Written by London Swaminathan
Post No. 16,277
Date uploaded in London – 6 October 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
part 76
Please go to Project Madurai website for all Tamil poems and English translation of Nalayira Divya Prabandham by Mrs Kausalya Hart.
பத்து கேள்விகள் வரிசையில் முதல் 75 பதிவுகளின் பட்டியல் இறுதியில் உள்ளது.
***

முதல் ஆழ்வார்கள் என்று சிறப்பிக்கப்படும் மூவரில் நேற்று பொய்கை ஆழ்வாரைத் தரிசித்தோம் ; ஏனைய இருவரை இன்று தரிசிப்போம். மூவருள் இரண்டாம் இடம் வகிப்பவர் பூதத்தாழ்வார். கடல்மல்லையில் /மகாபலிபுரத்தில், ஒரு குருக்கத்தி மலரில் பிறந்ததாக ஐதீகம்; திருமாலின் கையிலுள்ள கதை என்னும் படைக்கருவியின் அம்சம் உடையவர்; இதற்கடுத்த பேயாழ்வார் திருமாலின் நந்தகம் என்னும் வாளின் அம்சம் உடையவர் இவர் சென்னையிலுள்ள மயிலையில், ஒரு கிணற்றிலுள்ள செவ்வல்லிப்பூவில் அவதரித்தார். இவர் அருளியது மூன்றாம் திருவந்தாதி. திருக்கோவலூரில் பொய்கை, பூதத்தாழ்வார்களுடன் இருந்த பொழுது பாடிய 100 பாடல்களைக் கொண்டது இது. முதல் மூன்று ஆழ்வார்களும் கி.பி. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

1
பூதத்தாழ்வார் இயற்றிய இரண்டம் திருவந்தாதியில் முதல் பாடலின் வரிகள் என்ன ?
2
பூதத்தாழ்வார் தன்னை பெருந்தமிழன் என்று அழைத்துக் கொண்ட பாடல் எது ?
3
ஆண் யானை ஒன்று , மூங்கில் குருத்தை எடுத்து தேனில் குழைத்து,பெண் யானைக்கு கொடுத்ததாகப் பாடினாரா ?
4
சிவன் கையில் ஒட்டிக்கொண்ட பிரம்மாவின் கபாலத்தை கீழே விழச் செய்வதற்காக அதில் திருமால் ரத்ததைக் கொட்டினார்; பின்னர் அந்த கபாலம் கீழே விழுந்தது என்ற கதையை அவர் எந்தப் பாசுரத்தில் சொல்கிறார் ?
5
கருவுற்ற நாள் முதலாக உன் பாதமே காண்பதற்கு
உருகிற்று என் உள்ளமும் நானும் கிடந்து அழிந்து எய்த்து ஒழிந்தேன்
திருவொற்றியூரா திருஆலவாயா திருஆரூரா
ஒருபற்று இலாமையும் கண்டு இரங்காய் கச்சி ஏகம்பனே.– என்று அப்பர் பாடினார்; அஷ்டாவக்ரன் கதையிலும் குழந்தை, கருவில் இருந்த போதே வேதத்தைக் கேட்ட செய்தி வருகிறது ; இது இந்துக்களின் மாபெரும் விஞ்ஞானக் கண்டுபிடிப்பு! இதை பூதத்தாழ்வார் எப்படிப் பாசுரத்தில் வடிக்கிறார் ?
6
பேயாழ்வார் தனது அந்தாதியை எப்படித் துவங்குகிறார் ?
7
பொய்கையாழ்வார் போலவே பேயாழ்வாரும் சிவனையும், திருமாலையும் ஒருவராகவே காண்கின்றார். அஃதாவது சங்கர நாராயணனாகக் காண்கின்றார்.அந்தப் பாடல் நினைவிருக்கிறதா?
8
ஒரே பாட்டில் 8 திவ்யக்ஷத்திரங்களை அடுக்கும் பேயாழ்வார் பாடல் எது ?
9
நிலவிலுள்ள முயலைப் பிடிக்க திருவேங்கட மலைக்காட்டினில் வாழும் புலி ஆவலுடன் காத்திருக்கிறதா?
10
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து
நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா விருப்பு உடைய
வெஃகாவே சேர்ந்தானை மெய்ம் மலர் தூய்க் கைதொழுதால்
அஃகாவே தீவினைகள் ஆய்ந்து?– இதில் பேயாழ்வார் குறிப்பிடும் ஐந்து நெருப்பு தவம் என்ன ?
***
விடைகள்

பூதத்தாழ்வாரின் முதல் பாடல்:
1 அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்
இவர் ஏற்றிய தீபத்தில் அகல் /தகளி =அன்பு; அதில் எண்ணெய்= ஆர்வம்/பக்தி, திரி= உருகிய மனம் .
***
2.பூதத்தாழ்வார் பாடிய இரண்டாம் திருவந்தாதியில் அவர் தன்னை “பெருந்தமிழன்” என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார். இதோ பாருங்கள் பாடலை:–
யானே தவம் செய்தேன், ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன்; எம் பெருமான்! யானே
இருந்தமிழ் நல்மாலை இணை அடிக்கே சொன்னேன்
பெருந்தமிழன் நல்லேன், பெருகு.
பாடலின் பொருள்:– என் தலைவனே! எல்லாப் பிறவிகளிலும் தவம் புரிந்தவன் நான். அந்தத் தவத்தின் பயனைப் பெற்றவனும் நானே. சிறந்த தமிழ் மொழியால் சொல் மாலைகளை உன் திருவடிகளில் சூட்டினேன்; கலைகள் வல்ல பெருந்தமிழனும் அடியேன் தான் .
***
திருவேங்கட மலையின் இயற்கை அழகை வருணிக்க வந்த பூதத்தாழ்வார் இப்படிப் பாடுகிறார் :
பெருகு மதவேழம் மாப்பிடிக்கு முன்னின்று,
இருகண் இளமூங்கில் வாங்கி, – அருகிருந்த,
தேன்கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்,
வான்கலந்த வண்ணன் வரை.
வேழம்= ஆண் யானை ;பிடி = பெண் யானை;
2256. The lord colored like a cloud
stays in the Thiruvenkaṭam hills
where a male elephant dripping with ichor
plucks bamboo sticks, soaks them in honey
and gives them to his mate.
***
4.ஏறு ஏழும் வென்று அடர்த்த எந்தை எரி உருவத்து
ஏறு ஏறி பட்ட இடுசாபம் பாறு ஏறி
உண்ட தலை வாய் நிறைய கோட்டு அம் கை ஒண் குருதி
கண்ட பொருள் சொல்லின் கதை
If I were to describe how our father
conquered the seven bulls to marry Nappinnai
and how he poured his blood into Nānmuhan’s skull
that was stuck to Shiva’s hands and made it fall,
they would be long stories.
***
5.ஒரு குழந்தை கருவில் இருக்கும்போதே விஷயத்தைக் கிரகிக்க வல்லது என்பதை இப்பொழுதுதான் மேலை நாட்டு விஞ்ஞானிகள் எழுதி வருகின்றனர் ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இது வேத கதைகளில் உள்ளது; பூதத்தாழ்வாரும் இதைப் பாடுகிறார் :
இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை அன்று
கருக்கோட்டியுள் கிடந்து கைதொழுதேன் கண்டேன்
திருக்கோட்டி எந்தை திறம்
Do I know only today the feet of the lord
who measured the world?
When I was in my mother’s womb itself I knew him
and worshiped him with folded hands.
I know the power of my father, the god of Thirukkoṭṭiyur.
***
6.திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் செருக் கிளரும்
பொன் ஆழி கண்டேன் புரி சங்கம் கைக் கண்டேன்
என் ஆழி வண்ணன்பால் இன்று- பேயாழ்வார்
2282. I saw today the divine form of the ocean-colored lord,
his golden body adorned with jewels
that shone with the color of the bright sun
and the golden discus in his hands that fights in war
and the sounding curving conch.
***
7.இவை அவன் கோயில் இரணியனது ஆகம்
அவைசெய்து அரி உருவம் ஆனான் செவி தெரியா
நாகத்தான் நால் வேதத்து உள்ளான் நறவு ஏற்றான்
பாகத்தான் பாற்கடல் உளான்
2312. The lord who stays on the milky ocean
on the earless serpent Adisesha worshiped by all the four Vedas
and took the form of a man-lion and split open the chest of Hiraṇyan.
He shares his body with Shiva adorned with a snake in whose hair the Ganges flows.
***
8.விண்ணகரம் வெஃகா விரி திரை நீர் வேங்கடம்
மண் நகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேன் ஆர் திருவரங்கம் தென்கோட்டி
தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு
2343. The lord who took three feet of land from Mahābali and measured the world
after receiving a promise from him with water poured on his hands
stays in Thiruviṇṇagaram, in Thiruvekka surrounded by ocean with rolling waves,
in Thiruvenkaṭam, in Maṇṇakaram, in Thiruveḷukkai filled with beautiful palaces,
in Thirukkuḍanthai in the south,
in sweet Thiruvarangam surrounded with groves dripping with honey
and in southern Thirukkoṭṭiyur.
***
9.சார்ந்து அகடு தேய்ப்பத் தடாவிய கோட்டு உச்சிவாய்
ஊர்ந்து இயங்கும் வெண் மதியின் ஒண் முயலைச் சேர்ந்து
சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன்
புன வேங்கை நாறும் பொருப்பு
2356. In the divine Thiruvenkaṭam hills
where the blossoms of vengai tree spread their fragrance,
an angry tiger sees the rabbit in the floating white moon
against the red color of the sky, thinks it is a real rabbit
and becomes angry because it could not catch it.
***
10. You do not need to stand on a hill,
plunge into water or stand near five sacrificial fires to reach him.
If you sprinkle flowers, folding your hands,
and lovingly worship the god of Thiruvekka,
all your bad karma will disappear.
தவங்களில் பல வகைகள் உண்டு அதில் ஒன்று பஞ்சாக்னி தவம் ; அதாவது நாலு புறமும் நெருப்பினை எரியவிட்டு அந்த தகிக்கும் வெப்பத்தில் சூரியன் காயும்போது நின்று தவம் இயற்றுவதாகும் ; சூரியன் ஐந்தாவது நெருப்பு; பார்வதி சிவபெருமானை அடைய இப்படித் தவம் செய்தாள். அர்ஜுனன் பாசுபத அஸ்திரம் பெறவும் பகீரதன் கங்கை நதியைக் கொணரவும் இந்தவகைத் தவத்தினைச் செய்தார்கள். அவ்வளவு கஷ்டப்படாமல் அதே பலனைப் பெறுவதற்கு திருமாலைக் கைகூப்பித் தொழுதால் போதும் என்கிறார் பேயாழ்வார். காளிதாசனின் குமார சம்பவத்தில் 2200 ஆண்டுகளுக்கு முன்னரே ஐந்து நெருப்பு தவம் விளக்கப்பட்டுள்ளது
–subham—
Tags- பேயாழ்வார், பூதத்தாழ்வார், பாசுரங்கள், 10 கேள்விகள், பஞ்சாக்கினி தவம், பெருந்தமிழன்,

பத்து கேள்விகள் வரிசையில் முதல் 75 பதிவுகளின் பட்டியல் :–
1.காரைக்கால் அம்மையார் பற்றி 10 கேள்விகள்! (Post.15,992)18/7/2026
திருமந்திரம் பற்றி 10 கேள்விகள் (Post No.16,010)23/7
பெரிய புராணம் பற்றி 10 கேள்விகள் (Post.16,012)24/7
திருமுருகாற்றுப்படை பற்றி 10 கேள்விகள் (Post.16,018) 26/7
கந்த புராணம் பற்றி 10 கேள்விகள் (Post.16,024)27/7
முக்கூடற் பள்ளு பற்றி 10 கேள்விகள் (Post No.16,027) 28/7
குற்றாலக் குறவஞ்சி பற்றி 10 கேள்விகள் (Post No.160,30)29/7
அஷ்டாவக்ர கீதை பற்றி 10 கேள்விகள் (Post.16,036) 30/7
கீத கோவிந்தம் நூல் பற்றி 10 கேள்விகள் (Post.16,039)31/7
****
10.பாரதியின் குயில்பாட்டு பற்றி 10 கேள்விகள் (Post.16,042) 1/8/2026
அறப்பளீச்சுர சதகம் பற்றி 10 கேள்விகள் (Post.16,046) 2/8
கலிங்கத்துப் பரணி பற்றி 10 கேள்விகள் (Post No.16,050) 3/8
திருவள்ளுவமாலை பற்றி 10 கேள்விகள் (Post.16,052)4/8
பட்டினத்தார் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,055) 5/8
பஜ கோவிந்தம் பாடல் பற்றி 10 கேள்விகள் (Post.16,062)7/8
நாலடியார் நூல்பற்றி 10 கேள்விகள் (Post No.16,067)8/8
தாயுமானவர் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,059)6/8
சீவக சிந்தாமணி பற்றி 10 கேள்விகள் (Post.16,070)9/8
முத்தொள்ளாயிரம் நூல் பற்றி 10 கேள்விகள் (Post.16,074)
20.மணிமேகலைக் காப்பியம் பற்றி 10 கேள்விகள் (Post.16,077)11/8
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,081)12/8
பாண்டியர் செப்பேடுகள் பற்றி 10 கேள்விகள் (Post No.16,089)14/8
பாண்டியர் செப்பேடுகள் பற்றி மேலும் 10 கேள்விகள் (Post.16,092)15/8
பாரதி பாட்டில் 16 நாடுகள் பற்றி 10 கேள்விகள் (Post.16,095) 16/8
மலைபடு கடாம் பற்றி 10 கேள்விகள் (Post No.16,102) 18/8
ஆய் குல/ யாதவ குல செப்பேடுகள் பற்றி 10 கேள்விகள் (Post No.16,107) 19/8
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,085) 13/8
கொங்கு மண்டல சதகம் பற்றி 10 கேள்விகள் (Post No.16,100) 17/8
திருவருட்பா நூல் பற்றி 10 கேள்விகள் (Post.16,109)20/8
30.மஹாபாரதம் பற்றி 10 கேள்விகள் (Post No.16,112) 21/8
சர்ச்சைக்குரிய விவேக சிந்தாமணி பற்றி 10 கேள்விகள் (Post.16,118)22/8
பாபநாசம் சிவன் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post No.16,122)23/8
பார்ப்பனரை வசைபாடிய பாரதிதாசன் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,123)24/8
ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் அற்புதத் தமிழ் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,128) 25/8
அருணாசலக் கவிராயர் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,131)26/8
முத்துத் தாண்டவர் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,134)27/8
புத்த மத வேதப் புஸ்தகம் தம்மபதத்தில்10 கேள்விகள் (Post.16,137)28/8
மாரிமுத்தா பிள்ளை பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,141)29/8
ஆண்டாள் அருளிய திருப்பாவையில்10 கேள்விகள் (Post.16,145) 30/8
40.பாஸா நாடகங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,150)31/8/2026
****
நளவெண்பாவில் 10 கேள்விகள் (Post.16,153)1/9/2026
காளமேகப்புலவர் பாடல்களில் 10 கேள்விகள் (Post.16,156)2/9
ஒட்டக்கூத்தர் பாடல்களில் 10 கேள்விகள் (Post.16,160)3/9
அதிவீர ராம பாண்டியன் நூல்கள் பற்றி 10 கேள்விகள்(Post.16,164)4/9
உலகநீதி நூலில் 10 கேள்விகள் (Post No.16,167) 5/9
சிவப்பிரகாசர் நூல்களில் 10 கேள்விகள் (Post.16,171)6/9
சங்க கால ஔவையார் பாடல்களில் 10 கேள்விகள் (Post.16,174)7/9
ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர் படைப்புகள் பற்றி 10 கேள்விகள் (Post.16,177)8/9
முத்து சுவாமி தீட்சிதர் கிருதிகள் பற்றி 10 கேள்விகள் (Post.16,180)9/9
50.சதாசிவ பிரம்மேந்திராள் பாடல்களில் 10 கேள்விகள் (Post.16,185)10/9
பல்லவர் செப்பேடுகளில் முதல் 10 கேள்விகள் (Post.16,189)11/9
பல்லவர் செப்பேடுகளில் இரண்டாவது 10 கேள்விகள் (Post No.16,192)12/9
பல்லவர் செப்பேடுகள் பற்றி மூன்றாவது 10 கேள்விகள் (Post.16,195)13/9
பல்லவர் செப்பேடுகள் பற்றி நான்காவது 10 கேள்விகள் (Post.16,198)14/9
பல்லவர் செப்பேடுகள் பற்றி ஐந்தாவது 10 கேள்விகள் (Post.16,200)15/9
பல்லவர் செப்பேடுகள் பற்றி ஆறாவது 10 கேள்விகள் (Post.16,204)16/9
பல்லவர் செப்பேடுகள் பற்றி ஏழாவது 10 கேள்விகள் (Post.16,207)17/9
பல்லவர் செப்பேடுகள் பற்றி எட்டாவது 10 கேள்விகள் விடைகள் (Post.16,211)18/9
பல்லவர் செப்பேடுகள் பற்றி ஒன்பதாவது 10 கேள்விகள் (Post.16,214)19/9
60.ஆன்மீக திரைப்படங்களில் (பிளாக் அண்ட் ஒயிட்) பத்து கேள்விகள் (Post.16,218)20/9/2026
முருகனைப் போற்றும் திரைப்படங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,222)21/9
அலைமகள், கலைமகள், மலைமகள், மீதான திரைப்படங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,224)22/9
மஹாபாரதம், ராமாயணம் திரைப்படங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,228)23/9
கண்ணன்/ கிருஷ்ணன் மீதான திரைப்படங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,233)24/9
ஐயப்பன், குசேலர் திரைப்படங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,237)25/9
திரைப்படங்களில் பிரபலங்கள் சோ, எம். எஸ். பற்றி 10 கேள்விகள் (Post.16,240)26/9
திருக்குறளில் தெய்வங்கள் 10 கேள்விகள் (Post No.16,244)27/9
மாணிக்கவாசகரின் சிவபுராணத்தில் 10 கேள்விகள் (Post.16,248)28/9
திருமங்கை ஆழ்வார் பாடல்களில் 10 கேள்விகள் (Post.16,252)29/9
70.நம்மாழ்வார் பாசுரங்களில் 10 கேள்விகள் (Post No.16,256)30/9
71.குலசேகர ஆழ்வார் பாசுரங்களில் 10 கேள்விகள் (Post.16,259)
72.பெரியாழ்வார் பாசுரங்களில் 10 கேள்விகள் (போஸ்ட்.72) 2/10
73.தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாசுரங்களில் 10 கேள்விகள் (Post.16,266)3/10/2026
74.சர்ச்சைகள் மிகுந்த திருமழிசை ஆழ்வார் பாசுரங்களில் 10 கேள்விகள் (Post.16,270)4/10
75.பொய்கை ஆழ்வார் பாசுரங்களில் 10 கேள்விகள் (Post.16,272)5/10

–subham–