கள் தரும் அற்புத விஷயங்களை உங்களுடன் பகிர்வேன்.

TAGS-  வெளிநாட்டுத் தூதர்கள், சீன யாத்ரீகர்கள்

–சுபம்–