
Written by London Swaminathan
Post No. 16,275
Date uploaded in London – 6 October 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
English version posted yesterday
Words beginning with English letter Y
யாதவ
இந்தியாவை ஆண்ட பழைய குலங்களில் ஒன்று யாதவ குலம்; கிருஷ்ணரால் பெருமை பெற்றது . காகுட்மின் என்பவர் இவவம்சத்தில் தோன்றிய மன்னர் . விருஷ்ணி, அந்தக என்ற பெயர்களும் இந்த வம்சத்துக்கு உண்டு ; கம்சன் என்பவன் கிருஷ்ண- பலராமர்களை ஒடுக்க முயன்று தோல்வியுற்றான் . யயாதி -தேவயானி ஆகியோருக்குப் பிறந்த யது இந்தவம்சத்தைத் தோற்றுவித்தான் . இறுதியில் ஒரு முனிவரின் சாபத்தால் யாதவர்கள ஒருவரை ஒருவர் தாக்கி அழிந்தனர் அவர்கள் ஆண்ட துவாரகையும் கடலில் மூழ்கியது

***
யக்ஞ
தமிழில் வேள்வி ; ஸம்ஸ்க்ருத்திலும் தமிழிலும் ஒரே பொருள்; வேட்பது, அதாவது விரும்பியதை அடையச் செய்யும், அக்னி வழிபாடு ; தீ யை வளர்த்து, அதில் தேவர்களுக்கும் தெய்வங்களுக்கும் நெய், சாதம் (சோறு), சமித்து என்னும் அரச மரக் குச்சி முதலியவற்றை மந்திரங்களைச் சொல்லி படைப்பது வேள்வி .
பிற்காலத்தில் எந்த ஒரு பொருளையும் விரும்பிச் செய்யும், அக்கினி இல்லாத, பணிகளுக்கும் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டது . சங்கத் தமிழில் கள வேள்வி என்பது போர் செய்வதைக் குறிக்கும் ; இந்துக்கள் தினமும் செய்யும் பஞ்சபூத யக்ஞமும் இன்னும் ஒரு எடுத்துக் காட்டு;அவைகளில் பூத யக்ஞம் மனுஷ்ய யக்ஞம், பித்ரு யக்ஞம், தேவ யக்ஞம் ,பிரம்ம யக்ஞம் அடங்கும் ; அதாவது எறும்புக்கு அரிசி மாவுக்கோலம் இடுவதும் காக்கைக்கு சாதம் இடுவதும் கூட வேள்வி (பூத யக்ஞம்) என்று பெயர் இடப்பட்டது .
வேள்வி என்ற தூய தமிழ்ச் சொல் சங்க கால நூல்களில் பயிலப்படுவதால் இது பழந்தமிழர்களின் இயல்பான விஷயங்களில் ஒன்று என்பது தெரிகிறது என்று காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) சுட்டிக்காட்டியுள்ளார்.
***
யாகம்
இதுவும் வேள்வி , அதாவது தீயை வளர்த்து , இறைவனுக்கு வேண்டியதை மந்திரங்களைச் சொல்லி படைக்கும் சடங்கு ஆகும் . யக்ஞம் என்பதை சிறிய சடங்குகளுக்கும் யாகம் என்பதை அஸ்வமேதம் முதலிய பெரிய சடங்குகளுக்கும் இட்டனர் .
ஹோமம் , ஹவன என்பது வேறு சில சொற்கள் .
400 வகை யாக யக்ஞங்கள் இருப்பதாக காஞ்சி சுவாமிகள் குறிப்பிடுகிறார். வீடுகளில் கணபதி ஹோமம் , சுதர்சன ஹோமம் முதலி யவற்றைச் செய்கிறார்கள்.

***
யாக்ஞ வல்க்ய மஹரிஷி
ஜனகர் சபையில் இருந்த தத்துவ ஞானி யாக்ஞ வல்க்ய மஹரிஷி; விதேஹ நாட்டில் (இப்போதைய பீஹார் ) மிதிலை நகரில் குருவாக இருந்தார் . ஜனகர் கூட்டிய மாபெரும் தத்துவ ஞானிகள் மகாநாட்டில் பிரம்ம ஞானி என்ற பட்டம் பெற்றார் ; அதே மஹாநாட்டுக்கு வந்த கார்க்கி என்று ஒரு பெண்மணி மட்டும்தான் இவரைக் கேள்விகள் கேட்டார் ; அந்தக் காலத்திலேயே , அதாவது 2800 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்களும் மகாநாட்டில் பேசியதையும் எழுந்து சவால் விட்டதையும் பிருஹத் ஆரண்யக உப நிஷத் மூலம் அறிகிறோம் யாக்ஞ வல்க்யரின் தத்துவ போதனைகள் இந்த உபநிஷத்தில் உள்ளது . வைசம்பாயனருக்கு சிஹ்யராக இருந்த இவர் , கருத்து வேறுபாடு காரணமாக யஜுர் வேதத்தின் புதிய பகுதியை உண்டாக்கினார் . இவருக்கு மைத்ரேயி காத்யாயினி என்று இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; அவர்களில் மைத்ரேயி என்பவர் இவருடைய போதனைகளைக் கேட்டு பிரம்மவாதினி ஆனார் ; அக்காலத்தில் பெண்கள் இருந்த உயர் நிலையை கார்க்கி, மைத்ரேயி மூலம் அறிய முடிகிறது . இவருக்குப் பின்னர்தான் கிரேக்க நாட்டில் ஹோமர் எழுதிய முதல் நூலே தோன்றியது !

***
யஜுர் வேதம்
வேத வியாசர் வேதங்களை நான்காகப் பிரித்து, அதைக் காத்து, பரப்பும் பணியை நான்கு சீடர்களிடம் ஒப்படைத்தார் ; ரிக் வேதத்தை பைலர் என்பவரிடமும், யஜுர் வேதத்தை வைசம்பாயனர் என்பவரிடமும், சாம வேதத்தை ஜைமினி என்பவரிடமும் அதர்வண வேதத்தை சுமந்து என்பவரிடமும் ஒப்படைத்தார் ; யஜுர் வேதத்தில் செய்யுளும் உரைநடையும் உள்ளது ; ரிக் வேதத்தில் செய்யுள் மட்டுமே உள்ளது. பெரிய யாக யக்ஞங்களை எப்படிச் செய்வது என்பதும் அதற்கான மந்திரங்களும் உள்ளன. இதைப் போதித்த வைசம் பாயனருக்கும் அவருடைய சீடரான யாக்ஞவல்க்யருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது உடனே நான் சொன்னதை எல்லாம் கக்கு — அதாவது மறந்துவிடு; இனிமேல் பயன்படுத்தக் கூடாது— என்று தடை வித்தித்தார்; உடனே யாக்ஞவல்க்யரும் கக்கினார்- அதாவது அதைப் பயன்படுத்த மாட்டேன் என்றார்; அதைக் கிளி போல அப்படியே சொன்னதால் அதற்கு கிளியின் பெயர் – தித்திரி- இதிலிருந்து வந்ததுதான் தமிழ்ச் சொல் தத்தை= கிளி ; இதைத் தைத்ரீய ஷாகா என்பார்கள் ; கோபித்துக்கொண்டு வாக் அவுட் walk out செய்த யாக்ஞவல்க்யர் நீண்ட தவம் செய்தார் ; சூரிய பகவானே வந்து குதிரை ரூபத்தில் தோன்றி ஒரு வேதத்தை அளித்தார் அதற்கு வாஜசனேயி ஷாகா ( கிளை) என்று பெயர்; வாஜ= குதிரை ; இதற்கு சுக்ல யஜுர் வேதம் என்றும் முதலில் வந்ததற்கு கிருஷ்ண யஜுர் வேதம் என்றும் வர்ணங்களின் பெயர்களை சூட்டினார்கள் ; ரிக் வேதத்தில் உள்ள மந்திரங்கள் யஜுர்வேதத்திலும் உள்ளன. யாகங்களில் அத்வர்யு என்னும் கோஷ்டி வேத விற்பன்னர்கள் இதை ஓதுவார்கள். யஜுர் வேதத்தின் பல ஷாகைகள் (கிளைகள் ) அழிந்துவிட்டன . 101 ஷாகைகள் இருந்தன; அவைகளில் இப்போது ஆறு மட்டுமே புழக்கத்தில் இருக்கின்றன.
***
யக்ஷ
யக்ஷர்களின் தலைவர் குபேரன் ஆவார் ; செல்வத்துக்கு அதிபதி. இவர்களை குஹ்யக = ரகசிய பேர்வழிகள் என்றுமழைப்பார்கள் . ராட்சசர்கள், நாகர்கள் ஆகியோருடன் நெருங்கிய தொடபு உடையவார்கள்; ஆறு குளங்கள் ஏறி மரம் காடுகள் ஆகியன இவர்கள் இருக்கும் இடங்கள் ஆகும் ; புறச்ச சூழலைப் பாதுகாப்பது இவர்கள் பொறுப்பு; புறச்ச சூழலை அசிங்கப்படத்தக் கூடாது என்பது இவர்கள் கொளகை; அப்படி அசைக்கப்படுத்தினால் அவர்களை இவர்கள் தண்டிப்பார்கள்; யக்ஷி என்பது பெண்கள் ; சங்கத் தமிழ் நூல்களில் இவர்களை அணங்குகள் என்று அழைத்தனர் ; இவர்கள் வசிக்கும் இடம் என்பதால் மக்களை அவைகளை பய பக்தியுடன் அணுகினார்கள் .
பிற்கால நூல்கள் இவர்களுடைய பிரிவுகளைக் கூறுகின்றன
இவர்களுடைய தோற்றம் பற்றிய கதைகள் பல; புலஸ்திய மகரிஷி வழி வந்தவர்கள் காஷ்யப் ரிஷி வழி வந்தவர்கள் , விராட் புருஷனிடம் தோன்றியவர்கள் என்று அவைகள் கூறும் ; யக்ஷர் சிலைகள் நிறைய கிடைத்துள்ளன அவைகளை மியூசியங்களில் காணலாம்
***
யக்ஷ பிரஷ்ன

ஒரு யக்ஷினின் கேள்விகள் என்பது மஹாபாரதத்தில் வனபர்வத்திலுள்ள முக்கியக் கேள்வி-பதில் சம்பவம் ஆகும் ; இதில் தர்ம சம்பந்தமான விஷயங்களும் பொதுவாகப் பின்பற்றவேண்டிய உயர்ந்த குணங்களை பற்றியும் நிறைய பொன்மொழிகள் உள்ளன . யுதிஷ்டிரன் என்ற தர்மனின் சகோதர் நால்வரும் ஒருவர் பின் ஒருவாராக குளத்துக்குச் சென்று தண்ணீர் எடுக்க முயன்ற பொது அவர்களை யக்ஷன் எச்சரிக்கிறான்; அதை பொருட்பாடுத்தாமல் தண்ணீரில் இறங்கிய நால்வரையும் யக்ஷன் மூர்ச்சை ஆகச் செய்கிறான்; யுதிஷ்டிரன் வந்தபோது யக்ஷன் நடந்ததைச் சொல்லி 124 கேள்விகளைக் கேட்கிறான். இந்தக் கேள்விகளுக்குச் சரியான பதில் சொன்னால் அவனைக் கொல்லாமல் விட்டுவிடுவதாக யக்ஷன் சொல்கிறான்.
யுதிஷ்டிரரும் பொறுமையாக அத்தனை கேள்விகளுக்கும் சரியான பதில் சொன்னவுடன், யக்ஷன் மனம் மகிழ்ந்து மூர்ச்சை ஆகக்கிடக்கும் நான்கு சகோதரர்களில் ஒருவனை உயிர்ப்பிக்கிறேன்; உனக்கு யார் வேண்டும்? என்று கேட்டவுடன் நகுலனை உயிர்ப்பிக்குமாறு யுதிஷ்டிரன் வேண்டுகிறான்; ஏன் நகுலன்? என்று கேட்டபோது குந்திக்கு பிறந்த தான் உயிருடன் இருப்பதாகவும் மாதுரிக்குப் பிறந்த இருவரிலொருவனை எழுப்புவதே நேர்மையாக இருக்கும் என்கிறான் யுதிஷ்டிரன். அவனுடைய அணுகுமுறையில் தர்மம் கடைப்பிடிக்க பட்டதால் மனம் மகிழ்ந்த யக்ஷன், நான்கு சகோதரர்களையும் உயிர்பெறச் செய்கிறான் அனைவரும் படிக்க வேண்டிய சுவையான கேள்வி பதில் நிகழ்ச்சி இது .
தொடரும் ………..
-யாக, யக்ஞ , யக்ஞவல்க்யர், யஜுர் வேத, யக்ஷ ப்ரஷ்ன, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-124; இந்து மத கலைச்சொல் அகராதி-124