Written by London Swaminathan
Post No. 15,972
Date uploaded in London – 11 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part – 8
46
அசப்தம் அஸ்பர்சம் ரூபம் அவ்யயம் ததா அரஸம்
நித்யம் அகந்தவத் ச யத்
அனாதி அனந்தம் மகத: பரம் த்ருவம் நிசாய்ய தன் ம்ருத்யு
முகாத் ப்ரமுச்யதே
—கடோபநிஷதம் 3-15
ஆத்மாவானது ஓசையில்லாதது, தொட்டு உணர முடியாதது, உருவமில்லாதது, அழிவற்றது, அங்ஙனமே சுவையற்றது , எப்பொழுதும் இருப்பது, மண மில்லாதது, துவக்கமும் முடிவுமில்லாதது, மஹத்துக்கும் மகத்தானது , அசையாதது . அந்த ஆத்மனை அனுபூதியில் அடைந்தவன் மரணத்தின் வாயிலிருந்து விடுபடுகிறான் .
अशब्दमस्पर्शमरूपमव्ययं तथाऽरसन्नित्यमगन्धवच्च यत् ।
अनाद्यनन्तं महतः परं ध्रुवं निचाय्य तन्मृत्युमुखात्प्रमुच्यते ॥ १५ ॥
aśabdamasparśamarūpamavyayaṃ tathā’rasannityamagandhavacca yat |
anādyanantaṃ mahataḥ paraṃ dhruvaṃ nicāyya tanmṛtyumukhātpramucyate || 15 ||
****
47
பராஞ்சி கானி வ்யத்ருணத் ஸ்வயம்பூ: தஸ்மாத்
பராங் பச்யதி நாந்தராத்மன்
கஸ்சித்தீர : ப்ரத்யகாத்மானம் ஐக்ஷத் ஆவ்ருத்த
சஷூ : அம்ருதத்வம் இச்சன்
—கடோபநிஷதம் 2-1-1
தானாகாத் தோன்றிய பிரம்மதேவன் ஐம்புலன்களையும் வெளியே திரியும்படி படைத்தான். ஆகையினால் புறத்தில் இருப்பவைகளையே அவன் காண்கிறான். உள்ளேயிருக்கும் ஆத்மாவை அவன் அறிந்ததில்லை; மரணமின்மையை விரும்பும் யாரோ ஒரு பேரறிஞன் கண்களை உள்புறமாகத் திருப்பி ஆத்ம தர்சனம் பெறுகிறான் .
पराञ्चि खानि व्यतृणत्स्वयम्भूस्तस्मात्पराङ्पश्यति नान्तरात्मन् ।
कश्चिद्धीरः प्रत्यगात्मानमैक्षदावृत्तचक्शुरमृतत्वमिच्छन् ॥ १ ॥Katha Upanishad (2.1.1)
parāñci khāni vyatṛṇatsvayambhūstasmātparāṅpaśyati nāntarātman |
kaściddhīraḥ pratyagātmānamaikṣadāvṛttacakśuramṛtatvamicchan || 1 ||
****
48
தம் துர்தர்சம் கூடமனுப்ரவிஷ்டம்
குஹாஹிதம் கஹ்வரேஷ்டம் புராணம்
அத்யாத்ம யோகாதிகமேன தேவம் மத்வா தீரோ
ஹர்ஷசோகெள ஜஹாதி
—கடோபநிஷதம் 2-12
உடலில், உள்ளத்தினுள்ளே வீற்றிருப்பதும், ஊடுருவியிருப்பதும் , நுண்ணியதும், காண்பதற்கரியதுமான ஆகிய பிரகாசம் பொருந்திய பழம்பொருளை உள்முக தியானத்தினால் அனுபவத்தில் அறிகிறஞானிக்கு இன்பமும் துன்பமும் இல்லை .
तं दुर्दर्शं गूढमनुप्रविष्टं गुहाहितं गह्वरेष्ठं पुराणम् ।अध्यात्मयोगाधिगमेन देवं मत्वा धीरो हर्षशोकौ जहाति ॥ १२॥
taṃ durdarśaṃ gūḍhamanupraviṣṭaṃ guhāhitaṃ gahvareṣṭhaṃ purāṇam .adhyātmayogādhigamena devaṃ matvā dhīro harṣaśokau jahāti .
Katha Upanishad (1.2.12)
****
49
நாவிரதோ துஸ்சரிதான்னாசாந்தோ நாசமாஹித :
நாசாந்தமானஸோ வாபி ப்ரக்ஞானேனைனமாப்னுயாத்
—-கடோபநிஷதம் 1-2-24
நுண்ணறிவு படைத்திருந்தாலும் இந்த ஆத்மனை அடையும் பேறு, தீய ஒழுக்கத்தினின்று விலகாதவர்க்கில்லை; புலனடக்கம் பெறாதவர்க்கில்லை; தியானம் பயிலாதவர்க்குமில்லை; மனம் அடங்கப்பெறாதவனுக்கும் இல்லை .
नाविरतो दुश्चरितान्नाशान्तो नासमाहितः ।
नाशान्तमानसो वापि प्रज्ञानेनैनमाप्नुयात् ॥ २४ ॥
Katha Upanishad Verse 1.2.24
nāvirato duścaritānnāśānto nāsamāhitaḥ |
nāśāntamānaso vāpi prajñānenainamāpnuyāt || 24 ||
****
50
ப்ரஹ்மைவேதமம்ருதம் புரஸ்தாத் ப்ரஹ்ம பஸ்சாத்
ப்ரஹ்ம தக்ஷிணதஸ்சோத்தரேண
அதஸ்ஸோர்த்வம் ச ப்ரஸ்ருதம் ப்ரஹ்மைவேதம்
விச்வமிதம் வரிஷ்டம்
–முண்டகோபநிஷத் 2-2-11
இது எல்லாம் அழியாப் பொருளாகிய பிரம்மமே. முன்புறம் இருப்பது பிரம்மம் ;பின்புறம் இருப்பது பிரம்மம் ; வலப்புறம் இருப்பது பிரம்மம் ; இடப்புறம் இருப்பது பிரம்மம் ; கீழும் மேலும் வியாபித்திருப்பதும் பிரம்மம்; இந்தப் பிரபஞ்சம் முழுதும் பிரம்மமே .
ब्रह्मैवेदममृतं पुरस्ताद्ब्रह्म पश्चाद्ब्रह्म दक्षिणतश्चोत्तरेण ।
अधश्चोर्ध्वं च प्रसृतं ब्रह्मैवेदं विश्वमिदं वरिष्ठम् ॥ ११ ॥
brahmaivedamamṛtaṃ purastādbrahma paścādbrahma dakṣiṇataścottareṇa |
adhaścordhvaṃ ca prasṛtaṃ brahmaivedaṃ viśvamidaṃ variṣṭham || 11 ||
To be continued……………….
Tags- முக்கிய உபநிஷத மந்திரங்கள், Part – 8, கடோபநிஷத், முண்டகோபநிஷத் Written by London Swaminathan