
Written by London Swaminathan
Post No. 16,243
Date uploaded in London – 27 September 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
விந்திய மலை

தென் இந்தியாவையும் வட இந்தியாவையும் பிரிக்கும் நீண்ட மலைத் தொடருக்கு விந்திய மலை என்று பெயர் . இது இமய மலை போல தொடர்ச்சியாக இல்லாமல் விட்டு விட்டு 1200 கிலோமீட்டர் தூரம் செல்கிறது . குஜராத்தில் துவங்கி மத்தியப்பிரதேசம் வழியாக உத்தர பிரதேசம் பீஹார் மாநிலங்கள் வரை செல்கிறது . நர்மதை, தபதி நதிகளின் பிறப்பிடம் இது. விந்த்யாவாஸினி என்னும் தேவியின் உறைவிடம் இது . புராணங்களில் விந்திய மலையை அகஸ்திய மகரிஷி கர்வபங்கம் செய்த கதை வருகிறது ; பகீரதன் , பலராமன் போல அகஸ்தியர் மாபெரும் எஞ்சினீயர் GREAT CIVIL ENGINEER;பொறியியல் வல்லுநர். பகீரதன் கங்கை நதியை இன்றைய பாதையில் திருப்பிவிட்டதால் கங்கைக்கு பாகீரதி என்ற பெயர்; கிருஷ்ணனின் அண்ணன் பலராமன் , தனது கோடாரியால் யமுனை நதியைத் திருப்பிவிட்டான். அகஸ்தியர் காவிரியை எந்தப் பக்கம் திருப்பிவிடுவது என்று மணலில் ப்ளுபிரிண்ட் BLUE PRINT வரைந்தபோது ஒரு காகம் வந்தது; அவருடைய கமண்டலத்தைத் தட்டிவிடவே அட! கடவுளே சொல்லிவிட்டார் ! என்று எண்ணி கமண்டல நீர் ஒடிய திசையில் காவிரி நதியைத் திருப்பிவிட்டார் ; அதே போல விந்திய மலை வழியாக சாலைப்பாதை அமைத்து பொதிய மலைக்கு வந்தார் ; அவருக்கு முன்னர் தென் இந்தியாவுக்கு வந்தோர் கடற்கரை வழியாக நடந்து வந்தனர். அகஸ்தியருக்குப் பிறகு எல்லோரும் மலைப் பாதையைப் பயன்படுத்தினார்கள்; இதை புராணங்கள் விந்திய மலை கர்வ பங்கம் என்று வருணிக்கிறது .
Vindhya (विन्ध्य).—விந்திய மலை, ஏழு குல பர்வதங்களில் ஒன்று; நாசிக் கல்வெட்டு, யசோதர்மனின் மாண்டாசூர கல்வெட்டு முதலிய எட்டு கல்வெட்டுகளில் விந்திய மலை குறிப்பிடப்படுகிறது. மனு ஸ்ம்ர்தி எழுதப்பட்ட காலத்திலேயே இந்துக்கள் மாபெரும் பூகோள / புவியியல் விற்பன்னர்களாக இருந்தார்கள் ; மத்திய தேசம் என்பது எது என்று விளக்கப்போந்த மனு (2-21), விந்தியமலையை ஒரு எல்லையாகக் குறிப்பிடுகிறார்
हिमवद्विन्ध्ययोर्मध्यं यत् प्राग् विनशनादपि ।
प्रत्यगेव प्रयागाच्च मध्यदेशः प्रकीर्तितः ॥ 2-२१ ॥
himavadvindhyayormadhyaṃ yat prāg vinaśanādapi |
pratyageva prayāgācca madhyadeśaḥ prakīrtitaḥ ||2- 21 || MANU SMRITI
The country lying between the Himālaya and the Vindhya, to the east of Vinaśana and to the west of Prayāga, is called the ‘Madhyadeśa,’ the ‘Middle Country.’ (2-21)
Vinaśana= PLACE WHERE SARASVATI RIVER DISAPPEARED; SCHOLARS THINK THAT IS KURUKSHETRA.
***
விஷ்ணு
விஷ்ணு என்பவர் பிரம்மா -விஷ்ணு- சிவன் என்ற மும்மூர்த்திகளில் ஒருவர் ; உயிரினங்களைப் படைப்பது பிரம்மாவின் தொழில்; காப்பது விஷ்ணுவின் தொழில்; அவர்களைக் கடைத்தேற்றுவது சிவனின் தொழில்; விஷ்ணுவின் பெருமையை அறிய வேண்டுமானால் விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்துக்கு ஆதி சங்கரர் எழுதிய விஷ்ணு ஸஹஸ்ரநாம உரையை- பாஷ்யத்தைப்– படித்தால் போதும் . அவர் எடுத்த 24 அவதாரங்களில் தசாவதாரம் என்னும் பத்து அவதாரங்களை அறியாதோர் எவருமில்லை ; பிராமணர்கள் தினமும் மூன்று முறை செய்யும் சந்தியாவந்தனத்தில் விஷ்ணுவின் 12 பெயர்களைச் சொல்லி உடலின் 12 பாகங்களை நீர்த்துளியால் தொட்டுக்கொள்வார்கள்; பலருக்கும் சங்க இலக்கிய புலவர் பெயர்களில் விஷ்ணுவின் பெயர் இருப்பது தெரியாது; விண்ணந்தாயன் என்பது விஷ்ணுதாசன்; கண்ணந்தாயன் என்பது கண்ணதாசன் ; இது பலருக்கும் தெரியாது; ஆனால் சங்கப் புலவர் பெயர்களில் தாமோதரன், கேசவன் என்ற பெயர்கள் இருப்பதும் வால்மீகி, பிரம்மா, காமாட்சி (காமக்கண்ணி) என்ற பெயர்கள் இருப்பதும் பலருக்கும் தெரியும் . விஷ்ணு என்றால் விண்= எங்கும் வியாபித்தவர் ; இதே பொருளில் தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் வருகிறது ; இவருடைய வாகனம் கருடன் ; கைகளில் வைத்திருப்பது சங்கு -சக்ரம்; இதுவும் சங்க இலக்கியத்தில் வருகிறது; மேலும் ஐம் படைத்தாலி என்னும் அரை ஞான் கயிறு அல்லது கழுத்து மாலையில் உள்ள பதக்கத்திலும் விஷ்ணுவின் ஐந்து சின்னங்கள் பொறிக்கப்பட்டிருக்கும் ; விஷ்ணு சஹஸ்ர நாம ஸ்தோத்திர வரிகள் அப்படியே நற்றிணை என்னும் சங்க இலக்கியப்பாடலின் கடவுள் வாழ்த்தாக வந்துள்ளது! தொல்காப்பியர் இவரை மாயோன் என்று கூறியுள்ளார்; அதன்பொருள் இவர் காக்கா கருப்பு நிறமுடைய பேரழகன் ! கல்வெட்டுகளில் அதிகம் குறிப்பிடப்படுகிறார் ; 2200 ஆண்டுகளுக்கு முன்னர் மத்தியபிரதேச பெஸ்நாகரில் கருட ஸ்தூபி வைத்த கிரேக்க நாட்டு ஹீலியோடோரஸ் கூட, தன்னை பரம பாகவதன் என்று அறிவிக்கிறான்; பாகவத என்பது விஷ்ணு பக்தர்கள் சூட்டிக்கொள்ளும் அடைமொழி ; பல பல்லவ மன்னர்களும் குப்தர்களும் தங்களை பரம பாகவதர்கள் என்று அழைத்துக்கொள்கிறார்கள் ( என்னுடைய விஷ்ணு ஸஹஸ்ரநாம அதிசயங்கள் என்ற புஸ்தகத்திலும் இதே பிளாக்கில் வெளியான கட்டுரைத் தொடர்களிலும் அதிசயங்களை பட்டியலிட்டுள்ளேன்). The Ghosundi Inscription of the 2nd century B.C., சங்கர்ஷ்ண – பலராம- வாசுதேவ வழிபாட்டு மண்டபத்தைச் சுற்றி ஒரு சுவர் எழுப்பிய செய்தியை 2200 ஆண்டுகளுக்கு முந்தைய கொசுண்டி கல்வெட்டில் காண்கிறோம் ; குமரி முதல் இமயம் வரை கோவில்களில் வழி படப்பட்ட செய்தியை சாசனங்கள் மூலம் அறிய முடிகிறது; அதைவிட 2400 ஆண்டுகளுக்கு முன்னர் அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியனின் ஓரிஜினல் பெயர் விஷ்ணு குப்தன் என்பது முக்கியமானது ஆகும்.
கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இந்தக் காலத்தில் அவரை மிஸ்டர் மஹாதேவன் என்று அழைக்கலாம். மஹாதேவன் என்று சிவன் பெயரை வைத்துக் கொண்டு இவர் பாடியது மஹாபாரதம்! சரி போகட்டும்! என்று விட்டுவிட முடியவில்லை. இவர் நற்றிணையில் பாடிய கடவுள் வாழ்த்து விஷ்ணு சஹஸ்ர நாமம் என்னும் மஹாபாரதப் பகுதியாகும்! அதில் விஷ்ணுவின் புகழைப் பாடுகையில்
மாநிலம் சேவடி ஆக, தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கை ஆக
விசும்பு மெய் ஆக, திசை கை ஆக
பசுங்கதிர் மதியமொடு சுடர் கண் ஆக
இயன்ற எல்லாம் பயின்று; அகத்து அடக்கிய
வேத முதல்வன் என்ப
தீது அற விளங்கிய திகிரியோனே (கடவுள் வாழ்த்து)
இது விஷ்ணு சஹஸ்ரநாமத்தில்,
க்ஷீரோதந்வத் ப்ரதேசே சுசிமணி விலஸத்ஸைகதே
என்று துவங்கும் தியான ஸ்லோகத்தில்
“பூ: பாதௌ யஸ்ய நாபிர் வியதஸுர நில: சந்த்ர ஸூர்யௌ ச நேத்ரே
கர்ணா வாசாச் சிரோத் த்யௌர் முகமபி தஹனோ யஸ்ய வாஸ்தேயமப்தி:” — என்பதன் மொழி பெயர்ப்பாகும்.
***
விஷ்ணு குப்தன்
அர்த்தசாஸ்திரம் என்னும் உலகத்தின் முதல் பொருளாதார நூலை எழுதிய சாணக்கியரின் இயற்பெயர் விஷ்ணுகுப்தன்;
Vishnu gupta
Viṣṇugupta (विष्णुगुप्त).—Name of Chāṇakya.
Viṣṇugupta (विष्णुगुप्त):—astronomer. வானியல் ஆராய்ச்சியாளர் ஒருவரும் விஷ்ணுகுப்தர் என்ற பெயரில் வாழ்ந்ததை வராஹமிஹிரர் மேற்கோள் காட்டுகிறார் அப்படியானால் அவர் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருக்க வேண்டும் .
நேபாள நாட்டில் ஒரு மன்னனுக்கும் இதே பெயர் இருந்தது கல்வெட்டுகளில் எழுதப்பட்டுள்ளது. ஒரு வைஷ்ணவனின் பெயராக குப்தர் கல்வெட்டுகளில் வருகிறது
நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டு நகரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கோவிலுக்கும் விஷ்ணு குப்தர் பெயர்தான்!
Viṣṇugupta (विष्णुगुप्त) (=Viṣṇugun) is another name for Viśāṅkhunārāyaṇa—a shrine is located approximately 20 km southeast of Kathmandu on a hill in the foothills of Mount Phulcoki.
***
விஸ்வாமித்திரர்

க்ஷத்ரிய வம்சத்தில் பிறந்து பிராமண ஜாதிக்கு உயர்த்தப்பட்ட மாபெரும் மன்னன் ; மகரிஷி ; இவர் கண்டுபிடித்த காயத்ரீ மந்திரத்தைத்தான் பிராமணர்கள் மூன்று வேளை சந்தியாவந்தனத்தில் சொல்லிவருகிறார்கள் ! மக்களைத் தீய வழியில் திசை திருப்பிய மூன்று விஷயங்களை புத்தர் , ஏசு கதைகளிலும் படிக்கிறோம்; அந்த 3 தீய குணங்களை வென்றால் ஒருவர் பிராமணர் ஆகலாம் ; அப்படி ஆனவர் வசிஷ்ட மகரிஷி ; அவரை ஒருநாள் மன்னர் என்னும் படா ஜபர்தஸ்துடன், பட்டாளம் சகிதம் காணச் சென்றார் விசுவாமித்திரர். அவரும் இன்முகத்துடன் வரவேற்று பெரிய பட்டாளத்துக்கு பால் பாயசம் தந்தார் ; ஏனய்யா காட்டுக்குள் வசிக்கிறீர் ; உமக்கு இவ்வளவு லிட்டர் பாலை சப்ளை செய்தது எந்தக் கம்பெனி? என்று வினவவே அவர் விடை பகர்ந்தார் : என்னிடம் காம தேனு என்னும் விண்ணுலக அதிசயப் பசு பெற்று எடுத்த நந்தினி என்னும் பசு இருக்கிறது; அது வேண்டுமளவுக்குப் பால் கொடுக்கும் என்றார் ; ஓகே !ஓகே! அது எனக்கு சொந்தமாக வேண்டும் என்று ரெளவுடிகள் பாஷை யில் உத்தரவிட்டார் ; வசிஷ்டர் சிரித்துக்கொண்டே முடியாது அப்பனே! என்றார் ; டேய் ! நான் மன்னன் டா ! என்று சொல்லிவிட்டு ரெளவுடிகள் பாணியில் “ஏய் பிடிச்சு இழுங்கடா பசுவை” என்றார் ; வசிஷ்டாரோ மாபெரும் தபஸ்வி ; ஏய் நந்தினி உன் வேலையைக் காட்டு என்றார்; உடனே பசுவின் வாலில் இருந்து யவனர் மிலேச்சர் சஹர,ஹுஉணர் போன்ற எல்லா கீழ்ஜாதிப் பட்டாளங்களும் புறப்பட்டு விசுவாமித்திரர் படையைத் துவம்சம் செய்த து ; விசு.வுக்கு அவமானம் தாங்கவில்லை ; சரி! உம்மைப்போல சக்தி பெற நான் என்ன செய்ய வேண்டும்? என்றார்; ரொம்ப ரொம்ப சிம்பிள் ; காம- க்ரோத- லோபம் என்னும் மூன்றையும் கடந்தால் பிராமணர் ஆகலாம் என்றார் ; அப்படியா உம்முடைய வாயால் என்னை பிரம்ம ரிஷி (பிராமணன்) என்று அழைக்கும் காலம் வரும்! பார்! என்று சவால் விட்டுவிட்டுப் புறப்பட்டார். வசிட்டனும் ததாஸ்து (அப்படியே ஆகட்டும் ) என்று ஆசீர்வதித்தார் .
விசு. மிகவும் கஷ்டப்பட்டு வசிட்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்ற கதை ஏற்கனவே இந்தக் கட்டுரைத் தொடரில் வந்துள்ளது. ஆகையால் மிகவும் சுருக்கமாக :
தவம் செய்தார் ; செய்தார் ; செய்துகொண்டே இருந்தார் ; மேனகா என்ற பேரழகி வந்து நம்ம ஓர் காலேஜ் கேர்ள் போல ட்ரஸ் போட்டுக்கொண்டு வந்து டான்ஸ் ஆட , விசு. மயங்கிப்போய் அவளோடு ஓடிப்போய் குடும்பம் நடத்தினார் ; ஒருநாளைக்குப் புத்தி வந்தது !உடனே காட்டுக்கு ஓடினார் ; திரிசங்கு என்ற மன்னன் வந்தான் ; இந்தாப்பா ; உன் எதிரி வசிட்டன் என்னை உடலோடு சொர்க்கத்துக்கு அனுப்ப எந்த வழியும் இல்லை என்கிறான்.
அப்படியா வசிட்டனை மட்டம் தட்டுகிறேன் என்று பெரிய யாகங்களை நடத்தி போ சொர்கத்ததுக்கு என்றவுடன் , திரிசங்கு உடல் விர் விர்ரென்று ஹாட் ஏர் பலூன் HOT AIR BALLON போல மேலே சென்றது ஆனால் இந்திரன் , அப்பனே இந்த உடலுடன் நான் யாரையும் அனுமதிப்பதில்லை ; ஒளி LIGHT ரூபமாக வருவோருக்கே இங்கே அனுமதி என்று தள்ளிவிட்டான் ; திரிசங்கு அந்தரத்தில் தொங்கினான் ; விசு. சொன்னார்: அதனால் என்ன! உன்னைக் காலத்தால் அழியாத சதர்ன் க்ராஸ் SOUTHERN CROSS / திரிசங்கு ந ட்சத்திரம் ஆக்கி விடுகிறேன் உன்னை தென் கோளார்த்த நாடுகள் எல்லாம் கொடியில் பொறிக்கட்டும் போ என்றார் (இன்றும் ஆஸ்திரேலியா நியூசிலாந்து பிரேசில் போன்ற ஐந்து நாட்டுக் கொடிகளிலும் அரசங்க சின்னத்திலும் திரிசங்கு நட் ச்சத்திரத்தைத்தான் பொறித்துள்ளார்கள் ; அவர்கள பாஷையில் தெற்குச் சிலுவை= சதர்ன் க்ராஸ் SOUTHERN CROSS என்று பெயர்)
அரிச்சந்திரன் உண்மை விளம்பிதானா என்று சோதிக்க அவனைப் படாத பாடு படுத்தினார் விசு. அவ்வளவு திமிர் ; இந்தக் கதையை அம்மா சொல்லிக் கேட்ட மஹாத்மா காந்தி, உண்மையே கடவுள் என்றும் புஸ்தகம் எழுதினார்
விசு. மீண்டும் தவம் செய்தார் ; பிரம்மனைக் கன்னடர்; பிராமணன் ஆனார் ; வசிட்டரிடம் போனார் ; HELLO MR BRAHMANA ! WELCOME, WELCOME TO MY HUT! ஹலோ ; பிரம்மா ரிஷி வெல்கம் வெல்கம் டு மை குடிசை என்றார் ; விசுவுக்கு மகிழ்ச்சி பொங்கியது; உலகம் புகழும் நான்கு வேதங்களிலும் உள்ள காயத்ரீ மந்திரத்தை ரேடியோ அலை போல ரிஸீவ் செய்து மக்களுக்கு அளித்தார் ; இன்றும் கோடிக்கணக்கானோர் இந்தக் காயத்ரீ மந்திரத்தைச் சொல்கின்றனர்; இதை மூன்று வேளைகளில் சோளத்தவன் பிராமண இல்லை என்பதை மனு முதல் இப்போத்துள்ள சங்காராச்சார்யார்கள் வரை சொல்லிவருகின்றனர் விசு.வின் காயத்ரீ மந்திரத்தை பாரதியாரும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார் . விசு.வின் ஒரிஜினல் பெயர் ஆந்தை ; அதாவது அவருடைய சிம்பல்SYMBOL ஆந்தை ; தமிழிலும் பிசிர் ஆந்தை பெயருடன் சங்க புலவர் உள்ளார் ஆந்தை என்றால் கெளசிக என்று சம்ஸ்க்ருதத்தில் பொருள்; பரத்வாஜ என்றால் காக்கை / காகம் என்று பொருள்! ஒவ்வொரு மகரிஷிக்கும் ஒரு சிம்பல் உண்டு. விசுவாமித்திரரின் பொருள் = உலக நண்பன் ! FRIEND OF THE WORLD! சங்கத் தமிழில் யாவரும் கேளிர்!
பாரதியின் காயத்ரீ மந்திர மொழியாக்கம் :
“செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்;
அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக!”
இதை எல்லோரும் 108 முறை சொன்னால் பிராமணர் ஆகலாம் !மறந்து விடாதீர்கள் – மாணிக்க வாசகரின் கட்டளையை – “சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார்” என்ற பாடல் வரியின் பொருள் பின்வருமாறு:
பொருள்:
திருவாசகப் பாடல்களின் ஆழ்ந்த பொருளை முழுமையாக உணர்ந்து, மனமுருகிப் பாடுபவர்கள், சிவபெருமானின் இருப்பிடமாகிய சிவபுரத்தில் (முத்தி உலகில்) என்றும் அழியாத பேரின்பச் செல்வத்தைப் பெற்று வாழும் தகுதியைப் பெறுவார்கள்.இது காயத்ரீ மந்திரத்துக்கும் பொருந்தும்
To be continued…………………..
–subham—
TAGS- காயத்ரீ மந்திரம், விஸ்வாமித்திரர் , விந்திய மலை , HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-121; இந்து மத கலைச்சொல் அகராதி-121