கம்ப ராமாயணப் பாடல்களில் 10 கேள்விகள் (Post.16,280)

Written by London Swaminathan

Post No. 16,280

Date uploaded in London – 7 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 77 in Ten Questions Series; previous 76 posts are listed at the end.

1

அஞ்சிலே ஒன்று பெற்றான் — என்னும் அருமையான கம்பன் பாடலின் பொருள் என்ன?

2

ராம என்ற இரண்டே எழுத்துக்கள் தரும் அற்புதப்  பலன்கள்  பற்றி  கம்ப இராமாயண சிறப்புப் பாயிரத்தில் ஒரு பாடல் உள்ளது. நினைவுக்கு வருகிறதா அந்தப்பாடல்?

3

எந்த ஒரு நூலினையும் மங்களச் சொற்களுடன் துவங்க வேண்டும் என்ற விதி சம்ஸ்க்ருத நூல்களிலும் தமிழ் நூல்களிலும் உள்ளது ; கம்பன், தனது ராமாயணத்தை, எந்தச் சொல்லுடன் துவங்குகிறான்?

4

கம்பனும் காளிதாசனும் என்ன சொல்லி நூலை எழுதத் துவங்கினார்கள் ?

5

போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும் ; போங்கடா போங்க! நான் சொல்வது தெய்வ மாக்கவி எழுதிய கவிதை என்று கம்பன் செப்பியது எங்கே ?

6

வால்மீகியைத் தவிர வேறு இருவர் ஸம்ஸ்க்ருதத்தில் ராமாயணம் எழுதினார்கள் என்று கம்பன் ஒரு புதிர் போடுகிறானே ! அந்தப் புதிருக்கு விடை கிடைத்ததா?

7

தெய்வ மாக்கவி, முதலில் ராமாயணம் சொன்னவர் என்றெல்லாம் வான்மீகி முனிவரைப் போற்றிய கம்பன் அவருடைய பெயரை எங்கேயாவது பகர்ந்தானா?

8

கம்பன் சர்வ சமய நோக்குள்ளவன்; சைவ, வைணவ பேதம் பாராட்டாதவன் ; முடிந்த அளவுக்கு சிவன் பெருமையை அவன் பாடுகிறான் ; சரயு நதிப் பாடலில் சிவனை அவன் எப்படிப் புகழ்கிறான்?

9

ஆகாசாத் பதிகம் தோயம் யதா கச்சதி சாகரம் சர்வ தேவ நமஸ்கார: கேசவம் பிரதி கச்சதி – என்று பிராமணர்கள் தினமும் மூன்று வேளை சந்தியா வந்தன மந்திரத்தில் சொல்கிறார்கள் ; இதைக் கம்பனும் சொல்லி, சர்வசமய பொதுநோக்கினைக் காட்டும் பாடல் எது?

10

கம்பன் போகிற போக்கில் Music மியூசிக் பற்றி ஒரு அருமையான உவமை சொல்கிறான் ; இந்தப்பாடலின் பொருள் விளங்குகிறதா?

பொருந்திய மகளிரோடு வதுவையில் பொருந்துவாரும்,

பருந்தொடு நிழல் சென்றன்ன இயல் இசைப் பயன் துய்ப்பாரும்,

மருந்தினும் இனிய கேள்வி செவி உற மாந்துவாரும்,

விருந்தினர் முகம் கண்டன்ன விழா அணி விரும்புவாரும்.

**********************************

விடைகள்

ராமாயணத்தின் மிக முக்கியமான பாத்திரம் அனுமன்.அவனைப் பற்றிய கம்பனின் அருமையான பாடல் :-.

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்

இதன் பொருள்:-

அஞ்சிலே ஒன்று பெற்றான் – ஐந்து பூதங்களில் ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன்

அஞ்சிலே ஒன்றைத் தாவி – ஐந்து பூதங்களில் ஒன்றான நீர்ப்பரப்பான கடலைத் தாண்டி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி – ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை வழியாகக் கொண்டு ஶ்ரீராமனுக்காக சென்று

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்  –ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த சீதாபிராட்டியை இலங்கையில் கண்டு

அஞ்சிலே ஒன்றை வைத்தான் – அங்கு ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை வைத்தான்

அவன் எம்மை அளித்துக் காப்பான் – அவன் எம்மை அனைத்து நலன்களும் அளித்துக் காப்பான்.

***

2. நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தீமையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்!

பாடலின் பொருள்:

• இராம என்னும் இரண்டெழுத்துத் திருநாமத்தை இம்மையிலேயே (இந்தப் பிறப்பிலேயே) பக்தியுடன் உச்சரித்தால், நாள்தோறும் நன்மையும் செல்வமும் பெருகி கிடைக்கும்.

• நம்மிடம் உள்ள தீமைகளும் பாவங்களும் அழிந்து தேய்ந்துபோகும்.

• மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் சுழற்சி (ஜென்மமும் மரணமும்) நீங்கி முக்தி பேறு கிடைக்கும்.

***

3.உலகம்‌ யாவையும்‌ தாம்‌ உளவாக்கலும்‌.

நிலைபெறுத்தலும்‌. நீக்கலும்‌. நீங்கலா

அலகு இலா விளையாட்டு உடையார்‌-அவர்‌ தலைவர்‌;

அன்னவர்க்கே சரண்‌ நாங்களே.

உலகம்‌ யாவையும்‌ -எல்லா உலகங்களையும்‌, தம்‌ உள ஆக்கலும்‌ -தாம்‌ தம்‌ சங்கற்பத்தால்‌ படைத்த தலையும்‌; நிலை பெறுத்தலும்‌ – நிலைத்த திருக்குமாறு காப்பதையும்‌; நீக்கலும்‌ -அழித்தலையும்‌; நீங்கலா. அலகு இலா விளையாட்டு உடையார்  – என்றும்‌ முடிவுறாததும்‌ அளவற்றதுமாகிய விளையாட்டாக உடையவராகிய; அவர்‌ தலைவர்‌ – அவரே தலைவ ராவார்‌; அன்னவர்க்கே நாங்கள்‌ சரண்‌ – அப்படிப்பட்ட பரமனுக்கே நாங்கள்‌ அடைக்கலம்‌.

பெரிய புராணம், திருமுருகாற்றுப்படை முதலிய நூல்களும் உலகம் என்ற சுபச் சொல்லுடன் துவங்குகிறது .

***

4.கம்பன் ஒரு பூனை!

கம்பன் தன்னைப் பைத்தியக் காரன் என்றும், பாற்கடலை நக்கிக் குடிக்கும் பூனை என்றும் உருவகிக்கிறான்.

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு

பூசை முற்றவும் நக்குபு புக்கென

ஆசைபற்றி அறையலுற்றேன் மற்று இக்

காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ

–பாலகாண்டம்

பொருள்:- ஒரு பூனை (பூசை), ஆர்ப்பரிக்கும் பாற்கடலை அடைந்து, அதிலுள்ள பால் முழுதையும் நக்கிக் குடித்துவிட ஆசைப்பட்டதைப் போல, குற்றமற்ற வெற்றியை உடைய ராமனது கதையை நான் சொல்ல ஆசை கொண்டேன்.

முத்தமிழ்த் துறையின் முறைபோகிய

உத்தமக் கவிஞர்களுக்கு ஒன்று உணர்த்துவென்

பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்

பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ

பொருள்:- ஐயா! முத்தமிழ் புலவர்களே! கற்றறிந்த புலவர் பெருமக்களே! உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். பைத்தியக்காரர்கள் சொன்னதையும், அறிவில்லாத முட்டாள்கள் சொன்னதையும், பக்தர்கள் சொன்னதையும் ஆராயலாமா? அல்லவே.

காளிதாசன் எழுதிய ரகு வம்சம் என்ற காவியத்தின் துவக்கப்பாடல்கள் இதோ:

க்வ சூர்யப்ரபவோ வம்ச: க்வ ச அல்பவிஷயா மதி:

திதீர்ஷு துஸ்த்ரம்  மோஹாத் உட்டுபேன  அஸ்மி சாகரம்

சூரியனிடமிருந்து இந்த வம்சம் தோன்றியது. அதைக் கூற, சின்ன அறிவுடைய நான் எங்கே? கடக்கமுடியாத கடலை சிறிய படகைக் கொண்டு கடக்க விரும்புபவன் போல நான் ஆசைப்படுகிறேனே!

காளிதாசனின் ரகுவம்சம் 1-2

xxx

மந்த கவியஸ ப்ரார்த்தீ கமிஷ்யாமி உபஹாஸ்யதாம்

ப்ராம்சுலப்யே பலே லோபாத் உத்பாஹுரிவ வாமன:

எனக்கோ குறைந்த அறிவு; ஆசையோ பெரிய கவிஞனாக வேண்டும் என்பது. ஒரு குள்ளன், மரத்தின் உச்சியில் இருக்கும் பழத்தைப் பறிக்க கையைக் கையைக் நீட்டினால் எல்லோரும் நகைக்க மாட்டார்களா? (அதுதான் என்னுடைய நிலை)

ரகுவம்சம் 1-3

xxx

அதவா க்ருத வாக் த்வாரே வம்சே அஸ்மின் பூர்வசூரிபி:

மணௌ வஜ்ரசமுத்கீர்ணே சூத்ரஸ்யேவாஸ்தி மே கதி:

நான் காவியம் இயற்றும் திறமை இல்லாதவந்தான். ஆனால் முன்னோர் சென்ற வழியில் சென்று புகழடைவேன். எப்படியென்றால் வைரத்தால் துளையிடப்பட்ட ரத்தினக் கல்லில் ஒரு நூலைக் கோர்ப்பது எளிதுதானே. அதே போல முன்னோர்கள் (வால்மீகி) இயற்றிய காவியம் என்னும் துவாரத்தில் நுழைந்து செல்வேன்.

ரகுவம்சம் 1-4

காளிதாசன் பணிவின் காரணமாக தன்னை குட்டையனாகவும், சின்னப் படகைக் கொண்டு பெரிய கடற் பரப்பைக் கடந்து செல்ல முயலும் முட்டாள்போலவும் , கேலி செய்யப்படக்கூடியவனாகவும் உருவகிக்கிறான்.

***

5.தெய்வ மஹா கவி வால்மீகி

வையம் என்னை இகழவும் மாசு எனக்கு

எய்தவும் இது இயம்புவது யாது எனின்

பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்

தெய்வ மாக்கவி மாட்சி தெரிவிக்கவே

பொருள்:– உலகம் என்னை கேலி செய்யும்; அதனால் எனக்கு பழி வரட்டுமே. நான் இந்தக் கம்பராமாயனத்தை இயற்றக் காரணம் என்ன தெரியுமா? தெய்வத் தன்மைமிக்க கவிதைகளின் பெருமையைத் தெரிவிக்கவே.

(இதில் தெய்வ மாக் கவி என்பது அவர் இயற்றிய கவிதைகளை மட்டும் குறிப்பதல்ல. வால்மீகியே தெய்வ மாக்கவிஞன். பாணினியை பகவான் பாணினி என்று பகர்வான் பதஞ்சலி; வள்ளுவனை தெய்வப் புலவன் என்றனர் புலவர் பெருமக்கள்; இலியட், ஆடிஸி காவியங்களை இயற்றிய ஹோமரை கிரேக்கப் புலவர்கள் தெய்வ ஹோமர் என்று போற்றினர்)

***

6.விடை கிடைக்கவில்லை அவன் சொல்லும் ராமாயணங்கள் எவை என்றே நமக்குத் தெரியாது! கம்பன் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழநாட்டில் கவிதை பாடினான் ; இந்த ஆயிரம் ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான சம்ஸ்க்ருத நூல்கள் அழிந்து விட்டன .

தேவபாடையின்‌ இக்  கதை செய்தவர்‌ மூவர்‌

ஆனவர்‌ தம்முளும்‌. முந்திய நாவினான்‌

உரையின்படி. நான்‌ தமிழ்ப்‌ பாவினால்‌

இது உணர்த்திய பண்புஅரோ

தெய்வ மொழி எனப்படுகின்ற சம்ஸ்க்ருத மொழியில்‌, இந்த இராம கதையை இயற்றிய வான்மீகி, வசிட்டர்,‌ போதாயனர்‌ ஆகிய மூவருள்‌; முதன்மையாராகியவரும்‌ வாக்கிற்  சிறந்தவருமாகிய வான்மீகி முனிவர்‌ சொல்லியபடியே, தமிழ்ப்‌ இந்த இராமாவதாரத்தை நான்‌ சொல்கிறேன். சம்ஸ்க்ருத மொழியில்‌ இராமபிரான்‌ கதை சொல்லியவர்‌ மூவர்‌; அவர்களுள்‌ ஆதிகவி வான்மீகி அருளிய காப்பியத்தின்‌ வழியிலேயே கவிச்‌ சக்கரவர்த்தி இராமாவதார காப்பியத்தை சொல்வதாக இச்செய்யுள்‌ சொல்லுகிறது. காப்பியக்‌ கதையின்‌ பொது அமைப்பு ஆதிகாவியத்தின்‌ வழியதே; எனினும்‌, தமிழ்ப்‌ பண்பாட்டு மரபைக்‌ கருதி கவிச்‌ சக்கரவர்த்தி பல மாற்றங்கள்‌ செய்துள்ளார்‌ . ஆதிகவி விரிவாக ஒதியதைச்‌ சுருக்கியும்‌. சுருங்கக்க  கூறியதை விரித்தும்‌. சில செய்திகளை விடுத்தும்‌ புதியன சில புகுத்தியும்‌. செய்திகளை இடம்‌ மாற்றியும்‌ கம்பர்‌ தம்‌ காவியத்தை இயற்றியுள்ளளார் 

வசிட்டர்‌ இராமபிரானுக்கு வைராக்கிய உபதேசமாக கூறிய நூல்‌ “யோக வாசிட்டம்‌’ அதில்‌ இராம சரிதம்‌ முழுமையாகக்‌ கூறப்படவில்லை. போதாயனார்‌ இராம காதை பாடினார்‌ என்பது செய்தியளவாகவே நிற்கிறது. நூல்‌ கிடைக்கவில்லை. கம்பர்‌ காலத்தில்‌ பரவியிருந்த சம்ஸ்க்ருத  இராமாயணங்கள்‌ வான்மீக இராமாயணம்‌. அத்யாத்ம ராமாயணம்‌, சம்பு ராமாயணம்‌ என்பனவே என்பர்.‌ இவற்றையே கம்பர்‌ தம்‌ பாடலில்‌ குறிப்பிட்டிருக்க வேண்டும்‌ என்று கருதலாம்‌.

***

7.ஆமாம் ; புறநானூற்றில் உள்ள வான்மீகி என்ற புலவரின் SPELLING ஸ்பெல்லிங் இங்கு இருப்பது குறிப்பிடத்தக்கது:

வாங்க அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்,

தீம் கவி, செவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான்;

ஆங்கு, அவன் புகழ்ந்த நாட்டை, அன்பு எனும் நறவம் மாந்தி,

மூங்கையான் பேசல் உற்றான் என்ன, யான் மொழியல் உற்றேன்.

பாடலின் பொருள்

• வாங்க அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்: ஒரு சொல்லைக்கூட மாற்றவோ நீக்கவோ முடியாதபடிக்கு, மிகச் சிறப்பான நான்கு அடிகளைக் கொண்ட (ஸ்லோகங்களை) இராமாயணக் காவியத்தை உருவாக்கிய வால்மீகி முனிவர்,

• தீம் கவி செவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான்: அத்தேன் போன்ற இனிய கவிதைகளின் சுவையைத் தேவர்களும் தங்கள் செவிகள் குளிரும்படி பருகச் செய்தார்.

• ஆங்கு அவன் புகழ்ந்த நாட்டை: அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த வால்மீகி முனிவர் புகழ்ந்துரைத்த கோசல நாட்டின்

• அன்பு எனும் நறவம் மாந்தி: வளங்களைச் சொல்ல, என் உள்ளத்தில் கொண்ட அன்பாகிய மதுவை (தேனை)ப் பருகி,

• மூங்கையான் பேசல் உற்றான் என்ன, யான் மொழியல் உற்றேன்: பேச முடியாத ஊமை ஒருவன் திடீரெனப் பேசத் தொடங்கியது போல, நானும் அந்த நாட்டின் சிறப்புகளைப் பேசத் தொடங்கினேன்.

***

8.கடலை நோக்கிச் சென்ற சரயு நதியின் மேகங்கள் சிவபெருமான் போல இருந்தன; திரும்பிவரும் போது, விஷ்ணு போல இருந்தனவாம்! நீறு அணிந்த கடவுள்‌ நிறத்த வான்‌

ஆறு அணிந்து சென்று. ஆர்கலி மேய்ந்து. அகில்‌

சேறு அணிந்த முலைத்‌ திருமங்கைதன்‌

வீறு அணிந்தவன்‌ மேனியின்‌ மீண்டதே.

திருநீற்றைத்‌ திருமேனி முழுதும்‌ பூசிய சிவபிரானின்‌: (வெள்ளை) நிறத்தை உடைய, மேகங்கள்‌; போகும்‌ வழிகளைஅழகு செய்து கொண்டு போய்‌, கடல்நீரை குடித்து,  அகில்‌  குழம்பாகிய சேற்றினால்‌ அழகு கொண்ட மார்பகத்தாள இலக்குமியால்‌ ஏற்பட்ட, தனிச்‌ சிறப்புடைய திரு மாலின்‌ (கரிய) நிறம்‌ கொண்டு, திரும்பின.

கடலை நோக்கிச்‌ சென்றபோது நீறு பூசிய சிவன்போல வெண்ணிறம்‌ கொண்டு. கடலில்‌ நீர்‌ கொண்டு திரும்பும்போது திருமகளால்‌ சீர்பெறும்‌ திருமால்‌ போலக்‌ கார்நிறம்‌ கொண்டு மேகங்கள்‌ இயங்கினவாம்‌. கார்மேகத்தின்‌ நிறத்துக்குத்‌ திருமால்‌ நிறம்‌ உவமையாவதை “ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து‘ என்ற ஆண்டாள்  வாக்காலும்‌ அறியலாம்‌.

***

9.”கல்லிடைப் பிறந்து, போந்து, கடலிடைக் கலந்த நீத்தம்,

எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈது’ என்னத்

தொல்லையில் ஒன்றே ஆகி, துறைதொறும், பரந்த சூழ்ச்சிப்

பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருளும்போல், பரந்தது அன்றே.”

பொழிப்புரை:

• கல்லிடைப் பிறந்து, போந்து, கடலிடைக் கலந்த நீத்தம்: மலையின் கற்களுக்கு இடையே தோன்றி, பல இடங்களைக் கடந்து சென்று கடலில் கலக்கின்ற ஆற்று வெள்ளமானது,

• எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈது என்ன: அளவிட முடியாத வேதங்களாலும் முழுமையாகச் சொல்ல முடியாத பரம்பொருளின் உண்மைத் தன்மை இதுவே என்று கூறுவது போல,

• தொல்லையில் ஒன்றே ஆகி: பழங்காலத்தில் மூலமாக ஒன்றாய் இருந்த அந்தப் பரம்பொருள்,

• துறைதொறும் பரந்த சூழ்ச்சிப் பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருளும்போல் பரந்தது அன்றே: பல துறைகளைச் சார்ந்ததாகவும், ஆழ்ந்த கருத்துக்களை உடையதாகவும் உள்ள பலப்பல சமயங்கள் கூறும் தத்துவப் பொருள்களைப் போல எங்கும் பரந்து விளங்கியது.

• கம்பர் இங்கு சரயு நதியின் வெள்ளம் பல துறைகளில் பரவிச் செல்வதை, பல சமயங்கள் பரந்து நின்று ஒரே பரம்பொருளைச் சுட்டுவதோடு உவமித்துள்ளார்.

• நதி பல இடங்களில் பிரிந்து சென்றாலும் இறுதியில் கடலில் கலப்பது போல, பல சமயங்கள் பல வழிகளில் சென்றாலும் அவை குறிக்கும் தெய்வம் ஒன்றே என்ற தத்துவப் பொருளை இப்பாடல் உணர்த்துகிறது.

***

10.பொருந்திய மகளிரோடு வதுவையில் பொருந்துவாரும்,

பருந்தொடு நிழல் சென்றன்ன இயல் இசைப் பயன் துய்ப்பாரும்,

மருந்தினும் இனிய கேள்வி செவி உற மாந்துவாரும்,

விருந்தினர் முகம் கண்டன்ன விழா அணி விரும்புவாரும்.

•வதுவை- திருமணம்.

• பொருந்திய மகளிரோடு வதுவையில் பொருந்துவாரும் – தமக்குப் பொருத்தமான மனைவியருடன் திருமணச் சடங்குகளில் ஈடுபட்டு வாழ்வோரும்.

• கேள்வி – கற்றவர்கள் சொல்லும் அறிவுரைகள் அல்லது அறநூற் செய்திகளைக் கேட்டல்.

• மாந்துவாரும் – செவி வழியாக அமுது போலப் பருகுவோரும்.

பாடலின் பொதுவான பொருள்

கோசல நாட்டு மக்கள் எவ்வாறு மகிழ்வுடன் வாழ்கிறார்கள் என்பதை இப்பாடல் விளக்குகிறது. தமக்குப் பொருத்தமான மனைவியருடன் திருமண வாழ்வை அனுபவிப்பவர்களும், இயல் மற்றும் இசை கலைகளின் பயனை அனுபவிப்பவர்களும், அமிர்தத்தைக் காட்டிலும் இனிய அறநூற் கேள்விகளைச் செவிமடுத்து இன்புறுபவர்களும், புதிய விருந்தினர்களைக் கண்ட உடன்முகமலர்ச்சி அடைந்து விழாக் கொண்டாடுபவர்களும் அந்நாட்டில் நிறைந்துள்ளனர்

வானத்தில் செல்லும் பருந்தின் நிழல் நிலத்தில் வீழ்ந்தாலும் பருந்து பறக்கும் இடத்துக்கெல்லாம் அதனைத் தொடர்வதைப் போல, பாடலில் அமைந்திருக்கும் சொற்கள் எங்கெல்லாம் செல்கின்றனவோ அங்கெல்லாம் பாவங்கள் ததும்புமாறு ராகங்கள் அவற்றைத் தொடர்ந்தன (few enjoyed rhapsodies set to music, in which the bubbling raga followed the bava enshrined in the words like the eagle and its shadow)

–SUBHAM—

TAGS- 10 கேள்விகள், கம்ப ராமாயணம், பாடல்கள், கல்லிடைப் பிறந்து, போந்து,வாங்க அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்,தேவபாடையின்‌ இக்  கதை செய்தவர்‌ மூவர்‌, நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே,அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

பத்து கேள்விகள் வரிசையில் முதல் 75 பதிவுகளின் பட்டியல் இறுதியில் உள்ளது.

1.காரைக்கால் அம்மையார் பற்றி 10 கேள்விகள்! (Post.15,992)18/7/2026

திருமந்திரம் பற்றி 10 கேள்விகள் (Post No.16,010)23/7

பெரிய புராணம் பற்றி 10 கேள்விகள் (Post.16,012)24/7

திருமுருகாற்றுப்படை பற்றி 10 கேள்விகள் (Post.16,018) 26/7

கந்த புராணம் பற்றி 10 கேள்விகள் (Post.16,024)27/7

முக்கூடற் பள்ளு பற்றி 10 கேள்விகள் (Post No.16,027) 28/7

குற்றாலக் குறவஞ்சி பற்றி 10 கேள்விகள் (Post No.160,30)29/7

அஷ்டாவக்ர கீதை பற்றி 10 கேள்விகள் (Post.16,036) 30/7

கீத கோவிந்தம் நூல் பற்றி 10 கேள்விகள் (Post.16,039)31/7

****

10.பாரதியின் குயில்பாட்டு பற்றி 10 கேள்விகள் (Post.16,042) 1/8/2026

அறப்பளீச்சுர சதகம் பற்றி 10 கேள்விகள் (Post.16,046) 2/8

கலிங்கத்துப் பரணி பற்றி 10 கேள்விகள் (Post No.16,050) 3/8

திருவள்ளுவமாலை பற்றி 10 கேள்விகள் (Post.16,052)4/8

பட்டினத்தார் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,055) 5/8

பஜ கோவிந்தம் பாடல் பற்றி 10 கேள்விகள் (Post.16,062)7/8

நாலடியார் நூல்பற்றி 10 கேள்விகள் (Post No.16,067)8/8

தாயுமானவர் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,059)6/8

சீவக சிந்தாமணி பற்றி 10 கேள்விகள் (Post.16,070)9/8

முத்தொள்ளாயிரம் நூல் பற்றி 10 கேள்விகள் (Post.16,074)

20.மணிமேகலைக்  காப்பியம் பற்றி 10 கேள்விகள் (Post.16,077)11/8

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பாடல்கள்  பற்றி 10 கேள்விகள் (Post.16,081)12/8

பாண்டியர் செப்பேடுகள் பற்றி 10 கேள்விகள் (Post No.16,089)14/8

பாண்டியர் செப்பேடுகள் பற்றி மேலும் 10 கேள்விகள் (Post.16,092)15/8

பாரதி பாட்டில் 16 நாடுகள் பற்றி 10 கேள்விகள் (Post.16,095) 16/8

மலைபடு கடாம் பற்றி 10 கேள்விகள் (Post No.16,102) 18/8

ஆய் குல/ யாதவ குல செப்பேடுகள் பற்றி 10 கேள்விகள் (Post No.16,107) 19/8

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,085) 13/8

கொங்கு மண்டல சதகம் பற்றி 10 கேள்விகள் (Post No.16,100) 17/8

திருவருட்பா நூல் பற்றி 10 கேள்விகள் (Post.16,109)20/8

30.மஹாபாரதம் பற்றி 10 கேள்விகள் (Post No.16,112) 21/8

சர்ச்சைக்குரிய விவேக சிந்தாமணி பற்றி 10 கேள்விகள் (Post.16,118)22/8

பாபநாசம் சிவன் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post No.16,122)23/8

பார்ப்பனரை வசைபாடிய பாரதிதாசன் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,123)24/8

ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் அற்புதத் தமிழ் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,128) 25/8

அருணாசலக் கவிராயர் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,131)26/8

முத்துத் தாண்டவர் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,134)27/8

புத்த மத வேதப் புஸ்தகம் தம்மபதத்தில்10 கேள்விகள் (Post.16,137)28/8

மாரிமுத்தா பிள்ளை பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,141)29/8

ஆண்டாள் அருளிய திருப்பாவையில்10 கேள்விகள் (Post.16,145) 30/8

40.பாஸா நாடகங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,150)31/8/2026

****

நளவெண்பாவில் 10 கேள்விகள் (Post.16,153)1/9/2026

காளமேகப்புலவர் பாடல்களில் 10 கேள்விகள் (Post.16,156)2/9

ஒட்டக்கூத்தர் பாடல்களில் 10 கேள்விகள் (Post.16,160)3/9

அதிவீர ராம பாண்டியன் நூல்கள் பற்றி 10 கேள்விகள்(Post.16,164)4/9

உலகநீதி நூலில் 10 கேள்விகள் (Post No.16,167) 5/9

சிவப்பிரகாசர் நூல்களில் 10 கேள்விகள் (Post.16,171)6/9

சங்க கால ஔவையார் பாடல்களில் 10 கேள்விகள் (Post.16,174)7/9

ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர் படைப்புகள் பற்றி 10 கேள்விகள் (Post.16,177)8/9

முத்து சுவாமி தீட்சிதர் கிருதிகள் பற்றி 10 கேள்விகள் (Post.16,180)9/9

50.சதாசிவ பிரம்மேந்திராள் பாடல்களில் 10 கேள்விகள் (Post.16,185)10/9

பல்லவர் செப்பேடுகளில் முதல் 10 கேள்விகள் (Post.16,189)11/9

பல்லவர் செப்பேடுகளில் இரண்டாவது 10 கேள்விகள் (Post No.16,192)12/9

பல்லவர் செப்பேடுகள் பற்றி மூன்றாவது 10 கேள்விகள் (Post.16,195)13/9

பல்லவர் செப்பேடுகள் பற்றி நான்காவது 10 கேள்விகள் (Post.16,198)14/9

பல்லவர் செப்பேடுகள் பற்றி ஐந்தாவது 10 கேள்விகள் (Post.16,200)15/9

பல்லவர் செப்பேடுகள் பற்றி ஆறாவது 10 கேள்விகள் (Post.16,204)16/9

பல்லவர் செப்பேடுகள் பற்றி ஏழாவது 10 கேள்விகள் (Post.16,207)17/9

பல்லவர் செப்பேடுகள் பற்றி எட்டாவது 10 கேள்விகள் விடைகள் (Post.16,211)18/9

பல்லவர் செப்பேடுகள் பற்றி ஒன்பதாவது 10 கேள்விகள் (Post.16,214)19/9

60.ஆன்மீக திரைப்படங்களில் (பிளாக் அண்ட் ஒயிட்) பத்து கேள்விகள் (Post.16,218)20/9/2026

முருகனைப் போற்றும் திரைப்படங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,222)21/9

அலைமகள், கலைமகள், மலைமகள், மீதான திரைப்படங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,224)22/9

மஹாபாரதம், ராமாயணம் திரைப்படங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,228)23/9

கண்ணன்/ கிருஷ்ணன் மீதான திரைப்படங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,233)24/9

ஐயப்பன், குசேலர் திரைப்படங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,237)25/9

திரைப்படங்களில் பிரபலங்கள் சோ, எம். எஸ். பற்றி 10 கேள்விகள் (Post.16,240)26/9

திருக்குறளில் தெய்வங்கள் 10 கேள்விகள் (Post No.16,244)27/9

மாணிக்கவாசகரின் சிவபுராணத்தில் 10 கேள்விகள் (Post.16,248)28/9

திருமங்கை ஆழ்வார் பாடல்களில் 10 கேள்விகள்  (Post.16,252)29/9

70.நம்மாழ்வார் பாசுரங்களில் 10 கேள்விகள் (Post No.16,256)30/9

71.குலசேகர ஆழ்வார் பாசுரங்களில் 10 கேள்விகள் (Post.16,259)

72.பெரியாழ்வார் பாசுரங்களில் 10 கேள்விகள் (போஸ்ட்.72) 2/10

73.தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாசுரங்களில் 10 கேள்விகள் (Post.16,266)3/10/2026

74.சர்ச்சைகள் மிகுந்த திருமழிசை ஆழ்வார் பாசுரங்களில் 10 கேள்விகள் (Post.16,270)4/10

75.பொய்கை ஆழ்வார் பாசுரங்களில் 10 கேள்விகள் (Post.16,272)5/10

****

Leave a comment

Leave a comment