Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
கொங்குமண்டல சதகம்
தொண்டைமான் வரலாறு!
ச.நாகராஜன்
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தென்கரை நாட்டில் மூவனூர்
என்று ஒரு ஊர் உள்ளது.அங்கு தொண்டைமான் என்ற விருது பெற்ற கீர்த்திமான் ஒருவர் வாழ்ந்து
வந்ததாக வரலாறு கூறுகிறது.
அவரை ‘வளர்கடாவைக் காதறுத்த பஹதூர் தொண்டைமான்’ என்று கூறிப் புகழ்ந்தும் தெரிய வருகிறது!
ஒரு சமயம் சங்ககிரி துர்க்கத்தில் நவாபைப் பார்க்கப்
பலரும் காத்திருந்தனர்.
பல நாட்கள் கழிந்தன. நவாபைக் காணும் வழியே இல்லை.
அங்கு அரசகுமாரன் வளர்த்து வந்த அருமையான செம்மறிக்
கடா ஒன்று இருந்தது.
அதைப் பிடித்து அதன் இரு காதுகளையும் அறுத்து விட்டான்
காத்திருந்த ஒருவன்.
அவனைப் பிடித்து நவாபின் முன் நிறுத்தினர்.
நவாபிடம் அவன், “ஐயா! தங்களைப் பார்க்க பல நாட்கள்
காத்திருந்தேன். ஆனால் காண முடியவில்லை. இப்படிச் செய்தாலாவது தங்களைக் காணும் வாய்ப்பு கிடைக்கும்; குறைகளைச் சொல்லலாம்
என்று இப்படிப்பட்ட செயலைச் செய்து விட்டேன்” என்றான்.
நவாப் அவனது தைரியமான யோசனையையும்
செய்கையையும் கண்டு வியந்தார்.
‘வளர்கடாவைக் காதறுத்த பஹதூர்
தொண்டைமான்’ என்று அவனைக்
கூப்பிட்டார்.
அன்று முதல் அவனுக்கு அந்தப்
பெயர் வந்தது. ஆனால் அவனது இயற்பெயர் யாருக்கும் தெரியவில்லை. அவனது சந்ததியார் மூலனூர்
வட்டத்தில் இன்னும் இருக்கிறார்கள்.
இதே போல கொங்கு மண்டலத்தைச்
சேர்ந்த கீழ்ப்பூந்துறை நாட்டில் இருந்த உபநாடுகளில் ஒன்றான பருத்தியபள்ளி நாட்டில்
ஒரு வாலிபன் தொண்டைமான் என்னும் அரசன் சேனையில் சேர்ந்தான். பகைவன் மேல் போரெடுத்துச்
சென்றான். வெற்றியும் பெற்றான்.
அந்தத் தொண்டைமான் அரசன் அவனுக்குத்
தன் பெயரையும் மாலையையும் விருதாக அளித்தான்.
அதனால் அன்று முதல் அவன் தொண்டைமான் என்று அழைக்கப்பட்டான்.
மல்லசமுத்திரத்தில் ஸ்ரீ சோழீசர் ஆலயத்துக்கு உரியவர்களாக அவனது சந்ததியார் இருந்து வருகின்றனர்.
அவர்கள் நவாபிடம் பெரும் அதிகாரமும் செல்வாக்கும் பெற்றிருந்தனர்.
அவர்களுக்குரிய இடங்களுக்குப் போகும்போது ஒரு வெண்கலத்
துடும்பு (ஒரு வகையான பறை) ஒருவன் இவர்கள் முன்னே அடித்துச் செல்வான். அது நவாப் கொடுத்தது
என்று சொல்லப்படுகிறது.
தொண்டைமான் என்ற பெயரையும் அவர்கள் தொடர்ந்து வைத்துக்
கொண்டிருக்கிறார்கள்.
கலியுகம் 4735 ஸ்ரீ முக வருடத்தில் வீழிய குலத்தவரான
இவர்களின் மரபினர், மல்லைச் சோழீசர் வருக்கக் கோவை என்னும் பிரபந்தம் கேட்டுள்ளனர்.
இந்த வரலாற்றை கொங்குமண்டல சதகம் தனது 71ஆம் பாடலில்
விரித்துரைக்கிறது.
பாடல் :
பண்டைய நாளிலொன் னார்பஞ்சு போலப் பறந்தகலத்
திண்டிநல் நாட்டிய காளையை நோக்கியச் செம்பியனுந்
தொண்டைமா னென்றுந் தனதுநற் பேருஞ் சிறப்புமிக
வண்டரை மீதினிற் பெற்றவ னுங்கொங்கு மண்டலமே
பாடலின் பொருள் : முன் நாளில் பகைவர்களைப் பஞ்சாகப்
பறக்கும் படி வென்ற வீரனை நோக்கித் தனது மாலையையும் தொண்டைமான் என்னும் தனது பெயரையும்
விருதாக செம்பியனால் கொடுக்கப் பெற்றவன் வாழ்கின்றதும் கொங்கு மண்டலம் என்பதாம்.
Pictures are taken
from various sources; beware of copyright rules; don’t use them without
permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 11,000.
Diplomats
Anecdotes
According to
diplomatic procedure, the representative of a foreign country, before being
actually presented to the President, always exchanges with him the text
of the speeches.
On one such occasion this formality never reached its
ordinary climax. Instead of stiltedly repeating the already familiar words,
President Roosevelt greeted the foreign diplomat with,
Now, Mr Minister, I have read your remarks and you have read
mine, so suppose we dispense with the speeches and have a friendly chat.
Xxx
Toast in Water
After the Russo Japanese War, Admiral Togo, commander of the victorious Japanese fleet, visited the United States and was cordially received. A state dinner was tendered him at which it fell to the lot of William Jennings Fryan, then Secretary of State to propose a toast to Togo. Bryan, a staunch prohibitionist, would not touch champagne , and it was feared that some diplomatic impasse may arise from the difficulty.
Bryan, however, rose at the proper time, picked up his glass
of water and said,
Admiral Togo has won a great victory on water, therefore I
will toast him in water. When Admiral Togo wins a victory on champagne, I will
toast him in champagne.
Xxxx
When Lady Baldwin of Bewdley visited Manhattan with her
husband, Stanley Baldwin, last summer, she wanted to see the General Motors
Futurama at New York Worlds Fair, but did not want to stand in line. So Earl
Baldwin phoned the British consulate; the consulate called the British embassy
in Washington; the embassy cabled the Foreign Office in London. The foreign
office appealed to ambassador Joe Kennedy . Resourceful Joe sent a cable direct
to General Motors Building at the Fair. A press agent there called lady Baldwin
at the Waldorf (cost 5 cents) , told her to come right out, he would see that
she was well taken care of .
Xxxx
I will cut off
heads of all Frenchmen!
Henry VIII, in a spell of temper against his rival Francis I,
King of France, commissioned a clergy man named Bonner to deliver an insolent
and threatening message to the French court. The clergyman realised that it
would be a risky job and protested that he could never hope to get back to
England alive if he dared to talk to the French king in the manner Henry wished.
Don’t worry about that, said the monarch soothingly. If the
King of France puts you to death, I will cut off the heads of all Frenchmen I
can get my hands on.
That may be, Your Majesty, replied Bonner, tapping his head,
but of all the heads in England, there is none that fits my shoulders as well
as this one does.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
Common Sanskrit
words are used.
1. –9
letters – bizarre, curious, fanciful
6. -9—ocean of mercy, compassion
8. – 6–enemy
of Rama
10. – 5–ambrosia, nectar of Devas
11. –5–
bathing
12. – 9–one
of the forms Shiva; also deity in charge of north east in Hinduism
XXX
1. – 6
letters –friend of Krishna in the opposite camp; a Gita is in his name
2. – 8–
a seer who married Sukanya; she remained faithful to him even when Asvins
tempted her
9. – 4–mother,
different, many, also coin
3. -7—one
of the names in Vishnu Sahasranama ; worshipped by three samans of Sama Veda
4. –5–
Gopi who stood foremost in showing her devotion. common feminine name
Pictures are taken
from various sources; beware of copyright rules; don’t use them without
permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 11,000.
தமிழர்களின் ஆலோசனைக் குழு (சிலப்பதிகாரம் சொல்லும் எண்பேராயம்)
கரணத்தியலாவர்- கணக்கர்
கருமக்காரர்- செயலர்
கனகச் சுற்றம் – கருவூல ஆதிகாரி
கடைக் காப்பாளர்- அரண்மனைக் காவலர்
நகர மாந்தர் – முதியோர்
படைத்தலைவர் – காலாட்படைத் தளபதி
யானைவீரர் – யானைப்படையின் தலைவர்
இவுளி மறவர் – குதிரைப்படையின் தலைவர்
Xxx
செக்ஸ்
SEX விஷயத்தில்
எண் எட்டு
அஷ்டாங்க மைதுனம்
1.பெண்களை நினைத்தல்
2.பெண்கள் பற்றிப் பிதற்றல் (கனவிலும்
நனவிலும்)
3.அவளுடன் விளையாடல்
4.அவளைச் சந்தித்தல்
5.அவளுடன் ரஹசியம் பேசுதல் (டெலிபோனிலோ,
நேரிலோ),
6.அவளை அனுபவிப்பதாக நினைத்துப்
பார்த்தல்,
7.அதற்காக முயற்சித்தல்,
8.ஏனைய கடமைகளை அறவே மறத்தல்
இதைச் சொல்லும் சம்ஸ்க்ருத ஸ்லோகம்–
ஸ்மரணம் கீர்த்தனம் கேலிஹி ப்ரேக்ஷணம்
குஹ்ய பாஷணம்
சங்கல்போ அத்யவசாயஸ்ச க்ரியா
நிஷ்பத்திரேவ ச
Xxx
எட்டுத் தொகை
சங்க கால இலக்கியம் 18 நூல்களைக் கொண்டது. சுமார் 30,000
வரிகள். இதில் இரண்டு தொகுப்புகள் உள. மிகப் பழைய படல்களின் தொகுப்பு எட்டுத் தொகை
என்றும், பின்னர் வந்தவை பத்துப் பாட்டு என்றும்
தொகுக்கப்பட்டுள்ளது.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
அக்டோபர் 2. 151வது காந்தி ஜயந்தி.
(150வது ஜயந்தி ஆண்டு விழா!) இன்றையை மாலைமலர் (2-10-2019) இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
இது.
அண்ணலே! இன்னும் ஒரு முறை வருக!!
ச.நாகராஜன்
“வாழ்க நீ எம்மான்! இந்த வையத்து
நாட்டில் எல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை
தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்றதாம் ஓர் பாரத
தேசம் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா!
நீ வாழ்க, வாழ்க!!”
என்று மஹாகவி பாரதியார் போற்றிய
பெரும் மஹாத்மாவின் பிறந்த நாளில் அவருக்கு நெஞ்சார்ந்த அஞ்சலியைச் செலுத்தி அவரது
வாழ்க்கையை பிரமிப்புடன் பார்க்கிறோம்.
ஒரே நாளில் அவர் மஹாத்மாவாக உருவாகி விடவில்லை. கத்தியை விடக் கூர்மையான
சத்தியத்தின் வழி நடந்து தன்னை இறுதி வரை சோதனை செய்து கொண்டே இருந்தார்; உயர்த்திக்
கொண்டே இருந்தார். அதனால் தான் அவர் மஹாத்மா ஆனார்.
சிறு சிறு விஷயங்களில் கூட அக்கறை
காட்டியவர் அவர்; அந்தக் கவனமே அவரை பிரம்மாண்டமான பிரச்சினைகளையும் அனாயாசமாகத் தீர்த்து
வைக்க உதவியது; அவர் ஒரு சொல் சொன்னால் நாடே அதைக் கேட்டது. உலகமே வியந்தது.
அவரது வாழ்க்கை முழுவதும் ஆயிரக்கணக்கான சம்பவங்கள்
அவரை அப்படியே உள்ளபடி படம் பிடித்துக் காட்டின என்றால் அது மிகையல்ல.
உப்பு சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கவிருந்த
தருணம். சபர்மதி ஆசிரமத்தில் நேரம் தவறாமை என்பது நிச்சயமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டிய
பழக்கமாக இருந்தது. பிரார்த்தனைக்கான மணி அடிக்கப்பட்டவுடன் பிரார்த்தனைக் கூடத்தின்
கதவுகள் மூடப்பட்டு விடும். யார் பிரார்த்தனைக்கு வரவில்லையோ அவர்கள் ‘வராதவர்’ பட்டியலில் சேர்க்கப்பட்டு விடுவார்கள்.
ஒரு நாள் காந்திஜி பிரார்த்தனைக்கூடத்தில்
நுழையும் தருணத்தில் பிரார்த்தனைக்கான மணி அடித்தது. உடலின் பெரும்பகுதியும் ஒரு காலும்
பிரார்த்தனைக் கூடத்தில் இருக்க ஒரு கால் மட்டும் பிரார்த்தனைக் கூடத்தின் வெளியில்
இருந்தது.
கதவருகே இருந்த தொண்டர் அவரை உள்ளே வரவிட்டு கதவை மூடினார்.
பிரார்த்தனை முடியும் சமயத்தில்
காந்திஜி கூறினார் :” நான் இன்று சரியான நேரத்திற்கு
வராதவனாகி விட்டேன். எனது உடலின் பெரும்பகுதியும் ஒரு காலும் உள்ளே இருந்தாலும் இன்னொரு
கால் வெளியே தான் இருந்தது. ஆகவே கதவருகே இருந்த தொண்டர் என்னை உள்ளே வர அனுமதித்திருக்கக்
கூடாது. என்னையும் வெளியே தான் அனுப்பி இருக்க வேண்டும். என்றாலும் எனக்காக உங்களில்
பலரும் காத்திருப்பீர்கள் என்ற எண்ணத்தால் நெகிழ்ந்து போய் நான் வந்து விட்டேன். ஆனால்
இப்படிப்பட்ட சலுகை நோயாளி மற்றும் அவருடன் கூட வருபவருக்குத் தான் காண்பிக்கலாமே தவிர இதரர்களுக்கு காண்பிக்கப்பட
கூடாது; அப்படி ஒரு சலுகையை யாரும் எதிர்பார்க்கவும் கூடாது”.
காந்திஜியின் சுய சோதனை அனைவரையும்
வியக்க வைத்தது. அதில் தனக்குத் தானே அவர் வழங்கிக் கொண்ட தீர்ப்பு அனைவரையும் பிரமிக்க
வைத்தது.
அன்றிலிருந்து பிரார்த்தனை மூடப்பட்ட கதவுகளுடன் கூடிய பிரார்த்தனை கூடத்தில்
நடக்காமல் திறந்த வெளியில் நடக்க ஆரம்பித்தது. அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் பிரார்த்தனைக்கு
வரலாயினர்.
இது மஹாபாரதத்தில் நடந்த ‘ஒரு
கால் வெளியே, ஒரு கால் உள்ளே’ சம்பவத்தை நினைவு படுத்துகிறது.
இந்த சம்பவம் தமிழக தலங்களில்
ஒன்றான திருமழபாடியில் நடந்ததாகத் திருமழபாடி புராணம் விவரிக்கிறது.
சம்பவம் இது தான்:
பாரதப் போர் முடிந்தவுடன் தர்மபுத்திரர்
ராஜசூய யாகம் நடத்த விரும்பினார். அந்த யாகத்திற்கு (மனிதனும் மிருகமும் இணைந்த) புருஷாமிருகம்
வருகை தந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய அவர் பீமனைப் புருஷாமிருகத்தை அழைத்து
வரப் பணித்தார்.
மழபாடியில் புருஷாமிருகத்தைக் காணாத பீமன் கீலமலையில் புருஷாமிருகத்தைக் கண்டான். ஜெயித்து அழைத்து வருதலே
மரபாதலால், யுத்தத்திற்கு புருஷாமிருகத்தை அவன் அழைத்தான்.
பீமன் யுத்தம் செய்யவே விரும்புகிறான் என்பதை நன்கு அறிந்த மிருகம், “ நான் மழபாடியை நோக்கி ஓடுவேன். என்னைப் பிடிப்பதற்குத் துரத்தி வர வேண்டும். நான் மழபாடியின் எல்லையைத் தாண்டுவதற்குள் என்னைப் பிடித்து விட்டால் நீ என்னை வென்றவன் ஆவாய்” என்று சொல்லி விட்டு ஓடத் தொடங்கியது.
பீமனும் துரத்தினான். ஆனால் அவன் புருஷாமிருகத்தைப் பிடித்த போது பீமனின் ஒரு கால் மழபாடி எல்லையிலும் இன்னொரு கால் எல்லைக்கு அப்பாலும் இருந்தது.
பீமன் தான் வென்றதாகக் கூற புருஷாமிருகமோ அதை மறுத்தது. வழக்கைத் தீர்த்து வைக்க தர்மபுத்திரரே உகந்தவர் என்று இருவரும் கருதி தர்மரிடம் வந்தனர்.
அனைத்தையும் கேட்ட தர்மபுத்திரர்,” புறவெல்லையில் காலை வைத்த பீமனின் ஒருகாலை நீ வெட்டி எடுத்துக் கொள்ளலாம்” என்று புருஷாமிருகத்திடம் கூறித் தீர்ப்பை அளித்தார்.
தர்மரின் நடு நிலைமையைக் கண்டு வியந்த புருஷாமிருகம் பீமனை வெட்டாமல் விட்டது.அனைவரும் மகிழ்ந்தனர்.
காந்திஜியின் பிரார்த்தனைகூட சம்பவமும் அதையொட்டி
இருக்கிறதல்லவா! தன் ஒரு கால் வெளியே இருந்ததால் தன்னை உள்ளே அனுமதித்திருக்கக் கூடாது
என்று அவர் பேசிய பேச்சு தர்மபுத்திரரை நினைவு படுத்துகிறது.
இதே போல ஒவ்வொரு சிறு விஷயத்திலும் அவர் நடுவு நிலைமையுடன்
செயல் பட்டதை அவர் வாழ்நாள் நெடுக நடந்த நிகழ்வுகள் பலவும் சுட்டிக் காட்டும். அவரைப் பற்றி நம்மிடையே இன்று இருக்கும் The Collected Works of
Mahatma Gandhi – இன் நூறு தொகுதிகளில்
அவற்றை நாம் காணலாம்.
தனி மனித ஒழுக்கத்தையும் சுயநலமின்றித் தியாகம் செய்து
அனைவருடனும் பகிர்ந்து உண்ணும் சமூக வாழ்க்கையையும் அவர் வற்புறுத்தி வந்தார்.
சிறு குழந்தைகளுடன் பேசுவதில் அவருக்கு மிகுந்த உற்சாகம்.
தேசத்தின் பெரும் தலைவர்களும், நிபுணர்களும் ஒரு புறம் நின்று காத்துக் கிடக்க அவர்
குழந்தைகளுக்கு தாராளமாக முன்னுரிமை அளித்தார். குழந்தைகளும் இதை உணர்ந்து தாராளமாக
சலுகைகளை எடுத்துக் கொண்டன. பொறாமையுடனும், எரிச்சலுடனும், சில சமயம் சந்தோஷத்துடனும்
இந்தக் காட்சியைத் தலைவர்கள் பார்ப்பது சகஜமானது.
தன்னைத் திருத்திக் கொள்வதில் தயங்காதவர் அவர். காந்திஜிக்கு
அவ்வளவாக ஹிந்தி மொழி வராது. தான் பேசும் ஹிந்தி சரியானபடி இல்லை என்பதை உணர்ந்த அவர்
ராஜஸ்தானைச் சேர்ந்த தனது தொண்டரான ராம் நாராயண் சௌத்ரியிடம் தான் பேசும் போது ஏற்படும்
பிழைகளை உடனுக்குடன் சொல்லித் திருத்த வேண்டும் என்றார். இதற்காக யார் வந்தாலும், எங்கே
போனாலும் அவர் தன்னுடனேயே இருக்க வேண்டும் என்றார். அத்துடன் மட்டுமன்றி தனது பிழை
ஹிந்தி இலக்கணத்தின் எந்த விதியின் படி பிழை என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்றார்.
நடந்து செல்லும் போது பெரிய தலைவர்கள் சற்றுத் தள்ளிச்
செல்ல காந்திஜியின் மிக அருகில் செல்வது அவருக்குத் தயக்கமாக இருந்தது. அதை விட சங்கடம்
அவரது தவறுகளை அனைவருக்கும் முன்பாக உரக்கச் சொல்ல வேண்டி இருந்தது தான். ‘அவமானமான’ இந்த வேலை அவருக்குப் பிடிக்கவே இல்லை. காந்திஜியின் தவறுகளை
அவ்வப்பொழுது உடனுக்குடன் சுட்டிக் காட்டி வந்தவருக்குச் சில சமயம் எந்த இலக்கண விதியின்
படி அது தவறு என்பது தெரியவில்லை; முழித்தார், விழித்தார். காந்திஜி நகைத்தார். ஒருவழியாக
அந்தப் பணியிலிருந்து அவர் ‘விடுதலை’ பெற்றார்.
பிரார்த்தனை கூட்டத்தில் ஒரு நாள் அன்று தான் பார்த்த கையெழுத்து
சிறந்தது என்று கூறி அதை
எழுதியவரைப் புகழ்ந்தார் அவர்.தன் கையெழுத்து சரியே இல்லை என்று ஆதங்கப்பட்ட அவர் அழகாக,
குண்டு குண்டாக இடம் விட்டு எழுதப்படும் கையெழுத்தல்லவா சிறந்தது என்றார்.
இப்படி ஆயிரக்கணக்கான விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். எதிலும் நேர்த்தி, எப்பொழுதும் நேர்த்தி!
கொல்லத்தில் அவர் ஆற்றிய சொற்பொழிவில் அவர் இப்படிக்
கூறினார்:
“ஹிந்து மதத்தின் எல்லா உபநிஷத்துக்களும் மற்ற எல்லா
வேத நூல்களும் எரிந்து சாம்பலாகி விடுவதாக வைத்துக் கொள்வோம். அப்போது ஈசோபநிஷத்தின்
முதல் சுலோகம் மாத்திரம் ஹிந்துக்களின் மனத்தில் பதிந்திருந்தால் ஹிந்து மதம் எக்காலத்திலும்
அழிவின்றித் திகழும்.
சுலோகத்தின் சாரம் : இந்த உலகத்தில் உள்ள எல்லாவற்றிலும்
சிருஷ்டிகர்த்தாவான இறைவன் வியாபித்துள்ளார். எனவே, எல்லாவற்றையும் தியாகம் செய்து
அவருக்கு அர்ப்பணம் செய்யுங்கள். பிறகு உங்களுக்குக் கிடைக்கும் ஒரு பங்கை மாத்திரம்
உபயோகப்படுத்திக் கொண்டு அனுபவியுங்கள். யாருடைய உடைமைகளுக்கும் ஒரு காலத்திலும் பேராசைப்
படாதீர்கள்.”
கொல்லத்தில் காந்திஜி நிகழ்த்திய இந்தச் சொற்பொழிவை
விரிவாக 30-1-1937 ஹரிஜன் இதழ் தாங்கி வந்தது.
யார் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, எனக்குள்
ஒரு குரல் கேட்கிறது. அதையே கடவுள் என நான் நம்புகிறேன். அந்தக் குரலின் வழி காட்டுதலில்
நான் இயங்குகிறேன் என்று வெளிப்படையாக அந்தக் ‘கடவுளின் புத்திரர்’ கூறினார்.
பகுத்தறிவும் இறை நம்பிக்கையையும் ஒப்பிட்ட அவர்
பகுத்தறிவைத் தாண்டியது இறை நம்பிக்கை. அதை பகுத்தறிவின் அளவுகோலால் ஒருபோதும் அளக்க
முடியாது என்றார்.
காந்திஜியைப் போற்றி எழுதப்பட்ட பல்லாயிரக்கணக்கான கட்டுரைகளும்
புத்தகங்களும் இன்று காணக் கிடைக்கின்றன. ஆனால் அவரைப் பற்றி உலகின் பெரும் விஞ்ஞானியான்
ஐன்ஸ்டீன் கூறியது குறிப்பிடத்தகுந்தது.
அவர் கூறினார் : “இப்படி ஒரு மனிதர் ரத்தம் சதையுடன் இந்த பூமியில்
நடமாடினார் என்பதை இனி வரும் தலைமுறையினர் அரிதாகவே நம்புவர்” (“Generations to come will scarce believe that such a
one as this ever in flesh and blood walked upon this earth.”)
ஈசோபநிடதம் முழுவதையும் தன் கைப்பட எழுதிய அவர் அது
கூறும் 125 வயது வரை வாழ விரும்பினார்; வெளிப்படையாகவும் அப்படிச் சொன்னார்.
வாழ்வை ஒரு தெய்வீக ஒளி என்று அவர் நம்பினார்; அதை
அப்படியே தன்னைச் சந்தித்த வில் டியூரண்ட் என்னும் அறிஞரிடமும் சொன்னார்.
ஏன் 125 வயது வாழ விரும்புகிறீர்கள் என்று ஒரு அமெரிக்க
பத்திரிகையாளர் அவரைக் கேட்ட போது, “தொண்டு செய்ய” என்று பதில் கூறி அனைவரையும் பிரமிக்க வைத்தார்.(ஹரிஜன்
6-10-1946 இதழ்)
ஆனால் 1947 ஜூனில் அவர் தனது கருத்தை மாற்றிக் கொண்டார்.
“இன்று உருவாகி வரும் நான் காணும் இந்தியாவில் எனக்கு
இடமில்லை. எனவே 125 வயது வரையில் வாழும் நம்பிக்கையை
நான் கைவிட்டு விட்டேன். நான் இன்னும் ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் இருக்கலாம்.” என்று அவர் கூறியதை 8-6-1947 ஹரிஜன் இதழில் காண
முடிகிறது.
அனைவரிடமும்
அன்பு, அனைவருக்கும் தொண்டு செய்தல் என்ற கொள்கையை வலியுறுத்திய அவர் அது கட்டுப்பாடுடன்
கூடிய தனி மனித ஒழுக்கத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றார். இந்தியா அந்த திசையில்
வழி நடக்கவில்லையோ என அவருக்கு ஐயம் ஏற்பட்டது போலும்!
அந்த ஐயத்தைப் போக்கி ஒளி மிகுந்த இந்தியாவை உருவாக்க
வேண்டிய பொறுப்பில் ஒவ்வொரு இந்தியரும் இன்று இருக்கிறோம்.
அவர் இறப்பதற்குச் சில தினங்கள் முன்பு மனு காந்தி
அவரை மஹாத்மாஜி என்று அழைக்கவே, உடனே அவர், “அப்படிக் கூறாதே! இறக்கும் போது என் வாயிலிருந்து
ராம நாமம் வந்தால் அப்போது, அப்போது மட்டுமே என்னை மஹாத்மா என்று அழை” என்றார்.
சுடப்பட்டு அவர் ஆவி பிரியும் போது அவர் ‘ஹே, ராம்,
ராம்’ என்று கூற அவர் இறைவனுடன் இணைந்தார்.
‘இப்போது அவரை மஹாத்மா என்று கூறலாமா!’ என்று விசும்பியவாறே கேட்டார் மனு காந்தி.
இன்று நம்மைச்
சூழ்ந்துள்ள பல பிரச்சினைகளைத் தீர்க்கும் விதமாக அவர் வழி காட்டியபடி தனி மனித ஒழுக்கத்தையும்
கட்டுப்பாட்டையும் கடைப்பிடிப்பதே நமக்கு உள்ள ஒரே வழி!
அண்ணலின் பிறந்த நாளில் அவர் வழி நடக்க உறுதி பூண்டு
நாம் வேண்டுவது இது தான் : “அண்ணலே! மீண்டும் இங்கு வந்து தோன்றுக! எங்களை வழி நடத்திச்
செல்க”
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
Agastya in Kallanai, Tamil NaduAgastya in London V and A Museum
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t
use them without permission; this is a non- commercial, educational blog;
posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously.
Average hits per day for both the blogs 11,000.
ச.நாகராஜன்
நாம் தெரிந்து கொள்ள
வேண்டிய ஏராளமான விஷயங்கள் உள்ளன.
இந்தியர்களைக் குருட்டு
நம்பிக்கைக்காரர்கள் என்று சொல்லும் மேலை உலகப் பகுத்தறிவு வாதிகளும் அவர்களுக்கு ஜால்ரா
போடும் நமது ‘பகுத்தறிவுச் செல்வங்களும்’ தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் அமெரிக்க, ரஷிய
விண்வெளி வீரர்கள் விண்வெளி ஏகு முன் என்ன செய்கிறார்கள் என்பதையே.
கீழே உள்ள சுவையான
செய்தியைப் பார்ப்போம்
*
நாஸாவின் ஜெட் புரபல்ஷன்
லாபரட்டரி ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் ரேஞ்சர் திட்டத்தை உருவாக்கியபோது சந்திரனைச்
சுற்றவும் அதை போட்டோ எடுக்கவும் விண்கலங்களை அனுப்பியது.
என்றாலும் கூட ரேஞ்சர்
திட்டமானது தொடர் திட்டமாக ஆகி விட்டது; ஏனெனில் முதலில் ஏவப்பட்ட ஆறு கலங்களும் தோல்வியில்
முடிந்தன.
ஏழாவது முறை வெற்றியை
அடைந்தனர். அல்லது தோல்வியை அடையவில்லை. இதற்கான காரணம் என்ன என்று யோசித்துப் பார்த்ததில்
கண்ட்ரோல் அறையில் ஒருவர் ஜாடி நிறைய கடலையை வைத்துக் கொண்டு அனைவருக்கும் கொடுத்துக்
கொண்டிருந்தார். அதிலிருந்து விண்வெளியில் அமெரிக்கர்கள் விண்வெளியில் வெற்றிகரமாகச் செல்வதற்கான காரணம் கண்ட்ரோல்
அறையில் உள்ள கடலையினால் தான் என்று சொல்லப்பட்டது.
ரஷிய விண்வெளி வீரர்கள்
பஸ் டயர்களின் மீது சிறுநீர் கழிக்கும் போது அமெரிக்க விண்வெளி வீரர்களோ தமக்கே உரிய
பழக்கத்தை விடாது செய்கின்றனர்.
இந்தக் குருட்டு
நம்பிக்கையின் அடிப்படையிலான செயலின் போது அமெரிக்க விண்கலக் குழுவினர் போக்கர் விளையாட்டை
விளையாடுகின்றனர். குழுவின் கமாண்டர் தோற்கும் வரை இது தொடரும்.பிறகே விண்கலத்தை நோக்கி
அனைவரும் புறப்படுவர்.
நன்றி : TRUTH VOL.87 NO. 22 – 13-9-2019
இச் செய்தியின்
ஆங்கில மூலம் கீழே தரப்படுகிறது:
NASA’s Jet Propulsion Laboratory launched the Ranger mission
in the 1960s,
spaceflights intended to fly around and take photographs of
the moon. However, the Ranger mission soon turned into a series of
missions as all of the first six launches were unsuccessful.
On the seventh try they got lucky, or perhaps they didn’t get
unlucky. Either way, the thing that was most noticeably different the
seventhtime was that someone had got a jar of peanuts to the
control room and shared it around. Since then, mystical powers of
sending Americans successfully to space have been attributed
to peanuts in the
control room.
While the Russian cosmonauts hydrate their bus tyres, their
astronaut counterparts do their own thing en route to the launch pad. In
this superstitious ritual, the crew play poker and the cards continue to the
dealt until the commander loses. Only then can the launch proceed.
On the Earth-ridden side, ever since STS-1, the director of the
Lanuch Control Centre treats his co-workers to a meal of beans and cornbread
after a successful launch, a time for celebration and bonding for the entire
team.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
I HAVE
COVERED UP TO 9-55 SO FAR. LET ME CONTINUE FROM 9-56 TODAY. Last post was on 18th
July 2019.
INTERESTING
POINTS IN THIS SECTION—
SLOKAS 56 TO
70
Appointing another
man to get a child- it is called Niyoga or in Latin levirate. We see such
practice in Mahabharata when Vichitravirya died without children. But commentators
point out the confusion and contradictory statements in this section.
My comments
: There are interpolations in this section.
Sloka 71
When you
promise a girl to a man don’t go back on your words
Sloka 74
Very interesting;
if you don’t arrange for food and basic
things for your wife while you go on a long journey, she will runaway with
someone.
Divorce rules
If a man
doen’t come back within 8 years , she is free
If your wife
hates you for more than a year kick her out.
Oldest Tamil
book Tolkappiam also ban Tamil women going overseas with her husband. So there
is a waiting period, beyond which she can do what she wants to do.
Sloka 80-84 Drinking
and Violent Wives
Interesting .
If your wife
is barren for 8 years, you may leave her;
If all her
children died , leave her in tenth year.
If your wife
gives birth only to daughters, you may leave her in the eleventh year;
If a woman
drinks and extravagant, leave her immediately.
88-94 Marriageable
Age
Love marriage
is not wrong – sloka 91
Age limits –
sloka 94
WIFE IS GIFT
FROM GOD; SUPPORTING A WOMAN PLEASES GOD- SLOKA 95
BRIDE PRICE –
DON’T SELL YOUR DAUGHTER- SLOKA 97 TO 100
Chastity for
men and women – slokas 101 and 102
Property rights
– from sloka 9-104
What did
Daksa do with 10+13+27= 50 daughters? sloka -129
He gave 10 daughters
to Dharma;
13 daughters
to Kasyapa;
27 daughters
to Soma/ Moon
Sloka 137 to
139
Role of son,
grand son and great grand son
Sloka 140-
142 – adopted son
DIVISION OF
PROPERTY WITH FOUR WIVES- SLOKA 140
Rest of the
slokas gives minute details of division of property.
GETTING A CHILD THROUGH ANOTHER PERSON
9-57. The wife of an elder brother is for his younger (brother) the wife of a Guru; but the wife of the younger is declared (to be) the daughter-in-law of the elder.
58. An elder (brother) who approaches the wife of the younger, and a younger (brother who approaches) the wife of the elder, except in times of misfortune, both become outcasts, even though (they were duly) authorised.
59. On failure of issue (by her husband) a woman who has been authorised, may obtain, (in the) proper (manner prescribed), the desired offspring by (cohabitation with) a brother-in-law or (with some other) Sapinda (of the husband).
60. He (who is) appointed to (cohabit with) the widow shall (approach her) at night anointed with clarified butter and silent, (and) beget one son, by no means a second.
61. Some (sages), versed in the law, considering the purpose of the appointment not to have been attained by those two (on the birth of the first), think that a second (son) may be lawfully procreated on (such) women.
62. But when the purpose of the appointment to (cohabit with) the widow bas been attained in accordance with the law, those two shall behave towards each other like a father and a daughter-in-law.
63. If those two (being thus) appointed deviate from the rule and act from carnal desire, they will both become outcasts, (as men) who defile the bed of a daughter-in-law or of a Guru.
64. By twice-born men a widow must not be appointed to (cohabit with) any other (than her husband); for they who appoint (her) to another (man), will violate the eternal law.
65. In the sacred texts which refer to marriage the appointment (of widows) is nowhere mentioned, nor is the re-marriage of widows prescribed in the rules concerning marriage.
66. This practice which is reprehended by the learned of the twice-born castes as fit for cattle is said (to have occurred) even among men, while Vena ruled.
67. That chief of royal sages who formerly possessed the whole world, caused a confusion of the castes (varna), his intellect being destroyed by lust.
68. Since that (time) the virtuous censure that (man) who in his folly appoints a woman, whose husband died, to (bear) children (to another man).
69. If the (future) husband of a maiden dies after troth verbally plighted, her brother-in-law shall wed her according to the following rule.
70. Having, according to the rule, espoused her (who must be) clad in white garments and be intent on purity, he shall approach her once in each proper season until issue (be had).
71. Let no prudent man, after giving his daughter to one (man), give her again to another; for he who gives (his daughter) whom he had before given, incurs (the guilt of) speaking falsely regarding a human being.
72. Though (a man) may have accepted a damsel in due form, he may abandon (her if she be) blemished, diseased, or deflowered, and (if she have been) given with fraud.
73. If anybody gives away a maiden possessing blemishes without declaring them, (the bridegroom) may annul that (contract) with the evil-minded giver.
74. A man who has business (abroad) may depart after securing a maintenance for his wife; for a wife, even though virtuous, may be corrupted if she be distressed by want of subsistence.
75. If (the husband) went on a journey after providing (for her), the wife shall subject herself to restraints in her daily life; but if he departed without providing (for her), she may subsist by blameless manual work.
76. If the husband went abroad for some sacred duty, (she) must wait for him eight years, if (he went) to (acquire) learning or fame six (years), if (he went) for pleasure three years.
HATEFUL WIVES
77. For one year let a husband bear with a wife who hates him; but after (the lapse of) a year let him deprive her of her property and cease to cohabit with her.
78. She who shows disrespect to (a husband) who is addicted to (some evil) passion, is a drunkard, or diseased, shall be deserted for three months (and be) deprived of her ornaments and furniture.
79. But she who shows aversion towards a mad or outcast (husband), a eunuch, one destitute of manly strength, or one afflicted with such diseases as punish crimes, shall neither be cast off nor be deprived of her property.
80. She who drinks spirituous liquor, is of bad conduct, rebellious, diseased, mischievous, or wasteful, may at any time be superseded (by another wife).
81. A barren wife may be superseded in the eighth year, she whose children (all) die in the tenth, she who bears only daughters in the eleventh, but she who is quarrelsome without delay.
NEVER LEAVE A SICK WIFE WITHOUT HER CONSENT
82. But a sick wife who is kind (to her husband) and virtuous in her conduct, may be superseded (only) with her own consent and must never be disgraced.
83. A wife who, being superseded, in anger departs from (her husband’s) house, must either be instantly confined or cast off in the presence of the family.
84. But she who, though having been forbidden, drinks spirituous liquor even at festivals, or goes to public spectacles or assemblies, shall be fined six krishnalas.
MY COMMENTS- GOLD WEIGHING SIX KRISHNALAS??
85. If twice-born men wed women of their own and of other (lower castes), the seniority, honour, and habitation of those (wives) must be (settled) according to the order of the castes (varna).
86. Among all (twice-born men) the wife of equal caste alone, not a wife of a different caste by any means, shall personally attend her husband and assist him in his daily sacred rites.
87. But he who foolishly causes that (duty) to be performed by another, while his wife of equal caste is alive, is declared by the ancients (to be) as (despicable) as a Kandala (sprung from the) Brahmana (caste).
88. To a distinguished, handsome suitor (of) equal (caste) should (a father) give his daughter in accordance with the prescribed rule, though she have not attained (the proper age).
89. (But) the maiden, though marriageable, should rather stop in (the father’s) house until death, than that he should ever give her to a man destitute of good qualities.
90. Three years let a damsel wait, though she be marriageable; but after that time let her choose for herself a bridegroom (of) equal (caste and rank).
NOTHING WRONG IN LOVE MARRIAGE
91. If, being not given in marriage, she herself seeks a husband, she incurs no guilt, nor (does) he whom she weds.
92. A maiden who choses for herself, shall not take with her any ornaments, given by her father or her mother, or her brothers; if she carries them away, it will be theft.
93. But he who takes (to wife) a marriageable damsel, shall not pay any nuptial fee to her father; for the (latter) will lose his dominion over her in consequence of his preventing (the legitimate result of the appearance of) her enemies.
94. A man, aged thirty years, shall marry a maiden of twelve who pleases him, or a man of twenty-four a girl eight years of age; if (the performance of) his duties would (otherwise) be impeded, (he must marry) sooner.
WIFE IS A GIFT FROM GOD
95. The husband receives his wife from the gods, (he does not wed her) according to his own will; doing what is agreeable to the gods, he must always support her (while she is) faithful.
96. To be mothers were women created, and to be fathers men; religious rites, therefore, are ordained in the Veda to be performed (by the husband) together with the wife.
97. If, after the nuptial fee has been paid for a maiden, the giver of the fee dies, she shall be given in marriage to his brother, in case she consents.
98. Even a Sudra ought not to take a nuptial fee, when he gives away his daughter; for he who takes a fee sell his daughter, covering (the transaction by another name).
99. Neither ancients nor moderns who were good men have done such (a deed) that, after promising (a daughter) to one man, they have her to another;
100. Nor, indeed, have we heard, even in former creations, of such (a thing as) the covert sale of a daughter for a fixed price, called a nuptial fee.
101. ‘Let mutual fidelity continue until death,’ this may be considered as the summary of the highest law for husband and wife.
102. Let man and woman, united in marriage, constantly exert themselves, that (they may not be) disunited (and) may not violate their mutual fidelity.
103. Thus has been declared to you the law for a husband and his wife, which is intimately connected with conjugal happiness, and the manner of raising offspring in times of calamity; learn (now the law concerning) the division of the inheritance.
PROPERTY RIGHTS
104. After the death of the father and of the mother, the brothers, being assembled, may divide among themselves in equal shares the paternal (and the maternal) estate; for, they have no power (over it) while the parents live.
105. (Or) the eldest alone may take the whole paternal estate, the others shall live under him just as (they lived) under their father.
106. Immediately on the birth of his first-born a man is (called) the father of a son and is freed from the debt to the manes; that (son), therefore, is worthy (to receive) the whole estate.
107. That son alone on whom he throws his debt and through whom he obtains immortality, is begotten for (the fulfilment of) the law; all the rest they consider the offspring of desire.
108. As a father (supports) his sons, so let the eldest support his younger brothers, and let them also in accordance with the law behave towards their eldest brother as sons (behave towards their father).
109. The eldest (son) makes the family prosperous or, on the contrary, brings it to ruin; the eldest (is considered) among men most worthy of honour, the eldest is not treated with disrespect by the virtuous.
110. If the eldest brother behaves as an eldest brother (ought to do), he (must be treated) like a mother and like a father; but if he behaves in a manner unworthy of an eldest brother, he should yet be honoured like a kinsman.
111. Either let them thus live together, or apart, if (each) desires (to gain) spiritual merit; for (by their living) separate (their) merit increases, hence separation is meritorious.
112. The additional share (deducted) for the eldest shall be one-twentieth (of the estate) and the best of all chattels, for the middlemost half of that, but for the youngest one-fourth.
113. Both the eldest and the youngest shall take (their shares) according to (the rule just) stated (each of) those who are between the eldest and the youngest, shall have the share (prescribed for the) middlemost.
114. Among the goods of every kind the eldest shall take the best (article), and (even a single chattel) which is particularly good, as well as the best of ten (animals).
115. But among (brothers) equally skilled in their occupations, there is no additional share, (consisting of the best animal) among ten; some trifle only shall be given to the eldest as a token of respect.
116. If additional shares are thus deducted, one must allot equal shares (out of the residue to each); but if no deduction is made, the allotment of the shares among them shall be (made) in the following manner.
117. Let the eldest son take one share in excess, the (brother) born next after him one (share) and a half, the younger ones one share each; thus the law is settled.
118. But to the maiden (sisters) the brothers shall severally give (portions) out of their shares, each out of his share one-fourth part; those who refuse to give (it), will become outcasts.
119. Let him never divide (the value of) a single goat or sheep, or a (single beast) with uncloven hoofs; it is prescribed (that) a single goat or sheep (remaining after an equal division, belongs) to the eldest alone.
120. If a younger brother begets a son on the wife of the elder, the division must then be made equally; this the law is settled.
121. The representative (the son begotten on the wife) is not invested with the right of the principal (the eldest brother to an additional share); the principal (became) a father on the procreation (of a son by his younger brother); hence one should give a share to the (son begotten on the wife of the elder brother) according to the rule (stated above).
122. If there be a doubt, how the division shall be made, in case the younger son is born of the elder wife and the elder son of the younger wife,
123. (Then the son) born of the first wife shall take as his additional share one (most excellent) bull; the next best bulls (shall belong) to those (who are) inferior on account of their mothers.
124. But the eldest (son, being) born of the eldest wife, shall receive fifteen cows and a bull, the other sons may then take shares according to (the seniority of) their mothers; that is a settled rule.
125. Between sons born of wives equal (in caste) (and) without (any other) distinction no seniority in right of the mother exists; seniority is declared (to be) according to birth.
TWINS
126. And with respect to the Subrahmanya (texts) also it is recorded that the invocation (of Indra shall be made) by the first-born, of twins likewise, (conceived at one time) in the wombs (of their mothers) the seniority is declared (to depend) on (actual) birth.
SUBRAHMANYA VERSES ARE IN AITAREYA BRAHMANA 6-3
127. He who has no son may make his daughter in the following manner an appointed daughter (putrika, saying to her husband), ‘The (male) child, born of her, shall perform my funeral rites.’
128. According to this rule Daksha, himself, lord of created beings, formerly made (all his female offspring) appointed daughters in order to multiply his race.
129. He gave ten to Dharma, thirteen to Kasyapa, twenty-seven to King Soma, honouring (them) with an affectionate heart.
130. A son is even (as) oneself, (such) a daughter is equal to a son; how can another (heir) take the estate, while such (an appointed daughter who is even) oneself, lives?
131. But whatever may be the separate property of the mother, that is the share of the unmarried daughter alone; and the son of an (appointed) daughter shall take the whole estate of (his maternal grandfather) who leaves no son.
132. The son of an (appointed) daughter, indeed, shall (also) take the estate of his (own) father, who leaves no (other) son; he shall (then) present two funeral cakes to his own father and to his maternal grandfather.
133. Between a son’s son and the son of an (appointed) daughter there is no difference, neither with respect to worldly matters nor to sacred duties; for their father and mother both sprang from the body of the same (man).
134. But if, after a daughter has been appointed, a son be born (to her father), the division (of the inheritance) must in that (case) be equal; for there is no right of primogeniture for a woman.
135. But if an appointed daughter by accident dies without (leaving) a son, the husband of the appointed daughter may, without hesitation, take that estate.
136. Through that son whom (a daughter), either not appointed or appointed, may bear to (a husband) of equal (caste), his maternal grandfather (has) a son’s son; he shall present the funeral cake and take the estate.
ROLE OF SON, GRAND SON, GREAT GRAND SON
137. Through a son he conquers the worlds, through a son’s son he obtains immortality, but through his son’s grandson he gains the world of the sun.
138. Because a son delivers (trayate) his father from the hell called Put, he was therefore called put-tra (a deliverer from Put) by the Self-existent (Svayambhu) himself.
139. Between a son’s son and the son of a daughter there exists in this world no difference; for even the son of a daughter saves him (who has no sons) in the next world, like the son’s son.
140. Let the son of an appointed daughter first present a funeral cake to his mother, the second to her father, the funeral to his father’s father.
Pictures are taken from
various sources; beware of copyright rules; don’t use them without permission;
this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 11,000.
அடைப்புக்குறிக்குள் உள்ள எண், அந்தச் சொல்லில் எத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.
குறுக்கே
1. (8 எழுத்துக்கள்) பெரியகோவிலில் பெரிய
லிங்கம் பிரதிஷ்டை ஆகாமல் சிக்கல் ஏற்பட்டபோது, அதற்கு
உதவிய அற்புத சித்தர்
4. (5)– கிருஷ்ணனின் குலம்
5. (3) / வலமிருந்து இடம் செல்க. காய்கறியும்
வெட்டலாம்; ஆளையும் குத்தலாம்
6. (2) போர்
7. (2) / வலமிருந்து இடம் செல்க. முல்லைக்குத்
தேரீந்த வள்ளல்
7. (4) பெரியோர்களின் கால்களக் கழுவி செய்யும்
வழிபாடு
10. (3)- பைத்தியம் (இலங்கைத் தமிழ்)
11.(4)- மேகாலயாவின் தலைநகர்
12.(5)- காவிரி நதி கடலில் புகும் இடம்
XXXX
கீழே
1. (4 எழுத்துக்கள்) – காஷ்மீர் வழியாகச் சென்று
காஸ்பியன் கடலுக்கும் அப்பால் இந்து தர்மாத்தைப் பரப்பியா முனிவர்
2.தேர் திருவிழா (6) – ரத உற்சவம்
3. (5) பறவைப் பெண் என்பதன் சம்ஸ்கிருதச் சொல்; உலகப் புகழெற்ற நாடகத்தின் கதாநாயகி
5.(3) / கீழிருந்து மேலே செல்க. காந்தியின்
சீடர்கள் அணிந்த துணி/ ஆடை
6.3) / கீழிருந்து மேலே செல்க. பூரணத்துவம்; சிவப்பு நிறமும் அதே.
Pictures are taken from various sources; beware of copyright rules;
don’t use them without permission; this is a non- commercial, educational blog;
posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously.
Average hits per day for both the blogs 11,000.