க்ரியாடின் (Creatine)  மனச்சோர்வை நீக்குமா? (Post No.16,271)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,271

Date uploaded in London – 5 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

செப்டம்பர் 2026 Healthcare இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

க்ரியாடின் (Creatine)  மனச்சோர்வை நீக்குமா? 

ச. நாகராஜன் 

உடல்பயிற்சிக்கூடத்திற்குச் செல்வோர் அறியும் ஒன்று உடலில் இயற்கையாக ஏற்படும் க்ரியாடின் பற்றித் தான்.

உடல் திறன் அதிகரிக்க க்ரியாடின் துணை உணவுப் பொருளை எடுத்துக் கொள்ளுமாறு அவர்கள் பரிந்துரை செய்யப்படுவர்.

மஸில் கெயின் (Muscle Gain) எனப்படும்  தசை மேம்பாடு, விளையாட்டு வீரர்களுக்கு இன்றியமையாத ஒன்று.

சமீப காலத்தில் க்ரியாடின் மைய நரம்பு மண்டலத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்துமா, அதனால் மன நலம் மேம்படுமா என்பது பற்றித் தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஏடிபி எனப்படும் Adenosine triphospage – ATP, திசுக்களில் ஆற்றலுக்கான முக்கியமான ஆதாரமாக விளங்குகிறது.

உடலில் எலும்புகளில் க்ரியாடின் முக்கியமாக சேகரிக்கப்பட்டு வைக்கப்படுகிறது என்றாலும் கூட நமது மூளையும் கூட தனி ஒரு க்ரியாடின் அமைப்பைக் கொண்டிருக்கிறது. ஏனெனில் மூளைக்கு மிக அதிகமான ஆற்றல் தேவை.

ஆய்வாளர்கள் க்ரியாடினின் அளவு மூளையில் அதிகமானால் மனநிலை மற்றும் அறியும் திறனில் அதற்கான விளவு ஏற்படும் என்று கண்டறிந்துள்ளனர்.

மனச்சோர்வு ஏற்படும் போதி க்ரியாடின் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை 2025ம் ஆண்டு முறைப்படியான ஆய்வு மூலம் கண்டறிய ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

11 சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 1093 பேர்கள் பங்கு கொண்டனர். இதில் க்ரியாடின் மூலம் மனச்சோர்வு குறைவாகிறது என்பதை ஆய்வாளர்கள் நிச்சயப்படுத்திக் கொண்டனர்.

யூரோபியன் ஃபுட் சேஃப்டி அதாரிடி மிக கவனமாக இதைப் பற்றி தனது 2024ம் ஆண்டு அறிக்கையில் இது நிச்சயமாக மூளைத் திறனைக் கூட்ட வல்லது என்பதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறியது.

சரியான முறையில் இது துணை உணவுப்பொருளாக ஏற்கப்படுமாயின் இது நல்ல விளைவையே ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

மருந்துகளுக்குப் பதில் சப்ளிமெண்ட் எனப்படும் துணை உணவுப்பொருளை எடுத்துக் கொள்வதையே சிலர் பெரிதும் விரும்புவர்.

ஆய்வுகள் நடந்து கொண்டே இருக்கின்றன. புது உண்மைகளை நிபுணர்கள் அறிவிக்கின்றனர்.

என்றாலும் கூட க்ரியாடின் சப்ளிமெண்ட்களை எடுக்கும் முன்னர் குடும்ப டாக்டரிடம் ஆலோசித்து அவர் கூறும் அறிவுரைப்படி நடப்பதே நமக்கு பாதுகாப்பாகும்.

**

Leave a comment

Leave a comment