Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
30-3-25 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பான ஞான மயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது
சமர்த்த ராமதாஸர் – 2
ச. நாகராஜன்
ஒரு நாள் சிவாஜி மஹராஜ் தளர்ந்த உள்ளத்துடன் தனது படுக்கையில் இருந்த போது அவரிடம் அவரைப் பார்க்க சமர்த்த ராமதாஸர் வந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
துள்ளி எழுந்த சிவாஜி அவரிடம் ஓடி அவரைப் பணிந்தார். அவருடன் பல நாட்கள் தங்கி இருந்த ராமதாஸர், சிவாஜி தனது மகன் சம்பாஜியைப் பற்றி எண்ணி வருத்தப்படுவதை உணர்ந்து அவருக்கு ஆறுதல் அளித்தார்.
“இந்த ஸ்வராஜ்யமே இறைவன் திட்டமிட்டு உருவாக்கிய திருப்பணி தான். ஆகவே சம்பாஜியைப் பற்றிக் கவலைப்படாதே. இதை நன்கு ஆள தகுதி உள்ள ஒருவன் நிச்சயம் வருவான். அனைத்தையும் இறைவனிடம் விட்டு விடு” என்றார்.
இந்தச் சொற்களால் வருத்தம் நீங்கப் பெற்ற சிவாஜி அவரை விழுந்து வணங்கினார்.
“நான் உன் அருகிலேயே உள்ள பர்லி கோட்டையில் தான் தங்கி உள்ளேன்” என்றார் ராமதாஸர்.
அன்றிலிருந்து அந்தக் கோட்டைக்கு சஜ்ஜன் கர் என்று பெயர் சூட்டப்பட்டது. சஜ்ஜன் கர் என்றால் ஆண்ரோர்களின் உறைவிடம் என்று பொருளாகும்.
ஊர் ஊராகச் சென்ற ராமதாஸர் ஆங்காங்கே பதினோரு இடங்களில் அனுமாருக்காகக் கோவில்களை நிறுவினார்.
தல யாத்திரை சென்ற சமயத்தில் ஒரு நாள் அவரது தாயார் கண் பார்வை இழந்து வருந்துவதாகக் கேள்விப்பட்ட அவர் நேரடியாகத் தாயாரிடம் வந்தார். தனது தாயாரின் கண்களைத் தனது கரங்களால் தொட்டார்.
அவரது பார்வை மீண்டது.
அவரது கரத்தில் ஒரு சிறிய வில் இருக்கும். அருகிலிருக்கும் கற்களை எடுத்துத் தான் பார்க்கும் பொருள்களின் மீது வில்லால் கற்களை எறிவது அவர் பழக்கம்.
பெண்களை அவர் பெரிதும் மதித்துப் போற்றினார். அவரது சீடர்களாக 1100 பேர் சமர்த்த பிரிவில் இணைந்தனர். இவர்களில் 300 பேர்கள் பெண்களாவர்.
ராமதாஸரின் தர்ம பிரசாரத்தை இவர்கள் மேற்கொண்டு நாடு முழுவதும் அதைப் பரப்பலாயினர்.
சிவாஜியின் மகனான ராஜாராம் செஞ்சியின் மீது படைஎடுத்து ஔரங்கசீப்பின் ஆக்கிரமிப்பைத் தடுக்க முயன்றார். ராமதாஸர் தனது தெற்கு நோக்கிய விஜயத்தின் போது சிவாஜியின் ஒன்று விட்ட சகோதரரான வெங்கோஜி அவரது சீடரானார். தஞ்சாவூரில் ஒரு மடத்தை நிறுவிய ராமதாஸர் அங்கு தனது நேரடி சீடரான பீமஸ்வாமியை அதை நிர்வகித்து வருமாறு கூறி அருளினார்.
சீக்கியர்களின் குருவான ஹர்கோவிந்த சிங்கை ராமதாஸர் தனது ஶ்ரீ நகர் விஜயத்தின் போது சந்தித்தார். சந்திப்பின் போது ராமதாஸர் ஹர் கோவிந்த சிங்கிடம், “ நானக் வழியில் வந்த நீங்கள் உலகைத் துறந்தவர்கள் தாம். நீங்கள் அரசன் உடையை அணிந்து ஆயுதங்களைத் தரித்து உள்ளீர்கள். குதிரைப் படையைக் கொண்டு செல்கிறீர்கள். இது ஏன்? என்றார். உடனே ஹர்கோவிந்தசிங், “ நான் உள்ளே ஒரு துறவி. வெளியே ஒரு அரசன்” என்றார். “ஆயுதங்களைத் தரிப்பது ஏழைகளைப் பாதுகாக்கவும் கொடுங்கோலர்களிடமிருந்து அவர்களைப் பாதுகாக்கவும் தான்” என்றார். உடனே ராமதாஸர், “இந்த பதில் என் மனதைக் கவர்கிறர்து” என்றார்.
தனது இறுதி காலத்தில் ராம நாமத்தை ஜெபித்தவாறே அவர் ஒரு வித உணவையும் எடுக்காமல் ராமனோடு ஒன்று கலந்தார். அவர் சமாதி நிலையை அடைந்த தருணத்தில் அவரது உடலிலிருந்து ஒரு பெரும் ஒளி வெளியில் கிளம்பியதை அனைவரும் பார்த்தனர்.
அவர் இறுதியாக தன் சீடர்களிடம் உபதேச உரை ஆற்றுகையில், “ஒரு போதும் உடல் தேவைகளைப் பற்றி அதிகம் நினைக்காதீர்கள். சத்சங்கத்தைக் கொள்ளுங்கள். ராமரை உங்கள் இதயத்தில் நிலை நிறுத்துங்கள். காம க்ரோத லோப மத மாத்ஸரியத்தை நீக்குங்கள். அனைவரின் மீதும் அன்பு கொள்ளுங்கள்’ என்றார்.
ராமதாஸரது இலக்கியம் பரந்துபட்ட ஒன்றாகும்.
அவரது இலக்கியமானது அவர் வடக்கிலும் தெற்கிலும் நிறுவிய அவரது மடங்களை ஏற்ற சீடர்களால் பரப்பபட்டு வந்தது.
தாஸ போதம் என்ற அவரது நூல் மிகவும் பிரபலமான நூலாகும்.
மானஸ ஸ்லோகம் என்ற அவரது மனதை நோக்கிக் கூறும் ஸ்லோகம் அனைவராலும் கூறப்பட்டு வரும் ஒரு ஸ்லோகமாகும்.
ராமர் ராவணனை வெற்றி கொண்டதை மட்டும் விவரிக்கும் அவரது ராமாயணம் பிரபலமான ஒன்று.
அவரது ஹனுமன் ஸ்தோத்திரம் இன்றும் கூட மஹராஷ்டிர பள்ளிக்கூடங்களில் மாணவர்களால் சொல்லப்பட்டு வருகிறது.
கருணாசதகம் உள்ளிட்ட பல நூல்கள் அவரால் இயற்றப்பட்டுள்ளன.
அனைத்திலும் வல்லவராக இருந்த காரணத்தினால் அவர் சமர்த்த ராமதாஸர் என்று அழைக்கப்பட்டார். அவரது சம்பிரதாயத்தை ஏற்றுக் கொண்டோர் சமர்த்த பிரிவினர் என்று அழைக்கப்பட்டனர்.
ராமதாஸரால் ஊக்கம் பெற்றோர் இன்று வரை ஏராளமானோர் உள்ளனர்; இனியும் இருப்பார்கள்.
ஸ்வாதந்திர வீர் வினாயக் தாமோதர் சவர்க்கார் அவரது தாஸபோதத்தால் உத்வேகம் பெற்றார். ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தை உருவாக்கிய கேசவ் பலிராம் ஹெட்கேவார் ராமதாஸரின் பெரும் பக்தர். ராமதாஸரது பல உரைகளை அவர் தனது டயரியில் எழுதி வைத்துக் கொள்வது வழக்கம். அவரால் உத்வேகம் பெற்றே அவர் ஆர் எஸ் எஸ்ஸை நிறுவினார்.
அவரது உபதேச உரைகள் எந்தக் காலத்திற்கும் பொருந்துபவை; அனைவருக்கும் வழிகாட்டுபவையாகும்.
ஶ்ரீ ராம ஜெயராம ஜெயஜெய ராம ஓம் என்று தியானிப்பதோடு சமர்த்த ராமதாஸரின் அடி போற்றுவோம் என்று கூறி என் உரையை முடிக்கிறேன். நன்றி வணக்கம்.
London Swaminathan has written 139 TAMIL and ENGLISH books. Two of them are out of print. Other 137 books are readily available in Pustaka.co.in
Enjoy reading them.
Here is one of my latest books
முன்னுரை
பஸ்,ரயில் பயணத்தில் படிக்க சுவையான துக்கடாக்கள் என்பது புஸ்தகத்தின் தலைப்பு. அது என்ன துக்கடா? என்று பலரும் வியக்கலாம். துக்கடா என்பது மராத்தி மொழிச் சொல். இதன் பொருள் துண்டுகள் ஆங்கிலத்தில் டிட்பிட்ஸ் TItbits என்றும் தமிழில் துணுக்குகள் என்றும் சொல்லலாம். இந்த தமிழ்த் துக்கடா நூலில் மறுபிறப்பு அதிசயம் , பல பிராமணர் கதைகள், பஞ்ச தந்திர நூல் தோன்றிய கதை, பரவிய கதை , பெண்கள் விஷயங்கள் மற்றும் பல குட்டிக்கதைகள் உள்ளன. பஸ், ரயில் பயணிகளுக்கு ஏற்ற துண்டு/ துக்கடா விஷயங்கள். எந்தத் தலைப்பிலும் படிக்கத் துவங்கலாம்; பொருளடக்கத்தைப் பார்த்தால் புஸ்தகம் என்ன என்பது புரிந்துவிடும், சப்ஜெக்ட் என்று சொல்லப்போனால் தமிழ், சம்ஸ்க்ருதம், சமயம், பண்பாடு, பொழுது போக்கு, மருத்துவம், ஜோக்குகள், எறும்பு, மருத மரம் முதலியன எல்லாம் வந்துவிடும்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சங்கரதேவ் 1449–1568
1.சங்கரதேவ் எங்கே, எப்போது பிறந்தார் ?
சங்கரதேவ் ஆலிபுகரி என்னும் அஸ்ஸாமிய கிராமத்தில் 1449-ஆம் ஆண்டில் பிறந்தார். அவருடைய தந்தை பெயர்- குசும்பர் சிரோமணி பூயன் ;
தாயின் பெய- சத்தியசந்த்யா
****
2.அவருடைய மனைவி பெயர் என்ன ?
அவர் ஆம் வயதில் சூர்யபரீயைத் திருமணம் செய்துகொண்டார் . அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தாள்.
****
3.அவர் போதித்த கொள்கை என்ன?
அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பின்பற்றப்படும் அவருடைய கொள்கை ஏக சரண தர்மம் எனப்படும்; இதன் பொரு ள் – கிருஷ்ணன் ஒருவரையே சரணம் அடைய வேண்டும் என்பதாகும்.
****
4.அவர் உருவாக்கிய கலைகள் சம்பிரதாயங்கள் என்ன ?
சத்ரியா – நடனக்கலை
சங்கீதம் – போர் கீத்
நாடகம் – அங்கியா நாட், பவோனா
****
5.அவர் என்ன நூல்களை எழுதினார்
பாகவதத்தை அஸ்ஸாமிய மொழியில் எழுதினார்.
சிறு வயதிலேயே செய்யுட்களை எழுதி குரு தேவரை ஆனந்தப் பரவசத்தில் ஆழ்த்தினார்;
அவர் எழுதிய நாடகங்கள், செய்யுட்கள் நூல்கள் –
ருக்மிணி ஹரணம்
ராம விஜயம்
கேலி கோபாலன்
காளீய தமனம்
அஜாமிள உபாக்கியானம்
கஜேந்திர பக்திப் ப்ரதீபம்
****
6.வர கீதம் என்பது என்ன?
அஸ்ஸாமிய மொழியில் அவர் பாடிய நாட்டுப் பாடல்கள் வர கீதம் எனப்படும். வர கீதத்தின், மொழி, லயம், பாவம் சாதாரண மொழியிலிருந்து வேறுபட்டது; நீதிகள் நிறைந்தது; சங்கரதேவர் 249 சுமார் கீதங்கள் இயற்றினார்.
7. சங்கராதேவின் குரு யார் ? சங்கரதேவர் செய்த சாதனைகள் என்ன?
குரு– மஹேந்திர கண்டலி.
வெள்ளைப் பெருக்கெடுத்தோடும் பிரம்மபுத்ரா நதியைக் கடந்தது;
ஆசிரியர் சொன்னவுடன் கவி மழை பொழிந்தது ;
படகினை ஓங்கி கைகளால் குத்தி உடைத்தது;
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு தீர்த்த யாத்திரை செய்தது;
புதிய நாட்டிய, நாடக, இலக்கிய உத்திகளை உருவாக்கியது.
****
8.சங்கர தேவரின் சீடர் யார் ?
மாதவ தேவர் என்பவர் முக்கிய சீடர். ஒரு முறை சங்கர தேவரை கமலன் என்ற சிஷ்யன் வீட்டுக்கு அழைத்தான். அப்போது அவனது குடிசை தீப்பற்றி எரியவே சங்கர தேவர் கொண்டு சென்ற வர கீதச் சுவடிகளும் எரிந்து சாம்பலாயின உடனே மாதவ தேவரைப் பார்த்து நீ இயற்று என்றவுடன் அவர் பாடத் துவங்கினார் அந்த வகையில் மேலும் 189 வரகீதங்கள் உருவாயின.
****
9..ராமாயணத்தை அவர் பரப்பியது எப்படி?
ஸ்ரீ ராமனின் பாதங்களில் என் மனம் லயித்துவிட்டது என்ற சிறந்த பாடலை இயற்றினார். ராமாயணத்தையும் அவர் பாடல்களாகப் பாடினார்.
****
10.அவர் எப்போது இறந்தார் ?
அவர் 120-ஆவது வயதில் பைலாதோவா என்னும் கிராமத்தில் புரட்டாசி மாதம் சுக்கில பட்ச துவிதீயை அன்று அமரர் ஆனார்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
30-3-25 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பான ஞான மயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது
சமர்த்த ராமதாஸர் – 1
ச. நாகராஜன்
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே வணக்கம். நமஸ்காரம்.
ஶ்ரீ ராமரை தரிசித்து ராம பக்தியைப் பரப்பியதோடு ஹனுமாருக்கென பல கோவில்களை நிறுவியவரும் ஹிந்து ஸ்வராஜ்யத்தை நிறுவ சத்ரபதி சிவாஜிக்கு ஊக்கமூட்டியவரும் பெரும் மகானுமான சமர்த்த ராமதாஸரைப் பற்றி இன்று சிந்திப்போம்.
மஹராஷ்டிர மாநிலத்தில் சூர்யாஜி பந்த் என்பவருக்கும் ரேணுகா பாய் அம்மையாருக்கும் ஜம்ப் என்ற இடத்தில் 1608ம் ஆண்டு சமர்த்த ராமதாஸர் அவதரித்தார்.
அவரது இயற்பெயர் நாராயணன். இளவயதிலேயே அவர் ஶ்ரீ ராமரையும் ஹனுமானையும் வழிபட்டுத் துதிக்க ஆரம்பித்தார்.
இளவயதிலேயே ராம தியானத்தில் ஊறிய அவர் ஒரு நாள் அறை ஒன்றில் ராம தியானத்தில் மூழ்கி இருந்தார். அவரது தாயார் அவரிடம் என்ன செய்கிறாய் என்று கேட்ட போது ராமரை தியானிப்பதாகவும் உலக நலனுக்காகப் பிரார்த்தனை செய்வதாகவும் கூறினார். அவரது தாயார் இந்த பதிலைக் கேட்டு வியந்தார். இதுவே அவரது வாழ்க்கைக் குறிக்கோளாக அமைந்தது.
இளவயதில அவருக்கு மணம் முடிக்க தீர்மானித்த அவரது பெற்றோர் அதற்கு ஏற்பாடு செய்தனர். திருமண சம்பிரதாயப்படி மணமகனுக்கும் மணமகளுக்கும் இடையே ஒரு திரை தொங்க விடப்பட்டது. அப்போது திருமணத்தை நடத்தி வைக்கும் ஆசாரியர் ‘சாவ்தான்’ என்று கூறினார்.
‘சாவ்தான்’ என்ற சொல்லுக்கு ஜாக்கிரதை என்று பொருள்.
இதைக் கேட்ட ராமதாஸர் அந்த இடத்தை விட்டுக் கணப்பொழுதில் அகன்று ஓடினார்.
ராமதாஸர் பன்னிரெண்டு ஆண்டுகள் கோதாவரி நதிக் கரையில் நாசிக்கில் தங்கி இருந்தார். அதி காலையில் கோதாவரி நதியில் இடுப்பளவு நீரில் நின்று காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலானார்.
தினமும் வீதி வீதியாகச் சென்று பிட்சை கேட்டு அதை ஶ்ரீ ராமருக்கு முதலில் அர்ப்பணித்துப் பின்னர் தான் உண்பது அவரது வழக்கமானது.
வால்மீகி ராமாயணத்தை நன்கு கற்ற அவர் அதை முழுவதுமாக தன் கைப்பட எழுதினார். அந்த ஓலைச் சுவடிகள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன.
ஶ்ரீ ராம் ஜய ராம் ஜயஜய ராம் என்ற 13 எழுத்து மந்திரத்தை அவர் நாசிக்கில் உள்ள தபலி என்ற இடத்தில 13 லட்சம் தடவை ஜபித்து ராமரின் தரிசனத்தைப் பெற்றார்.
ராமரின் ஆணைப்படி எல்லா புனித தலங்களுக்கும் அவர் யாத்திரையை மேற்கொண்டார்.
ஒரு சமயம் விதவையான ஒரு பெண்மணியிடம், ‘நீ தீர்க்க சுமங்கலியாக இருப்பாய்’ என்று கூற அவளோ தனது கணவனின் இறந்த உடலைக் காண்பித்தாள். ராமதாஸர் அந்த உடலின் மீது நீரைத் தெளிக்க உடனே அவளது கணவன் உயிர் பெற்று எழுந்தான்.
இந்த சம்பவம் எங்கும் பரவி அவரது மகிமையை உலகெங்கும் பறை சாற்றியது.
பண்டரிபுரத்திற்கு அவர் விஜயம் செய்யாது இருந்த போது ஒரு நாள் ஒரு அந்தண வேடத்தில் பண்டரிபுர விட்டலன் தன் கூட 300 பேரை அழைத்து அவரிடம் வந்து, ‘பண்டரிபுர விட்டலனை தரிசிப்பதில் அவருக்கு ஏதேனும் ஆட்சேபணை உண்டா’ என்று கேட்டார்.
ராமதாஸ், ‘இல்லை’ என்று கூறி அவருடன் பண்டரிபுரத்திற்குப் புறப்பட்டார். கோவிலை நெருங்கும் போது அந்த அந்தணர் மறையவே இது இறைவனின் திருவிளையாடல் என்பதை உணர்ந்த ராமதாஸர் விட்டலனை தரிசிக்கச் சென்றார். அங்கே செங்கல்லின் மீது ஶ்ரீ ராமர் நிற்பதைக் கண்டு அதிசயித்தார்.
கிருஷ்ணர், ராமர் உள்ளிட்ட எல்லா அவதாரங்களும் ஒரே பரம்பொருளே என்று உணர்ந்த அவர் பாண்டுரெங்கனின் புகழ் பாடினார்.
அங்கு பண்டரிபுரத்தில் அவரது சமகாலத்தவரான பெரும் மகான் துகாராமை அவர் சந்தித்தார்.
ராமர் அவரை கிருஷ்ணா நதிக்குச் சென்று சத்ரபதி சிவாஜிக்கு உதவி புரியுமாறு ஆணையிட உடனே அவர் அங்கு சென்றார்.
சத்ரபதி சிவாஜி அவரைத் தனது குருவாக ஏற்றுக் கொண்டு அவரிடம் உபதேசம் பெற்றார்; உத்வேகமும் பெற்றார்.
தனது ராஜ்யம் முழுவதையும் சமர்த்த ராமதாஸரிடம் அர்ப்பணித்த சிவாஜி மஹராஜ் அவரது ஏவலனாகத் தான் இருப்பதையே விரும்புவதாகத் தெரிவித்தார்.
ஒரு நாள் சிவாஜி ராமதாஸர் வீதி விதியாக பிட்சை எடுப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டு ,‘ஒரு ராஜ்யமே உங்களுடையதாக இருக்கும் போது வீதி வீதியாகச் செல்வது ஏன்’ என்று ஒரு சீட்டில் எழுதி அதை தனது படைவீரரான பாலாஜியிடம் கொடுத்து இதை ராமதாஸரிடம் சென்று கொடுங்கள் என்றார்.
அந்த சீட்டைப் படித்துப் பார்த்த ராமதாஸர் மறு நாள் சிவாஜியை அழைத்தார். தன்னுடைய திருவோட்டை அவரிடம் கொடுத்து, ‘வாருங்கள், நாம் வீதி வீதியாகச் செல்வோம்’ என்றார்.
சதாரா நகரின் தெருக்களில் ராமதாஸரையும் சிவாஜியையும் இப்படிக் கண்ட மக்கள் ஆச்சரியமுற்று அவர்களை வணங்கி தங்கள் பிட்சையை அளித்தனர். பின்னர் நதிக்கரைக்குச் சென்ற ராமதாஸர் தான் பெற்றதை அங்கு சமைத்து உண்டார். அவருடன் சிவாஜியும் அந்த உணவை உண்டார்.
தனது பெயரால் அந்த சாம்ராஜ்யத்தை ஆள வேண்டும் என்று கூறிய ராமதாஸர் பகவா த்வஜத்தை அரசின் கொடியாக ஏற்றி அதை என்றும் காத்து வரவேண்டும் என்று அருளினார்.
இந்த சம்பவத்தினால் தான் பகவா த்வஜம் சத்ரபதி சிவாஜியின் ஹிந்து ஸ்வராஜ்ய த்வஜமாக ஆனது.
அட்டைப்படம் : புத்தர் பிறப்பதற்கு முன்னர் மாயாதேவி கனவில் யானை வந்தது ; விக்கி மீடியா காமன்ஸ் மற்றும் ஜார்ஜியா வெப்சைட் புத்தர் ஓவியம்; நன்றி
முன்னுரை
கனவுகள் பற்றிய இந்துக்களின் நம்பிக்கைக்கும் மேலை நாட்டு மன ஆராய்ச்சி நிபுணர்களான கார்ல் யங், சிக்மண்ட் பிராய்ட்( Carl Jung , Sigmund Freud ) ஆகியோரின் கொள்கைக்கும் பெரிய கருத்து வேறுபாடு உண்டு. இந்துக்களின் ஆராய்ச்சிகள் எப்படி அவர்களை பொய்யாக்குகின்றன என்பதை எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளில் காணலாம். இதற்கான ஆதாரங்களை சம்ஸ்க்ருத, மற்றும் சங்கத்தமிழ் இலக்கியத்திலிருந்தும் மக்களின் அனுபவங்களிலிருந்தும் கொடுத்துள்ளேன்.
கல்வெட்டுகளில் நாயின் பெயரை முதன் முதலில் பொறித்த பெருமை தமிழனுக்கு உண்டு. அது பற்றிய கட்டுரைகளையும் கனவுகள், கல்வெட்டுகள் , தமிழ் பற்றிய புதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் என்ற இந்த நூலில் காணலாம். தொல்காப்பியம் முதல் பாரதி பாடல் வரை மேலும் பல புதிய கட்டுரைகளை எனது ‘பிளாக்’குகளில் கடந்த ஓரிரண்டு ஆண்டுகளுக்குள் எழுதினேன். அவைகளையும் நீங்கள் இந்த நூலில் படிக்கலாம் . இப்படி விளக்கிக் கொண்டே போவதைவிட நூலின் பொருளடக்கத்தைப் பார்த்தாலே உள்ளடக்கம் புரிந்து விடும்.. இது தொடர் கதை அல்ல; ஆகையால் எங்கும் துவங்கி எங்கும் முடிக்கலாம்.
130 புத்தகங்களுக்கு மேல் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிய பின்னரும் புதிய சுவையான விஷயங்கள் கிடைத்துக் கொண்டே இருப்பதால் எழுதுவதை நிறுத்த மனம் வரமாட்டேன் என்கிறது. நீங்களும் படிப்பதை நிறுத்த மாட்டீர்கள் என்ற நம்பிக்கையும் உளது.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
உலகிலேயே பழமையான நூல் ரிக்வேதம் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை. மேலும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகவே வாய்மொழி மூலமே அது பரப்பப்பட்டு வருவதை இன்றும் நாடு முழுதுமுள்ள வேத பாடசாலைகளில் காண்கிறோம் . மனிதர்களுக்கு வேதம் நிர்ணயித்த ஆயுட்காலம் நூறு ஆண்டுகள்தான். நம்மில் பலரும் அரிதாகவே நூறு ஆண்டுகளுக்கு வாழ்கிறோம். அதற்குள் நாடி நரம்புகள் தளர்ந்து தோல் சுருங்கி முகம் வாடி விடுகிறது பிராமணர்கள் தினமும் மதிய வேளையில் நூறாண்டுக் காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வாழ்க என்ற மந்திரத்தைச் சொல்லி, சூரியனை விரல் இடுக்குகளின் வழியே பார்க்கிறார்கள் . இவை எல்லாம் உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுகின்றன .
இப்பொழுது உலகெங்கிலும் வைட்டமின்-டி VITAMIN- D பற்றி விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது; அது இருந்தால் நோய் நொடிகள் மனிதனை அண்டாது ; இதனால் இந்து மதத்திலும் இந்து ஜோதிடத்திலும் சூரியனை ஆரோக்கியத்துக்கான அதிபதி என்று சொன்னார்கள் ; இந்துக்கள் சூரிய நமஸ்காரத்தை பொழுது விடியும் முன்பாகச் செய்வதும், பிராமணர்கள் சூரியனின் போக்கினை வைத்து மூன்று வேளை சந்தியாவந்தனம் செய்வதும் இதனால்தான் .
ரிக் வேதத்தில் 1-34-6
வேத கால இந்துக்கள் அஸ்வினி தேவர்கள் என்ற இரட்டையர்களை ஆரயோக்கியத்துக்கான தெய்வங்களாக வணங்கினார்கள் ; இந்துக்கள் முப்பத்து முக்கோடி தேவர்களும் என்று பேச்சு வழக்கில் சொல்வார்கள்; அதையே ஆண்டாள் முப்பத்து மூவர் என்று திருப்பாவையில் பாடுகிறார். அந்த முப்பத்து மூவரில் இந்த இரட்டையர் அடக்கம்; இந்த இரட்டையரை வேண்டும் துதி, ரிக் வேதத்தில் 1-34-6 வருகிறது.
இன்னும் ஒரு ரிக் வேதத் துதி 6-74-2சோம ருத்ரா என்ற மூலிகையைக் குறிக்கிறது .
பில்லி- சூனியம், மாய மந்திரம் முதலியவற்றால் வரும் நோய்களை மூலிகைகள் அகற்றி விடும் என்று அதர்வ வேத துதிகளும் பாடுகின்றன 4-9-9; 19-39-1
அந்தக் காலத்தில், நோய் நொடிகளை பூதங்களும் பிசாசுகளும் உண்டாக்குவதாகவும் பில்லி சூனியம் போன்றவற்றால் பிறர் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்க முடியும் என்றும் நம்பினார்கள் ; சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வரை இந்த நம்பிக்கை மேலை நாடுகளில் பரவலாக இருந்தது; யாருக்காவது அல்லது ஒரு ஊருக்காவது கெடுதி வந்தால் அங்கு கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றாதவர்களை சூனியக்காரிகள் என்று சொல்லி உயிருடன் எரித்தனர். இவ்வாறு எரிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கு மேல் என்று நூல்கள் விளம்புகின்றன.
இந்து மத வைத்தியர்கள் பாக்டீரியாக்களையும் வைரஸ் கிருமிகளையும், இப்படி பேய் பிசாசுகள், பூதங்கள் என்று பாமர மக்களுக்குச் சொன்னார்கள் ; கிரகணம் என்பதை சந்திரன், பூமியின் நிழல்கள் என்று அறிந்து துல்லியமாகக் கணக்கிட்டு சொன்ன பின்னரும் சூரியனையும் சந்திரனையும் பாம்பு விழுங்குவதாக பாமர மக்களுக்குச் சொன்னதை இதற்கு எடுத்துக்காட்டகச் சொல்லலாம் சங்கத் தமிழ் இலக்கியத்திலும் இந்த பாம்பு விழுங்கும் நிகழ்ச்சிகளை சங்கப்புலவர்கள் பாடியுள்ளனர்.
இதில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் மூலிகைகளை நோய் தீர்க்கப் பயன்படுத்தினர் என்பதாகும் . மூலிகைகளின் சக்தி பற்றி மேலும் ஒரு ரிக் வேதத் துதி தெளிவாகவே பேசுகிறது 10-97-1/ 23
****
புதிய செய்தி என்னவென்றால் வேத கால மூலிகைகளைப் பிற்கால நூல்களும் குறிப்பிட்டுள்ளன. இதைக் கருத்திற்கொண்டால் உலகிலேயே மிகப் பழமையான மருத்துவம் ஆயுர்வத மருத்துவம் என்பது உறுதியாகிறது
அதர்வண வேதம் சொல்லும் மூலிகைகள் சரக சம்ஹிதையிலும் உளது; சரகரும் சுஸ்ருதரும் சொன்ன மருந்துகளை இன்று வரை நாம் பயன்படுத்திவருகிறோம். மேலை நாடுகளின் மருத்துவ அணுகுமுறைக்கும் இந்திய சித்த, ஆயுர்வேத மருத்துவ அணுகுமுறைக்கும் உள்ள முக்கிய வேறுபாட்டினை நாம் புரிந்துகொள்வது அவசியம்.
நோயே வராமல் வாழ வைப்பது ஆயுர்வேதம்; சித்த மருத்துவம்.
நோய் வந்த பின்னர்– அதாவது நோய்களை உடலில் உருவாக்கித் தீர்ப்பது மேலை நாட்டு மருத்துவம்.
பார்மசி கம்பெனிகள் நாள்தோறும் கோடிக்கணக்கான மருந்துகளை விற்கின்றன ; இதே அளவுக்கு மூலிகைகளை விற்றால் உலகில் நோய் நொடி இல்லாமல் அனைவரும் சித்தர்களாகவே வாழமுடியும் அதனால்தான் சித்த மருத்துவம் ஆயுளை வளர்க்கும் வேதம் என்று நமது மருத்துவ முறைகளுக்குப் பெயர் சூட்டினார்கள்.
கீழேயுள்ள பட்டியலில் எந்த எந்த மூலிகை வேதத்திலும் பிற்கால நூல்களிலும் உளது என்பதைக் காணலாம் .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம்வழங்கும்உலகஇந்துசெய்திமடல்
செய்திகளைத்தொகுத்தவர்லண்டன்சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்து வழங்கும் செய்தி மடல்
அனைவருக்கும்வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்
இன்றுஞாயிற்றுக்கிழமைமார்ச்30–ம்தேதி2025-ம்ஆண்டு
****
முதலில் ராம நவமி செய்தி
அயோத்தியில் ஏப்ரல் ஆறாம் தேதி ராம நவமி உற்சவம்
இந்த ஆண்டு ராம நவமி ஏப்ரல் 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் ராமபிரானின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடைபெறும். ராம நவமி சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
நாடு முழுவதும் உள்ள வைணவ ஆலயங்களில் ராம நவமி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ராம நவமி நாளில் சிறப்பு ஊர்வலங்கள், பஜனைகள் மற்றும் ராம் லீலா நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஏப்.6ம் தேதி நடைபெற உள்ள ராம நவமி விழாவில் 50 லட்சம் பக்தர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதால் அயோத்தி ராமர் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.
ராம நவமி, ராமரின் பிறந்தநாளை கொண்டாடும் ஹிந்து மதத்தின் மிக முக்கியமான திருவிழாக்களில் ஒன்றாகும். இவ்விழாவில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் ராமரின் பிறப்பிடமான அயோத்திக்கு வருகை தருகிறார்கள் .
உத்தரபிரதேச மாநில டி.ஜி.பி. குமார், ராம நவமிக்கு முன்னதாக, அயோத்தி ராமர் கோவிலில் பாதுகாப்பு மதிப்பாய்வை மேற்கொண்டார், இதன் மூலம் பண்டிகையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்தார்.
கொண்டாட்டங்களின் போது எந்தவொரு அசம்பாவித சம்பவங்களையும் தடுக்கும் வகையில் திட்டங்களை மேற்கொள்வது குறித்து அதிகாரிகள் விவாதித்தனர்.
மேலும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் கோவில் சுற்றுவட்டார பகுதியை கண்காணிக்க பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
****
வேல் யாத்திரைக்குஉச்ச நீதிமன்றம் அனுமதி மறுப்பு
சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கேட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பாரத் ஹிந்து முன்னணி என்ற அமைப்பு சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மதுரை திருப்பரங்குன்றம் மலையில், ஹிந்து கடவுளான முருகனின் கோவில் அமைந்துள்ளது. ஆனால், இந்த மலையை இஸ்லாமியர்கள் உரிமை கொண்டாடுகின்றனர். எனவே, திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க, சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கு எதிராக மனுதாரர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
****
காஞ்சி சுவாமிகள் திருப்பதி விஜயம்
காஞ்சி சங்கராசார்யார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மார்ச் 21-ம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை ஆந்திரப் பிரதேச காளஹஸ்தி திருத்தலத்தில் தங்கி சந்திர மெளலீஸ்வர பூஜை செய்தார் காளஹஸ்தி சிவன் கோவிலுக்கு அவர் வந்த போது அவரை தக்க மரியாதைகளுடன் கோவில் அதிகாரிகள் வரவேற்றனர் .
அவர் காளஹஸ்தி நகரிலிருந்து திருப்பதிக்கு விஜயம் செய்துள்ளார் அங்கு வசந்த நவராத்ரி பூஜைகளை நடத்துவார் மார்ச் 30-ம் தேதி முதல் ஏப்ரல் 7-ம் தேதிவரை வசந்த நவராத்ரி பூஜைகள் சங்கர மட்டத்தில் நடைபெறும். விசுவாவசு புது வருடம் மற்றும் யுகாதியை ஒட்டி சிறப்பு பூஜைகளும் ஹோமங்களும் நடைபெறும் .
****
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சனிப் பெயர்ச்சி எப்போது? கோவில் நிர்வாகம் விளக்கம்
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சனிப் பெயர்ச்சி எப்போது என்று கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
புதுச்சேரி அரசு இந்து சமய நிறுவனங்கள் துறை நிர்வாக அதிகாரி அலுவலகம் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் ஸ்வாமி தேவஸ்தானம் சார்பில் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் சனிப்பெயர்ச்சி எப்போது என்ற அறிவிப்பை கோயில் நிர்வாகம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “பக்தர்கள், ஜோதிடர்கள், அர்ச்சகர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சனி பெயர்ச்சி தொடர்பாக பல்வேறு செய்திகள் மற்றும் கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக 2025 மார்ச் 29 அன்று சனிப்பெயர்ச்சி நடைபெறும் என்ற தகவல்கள் பரவலாக வெளிவந்துள்ளன.
இது தொடர்பாக, திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் அருள்மிகு ஸ்ரீ சனீஸ்வர பசுவான் புண்ணியத் திருத்தலம்”வாக்கிய பஞ்சாங்கம்” முறையை பின்பற்றுவதை தெளிவுபடுத்துகிறோம். இந்த பாரம்பரிய கணிப்பு முறையின் படி 2026ஆம் ஆண்டிலேயே சனிப் பெயர்ச்சி நடைபெறும் என தெர்விக்கின்றோம். ஆகையினால் 29.03.2025 அன்று வழக்கமாக நடைபெறும் தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெறும்.
திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வரபசுனா திருந்தலத்தில் சனி பெயர்ச்சி சம்பந்தமான நிகழ்வு நடைபெறும் சரியான தேதி மற்றும் தேரம் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்,
*****
அம்ரூத் திட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ., பழநியில் வளர்ச்சிப்பணிகள்
தமிழகத்தில் மத்திய அரசின் சார்பில் அம்ருத்2.0 திட்டத்தின் கீழ் ஸ்ரீவில்லிபுத்துார், பழநி, தென்காசி, சங்கரன்கோவில், மயிலாடுதுறை, சிதம்பரம், திருவாரூர் ஆகிய 7 கோயில் நகரங்களில் ஒருங்கிணைந்த முழுமை வளர்ச்சி திட்ட பணிகள் நடக்கபோகின்றன.
தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் குறைவாகமக்கள் வசிக்கும் 51 நகரங்களில், அம்ரூத் 2.0 திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுஉள்ளது. இதற்காக புதிய மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட துவங்கியுள்ளனர்.
இதில் ஸ்ரீவில்லிபுத்துார், பழநி, தென்காசி, சங்கரன்கோவில், மயிலாடுதுறை, சிதம்பரம், திருவாரூர் ஆகிய 7 கோயில் நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளந . இங்கு அடுத்து வரும் 20 ஆண்டுகளில் அதிகரிக்கும் மக்கள் தொகை, பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை ஆகியவற்றை கணக்கில் கொண்டு தேவையான ரோடு, வாறுகால், குடிநீர், பூங்காக்கள், ஓய்விடங்கள் போன்ற அடிப்படை உட் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முறையான முழுமை திட்டம் உருவாக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இத்திட்டம் செயல்படுத்த முழுமையான திட்டம் தயாரிக்கும் பணியில் அந்தந்த கலெக்டர்கள் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி விருதுநகர் மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாநில அதிகாரிகளும் பங்கேற்றனர்.
****
மருதமலை கோவில் குடமுழுக்கு; வேள்வியில் தமிழுக்கு முன்னுரிமை
கோவை மருதமலை முருகன் கோவிலில், ஏப்.4ம் தேதி குடமுழுக்கு விழா நடக்கிறது. அதில், தமிழில் மந்திரங்கள் ஓத கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், சுரேஷ்பாபு, விஜயராகவன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள், நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, அறநிலையத்துறை சார்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன், வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆகியோர் ஆஜராகி, மருத மலை கோவில் செயல் அலுவலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்தனர்
அதில்,’குடமுழுக்கு விழாவில், தமிழுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில், மந்திரங்கள் ஓதி, யாகசாலை பூஜைகள் நடத்தப்பட உள்ளன.
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு கூறியிருப்பதாவது:
திருமலையிலுள்ள வெங்கடாசலபதி அன்னதான திட்டத்தை கடந்த 1985-ல் அப்போதைய முதல்வர் என்.டி.ராமாராவ் தொடங்கி வைத்தார். தற்போது தினமும் சுமார் ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. எஸ்.வி.அன்னதான அறக்கட்டளைக்கு இதுவரை 9.7 லட்சம் பக்தர்கள் நன்கொடை வழங்கி உள்ளனர். தற்போது நாள் ஒன்றுக்கு அன்னதானம் வழங்க ரூ.44 லட்சம் செலவாகிறது. இதுவரை 249 பக்தர்கள் ரூ.44 லட்சம் வீதம் நன்கொடை வழங்கி உள்ளனர். 139 பக்தர்கள் ரூ.1 கோடிக்கும் அதிகமாக நன்கொடை வழங்கி உள்ளனர். தற்போது இத்திட்டத்தில் ரூ.2,200 கோடி நன்கொடை இருப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
திருப்பதியில் தரிசன முறையில் மாற்றம்
திருப்பதியில் மார்ச் 25 ஆம் தேதி, மார்ச் 30ஆம் தேதி ஆகிய இரு நாட்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கோடை விடுமுறை இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனாலும் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. வார நாட்களில் 65 ஆயிரத்திற்கு மேலான பக்தர்களும் வார இறுதி நாட்களில் 80 ஆயிரத்திற்கு மேலானவர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.
மார்ச் 30ஆம் தேதி தெலுங்கு வருட பிறப்பான யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. எந்தவித பரிந்துரை கடிதங்களும் ஏற்கப்படாது என தேவஸ்தானம் தெரிவித்தது.
சகஸ்ர தீப அலங்கார சேவை தவிர மற்ற அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
****
100 ஆண்டு பழமையான இந்துக் கோவில் இடிப்பு? : மலேசியாவில் பதற்றம்!
மலேசியாவில் நான்காவது பெரிய மதமாக இந்து மதம் விளங்குகிறது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 6.3 சதவீதம் பேர் இந்துக்கள் ஆவார்கள். மலேசியாவின் மேற்குப் பகுதிகளில் தான் பெரும்பாலான இந்துக்கள் வாழ்கின்றனர். மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரின் மையப்பகுதியில் உள்ள 131 ஆண்டுகள் பழமையான இந்து கோவில், இடிக்கப்படும் அபாயத்தில் உள்ளது. மசூதி கட்டுவதற்காக இந்து கோவிலை இடம் மாற்றுவது பொதுமக்களின் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில், ஸ்ரீ கந்தசுவாமி கோவில், சுந்தரராஜப் பெருமாள் கோவில், பத்துமலை முருகன் கோவில் என 50க்கும் மேற்பட்ட இந்துக் கோவில்கள் மலேசியாவில் உள்ளன.
ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் அடைவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே,1894 ஆம் ஆண்டு தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில், மலேசியாவில் கட்டப்பட்டது. பரபரப்பான ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதியில் இக்கோயில், பிரபலமான ஜேக்கல் மால் தெருவின் குறுக்கே அமைந்துள்ளது.
தேவி ஸ்ரீ பத்ர காளி அம்மன் கோவில் இருக்கும் நிலம் இரண்டு பகுதியாக உள்ளது. ஒன்று தனியாருக்குச் சொந்தமானது மற்றும் மற்றொன்று அரசுக்குச் சொந்தமானது ஆகும்.
தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் அரசு நிலத்தில் தான் உள்ளது. 2014ம் ஆண்டு, கோயில் அருகே உள்ள தனியார் நிலம், பிரபல ஜவுளி தொழில் நிறுவனமான ஜேகல் டிரேடிங் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. நிறுவனத்தின் மறைந்த நிறுவனர் முகமது ஜாகல் அகமது, இந்து கோயில் உள்ள இடத்தில், பெரிய மசூதியைக் கட்டி இஸ்லாமியர்களுக்கு பரிசளிப்பதற்காக இந்த கோயில் நிலத்தை வாங்கினார் என்று கூறப்படுகிறது.
இந்துக் கோவில் இருந்த இடத்தில், பெரிய மசூதியைக் கட்டுவதற்கு 2021 ஆம் ஆண்டு, மலேசிய அரசும், கோலாலம்பூர் நகர சபையும் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, கோயிலை வேறு இடத்துக்கு மாற்றத் திட்டமிடப் பட்டது.
தேவி ஸ்ரீ பத்ர காளி அம்மன் கோவிலை இடமாற்றம் செய்வதற்கான மொத்த செலவுகளையும் ஜேகல் டிரேடிங் நிறுவனம் ஏற்றுக் கொள்ளவும் முன்வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பத்ர காளி அம்மன் கோயில் நிர்வாகக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கோவிலுக்கான மாற்று இடங்களை தூரம், நிலத்தின் அளவு மற்றும் வெள்ள அபாயம் ஆகியவற்றின் காரணமாக, கோவில் நிர்வாக குழு நிராகரித்துள்ளது.
இதற்கிடையே கோவில் இடிப்பு வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சிலாங்கூர் மாநிலத்தில், அந்தப் பகுதியில் 4 மசூதிகள் இருக்கின்றன. ஆனால் ஒரே ஒரு இந்து கோவில்தான் உள்ளது. அதுவும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவிலாக உள்ளது. எனவே இந்துக்களின் உணர்வை மலேசிய அரசு புரிந்துகொள்ள வேண்டும் என இந்து மக்கள் விரும்புகின்றனர்.
*****
இந்து தர்ம கலாச்சாரமே வெற்றிக்குக் காரணம்”!– அமெரிக்க FBI தலைவர் காஷ் படேல் கருத்து
தனது வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் சனாதன இந்து தர்ம கலாச்சாரமே அடிப்படை என்று அமெரிக்காவின் FBI தலைவரான காஷ் படேல் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளியினரான அவரது கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
FBI என்பது பெடெரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன் என்னும் அமெரிக்க ஸ்தாபனம் ஆகும். குற்றங்களையும் பயங்கரவாதத்தையும் புலனாய்வு செய்வது அதன் பணி
இந்திய வம்சாவளியினரின் மகனான 45 வயதான ‘காஷ்’ படேல், இப்போது அமெரிக்காவில் மிகவும் சக்திவாய்ந்த FBI தலைவராக உள்ளார். தனது தலைமைப் பண்புக்கு இந்து கலாச்சார மதிப்பீடுகள் எப்படி உதவின ? என்பதை காஷ் படேல் விளக்கியிருக்கிறார்.
அமெரிக்க அரசியல் போர்க்களத்தில் ஒரு இந்துப் போர் வீரன் என்ற தலைப்பில் ‘காஷ்’ படேலின் கட்டுரையை அமெரிக்காவின் India Tribune என்ற இணையச் செய்தி இதழ் வெளியிட்டுள்ளது.
1893ம் ஆண்டு சிகாகோவில் நடந்த உலக மத மாநாட்டில், சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரையின் கருத்துக்களை உள்ளடக்கியதாக அந்த கட்டுரை அமைந்திருக்கிறது.
இந்தக் கட்டுரை, புலம்பெயர்ந்த இந்து குடும்பத்தின் எளிமையான தொடக்கத்திலிருந்து அமெரிக்க அரசின் உயர் பதவிகள் வரை காஷ் படேலின் பயணத்தை விவரிக்கும் இந்த கட்டுரை, அவரது வாழ்க்கையில் இந்து மதம் ஏற்படுத்திய செல்வாக்கு பற்றி விரிவாகச் சுட்டிக் காட்டியுள்ளது.
குறிப்பாக, Deep State-க்கு எதிரான உறுதியான போராட்டத்துக்கும், இந்துமத கலாச்சாரமே தனக்குத் துணிவைத் தந்ததாக காஷ் படேல் கூறியிருக்கிறார். ஏற்கெனவே, FBI தலைவராகப் பதவியேற்றபோது, பைபிளுக்குப் பதிலாக பகவத்கீதையின் மீது சத்திரியப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
அதன்பிறகு, உலகத்தின் மிகப் பெரிய தேசமான அமெரிக்காவின் FBI- யை, முதல் தலைமுறை இந்தியர் வழி நடத்த உள்ளதாகப் பெருமிதத்துடன் கூறியிருந்தார். மேலும், தனது பெற்றோரை, ‘ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா’ என்று வாழ்த்தி வரவேற்று, செனட் நீதித்துறை குழுவின் முன் அறிமுகப்படுத்தி வைத்த காஷ் படேல், பெற்றோரின் பாதங்களைத் தொட்டு வணங்கினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
யாரைச் சந்திக்க நேர்ந்தாலும் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா என்று வாழ்த்துவதிலிருந்து, தனது பெற்றோரின் ஆசிகளைப் பெறுவது வரை, காஷ் படேல், தனது இந்தியப் பாரம்பரியத்தை விட்டுவிடாமல் வைத்திருக்கிறார்.
அமெரிக்கராக இருப்பதும் இந்துவாக இருப்பதும் முரண்பாடான அடையாளங்கள் அல்ல என்பதை காஷ் படேல் நிரூபித்துள்ளார். ஒரு மதச்சார்பற்ற அரசை வழிநடத்தும் அதே வேளையில், தனது இந்துமத பின்னணி மற்றும் மதிப்புகளின் வழி நிர்வாகத்தைச் செம்மையாக நடத்த முடியும் என்பதையும்அமெரிக்க FBI தலைவர்காஷ் படேல் நிரூபித்திருக்கிறார்.
****
திருத்தணி முருகன் கோவிலில் ரூ. 1.49 கோடி உண்டியல் காணிக்கை!
திருத்தணி முருகன் கோவி லில் உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே 49 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
கடந்த 31 நாட்களில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள், உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது.
இதில், ஒரு கோடியே 49 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் பணம், 650 கிராம் தங்கம், சுமார் 13 கிலோ வெள்ளி ஆகியவை கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
****
சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா!
சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா ஏப்ரல் மாதம் 2-ம் தேதி தொடங்குகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழாவை ஒட்டி அடுத்த மாதம் 1-ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 2-ம் தேதி காலை 9.30 மணிக்கு கொடி ஏற்றப்பட்டு விழா தொடங்குகிறது.
புதிய காப்பீட்டு திட்டம்
சபரிமலையில் தற்போது விபத்து காப்பீடு திட்டம் பக்தர்களுக்காக அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் வாயிலாக மரணம் அடைபவர்களுக்கும் எவ்வித பண பலனும் கிடைக்காமல் இருந்தது. இவ்வாறு இறக்கும் பக்தர்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் கிடைக்கும் வகையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
கோயில் திருப்பணி வேலைகள் நடை பெற்று வருகிறது. கோவிலை சுத்தம் செய்யும் போது தமிழாக்கம் செய்யப்பட்ட 2075 வால்மீகி ராமாயண ஒலைச் சுவடிகள் கண்டெடுக்கப்பட்டது.
பால, அயோத்யா, ஆரண்ய, கிஷ்கிந்தா, சுந்தர காண்டங்கள் அதில் உள்ளன. யுத்த காண்டம் மட்டும் இல்லை.
*****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்த செய்தி மடல்
அடுத்த ஒளிபரப்பு
ஏப்ரல் ஆறாம் தேதி லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,