75.பொய்கை ஆழ்வார் பாசுரங்களில் 10 கேள்விகள் (Post.16,272)

Written by London Swaminathan

Post No. 16,272

Date uploaded in London – 5 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 75

பன்னிரு ஆழ்வார்களில் முதலாழ்வார்கள் மூவருள் ஒருவரான இவர்  காஞ்சிபுரத்தில்  திருவெஃகா என்னும் பகுதியிலுள்ள  சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலைச் சேர்ந்த பொய்கையில் பிறந்தார் .

பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் இவர்கள் மூவரும் முதலாழ்வார்கள் ஆவர். மூவரும் ஒரே இடத்தில் தங்காமல் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு ஊரில் தங்கி, ஒருவரையொருவர் அறியாமல் தனித்தனியே வாழ்ந்து வந்தார்கள்.

ஒருநாள் பொய்கை ஆழ்வார் பெண்ணையாற்றின் கரையில் இருக்கும் திருக்கோவிலூருக்குச் சென்றார்.

அப் பொழுது பலத்தமழை பெய்ய ஆரம்பித்தது.மழைக்காக ஓரிடத்தில் ஒதுங்கி நின்றார். அது ம்ருகண்டு முனிவரின் ஆச்ரமத்தின் இடைகழி(ரேழி) ஆகும்.

சிறிது நேரத்தில் திருமாலின் திருவிளையாடலால் அதே இடத்திற்கு பூதத்தாழ்வாரும் வந்து சேர்ந்தார்.  இருவரும் அமர்ந்துகொண்டு, திருமாலின் திருவருளைப் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தனர். சற்று நேரத்தில் மூன்றாவதாகப் பேயாழ்வார் அதே இடத்திற்கு வந்துசேர்ந்தார். குறுகிய இடமாதலால் மூவரும் நிற்க வேண்டியதாயிற்று.  உலகளந்த பெருமாளின் திருவடிச் சிறப்பைப் போற்றியவாறு நேரத்தைச் செலவிட்டனர் ;திடீரென்று அவர்கள் தங்களுக்கிடையே மேலும் யாரோ ஒருவர் புதிதாக வந்து விட்டதுபோல் உணர்ந்தனர்.  திருக்கோவலூர் பெருமானே பிராட்டியுடன் வந்து நின்றதால்தான் இவர்கள் நெருக்கப்பட்டனர். இதை அறியாத அவர்கள், ‘இங்குப் புதிதாக வந்தவர் யார்? யார் இப்படி நெருக்குவது?’ என்று தங்களுக்குள் கேட்டுக்கொண்டனர். இருளில் எதுவும் தென்படவில்லை.ஒவ்வொருவரும் ஒரு பாடல் பாடி இருள் நீங்க வேண்டினார்கள். அப்பொழுது பொய்கை ஆழ்வார் புறஇருள் நீங்கவேண்டும் என்று திருமாலிடம் வேண்டிப் பாடினார்; ஏனைய இருவரும் அவ்வாறே பாடவே அவை அந்தாதிகளாக அமைந்தன . அவை நாலாயிரத் திவ்வியப்பிரபந்த நூலில் இடம்பெற்று காலத்தால் அழியாத பொக்கிஷங்கள் ஆயின.

1

மூன்று ஆழ்வார்களும் இருளில் இருந்தபோது அறியாமை  என்னும் இருள் நீங்க பொய்கையை ஆழ்வார் பாடிய முதல் பாடல் என்ன? 

2

ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम्

मम वर्त्मानुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः 4-11 Bhagavad Gita

யார் யார் எப்படி வேண்டுகிறார்களோ ,என்னிடம் சரணடைகிறார்களோ, அதே போல நான் தோன்றுகிறேன்; பார்த்தனே! எல்லா விதத்திலும் அனைவரும் என் வழியையே பின்பற்றுகின்றனர். என்று பகவத் கீதையில் கண்ணபிரான் மொழிந்தார் .இதை பொய்கை ஆழ்வார் எப்படி மொழிபெயர்த்தார்?

3

அரியும் சிவனும் ஒன்னு ;அறியாதவன் வாயில் மண்ணு – என்பதை பொய்கைஆழ்வார் எப்படிச் சொல்கிறார் ?

4

ஒரே பாடலில் பத்து வினைச் சொற்களைப் பயப்படுத்தி பத்து செயல்களைச் சொல்லி தமிழ்ப் பாடம் நடத்தும் அற்புதப்பாடல் எது ? BEST/EXCELLENT  TAMIL TEACHER பெஸ்ட் டமில் டீச்சர் பொய்கை ஆழ்வார் என்ற பட்டத்தையே கொடுக்கலாம் போலிருக்கிறதே!

5

எந்த ஒரு பாட்டில் சிவனின் அம்சங்களையும் விஷ்ணுவின் அம்சங்களையும் ஒப்பிட்டு சைவத்திலும் வைணவத்தில் தனக்குள்ள புலமையை காட்டுகிறார் ?

6

வாய், கை, கண், காதுகளுக்கு என்ன வேலை என்று சொல்லிப்பாடுகிறார் ?

7

இப்போது நாம் வீடுகளில் சாமி படம் அல்லது சிலை, பொம்மை, விக்கிரகம் வைத்து வழிபடுகிறோம். சங்கத் தமிழ்ப் பாடல்களிலும் இல்லுறை தெய்வம் என்று இதைக்குறிப்பிடுகின்றனர் ; பதஞ்சலியும் சாணக்கியரும் எழுதிய நூல்களில் முருகன் விக்கிரக விற்பனை பற்றிய செய்தி வருகிறது ; நமது ஆழ்வார் இதை உறுதிப்படுத்தும் செய்யுள் எது ?

8

“வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்

கோனாகி யான் எனது என்று அவரவரைக்

கூத்தாட்டு வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே – என்ற மாணிக்கவாசகர் ஸ்டைலில்/ பாணியில் பொய்கை, என்ன பாடினார் ?

9

முப்பத்து மூவர் பற்றிப் பாடாத சைவ வைணவ அடியார் கிடையாது . ஆண்டாள் திருப்பாவையில்

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!

செப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!…. என்றார் . பொய்கை செப்பியது என்ன ?

***

10

ஜம்புத்வீபம் என்னும் நாவலந்தீவினை- நாவல் பழத்தை எங்கே குறிப்பிடுகிறார் ?

***********************

விடைகள்

1.வையம் தகளியா வார் கடலே நெய் ஆக

வெய்ய கதிரோன் விளக்கு ஆக-செய்ய

சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை-

இடர் ஆழி நீங்குகவே என்று.

***

2.தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே;

தமர் உகந்தது எப்பேர் மற்றும் பேர் – தமர் உகந்தது

எவ்வண்ணம் சிந்தித்து இமையாதிருப்பரேல்,

அவ்வண்ணம் ஆழியானாம்.

பொருள்

தன் அடியார்கள் எந்த உருவத்தை மனத்தில் விரும்பிப் இறைவனைப் பார்க்க விரும்புகிறார்களோ, அந்தந்த உருவத்தை இறைவன் தானே கொண்டு அருள்வான்.

அடியார்கள் எந்தப் பெயரைச் சொல்லி அழைக்கிறார்களோ, அந்தப் பெயரையும் இறைவன் ஏற்பான்.

***

3.பொன் திகழும் மேனிப் புரிசடை அம்  புண்ணியனும்

நின்று உலகம் தாய நெடுமாலும் என்றும்

இருவர் அங்கத்தால்  திரிவரேனும் ஒருவன்

ஒருவர் அங்கத்து என்றும் உளன்

The golden hued Lord moves around as two forms, -the mat-haired Siva and the Earth. Measuring Nedumal. And yet the one is always contained in the other, see!

பொன் போன்ற மேனியையும், பிணைந்த சடையையும் உடைய புண்ணியரான சிவபெருமானும், உலகமெல்லாம் அளந்து (Trivikraman form) நின்ற பெருமைமிக்க திருமாலும், வேறு வேறு திருமேனிகளைக் கொண்டு தனித்தனியாகத் தோன்றினாலும், உண்மையில் சிவபெருமானது உடலில் திருமாலும், திருமாலின் உடலில் சிவபெருமானும் ஒருவரையொருவர் பிரியாமல் இருக்கிறார்கள்  (அரியும் சிவனும் ஒன்று ; ஹரிஹரன் , சங்கர நாராயணன் என்ற உருவங்களில் பல கோவில்களில் தரிசிக்கலாம் ).

***

4.அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம் புள் வாய்

குரவை குடம் முலை மல் குன்றம் கரவு இன்றி

விட்டு இறுத்து மேய்த்து ஒசித்து கீண்டு கோத்து ஆடி உண்டு

அட்டு எடுத்த செங்கண் அவன்    

அதாவது கம்சன் ஏவிய குவலயாபீடம் என்ற யானையின் கொம்பை முறித்து , பசுக்களை மேய்த்து, குருந்த மரத்தை முறித்து , புள்ளின் வாய் பிளந்து , குரவை கோத்துக் குடக்கூத்தாடி, பூதனையின் முலையை உண்டு, மல்லர்களைக் கொன்று, மலையை எடுத்துக் பிடித்து அரியன செய்தவன் திருமால்.கொண்டு கூட்டிப் பொருள் கொளல் வேண்டும். Match the following போல.

***

5.அரன் நாரணன் நாமம்; ஆன் விடை புள் ஊர்தி;

ஆரை நூல் மறை; உறையும் கோயில் வரை நீர்;

கருமம் அழிப்பு அழிப்பு, கையது வெல் நேமி,

உருவம் எரி கார்மேனி, ஒன்று

பெயர் – சிவன், நாராயணன்

ஊர்தி – எருது, பறவை

உரை – நூல், மறை

உறையும் கோயில் – மலை, நீர்

கருமம் – அழித்தல், வழங்கல்

ஆயுதம் – வேல், சக்கரம்

உருவம் – தீ, கார்.

என இருவரும் ஒன்றே என ஒப்பு நோக்குவது.

***

6.வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை உலகம்

தாயவனை அல்லது தாம் தொழா பேய் முலை நஞ்சு

ஊண் ஆக உண்டான் உருவொடு பேர் அல்லால்-

காணா கண் கேளா செவி.

***     

7. அவர் அவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி

இவர் இவர் எம் பெருமான் என்று சுவர்மிசைச்

சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகு அளந்த

மூர்த்தி உருவே முதல்

(சுவரில் வரைந்த சித்திரமாகவும் சிலையாக வைத்தும் தொழுவர்)

***

8.வான் ஆகி தீ ஆய் மறி கடல் ஆய் மாருதம் ஆய்

தேன் ஆகி பால் ஆம் திருமாலே ஆன் ஆய்ச்சி

வெண்ணெய் விழுங்க நிறையுமே முன் ஒரு நாள்

மண்ணை உமிழ்ந்த வயிறு? 

***

9.எண்மர்+8 பதினொருவர்+11 ஈர்-அறுவர்+12 ஓர் இருவர்+2=33

வண்ண மலர் ஏந்தி வைகலும் நண்ணி

ஒரு மாலையால் பரவி ஓவாது எப்போதும்

திருமாலைக் கைதொழுவர் சென்று.

பொருள்

எட்டு வசுக்கள் , பதினோரு ருத்திரர் , பன்னிரெண்டு ஆதித்யர்/சூரியர், அஸ்வினி தேவர் இருவர் ஆகிய 33 பேரும் மாலை ஏந்தி  திருமாலைத் தொழுகிறார்கள்.

***

10. இனி யார் புகுவார் எழு நரக வாசல்?

முனியாது மூரித் தாள் கோமின் கனி சாயக்

கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு

நன்கு அறிந்த நாவலம் சூழ் நாடு.  

*********************************************************

பத்து கேள்விகள் வரிசையில் முதல் 74  பதிவுகளின் பட்டியல் :

1.காரைக்கால் அம்மையார் பற்றி 10 கேள்விகள்! (Post.15,992)18/7/2026

திருமந்திரம் பற்றி 10 கேள்விகள் (Post No.16,010)23/7

பெரிய புராணம் பற்றி 10 கேள்விகள் (Post.16,012)24/7

திருமுருகாற்றுப்படை பற்றி 10 கேள்விகள் (Post.16,018) 26/7

கந்த புராணம் பற்றி 10 கேள்விகள் (Post.16,024)27/7

முக்கூடற் பள்ளு பற்றி 10 கேள்விகள் (Post No.16,027) 28/7

குற்றாலக் குறவஞ்சி பற்றி 10 கேள்விகள் (Post No.160,30)29/7

அஷ்டாவக்ர கீதை பற்றி 10 கேள்விகள் (Post.16,036) 30/7

கீத கோவிந்தம் நூல் பற்றி 10 கேள்விகள் (Post.16,039)31/7

****

10.பாரதியின் குயில்பாட்டு பற்றி 10 கேள்விகள் (Post.16,042) 1/8/2026

அறப்பளீச்சுர சதகம் பற்றி 10 கேள்விகள் (Post.16,046) 2/8

கலிங்கத்துப் பரணி பற்றி 10 கேள்விகள் (Post No.16,050) 3/8

திருவள்ளுவமாலை பற்றி 10 கேள்விகள் (Post.16,052)4/8

பட்டினத்தார் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,055) 5/8

பஜ கோவிந்தம் பாடல் பற்றி 10 கேள்விகள் (Post.16,062)7/8

நாலடியார் நூல்பற்றி 10 கேள்விகள் (Post No.16,067)8/8

தாயுமானவர் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,059)6/8

சீவக சிந்தாமணி பற்றி 10 கேள்விகள் (Post.16,070)9/8

முத்தொள்ளாயிரம் நூல் பற்றி 10 கேள்விகள் (Post.16,074)

20.மணிமேகலைக்  காப்பியம் பற்றி 10 கேள்விகள் (Post.16,077)11/8

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பாடல்கள்  பற்றி 10 கேள்விகள் (Post.16,081)12/8

பாண்டியர் செப்பேடுகள் பற்றி 10 கேள்விகள் (Post No.16,089)14/8

பாண்டியர் செப்பேடுகள் பற்றி மேலும் 10 கேள்விகள் (Post.16,092)15/8

பாரதி பாட்டில் 16 நாடுகள் பற்றி 10 கேள்விகள் (Post.16,095) 16/8

மலைபடு கடாம் பற்றி 10 கேள்விகள் (Post No.16,102) 18/8

ஆய் குல/ யாதவ குல செப்பேடுகள் பற்றி 10 கேள்விகள் (Post No.16,107) 19/8

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,085) 13/8

கொங்கு மண்டல சதகம் பற்றி 10 கேள்விகள் (Post No.16,100) 17/8

திருவருட்பா நூல் பற்றி 10 கேள்விகள் (Post.16,109)20/8

30.மஹாபாரதம் பற்றி 10 கேள்விகள் (Post No.16,112) 21/8

சர்ச்சைக்குரிய விவேக சிந்தாமணி பற்றி 10 கேள்விகள் (Post.16,118)22/8

பாபநாசம் சிவன் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post No.16,122)23/8

பார்ப்பனரை வசைபாடிய பாரதிதாசன் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,123)24/8

ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் அற்புதத் தமிழ் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,128) 25/8

அருணாசலக் கவிராயர் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,131)26/8

முத்துத் தாண்டவர் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,134)27/8

புத்த மத வேதப் புஸ்தகம் தம்மபதத்தில்10 கேள்விகள் (Post.16,137)28/8

மாரிமுத்தா பிள்ளை பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,141)29/8

ஆண்டாள் அருளிய திருப்பாவையில்10 கேள்விகள் (Post.16,145) 30/8

40.பாஸா நாடகங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,150)31/8/2026

****

நளவெண்பாவில் 10 கேள்விகள் (Post.16,153)1/9/2026

காளமேகப்புலவர் பாடல்களில் 10 கேள்விகள் (Post.16,156)2/9

ஒட்டக்கூத்தர் பாடல்களில் 10 கேள்விகள் (Post.16,160)3/9

அதிவீர ராம பாண்டியன் நூல்கள் பற்றி 10 கேள்விகள்(Post.16,164)4/9

உலகநீதி நூலில் 10 கேள்விகள் (Post No.16,167) 5/9

சிவப்பிரகாசர் நூல்களில் 10 கேள்விகள் (Post.16,171)6/9

சங்க கால ஔவையார் பாடல்களில் 10 கேள்விகள் (Post.16,174)7/9

ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர் படைப்புகள் பற்றி 10 கேள்விகள் (Post.16,177)8/9

முத்து சுவாமி தீட்சிதர் கிருதிகள் பற்றி 10 கேள்விகள் (Post.16,180)9/9

50.சதாசிவ பிரம்மேந்திராள் பாடல்களில் 10 கேள்விகள் (Post.16,185)10/9

பல்லவர் செப்பேடுகளில் முதல் 10 கேள்விகள் (Post.16,189)11/9

பல்லவர் செப்பேடுகளில் இரண்டாவது 10 கேள்விகள் (Post No.16,192)12/9

பல்லவர் செப்பேடுகள் பற்றி மூன்றாவது 10 கேள்விகள் (Post.16,195)13/9

பல்லவர் செப்பேடுகள் பற்றி நான்காவது 10 கேள்விகள் (Post.16,198)14/9

பல்லவர் செப்பேடுகள் பற்றி ஐந்தாவது 10 கேள்விகள் (Post.16,200)15/9

பல்லவர் செப்பேடுகள் பற்றி ஆறாவது 10 கேள்விகள் (Post.16,204)16/9

பல்லவர் செப்பேடுகள் பற்றி ஏழாவது 10 கேள்விகள் (Post.16,207)17/9

பல்லவர் செப்பேடுகள் பற்றி எட்டாவது 10 கேள்விகள் விடைகள் (Post.16,211)18/9

பல்லவர் செப்பேடுகள் பற்றி ஒன்பதாவது 10 கேள்விகள் (Post.16,214)19/9

60.ஆன்மீக திரைப்படங்களில் (பிளாக் அண்ட் ஒயிட்) பத்து கேள்விகள் (Post.16,218)20/9/2026

முருகனைப் போற்றும் திரைப்படங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,222)21/9

அலைமகள், கலைமகள், மலைமகள், மீதான திரைப்படங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,224)22/9

மஹாபாரதம், ராமாயணம் திரைப்படங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,228)23/9

கண்ணன்/ கிருஷ்ணன் மீதான திரைப்படங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,233)24/9

ஐயப்பன், குசேலர் திரைப்படங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,237)25/9

திரைப்படங்களில் பிரபலங்கள் சோ, எம். எஸ். பற்றி 10 கேள்விகள் (Post.16,240)26/9

திருக்குறளில் தெய்வங்கள் 10 கேள்விகள் (Post No.16,244)27/9

மாணிக்கவாசகரின் சிவபுராணத்தில் 10 கேள்விகள் (Post.16,248)28/9

திருமங்கை ஆழ்வார் பாடல்களில் 10 கேள்விகள்  (Post.16,252)29/9

70.நம்மாழ்வார் பாசுரங்களில் 10 கேள்விகள் (Post No.16,256)30/9

71.குலசேகர ஆழ்வார் பாசுரங்களில் 10 கேள்விகள் (Post.16,259)

72.பெரியாழ்வார் பாசுரங்களில் 10 கேள்விகள் (போஸ்ட்.72) 2/10

73.தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாசுரங்களில் 10 கேள்விகள் (Post.16,266)3/10/2026

74.சர்ச்சைகள் மிகுந்த திருமழிசை ஆழ்வார் பாசுரங்களில் 10 கேள்விகள் (Post.16,270)4/10

–Subham-

Tags- பொய்கை ஆழ்வார், பாசுரங்கள், 10 கேள்விகள், தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே ,அரன் நாரணன் நாமம்; ஆன் விடை, வையம் தகளியா வார் கடலே நெய் ஆக,

Leave a comment

Leave a comment