WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,999
Date uploaded in London – 21 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் வரங்கள் 66 – சூரிய பகவான் ஹனுமாருக்கு வரம் அளித்தது!
ச. நாகராஜன்
உத்தரகாண்டத்தின் முப்பத்தாறாவது ஸர்க்கமாக அமைவது ‘ஹனுமார் வரம் பெற்றுக் கொள்வது’ என்னும் ஸர்க்கமாகும்.
ஶ்ரீ ராமர் அகத்திய முனிவரிடம் ஹனுமாரின் வரலாறைச் சொல்லுமாறு கேட்க அவர் ஹனுமாருக்கு இந்திரன் வரம் கொடுத்ததைக் கூறி விட்டு அடுத்ததாக சூரிய பகவான் ஹனுமானுக்கு வரம் தந்ததை இப்படிக் கூறுகிறார்: :
மார்தாண்டஸ்த்வபரவீத்தத்ர பகவான்ஸ்திமிராபஹ: | தேஜஸொஸ்ய மதீயஸ்ய ததாமி ஷதிகாம் கலாம் ||
(உத்தர காண்டம் 36ம் ஸர்க்கம் ஸ்லோக எண் 13)
திமிராபஹ: – இருளை அழிக்கும் மார்தாண்ட – சூரிய பகவான் – பகவான் தத்ர – அப்பொழுது து – இவ்விஷயத்தில் இப்படி அப்ரவீத் – நியமித்தருளினார் மதீயஸ்ய – ‘எனது தேஜஸா – தேஜஸின் ஷதிகாம் – நூற்றிலொரு கலாம் – கலையை அஸ்ய – இவனுக்கு ததாமி – கொடுக்கிறேன்
யதா து சாஸ்த்ராண்யத்யேதும் ஷக்திரஸ்ய பவிஷ்யதி | ததாஸ்ய சாஸ்த்ரம் தாஸ்யாமி யேன வாக்மி பவிஷ்யதி ||
ந சாஸ்ய பவிதா கச்ஸித்சத்ருஷ: சாஸ்த்ரதர்ஷனே ||
(உத்தர காண்டம் 36ம் ஸர்க்கம் ஸ்லோக எண் 14)
அஸ்ய – இவனுக்கு சாஸ்த்ராணி – சாஸ்திரங்களை அத்யாதும் – கற்றுக் கொள்ள ஷக்தி – சக்தி யதா – எப்பொழுது பவிஷ்யதி – உண்டாகிறதோ ததா – அப்பொழுது சாஸ்த்ரம் – சாஸ்திரத்தை தாஸ்யாமி ச – நானே உபதேசிக்கிறேன் யேன – அதனால் வாக்மி – வாக் வல்லமை உடையவனாய் பவிஷ்யதி – விளங்குவான் சாஸ்த்ர தர்ஷனே – சாஸ்திர ஞானத்தில் அஸ்ய – இவனுக்கு சத்ருஷ: – இணையானவன் கஸ்சித் து – மற்ற எவனொருவனும் ந பவிதா – இருக்க மாட்டான்
இப்படி சூரிய பகவான் ஹனுமாருக்கு அற்புதமான சாஸ்த்ர ஞான வரத்தை அருளினார். இது கேட்காமல் தானாக தரப்பட்ட வரமாகும்.
**