TWO RARE VEDIC HYMNS TO CURE SICKNESS- Part 1(Post No.7418)

Research article Written by London Swaminathan

Uploaded in London on  – 4 JANUARY 2020

Post No.7418

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

நோய் தீர்க்கும் 2 அற்புத வேத மந்திரங்கள் -Part 1 (Post No.7417)

ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 2 (Post No.7416)

Written by S Nagarajan

Uploaded in London on  – 4 JANUARY 2020

Post No.7416

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

ச.நாகராஜன்

வேதாந்த தேசிகர் இயற்றியுள்ள நூல்கள் பற்றிய விவரங்களின் தொடர்ச்சி இங்கு தரப்படுகிறது.

  • ஸ்ரீ தயா சதகம்

108 சம்ஸ்கிருத பாடல்கள் அடங்கியுள்ள நூல் ஸ்ரீ தயா சதகம். சதகம் என்பது 100 பாடல்கள் அடங்கியுள்ளதைக் குறிக்கும்.

வெங்கடேஸ்வரனின் தயை ஒரு தேவதையாக உருவகப்படுத்திப் பாடப்பட்ட பாடல்கள் இவை. இந்த சதகம் பத்துப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பத்துப் பாடல்களும் சம்ஸ்கிருதத்தின் ஒவ்வொரு சந்த வகையைக் கொண்டு அமைந்துள்ளது.

82 முதல் 90 முடிய உள்ள பாடல்களில் பத்து அவதாரங்கள் சொல்லப்படுகிறது.

பாடல் 104இல் ‘வேதாந்த தேசிக பதே வினிவேஷ்ய பாலம்’ என்று வருவதால், ‘வெங்கேஸ்வரப் பெருமாளே சிறுவனான எனக்கு வேதாந்த தேசிகர் என்று கூறி அருளி என்னை இந்த தயா சதகம் பாடச் செய்திருக்கிறார்’ என்று கூறி இருப்பது தெரிய வருகிறது. வெங்கடேஸ்வரனும் ரங்கநாதனும் ஒருவரே என்பதால் ரங்கநாதர் தான் அவருக்கு வேதாந்த தேசிகர் என்ற பட்டத்தை அருளியுள்ளார் என்று பொதுவாக சொல்லப்படுவதும் சரி தான் என்று உணரலாம்.

ஏராளமான சுவையான தகவல்கள் இறைவனின் அருளுக்குப் பாத்திரமானவர்களைப் பற்றி தயா சதகத்தில் படித்து மகிழலாம்.

  • ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத்

இதில் 51 சம்ஸ்கிருத செய்யுள்கள் உள்ளன. காஞ்சியில் எழுந்தருளியுள்ள காஞ்சி வரதராஜப் பெருமாளை இதில் தேசிகர் போற்றித் துதிக்கிறார்.

 தூப்புலில் அவதரித்து காஞ்சியில் வாழ்ந்தவரே தேசிகர் என்பதால் இயல்பாகவே வரதராஜர் மீது வேதாந்ததேசிகர் அளப்பரிய பக்தி கொண்டிருந்ததை சுலபமாக உணரலாம்.

இதில் பல்வேறு வாகனங்களை தேசிகர் சுவையாகக் குறிப்பிடுகிறார். பிரம்மோத்ஸவத்தில் வரும் வாகனங்கள், தேர், பல்லக்கு ஆகியவற்றை குறிப்பிடும் இந்த பஞ்சாசத்தின் இறுதி ஸ்லோகத்தில் இதைப்  படிப்பவர்கள் அல்லது கேட்பவர்கள் அனைவருக்கும் கல்ப விருட்சம் தரும் அனைத்தும் கையில் வந்து சேரும் என்று உறுதிபடக் கூறி அருள்கிறார்.

  • வைராக்ய பஞ்சகம்

ஆறு சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியுள்ள வைராக்ய பஞ்சகத்தில் முதல் ஐந்து ஸ்லோகங்களால் உலகில் மதிக்கப்படும் செல்வத்தை மதிக்காமல் இறைவனின் அருள் ஒன்றையே செல்வம் என மதிக்கும் வேதாந்த தேசிகரின் அருள் உள்ளம் புலப்படுகிறது. ஆறாவதாக அமையும் இறுதி ஸ்லோகத்தில் எனது தந்தையால் சம்பாதித்த பொருள் எதுவும் எனக்கில்லை; நானும் சம்பாதிக்கவில்லை. ஆனால் எனக்கு என் தாத்தாவான பிரம்மாவால் தானமாகத் (பைதாமஹம் தானம்) தரப்பட்டுள்ள ஹஸ்தகிரியில் வீற்று அருளும் வரதராஜரின் அருள் உள்ளது என்று உருக்கமாகக் குறிப்பிடுகிறார்.

அத்வைத ஆசாரியரான வித்யாரண்யர் காலத்தில் வாழ்ந்தவர் வேதாந்த தேசிகர். இருவரும் சிறுவயதுத் தோழர்கள். காஞ்சியில் எளிமையாக வேதாந்த தேசிகர் வாழ்ந்து வருவதை அறிந்த வித்யாரண்யர் ஹரிஹரர், புக்கர் நிறுவிய விஜயநகர சாம்ராஜ்யத்திற்கு வருகை புரியுமாறு அரசாங்க அழைப்பை அனுப்பினார். ஹரிஹரரும் புக்கரும் விஜயநகர சாம்ராஜ்யத்தை நிறுவக் காரணகர்த்தரே வித்யாரண்யர் தான். ஆனால் தேசிகர் அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. உலகியல் செல்வங்களின் மீது அவர் பற்றுக் கொள்ளாததே இதன் காரணம்.

  • சரணாகதி தீபிகா

சம்ஸ்கிருதத்தில் அமைந்துள்ள இதில் 59 செய்யுள்கள் உள்ளன. சரணாகதி ப்ரபத்தி என்பது வைஷ்ணவ தர்மத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். சரணாகதியே முக்திக்கான வழி.

மடப்பள்ளியாச்சான் என்பவர் ஸ்ரீ ராமானுஜருக்கு உணவு சமைக்கும் சமையல் வேலையப் பார்த்து வந்தவர். அவர் ராமானுஜரின் அருளால் வைஷ்ணவ சம்பிரதாயம் அனைத்தையும் நன்கு தெரிந்து கொண்டார். இது சரணாகதியின் மூலம் கிடைக்கப்பெற்ற ஒன்று. இந்த சரணாகதி தத்துவத்தை இவரிடமிருந்து கிடாம்பி ராமானுஜாசாரியர் கற்றுக் கொள்ள அவரிடமிருந்து கிடாம்பி அப்புல்லர் கற்றுக் கொண்டார். அப்புல்லரின் தேசிகரின் சொந்த தாய்மாமன் ஆவார்.

விளக்கொளி எம்பெருமானை நோக்கி கூறப்படும் இந்த ஸ்லோகங்கள் சரணாகதி தத்துவம் முழுவதையும் விளக்குகிறது.

தேசிகரின் கடைசி ஸ்லோகம் அருமையாக முடிகிறது இப்படி:

இந்த சரணாகதி தீபிகா என்னும் விளக்கின் திரி தேசிகரின்(தாஸ) மனம். அளப்பரிய பக்தியே (ஸ்நேகம்) எண்ணெய். இதைக் கொள்பவர் எம்பெருமானே. அவரே விஷயம். அவர் உலகெங்கும் சூழ்ந்துள்ள அஞ்ஞானமென்னும் காரிருளைப் போக்குவார்.

‘அன்பே தகளியா’ என்று தொடங்கும் பாடல் உள்ளிட்ட ஆழ்வார்கள் ஏற்றியுள்ள விளக்குப் பாடல்களுடன் இதை ஒப்பிட்டு மகிழலாம்.

வேதாந்த தேசிகரின் பாடல்களில் பக்திச் சுவையுடன் கவி நயம்,பொருள் நயம், சொல் நயம் உள்ளிட்ட அனைத்தும் துள்ளிக் குதிக்கும் என்பதை அதைப் படிப்போர் உணர்வர்.

****

வட – தென் கொரியாக்கள் இணையுமா? (Post No.7415)




Written by London Swaminathan

Uploaded in London on  – 3 JANUARY 2020

Post No.7415

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

கொரியாக்கள் இணையுமா?

நான் 15-3-1992ல் தினமணி எழுதிய தென் கொரியா – வட கொரியா இணைப்பின் சாத்தியக்கூறுகள்
பற்றிய கட்டுரையைக் கீழே தந்துள்ளேன். 2018ல் கூட இணைப்பின் சாத்தியத்தைக்
கொள் கை அளவில் ஒப்புக் கொண்டனர். உலகில் மூன்றாவது உலக மஹா யுத்தம் போன்ற ஒரு போர் வந்தால்தான் இது போன்ற இணைப்புகள் நடைபெறும். கட்டுரை பழையதானாலும் கோரிய பிரிவினை பற்றிய பின்னணியை அறிய உதவும் .

Korean reunification (Korean: 통일, 統一) refers to the potential reunification of North Korea and South Korea into a single Koreansovereign state. The process towards reunification was started by the June 15th North–South Joint Declaration in June 2000, and was reaffirmed by the Panmunjom Declaration for Peace, Prosperity and Unification of the Korean Peninsula in April 2018. In the Panmunjom Declaration, the two countries agreed to work towards a peaceful reunification of Korea in the future, and the joint statement of the United States President Donald Trump and North Korean Chairman Kim Jong-un at the Singapore Summit in June 2018.

Mark Twain ‘Damnedest Liar in USA!’ (Post No.7414)

Mark Twain ‘Damnedest Liar in USA!’ (Post No.7414)    

Compiled  by London Swaminathan Uploaded in London on  – 3 JANUARY 2020 Post No.7414 contact – swami_48@yahoo.com pictures are taken from various sources; thanks.     Mark Twain,according to one story, was returning from a trip to the Maine woods. Chumming up in the smoking car with a home spun New Englander occupying the same seat, Mark said, Stranger, it is the closed season for fishing up here , but just between you and me, I have got two hundred pounds of the finest rock bass, out there in the baggage of the car, that you have laid your eyes on.   Was! Drawled the Marks , that’s interesting, new acquaintance ,but dy’e know  who i am? Not guilty , Mark replied, who are you ? Wall,came the reply, I am the State Game Warden Quoth Mark, Now doesn’t that beat the Dutch? Say , d’ye know who I am, Warden? I am the damnedest liar in the United States!   Xxxx   Daniel Webster liked to commune with plain people whom he encountered. On one of his fishing excursions he wanted to try a certain brook and he drove to a house of a certain Mr Baker whom he knew nearby,and asked permission to leave his horse a few hours. Mr Baker volunteered to go with Webster and show him just where the people usually fished at the brook. The old man pointed out the spot. The ground was very muddy. Mr Webster sank in half way up his leg. Said he, Rather miry here, Mr Baker.   Mr Baker answered, yes, I know, that is the worst on’t.   The mosquitoes began to bite annoyingly. With the hand that was not holding the fishing rod  webster was busy all the time slapping and scratching. Said webster, these mosquitoes are pretty thick and hungry. Baker answered, Yes I know it. That is the worst on’t. Now the heat in the damp, low ground became intense. Mr Webster wiped his forehead and rested. The he said, It is very hot down in these bushes, Mr Baker. And  Baker answered, Yes I know it. That is the worst on’t. Webster resumed his fishing and an after an hour’s struggle with the heat, the bushes, the mire, the mosquitoes, Webster said , There seem to be no fish here, Mr Baker . Came the answer, Yes I know it. That is the worst on’t. Xxx subham xxx  
  

கொடு,பகிர், கொடு, பகிர்- அதர்வ வேதம் (Post No.7413)


Written by London Swaminathan

Uploaded in London on  – 3 JANUARY 2020

Post No.7413

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 1 (Post No.7412)

                                                             ச.நாகராஜன்                           


Written by S Nagarajan

Uploaded in London on  – 3 JANUARY 2020

Post No.7412

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

Vakataka Queen Prabhavati Gupta (Post No.7411)

Gupta Coins
Vakataka Queen Prabhavati Gupta (Post  No.7411)  

Written by London Swaminathan Uploaded in London on  – 2 JANUARY 2020 Post No.7411 contact – swami_48@yahoo.com pictures are taken from various sources; thanks.     Prabhavati Gupta was the daughter of the Gupta emperor Chanragupta II Vikramaditya 376-414 CE and the Agra Makishi or Chief Queen of King Rudrasena II of the Vakataka Dynasty ruling over wide regions of the Deccan.   Rudrasena seems to have died before the close of the fourth century. He probably left three sons Divakarasena Damodarasena and Pravarasena .   Divakarasena remained the Yuvaraja or Crown Prince while his mother ruled the country at least for thirteen years. It is believed that the sons of Rudrasena were minors at the time of their father’s death. Prabhavati Devi ruled the kingdom  as regent on behalf of the minor Yuvaraja Divakarasena.   There is no evidence to show that Divakarasena ever ascended the throne as Maharaja. In a later inscription dated the nineteenth regnal year of her son Pravarasena, she is called the mother of Maharajah Damodarasena and Pravarasena and is said to have been more than hundred years old. Prabhavati’s death does not appear to have taken place long before 455 CE, which is the date of the death of her brother Emperor Kumara Gupta I.   A charter of Prabhavati Gupta was issued from the feet of the god Ramagiriswamin, identified with the deity at Ramtek near Nagpur, probably on the occasion of her visit to the holy temple on pilgrimage. In it she has been described as a devotee of Lord Vishnu and is credited with the gotra or lineage Dharana and the family designation Gupta of her father. Her husband is known to have belonged to Vishnu vridda gotra. Thus Prabhavati’ s marriage didn’t apparently involve  the usual change of gotra. There is evidence to show that this was not essential  in a popular form of ancient marriage, possibly owing to the want of sampradana ( ceremonial offering).   —subham—       Sent

நீண்ட காலம் உலகை ஆண்ட ராணி யார்? (Post No.7410)

Written by London Swaminathan

Uploaded in London on  – 2 JANUARY 2020

Post No.7410

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

2019ஆம் ஆண்டின் அதிசய கண்டுபிடிப்புகள்! (Post No.7409)

Written by S NAGARAJAN

Uploaded in London on  – 2 JANUARY 2020

Post No.7409

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

பாக்யா 1-1-2020 இதழில் அறிவியல் துளிகள் பகுதியில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு இருபத்தி மூன்றாம் கட்டுரை -அத்தியாயம் 439

2019ஆம் ஆண்டின் அதிசய புதிய கண்டுபிடிப்புகள்!

ச.நாகராஜன்

2019ஆம் ஆண்டு முடிந்து விட்ட தருணத்தில் உலகில் உள்ள அனைத்து அறிவியல் இதழ்களும் இந்த ஆண்டின் அதிசய கண்டுபிடிப்புகள் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியுள்ளன. அடேயப்பா என்று பிரமித்துப் போகிறோம். குறிப்பாக டைம் மற்றும் லைவ் ஸயின்ஸ் போன்ற இதழ்கள் நூற்றுக் கணக்கான புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்துள்ளன. சிலவற்றை இங்கு பார்த்து பிரமிப்போம்.

காற்றிலிருந்து குடிநீர்

தண்ணீர் பற்றாக்குறை பெருகி வரும் இந்நாளில் வாட்டர்ஜென் (Watergen) என்ற இஸ்ரேல் நாட்டுக் கம்பெனி தயாரித்துள்ள ‘ஜென்னி’ (Genny) என்ற இயந்திரம் ஒரு அதிசயக் கண்டுபிடிப்பு . சாதாரணமாக நாம் அன்றாடம் பார்க்கும் வாட்டர்கூலர் போல இருக்கும் இது, தானே சுற்றுப்புறத்தில் இருக்கும் காற்றிலிருந்து நீரை எடுத்து, பருகும் அளவிற்குச் சுத்தம் செய்து தந்து விடும். ஒரு நாளைக்கு 7 காலன் தண்ணீரை (11 லிட்டர்) இது தரும். இது இயங்க மின்சக்தியோ அல்லது சூரிய ஆற்றலோ தேவைப்படும். இதன் விலை 1500 டாலர்! (ஒரு டாலரின் இந்திய மதிப்பு சுமார் ரூ 70)

ஸ்மார்ட் ஹலோ (SmartHalo)

பெருநகரங்களில் வழி தெரியாமல் அங்குமிங்கும் அலையாதபடிக்கு இப்போது உதவிக்கு வருவது மொபைல் போன். அதில் இருக்கும் படத்தைப் பார்த்தவாறே வண்டியை ஓட்டினால் போகும் இடம் தெரியும் என்றாலும் கூட அபாயம் அதிகம். சட்டப்படி வண்டி ஓட்டும்போது அதை உபயோகிப்பது தவறு. ஆக இப்படி புது இடம் செல்வோருக்கு வழிகாட்டி ஸ்மார்ட்ஹலோ2. இந்த சாதனம் ஸ்மார்ட்போனிலிருந்து செல்ல வேண்டிய திசையை எல் இ டி (LED) ஒளியாக மாற்றி பைக் அல்லது ஸ்கூட்டரின் ஹாண்டில்பாரில் அடுத்து எந்த திசையில் போக வேண்டும் என்று அம்புக்குறி இட்டுக் காட்டும். சைக்கிளிலும் இதை பொருத்திக் கொள்ளலாம். எது சுலபமான வழி, எதில் சென்றால் நேரம் குறைவாக இருக்கும் என்பது உட்பட இது அனைத்தையும் ஆராய்ச்சி செய்து வழி காட்டும்!

மூக்குக்கண்ணாடியில் பாட்டுக் கேளுங்கள் (Bose Frame)

 பார்வைக்காக கண்ணாடி அணிந்தாலும் சரி, ஃபேஷனுக்காக சன் க்ளாஸ் அணிந்தாலும் சரி, இனி அதன் மூலம் ஒலியையும் கேட்க முடியும். போஸ் ஃப்ரேம்ஸ் (Bose Frames) என்ற பெயருள்ள இந்த சாதனம் நெற்றியின் இரு புறங்களிலும் பொருத்திக் கொள்ளக் கூடிய ஒரு சிறிய ஆடியோ சாதனத்தைக் கொண்டிருக்கும், அது அதை அணிபவருக்கும் மட்டும் கேட்கும்படியாக பாட்டு உள்ளிட்ட அனைத்தையும் ஒலிக்கும். இனி ஹெட் போனை மாட்ட வேண்டிய அவசியமோ அலது போட்காஸ்டோ தேவையில்லை. இந்த சன்கிளாஸை உங்களது ஸ்மார்ட்போனுடன் ப்ளூடூத் வழியாக இணைத்து விடலாம். வேண்டுமென்றால் உங்களுக்குத் தேவையான அனைத்துச் செய்திகள்/ குறிப்புகள் ஆகியவற்றை அததற்குறிய ‘ஆப்ஸின்’ மூலமாக ஒலியாகப் பெறலாம். ஆக இது நடந்தாலும், படுத்தாலும், வண்டி ஓட்டினாலும் உங்களுடன் பேசிக் கொண்டே இருக்கும் ஒரு அரிய துணையாக அமையும்!

பாதுகாப்பான மேக்-அப்பிற்கு சூப்பர்கூப்

 கண்களைச் சுற்றியுள்ள தோல் பகுதி மிகவும் மெல்லியதானது; வயதானதை உடனே காட்டும் தன்மை கொண்டது; தோல் கான்ஸர் சுலபமாக வருவதற்கான இடமும் இது தான் என்பதால் 10 சதவிகிதம் பேருக்கு தோல் கான்ஸர் இங்கு ஏற்படுகிறது. ஆகவே மேக்-அப் போடும் போது பலர் எரிச்சலூட்டும் சாதனங்கள் பலவற்றைப் போட்டுக் கொள்வதில்லை. இந்தப் பாதுகாப்பற்ற தன்மையை நீக்கி உதவிக்கு வரும் சூப்பர் மேக்-அப் சாதனம் சூப்பர்கூப் (Supergoop). சோதனைச்சாலையில் பரிசோதிக்கப்பட்டு பாதுகாப்பானது என்ற சர்டிபிகேட்டைப் பெற்றது இது. சூரிய ஒளி கண்களைப் பாதிக்காமல் இருக்க சன்ஸ்க்ரீனை மருத்துவர்கள் பரிந்துரைப்பர். ஆனால் இனி கண்களைச் சுற்றி சூப்பர்கூப்பைப் போட்டாலே போதும், அழகு கூடும், அபாயம் குறையும்.

பேசும் ஹியரிங் எய்ட்

காது கேளாதோருக்கு ஒரு தர்மசங்கடம் ஹியரிங் எய்டை அணியலாமா வேண்டாமா என்பது தான்! ஸ்டார்கி ஹியரிங் டெக்னாலஜிஸ் (Starkey Hearing Technologies) என்ற கம்பெனி ஒரு புது ஹியரிங் எய்டைக் கண்டுபிடித்திருக்கிறது.  இது செயற்கை அறிவு எனப்படும் ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ஒரு கருவி. இதில் உள்ள சென்ஸர்கள் உங்களுக்குப் பிடித்தமான இசைப்பாடல்களைக் கேட்க வைக்கும். நீங்கள் கேள்வி கேட்டால் மொபைல் போன் பதில் சொல்வது போல கேள்விக்கு உரிய பதிலை அளிக்கும். அன்னிய மொழியில் ஒருவர் பேசுவதை உங்கள் மொழியில் மொழியாக்கம் செய்து தரும். தனியாக இருக்கும் வயதான மூத்தவர்களுக்கு இது ஒரு அரிய துணை. ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் பேசுகிறீர்கள் உள்ளிட்ட பல தகவல்களை உங்களுக்கு இது அளிக்கும். சாதாரணமாகக் காது கேட்பவர்களை விட இன்னும் அதிகத் துல்லியமாகக் கேட்பதற்கான ஒரே வழி இந்த ஹியரிங் எய்ட் தான்! இது தான் எங்கள் கம்பெனியின் சூப்பர் கண்டுபிடிப்பு, அதிகமாக விற்பதும் கூட என்கிறார் இந்தக் கம்பெனியின் தொழில் நுட்ப நிபுணரான் அச்சின் பௌமிக்.

இன்னும் இது போல 2019இன் சிறந்த 95 கண்டுபிடிப்புகளின் விவரத்தை பிரபல டைம் இதழ் படத்துடன் தந்துள்ளது. தனது நிருபர்கள், ஆன் லைன் தகவல் சேகரிப்பு ஆகியவற்றின் மூலமாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் உலகின் தலை சிறந்த முதல் நூறு கண்டுபிடிப்புகளை இந்த இதழ் அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய உலகின் உள்ளே செல்ல இருக்கிறோம் என்பதையே இந்த அறிவியல் அதிசயங்கள் எடுத்துரைக்கின்றன!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

நமது நாட்டின் முதல் பயிரியலாளர் (Botanist) ஒரு பெண்மணி என்பதைப் பலரும் அறிந்திருக்க முடியாது. கேரளாவைச் சேர்ந்த ஜானகி அம்மாள் இந்தப் பெருமையைப் பெறுகின்ற அரிய பெண்மணி. 1897ஆம் ஆண்டு 19 சகோதர, சகோதரிகளைக் கொண்ட ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்த இவர் தைரியமாக தாவரவியலைத் (Botany) தேர்வு செய்து மதறாஸ் பிரஸிடென்ஸி காலேஜில் படிக்க ஆரம்பித்து பெரும் நிபுணரானார். போர்பர் ஸ்காலர்ஷிப் என்று ஒரு அரிய உதவிதொகை கிடைக்கவே முதன் முதலாக அமெரிக்காவிற்குச் சென்ற தாவரவியல் பெண்மணி என்ற பெயரும் இவருக்கு கிடைத்தது. அங்கு பல அரிய கண்டுபிடிப்புகளைச் செய்த இவரை அனைவரும் பாராட்டினர்; இவர் பெயர் மக்னோலியா கோபஸ் ஜானகி அம்மாள் (Magnlolia Kobus Janaki Ammal)  என்றே ஒரு புதிய தாவரத்திற்குச் சூட்டப்பட்டது.

ஒரு முறை எல்லிஸ் ஐலண்டிற்குச் சென்ற இவரை உள்ளே நுழைய அங்குள்ள அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ஆனால் இவரது நீண்ட சுருண்ட கேசத்தையும் உடையையும் பார்த்து அசந்து போன அவர்கள் நீங்கள் ஒரு இந்திய ராஜகுமாரியா என்று கேட்டனர். அதற்குத் தன் புன்னகையால் பதில் அளித்த இவரை உள்ளே வர அனுமதித்தனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பல்வேறு வித தாவர இனங்களை இனம் கண்டு வகை பிரித்த இவர் உலகின் முதல் இந்திய தாவர இயல் விஞ்ஞானி எனக் கொண்டாடப்பட்டார். இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு இவரது அரிய திறமையை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று விரும்பி அவரை உடனே இந்தியா வருமாறு வேண்ட ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் அவர் இந்தியா வந்தார். கரும்புச் சாகுபடியில் பல நல்ல முன்னேற்றங்களைச் செய்து காட்டினார்.

இந்தியாவில் உள்ள அரிய தாவர வகைகளை வெளி நாட்டு விஞ்ஞானிகள் இங்கு வந்து எடுத்துச் சென்று தங்கள் நாட்டில் ஆராய்ச்சி செய்து வந்தனர். (இன்றும் கூடப் பெரும்பாலும் இதே நிலை தான்!) எந்த இந்திய தாவரமானாலும் சரி வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் சோதனைச் சாலைகளே அதற்கான செய்திகளைத் தரும். அதை மாற்ற விரும்பி ஒரு பெரும் தகவல் களஞ்சியத்தை இவர் உருவாக்கினார். 87ஆம் வயதில் மறைந்த இவர் பற்றி பெரும்பாலானோருக்குத் தெரியாது என்பதே உண்மை! ஆனால் வெளிநாட்டுப் பத்திரிகைகள் இன்றளவும் இவரைப் பற்றிப் புகழ்ந்து கட்டுரைகள் எழுதி வருகின்றன!

tags – ஜானகி அம்மாள், 2019 கண்டுபிடிப்புகள்

***

Botanist Janaki Ammal