Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அண்மைக் காலமாக ஸம்ஸ்க்ருதச் சொற்களுக்குப் பதிலாக தூய தமிழ்ச் சொற்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது ; உஸ்தகம் புது என்ற சொல்லை நூல் என்று மாற்றி வருகின்றனர் . நான் அப்படித்த காலத்தில் தமிழ்ப் பாட புஸ்தகம் என்று கடையில் கேட்டு வாவங்குவோம்; இப்போதெல்லாம் ஹமிப்பட நாள் என்றே சொல்வர் . ஆயினும் இந்த புஸ்தாக்ம் என்ற சொல் முதலில் தமிழ் இலக்கியத்தில் புகுந்தது நாலடியார் என்னும் நூலில்தான் ; இது சாமானை முனிவர்கள் எழுதிய நூல் ; சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் தொகுக்கப்பட்டது அக்காலத்தில் தமிழில் ஸ, ஜெ ஹா ஷா முதலிய எழுத்துக்கள் இல்லை ஆகையால் புத்தகம் என்றே எழுதியுள்ளார்கள் .
இதோ அந்தப்பாடல்
புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியார்
உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் – மற்றவற்றைப்
போற்றும் புலவரும் வேறே பொருள்தெரிந்து
தேற்றும் புலவரும் வேறு. –318, நாலடியார்
பொருள்
புத்தகங்களை மிகுதியாகத் தொகுத்து வைத்தும் பலர் அவற்றின் பொருள் தெரியாதவராவர்; நூல்களை வீடு முழுமையும் நிறைத்து ,அவற்றை அவர்கள் அன்புடன் பாதுகாக்கும் அறிஞர்கள்தான்; அவர்கள் வேறு . அவற்றின் கருத்தறிந்து தம்மையும் பிறரையும் தெளிவித்துக் கொள்ளும் பேரறிஞர்கள் வேறு .
அதாவது புஸ்தகப்பிரியர்களில் இரண்டு வகை; ஒரு வகையினர் லைப்ரரி அலமாரி போல வீட்டில் அவைகளை அடுக்கி மட்டும் வைத்திருப்பார்கள் ; இன்னொரு வகை அவைகளின் பொருள் தெரிந்து மற்றவர்களுக்கும் அதைச் சொல்லிக் கொடுப்பார்கள் .
உண்மைதான் ; நானே பல வீடுகளில் அவர்களுடைய அப்பா தாத்தா கொள்ளுத் தாத்தா சேர்த்துவைத்த புஸ்தகங்களை தூசி கூட தட்டாமல் வைத்திருப்பதை பார்த்து இருக்கிறேன் ; மற்றவர்களுக்கும் கொடுக்கமாட்டார்கள் ; ஒரு காலத்தில் படிக்கப்போவதாகச் சொல்லுவார்கள் ; வேறு சிலரோ வலிய வந்து நமக்கு அந்தப் புஸ்தகம் பற்றி அருமை பெருமைகளை விளக்கமாகச் சொல்லி தயவு செய்து இதை படியுங்கள் என்று கொடுப்பார்கள் எனக்கே பலர் இப்படிக்கொடுத்தனர்; நானும் படித்துப் பலன் அடைந்தேன்.
தொல்பொரு ட்த்துறை அறிஞர் டாக்டர் இரா நாகசாமி, லண்டன் பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்ன் , சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி என் ராமச்சந்திரன் . லண்டனில் வசித்த டாக்டர் V S ரெங்கநாதன் , மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் வி ஜி சீனிவாசன், மதுரை டாக்டர் எஸ் ராமகிருஷ்ணன் (பேராசிரியர் எஸ் ஆர் கே ) முதலிய பலர் நூல்களைக் கொடுத்தார்கள்; இவர்கள் அனைவரும் நன்றியுடன் நினைவுகூறத் தக்கவர்கள் ஆவர் .
***
ஆதி காலத்தில் சமண முனிவர்கள் தமிழ் நாட்டில் பாறையில் எழுதும் வழக்கத்தைத் துவங்கினர். பிராமி லிபியில் இவர்கள் எழுதும்போது கொச்சைத் தமிழிலும் பிராகிருதம் கலந்த மொழியிலும் எழுதினார்கள்; இவை, மதுரை முதலிய இடங்களில் சமண முனிவர்கள் வாழ்ந்த இடங்களை சுற்றி கிடைக்கின்றன. இவை அனைத்தும் மிகச் சின்ன கல்வெட்டுகள்; ஒரு வரி அல்லது இரண்டு வரிக்குட்பட்டவை இவை சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தையவை ; ஆனால் இதற்கும் முன்னால், அசோகர் எழுதிய கல்வெட்டுகள் மிகவும் நீண்டவை; சொல்லப்போனால் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளினார்!
ஒருவேளை அசோகருக்கும் முன்னால், வடக்கில் எழுதியது போல, நாமும் துணிகளிலும் பனை ஓலைகளிலும், மரப்பட்டைகளிலும் எழுதியிருக்கலாம் ; அவை எல்லாம் பருவ நிலையைத் தாங்கி நிற்கக்கூடியவை அல்ல . காலத்தால் அழிந்துபோய்விட்டன என்றே கருத வேண்டும்!
–subham –
Tags– சமண முனிவர்கள், நாலடியார் , புஸ்தகம் , பிராகிருதம் அசோகர், பிராமி லிபி, புஸ்தகப் பிரியர்கள், இரண்டு வகை
உத்தரகாண்டத்தின் பதினெட்டாவது ஸர்க்கமாக அமைவது ‘மருத்த மஹாராஜனை ஜெயிப்பது’ என்ற ஸர்க்கமாகும்.
அகஸ்திய மஹரிஷி ராமருக்குத் தொடர்ந்து கூறிய வரலாறுகளில் மயிலுக்கு இந்திரன் அளித்த வரத்தைப் பற்றிக் கூறலானார்.
ஒரு சமயம் புஷ்பக விமானத்தில் ராவணன் பூமி முழுதும் சுற்றி வருகையில் கந்தஹார் என்று விளங்கும் க்ஷேத்திரத்திற்குச் சென்று அங்கு யாகம் செய்து கொண்டிருந்த மருத்தர் என்ற மன்னனைக் கண்டான்.அவருக்கு சம்வர்த்தர் என்ற மஹரிஷி யாகத்தைச் செய்வித்து வந்தார்.
யாகத்திற்கு வந்திருந்த தேவர்கள் ராவணன் ஜெயிக்க முடியாதவன் என்பதை உணர்ந்து விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் உடலில் மறைந்து கொண்டார்கள்.
இராவணன் மருத்த மன்னரை யுத்தத்திற்கு அழைத்தான் . அவனும் யுத்தத்திற்கு ஆயத்தமானான். ஆனால் யாகத்தை நடத்திய சம்வர்த்த ரிஷி மருத்த மன்னனிடம், “நீ யாகதீக்ஷை கொண்டிருப்பதால் போர் புரிதல் தகாது” என்றார். அவனும் அதை ஏற்று தனது வில்லை கீழே விட்டெறிந்தான்.
இதனால் ராவணன் வெற்றி பெற்று விட்டதாக சுகன் என்பவன் கூச்சலிட்டான்.
யாகத்திற்கு வந்திருந்த மஹரிஷிகள் புசித்துத் தின்னப்பட்டனர். ராவணன் பூமியில் சுற்றலானான்.
இராவணன் போய்விடவே இந்திரன் உள்ளிட்ட அனைவரும் தங்கள் சுய உருவத்தை அடைந்தனர்.
அந்தக் காலத்தில் மயில்கள் கருநிற தோகையையே கொண்டிருந்தன.
மயிலைப் பார்த்து இந்திரன் சந்தோஷத்துடன் கூறினான் இப்படி:
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சென்னை வி ஏ தியாகராஜ செட்டியார் அவர்கள் எழுதிய சாகுந்தலம் நாடகத்தின் புஸ்தகத்தை பத்து ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரியில் படித்துவிட்டு 7, 8 பக்கங்களை பேஸ்புக்கில் போட்டேன் ; இன்று பேஸ்புக் அவைகளை வெளியிட்டு எனக்கு நினைவுபடுத்தியது ; அது மட்டுமல்ல; மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி பற்றி நீங்கள் எழுதியதைக் கண்டேன் ; மேற்கொண்டு விவரங்களைத் தரமுடியுமா என்று சென்னை அன்பர் ஒருவர் சென்ற மாதம் எனக்கு E மெயில் அனுப்பியிருந்தார். அதனால் இதையும் எழுத்தில் வடிக்கலாமே என்று துவங்கினேன்.
சென்னை தியாகராஜ செட்டியார் தன்னை ம. ப. க . அழகர்சாமி பாவலர் மாணவன் என்றும் நாடக ஆசிரியர் என்றும் அறிமுகப்படுத்திக் கொள்கிறார் .
முதல் பக்கத்தில் அவர் தன்னுடைய நாடகங்களை யார், யார் பயன்படுத்துகிறார்கள் என்று நன்றிப் பெருக்குடன் பட்டியல் போட்டுள்ளார்; அதைப் பார்க்கும்போது அக்காலத்தில்– 1930 களில்– எவ்வளவு பேர் இத்துறையில் ஈடுபட்டிருந்தனர் என்ற விவரம் கிடைக்கிறது ; இதோ அந்த நடிகர்களின் பெயர்கள்:
S G கிட்டப்பா, K B சுந்தராம்பாள், S V சுப்பையா பாகவதர், P S வேலுநாயர், P S கோவிந்தன், T S பரமேஸ்வரய்யர், K S செல்லப்பய்யர் K S அனந்த நாராயணய்யர், ஆலந்தூர் ஒரிஜினல் இந்து ட்ரம்மடிக் கம்பெனியார், ஸ்ரீ வித்வ இரத்தின வினோத ரஞ்சித பால்ய சபையார் , மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியார் இன்னும் பல நாடக கம்பெனியார்களும் நடத்திவரும்
சம்பூர்ண
சகுந்தலா சரித்திரம்
நாடகாசிரியர்
சென்னை முத்தியாலுப்பேட்டை
பால சந்தச் சரபக் கவி
V A தியாகராஜ செட்டியாரவர்களால்
இயற்றப்பெற்று
மேற்படி
V A தியாகராஜ செட்டியாரவர்களால்
சென்னை ஆர் ஜி அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பெற்றது
காப்பிரைட் 1935 விலை அணா 4
இதைவிட சுவையான விஷயம், அவர் 1935 ஆம் ஆண்டுக்குள் எழுதிய நீண்ட நாடகங்களின், சரித்திரங்களின் பட்டியல் கடைசி பக்கத்தில் வெளியாகியுள்ளது ; அவையாவன ( எல்லாம் நான்கு அணா விலையில் விற்கப்பட்டுள்ளது) :
1.வள்ளித் திருமணம்,
2.லவகுச சரித்திரம்,
3.அல்லி அர்ஜுனா,
4.சம்பூர்ண அரிச்சசந்திரா ,
5.சாவித்திரி,
6.கோவலன் சரித்திரம் ,
7.ஞான சவுந்தரி டிராமா ,
8.கபீர்தாஸ் சரித்திரம் ,
9.ராமதாஸ் சரித்திரம் ,
10.மார்க்கண்டேயர் சரித்திரம் ,
11.நந்தனார் சரித்திர டிராமா,
12.நல்லதங்காள் டிராமா,
13.சக்குபாய் சரித்திரம்,
14.சிறுத்தொண்ட பத்தன் சரித்திரம் ,
15.பாரிஜாத புஷ்பஹரணம்,
16.பவளக்கொடி டிராமா,
17.பக்த பிரஹலாதா ,
18.தூக்குத் தூக்கி டிராமா,
19.சாரங்கதரன் ,
20.டம்பாச்சாரி
21.குலேபகாவலி
22.பாதுகா பட்டாபிஷேகம்
23.துளசிதாஸ் சரித்திரம்
இன்னும் அநேக சரித்திரங்களை அச்சிட்டு வருகிறேன்.
***
அந்தக்காலத்தில் நாடகம் என்பது குறைவான வசனங்களுடனும் அதிகப் பாடல்களுடனும் இருந்தன ; மக்கள் இசைப் பிரியர்களாக இருந்தனர் .
இவ்வளவு அரிய படைப்புகளை அக்காலத்திலேயே எழுத்து வடிவில் வெளியிட்டு நாடக மேடைகளில் ஏற்றிய தியாகராஜ செட்டியாருக்கு ஒரு பெரிய கும்பிடு போட வேண்டும்; அவர் எழுதியதில் சில நாடகங்களைத் தவிர பெரும்பாலும் புராண, இதிஹாஸக் கதைகளாவும் சாதுக்களின் சரித்திரமாகவும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது . தியாக ராஜ செட்டியார் முழு சாகுந்தல நாடகத்தையும் கவிகள் வடிவில் நூதன மெட்டுகளுடன் ஆக்கியதாகவும் முன்னுரையில் எழுதியுள்ளார்.
–SUBHAM—
TAGS– சென்னை V A தியாகராஜ செட்டியார், நூறு ஆண்டுகளுக்கு முன், நாடகக் கம்பெனிகள் , தமிழ் நாடகங்கள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அரும்பெறற் கற்பின் அயிராணி யன்ன
பெரும்பெயர்ப் பெண்டி ரெனினும் — விரும்பிப்
பெறுநசையாற் பின்நிற்பா ரின்மையே பேணும்
நறுநுதலாள் நன்மைத் துணை –நாலடியார் 381
பொருள்:
அரிதாகப் பெறக்கூடிய கற்புடைமையில் இந்திராணி போன்றவள் என்று உலகத்தில் பெரும் புகழோடு விளங்கும் பெண்ணாகவே இருந்தாலும், அவளைத் தவறான நோக்கத்தோடு விரும்பிப் பின் தொடரும் ஆடவர் இல்லாத தூய்மையான வாழ்க்கை, வாழவேண்டும்; அவர்தான் நல்ல நெற்றியை உடைய பெண் அல்லது மனைவி ஆவார் –நாலடியார் பாடல் 381
அதாவது தேவலோக கற்புக்கரசியான இந்திராணி போல வாழ்ந்திருக்கலாம் ; ஆயினும் நடை, உடை, பாவனைகளில் அடக்கம் வேண்டும் ; எல்லோரும் தன்னைப் பார்க்க வேண்டும், விரும்ப வேண்டும் என்ற முறையில் நடை உடை பாவனை இருக்கக்கூடாது ; இதற்கு எடுத்துக் காட்டாக அக்கால பெண் பாடகிகளையும் இக்காலப் பெண் பாடகிகளையும் கூறலாம்; அக்காலத்தில் புடவையைப் போர்த்திக்கொண்டு வருவார்கள், அமர்வார்கள், செல்வார்கள்; இக்காலத்திலோ ஆடையின் முன் பக்கத்திலும் பின் பக்கத்திலும் 50 % காணோம் ! அப்படியே வீடியோவும் எடுத்து விற்பனையும் செய்கிறார்கள்!
நஹுஷன் கதையே காரணம் !
நாலடியார் பாடலுக்கு காரணம் நஹுஷன் செய்த சேட்டைதான் ; அவர் இந்திராணியிடத்தில் சில்மிஷம் செய்து பாம்பாகப் பூமியில் விழுந்தார் .
முன்னொரு காலத்தில் தேவலோக இந்திரன் அசுரராய் பிறந்த பிராமணன் ஒருவரைக் கொன்றான்; அந்த அஸுரன் பெயர் வ்ருத்ராஸுரன் ; பிராமணனைக் கொன்றால் பிரம்மஹத்தி என்னும் பாவம் அல்லது பேய் ஒருவன் மீது ஏறிவிடும்; இதைப் போக்க பரிகாரம் செய்ய வேண்டும். ராமன் கூட பிராமணன் ஆகிய அசுரன் ராவணனைக் கொன்றதால் ராமேஸ்வரம் முதலிய இடங்களில் பரிகாரம் செய்ததாகத் தலபுராணம் பகரும். இவ்வாறு பரிகாரம் செய்ய இந்திரன் பூலோகத்துக்கு VISIT VACANT விசிட் செய்தார் ; அப்போது இந்திரன் பதவி VACANT வேகண்ட் ஆனது ; டெம்பொரரி/ தற்காலிக பிரதமைச்சர் TEMORARY PRIME MINISTER பதவிக்குப் பூலோகத்தில் இருந்த நஹுஷனுக்கு அழைப்பு வந்தது ! ரம்பா, ஊர்வசி, மேனகா, திலோத்தமா ஆகியவர்களின் நடனத்தை தினமும் காணவே அவருக்கு மூட்MOOD வந்தது ; இந்திராணியைப் பிடித்துவிட்டால் பழைய இந்திரன் பூமியிலே கிடப்பான்; நாம் ஜாலியாக இந்திராணியுடன் தேவ லோகத்தை ஆளுவோம் என்று திட்டமிட்டு இந்திராணியிடம் சேட்டை செய்தான்; அவளுக்குப் புரிந்துவிட்டது.
அன்பரே தொட்டுப் பேச வேண்டுமானால் சட்டப்படி தொட்டுப் பேச வேண்டும்; நான் சொல்லும் CONDITION கண்டிஷனை முதலில் கேளும் ; நீவீர் எனது பள்ளியறைக்கு எழுந்தருளலாம்; ஆனால் சப்த ரிஷிகள் தூக்கும் பல்லக்கில் என்னுடைய BED ROOM பெட் ரூமுக்கு வர வேண்டும் என்றாள்; இது நடவாத காரியம் என்பது அப் பெண்ணின் கணிப்பு!
நஹுஷனுக்கு ஒரே குஷி; சப்த ரிஷிகளையும் விரட்டிப்பிடித்தான்; அவர்களுக்கும் தெரியும்; ஏதோ அசமபாவிதம் நடக்கப்போகிறது என்று ; ஐயா டெம்பொரரி பிரதம அமைச்சரே! ஏழு ரிஷிகள் பல்லக்கினைத் தூக்கினால் பேலன்ஸ்BALANCE இருக்காது; எட்டாவது ஆளாக அகஸ்தியரைச் சேர்த்துக் கொள்கிறோம் என்றார்கள்; தற்காலிக இந்திரன், அதாவது நஹுஷன் சொன்னான்: உடனே அதைச் செய்யுங்கள் என்று.
ஏழு ரிஷிகளும் – அதாவது சப்த ரிஷிகளும் – நல்ல உயரம்; அகஸ்தியரோ அதி பயங்கர குட்டை ; AFRICAN PIGMY ஆப்பிரிக்க பிக்மி! பல்லக்கு ரெடி. நஹுஷனும் உலகிலும் அத்தனை AFTER SHAVE LOTIONS ஆப்டர் ஷேவ் லோஷன்களையும் பூசிக்கொண்டு பல்லக்கில் ஏறினான் ; அது ROLLSROYCE ரோல்ஸ்ராய் கார் இல்லையே! மெதுவாகப் போனது; என்ன தாமதம்? ஏன் பல்லக்கு மெதுவாகப்போகிறது? அதுவும் wobbling/ வாப்ளிங் ஆட்டம் இருக்கிறதே என்றான். அவர்கள் சொன்னார்கள் “ஐயா பொறுத்தருளும் அகஸ்தியர் குட்டை; நாங்கள் எல்லாம் உயரம். ஆகையயல் கார் கொஞ்சம wobbling /வாப்ளிங் ஆட்டம் ஆகிறது அதற்காகத்தான் மெதுவாகச் செல்கிறோம்” .
உடனே நஹுஷன் பல்லக்கிலிருந்து எட்டிப்பார்த்தான்; குட்டையான பிக்மி அகஸ்தியரைப் பார்த்து சர்ப்ப சர்ப்ப என்றான் ; இந்தச் ஸம்ஸ்க்ருத்ச் சொல்லுக்குப்ப பொருள் —சலோ சலோ !போங்கள் போங்கள்! என்று விரைவு படுத்துவதாகும். அத்தோடு நில்லாமல் அகஸ்தியரைக் காலால் எட்டி உதைத்து இதைச் சொன்னான் சர்ப்ப சர்ப்ப என்று.
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.– குறள் 29
குணக்குன்றான அகஸ்தியருக்குக் கோபம் வந்தது ; பிடி சாபம் ! சர்ப்ப சர்ப்ப என்றார்
சர்ப்ப என்பதற்கு இன்னும்மொரு பொருள் SERPENT/சர்பெண்ட்– பாம்பு
ஆங்கிலத்தில் பாம்புக்குள்ள சர்பண்ட்SERPENT, SNAKE ஸ்நேக் என்பதெல்லாம் சம்ஸ்க்ருத மொழியிலிருந்து சென்றவை ; அகஸ்தியன் சாபத்துக்கு ஏற்ப நஹுஷன் பூமியில் பாம்பாக விழுந்தான்.
இந்தக் கதையை மனத்தில் வைத்துக்கொண்டுதான் அயிராணி/ இந்திராணி பற்றி சமண முனிவர் எழுதினார் போலும்; இந்திராணி தன் கற்பை இழக்காமல் இருப்பதற்கு பல்லக்கு தந்திரத்தைப் பயன்படுத்தினாள்.
–subham—
Tags- கற்புக்கரசி, இந்திராணி, நஹுஷன் கதை, பெண்களுக்கு புத்திமதி, அயிராணி , நாலடியார் பாடல் சர்ப்ப சர்ப்ப, அகஸ்தியர் சாபம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 46
திருவாறன்விளை, கேரளம்
திருவாறன்விளை அல்லது ஆறன்முளா (ஆரன்முளா) என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.
மலைநாட்டுத் திருப்பதி
மூலவர் – திருக்குறளப்பன், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் – பத்மாஸநி நாச்சியார்.
தீர்த்தம் – வேதவ்யாஸ ஸரஸ், பம்பா தீர்த்தம்.
விமானம் – வாமன விமானம்.
ப்ரத்யக்ஷம் – ப்ரஹ்மா, வேதவ்யாஸர்.
விசேஷங்கள் – யுத்தத்தில், கர்ணனின் தேர் இடது சக்கரத்தை பூமிவிழுங்கிய பொழுது, கர்ணன், தன் ரதத்தைத் தூக்கிவிட்டு வரும்வரை பூமியில் இருக்கும் தன்னைக் கொல்ல வேண்டாம் என்று சொல்லியும், வஞ்சகமாக பாணத்தைப் போட்டுக் கொன்றதால், மனது வருந்திய அர்ஜுனன், இவ்விடம் வந்து தவம் செய்து இந்த கோவிலை ஜூர்ணோத்தாரணம் செய்ததாக ஸ்தலபுராணம்.
ஒரு பெரிய மேட்டின் மேலுள்ள இப்பெரிய கோயில் அர்ஜுனனால் ப்ரதிஷ்டை செய்யப்பட்டதாம். பக்கத்தில் கோவில் மதிலைத் தொட்டுக்கொண்டு அழகிய பம்பாநதி ஓடுகிறது. பிரம்மனிடம் இருந்து வேதங்களை மது, கைடபன் என்ற இரண்டு அரக்கர்கள் பிடுங்கிச் சென்று விட்டனர். பிரம்மன் திருமாலைத் துதித்து நின்றான். திருமால் அரக்கர்களை அழித்து வேதங்களை மீட்டுத் தந்தார். இதற்கு நன்றி கூறும் முகத்தான் இத்தலத்தில் பிரம்மன் திருமாலைக் குறித்து தவமிருந்தான் என கூறுவர்.
இந்த ஸ்தலத்தில்தான் சபரிமலை ஐயப்பஸ்வாமியின் ஆபரணங்கள் பத்திரமாக வைக்கப்பட்டு மகர ஜோதியின்போது ஊர்வலமாக சபரிமலைக்கு பக்தர்கள் புடைசூழ மேளதாளத்துடன் பஜனைப் பாடல்களுடன் எடுத்துச் செல்லப்படுகிறது.
நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது.
செங்கண்ணூரிலிருந்து கிழக்கே 6 மைல், பஸ்ஸில் போகலாம்.
அர்ஜுனன் ஆறு மூங்கில் துண்டுகளாலான மிதவையில் இறைவன் சிலையைக் கொண்டு வந்ததினால் இத்தலம் திருவாறன்விளை (ஆறு மூங்கில் துண்டுகள்) என்று அழைக்கப்படுகிறது.
இங்கு உள்ள வன்னி மரத்திலிருந்து குண்டு முத்து போல் உதிரும் வன்னி மரக்காய்களை இத்தலத்தின் துவஜஸ் தம்பத்தின் முன்பு குவித்துவைத்து விற்கிறார்கள். இவைகள் அர்ஜு னன் ஆயுதங்களை மறைத்து வைத்த வன்னி மரத்திலிருந்து வந்ததால் குழந்தைகள் நோய்வாய்ப்பட்ட காலத்தில்இந்த வன்னிமரத்துக் காய்களை தலையைச் சுற்றி எறிந்தால் அர்ஜுனன் அம்பினால் எதிரிகளின் அம்பு சிதைவது போல், நோய் சிதையும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை.
குருவாயூரில் துலாபாரம் கொடுத்தல் போல் இங்கும் துலாபாரம்கொடுக்கும் முறை நடைமுறைப் பழக்கத்திலிருந்து வருகிறது இங்கு துலாபாரமாக வன்னிமரத்துக் காய்களை கொடுப்பது பழக்கமாக உள்ளது.
இங்கு அர்ஜு னனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பார்த்தசாரதி சிலை ஒன்று உள்ளது. இவரது கரம் மூளியாக இருந்ததாகவும், கோவில் வேலை பார்க்கும் தந்திரி. தங்கத்தால் கை செய்து வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.
கேரளாவின் புகழ்பெற்ற பம்பா என்றழைக்கப்படும் பம்பை நதி இத்தலத்தின் வடக்கு வாசலைத் தொட்டுக்கொண்டுதான் செல்கிறது. பார்ப்பதற்கு ரம்மியமாக அமைந்துள்ள இக்காட்சி இக்கோவிலுக்கு மேலும் மெருகூட்டுகிறது.
நம்மாழ்வாரால் மட்டும் 11 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். இத்தலத்து எம்பெருமானின் திருக்குறளப்பன் என்ற திருநாமத்தை தலைப்பில் இட்ட பாடலில் நம்மாழ்வார் பாசுரித்துச் செல்கிறார். ****
பாசுரங்கள்
3552.
இன்பம் பயக்க எழில் மலர் மாதரும்* தானும் இவ் ஏழ் உலகை,*
இன்பம் பயக்க இனிது உடன் வீற்றிருந்து* ஆள்கின்ற எங்கள் பிரான்,*
அன்புற்று அமர்ந்து உறைகின்ற* அணி பொழில் சூழ் திருவாறன்விளை,*
அன்புற்று அமர்ந்து வலஞ்செய்து* கைதொழும் நாள்களும் ஆகும்கொலோ! (2)
3553.
ஆகும்கொல் ஐயம் ஒன்று இன்றி* அகல் இடம் முற்றவும் ஈர் அடியே*
ஆகும்பரிசு நிமிர்ந்த* திருக்குறள் அப்பன் அமர்ந்து உறையும்*
மாகம் திகழ் கொடி மாடங்கள் நீடு* மதிள் திருவாறன்விளை,*
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
(ஆர், சேஷாத்ரிநாதன்)
ஹனுமனுக்கு இராமனின் பதில்
कोसलेस दसरथ के जाए । हम पितु बचन मानि बन आए॥ १॥
नाम राम लछिमन दोउठ भाई । संग नारि सुकुमारि सुहाई॥ २॥
इहाँ हरी निसिचर बेदेही। बिप्र फिरहिं हम खोजत तेही॥ ३॥
आपन चरित कहा हम गाई । कहहु बिप्र निज कथा बुझाई॥ ४॥
இதனைக் கேட்ட ஸ்ரீ இராம பிரான் கூறினார் “ நாங்கள் கோசல நாட்டு மன்னர் தசரதனின் மைந்தர்கள். தந்தையின் கட்டளையை ஏற்று வனத்திற்கு வந்தோம்”. இங்கு தனது அவதார ரகசியத்தை வெளிப்படுத்தவில்லை (இராமன் வனவாசத்திற்கு கிளம்பும்போதே தனது தாயான கௌசல்யாவிடம் சந்கேதமாகத் தெரிவித்து விட்டான். துளசிதாசர் அயோத்திய காண்டத்திலேயே நமக்குத் தெரிவித்துவிட்டார்.
தாயிடம் இராமன் சொல்கிறான் “அன்னையே! தந்தை வனராஜ்ஜியத்தை எனக்கு தந்தருளியுள்ளார்.. அங்குதான் எனக்கு முக்கியமான வேலைகள் உள்ளன” என்று சூசகமாகச் சொல்லிவிட்டான்.)
ஹனுமனிடம் இராமன் சொல்வதாவது “இராமன், இலக்ஷ்மணன் என்பது எங்கள் பெயர். நாங்கள் இருவரும் சகோதரர்கள். எங்களுடன் எனது அழகிய மனைவியும் இருந்தாள். இங்கு வனத்தில் ஒரு அரக்கன் எனது மனைவி வைதேகியைக் கவர்ந்து சென்று விட்டான். ஆஞ்சநேயரே! நாங்கள் அவளைத்தான் தேடிக் கொண்டு அலைகிறோம். நாங்கள் எங்களைப் பற்றிய வரலாற்றைக் கூறிவிட்டோம். அந்தணரே! உங்களைப் பற்றிய கதையைத் தெளிவாகச் சொல்வீராக.” என்றான்.
இதையே ஆத்யாத்ம இராமாயணத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்று பார்க்கலாமா?
अहं दाशरथी रामस्त्वयं मे लक्ष्मणोऽनुजः ।
सीतया भार्यया सार्धं पितुर्वचनगौरवात् ॥ १९॥
आगतस्तत्र विपिने स्थितोऽहं दण्डके द्विज ।
तत्र भार्या हृता सीता रक्षसा केनचिन्मम ।
तामन्वेष्टुमिहायातौ त्वं को वा कस्य वा वद ॥
“நான் தசரத புத்திரன் ராம். இவன் எனது தம்பி இலக்ஷ்மணன். தந்தையின் உத்திரவுப்படி நான் எனது மனைவி சீதையுடன் வனம் வந்தேன். தண்டகாரண்யத்தில் என் மனைவி சீதையை ஒரு இராட்சஸன் அபகரித்துச் சென்று விட்டான். அதனால் எனது மனைவி சீதையைத் தேடி இங்கு வந்தோம்” என்று தன்னைப் பற்றிய விவரங்களை எடுத்துச் சொல்கிறான் இராமன்.
இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்கவேண்டும்.ஆத்யாத்மா இராமாயணத்தில் இராமன் தனது மனைவியின் பெயர் சீதை என்று குறிப்பிடுவதோடு சீதையை அரக்கன் கடத்திச் சென்றுவிட்டான்; சீதையைத் தேடி நாங்கள் இங்கு வந்தோம் என்று மூன்று முறை குறிப்பிடுகிறான். ஆனால் துளசி இராமாயணத்தில் இராமன் ஹனுமனிடம் ஒரு அரக்கன் கடத்திச் சென்ற தனது மனைவியான வைதேஹியைத் தேடி அலைவதாகக் குறிப்பிடுகிறான். மனைவியின் பெயரை ஜானகி என்றோ சீதை என்றோ குறிப்பிடவில்லை.
விதேகம் என்றால் தேகமற்ற உடல் என்று பொருள். அப்படியானால் வைதேஹி என்றால் தேகமற்றவள் என்று பொருள். இது எவ்வாறு சாத்தியமாகும்.? ராம சரித மானஸ் ஆரண்ய காண்டத்தில் ஒரு சம்பவம் நடந்தது. இதை முன்னமே நீங்கள் படித்திருக்கலாம். ஒரு நாள் இராமன், இலக்ஷ்மணன் வனத்தில் பழங்கள் பூக்களைச் சேமிக்கச் சென்றபோது சீதையிடம், ‘ஒரு காரணமாக நீ இந்த அக்னி குண்டத்தில் இறங்கி அக்னி பகவானிடம் அடைக்கலமாக இரு” என்று சொன்னதும் எந்த வித மறுப்பும் சொல்லாமலும், காரணம் கேட்காமலும் சீதை நெருப்பில் இறங்கி அக்னி பகவனை அடைந்தாள். நெருப்பில் இருந்து மாயா சீதை வெளி வந்தாள் மாயா சீதை என்றால் பார்பவர்கள் கண்களுக்கு சீதையின் உருவம் தெரியும். ஆனால் உண்மையில் உடலற்றவள். இது இலக்ஷ்மணனுக்கும் தெரியாது. அதைத்தான் அரக்கன் தூக்கிச் சென்றது மாயா சீதையைத் தான் உண்மை சீதையை அல்ல என்று உணர்த்தத்தான் தேகமற்ற சீதையை தூக்கிச் சென்றான் (வைதேஹி) என்று இராமான் சொன்னான் என்பதாக உரையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
“सुकुमारि सुहाई़’ என்று இராமன் சொல்வதன் பொருளாவது “அவள் மிகவும் மென்மையானவள். கரடுமுரடான இந்த வனத்திற்கு வரத் தகுதி அற்றவள். ஆனாலும் என் மீது கொண்டிருந்த அன்பின் காரணமாக உடன் வந்தாள். இப்பொழுது அவளில்லாமல் எனக்கு எந்தச் சுகமும் இல்லை” என்கிறான். இதையே துளசிதாசர் தன்னுடைய கவிதாவளி என்ற நூலில் கூறியுள்ளார்.
पुर ते निकसी रघुबीर-बधू, धरि धीर दये मर्ग में डग है ।
झलक भरि भाल कनी जल की, पुट सूखि गये मधुराधर वै ॥
फिरि बूझति हैं-”चलनो अब केतिक, पर्णकुटी करिहौ कित है?”
तिय की लखि आतुरता पिय की अँखिया अति चारु चलीं जल च्वै॥
இராமன் சீதை இலக்ஷ்மணன் மூவரும் வனவாசத்திற்காக அயோத்தியிலிருந்து இரதத்தில் கிளம்பி ஓரளவு தூரம் சென்ற பிறகு ஸ்ருங்கிபேரபுறம் நோக்கி நடக்கிறார்கள். நல்ல வெயில். இரண்டு அடிகள் எடுத்து வைத்ததுமே சீதையின் நெற்றியில் வியர்வைத் துளிகள். தண்ணீர் இல்லாமல் உதடுகள் வறண்டன. இராமனை நோக்கி “ஐயனே! இன்னும் எவ்வளவு தூரம் நாம் நடக்கவேண்டும். எவ்வளவு தூரத்தில் பர்ணசாலை அமைப்பீர்கள்” என்று கேட்கிறாள். இராமனுக்கு அவளது வேதனை புரிந்தது. அவள் களைத்துவிட்டாள் ஓய்வெடுக்க விரும்புகிறாள் என்று புரிந்து கொண்டான். அரணமனையில் இராணியாக உள்லசாமாக இருந்தவள் இன்று இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கிறாளே என்பதை நினைத்து இராமனின் கண்களில் கண்ணீர் வந்ததாம்.
மீண்டும் துளசிதாஸ்
ஹனுமனின் கேள்விகளுக்கு மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டான் இராமன். இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். வால்மீகி இராமாயணத்தில் இராமன் தான் பதிலுரைக்கவில்லை. மாறாக இலக்ஷ்மணன்தான் பதிலளித்தான்.. காரணம் இராமனுக்கு ஹனுமனைத் தெரியாது. அவரைப் பொறுத்தவரை அந்நியன். ஒரு அந்நியனிடம் தன்னைப் பற்றிய விவரங்களைக் கூற விரும்பவில்லை. மேலும் அவர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர், எந்த அரசரும் தனக்குச் சமமாக உள்ளவர்களிடம்தான் பேசுவார்கள். அதனால் அந்தப் பொறுப்பை இலக்ஷ்மணனிடம் விட்டுவிட்டார். இலக்ஷ்மணனும் துளசிதாசர் சொன்ன விவரங்களையே வால்மீகி இராமயணத்தில் கூறி உள்ளார்.
ஹனுமான் கேட்டான் “இந்தக் கடினமான கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில் மிருதுவான பாதங்கள் கொண்ட தாங்கள் ஏன் வந்தீர்கள்? “काठिन भूमि कोमल पद गामी। कवन” என்று கேட்டதற்கு தந்தையின் கட்டளைப்படி ‘हम पितु बचन मानि बन आए! வந்தோம் என்று சுருக்கமாகச் சொல்கிறார்.
இராமன் ஹனுமனிடம் எங்களுடன் எனது அழகிய மனைவியும் இருந்தாள். संग नारि सुकुमारि सुहाई.எப்படிப்பட்ட அழகு? ஏற்கனவே பல இடங்களில் சீதையின் அழகைத் துளசி தாசர் சொல்லியுள்ளார். ஆனால் இந்த இடம் ஒரு சிறப்பு வாய்ந்த இடம். துளசிதாசரின் புலமைக்கு ஒரு எடுத்தக்காட்டு. அதாவது சீதையை இராவணன் அபகரித்துச் சென்றவுடன் இராமன் சீதையைத் தேடி வனத்தில் அலைகிறான். மரங்கள், செடிகள், கொடிகள், மலைகள், நதிகள் ஆகியவற்றிடம் சீதையைப் பற்றி விசாரிக்கிறான்.
कुंद कली दाड़िम दामिनी। कमल सरद ससि अहिभामिनी॥
बरुन पास मनोज धनु हंसा। गज केहरि निज सुनत प्रसंसा
இயற்கை எல்லாம் இன்று மகிழ்கிறது —
அவள் இல்லாத உலகம்,
அழகை மீண்டும் புகழ்கிறது!
ஆனால் என் இதயம் —
அவள் இல்லாமல்,
அழகின் அர்த்தம் இழந்துவிட்டது!
“குந்த மலரின் மொட்டு, மாதுளை பழம், மின்னல், தாமரை, சரத்கால சந்திரன், பாம்பு, வருணனின் பாசம், மன்மதனின் வில், அன்னப்பறவை, யானை, சிங்கம் — இவை எல்லாம் இன்று தங்கள் அழகைப் பற்றி புகழப்படுகிறதைக் கேட்டு மகிழ்கின்றன.”
இந்தச் ஸ்லோகம், அவளின் அழகுடன் ஒப்பிடப்படும் இயற்கை உருவங்கள், இப்போது சீதையைக் காணாமல், தங்கள் அழகைப் பற்றிப் புகழப்படுவதால் மகிழ்கிறார்கள் என்கிற விலாபக் கவிதை.
இயற்கையின் அழகு கூட சீதையின் அழகின் முன்னிலையில் மங்கியதாக இருந்தது. இப்போது அவள் இல்லாததால், அவை தங்கள் பெருமையை மீண்டும் கேட்டு மகிழ்கின்றன.
இராமன் வைதேஹியைத் தேடி இங்கு வந்தோம்.என்று சொல்கிறான். இதை ஏன் ஹனுமனிடம் சொல்லவேண்டும்? ஹனுமன் அந்தண வேடத்தில் உள்ளான். திருமணத்தில் கணவன் மனைவியிடம் உன்னை வாழ்நாள் முழுவதும் கண்ணின் மணி போல பார்த்துக் கொள்வேன் என்று உறுதி அளிக்கிறான். அந்தணன் என்ற முறையில் ஹனுமன் இதை அறிந்திருப்பான். அதனால் எனது மனைவியான வைதேஹியைத் தேடி இங்கு வந்தேன் என்று சொல்கிறான்..
இராமன் எங்கள் சரித்திரத்தை நான் சொல்லிவிட்டேன். இனி உனது கதையைச் சொல் आपन चरित कहा हम गाई। बिप्र कहहु निज कथा“! உரையாசிரியர்கள் இதுவரை உள்ள “आपन चारित! இராமாயணத்தையே இராமன் சொல்லிவிட்டான் என்கிறார்கள் . எப்படி? ‘कोसलेस दसरथ के जाए” இது பால காண்டம் हम पितु बचन मानि बन आए य இது அயோத்யா காண்டம் “इहाँ हरी निसिचर बेदेही இது ஆரண்ய காண்டம் “बिप्र फिरहिं हम खोजत तेही இது கிஷ்கிந்தாக் காண்டம் .இதைச் சொல்லிவிட்டு ஹனுமனிடம் அவனைப் பற்றிய விவரத்தைக் கேட்கிறான்., ‘कहहु बिप्र निज कथा बुझाई இதன் மறைமுகமாகன பொருள் என்னவென்றால் உனது பேச்சிலும் உச்சரிப்பிலும் வேதங்களின் சாயல் தெரிகிறது.. இதைத்தான் வால்மீகியும் கூறி உள்ளார்
न अन् ऋग्वेद विनीतस्य न अ\-\-यजुर्वेद धारिणः |
न अ\-\-साम वेद विदुषः शक्यम् एवम् विभाषितुम् || ४-३-२८
नूनम् व्यकरणम् कृत्स्नम् अनेन बहुधा श्रुतम् |
बहु व्याहरता अनेन न किंचित् अप शब्दितम् || ४-३-२९
வால்மீகி ராமாயணத்தின்படி இராமன் இலக்ஷ்மணனிடம் ஹனுமன் இதுவரை பேசியதை வைத்து அனைத்து வேதங்கள் மற்றும் இலக்கணங்கள் தெரியாதவனால் இவ்வாறு பேசமுடியாது. என்று கூறுகிறான். அதைத்தான் சுருக்கமாக துளசிதாசர் கூறிவிட்டார்,. அதுபோக துளசிதாசர் “निज कथा” என்ற பதத்தையும் கொடுத்துள்ளார். இதன் பொருள் உனது தந்தை பெயர், உனது பெயர், என்ன குலம், உனது கல்வி, குருவின் பெயர், இந்த காடுகளில் நீ ஏன் சுற்றுகிறாய், யாரால் அனுப்பப்பட்டு நீ இங்கு வந்தாய் போன்ற முழு விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறான். இராமனுக்குத் தெரியாததா? ஹனுமான் வானர வடிவத்தை விட்டு இளம் பிராமணனாக வந்துள்ளான். உருவத்தை மறைத்தது போல் விவரங்களையும் மறைக்காமல் உள்ளது உள்ளபடி சொல்ல வேண்டும் என்ற தொனியில் சொல்கிறான்.
தனது விவரத்தை ‘சரித’ என்று சொல்லுகிறான் ஆனால் ஹனுமனின் விவரங்களை ‘கதா; என்று சொல்லுகிறான். இதன் உட்பொருள் “எங்களுக்கு ஒரு பிரச்னை நிகழ்ந்துள்ளது அதனால் நாங்கள் கோரமான வனத்தில் சுற்றுகிறோம். உனக்கு அப்படி என்ன பிரச்னை வந்துள்ளது? நீ ஏன் இந்த அடர்ந்த வனத்தில் சுற்றுகிறாய்” என்று தெரிந்து கொள்வதற்காக.
உத்தரகாண்டத்தின் பதினாறாவது ஸர்க்கமாக அமைவது ‘ராவணன் என்ற பெயரை அடைவது’ என்ற ஸர்க்கமாகும்.
ஒரு சமயம் புஷ்பக விமானத்தில் ராவணன் செல்லும் போது அது ஒரு இடத்தில் அசையாமல் நின்று விட்டது. ஏன் இப்படி இந்த விமானம் இங்கு நின்று விட்டது என்று ராவணன் யோசித்த சமயத்தில் சிவபெருமானின் அனுசரராகிய நந்தீஸ்வரர் அங்கு வந்து ராவணனிடம், ‘இது சங்கர பகவான் எழுந்தருளியிருக்கும் இடம். நீ திரும்பிப் போய் விடு” என்றார்.
கோபமடைந்த ராவணன், ‘இந்த சங்கரன் என்பவன் யார்?’ என்று கேட்டவாறே கைலாஸத்தை நெருங்கினான். அங்கு வானர முகத்துடன் இருந்த நந்தீஸ்வரரைப் பார்த்து அவன் அலட்சியம் செய்தான். இதனால் வெகுண்ட நந்தீஸ்வரர், “என் வானர முகத்தைக் கண்டு எள்ளி நகையாடினாய்.. உன் குலத்தை அழிக்க வானரர்கள் உதிப்பார்கள்’ என்றார்.
ராவணன் கைலாஸ மலையைப் பெயர்த்து எறிய எண்ணம் கொண்டு அந்த மலையின் அடியில் கைகளை வைத்து மலையைக் குலுக்கினான். உடனே சங்கரர் அந்த மலையை தன் திருவடிப் பெருவிரலினால் விளையாட்டாக அழுத்தினார்.
கைகள் நசுக்குண்ட நிலையில் ராவணன் ஓவென்று அலறினான். உடனே அவனது மந்திரிகள் அவனிடம் சிவபெருமானை வணங்கித் துதிக்குமாறு கூறினார்கள். ராவணனும் அப்படியே ஸ்தோத்திரங்களால் சிவனைத் துதிக்கலானான்.
இதனால் மகிழ்ந்த சங்கரர், “ஓ! தசானனா! நீ இட்ட கூச்சலினால் உலகமே நடுங்கியது. ஆகவே இனி ராவணன் என்ற பெயரை இட்டு அனைவரும் உன்னை அழைப்பார்கள் என்றார்.
அப்போது ராவணன் அவரை வணங்கி, ‘மஹாதேவரே. பிரஸன்னராய் இருக்கிறீர்கள் என்றால் வருந்திக் கேட்கும் எனக்கு ஒரு வரத்தை அருள்வீராக’ என்றான்.
ப்ரீதோ யதி மஹாதேவ வரம் மே தேஹி யாசத: |
உத்தரகாண்டம், பதினாறாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 34
மஹாதேவ – ,மஹாதேவரே ப்ரீதி: – பிரஸன்னராய் யதி – இருக்கிறீர்கள் என்றால் யாசத: – வருந்திக் கேட்கும் மே – எனக்கு வரம் – ஒரு வரத்தை தேஹி – தந்தருள்வீர்
இப்படிச் சொன்ன ராவணன் தனக்கு தீர்க்க ஆயுளைக் கேட்டதோடு ஒரு சஸ்திரத்தையும் தந்தருளுமாறு வேண்டினான்.
வாஞ்சிசதம் – பிரார்த்திக்கப்பட்டதாகிற சேஷம் – குறையாமலிருக்கிற ஆயுஷ: ச – ஆயுளையும் சஸ்த்ரம் ச ஒரு சஸ்திரத்தையும் மே – எனக்கு ப்ரயஸ்ச – தந்தருள வேண்டும்.
சிவபெருமானும் உடனே அப்படியே அருளினார். சந்திரஹாஸம் என்ற வாளை ராவணனுக்குத் தந்தார். அத்தோடு ராவணனைப் பார்த்து சங்கரர், “இந்த வாள் உன்னால் அவமரியாதை செய்யப்படத் தக்கதன்று. அப்படி அவமரியாதை செய்யப்பட்டால் இது என்னிடமே திரும்பி வந்து விடும்” என்றார்.
ராவணன் அதைப் பெற்றுக் கொண்டு தன்னிடத்திற்குத் திரும்பினான்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Purananuru wonders-31, Tamil Encyclopedia-71; One Thousand Interesting Facts -Part 71
Item 559
In Avvaiyar‘s poems in Purananuru, one notable thing is her use of Sanskrit words; she never hesitated to use them though Tamil words were available for the same .
Puranānūru 100, Poet Avvaiyār sang for Athiyamān Nedumān Anji,
Spear in his hand, beautiful warrior anklets on his legs, sweat on his body, fresh wounds on his neck, his dark, curly hair splendidly adorned with needle-like fronds from the top of young palmyra trees, entwined with huge vetchi blossoms and vēngai flowers, his enemies flee his sight, like he were a mighty elephant that had come back from battling a tiger, so that the rage he felt has not yet left him.
Alas! For those who aroused his anger, there is no escape. The eyes that saw his enemies are still red even though they see his young son!
Vaidehi Herbert’s English Translation is used; Thanks.
புறநானூறு100, பாடியவர்: ஔவையார், பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி, திணை: வாகை, துறை: அரச வாகை கையது வேலே, காலன புனை கழல், மெய்யது வியரே, மிடற்றது பசும்புண், வட்கர் போகிய வளர் இளம் போந்தை உச்சிக் கொண்ட ஊசி வெண்தோட்டு வெட்சி மா மலர் வேங்கையொடு விரைஇச், 5 சுரி இரும் பித்தை பொலியச் சூடி, வரிவயம் பொருத வயக்களிறு போல, இன்னும் மாறாது சினனே அன்னோ, உய்ந்தனர் அல்லர் இவன் உடற்றியோரே, செறுவர் நோக்கிய கண் தன் 10 சிறுவனை நோக்கியும், சிவப்பு ஆனாவே.
***
Item 560
In Puram 101, poetess Avvaiyar says , Chieftain Athiyaman will give the First day treatment for the second day, third day……………….many more days
This is because the popular saying is
You are given food in Thalai Vaazai Ilaiyile (Longest Banana leaf)
On the second day they will serve you food in Kaiyile (In your hand)
If you stay for one more day
On the third day they will serve you food on your Thalaiyile (on your head)
The meaning is, the hosts will throw you out.
Remembering this popular saying Avvai says Athiyaman treat everyone the same way irrespective of the period of your stay with him as a guest.
முதல் நாள் தலைவாழை இலையில
இரண்டாம் நாள் – கையில
மூன்றாம் நாள் – உன் தலையில
***
Puranānūru 101, Poet Avvaiyār sang for Athiyamān Nedumān Anji,
We did not go to him just for one day or two days, but brought along many and went for many days, and he welcomed us like it was the first day.
When we receive gifts from Athiyamān who owns fine chariots and elephants adorned with ornaments, they are there, whether it takes more or less time. The gifts are in our hands like a ball of food placed between the tusks of an elephant.
He will not fail us, my heart that desires food! Do not worry! May his efforts prosper!
***
புறநானூறு101, பாடியவர்: ஔவையார், பாடப்பட்டோன் அதியமான் நெடுமான் அஞ்சி, திணை: பாடாண், துறை:பரிசில் கடாநிலை ஒரு நாள் செல்லலம், இரு நாள் செல்லலம், பல நாள் பயின்று பலரொடு செல்லினும், தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ, அணி பூண் அணிந்த யானை இயல் தேர் அதியமான் பரிசில் பெறூஉங் காலம் 5 நீட்டினும் நீட்டாது ஆயினும், யானை தன் கோட்டு இடை வைத்த கவளம் போலக் கையகத்தது, அது பொய் ஆகாதே, அருந்த ஏமாந்த நெஞ்சம், வருந்த வேண்டா, வாழ்க அவன் தாளே. 10
***
Item 561 Sixteen Blessings
In Puram verse 102 Avvaiayar praised Pokuttu Ezini, son of Chieftain Athiyaman and compared him to the Full Moon. Commentators say that he is blessed with 16 boons or blessings like the Moon. Hindus believe that on Full Moon Day (Purnima) the moon has all the 16 phases; it shines bright and there is no place for darkness.
The sixteen boons or blessings according to Abhirami Bhattar’s famous poem are:
பதினாறு பேறுகள்
1. Education
2. Long Life
3. Good Friends
4. Prosperity
5. Eternal youth
6. Life without diseases
7. Steady Mind
8. Ever loving wife
9. Good Children
10.Fame
11.Truthness
12.charitableness
13.Never diminishing Wealth
14.Equnomity
15.Trouble free Life
16.Devotion to God
கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையுங் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே!
***
புறநானூறு102, பாடியவர்: ஔவையார், பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினி, திணை: பாடாண், துறை:இயன் மொழி எருதே இளைய நுகம் உணராவே, சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே, அவல் இழியினும் மிசை ஏறினும் அவணது அறியுநர் யார் என உமணர் கீழ்மரத்து யாத்த சேம அச்சு அன்ன, 5 இசை விளங்கு கவிகை நெடியோய், திங்கள் நாள் நிறை மதியத்து அனையை, இருள் யாவணதோ நின் நிழல் வாழ்வோர்க்கே?
***
Puranānūru 102, Poet Avvaiyār sang for Athiyamān Nedumān Anji’s son Pokuttu Ezhini,
Not knowing what could happen, salt merchants tie spare axles to the lower wooden beams of their wagons, since the bulls are young and not acquainted with yokes, and since there are heavy loads in the wagons which climb on mounds and go down through ditches.
O lord! You are like that spare axle, a great man with cupped hands that give. You are like the full moon. How can there be darkness for those who live under your protection?
***
Item 562 Meat Eaters
Ancient Tamils were meat eaters. Here in poem 103 Avvaiyar says hat the Virali (dancer) will get if she goes to Athiyaman’s place. Another interesting Tamil word word is MANDAI. In those days it was the begging vessel and now the meaning is head.
***
Puranānūru 103, Poet Avvaiyār sang for Athiyamān Nedumān Anji,
Hanging a pathalai drum on one side, and a small, hollow muzhavu drum on another side, O virali in the wasteland with a few bangles, you wonder who will turn your dish right side up!
If you go to him, he is not far away. He is in the land of his enemies, where in the harsh battlefield, a mass of black smoke surrounds young male elephants like clouds that surround mountains.
Ānji of many spears, even in hard times, keeps the bowls of bards filled with food, meat with fat that appear like soft adais made with wax. May all his efforts prosper!
***
புறநானூறு103, பாடியவர்: ஔவையார், பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி, திணை: பாடாண், துறை:விறலியாற்றுப்படை ஒரு தலைப் பதலை தூங்க, ஒரு தலைத் தூம்பு அகச் சிறு முழாத் தூங்கத் தூக்கிக், ‘கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்?’ எனச் சுரன் முதல் இருந்த சில் வளை விறலி! செல்வை ஆயின் சேணோன் அல்லன், 5 முனை சுட எழுந்த மங்குல் மாப் புகை மலை சூழ் மஞ்சின், மழ களிறு அணியும் பகைப் புலத்தோனே, பல் வேல் அஞ்சி, பொழுது இடைப்படாஅப் புலரா மண்டை மெழுகு மெல் அடையின் கொழு நிணம் பெருப்ப, 10 அலத்தற் காலை ஆயினும், புரத்தல் வல்லன், வாழ்க அவன் தாளே.
***
Item 562 Elephant and Crocodile simile
In Puram 104, Avvaiyar used the famous Gajendra Moksha scene as a simile. Crocodile attacking elephant Gajendra is sculpted all over India from Gupta period. Here Avvai used it to praise Athiyaman’s son. He is compared to a crocodile. An interesting simile.
***
Puranānūru 104, Poet Avvaiyār sang for Athiyamān Nedumān Anji,
Protect yourselves warriors! Let me tell you! My lord is like a crocodile that can drag in and slaughter an elephant in knee-deep, shallow water muddied by the playing feet of the little children in town.
If you don’t consider his acts, but despise him by saying “He is just a young man,” victory will come hard for you!
***
புறநானூறு104, பாடியவர்: ஔவையார், பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி, திணை: வாகை, துறை: அரச வாகை போற்றுமின் மறவீர்! சாற்றுதும் நும்மை! ஊர்க் குறுமாக்கள் ஆடக் கலங்கும் தாள்படு சில் நீர்க் களிறு அட்டு வீழ்க்கும் ஈர்ப்பு உடைக் கராஅத்து அன்ன, என் ஐ நுண் பல் கருமம் நினையாது, 5 இளையன் என்று இகழின், பெறல் அரிது ஆடே.
To be continued …………………
–Subham—
Tags- Avvaiyar‘s Sanskrit words; 31Purananuru wonders-31, Tamil Encyclopedia-71, Tamil’s sixteen Blessings, boons, Sanskrit words, Treatment of guests, item 562
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திராவிட அரைவேக்காடுகளுக்கு அவ்வப்போது ஒரு ஐயப்பாடு எழும் ; அந்தணர் என்பவர் பிராமணாளா அல்லது சன்யாசியா என்று. உண்மையைச் சொல்லப்போனால் இருவரும் ஒருவரே ; ஏனெனில் இருவரும் அறநெறிப்படி வாழ்பவர்கள்; மாமிசம், கள் சாப்பிடாதவர்கள் ; பொருளைச் சேர்த்து வைக்காதவர்கள் ; ஊர் ஊராகப் போய் பிழைப்பவர்கள் ; யாசகம் மூலம் உணவு பெறுவோர்; ஆயினும் துறவிகளுக்கு இல்லற வாழ்வு கிடையாது; அது ஒரு பெரிய வேறுபாடு; இதனால் அந்தணர் என்ற சொல்லை எல்லோரும் துறவிகளுக்கும் பிராமணர்களுக்கும் பயன்படுத்தினர்.
எச்சரிக்கை ; இதெல்லாம் அந்தக் கால பிராமணர் பற்றிய வருணனை !
கபிலர் என்ற புலவர் இன்னா நாற்பது என்று இன்னல் தரும் 40 விஷயங்களைப் பாடினார்; உடனே அவருக்கு எதிரொலியாக இன்பம் தரும் 40 விஷயங்களைப் பூதன் சேந்தனார் பாடினார். இந்த இரண்டு நூல்களும் சங்க காலத்துக்குப் பின்னர் சுமார் நான்கு அல்லது ஐந்தாவது நூற்றாண்டுகளில் தோன்றியவை; பூதன் சேந்தன் என்ற பெயரே சங்க காலப் பெயர் .
அவர் அந்தணர் என்ற சொல்லை இரண்டு இடங்களில் ஐயம் திரிபற பிராமணர்களுக்குப் பயன்படுத்துகிறார்
1
காவோ டறக்குளம் தொட்டல் மிகஇனிதே
ஆவோடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்இனிதே
பாவமும் அஞ்சாராய்ப் பற்றுந் தொழில்மொழிச்
சூதரைச் சோர்தல் இனிது.– இனியவை நாற்பது [23]
விளக்கம்:
சோலையுடன் கூடிய பொதுக் குளத்தை வெட்டுதல் இனிது. அந்தணர்க்குப் பசுவோடு பொன்னைக் கொடுத்தல் இனிது. பாவத்திற்கு அஞ்சாமல் சூதாடுகிறவர்களை நீக்கி வாழ்தல் இனியது.
(சன்யாசிகளுக்கு அந்தக் காலத்தில் யாரும் பசுவும் தங்கமும் தானமாகத் தருவது இல்லை)
2
அந்தண ரோத்துடைமை ஆற்ற மிகஇனிதே
பந்தம் உடையான் படையாண்மை முன்இனிதே
தந்தையே ஆயினுந் தானடங்கான் ஆகுமேல்
கொண்டடையா னாகல் இனிது. . . . .[07]
விளக்கம்:
பிராமணர்க்கு வேதம் ஓதுதல் இனிது. இல்லறத்தாருக்கு பற்று,பாசம் இனிது. படையுடையானுக்கு வீரம் இனிது. தந்தையே ஆனாலும் அவர் கூறும் தவறானவற்றைச் செய்யாமை இனிது
***
சங்க காலத்துக்குப் பின்னர் எழுந்த அற நூல்களை பதினெண் கீழ்க்கணக்கு என்று நம் முன்னோர்கள் பிரித்துவைத்தனர் அதில் ஒன்றுதான் ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய திருக்குறள் என்பதும் ; கிட்டத்தட்ட அதே காலத்தில்தான் தொல்காப்பியம், சிலப்பதிகாரம் முதலிய நூல்களையும் எழுதினார்கள்.
ஒரு விஷயத்தை மறந்துவிடக்கூடாது சிலப்பதிகார நிகழ்ச்சிகள் நடந்தது சங்க காலத்தில்தான்; அதே போல தொல்காப்பியம் சொல்லும் விதிகளும் சங்க கால விதிகள்தான்; அதை யாரோ ஒருவர் தொகுத்த காலம் பிற்காலம் என்பதை எளிய நடையும் ஸம்ஸ்ருதச் சொற்களும் பல புதிய வழக்கங்களும் காட்டிவிடும்; எடுத்துக்காட்டாக சிலப்பதிகாரத்தில் நாரதர் வருகிறார்; வீணை வருகிறது. சங்க கலத்தல் இதைக் காணமுடியாது; லிங்கம், கணபதி சிவன் என்ற சொற்களைக் காண முடியாது இவை பிற்காலத்தில் வந்தவை ; இளங்கோ கூட சிவகதி நாயகன் என்பவற்றை சமணர்க்குதான் பயன்படுத்துகிறார் சிவ பெருமானுக்கு அல்ல.
இன்னொரு விஷயத்தையும் சொல்லிவிடுகிறேன்; ஒரு பொருளை ஒருவர் சொல்லாததால் அது அக்காலத்தில் இல்லவே இல்லை என்று எண்ணிவிடாதீர்கள்; அதை வழக்கில் பயன்படுத்தவில்லை என்பதே உண்மை.
பிராமணர்களுக்கு அளிக்கப்படும் 16 தானங்களில் பசுவும் தங்கமும் முக்கியம் ; இந்தோனேஷியாவின் அடர்ந்த காட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட மூல வர்மன் கல்வெட்டும் பூரண வர்மன் கல்வெட்டும் சம்ஸ்க்ருதத்தில் எழுதிவைத்துள்ளனர் அவரின் காலம் 1600 ஆண்டுகளுக்கு முன்! போர்னியோ தீவில் இருந்த கல்வெட்டுகள் இப்போது மியூசியங்ககளில் உள்ளன.
***
Pictures சதீசன் மோடி துலாபாரம் கொடுத்தது
செங்குட்டுவனிடம் 70 கிலோ தங்கம் வாங்கிய பிராமணன்
சிலப்பதிகாரத்தில் பிராமணன் மாடல மறையோன் என்பவன்தான் முக்கிய கதாபாத்திரம் கண்ணகி கோவலன் செங்குட்டுவன் வரலாறுகளை இணைக்கும் சங்கிலி இவன் ; அவனுடைய பங்கினை அகற்றிவிட்டால் சிலப்பதிகாரம் துண்டு துண்டாகத் தோன்றும்; செங்குட்டுவனை ஊக்குவித்து போர் செய்ய வைத்தவன் இறுதியில் யாக யக்ஞங்கள் செய் என்று அறிவுறுத்துகிறான்; இதற்காக அவனுக்கு செங்குட்டுவன் எடைக்கு எடை துலாபாரத்தில் தங்கம் கொடுத்தான் என்று சிலப்பதிகாரம் செப்பும்!
அன்மையில் புதிதாக கேரள முதல்வராகப் பொறுப்பேற்ற கங்கிரஸ் கட்சி முதலமைச்சர் சதீசன் எடைக்கு எடை வெண்ணெய் கொடுத்தார் அவருடைய எடை 71 கிலோ ; செங்குட்டுவனுக்கு 70 அல்லது 80 கிலோ இருந்திருப்பான் ஆகையால் அந்த பிராமணனுக்கு – மாடல மறையோனுக்கு அடித்தது லக்கி பிரைஸ்— Lucky Prize ! 80 கிலோ தங்கம் !
***
துலாபாரம் பிரதமர் மோடி முதல் எல்லோரும் இன்றுவரை செய்யும் சடங்கு ; குருவாயூர் மட்டுமின்றி தமிழ் நாட்டின் பல கோயில்களிலும் துலாபாரம் ‘துலா’க்களை– அதாவது தராசுகளைக் –காணலாம்.
–subham — Lucky Prize
Tags-பிராமணர், அந்தணர், துலாபாரம் இனியவை நாற்பது, பசு தங்கம் தானம், பூரண வர்மன், மூல வர்மன் கல்வெட்டுகள் இந்தோனேஷியா, பூதன் சேந்தன் புத்திமதி, செங்குட்டுவன், மாடல மறையோன்