1960-களின் முற்பகுதி : ஒரு பாகிஸ்தானிய உளவாளியை கல்கத்தா போலீஸ் கைது செய்தது. போலீஸ் அவனிடமிருந்த ஒரு டயரியைக் கைப்பற்றியது. அதில் மும்பையைச் சேர்ந்த பிரபல நடிகரின் தொடர்பு விவரங்கள் இருந்தன. கல்கத்தா போலீஸ் அந்த நடிகரை விசாரணை செய்ய விரும்பியது. ஆனால் நேரு அரசு மேல் நடவடிக்கை எடுப்பதைத் தடுத்து நிறுத்தியது.
உளவாளி பற்றிய கேஸில் மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணை பாகிஸ்தானுடன் நேரடி தொடர்பு கொள்ள வைக்கும் ஹை-ஃப்ரீக்வென்ஸி டிரான்ஸ்மிட்டர் ஒன்றைச் சுட்டிக் காட்டியது. அது மும்பையில் இருப்பதும் தெரிய வந்தது. அந்த டிரான்ஸ்மிட்டர் இருந்த வீடும் அந்த பிரபல நடிகருடைய வீடு தான். அவரோ, தான் நிரபராதி என்று கூறியதோடு, “எனக்கு சூஃபி இசை என்றால் மிகவும் பிடிக்கும். அவற்றை ஒலிபரப்பும் பாகிஸ்தானிய சேனல்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. ஆகவே தான் அந்த ரேடியோவை நான் வைத்திருக்கிறேன்.” என்றார்.
யாருமே அவரைக் கேட்காதது : “அது சரி? ரேடியோவை வைத்திருக்க வேண்டியது தானே? அதற்கு எதற்கு டிரான்ஸ்மிட்டர்?!”
நேரு மீண்டும் அனைவரும் விரும்பும் அந்த மாபெரும் நடிகரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தினார்.
ஐம்பது ஆண்டுகள் ஓடின. 2015இன் இறுதிக் கட்டம். மோடி கவர்ன்மெண்ட் அரசுப் பொறுப்பிற்கு வந்தது. அப்போது முன்னாளைய பாகிஸ்தானின் மந்திரி குர்ஷிட் முகம்மது கசூரி என்பவர் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் இப்படிக் கூறினார் :” அந்த மாபெரும் நடிகர் இந்தியாவின் ரகசிய உளவாளி. அவர் ரகசியப் பணிகளுக்காக இரு முறை பாகிஸ்தானிற்கு வந்தார். ஒரு முறை ஜெனரல் ஜியா ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது வந்தார். அடுத்த முறையாக சமீபத்தில் வந்தார்.”
அவர் அந்த மாபெரும் நடிகரைப் பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளரைச் சந்தித்து இப்படிப் பேசினார். கசூரி மேலும் கூறினார் : “ அந்த நடிகர் பாகிஸ்தான் பிரதம மந்திரி நவாஸ் ஷெரிஃபை போனில் கூப்பிட்டுப் பேசி கார்கில் போரை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார். அவரை அந்த ஆக்கிரமிப்பை கைவிட பேச்சு வார்த்தை மூலம் ஒருவாறாக சமாளித்து நம்ப வைத்தார்.
அந்த உளவாளி இந்தியாவை நேசித்த ஒருவரா? அல்லது அவர் பாகிஸ்தானை நேசித்த ஒரு ரகசிய உளவாளியா? நேருவுக்குத் தான் இது தெரியும். அவருக்கும் தெரியும், பாகிஸ்தானுக்கும் தெரியும், ஆனால் இந்தியாவிற்குத் தான் தெரியாது. திரை இறங்கிய போது அது சுட்டிக் காட்டியது திலிப் குமாரைத் தான்! அவர் எத்தனையோ நடிகர்களுக்கும் நூற்றுக்கணக்கான திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், லக்ஷக்கணக்கான திரைப்பட ரசிகர்களுக்கும் உத்வேகம் ஊட்டியிருக்கிறார். அல் விடா முகம்மது யூசூப் சர்வார் கான்!
(ஆதாரம், நன்றி : Strange, intriguing and shocking – Truth Vol 89 Issue 19 Dated 20th August 2021)
*
இந்தக் கட்டுரையின் ஆங்கில மூலத்தைக் கீழே காணலாம் :
The Spy Who Loved?
Early 1960s : A Pakistani spy was arrested by Calcutta Police. The pocket diary confiscated from him had contact details of a famous Bollywood actor from Mumbai. Calcutta Police wanted to interrogate the actor. But Nehru Government stopped further action.
Further investigation into the spy case lead to a high frequency Radio transmitter with direct connection to Pakistan. It was located in Bombay. The house belonged to the same actor. He pleaded innocence and declared, “ I love Sufi music. Since Pakistani channels are banned in India, I kept the Radio.” Again, noboday asked him, “Why transmitter and not just a Radio?”
Nehru again stalled all proceedings against the legendary thespian.
Five decades later in 2015, after Modi Government took over, Khurshid Mohammed Kasuri, a former Minister of Pakistan told a press meet, “The legendary Indian actor was an Indian Secret Agent. He visited Pakistan twice on secret missions. Once during General Zia’s days and the second visit was more recent.” He was talking to press as a book on the legendary actor was being launched. Kasuri also claimed , “ The actor ended the Kargil war by talking over the phone to Pakistan PM Nawaz Shariff and convincing him to call off the aggression.”
Was he a Spy, who loved India? Or was he a Spy, who loved Pakistan? Nehru knows, he knows and Pakistan knows, India doesn’t. The curtain finally came down on Dilip Kumar, who inspired scores of actors, hundreds of film makers, and millions of fans. Al vida Mohammed Yusuf Sarwar Khan!
(Strange , intriguing and shocking – Editor Truth)
நீ சாத்தியமான மொழிகளை அறிபவன் ; விழித்திருப்பவன் .
சோமன் தன் ஒளியால் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறான் சூரியனை அணுகும் வருடம் போல இந்திரனை அணுகுகிறான் அவன் தன் ஒளியால் இருளை அகற்றுகிறான்.
வேண்டுவதை எல்லாம் அளிப்பவன் சோமன்.
****
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
எங்களுடைய முன்னோர்கள், பசுக்களின் கால் சுவடுகளைப் பார்த்து அவை மறைத்து வைக்கப்பட்ட இடத்திலிருந்து அவைகளை மீட்டனர்
(குகையில் மறைத்து வைக்கப்பட்ட பசுக்களை வேத கால ரிஷிகள் மீட்ட சம்பவம் ரிக் வேதம் முழுதும் நூற்றுக் கணக்கான இடங்களில் வருகிறது பாணி என்றும் வரலாற்றில் பினீஷியர்கள் PHOENICIANS என்று அறியப்பட்டோருமான ஒரு இனம் , பயங்கரக் கருமிகள் MISERS ; பணப் பிசாசுகள் MONEY MINDED . அவர்கள் செல்வங்களை கைப்பற்றி குகைகளில் மறைத்து வைத்தனர் என்றும் அதை வேத கால இந்துக்கள் மீட்டனர் என்றும் ஒரு சிலர் தற்கால வியாக்கியானத்தில் சொல்கின்றனர். சுருக்காமாகச் சொல்ல வேண்டும் என்றால் பசுக்கள் என்பது மாடுகள் அல்ல. தமிழிலும் ‘மாடு’ என்றால் செல்வம் என்ற அர்த்தம் உண்டு. ‘பார்ப்பான் அகத்திலே பால் பசு ஐந்து உண்டு’ என்று திருமூலர் பாடுவதில் ஐம்புலன்கள் என்ற பொருளில் பசுக்கள் வருகின்றன!)
இந்து / சோமன் சூரியனுக்கும் ஒளியைத் தந்தான் அவன் நீரிலுள்ள கரு (உயிரினது தோற்றம்) ; இந்திரனுக்கு பலத்தைத் தந்தான் ; தேவர்களை வரவழைத்தான் ; சக்தியை அளித்தான்
சோமா , எங்கள் உணவுக்கும் செல்வத்துக்கும் வாயு தேவனை வசப்படுத்து ; மித்திரன், வர்ணன், மருத் தேவர்களைக் குஷிப்படுத்து வானத்தையும் பூமியையும் உற்சாகப்படுத்து
நீ நேர் வழியில் செல்பவன் ; பாதகம் செய்வோரைக் கண்டால் பாய்ந்து மிதித்து விடுபவன் ;
நீ நோயையும் பகைமையையும் அகற்றுவாயாக.
நாங்கள் உன் நண்பர்கள் ; நீயோ இந்திரனின் நண்பன்
ரிக் வேதம் முழுதும் உள்ள உலக மஹா அதிசயம், வேறு எந்த சமய நூல்களிலும் இல்லாத அதிசயம் ; கடவுளர் எல்லோரையும் ரிஷிகள் “நண்பர்கள்” FRIENDS என்று அழைப்பதாகும் ; எல்லா ரிஷிகளும் சேர்ந்து பாட வரும்போது COMRADES ‘காம்ரேட்ஸ்’ வாருங்கள் நாம் எல்லோரும் சேர்ந்து பாடுவோம் LET US SING TOGETHER என்று அழைப்பதாகும் . எனக்கு என்று தனக்கு மட்டும் வேண்டாமல் மனித சமுதாயத்துக்கே வேண்டுவதாகும் ‘மழை பொழிக ! வளம் சிறக்க !’ என்று பாடுவதிலிருந்து இதை அறிகிறோம்.
ஐங்குறுநூறு என்னும் சங்க இலக்கியத்தில் ஓரம் போகியார் பாடிய வேட்கைப் பத்தில் ரிக் வேத வரிகள் அப்படியே வருகின்றன :
ஐங்குறு நூற்றில் வேதக் கருத்துகள் | Tamil and Vedas
17 Mar 2013 — மருதத் துறை பற்றி ஓரம் போகியாரும் நெய்தல் துறை பற்றி அம்மூவனாரும் ..
XXX
மகானான சோமன் இந்த மகத்தான செயலாய் நடாத்தினான்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
மந்திரம் 9-97-44ல் வரும் அதிசயச் செய்தி
‘கடற் பயணம் செய்து செல்வங்களைக் கொண்டு குவிப்பீர்களாகுக’ என்று ரிக் வேதம் கட்டளை இடுகிறது. இதை மேற்குப் பகுதில் குஜராத்தி படேல்களும் பணியாக்களும் , கிழக்குப் பகுதியில் நாட்டுக் கோட்டை செட்டியார்களும் செய்ததை வரலாறு காட்டுகிறது சாதவாஹனர் முத்திரைகளில் கப்பல் படமும் பிராமி லிபியும் தமிழ் லிபியும் இருப்பதை நாம் அறிவோம்; வேத கால இந்துக்கள் துருக்கி சிரியா வரை சென்றது கி.மு.1340ம் ஆண்டு பொகாஸ் கோய் (துருக்கி) கல்வெட்டில் பதிவாகி உள்ளது . கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதிப் பாடலும் வியட்நாமில் உள்ள இரண்டாம் நூற்றாண்டு திருமாறன் கல்வெட்டும் (ஸ்ரீமாறன், சம்பா, வியட்நாம்) கல்வெட்டும் பறை சாற்றுகின்றன.
இதோ மந்திரம் 9-97- 44
சோமனே ! இனிய செல்வ ஊற்றினை நல்குவாயாகுக !
எங்களுக்கு வீரம் மிக்க புதல்வர்களையும் செல்வத்தையும் அளிப்பாயாகுக ;
நீ சுத்தமானவுடன் இந்திரனிடம் இனிமையாக இருப்பாயாகுக ;
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரு கிராம் வைரஸ் : 750 கோடி மக்களின் பயத்திற்குக் காரணம்!
ச.நாகராஜன்
வைரஸ் என்றால் என்ன?
டாக்டர் சுப்ரமண்யன் நாராயண் தரும் தகவல் இது. இவர் பரிசுகளை வாங்கிய ஒரு எழுத்தாளர். ஆலோசகர். ஆய்வாளர்.
ஒரு வைரஸின் எடை 0.85 ஆட்டோகிராம் ஆகும். அதாவது ட்ரில்லியன் கிராமில் பத்து லட்சத்தில் ஒரு பங்கு.
ஒரு மனிதனை வியாதிக்குள்ளாக்கும், 70 பில்லியன் வைரஸ்கள் ( ஒரு பில்லியன் என்றால் 100 கோடி) 0.0000005 கிராம் தான்! இப்போது உலகில் உள்ள கேஸ்களின் எண்ணிக்கை 20 லட்சத்திற்கும் அதிகம் என்பதால் உலகில் பரவியுள்ள இந்த கொடிய வைரஸ்களின் மொத்த எடை சுமார் ஒரு கிராம்.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் விஷயம் இது தான்:-
மனிதர்கள் வாழும் இந்த பூமி என்னும் கிரகம் ஒரு கிராம் வைரஸுக்கு முன் மண்டியிடுகிறது.
நமது பகட்டு பற்றிய மாத் தோற்றங்களும் அறிவியல் முன்னேற்றமும் இவ்வளவு தான். ( ஒரு கிராமுக்கும் குறைவான, உயிருடன் இருக்கும் ஒன்று என்று சொல்வதற்குக் கூட லாயக்கில்லாத ஒரு உயிரினம் மொத்த மனித இனத்தையும் தன் முன் மண்டியிட வைத்திருக்கிறது.
அடக்கமாக இருங்கள்!
(மனித) இனம் என்று அறியப்படும் ஒன்று ஒரு கிராம் வைரஸுக்கும் குறைவானது தான்!
ஆதாரம், நன்றி : Truth Weekly, Vol 89 No 21 Dated 3-9-2021
*
இதன் ஆங்கில மூலம் கீழே தரப்படுகிறது.
VIRUS – What It Is:
Dr Subramanyan Narayan, award-winning author, consultant and researcher, writes as follows:
The weight of a virus is measured at 0.85 attograms or about one millionth of a trillion grams.
70 billion viruses that will make a person sick will be about 0.0000005 grams. Since the total number of cases worldwide is now over 2 million, the total weight of the rogue viruses that have descended on the world comes to about 1 gram.
At the end of the day that means:
The entire planet (or let us say mankind) is on it’s knees with just 1 gram of virus taking over!
So much for our illusions of self grandeur and achievements in science. (Less than 1 gram of an organism that cannot even be called to be alive and the whole human race is at it’s knees.
Be humble….
What we know as a race is lesser than the weight of the Virus.
Source and Thanks : Truth Weekly, Vol 89 No 21 Dated 3-9-2021
***
INDEX
Virus weight, one gram virus, Human race is at it’s knees,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
SOMA- A HALLUCINATIVE DRUG OR ELIXIR? PART -3
Second part was posted yesterday under the title
‘EINSTEIN IS 50% RIGHT, DARWIN IS 100 % RIGHT – RIG VEDA THROWS MORE LIGHT (Post No.10101)’
Let us look at the remaining mantars in the hymn RV 9-97 on Pavamana Soma:-
Mantra 43 of RV.9-97
Flow onward Righteous Slayer of the Wicked;
Drive away our enemies and sickness
Blend your milk with the milk that cows afford us
We are Your Friends; And You are Indra’s Friend!.
xxx
9-97- 44 onwards…………….
You are a Spring of Treasure; Pour us a fount of Honey/meath
Pour down Riches on us FROM THE OCEAN
(These words show that there was a big maritime trade between India and the Middle East and Africa; Bogazkoi Inscription of 1340 BCE prove that there was well established Vedic Hindus settlement in Turkey and Syria).
You are strong; you are wise;
You are sun-bright; you are chariot borne; truly potent.
You were poured forth like the longing of the pious.
Soma ! your daughter is earth. You cover her with your clothes.
You are singing like a priest in the assembly/ gathering.
You find three -fold refuge in the waters.
You are sweetest in waters, rich in meath and holy.
You are truthful-minded.
Flow to the song inspiring car borne (Asvins)
Flow to mighty Indra
Pour on us garments that shall clothe us suitably;
Please send us chariot drawing horses that may bring us treasures bright and
Golden
Send us in streams Celestial Riches.
Send us what earth contains so that we may acquire possessions and
Rsihood in Jamadagni’s manner
You are full of wisdom
You are glorious; flow on for us to the famed ford
May the Foe-queller shake us down , for triumph, like a tree’s ripe fruit 60,000 treasures
Soma ! Turn away the Foolish and Unfriendly
Soma sent our enemies to sleep and slew them
You are the giver of gifts
You are wise, King of all Existence
Devas sing like the bards who sing for obtaining wealth
May we pile up together all our spoil in battle
May Varuna and Mitra, Aditi and Sindhu, Earth and Heaven give us wealth
Thus ends the hymn RV 9-97.
Though the song looks like a battle cry it is not a battle cry.
They pray for status of a Rishi (Rsihood); they pray for the destruction of their sins; they also pray for earthly riches and celestial riches.
If one reads all the 58 Mantras and see the inner meaning, they pray to god for all the good things in life. Here Soma stands for GOD. And another point to be noted is God is a friend. This found throughout the Rig Veda. And they pray for the group, not for him alone. Always we and us and not I and me!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சோம ரசம் பற்றி அபூர்வ தகவல்கள் ( Part 2
ஐன்ஸ்டைன் சொன்னது பாதி சரி, டார்வின் சொன்னது முழுதும் சரி
உலகப் புகழ் பெற்ற பெளதீக விஞ்ஞானி ஐன்ஸ்டைன் (ALBERT EINSTEIN) என்ன சொன்னார்? ஒளியின் வேகம் ஒரு வினாடிக்கு 1,86,000 மைல் ; இதுதான் பிரபஞ்சத்தின் மிக வேகமான பொருள். இதை யாரும் மிஞ்ச முடியாது ;அப்படி மிஞ்சும் ஒரு விண்கலம் தயாரித்தால் அதில் செல்வோர் என்றும் மார்க்கண்டேயன் போல வாழ்வான். அவனுக்கு மூப்பு என்பதே இல்லை. இதுவரை மனிதன் சென்ற விண்கலத்தின் (MANNED SPACECRAFT) அதிக வேகம் மணிக்கு 26,000 மைல்தான். வினாடிக்கு அல்ல. பிரபஞ்சத்தில் மனிதன் இல்லாத விண்கலம் (UNMANNED) அடைந்த வேகம் மணிக்கு 3 லட்சம் மைல்தான் . ஆனால் ரிக் வேதம் என்ன சொல்கிறதென் றால் பிரபஞ்சத்தின் அதிக வேகமான பொருள் மனதுதான் (MIND). மனத்தின் மூலமாக ஒரு வினாடிக்குள் லண்டனிலிருந்து டில்லிக்குச் சென்று திரும்பிவிடலாம். புளூட்டோ கிரகத்துக்கும் ஒரு வினாடியில் சென்று திரும்பிவிடலாம் ; அது சரி மனம் என்னும் வாகனம் உள்ளதா ? அதில் செல்ல முடியுமா? அப்படிச் செல்லுவதை யாராவது நம்புவார்களா ? இந்துக்கள், குறிப்பாக பிராமணர்கள் இதை தினமும் நம்புகிறார்கள்
பிராமணர்கள் தினமும் மூன்று முறை செய்யும் சந்தியாவந்தனக் கிரியையில் காயத்ரீ தேவியை இருதயத்துக்குள் வந்து அ மரும்படி சைகை (முத்திரை) செய்கின்றனர். ஜபம் முடிந்தவுடன் “அன்புள்ள தாயே நீங்கள் வசிக்கும் பூமியிலுள்ள மிக உயர்ந்த மலை உச்சிக்கே திரும்பிச் செல்லுங்கள்” என்று வ ழி அனுப்பி வைக்கிறார்கள். ஆக எங்கிருந்தோ காயத்ரீ ஒரு வினாடிக்குள் வந்து விடுகிறாள்!
பூமிக்கு அப்பாலுள்ள , இறந்து போன முன்னோர்களையும் இப்படி வருடத்துக்கு 94 முறை அழைத்து எள்ளும் நீரும் இறைக்கின்றனர் . இதில் என்ன அதிசயம் என்றால் ரிக் வேதத்தின் பத்து மண்டலங்களிலும் தர்ப்பைப் புல்லில் அமரும்படி கடவுளர்களை ரிஷிகள் அழைக்கிறார்கள். அதே போல பிராமணர்கள் இன்றும் தர்ப்பைப் புல்லைத் தாம்பாளத்தில் வைத்து இறந்து போன முன்னோர்களை அதில் உட்கார வைக்கிறார்கள் ; கிரியை முடிந்தவுடன் எந்த ஆகாய வழியில் வந்தீர்களோ அந்தப் பாதையிலேயே திரும்பிச் செல்லுங்கள் என்று GOOD-BYE ‘குட் பை’ சொல்கிறார்கள். ஆக அப்போதும் எங்கோ ஓரிடத்திலிருந்து பூமிக்கு அவர்கள் ஒரு நொடிப்பொழுதில் வருகிறார்கள்.ஆனால் கண்களால் காண முடிகிறதா? சிலருக்கு மட்டுமே முடியும்
ஏன் என்றும் சொல்கிறேன். ஒரு சின்னப் பையனைக் கூப்பிட்டு சந்திரனுக்கு மனிதன் போக முடியுமா? என்று கேளுஙகள் . ஓ போக முடியுமே ;நீல் ஆர்ம்ஸ்ட்ராங் NEIL ARMSTRONG போயிருக்கிறார் என்பான். ஆனால் அது போலச் சென்றவர்கள் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே. அதுவும் அனைவரும் 50 ஆண்டுகளுக்கு முன்னர்தான் சென்றார்கள் . இதெல்லாம் அபூர்வாமாக நிகழக்கூடியவை. எல்லோராலும் செய்ய முடியாது. இது போலவே பல அபூர்வ சம்பவங்களை ராமாயணம், மஹாபாரதத்தில் படிக்கிறோம். மாதரி என்ற PILOT பைலட் செலுத்திய விண்கலத்தில் அர்ஜுனன், இந்திரலோகம் சென்று திரும்பியது, ராமாயணத்தில் இறந்து போன தசரதன் ராமன் முன்னர் தோன்றியது , புராணத்தில் ரேவதி நாட்சத்திரக் கதை இப்படி எத்தனையோ உண்டு .
ஒருவரை ஒளி வடிவில் மாற்றி ‘மனோ வேக’த்தில் அனுப்ப முடியும்
. இதை சோம ரசம் பற்றிய பாடல்களிலும் காண முடிகிறது. தேவ என்ற சொல்லுக்கே ஒளி என்றுதான் பொருள். அதீத சக்தி படைத்தோர் இப்படி ஒளியாக மாறி, ‘மனோ வேக’த்தில் செல்லலாம். த்ரி லோக சஞ்சாரியான நாரதர் இப்படிச் செல்லுவதை பழைய திரைப்படங்களில் காட்டுகிறார்கள். இப்போது மேலை நாடுகளில் விஞ்ஞான புனைக்கதை படங்களிலும் வெளிக் கிரஹ வாசிகள் இப்படி திடீரென்று ஒளி ரூபத்தில் வந்து செல்வதைக் காட்டுகிறார்கள். இது வெள்ளைக்காரன் நம்மைக் ‘காப்பி’ (COPY CAT) அடித்து செய்யும் பல செயல்களில் ஒன்று.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஐன்ஸ்டைன் சொன்ன ஒளியின் வேகம் சரியே. அதை மிஞ்ச மனத்தால் முடியும். இதனால்தான் ராமாயண மஹாபாரதத்திலும் அதற்கு பல ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய ரிக் வேதத்திலும் மனோ வேகம் (SPEED OF MIND) என்ற சொல் வருகிறது. இதனால் எங்கும் நொடிப் பொழுதில் செல்ல முடியும்; நமக்கு அருகிலுள்ள நட்சத்திரம் பிராக்சிமா செண்டாரை (PROXIMA CENTAURI) . 4.25 ஒளி ஆண்டு தொலைவில் (LIGHT YEAR) உளது. இதற்குப் போய்வர 9 ஒளி ஆண்டுகள் தேவை. அதாவது ஒரு வினாடிக்கு 1,86,000 மைல் வேகத்தில் சென்றால் !
மனிதன் ஏறிய விண் கலமோ இதுவரை மணிக்கு 26000 மைல்கள்தான் சென்றுள்ளது. ஆனால் மனோ சக்தி உடையோர் ஒரு நொடிப்பொழுதில் சென்று திரும்பி விடலாம். அங்கு ஏதெனும் செய்ய நினைத்தால் ஒளி ரூபத்தில் சென்று செய்யலாம். இப்படி ஒளி ரூபத்தில் மாறும் கடவுளர், சோமம் என்னும் மூலிகை முதலியன பற்றி ரிக் வேதம் நெடுகிலும் காணலாம்.
XXX
டார்வின் கொள்கை சரியே !
பரிணாமக் கொள்கை (THEORY OF EVOLUTION BY CHARLES DARWIN) இயற்றிய சார்ல்ஸ் டார்வின் நீரின் மூலமே உயிர் வாழ்வன தோன்றின என்கிறார். நாம் சொல்லும் மச்சாவதாரம் முதல் கல்கி அவதாரம் வரை இந்த பரிணாம வளர்ச்சியைக் காண்கிறோம் . ரிக் வேதத்தில் சோமம் பற்றிய இந்தப் பாடலிலும் நீர்தான் உயிர்வாழ்வனவற்றின் மூலம் என்ற வரிகள் வருகின்றன .
ஆகவே ஐன்ஸ்டைன் 50 சதம் வெற்றி; டார்வின் 100 சதம் வெற்றி என்று நான் சொல்லுவேன்
PART 2
FROM RIGVEDA 9-97
இனி ரிக் வேதத்தின் சோமம் பற்றிய துதிக்குத் திரும்புவோம் . இதோ இராண்டாம் பகுதி:–
வேகமாக, சுகத்தைக் கொடுக்கும், உணவைப் பெருக்கும் மழையைக் கொட்டுக ; அன்புள்ள குழந்தைகளை நாடும் உறவினன் போல் உன் சொந்தக்காரனானான காற்றுகளுடன் வருக
நீ சுத்தமாகும்போது என் பாவ முடிச்சுக்களையும் அவிழ்த்து விடுக
பசுமை நிறமுள்ள நீ குதிரை போல கர்ஜிக்கிறாய் ;
நீ மனிதர்களின் நண்பன்; வருக
நீ நறுமணம் மிக்கவன்; ஆயிரம் தாரைகள் உடையோன்; போரில் கிடைக்கும் செல்வம் கிடைக்க பெருகுக .
ஒளிவீசும் சோமரசம் கட்டவிழ்த்து விடப்பட்ட குதிரை போல பாய் கின்றது
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஹெல்த்கேர் செப்டம்பர் 2021 இதழில் வெளியான கட்டுரை:
ஆக்ஸிஜன் அதிகமாக உள்ள காற்றை சுவாசிப்போம்!
ச.நாகராஜன்
இது கொரானாக் காலம்! பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த விஷயங்கள் உயிர் காக்கும் விஷயங்கள்! ஆகவே அனைவருக்கும் இதைக் கொண்டு செல்ல வேண்டும்.
உற்றார், உறவினர், நண்பர்கள், ஏனையோர் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சமூக இடைவெளி, கைகளைச் சுத்தம் செய்தல், முக கவசம் அணிதல், வெளியிலிருந்து வீட்டிற்குள் நுழைந்தவுடன் கை, கால்களைச் சுத்தம் செய்தல், வீட்டிற்குள் வரும் பொருள்களைச் சற்று வெயில் பட வைத்திருந்து பின்னர் உபயோகப்படுத்தல், கண்டிப்பாக இரண்டு கொரானா தடுப்பூசி போட்டுக் கொள்ளல் ஆகியவை பற்றி ஏராளமான செய்திகளைக் கேட்டு அவற்றை நடைமுறைப் படுத்தி வருகிறோம்.
நல்லது. ஆக்ஸிஜன் இல்லாமல் சுவாசம் திணற, ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை பற்றி நாடெங்கும் பேச்சாக இருக்கிறது.
ஆகவே ஆக்ஸிஜன் சுவாசம் பற்றிச் சிறிது தெரிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாக இருக்கிறது. இந்த ஆக்ஸிஜன் சுவாசம் என்பது மூளை ஆற்றலை வலுப்படுத்தவும், படைப்பாற்றலை ஊக்குவிக்கவும் கூட உகந்த ஒன்று என்பதால் இது காலம் காலமாக அறிவியல் அறிஞர்களால் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலத்தில் இதை ‘க்ரியேடிவ் ப்ரெத்’ (Creative Breath) என்கிறோம்.
சுவாசத்தை ஒழுங்கு படுத்தினால் அது மனதைச் சாந்தப் படுத்துகிறது. தெளிவான மனமே படைப்பாற்றலுக்கான அடிப்படைத் தளம். பிரச்சினைகளைத் தீர்க்கவும் தெளிவான மனம் வேண்டும். இதற்கான பல வழிகளில் முக்கியமான வழி ஆக்ஸிஜனை அதிகப்படுத்தும் சுவாச முறை.
அறிவியல் நோக்கில் மூளையில் உள்ள ஆக்ஸிஜன் அளவு (Levels of Oxygen in the brain) நியூரோ டிரான்ஸ்மிட்டரான செரோடோனின் அளவுடன் (tied to the levels of the neurotransmitter Serotonin) இணைக்கப்படுகிறது.
இந்த செரோடோனின் அளவை சுவாசத்தைக் கட்டுப்படுத்துவன் மூலம் ஒழுங்கு படுத்தலாம். அதிக அளவில் செரோடோனின் மூளையில் இருந்தால் எரிச்சல், மன அழுத்தம், மன இறுக்கம் உள்ளிட்டவற்றிற்கு நாம் உள்ளாவோம். ஆகவே இந்த செரோடோனின் அளவைக் குறைத்தால் மிகப் பெரிய அளவில் ஓய்வு கிடைக்கும். மூளையின் உள்ளுணர்வு ஆற்றல் கூடும்.நேரிலாச் செயல்கள் அதிக இசைவாகப் பாயும். (Nonlinear activities to flow more smoothly).
யோகா மூலம் பிராணாயாமம் செய்யும் போது ஏற்படும் நன்மைகளைப் பற்றி நன்கு அறிவோம். ஆகவே அது பற்றி மீண்டும் இங்கு குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.
செரோடோனின் அளவில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய, நாம் சுவாசிக்கும் காற்றின் மின் தரத்தைப் (Electrical Quality of the air we breath) பற்றி இங்கு பார்ப்போம்.
காற்றில் உள்ள பாஸிடிவ் அல்லது நெகடிவ் ஐயான்கள் (Positive or negative Ions in the air) தான் காற்றின் மின் தரத்தை அளக்க உதவுகிறது. நெகடிவ் ஐயான்ஸ் என்பது இடம் பெயர்ந்த எலக்ட்ரான்கள் ஆகும். அது அருகிலுள்ள மூலக்கூறுகளுடன் (molecules) தங்களை இணைத்துக் கொள்பவை. இவை நெகடிவாக சார்ஜ் செய்யப்படுகிறது. இந்த நெகடிவ் தன்மை தான் நம்மை வெகுவாகப் பாதிக்கிறது.
ஒரு நீர்வீழ்ச்சி அருகே – குற்றால நீர்வீழ்ச்சி என்று எடுத்துக் கொள்வோமே – நீங்கள் நின்று கொண்டிருந்தால், பச்சைப் பசுமையான காட்சிகள் இருக்க ஒரு உள்ளக் கிளர்ச்சி ஊட்டப்பட்ட உணர்வை அடைகிறீர்கள். இங்கு நெகடிவ் ஐயான் உள்ள காற்றின் விளைவுகளை நீங்கள் உணர்கிறீர்கள். சாதாரணமான நாம் வசிக்கும் ஊர்களில் சுத்தக் காற்று உள்ள இடங்களில் ஒரு கியூபிக் செண்டிமீட்டருக்கு 2000 முதல் 4000 வரை நெகடிவ் ஐயான்கள் உள்ளன.
இதே நெகடிவ் ஐயான்கள் அருமையான நீர்வீழ்ச்சியின் அருகில் ஒரு கியூபிக் செண்டிமீட்டருக்கு ஒரு லட்சம் நெகடிவ் ஐயான்கள் என்ற அளவுக்கு உயர்கிறது. நல்ல தரமான ஒரு நெடுஞ்சாலையில் இது ஒரு கியூபிக் செண்டிமீட்டருக்கு 100 என்ற அளவில் இருக்கிறது.
நெகடிவ் ஐயான்களை அதிகப்படுத்துவதானது மூளையில் உள்ள ஆல்பா மூளை அலைகளை அதிகப்படுத்தி மூளை வளத்தைக் (amplitude) கூட்டுகிறது.
இது வேறு விதமான உணர்வை உள்ளத்தில் ஏற்படுத்துகிறது. இந்த ஆல்பா அலைகள் பல்வேறு மூளைப் பகுதிகளுக்கும் பாய்வதன் மூலமாக தெளிவான மன நிலை ஏற்படுகிறது. நல்ல கவனக் குவிப்பு ஏற்படுகிறது. மொத்த உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.
ஆகவே கொரானா காலத்தில் மரம் அடர்ந்த வனப் பகுதி, நல்ல பூங்காக்கள், கடற்கரை, நீர்வீழ்ச்சி உள்ள இடங்களில் சென்று ஆக்ஸிஜனை அதிகம் பெறலாம், ஆனால் லாக் டவுன் என்று இருக்கும் போது வீட்டிலேயே மூன்று விதமான பயிற்சிகளை ஆக்ஸிஜன் அளவைக் கூட்ட நாம் பயன்படுத்தலாம்.
ஆழ்ந்து சுவாசத்தை உள்ளிழுத்துப் பின்னர் விடுவது. மூச்சை சில விநாடிகள் நிறுத்துவது மூளையை ஆக்ஸிஜன் மயமாக்குகிறது. தெளிவான மனத்தைத் தருகிறது. ஆல்பா மூளை அலைகளைப் பரவச் செய்கிறது.
இரண்டாவது பழைய கால நாசித் துவார யோகா முறையைப் பயன்படுத்துவது. இதை யோகா மாஸ்டரின் மூலமாக நன்கு கற்ற பின்னரே செய்ய வேண்டும். சூரிய நாடி, சந்திர நாடி (இடை, பிங்கலை பற்றி நன்கு அறிவோம்) ஆகிய இரு நாடிகளில் மாறி மாறி சுவாசத்தைச் செலுத்தலே இந்த வழி. இந்த வழியை தினமும் 10 நிமிடங்கள் மட்டும் செய்து வந்தால் அது அதிகப் பயனைத் தரும்.
அடுத்த வழி முடிந்த வரை சுவாசத்தை நிறுத்திப் பின்னர் விடுவது. இதை ஏராளமான கண்டுபிடிப்புகளைச் செய்த ஜப்பானிய அறிவியல் அறிஞரான யோஷிரோ நகாமட்ஸ் (Yoshiro Nakamats) பரிந்துரைக்கிறார்; ஏராளமான தனது கண்டுபிடிப்புகளுக்குக் காரணம் தான் நீச்சலின் போது நீரில் அமிழ்ந்து இருந்து மூச்சை நிறுத்திக் கொள்வது தான் என்பது அவரே கூறியுள்ள காரணம்.
ஆக்ஸிஜன் அளவைத் தெரிந்து கொள்ள ஆக்ஸி மீட்டரை வாங்கி வீட்டிலுள்ளோர் அனைவருக்கும் தேவைப்பட்டபோது பார்க்கலாம்.98, 99 என்ற அளவு வந்தால் சரி. ஆனால் 88 என்ற அளவு வந்தால் அது அபாயத்தின் அறிகுறி.85 என்று மீட்டர் அளவைக் காட்டினால் உடனடியாக மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டும். 80 என்று அளவு வந்தால் உடலின் முக்கிய அங்கங்கள் அபாயத்தில் இருக்கின்றன என்று அர்த்தம். இந்த Blood Oxygen level chartஐ ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு வீட்டில் வைத்துக் கொள்வது அவசியம். (ஆக்ஸி மீட்டரின் விலை ஆன் லைன் மூலமாகப் பெற சுமார் ரூ 899/)
ஆக்ஸிஜன் அளவை வீட்டில் அதிகரிக்க ஒரு சுலபமான வழி ஜன்னல் கதவுகளைத் திறந்து வைப்பது தான். ஜன்னல் அடைக்கப்பட்டால் காற்றோட்டம் இன்றி சுவாசக் கோளாறுகள் ஏற்படுவது நிச்சயமாகி விடும். காற்றோட்டமே இல்லாத வீடு என்றால் ஒரு ventஐ நிறுவலாம்.
மரங்கள் ஆக்ஸிஜனை நல்ல பெரிய அளவில் தருகின்றன. சுற்றுப்புறச் சூழல் மாசுகளை அகற்றுகின்றன. ஆகவே மரம் உள்ள வீடுகள் ஆக்ஸிஜனை அதிக அளவில் காற்றில் தருகின்றன. அமெரிக்க ஆய்வு ஒன்று, ஒவ்வொரு மரமும் 30000 டாலர் அதாவது சுமார் 2100000 ரூபாய் மதிப்புள்ள ஆக்ஸிஜனை உருவாக்குகிறது என்று கூறுகிறது.
வீட்டிற்குள் ஆக்ஸிஜன் அளவைக் கூட்ட இன்னொரு சுலபமான வழி அதற்கென உள்ள செடிகளை வளர்ப்பது தான். 1800 சதுர அடி உள்ள ஒரு வீட்டில் 14 முதல் 17 செடிகளை வைத்தால் அதன் பலன் அபாரமாக இருக்கும். என்ன செடிகளை வைப்பது? மணி ப்ளாண்ட் (Money Plant), சைனீஸ் எவர்க்ரீன்ஸ் (Chinese Evergreens) உள்ளிட்ட பல செடி வகைகளைச் சொல்லலாம். சந்தையில் சுலபமாகக் கிடைப்பவை இவை.
இதையெல்லாம் மீறி 6 லிட்டர் ஆக்ஸிஜன் கேன் இப்போது சந்தையில் விற்பனைக்கு வந்து விட்டது. (விலை சுமார் ரூ 455/).
தண்ணீர் கேனைப் பார்த்து விட்டோம், இதோ ஆக்ஸிஜன் கேனையும் பார்க்கப் போகிறோம். காலம் கலி காலம், இல்லை இல்லை, கொரானா காலம் அல்லவா!
மொத்தத்தில் ஆக்ஸிஜன் பற்றிய விழிப்புணர்வு அதிகமாகி வருவது வரவேற்க வேண்டிய ஒன்று தான்!
ஹெல்த்கேர் செப்டம்பர் 2021 இதழில் வெளியான கட்டுரை:
ஹெல்த்கேர் மருத்துவ மாத இதழ் வருட சந்தா ரூ 120/
திருநெல்வேலியிலிருந்து வெளி வருகிறது.
ஆசிரியர் R.C.ராஜா தொலைபேசி எண் 98431 57363
மின்னஞ்சல் முகவரி : editor@tamilhealthcare.com 10, Vaiyapurai nagar, Tirunelveli Town 627006 Tamilnadu, India
கொரானா காலத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
PART TWO OF SOMA- A HALLUCINATIVE DRUG OR ELIXIR?
I POSTED THE FIRST PART HERE YESTERDAY COVERING 30 OUT OF 58 MANTARS IN THE RIGVEDIC HYMN 9-97 ON PAVAMANA SOMA.
EINSTEIN’S PHYSICS TELLS US THAT THE FASTEST OBJECT IN THE UNIVERSE IS LIGHT WHICH TRAVELS AT THE SPEED OF 1,86,000 MILES PER SECOND. ACCORDING TO PHYSICS, WE CAN NEVER REACH THIS SPEED AND THE MAXIMUM SPEED WE HAVE REACHED SO FAR IS 3 LAKHS MILES PER HOUR (NOT SECOND). IF THERE IS A HUMAN BEING IN THE SPACE CRAFT THEN WE REACH ONLY 26,000 MILES PER HOUR. OUR NEAREST STAR IS 4-25 LIGHT YEARS AWAY. IT MEANS IF YOU HAVE A VEHICLE THAT TRAVELS AT THE SPEED OF LIGHT YOU CAN REACH THE STAR IN 4-25 YEARS.
BUT HINDUS IN THE RIG VEDA SAYS THE FASTEST IS ‘MIND’. BUT ONE MAY ASK CAN I TRAVEL IN THE ‘MIND VEHICLE’? ‘YES’ SAYS RIG VEDIC RISHIS/SEERS. THE MIND CHANGES A PERSON INTO LIGHT AND THEN YOU CAN TRAVEL A LOT MORE FASTER! WE SEE THIS IN SCIENCE FICTION MOVIES OR TV SERIALS. SOMEONE APPEARS SUDDENLY IN THE FORM OF LIGHT FROM NOWHERE AND SAYS HE OR SHE IS FROM ANOTHER PALNET. THIS IS ACTUALLY FROM THE RIG VEDA. (We believe we can travel to any place in the universe by thought. Your thought will transfer your energy into light and again with the speed of thought you will be there in a fraction of a second. This is repeated umpteen times in Puranic mythology; Deva means light)
DARWIN SHOWED US THE EVOLUTION BEGAN IN WATER/ FISH. WE HAVE MATSYA/FISH AVATARA AS THE FIRST INCARNATION OF VISNHU. NOW RIG VEDA SAYS EVERY LIVING BEING CAME FROM WATER.
WE WILL LOOK AT THE LAST 28 MANTRAS IN THE HYMN RV.9-97. IT IS SUNG BY SEVERAL SEERS. ALL THE NAMES ARE IN THE INDEX OF RIG VEDA.
Soma Filter in Indus Valley seals
First let us discuss whether Einstein is right or Rig Vedic seers are right.
Einstein is PARTLY right in saying light is the fastest. But can we beat it with anything else?
‘Yes’ says the seers. They say Soma (plant) becomes light in one mantra. And in another mantra the rishis/ seers praise its speed as Thought Speed.
What we get from it is one can become light and travels faster than light.
Is it believable?
Yes. If I wanted to travel to the nearest star Proxima centauri, I use my thought and travel. You can also travel to New York from London in a second and comeback in the next second mentally.
But has anyone used it? Hindus use it every day at least three times a day. When a Brahmin does Gayatri mantra thrice a day he invites Gayatri from a faroff mountain and install her in his heart. When he finishes his prayer, he says ‘Good Bye, Mother! Please go back to your mountain abode’. She is nearer and farther to you!
A Hindu does a ceremony for departed souls over 90 times a year called Tarpanam or Titi. He invokes the dead people from his father side and mother side. He asks them to come via sky path/route and sit on the Dharba grass spread in front of him. Throughout the Rig Veda we see the same method. All rishis invoke all gods on sacred Dharba grass!
When the TARPANAM OR TITI ceremony is over in 15 minutes or so, they address the departed souls ‘please go by your same sky route to your abode’.
This shows Hindus belief of bringing anyone from any far away place in a second in prayer. I do invoke my forefathers on sacred Dharba grass and invoke Goddess Gayatri thrice a day from her mountain abode. If you believe in it, you believe Einstein is only partly right. He doesn’t know the Mind speed, which is used from Rig Vedic days to Puranic days (Mano Veham).
Falcon in Indus Valley and Rigvedic Fire altar
NOW BACK TO HYMN 9-97
The race of cattle is your gift; when born you made Surya/ sun rich with brightness.
You are bright; you follow the Path of Order. You are Life Eternal.
You are a Heavenly Eagle; you look down from sky. You poured streams at the God’s Feast.
Our hymns and Trushtup songs unite in soma.
Flow for our welfare;
You generate abundance;
Singer of true songs;
Ever watchful;
He by whose dear help men gain all their wishes shall yield the precious ‘madhu’ to a victor.
Soma the bounteous helped us with his lustre.
Our ancient rishis who knew the foot steps found light and stole the cattle from the mountain.
(This is repeated hundreds of times. It may be that miserly merchants Pani/ Phoenicians stole and hid all their treasures in the mountain caves and Vedic Hindus got them back by fighting )
DARWIN THEORY OF EVOLUTION
In the first vault of heaven loud roared the Ocean, King of all being, Generating Creatures.
Soma , Child of Waters chose the Gods , performed that great achievement.
He gave strength to Indra and Generated Light into Surya/ Sun
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சோம ரசம் பற்றி அபூர்வ தகவல்கள் (Post No.10,100)- part 1
ரிக் வேத கால இந்துக்கள் அபூர்வ மூலிகையான சோம லதையை (லதா= கொடி) ப் பிழிந்து ஒவ்வொரு நாளும் மூன்று முறை இறைவனுக்குப் படைத்தனர். இது ஒரு விதமான ஆனந்தம், சக்தி, உற்சாகம் அளிக்கும் மூலிகை.
வெள்ளைக்காரர்கள் நமது மதத்துக்கு எதிரியானதாலும், நமது மதத்தை நம்பாததாலும், நமது மதத்தைப் பின்பற்றாததாலும் அவர்களுக்கு இது என்னவென்றே தெரியவில்லை. ஆகையால் இதை மயக்கம் ஊட்டும் போதை மருந்து என்று எழுதிவிட்டனர். இதை R TH GRIFFITH கிரிப்பித் வெளியிட்ட ரிக் வேத ஆங்கில மொழிபெயர்ப்பின் முதல் பக்கத்திலேயே காணலாம்.
2000 ஆண்டுகளுக்கு முன்னர் சங்கத் தமிழ் பாடிய 450 புலவர்களுக்கே சோம மூலிகையைப் பற்றித் தெரியாது. யூபம் , வேதம், கங்கை, அமிர்தம், இமயம் என்னும் ஸம்ஸ்க்ருதச் சொற்களை அப்படியே பயன்படுத்தும் புறநானூற்றில் கூட சோமம் என்ற மூலிகை பற்றிய குறிப்பு கிடையாது. 2000 ஆண்டுகளுக்கு முன்னரே காணாமற்போன இந்த அற்புத மூலிகை பற்றி வெள்ளைக்காரன் உளறிக்கொட்டி கிளறி மூடியதில் வியப்பொன்றுமில்லை . ஆனால் பிற் கால பாண்டியர் கல்வெட்டுகளில் இதைப் பயன்படுத்தியவர்களை மனோ சுத்த சோமயாஜி — மன தைச் சுத்தப்படுத்தும் சோமயாகம் செய்தவர் என்று புகழ்கிறது காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் சோம யாகம் செய்தவர்களுக்கு அரசுக்கு நிகரான வெண் குடை கொடுக்கப்படும் செய்தியை மொழிகிறார்.
ரிக் வேதத்தில் பல நூற்றுக் கணக்கான இடங்களில் சோம மூலிகை பற்றிய மந்திரங்கள் உள்ளன. பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்ட ரிக் வேதத்தில்- 6000 ஆண்டுப் பழமையான ரிக் வேதத்தில் – ஒன்பதாவது மண்டலம் முழுதும் ‘பவமான சோம’ என்ற கடவுளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது . சோம என்பதற்கு பல பொருள் உண்டு. சந்திரன் என்ற பொருளும், மலைகளில் விளையும் சோமம் என்ற மூலிகைக்கும் அதிகமாகப் பயன்படும் சொல். ரிக் வேதத்தில் 9-97 துதியில் உள்ள 58 மந்திரங்களின் மூலம் சோமத்தின் ரஹஸ்யத்தைக் காண்போம் .
அதற்கு முன்பாக வெள்ளைக்காரன் கட்டுக்கதைதையைத் தவிடு பொடியாக்கும் சில விஷயங்களை சொல்கி றேன் .
ஸோமரசத்தை எல்லாக் கடவுளரின் பெயரிலும் ஒரு நாளைக்கு மூன்று முறை தீயில் ஆஹுதி செய்தார்கள்.
காலையில் சூரிய உதயத்துக்கு முன்னால் இப்படிச் செய்தார்கள்.
அந்த மூலிகையைக் கடவுள் என்று சொல்லி ஆடிப்பபாடி மந்திரங்களை முழக்கி கற்கள் இடையே வைத்து பிழிந்து ஆட்டு ரோமத்தால் ஆன சல்லடை வழியே வடிகட்டி மரத்தால் ஆன வட்டில்கள், பாண்டங்களில் சேகரித்தார்கள்.
சிந்து சமவெளியில் இதுவரை என்ன என்றே தெரியாத ஒரு சாதனம் காளை மாட்டு முத்திரைகளுக்கு அடியே உள்ளது. இது சோமரச சாதனம் என்பது பெரும்பாலோரின் கருத்து.
இப்போது நமக்கு நாமே சில தடைகளை எழுப்பி விடை காண்போம்.
இருபதுக்கும் மேலான இடங்களில் சோம மூலிகையை பருந்தும் கழுகும் கொண்டுவருவதாக ரிக் வேதம் முழுதும் புலவர்கள் பாடுகின்றனர். இதற்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை. சந்திரனையும் கருடனையும் அமிர்தம் தொடர்புபடுத்தி புராணக் கதைகள் பேசுகின்றன. அவற்றுடன் தொடர்புடையன போலும் !
போதை ஊட்டும் பொருளானால் அதை ராத்திரியில் குடித்துவிட்டு கும்மாளம் போடும் வெள்ளைக்காரர்களை நாம் இன்றும் பார்க்கிறோம். எவனாவது அதி காலையில் நதியில் குளித்துவிட்டு அதைச் சாப்பிடுவானா? அதுவும் மந்திரம் சொல்லி பெரும்பகுதியை கடவுளுக்கு என்று சொல்லி தீயில் ஊற்றி வீணடிப்பானா? சிந்தித்துப் பாருங்கள்.
.’இதுதான் சோமம்’, ‘அதுதான் சோமம்’, என்று 150 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய வெள்ளைக்காரப் பயல்கள் அதை ஏன் இன்று பயிரிடக்கூடாது? கொக்கோ கோலா போல ஒரு மணிக்கு கோடி டாலர் சம்பாதிக்கும் தொழிலிலை ஏன் செய்யவில்லை? இன்று போதை மருந்து விற்பனை நிமிடத்துக்கு பலகோடி டாலர் என்று நாம் பத்திரிகையில் படிக்கிறோமே . ஏன் சோமத்தைப் பயிரிடவில்லை?இது எல்லாவற்றுக்கும் ஒரே பதில்:-
சோமம் ஒரு அபூர்வ குளிகை ; ஒரு அதிசய மூலிகை. அது 2000 ஆண்டுகளுக்கு முன்னரே அழிந்துவிட்டது. அது என்ன என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அதன் வருணனை ரிக் வேதத்தில் முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை உள்ளது . அது உடலுக்கு சக்தி, உற்சாகம், நீண்ட ஆயுள் தரும்; அதை சாப்பிடுவோருக்கு வீரம் மிக்க புதல்வர்கள் பிறப்பார்கள்; அவர்களுக்கு ஏராளமான செல்வம் கிட்டும்; மனம் சுத்தம் அடையும் என்பதை பின்வ ரும் 58 மந்திரங்கள் காட்டுகின்றன . அப்படியே 58 மந்திரங்களையும் கொடுக்காமல் BULLET POINTS புல்லட் பாயிண்டுகளில் தருகிறேன்.
ரிக் வேதம் – 9-97- 1 முதல் 58 வரை
பல ரிஷிகள் பாடிய கவிதை RV.9-97; மொத்தம் 58 மந்திரங்கள் / செய்யுட்கள்
நீ மஹான், நீ கவிஞன்; நீ மங்கள போர்க் கவசங்களை அணிந்தவன்;
நீ துதிகளைப் போற்றுபவன்; நீ எல்லாம் அறிந்தவன்.
கடவுள் விருந்தில் விழித்திருப்பவன் .
புகழ் உள்ளவர் இடையே மிக்க புகழ் படைத்தவன்
புவியில் பிறந்தவன்; அன்புக்குரியவன்
சோமனைப் பாடுவோம் ; மகத்தான செல்வம் பெற சோமனைப் பாடுவோம்
வழிபடுவோருக்கு மகத்தான செல்வம் கிடைக்க அவன் இந்திரனிடம் செல்கிறான்.
பசுமை நிறத்துடனும் சுத்தமானவனாகவும் பெருகுக
இன்பம் ஊட்டும் உன் ரசம், இந்திரனை போருக்குத் தயார் செய்யட்டும்
(ரிக் வேதம் முழுதும் போர், பகைவன், பசு, குதிரை, செல்வம், தங்கம், வீரப் பு தல்வர்கள் , வீடு ; குகைகளில் மறைத்து வைக்கப்பட்ட பசுக்களை மீட்டல், தர்ப்பைப் புல்லை பரத்துதல், சோம ரசம் ஆகியன ஆயிரக்கணக்கான இடங்களில் வருகிறது ; இவைகளில் சொல்லப்படும் இந்தச் சொற்களுக்கு மறைமுக அர்த்தம் வேறு !!)
சோமன் காட்டுப் பன்றி போல உறுமுகிறான்
பகைவரை மிரட்டும் வாத்தியங்களை நண்பர்கள் வாசிக்கிறார்கள்
சோமன் தனி வழியில் செல்கிறான். அவனை முந்துவதற்கு எவருமிலர்.
கூரிய கொம்புள்ளவன் ; ஒளி வீசுவோன்.
பகலில் தங்க நிற ஒளி வீசுவான்; இரவில் வெள்ளி நிற ஒளி உமிழ்வான்
ஆற்றலின் அரசன்; அரக்கர்களை வீழ்த்துகிறான்.
இந்திரனுக்கு இன்பம் தந்து குஷிப் படுத்துகிறான்
இனிப்பானவன்; சுத்தப் படுத்துபவன்.
பருவத்துக்குப் பொருத்தம் உடைய காந்தி/ஒளி உடையவன்
அவனை பத்து சகோதரிகள் (விரல்கள்) களைந்து அனுப்புகிறார்கள்
பசுக்களைத் தொடர்ந்து செல்லும் காளை போல சோமன் விண்ணிலும் மண்ணிலும் ஓடுகிறான்.
அவனுடைய சப்தம் இந்திரன் சப்தம் போல (இடி முழக்கம்) முழங்குகிறது
சுவைக்க இனியன் ; பாலைச் சொரிபவன் ;
ஒளி நிற ஆடை அணிந்த சோமனே , மேகங்களை உன் ஆயுதங்களால் வசப்படுத்து.
நாங்கள் நல்ல வழிகளையும் செல்வத்தையும் பெற உதவி செய்
அரக்கர்களை தண்டாயுதத்தால் அடி .
(இதுவரை 16 மந்திரங்களின் சுருக்கம் கண்டோம்; மேலும் தொடர்வோம்)