ராமாயணத்தில் வரங்கள் 76 –  சிவபிரானும் பார்வதியும் இலனுக்கு வரம் அளித்தது! (Post.16,253)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,253

Date uploaded in London – 30 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் 76 –  சிவபிரானும் பார்வதியும் இலனுக்கு வரம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் எண்பத்தேழாவது ஸர்க்கமாக அமைவது ‘இல மஹாராஜனின் சரிதம்’ என்னும் ஸர்க்கமாகும்.

லக்ஷ்மணர் அஸ்வமேத யாகத்தின் மஹிமையை ராமருக்குக் கூற அதைக் கேட்ட ராமர், “அஸ்வமேத யாகத்திற்கு இன்னொரு மஹிமையும் உண்டு” என்று கூறி இல மஹாராஜாவின் சரிதத்தைக் கூறலானார்.

கர்தமரின் புத்திரனாகிய இலன் சித்திரை மாதத்தில் அழகான வனத்தில் வேட்டையாட முற்பட்டு மிருகங்களை நூறாயிரக்கணக்கில் கொன்றான். கடைசியாக சுப்ரமண்யர் பிறந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான். அங்கு சிவபிரான் தன்னைப் பெண்ணாக உருவகப்படுத்திக் கொண்டு மனைவிக்கு ஆனந்தம் விளைவித்துக் கொண்டிருந்தார். அந்த பிரதேசத்தில் ஆண் எனப்படும் ஜீவன்கள் கூட பெண்பாலாகவே விளங்கின. அங்கு சென்ற இலன் அனைத்து ஜீவன்களும் பெண்ணாக இருப்பதையும் தானும் பெண்ணுருவாய் மாறி இருப்பதையும் கண்டு துக்கமடைந்தான்.

அவன் பரமசிவனைச் சரணமடைந்தான். பரமசிவன், “கர்தமரின் புதல்வனே, எழுந்திரு. ஆணாய் ஆவதைத் தவிர் வேறு வரம் கேள்” என்றார். இலனுக்கு வேறு வரம் கேட்கப் பிடிக்கவில்லை.

அவன் பார்வதி தேவியை வேண்டினான். பார்வதி உடனே கூறலானாள்:

அர்தஸ்ய தேவோ வரதோ வாரார்தஸ்ய தவ ஹியஹம் |                      தஸ்மாதர்தம் க்ருஹான் த்வம் ஸ்ற்றீபும்ஸோர்யாவதிச்சஸி ||

    உத்தரகாண்டம் 87வது ஸர்க்கம், ஸ்லோக எண் 24

தேவ: – மஹாதேவர்                                               அர்தத்வ – பாதிக்கு                                                             வரத: – வரமளிக்க உரிமை உடையவர்                                                           தவ – உனக்கு                                                                       வரார்தஸ்ய ஹி – வரத்தின் பாதிக்கு மாத்திரம்                                        அஹம் – நான் உரிமையுடையவள்                                         தஸ்மாத் – ஆகையால்                                                       த்வம் – நீ                                                             அர்த – பாதியை                                                          க்ருஹான் – பெற்றுக் கொள்                                            ஸ்த்ரீபும்ஸோ – ஸ்த்ரீ புருஷ ரூபங்கள் இரண்டையும்                              யாவத் – எவ்வளவு காலம்                                                   இச்சஸி – நீ வேண்டுகின்றனை?

யதி தேவி ப்ரஸன்னா மே ரூபேணாப்ரதிமா புவி |                            மாஸம் ஸ்த்ரீத்வமுபாஸித்வா மாஸம் ஸ்யாம் புருஷ: புன: ||

            உத்தரகாண்டம் 87வது ஸர்க்கம், ஸ்லோக எண் 26

தேவி – தாயே!                                                                  மே – எனக்கு                                                                   ப்ரஸன்னா – அருள் புரிகின்றவராய்                                               யதி – ஆகின்ற பட்சத்தில்                                                    புவி – உலகில்                                                                    ரூபேண – ரூபத்தால்                                                        அப்ரதிமா – நிகரற்றவண்ணமாய்                                                 மாஸம் – ஒரு மாத காலத்தை                                         ஸ்த்ரீத்வம் – பெண்ணுருவாய்                                   உபாஸித்வா – கழித்து விட்டு                                            புன: – மீளவும்                                                          மாஸம் – ஒரு மாத காலம்                                             புருஷ: – ஆணுருவம் கொண்டவனாய்                                                ஸ்யாம் – நான் இருக்கக் கடவேன்

இவ்வாறு இலன் வேண்ட தேவியும், “ஏவம் ஏவ பவிஷ்யதி’ (அங்ஙனமே ஆகுக) என்று வரமளித்தாள்.

கூடவே இதையும் தேவி கூறினாள்:

ராஜன்புருஷபூதஸ்Tவம் ஸ்த்ரீபாவ ந ஸ்மரிஷ்யஸி |                      ஸ்த்ரீபூதஸ்ச பரம் மாஸம் ந ஸ்மரிஷ்யஸி பௌருஷம் ||

                       87வது ஸர்க்கம், ஸ்லோக எண் 28

ராஜன் – ஹே ராஜனே!                                                                                    ச – ஆயினும்                                                        புருஷபூத: – ஆணுருவம் கொண்ட                                             த்வம் – நீ                                                                ஸ்த்ரீபாவம் – பெண்ணாயிருந்ததை                                                    ந ஸ்மரிஷ்யஸி – ஸ்மரிக்கமாட்டாய்                                     பரம் – மற்றொரு                                                          மாஸம் – மாதத்தில்                                                         ஸ்த்ரீ பூத: – பெண்ணுருவம் கொண்டவனாய்                                               பௌருஷம் – ஆணுருவத்துடனிருந்ததை                                             ந ஸ்மரிஷ்யஸி – நீ ஸ்மரிக்க மாட்டாய்

இவ்வாறு தேவி அருள இலன் ஒரு மாதம் ஆணாகவும் ஒரு மாதம் பெண்ணாகவும்  இருந்தான்,.

இதன் தொடர்ச்சியை தொண்ணூறாவது ஸர்க்கத்தில் காண்கிறோம்.

கர்த்தம ப்ரஜாபதி தனது புதல்வனின் நன்மையைக் கருதி  தன்னிடம் வந்த பல முனிவர்களிடம். “அஸ்வமேத யாகத்தைச் செய்து சிவனது அருளைப் பெறுவோம்” என்றார். யாகம் சிறப்பாக நடைபெற்றது. இதனால் திருப்தி அடைந்த சிவபிரான், “உங்களுக்கு எது பிரியமானதோ அதை அளிக்கிறேன்” என்றார். உடனே அனைவரும், “பெண் உருவம் கொண்ட இலன் எப்போதும் ஆணுருவம் கொண்டவனாகவே இருக்க அனுக்கிரகம் செய்ய வேண்டும்” என்று வேண்டினர். சிவனும் அப்படியே அனுக்ரகித்தார். இலனும் ராஜரிஷியாக  இருந்து பிரதிஷ்டானம் என்ற ஒரு பட்டணத்தை நிர்மாணித்து ஆண்டு வந்தான்.

இவ்வாறு இலன் சரித்திரத்தில் சிவனும் பார்வதியும் கொடுத்த வரங்களைப் பற்றி நாம் அறிகிறோம்.

***

Leave a comment

Leave a comment